Friday, February 5, 2010

ஆஹா! கெளம்பீட்டாங்கையா கெளம்பீட்டாங்க!

எனக்கு வந்த மின் அஞ்சலை தமிழில் மாற்றி, (சும்மா) நகைக்க இங்கு பகிர்ந்து கொள்வதை தவிர, இதில் உள்குத்து நோக்கம் எதுவும் இல்லை!.

"சற்றுமுன் கிடைத்த அதிர்ச்சி தகவல்"! (இது தான் அந்த மின் அஞ்சலின் தலைப்பு)

இதோ, அந்த அதிர்ச்சி தகவல் மற்றும் படங்கள்!



கணக்கில் அடங்காத மீன் வகைகள், எண்ணிக்கை இல்லாத அளவு, தமிழ் நாட்டு கடல் கரையில் இறந்து கிடக்கின்றன!



பத்திரிக்கையாளர்களும், அரசாங்க அதிகாரிகளும், காவல்துறையும், இதன் காரணத்தை கண்டுபிடிக்க சம்பவ இடத்துக்கு விரைகிறார்கள்!



அங்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களுக்கு, எந்த தடையமோ காரணமோ கிடைக்கவில்லை!.

எனவே, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.



தீவிர விசாரனையில், இதுவரையில் நடந்திராத அளவு ஒரு(மீன்)இனத்தின் கூட்டு தற்கொலை! என்ற அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

இதன் முழு காரணத்தை அறிய விசாரணையை துரித படுத்திய காவல் துறைக்கு, கடைசியாக துப்பு கிடைத்து காரணமும் புரிந்தது!.



அந்த காரணத்தை அறிய துப்(பி)பு கொடுத்த மீன் சொன்னது!...
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;

"விஜய்"-யின் அடுத்த படத்துக்கு "சுறா" என்று பெயர் வைத்திருப்பது, எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், வருங்காலத்தில் எங்கள் இனத்தின் பெயரை "பதிவுலக இடுகைகளில் துவைத்து தொங்க விடாமல்" காக்கும் பொருட்டும்!

அந்த படத்துக்கு வேறு ஏதாவது பெயரை வைக்க சொல்லவே, இன்று எங்கள் உயிரை கொடுக்கிறோம்.

நாங்கள், இங்கு புதைக்க படவில்லை, விதைக்க படுகிறோம், ஏன்னா...

எ...ஏ! நான் தனி ஆளு இல்ல தோ(ஆ)ப்பு!.

இனி வருவது என்னுடைய எண்ணம்,

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கையா! அவ்வ்வ்வ்...

இன்னும் படமே முடியவில்லை, அதுக்குள்ளே மின் அஞ்சல் எஸ்(எம்).எம்.எஸ்-ன்னு ஆரமிச்சா எப்புடி?

உங்க ஆர்வம் புரியுது!, ஆனா, பொறுமை பொறுமை மக்களே!. எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது!.

மொதொல்ல படம் முடியோணும், அப்புறம் ஒன்னுக்கு ஒன்னு டிக்கெட் இலவசம்னு போஸ்டர் ஒட்டோணும்..., அதுக்கப்புறமா, "ரெடி ஒன்...டூ...த்ரீ... ஜூட்" சொல்லித்தான் ஆரமிக்கணும், ஓகே-வா?.

ஹயோ..ஹயோ...! என்னது இது! சின்ன புள்ளதனமால்ல இருக்கு? என்று சொல்பவர்களுக்கு, சமீபத்தில் படித்த "சுறா" படம்! பற்றிய செய்தி ஒன்று!.

கடலில் வின்னை தொடுகிற அளவுக்கு சீறிக்கொண்டு வரும் சுனாமி அலையை பார்த்து பயந்து ஊரே அஞ்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது!...

சீறி வரும் அந்த அலைக்குள் இருந்து படகை ஓட்டிக் கொண்டு விஜய் (ஸ்டைலாக, "ஹயோ..ஹயோ... :-)" ) அறிமுகம் ஆவாராம்!.

இந்த இடத்துல நம்ம "பாஷாவோட ஹோய்...ஹோய்..." பின்னணி பில்டப் உறுதின்னு, இத படிக்கும் போதே உங்களுக்கு புரிஞ்சு இருக்கும், இதுக்கும் மேல வேற என்னத்த சொல்ல ஹும்ம்ம்...

கம்ஷா ஹமிதா!(அதாங்க,...கொரியன் மொழியில் நன்றி!)

