Monday, August 23, 2010

இது புதுசு கண்ணா புதுசு!

இன்று உலகம் முழுவதுமே சவாலாக இருக்ககூடிய விசையம் என்றால் அது புகை பிடிப்பதை கட்டுப்படுத்துவது என்பதுதான்.

அந்த அளவுக்கு ஆண் பெண் என்றில்லாமல் உலக மக்கள் புகைக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது மட்டுமில்லாமல்,இறப்பு விகிதமும், மலட்டு தன்மையும் அதிவிரைவாக கூடிக்கொண்டு வருவதற்கு இது ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.



சிகரட்டை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக பல மாற்று வழிகள் கண்டு பிடித்த போதும், சுவிங்கம், மாத்திரை போன்ற எந்த ஒரு மாற்று வழியும் சரியான பலனை தரவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தானாக விரும்பி விட்டால் தவிர, புகைப்பதை கைவிட மாற்றுவழி கண்டு பிடிப்பது என்பது ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

மாற்றுவழியாக கண்டுபிடிக்க படும் பொருட்கள் வெற்றி பெறாத காரணத்தை ஆராய்ந்தால் அதன் அடிப்படை இரண்டாகவே இருக்கும்.

I- புகைத்ததை போல உணர்வே வரவில்லை!.

II- என்னதான் இருந்தாலும் சிகரட்டை கையில் பிடிக்க கூடியதை போல உணர்வும் புகையும் இல்லாததுதான்.

காரணம் புகை வராத ஒரு பொருளை வைத்திருப்பது சிலருக்கு சங்கோஜத்தையும் சிலருக்கு பின் விளைவுகளையும் கொடுத்தது.



இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சந்தைக்கு புதிதாக வந்திருப்பதுதான் இ-சிகரட்(படங்களை சொடுக்கி தெளிவாக பார்க்கவும்).

Electronic Cigarette என்பதின் சுருக்கமே E-Cigarette, பேட்டரியில் இயங்கும் இவை, ஒரு முறை சார்ச் செய்தால் ஆறு மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் இருக்கிறது.

மற்ற அனைத்து தயாரிப்பை விட இது குறுகிய காலத்தில் வெற்றி பெற்று இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன், காரணம் இது சாதாரண சிகரட் போலவே வடிவம், புகை வருகிறது, குறிப்பாக புகைத்ததை போல சுவையும் உணர்வும் இருக்கிறது, பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம், இதில் தீங்கு வரும் நிக்கோடின், தார் போன்ற எந்த நச்சு பொருட்களும் இல்லை என்று சான்றுகள் தரப்படுகிறது.



சாதாரண சிகரட் சுவை முதல் பல்வேறு சுவைகளில் இ-சிகரட் கிடைகிறது, இதில் வரும் புகை அருகில் இருப்பவர்களுக்கு, மற்ற சாதாரண சிகரட் புகை போல எரிச்சலையோ, வெறுப்போ ஏற்படுத்துவது இல்லை, அதனால் இதை அந்த அந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டு எங்கும் புகைக்க முடியும் என்று விளம்பரப்படுத்த படுகிறது..

சில நாடுகளில் அரசாங்கமும் இதை அங்கீகரித்து இருக்கின்றன, சாதாரண சிகரட் புகைக்கு தடை விதித்து இருக்கும் பகுதிகளில் கூட இ-சிகரட் புகைக்க அனுமதி கொடுத்திருக்கிரார்கள். அதே நேரம் சில நாடுகளில் இதை இன்னும் அங்கிகரிக்கவில்லை என்பதும் உண்மை.

எது எப்படியோ புகைப்பதை நிறுத்த இ-சிகரட் ஒரு சிறந்த மாற்று வழியாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனாலும், இ-சிகரட் வாங்கும் முன் பொதுவாக சில சுய பரிசோதனை விசையங்களை கருத்தில் கொள்ளவது என்பது அவரவர் சொந்த பொறுப்பாகிறது.

இந்த தயாரிப்பை வாங்கவோ அல்லது பொது இடங்களில் பயன் படுத்தவோ உள்ள விதி முறைகளை நீங்கள் இருக்கும் நாட்டின் சட்டத்தில் இருந்து தெளிவாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் நிறுத்த சொல்கிறார்கள் என்பதற்காக இல்லாமல், உங்கள் அடி மனதில் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

இதை தவிர மற்ற புகை பிடிக்கும் சமந்த பட்ட அனைத்து பொருட்களையும் உடனே கண்ணில் படாமல் கடாசி விட்டு, இதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



இது புகைப்பதை படிப்படியாக குறைத்து ஒரேடியாக நிறுத்துவதற்கான ஒரு சிகிச்சைதான், இதையும் விரைவில் நிறுத்தி விட வேண்டும் என்று ஒவ்வொரு முறை புகைக்கும் போதும் நினைவில் வைத்திருந்து, ஒரு நாள் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும்.

