Tuesday, January 19, 2010

அலுவலக அரசியலை சமாளிப்பது எப்படி?

பொதுவாக எல்லாதரப்பு பணியாளர்களும் அலுவலக அரசியலை சந்திக்க நேரிடும், காரணம் அது ஒவ்வொருவரின் உத்தியோக வளர்ச்சியோடு கலந்திருக்கிறது.

அலுவலக அரசியலில் இருந்து விலகி ஓடுவது என்பது ஒரு நல்ல விசையமாக இருந்தாலும், அது நம் உத்தியோக வளர்ச்சி பாதையில் இருந்து நம்மை தனித்து நிறுத்தி ஒரு மோசமான முடிவையே கொடுக்கும் என்பதுதான் உண்மை.



எந்த ஒரு விசையத்தையும் ஆக்கத்துக்கும் பயன் படுத்த முடியும், அதே அளவு அழிவுக்கும் பயன் படுத்த முடியும் என்ற தத்துவத்தின் படி, அலுவலக அரசியலை சரியான முறையில் சந்தித்து, முறையாக தீர்வு காண்பதன் மூலம், அதை நம் உத்தியோக வளர்ச்சிப்பாதைக்கு உரமாக பயன்படுத்த முடியும்.

அலுவலக அரசியலை கையாளும் உங்கள் தனி திறமையை மற்றும் முறையை பொறுத்து, அது நடைமுறையில் உங்கள் வேலை முறையை உயர்திக்கொள்ளவோ அல்லது கெடுத்துக்கொள்ளவோ வழிவகுக்கும்.

நடைமுறை அலுவலக வாழ்கையில் மக்கள் வேலை பளுவையும் மன அழுத்தத்தையும் சகஜமாக சந்தித்து இதை அனுபவ படுக்கிறார்கள்.

இதில் சிலர் அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் உடைந்து விடுகிறார்கள், அது அவர்களை "வேலை இழப்பு" அல்லது "வேலை பதவியில்" வளர்ச்சி இல்லாத முடிவில் போய் முடிந்து விடுகிறது.

மற்ற சிலர் இதில் உண்மையாக பாதிக்காவிட்டாலும், அதன் பாதிப்பு இருப்பது போல் பொய்யாக பெரிது படுத்தி காட்டிக்கொள்வதோடு, அவர்கள் செய்வது மட்டுமே சரி என்பது போல் காட்டிக்கொள்வதன் மூலம் இந்த அரசியலை கையாளுவார்கள்.

இத்தகைய அழுத்தம் ஒரு பக்கம் இருக்க, அலுவலக அரசியல் என்பது நம்மை மறைமுக இம்சைக்கு உட்படும் நிலைக்கு கொண்டு வந்து விடும்.

அதன் விளைவே சென்ற பதிவில் பார்த்த "பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் ஏளனமாகக் கருதப்படுவது அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவது" போன்றவையாகும்.

இப்படி இந்த அலுவலக அரசியலை கையாள குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

கடைசியாக பேசுங்கள்: அலுவலக அரசியல் என்பது பொறுத்துக்கொள்ள முடியாத அல்லது மோசமான விளைவுகளை கொடுக்க கூடியாதாக இருக்கும், குறிப்பாக விவாதிக்கும் போது அல்லது சில விவாதங்களின் போது. அதனால் "யாகாவராயினும் நா காக்க" என்பதை எப்போதும் நினைவில் வைத்து வார்த்தைகளை அடக்குங்கள்.

உண்மையில் இந்த இடத்தில் மிக எளிதாக உணர்ச்சிகளை தூண்டி அடிக்கடி கோவப்பட்டு திரும்ப வார்த்தைகளை விட்டு சண்டையிட தோணும், ஆனால் எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் வார்த்தைகளை விடுகிறீர்களோ!, அவ்வளவு வேகமாக நீங்கள் இழப்பது உறுதி.



உங்களுக்கு நீங்கள் செய்வது அல்லது உங்கள் தரப்பில் சொல்வது மிக சரி என்று பட்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட சரி, கண்டிப்பாக நீங்கள் அனைத்து தரப்பில் அல்லது அனைவர் சொல்லவதையும் கவனமாக கவனிப்பதன் மூலம், நீங்கள் சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை மட்டுமே பயன் படுத்துகிறீகள் என்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.

தேவை இல்லாத வார்த்தை விவாதங்களை தவிர்த்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் வடிவமைத்து வரிசைபடுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் உங்கள் கூடுதல் திறமையை அல்லது வழிகாட்டி தலைமை தாங்கும் தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.

