Tuesday, September 21, 2010

கதவை திறந்தால்தானே காற்று வரும்!

இதன் முன் பகுதியை நீங்கள் படிக்கவில்லை என்றால், கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்! ஒரு முறை படித்துவிட்டு இதை தொடரலாமே?

முந்தைய பதிவை தொடர்வது,

நமக்கு என்ன தேவை?

ஆரம்ப நிலையில் நம்முடைய தியானம் என்பது என்ன?

குடும்ப வாழ்க்கை சூழலில் இருக்கும் நம்முடைய தேவை என்பது, நம்முடைய மனஉளைச்சலை தவிர்க்க, பிரச்சனைகளை எளிதாக சந்தித்து குழப்பமில்லாத முடிவெடுக்க தேவையான தெளிவான மன, உடல் நிலை மட்டுமே.

இதற்கான சிந்தனையையும் உடல்நிலையையும் தியானம் செய்வதன் மூலம் எளிதாக பெறமுடியும் என்று நம்புகிறேன்.

தியானம் என்றவுடன், ஒரு யோகியை போல உச்ச கட்ட நிலையை பற்றி சிந்திக்காமல், நமக்கு தேவையான ஆரம்ப நிலையை பற்றி மட்டும் தற்போதைக்கு சிந்திப்பதுதான் இங்கு என் நோக்கம்.

சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, அதை நாம் கட்டுபடுத்த பழக வேண்டும், இதுவே நம் ஆரம்ப நிலை தியானம்.

இதற்காக நமக்கு தேவை ஒரு அமைதியான இடம் மட்டுமே, அது நம் வீட்டின் அல்லது நமக்கு பிடித்த எந்த ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.



மூளையின் கட்டுபாட்டில் நாம் செல்லாமல் எடுத்தவுடன் நம் சிந்தனை அனைத்தையும் கட்டுபடுத்துவது என்பது சிறிது கடினமாயினும், தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அது சாத்தியப்படும்.

இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன், தியானத்திற்கும் ஜாதி மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது, அது நடுவில் வந்த வியாபாரயுக்தி மட்டுமே.

அதனால் இதை பற்றி குழப்பிக்கொள்ளாமல், உங்களுக்கு பிடித்த இடத்தில் வசதியான ஒரு முறையில் அமரவும், காரணம் நீங்கள் அமரும் முறை அல்லது அணிதிருக்கும் உடை உங்களை தொந்தரவு செய்யக்கூடாது.

எனவே உங்களுக்கு ஏதுவான, எளிதான ஒரு முறையில் அமர்ந்து கண்களை மூடி நிதானமாக சுவாசிக்கவும்.

நாம் பார்க்கும் எந்த ஒரு விசையத்தையும் பொருத்து நம் சிந்தனைகள் வளரக்கூடும் என்ற காரணத்தால்தான் கண்களை மூடுவது.

அப்படியே அமைதியாக சுவாசத்தை இழுத்து விடுங்கள், ஆனால் சுவாசிக்கும் முறையை பற்றி சிந்திக்க வேண்டாம்.

இப்படி உங்கள் உடல் ஒரு நிலையை அடைந்ததும், உங்கள் சிந்தனைகள் பலவாறு ஓட தொடங்கும், அந்த சிந்தனைகளை பின்தொடராதீர்கள்.

சிந்தனைகள் நம் கட்டுபாட்டில் இருக்க வேண்டுமே தவிர, சிந்தனைகளின் கட்டுபாட்டில் நாம் ஒரு போதும் இருக்ககூடாது.

We are what our thoughts have made us; So take care about what you think. Words are secondary. Thoughts live; They travel far. - Swami Vivekananda

நிதானமாக சுவாசத்தை தொடருங்கள், உங்கள் சிந்தனைகள் நீங்கள் சுவாசிக்கும் அளவையும் ஆழத்தையும் பின் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள், சுருக்கமாக எந்த ஒரு சிந்தனையும் செயலும் இல்லாத அமைதியான நிலையில் இருக்கவும்.