இறுதியாக, எந்த ஒரு பொருள் சந்தைக்கு வந்தாலும் அதன் அடிப்படை பலனை இழந்து விட்டு, வெறும் விலையை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த விலையில் சில போலி தயாரிப்புகளும் உடனே சந்தைக்கு வந்து விடும்.

விலை குறைவு என்பதை மட்டும் பார்க்காமல், தகுந்த நிபுணர்களை அல்லது மருத்துவரை கலந்து ஆலோசித்து சரியான தயாரிப்பை விலை சிறிது அதிகமானாலும் வாங்குவதன் மூலம் மட்டுமே இ-சிகரட்டின் உண்மையான பலன் பெற முடியும்.






இனி சுவாரஸ்சியமான ஒரு குட்டி தயாரிப்பை பற்றி பார்ப்போம்.

எவ்வளவோ பெரிய பெரிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலும், ஆக சிறிய பொருளை தயாரிப்பதில் இருக்கும் ஆர்வம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதோ இங்கு படத்தில் இருப்பது ஏதோ பென்சில் சீவ அல்லது விளையாட்டு பொருள் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு ஆயுதம் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆனால் உண்மை அதுவே, ஆம் இது "கெனான்" நிறுவம் தயாரித்துள்ள ஆக சிறிய பீரங்கி.





கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, உருவத்தில் சிறிதாக இருந்தாலும் இதன் சக்தி அதிகமாகவே இருக்கிறது.





என்னதான் சொல்லுங்கள், ஆயுதம் என்றாலே ஆபத்துதானே?

அதிலும், இத்தகைய பொருட்கள் தப்பி தவறி கூட குழந்தைகள் கையில் கிடைத்து விட்டால்!, அது உயிருக்கே உலை வைத்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உங்கள் நேரத்திற்கு நன்றி, மீண்டும் சந்திப்போம்.

43 comments:

  1. விழிப்புணர்வை தூண்டும் பதிவுங்க..... இதை வாசித்தபின், சிலராவது திருந்த வேண்டும்.

    ReplyDelete
  2. என்ன சித்ரா மின்னல் மாதிரி வந்துட்டு பின்னூட்டம் கொடுக்குறீங்க? உங்கள் வேகம் என்னை வியக்க வைக்கிறது.

    கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. Thank you for inviting me for the thodarpadhivu.
    But I have already written in this topic.

    http://konjamvettipechu.blogspot.com/2010/07/blog-post_28.html

    ReplyDelete
  4. //மற்றவர்கள் நிறுத்த சொல்கிறார்கள் என்பதற்காக இல்லாமல், உங்கள் அடி மனதில் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.//

    இந்த எண்ணம் இருந்தால் மட்டுமே நிறுத்த முடியும். மாற்று வழி மனங்களை மாற்றட்டும். ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கட்டும்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  5. மிக்க நன்றி சிங்கா .........

    தெளிவான விளக்கங்களுடன் கூடிய புகைப்படம் மற்றும் வீடியோ .. கலக்குரிங்க போங்க.....

    அப்டியே நல்ல பிராண்ட் நேம் சொன்னா உதவியா இருக்கும் (இதுவேறாயானு திட்டாதீங்க தலைவா )

    புகைப்பவர்களுக்காக இத்தனை மெனக்கெடுப்பிற்கு மிக்க நன்றி....

    --கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, உருவத்தில் சிறிதாக இருந்தாலும் இதன் சக்தி அதிகமாகவே இருக்கிறது.---- பயங்கரமா இருக்கு....

    ReplyDelete
  6. சிறப்பான, உபயோகமான தகவல்

    அப்ப இன்மேல் திரைப்படங்களில் நடிகர்கள் இ-சிகரட் பிடித்தால் ராமதாஸும், அன்புமணியும் ஒண்ணும் பண்ணமுடியாதா? :-)

    ReplyDelete
  7. சிங்கா...மனதால் சிகரெட் புகைப்பவர்கள் நிறுத்தினாலே தவிர இதெல்லாம் பொய் !

    சின்னதோ பெரிதோ ஆயுதங்களைப் பார்த்தாலே கோபமாய் வருது !

    ReplyDelete
  8. புதிய தகவல் தந்திருக்கீங்க! நன்றீங்க! எப்படியோ புகை பிடிக்கிறதை ஜனங்க கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திட்டாங்கன்னா எல்லோருக்கும் சந்தோஷம் தான்.

