Tuesday, January 5, 2010

அல்லா அருணாச்சலா!

புதுவருட வாழ்த்துக்களுடன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, எங்கள் பேச்சு பதிவுகள் பக்கம் திரும்பியது.

"சித்தர்கள்" பதிவை நோக்கி வந்த எங்கள் பேச்சு...,

சித்தர்கள்

பதினெட்டு சித்தர்கள்

இதில் சூஃபியர்களை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது என்று சொல்லி, எனக்கு "சூஃபியர்கள்" பற்றியும் "சித்தர்கள்" பற்றியும் நன்கு தெரிந்தவர்கள் சொன்ன சில நல்ல தகவல்களை அனுப்பி வைத்தார்கள்.

அதில் நான் படித்திராத சில தகவல்கள் அருமையாக இருந்தது. அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை,

"வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!" என்ற பட்டினத்தார் பாடல் தெரிவிக்கிறது.

"மாத்தானவத்தையும்"
என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள சுடுகாடுகளில் பாட படுகிறதாம்".

சித்தர்களுக்கு இயல்பு மீறிய(Abnormal) புறத்தோற்றமும் இருக்கக் கூடும் என்பதை,

"பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!"

என்ற பட்டினத்தார் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இதே போல, சூஃபியர் என்ற சொல், 'சூஃபி' என்ற அரபுச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி("Wool")யைக் குறிக்கும்.

பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ ("Man of Wool") என்ற பொருள் கொண்ட "சூஃபி" என்னும் சொல்லை தந்தது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களில் "பீருமுகம்மது வாவா" என்று நெல்லை மக்களால் அழைக்கப்படும் பீர்முஹம்மத் அப்பா(ரலி) முதலாமவர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலையில் அவருடைய அடக்கத்தலம் உள்ளது.



"பீர்முஹம்மத் அப்பா(ரலி) அவர்களே தமிழ் சூஃபித்துவ ஞானப் பாடல் வரிசையில் முதலாமவராக விளங்குகிறார்கள்" என்று தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் கூறியுள்ளார்.

சூஃபியாக்கள் (பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்) பரம்பொருளை "உண்மை" என்றே சுட்டுகின்றனர். "தன்னுணர்வு கொண்ட விழைவு", "அழகு", "ஒளி" அல்லது "எண்ணம்" என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுச் சூஃபியர்கள் சிலரின் பெயர்கள் - பீர்முஹம்மத் அப்பா(ரலி), கோட்டாறு ஞானியார், குணங்குடி மஸ்தான் சாஹிபு, கலீபத் ஷைகு ஷாஹூல் ஹமீத் அப்பாநாயகம், பரிமளம் முகம்மது காஸிம், இறசூல் பீவி, ஐயம்பேட்டை அப்துல் கரீம் பாவா, குஞ்சலி சாஹிப், இளையான்குடி மஸ்தான் ஸாஹிப், கோட்டாறு சைகுத்தம்பி ஞானியார், அப்துல் காதிர் வாலை மஸ்தான், பெரியநூஹூ லெப்பை ஆலிம், 'காலங்குடி மச்சரேகைச் சித்தன்' என்றழைக்கப்படும் செய்யிது அப்துல்வாரித் ஆலிம்மௌலானா ஐதுரூஸ், மேலைப்பாளையம் முகியித்தீன் பஸீர், மோனகுரு மஸ்தான் ஸாஹிப், முகம்மது ஹம்ஸாலெப்பை ஆகியோர்.

தமிழ்நாட்டு சூஃபியர்களின் தொண்ணூற்றிரண்டு வகைமாதிரி கவிதைகள் "இறைவனும் பிரபஞ்சமும்" நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, சித்தர்களும் சூஃபியர்களும்

1. மதங்கள் மனிதர்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுத்தாமல் தலையிட்டு, மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள். பல இடங்களிலும் சூஃபிஞானியர்களுக்கு ஸியாரங்கள் கட்டப்பட்டும் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டும் வருவதை அறிகின்றோம்.

இவ்வரிசையில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்குவது மகாமேதை மீரா சாஹிப் ஆண்டகை அவர்களுடைய இடமாகும். இந்து, கிறிஸ்த்துவ, இஸ்லாமியர் என்று அனைவராலும் வணங்க படுகிறார்.