டிஸ்கி: கண்ணா!, நான் "பி.எம்"... ஆ.."போஸ்ட் மேன்" மின் அஞ்சலில் வந்ததை அப்டியே கொடுத்துட்டேன், இத புரியாம பின்னூட்டத்துல "பாண்டி" ஆட கூடாது.

34 comments:

  1. //கடலில் வின்னை தொடுகிற அளவுக்கு சீறிக்கொண்டு வரும் சுனாமி அலையை பார்த்து பயந்து ஊரே அஞ்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது!...

    சீறி வரும் அந்த அலைக்குள் இருந்து படகை ஓட்டிக் கொண்டு விஜய் (ஸ்டைலாக, "ஹயோ..ஹயோ... :-)" ) அறிமுகம் ஆவாராம்!.//



    தமிழ் ப் படம்ன்னா அப்படித்தான் தல..,

    ReplyDelete
  2. விஜய் said உலகமே திருந்தினாலும் நா திருந்த மாட்டேன்.

    ReplyDelete
  3. படம் வரும் பின்னே - "SMS" ஓசை வரும் முன்னே. ஹா,ஹா,ஹா,....

    ReplyDelete
  4. ஹா...
    ஹா...
    ஹா...
    தாங்க முடியலை...
    சிரிப்பை அடக்கமுடியவில்லை...

    ReplyDelete
  5. இருக்கும் இருக்கும்

    ReplyDelete
  6. செம காமெடி. டாப் டு பாட்டம் நகைச்சுவை பதிவு.
    :)))

    ReplyDelete
  7. அடக் கடவுளே ...!

    ReplyDelete
  8. சுறா இப்பதான் சூட்டிங்கே எடுக்கறாங்க...

    இப்பவே ஆரம்பிச்சுட்டாங்களா......

    ReplyDelete
  9. செம காமெடி படமாதான் இருக்கும் போல

    ReplyDelete
  10. நன்றி! நன்றி! நன்றி...

    பிரியமுடன்...வசந்த் (அதான் என்னுடையது அல்ல என்று சொல்லிவிட்டேன் இல்லையா)

    மேனகா,

    சுரேஷ், (அதுக்குன்னு சுனாமி கொஞ்சம் ஓவரா படலயா!),

    தமிழ் உதயம் :-),

    சித்ரா, (ஆமாங்க தினம் ஒரு மூணு விசையமாவது இதை பத்தி வருது)

    பாயிஷா,

    நசரேயன்,

    கைலாஷ் :-),

    ஹேமா,

    சங்கவி, இப்பவே இல்லங்க ரொம்ப நாள் முன்னமே! நிறைய எஸ்.எம்.எஸ் வந்துச்சு :-)

    சங்கர்,

    மற்றும் நாகராஜ் (சும்மா, பொழப்புக்கு நடுவே ஒரு பொழுது போக்குதானே)

    நன்றி! நன்றி! நன்றி.

    ReplyDelete
  11. உக்காந்து யோசிப்பாங்களோ.......

    ReplyDelete
  12. அப்படித்தான் இருக்க வேண்டும் ரஹ்மான் :-)

    என்ன ஆச்சு ரொம்ப நாளா ஆளே காணோம்?

    ReplyDelete
  13. ஆஹா.... இந்த தடவ மூச்சு விட கூட டயம் குடுக்கலியே...

    படம் எடுத்துட்டு இருக்கறப்போவே ஸ்டார்ட் மீஜிக்கா....

    ம்ம்ம்... நடக்கட்டும்...

    “சுறா வருது சுறா வருது...
    கடல் கொப்பளிக்குது... கடல் கொப்பளிக்குது
    சுனாமி வருது....சுனாமி வருது...
    எங்க “இளைய தளபதி” நடைய பார்த்து...””

    அய்யோ...அய்யோ....இந்த ஒலகம் இன்னுமா இவன நம்பிட்டு இருக்கு.....

    ReplyDelete
  14. //"பதிவுலக இடுகைகளில் துவைத்து தொங்க விடாமல்" காக்கும் பொருட்டும்! //

    இது சிங்கக்குட்டி டச்சு..

    ReplyDelete
  15. ஆரம்பம் ஆயிடுச்சா....

    ReplyDelete
  16. "குருவிங்க எல்லாம் ஏன் தற்கொலை பண்ணலை?