ஆரம்ப கட்டத்தில் இது சற்று கடினமாக தெரிந்தாலும், நாளடைவில் மிக எளிதாகிவிடும், அப்படி மாற மாற தியானிக்கும் போது உங்கள் சிந்தனைகளின் அளவு குறைய ஆரமிக்கும்.

இப்படி உள்ளும் வெளியும் எந்த ஒரு சிந்தனையும் ,செயலும் இல்லாமல் உங்கள் சிந்தனைகள் குறைய குறைய, உடலின் சக்கரங்களில் சுழலும் உங்கள் சுவாசத்தின் அளவும் தானாக குறையும்.



இதை தொடர்ந்து செய்து வர நாளடைவில் முழு சிந்தனை இல்லாத நிலையை அடையும் போது, நம் சுவாசத்தின் அழுத்தமும் குறைந்து குறைந்து நம்மை தியான நிலைக்கு எடுத்து செல்லும்.

இந்த நிலையை ஒருவர் அடையும் போது அவர் முழு தியான நிலையை அடைகிறார், நாசியில் சுவாசம் இருப்பது போலவே உணரமுடியாது, மனதில் எந்த சிந்தனையும் இருக்காது.

இதுவே முழு தியான நிலை.

இப்படி ஒரு தியான நிலையில் இருக்கும் போது நம் உடல் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy) பெறுகிறது, அந்த சக்தி நரம்புகளில் பரவி உடலின் உள்ள எல்லா பகுதிகளுக்கு செல்கிறது.

எவ்வளவு அதிகமாக தியானம் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம் உடல் சக்தியை பெறுகிறது, அந்த சக்தி மனஉளைச்சல் மற்றும் உடலில் உள்ள தீமைகளை, நோய்களை அகற்றுகிறது (Cosmic Energy Healing for Health) என்று தியான நூல்களில் சொல்லப்படுகிறது.

சாதாரணமாக ஒரு குடும்ப வாழ்கையில் இருக்கும் யாருக்கும் இதுவே தேவை.

மேலும் இந்த நிலையில் தொடந்து தியானம் செய்து வர, மன நிலையும் உடல் நிலையும் ஒழுங்கு படும், நல்ல சிந்தனைகள் வளரும்.

நம்மை நாமே யாரென்று அறிய இதுவே சிறந்த வழி.

இதை தாண்டிய நிலைதான், மூன்றாவது கண்ணை திறப்பது, ஆன்மீக குருக்களை தியானத்தில் சந்திப்பது, தெரிந்த, தெரியாத புதிர்களுக்கு அவர்களிடம் விடை கேட்பது என்ற யோகியின் நிலை.

அதையும் தாண்டிய நிலைதான் ஆன்மாவை பயணிப்பது, கடந்த, எதிர் காலத்தை பார்ப்பது என்று சித்தர் நிலையை (சமாதி நிலையை) அடைவது.

ஆனால் இவை சாதாரண மனிதர்களுக்கு அத்தனை எளிதில் சாத்தியப்படாதவை.

இதில் மிக தெளிவாக உணரவேண்டியது, இத்தகைய தியானமும், சித்தியும் ஒரு போதும் வியாபாரமாக்க முடியாது.

அதாவது நீங்கள் பணம் கொடுத்து இதில் எந்த ஒரு நிலையையும் கண்டிப்பாக அடைய முடியாது.



அதனால் தான் எல்லா மத வேத நூல்களும் உடல் மற்றும் மன ஒழுக்கத்தை முன்னிறுத்தி தன் கருத்துக்களை சொல்கிறது.

கலிகாலத்தில் அரை குறை வேதாந்திகள் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பார்கள் என்று வேத நூல்கள் சொல்கின்றன, அதுதான் இன்று உண்மையில் நடக்கிறது.