எப்போதுமே சிந்தித்து திட்டமிட்டு செயல்படுங்கள்: எந்த ஒரு விசையதையும் செயல் படுத்தும் முன், நீங்கள் அதை பற்றி தெளிவாக சிந்தித்து திட்டமிட்டுதான் செயல் படுத்துகிறீர்கள் என்பதை உறுதி படுத்த வேண்டும், இதில் மிக குறிப்பாக கவனிக்க வேண்டியது "எப்போதுமே" என்பது, ஒரு போதும் அல்லது எந்த விசையதையும் சிந்திக்க மற்றும் திட்டமிடாமல் ஒதுக்கி விட கூடாது.


அலுவலக அரசியல் மூலம் வர நேரிடும் இழப்பை உங்களிடம் இருந்து ஒதுக்கி வைப்பதற்கு மிக முக்கியம். அரசியல் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்த அத்தனை தற்காப்பு நடவடிக்கைகளின் நிழலிலேயே நடக்கும் பிரச்சனைகளை மற்றும் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு செல்ல வேண்டும்.

மிக சவாலான விசையமாக இருந்தாலும் நீங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டியது, உங்களுடைய எல்லா நடவடிக்கையும் எல்லா நேரங்களிலும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே.

இது அலுவலக செல்வாக்குடன் அதிகாரத்தில் இருக்கும் அலுவலக அரசியல்வாதிகளை சமாளிக்க மிக சிறந்த ஒரு வழியாகும்.

சாதகமாக நடந்து கொள்ளாதீர்கள்: என்னதான் ஒருவர் அல்லது ஒரு அணி செய்வது சரி என்று உங்களுக்கு பட்டாலும், நீங்கள் அவ்வளவு எளிதாக அதற்கு சாதகமாகி, எதிர் அணி செய்வது தவறென்றோ அல்லது அவர்கள் அதை உணர வேண்டும் என்று முறையிடவோ விவாதிக்கவோ வேண்டாம்.

உங்களை நீங்களே ஒரு நடு நிலமையாக்கி கொள்வது நல்லது, சம்மந்த பட்ட இருவர் அல்லது இரு அணிகள் பேசிக்கொள்ளட்டும் அல்லது விவாதித்து கொள்ளட்டும்.

எப்போதும் அலுவலக அரசியலை நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் சந்திக்க பழகுங்கள், மேலும் அதை சரியான முறையில் பயன் படுத்தி உங்கள் வழிநடத்தும் திறமையை காட்டும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளுங்கள், இது உங்கள் அலுவலக வேலையில் அடுத்த நிலைக்கு செல்ல அல்லது வளர்ச்சிக்கு உதவும்.

மற்றவர் நெருக்கடியை, உணர்ச்சியை புரிந்து கொண்டு தகுந்த சமயத்தில் உதவுபவராக இருங்கள்: அது யாராக அல்லது எந்த துறையை சார்ந்தவராகட்டும், ஒரு வேலையை முடிக்க முடியாமல் அல்லது அதில் பிரச்சனைகளை சந்திக்கும் போது, நீங்களாகவே முன் வந்து உங்களால் முடிந்த வரை உதவுவது என்பது, உங்களுக்கு அல்லது உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு இடைவெளியை உடைத்து நெருக்கமாக இது வழிவகுக்கும்.

வேலை இடங்களில் நல்ல ஒரு நட்புறவை வளர்க்க இது மிக சிறந்த ஒரு வழிவகுப்பதோடு, உங்கள் உதவிக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவர் மனதில் நல்ல ஒரு இடத்தை உங்களுக்காக ஒதுக்கும் படி இது உதவும்.

உதவுவதற்கு எப்போதும் எழுந்து நிற்க நீங்களாகவே தயாராக இருங்கள்: வருட ஊதிய உயர்வு நேரத்தில் ஒருவரை ஒருவர் முன் விட்டு பின் பேசுவது என்பது பொதுவாக நடக்க கூடிய ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் உங்கள் உடன் அல்லது கீழ் வேலை பார்பவர்களே உங்களுக்கு எதிராக திசை திரும்பி பல மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம்.


அத்தகைய நேரங்களில் நீங்கள் உறுதியாக நிற்பதோடு மட்டுமில்லாமல், இத்தகைய கீழ்தரமான செயல்களால் நீங்கள் ஒதுங்கிவிட போவதில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பிரச்சனையை அல்லது அவர்களை நேரடியாக சந்தித்து ஒரு கட்டுக்குள் கொண்டு வர பழகுங்கள்.