    என் வலை பதிவுவை படிச்சி பாத்து கருத்து சொன்னதுக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து தரணும்னு கேட்டுகிறேன்!

    ReplyDelete
  9. @Chitraஎழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன், கவலையவிடுங்க படிச்சுடுவோம்.

    ReplyDelete
  10. @??????????உண்மைதான் ராமலக்ஷ்மி, தன்னபிக்கை மிக அவசியம் மனித வாழ்வில்.

    ReplyDelete
  11. @?????நல்ல பகிர்வுக்கு நன்றி விஜய்.

    ReplyDelete
  12. @RK ??????சொன்னபடி விபரம் கொடுத்து விட்டேன், இப்போது மகிழ்ச்சிதானே RK நண்பன்.

    //அப்டியே நல்ல பிராண்ட் நேம் //
    அதன் சொல்லி இருக்கிறேனே, அது அவரவர் சொந்த பொறுப்பு, ஆனால் ஒரு நல்ல மருத்துவரை ஆலோசித்து முடிவு எடுக்கவும்.

    மேலும் என்னை தொலைபேசியில் அழைத்து பேசியமைக்கு மிக்க நன்றி, தொடரட்டும் நம் நட்பு.

    ReplyDelete
  13. @???????..வாங்க எப்பூடி.
    அதெப்படி முடியும்?

    ரஜினி குடிக்காத வரை எதுவும் இல்லை.

    அவர் செய்தால் இளைய தலைமுறையை கெடுக்கிறார் என்று கொடி பிடிப்போம் பல இடுகைகளை எழுதி கிழிப்போம்...சீ...எழுதி கொதிப்போம் :-)...!

    ReplyDelete
  14. @????இருக்கலாம் ஹேமா, ஆனால் உடலுக்கு தீங்கு இல்லை என்ற ஒரு நல்ல கருத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

    //ஆயுதங்களைப் பார்த்தாலே கோபமாய் வருது//

    உங்கள் வேதனையின் வலி உங்கள் வார்த்தைகளில் எனக்கு புரிகிறது, மாறும் மாறாது என்ற வார்த்தையை தவிர மற்ற அனைத்தும் ஒருநாள் மாறும்.

    ReplyDelete
  15. @?????? ???? ?????உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி "என்னது நானு யாரா".

    தமிழிஸ் மூலம் உங்கள் வலை பக்கத்தை அறிந்தேன், இனி தொடர்ந்து வந்துடுவோம் :-)

    ReplyDelete
  16. மிக நல்ல பதிவு.


    தெளிவான படங்கள் , விளக்கத்துடன்..

    சிகரெட் குடிப்பவங்களை கட்டி போட்டாவது இதை பழக்கிடலாம்தான்..

    ReplyDelete
  17. @??????? ?????.புன்னகை தேசத்தின் கருத்துக்கு நன்றி.

    கை கட்டா இல்லை, கால் கட்டா என்று சொல்லவே இல்லையே :-) ...ஹி ஹி ஹி :-)

    ReplyDelete
  18. Hi
    Super eppa pa namba indiyavuku varum, appadi vantha please tell me

    ReplyDelete
  19. பயனுள்ள பகிர்வு.. இ-சிகரட் உண்மையில் இன்ட்ரஸ்டிங்-ஆ தான் இருக்கு..
    அதிலும் அந்த குட்டி cannon ஆயுதம்.. நீங்க சொல்றது போல, குழந்தைகள் கையில் கிடைத்தால் ஆபத்து தான்..

    ReplyDelete
  20. @jaiநன்றி ஜெய்.

    இந்தியாவில் வந்து விட்டதாக, இதை படித்த என் சென்னை நண்பர் ஒருவர் சொன்னார்.

    ReplyDelete
  21. @Ananthiவாங்க ஆனந்தி என்னது // இ-சிகரட் உண்மையில் இன்ட்ரஸ்டிங்-ஆ தான் இருக்கா //

    சொல்லவே இல்ல நீங்க தம் அடிப்பீங்கன்னு?

    ஹி ஹி சும்மா :-)

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  22. //சொல்லவே இல்ல நீங்க தம் அடிப்பீங்கன்னு?