    ReplyDelete
  17. எங்கள் தலைவர் விஜயை கேவலப் படுத்தியதற்காக எங்கள் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து உங்களுக்கு 4 வேட்டைக்காரன் திருட்டு v c d அனுப்பிவிடுகிறோம், இதுதான் சரியான தண்டனை-:)

    ReplyDelete
  18. என்னவோ போங்க

    இதுக்கு யாரும் கெளம்பளை போல ...

    வருவாங்க வருவாங்க

    :)

    ReplyDelete
  19. நன்றி! நன்றி! நன்றி....

    கோபி, அய்யோ....பாட்டு பலமா இருக்கு,

    ஸ்வர்ணரேக்கா, நம்ம ஊரு பாஷை நம்ம மக்களுக்கு தனியா தெரியுது :-)

    ஸ்ரீராம், இது சும்மா ட்ரைலர் தான் கண்ணா! மெயின் பிக்ச்ர் இனி நிறைய மக்களிடம் இருந்து வரும் :-)

    ஜெய்சங்கர், உங்க ஆதங்கம் புரியுது :-) அது போன படம்!, இது இனி வரும் படம் அவ்வ்வ்வவ் :-)

    எப்பூடி, என்ன கொடுமை சார் இது, என் பிஞ்சு மனசு எப்படி தாங்கும் :-(

    ஜமால், கவலையே படாதிங்க, நிச்சியம் இன்னும் நிறைய வருவாங்க :-)

    நன்றி!.

    ReplyDelete
  20. நல்லா முடிச்சு போடுறாருப்பா சிங்கக் குட்டி, இன்னும் என்னன்ன நடக்கப் போவுதோ..

    ReplyDelete
  21. வாங்க ஷ‌ஃபி.

    எது நடக்க வேண்டுமோ! அது நன்றாகவே நடக்கும்! :-)

    ப்ரீயா விடு, ப்ரீயா விடு மாமு :-).

    நன்றி!.

    ReplyDelete
  22. எனக்கும்தான் இந்த ஈ மெயில் வந்தது. ஆனால் உங்களைப் போல சுவார்ஸமாக தொடர்ந்து சிந்திக்கத் தெரியவில்லை. சுவைத்தேன். நன்றி

    ReplyDelete
  23. விஜய்"-யின் அடுத்த படத்துக்கு "சுறா" என்று பெயர் வைத்திருப்பது, எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.

    ..//ஆஹா இவ‌ங்க‌ளும் கிள‌ம்பிட்டாங்க‌ளா?

    எப்படி இப்படி ஒரு வித்தியாசமான யோசனை வந்தது உங்களுக்கு... ஹி ஹி

    ReplyDelete
  24. சுற்றுச்சூழழ் ஆர்வலரோ என்று பதைபதைத்து வந்தால்....

    ஆமா.. எப்படி இப்பூடி.....

    ReplyDelete
  25. படம் வரட்டும்... வெயிட் ப்ளீஸ்...,

    ReplyDelete
  26. நாங்க நாய்க்குட்டி , நீங்க சிங்கக்குட்டியா ?
    எங்க விஜய்க்கு எதிரா எத்தினி பேர் கிளம்பி இருக்கீங்க ?
    வேண்டாம் ...

    ReplyDelete
  27. //கம்ஷா ஹமிதா// நான் நமீதா!னு வாசிச்சிட்டேன்.....:)

    ReplyDelete
  28. என்ன காரணமோ...விஜய் ரசிகர்களின் சாபமோ அல்லது கொரியாவின் பனி பொழிவோ!, தெரியவில்லை, கடும் ஜுரத்தால் கணினி பக்கம் வரமுடியவில்லை. சரியாகி வரும் வரை பொறுத்திருக்கவும்.

    அதுவரை நன்றி....!

    Dr.விஜய்,

    Dr.எம்.கே.முருகானந்தன்,

    ஜலீலா,

    கண்ணகி,

    பேநா மூடி,

    நாய்க்குட்டி மனசு, (சரி விடுங்க எல்லாம் குட்டி தானே!)

    தக்குடுபாண்டி, (தங்கபாண்டிமா நீ!... எல்லோரும் நம்ம மாதிரியே யோசிக்கிறாங்கப்பா!).

    நன்றி!.

    ReplyDelete
  29. வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  30. வாங்க அம்மு மது, மீன்கள் இறப்பதை பொறுக்க முடியாத உங்கள் இளகிய மனசு எனக்கு புரிகிறது :-).

    ReplyDelete