அதனால் எடுத்த எடுப்பில் குருவை தேடுகிறேன், பணம் கொடுத்து முக்தி அடைகிறேன் என்று உங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்காமல், மனதை ஒரு நிலை படுத்தி சரியான பாதையில் முறையாக தியானிக்கும் போது, உங்களுக்கு மிக சிறந்த தியானம் சாத்தியப்படும்.

இதில் இன்னொரு விசையம் இருக்கிறது, யோகாசனம் என்பது வேறு தியானம் என்பது வேறு.

(இந்த முறை இந்தியாவில் இருந்த போது சில குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் கூட, ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லி நாங்கள் அங்கு தியானமும் யோகாசனமும் படிக்கிறோம் என்று ஒரு வலுவான தொகையை கட்டணமாக சொன்னார்கள்.)

தியானத்தை பற்றி மேலே பார்த்துவிட்டோம். சுவாசத்தை கட்டுபடுத்தி சிந்தனையற்ற நிலைக்கு சென்று பிரபஞ்ச சக்தியை பெற தியானம் உதவும்.

யோகாசனம் என்பது உடற்பயிற்சி, காடுகளில் தியானம் (தவம்) செய்யும் முனிவர்களும் சித்தர்களும். எந்த உபகரணமும் இல்லாமல், உடலையே உபகரணமாக்கி உடற்பயிற்சி செய்து தங்கள் உடல் உறுப்புகளை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவர பயன் படுத்தியதுதான் யோகாசனம்.

யோகாசனத்தின் ஒரு பகுதியாக தியானத்தையும் எடுத்துக்கொள்ளலாம், காரணம் மனம் ஒரு நிலையில் இல்லாத போது உடலை கட்டுபடுத்துவது சாத்தியமாகாது, எனவே எந்த ஒரு கலைக்கும் தியானம் மிக அவசியம்.

ஆனால், உடற்பயிற்சி என்று வரும் போது அதை முறையாக தெரியாமல் தானாக முயற்சி செய்வது சரியல்ல.

அதே நேரம் கற்றுக்கொள்ள சரியான (வியாபார நோக்கம் மட்டுமே குறியாக இல்லாத) ஆசிரியரை தேடி தேர்வு செய்வது மிக மிக அவசியம்.

ஆக, இவை அனைத்துக்கும் நம் மனமும் உடலும் முயற்சியும் பயிற்சியும் தான் அடிப்படையே தவிர, மதமும் ஜாதியும் குறிப்பாக பணமும் அல்லது வியாபார குருக்களும் ஒரு போதும் தேவை இல்லை என்பதை உறுதியாக நம்புங்கள்.

இப்படி நமக்கு தேவையானதை உணர்ந்து, நம் மனம் என்னும் கதவை திறந்தால், அமைதி, முக்தி, ஞனம் என்னும் காற்று அளவில்லாமல் வந்து உங்கள் வாழ்கை உங்களுக்கு வசப்படும்.

நன்றி!.

21 comments:

  1. பிறகு வந்து நிதானமாக படிக்கிறேன்...

    ReplyDelete
  2. பணத்தினை கொடுத்து நிச்சயமாக மனதை கட்டுபடுத்தவும் முடியாது நிம்மதியினையும் பெற முடியாது..
    நல்ல பகிர்வு...

    ReplyDelete
  3. யோகசனத்தின் ஒரு பகுதியாக தியானத்தையும் எடுத்துக்கொள்ளலாம், காரணம் மனம் ஒரு நிலையில் இல்லாத போது உடலை கட்டுபடுத்துவது சாத்தியமாகாது, எனவே எந்த ஒரு கலைக்கும் தியானம் மிக அவசியம்.

    ....நிறைய தியான குறிப்புகளும் தகவல்களும் கொண்டு தொகுக்கப்பட்ட கதம்ப மாலை. அருமை.