    ஹி ஹி சும்மா :-)
    //
    எவ்ளோ குசும்பு உங்களுக்கு???
    விஷயம் இன்ட்ரஸ்டிங்-ஆ இருக்குன்னு சொன்னா...!
    இப்படியா கிண்டல் பண்றது.. இருக்கட்டும் இருக்கட்டும்.. :-)

    ReplyDelete
  23. //மனதால் சிகரெட் புகைப்பவர்கள் நிறுத்தினாலே தவிர இதெல்லாம் பொய் !//

    இதுதான் உண்மை

    ReplyDelete
  24. அருமையான தகவல்கள்..! தொகுப்புக்கும், பகிர்வுக்கும் நன்றி!

    -
    DREAMER

    ReplyDelete
  25. நல்ல தகவல். இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் தனி நபருக்கு மனோதிடம் வேண்டும்.

    குடித்தல், புகை பிடித்தல் இரண்டும் தனி மனித வாழ்வை சூறையாடிவிடும்.

    ReplyDelete
  26. சிங்கக்குட்டி இன்று வரை தம்மு அடிக்கிறதா நிறுத்தியதா நான் கேள்விபட்டதே இல்லை.. ஒருத்தர் இரண்டு வருடம் நிறுத்தி! பின் திரும்ப தொடர்ந்து விட்டார். இவரைத்தான் உதாரணம் காட்டிக்கொண்டு இருந்தேன்..அவரும் வேட்டு வைத்து விட்டார்.

    இனி தம்மு அடித்தால் சங்கு என்று சொன்ன பிறகு நிறுத்திய இருவரை எனக்கு தெரியும். அதிலும் ஒருத்தர் எப்பாவது அடிக்கிறார்.

    ReplyDelete
  27. @Ananthiசரி, சரி, அதான் சும்மான்னு சொல்லிட்டேன்ல ஆனந்தி, அதுக்கு ஏன் இத்தனை கோபம்? விடுங்க விடுங்க :-).

    ReplyDelete
  28. @நசரேயன்உண்மைதான் நசரேயன், ஆனால் என்ன செய்வது மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னாங்க :-)

    ReplyDelete
  29. @DREAMERஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி DREAMER .

    ReplyDelete
  30. @DrPKandaswamyPhDஉண்மைதான் சார்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  31. @????சரிதான் கிரி, ஆனால் என் தந்தை சுத்தமாக கடந்த ஆறு வருடமாக நிறுத்தி விட்டார். ராணுவத்தில் இருந்தது முதல் யாருமே அவரை சிகரட் இல்லாமல் பார்திருக்க முடியாது, எப்படியோ நிறுத்தி விட்டார்.

    அவரை பார்த்து நானும் நிறுத்த முடிவு செய்து விட்டேன்.

    திருமாணமான புதிதில் ஒரு எட்டு மாதம் நிறுத்தினேன், ஆனால் இப்போது சுத்தமாக நிறுத்த முடிவு செய்துள்ளேன், அதற்காக மருத்துவரை பார்த்த போது கிடைத்த மாற்று வழிதான் இது, இதையும் விரைவில் நிறுத்தி விடுவேன் :-)

    ReplyDelete
  32. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  33. http://youthful.vikatan.com/youth/Nyouth/kiragamstory130210.asp



    நண்பா இந்த விகடன் வெப் தளத்தில் உங்கள் தளம் பார்த்ததில் மிக்க மகிழ்சி. வாழ்த்துகள் நண்பா.





    இதனை என் தளத்தில் இட உங்கள் அனுமதி கிடைக்குமா நண்பா.

    ReplyDelete
  34. இதனை என் தளத்தில் இட உங்கள் அனுமதி கிடைக்குமா நண்பா. என் தளத்தில் வந்து சொல்ல முடியுமா நண்பா.

    ReplyDelete
  35. @prabhadamuஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி prabhadamu.

    ReplyDelete
  36. @prabhadamuநண்பா என்று சொன்ன பின் தனியாக அனுமதி கேட்க வேண்டுமா?

    உங்களுக்கு பிடித்திருக்கும் அல்லது பயன் படும் பட்சத்தில் நீங்கள் இப்பதிவை தாராளமாக எங்கு வேண்டுமானாலும் பயன் படுத்திகொள்ளலாம் நாண்பா :-).

    தொடரட்டும் நம் நட்பு.

    ReplyDelete
  37. மிக்க நன்றி நண்பா. நட்புக்கு மரியாதை தந்த உங்க அன்புக்கு என் மனார்ந்த நன்றி நண்பா. சிங்ககுட்டின்னு புனை பெயர் கூட நல்லா தான் இருக்க்கு. :)

    ReplyDelete
  38. உங்கள் அன்புக்கு மீன்றும் என் நன்றி prabhadamu.

    என்பெயர் கதையைதான் இதற்கு முன் இடுகையில் சொல்லிவிட்டேனே :-).

    ReplyDelete