அவர்கள் உங்களால் இம்சைக்கு உட்படுத்த பட்டு இருக்கும் பட்சத்தில், நிலைமையை விளக்கி சொல்லி இறங்கி வர அதாவது மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். ஆனால் இத்தகைய நேரங்களில் உங்கள் மேல் அதிகாரிகளையும் நீங்கள் இந்த பிரச்சனை வலையத்திற்குள் வைத்திருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை நீங்களே பெருமை படுத்தி கர்வம் கொள்ளாதீர்கள்: ஒரு போதும் வளைந்து கொடுக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் மிக துல்லியமாக இருப்பது என்பது, உங்களுக்கு நீங்களே மறைமுக எதிரிகளை வளர்த்து கொள்வதாகும்.

உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ள தயங்காதீர்கள்.

எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கனிவாக இருக்க பழகுங்கள், உங்கள் கீழ் வேலை பார்ப்பதால், அவர்களை மட்டமாக பார்க்கவோ மறைமுக இம்சை படுத்தவோ வேண்டாம்.

எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகில், ஒரு நாள் உங்கள் கீழ் வேலை பார்த்தவர் கூட உங்களுக்கு அதிகாரியாக வரக்கூடும் இல்லையா?

அதனால் எப்போதும் மற்றவர்களை சமமாக அல்லது உங்களை விட சிறந்தவராக நினைப்பதே சாலச்சிறந்தது.

நேரத்தை கையாளும் கலையில் சிறப்பாய் செயல்படுங்கள்: எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பதை விட, அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்.

இறைவன் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரே ஒரு வாயையும் கொடுத்துள்ளார், எனவே நாம் அதிகம் கேட்க முடியும், அதே நேரத்தில் குறைவாக பேச வேண்டும். எதையும் கேட்கவோ அல்லது சொல்லவோ மிக பொறுமையாக சரியான நேரத்திற்காக காத்திருங்கள்.

புதிய நல்ல எண்ணங்களோடு சிறந்த யோசனைகளையும் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். மேல் சொன்னது போல் வதந்திகளை கையாளும் போது, குறிப்பாக மேல் அதிகாரிகளை பற்றி யாரிடமும் மோசமாக பேசுவதை தவிருங்கள்.

உங்களுக்கான சரியான நேரம் அமையும் போது, துணிவாக மற்றும் தெளிவாக உங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை நடக்கும் ஆலோசனையுடன் ஒப்பிட்டு, சரியான மற்றும் தேவையான கருத்துக்களை சொல்லுங்கள்.

மனஉறுதியுடன் இருங்கள்: அலுவலக அரசியலுக்கு பதில் கொடுக்க மிக சிறந்த வழி என்பது, உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல் பட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செயல் படுவது மட்டுமே.

உங்களை நீங்களே நல்ல முறையில் வழிநடத்தி துணிவாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் செல்வது என்பது எதிரிகளையும் பொறாமைகளையும் வளர்ப்பதிற்கு பதிலாக எளிதாக மற்றவர்களை கவர்ந்து, உங்கள் வழியை பின் பற்ற வைக்கும்.



அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது.

ஆகவே, எப்போதும் மனதில் வைத்திருங்கள், எது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், ஆனால் கண்டிப்பாக நாம் என்ன செய்தமோ அது நமக்கே ஒரு நாள் திரும்ப கிடைக்கும்.

"நாம் என்ன ஆயுத்தை எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" என்பது மற்ற இடங்களுக்கு பொருந்தினாலும், அலுவல அரசியலை பொறுத்த வரை, "நாம் கையாளும் முறையை பொறுத்தே, நம் எதிரிகள் கையாளும் முறையும் அமைகிறது"

எனவே கவலைகளை விட்டு விட்டு, தெளிவாக உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள், உறுதியாக உங்களுக்கு "வானம் வசப்படும்".

நன்றி!.

26 comments:

  1. ஐம்பது இடுகைகளாக எனக்கு தொடர்ந்து ஓட்டளித்தும், பின்னூட்டம் கொடுத்தும், என் இணைய பக்கத்தை பின் தொடர்ந்து வரும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!.

    தொடர்ந்து உங்கள் நட்பை விரும்பும்...,

    என்றும் அன்புடன்,
    சிங்கக்குட்டி.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சிங்கக்குட்டி..மிக அழகாக தொகுத்து இருக்கிறீர்கள். இது பல இடங்களில் பயன்படக்கூடிய குறிப்பு. 50 பதிவுகள் க்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அனைவருக்கும் பயனுள்ள பதிவு.. 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி முத்துலெட்சுமி.

    இது பொதுவாக எல்லா வேலை இடங்களிலும் நிச்சியம் பயன் படும்.

    உங்கள் அன்புக்கு நன்றி பாயிஷா.