    ReplyDelete
  4. எளிமையாகவும் அருமையாகவும் விளக்கியுள்ளீர்கள். நல்ல இடுகை.

    ReplyDelete
  5. கலிகாலத்தில் அரை குறை வேதாந்திகள் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பார்கள் என்று வேத நூல்கள் சொல்கின்றன, அதுதான் இன்று உண்மையில் நடக்கிறது.

    நல்ல பதிவு நிதர்சன உண்மை
    வாழ்க வளமுடன்
    நெல்லை நடேசன்
    துபாய் அமீரகம்

    ReplyDelete
  6. @Mrs.Menagasathiaமெதுவா வந்து படிங்க மேனகா, உங்கள் வருகைக்கு மிக்க நன்றி :-).

    ReplyDelete
  7. @சிநேகிதிமிக்க நன்றி சிநேகிதி (அருமையான பெயர்:-) )

    ReplyDelete
  8. @Chitraநன்றி சித்ரா.

    உங்க சந்திரமுகி படம் பார்த்த கதை போல, எந்திரன் பார்த்த கதைக்காக காத்திருக்கிறோம் :-).

    ReplyDelete
  9. @ராமலக்ஷ்மிநன்றி ராமலக்ஷ்மி, புது புகை படம் இருக்கா உங்கள் தளத்தில், நாளை வருகிறேன் :-).

    ReplyDelete
  10. மிகவும் அக்கறை எடுத்து எழுதுகிறீர்கள் சிங்கா.படங்களின் தெரிவும் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  11. சிங்கக்குட்டி போறபோக்கை பார்த்தால் எல்லோருடைய வீட்டிற்கும் சென்று மூடி இருக்கும் கதவை எல்லாம் திறந்து விட்டுடுவீங்க போல இருக்கே :-))

    தியானம் பற்றி ரொம்ப நல்லா கூறி இருக்கீங்க! நான் ரொம்ப நாளா முயற்சி செய்கிறேன் ஆனால் சோம்பேறித்தனத்தால் முடிவதில்லை.. திரும்ப முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  12. @sweathaநன்றி சுவேதா, முயற்சிக்கிறோம்.

    ReplyDelete
  13. @ஹேமாஉங்கள் அன்புக்கு என்றும் என் நன்றி ஹேமா :-).

    ReplyDelete
  14. எனக்கும் அப்படிதான் இருந்தது கிரி.

    ஆனால் இப்போது தீவிரமாக முயற்சிக்கிறேன், அந்த தேடலில் கிடைத்ததுதான் இவை.

    மனம் தளர்ச்சி அடையாமல் தொடந்து முயன்று வாருங்கள்.

    ஆனா, இப்போதான் உங்க பையன் வந்துட்டார் இனி சுத்தமா நேரமே இருக்காது உங்களுக்கு :-).

    ReplyDelete
  15. migavum arumyaana pagirvu..en pala sandhegangal theerndhathu..kandippa try panren..singakuttinnu pera pathuttu ennamonnu vandhen super rombha arumai

    ReplyDelete
  16. உண்மையில் அருமையான தேவையான பதிவு..
    தியானம் செய்வதின் முறை மற்றும் நலன் அறிந்தேன்...நன்றி. :)

    ReplyDelete
  17. @Ananthiநன்றி ஆனந்தி, வீட்டில் அனைவரும் நலமா :-).

    ReplyDelete
  18. @Gayathriநன்றி காயத்ரி, தொடந்து முயற்சி செய்ய உங்களுக்கு மிக எளிதாகிவிடும்.

    ReplyDelete
  19. தியானம் பற்றிய உங்கள் தொகுப்பு உண்மையில் அருமையான நல்ல பதிவு.சிங்ககுட்டி.

    ReplyDelete
  20. @மலிக்கா உங்கள் அன்புக்கு நன்றி மலிக்கா :-).

    ReplyDelete