    ReplyDelete
  5. பிரயோசனமான பதிவு.

    50 வயசுக்கு...சீ சீ 50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சிங்கா.

    ReplyDelete
  6. நன்றி ஹேமா.

    //50 வயசுக்கு//

    ஏம்மா இப்படி ஒரு கொலை வெறி? அதுக்கு இன்னும் ரொம்பவே வருசம் இருக்கு :-)

    ReplyDelete
  7. நாமும் அரசியல்வாதி ஆக வேண்டும் :)


    அப்புறம் 50 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஹ ஹ ஹ அப்படி இல்லை கண்ணா!

    அரசியலில் இருப்பது நம்மை காத்துக்கொள்ள,
    அரசியல்வாதியாய் இருப்பது பிறரை கெடுக்க!

    என்றுதான் சொல்கிறேன்.

    ReplyDelete
  9. மறுபடியும்....
    சற்றே நீளமான பதிவு...
    அலுவலகத்தில் மட்டுமல்ல இது பொதுவாக எல்லா இடங்களுக்குமே பொருந்தும்...

    ஐம்பது பதிவு தாண்டி விட்டதால் (வாழ்த்துக்கள்) இனி சிங்கக்குட்டி என்று போடாமல் சிங்கம் என்று போடலாமோ?

    ReplyDelete
  10. அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது. ..............சிங்க குட்டி சரியான கருத்தை உறுமி இருக்கிறது. பயனுள்ள இடுகை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. சிறப்பான பதிவு, உங்களது 50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. குறிச்சிகிட்டேன்

    ReplyDelete
  13. vazhthugal.. ivlooo periya post... naan appuram padichukkaren.. =))

    ReplyDelete
  14. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சித்ரா,

    எப்பூடி,

    நசரேயன்,

    _____________________________________________

    நன்றி ஸ்ரீராம்,

    நீளமான பதிவுவுக்கும் மன்னிக்கவும், காரணம் சில கருத்துக்கள் சரியாக சொல்லவேண்டும் மற்றும் எனக்கு எல்லா இடத்திலும் தொடர் பதிவுக்கு விருப்பமில்லை.

    நானும் விரைவில் குறுகிய பதிவாக ஒரு தொடர் பதிவு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறேன்.
    _____________________________________________

    நன்றி கலகலப்ரியா.

    அவசரம் ஒன்னும் இல்லை மெதுவாக படியுங்கள் :-)

    ReplyDelete
  15. ஐம்பதாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மிக உப்யோகமான பதிவு! தொடருங்கள் பயணத்தை!

    ReplyDelete
  16. உங்கள் அன்புக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  17. சிங்கக்குட்டி ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் :-)

    நீங்கள் கூறி உள்ள பல தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு இந்த பதிவு நீளமாக இருப்பதாலோ அல்லது எதோ ஒன்று படிக்கும் போது குழப்பம் வருகிறது, இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    //ஸ்ரீராம். said...
    ஐம்பது பதிவு தாண்டி விட்டதால் (வாழ்த்துக்கள்) இனி சிங்கக்குட்டி என்று போடாமல் சிங்கம் என்று போடலாமோ//

    :-))))

    ReplyDelete
  18. ஒரு பயன்தரு குறிப்புகள் படித்த திருப்பதி

    ReplyDelete
  19. வாங்க கிரி, பதிவு கொஞ்சம் நீளம்தான் மன்னிக்கவும்.

    ஆனால் அலுவலக மன உளைச்சலுக்கு குட்பை! இடுகை தொடர்ந்து இந்த இடுகையை படிக்கும் போது புரியும் என்று நினைத்தேன்.

    அப்படியும் ஏதாவது குழப்பினால் தயங்காமல் கேளுங்கள் விளக்கி சொல்வது என் பொறுப்பு :-)

    இருந்தாலும் அடுத்த இடுகை சின்னதாகவும் தெளிவாகவும் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  20. வாங்க சங்கர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)

    ReplyDelete
  21. அருமையான தகவல் தொகுப்பு.

    நன்றி.

    50க்கு வாழ்த்துக்கள்.

    ஸ்ரீதர்

    ReplyDelete
  22. வாங்க ஸ்ரீதர், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  23. மிகவும் அவசியமான பதிவு.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா.

    ReplyDelete
  25. அலுவலகப்பதிவு அலசி ஆராய்ந்து எழுதிட்டீஙக போல.

    50 பதிவு வாழ்த்துக்கள் இன்னும் மேலும் நல்ல பயனுள்ள பதிவுகளை போட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. மிக்க நன்றி ஜலீலா.

    என்ன ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளையே காணோம்? வேலை பளுவா?

    ReplyDelete