2. பல்வேறு நுட்பமான முறைகளைப் பின்பற்றி, உட்சமயங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும் தனித்தனிக் கடவுளரைக் கற்பித்துக்கொண்டும் மக்கள் அஞ்ஞானத்தில் அழுந்துவதைத் தடுத்தார்கள்.

3. பக்தியின் பெயரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட உருவ வழிபாட்டு முறைகளையும் புறச் சடங்குகளையும், போலிவாழ்வையும் மூடப் பழக்கங்களையும் களைந்து அறிவார்ந்த ஆன்மிக வாழ்விற்கு வழிகாட்டினார்கள்.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர்)

4. எவ்வாறு கலப்புத் திருமணங்களால் சாதிமுறை ஆட்டங்காணுமோ, அவ்வாறு சித்தர் பீடங்களைப் பின்பற்றிய மக்களிடத்தில் சாதிவேற்றுமை மதிப்புப் பெறாதவாறு பாதுகாத்தார்கள்.

5. உடைமைச் சமூகத்தில் இல்லாரும் வாழ வேண்டி, நிலையாமைகள் பலவற்றைத் தம் எளிய, தெளிவான, நேரடியான பாடல்களால் உணர்த்தி, உடைமை,சொத்துக் குவிப்பவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தினர்.



"புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே உடலாய் உயிராய் உலகமே தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே"

என்ற பாடல் "சித்தர் திருமூலர்" அவர்கள் பாடியது.

இதே போல் "மஸ்தான் ஸாஹிபு" பாடியவை பின்வருமாறு:

"ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமா கிக் கானாகி மலையாகிவளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளு தற்கே வானோரும் அடிபணித லுள்ளநீர் பின்தொடர வள்ளல் இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே"

"திருமூலரின்" பாடலை "மஸ்தான் சாஹிபு" அவர்களின் பாடல் பொருளோடு ஒப்பிட்டு பார்த்தால், தமிழ்நாட்டுச் "சித்தர்களும் சூஃபியர்களும்" எவ்வளவு புரிந்துணர்வுடன் வாழ்ந்து, மக்களை நெறிப்படுத்தினார்கள் என்பது தெளிவாகப் புரியும்.


நல்ல இந்த தகவல்களை கொடுத்த நண்பர்களுக்கு நன்றி!.

சரி, இனி என் எண்ணங்களை பார்ப்போம்.

இறை நம்பிக்கை மட்டும் கொண்டு மதங்களுக்கு அப்பாற்பட்ட சித்தர் வழியை நான் விரும்புகிறேன்.

இந்த மனித வாழ்கையில் எல்லாம் "மாயை" என்று புரியவைக்கும், எனக்கு பிடித்த ஒரு பாடலை இந்த நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தனிப்பட்ட மதசார்பான படங்களை தவிர்த்து விட்டு "Pray" என்ற பொது வார்த்தையை நீங்கள் விரும்பும் "கடவுளை" அல்லது "கொள்கையை" நினைத்து கண்ணை மூடி பாடல் வரிகளை மட்டும் கவனித்து பாருங்கள்.



என்னடா இது! வருட பிறப்பும் அதுவுமாய், இப்படி அழுகையுடன் கூடிய ஒரு பாடலை தருகிறானே என்று நினைக்க வேண்டாம்.

சுகமும், துக்கமும் சமமாக பார்க்கும் மனம் வேண்டும். கஷ்டத்தில் மட்டுமிலாமல் சந்தோசத்தின் போதும் சமமாக இறைவனை நினைக்கும் மனம் வேண்டும். அதுவே வாழ்கையின் உண்மையை நமக்கு உணர்த்தும்.

சொல்வது "திருமூலரோ" அல்லது "மஸ்தான் சாஹிபோ" அல்லது "ஜான் போப்போ" நாம் யாரென்று உண்மை நிலையை உணர, இந்த நிலையற்ற மனித வாழ்கையில் "சித்தார்" வழி செல்வதுதான் சிறந்தது.

எனவே இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை! என்பது என் எண்ணம்.

உங்கள் நேரத்திற்கு நன்றி!.

35 comments:

  1. மிக நல்ல பதிவு. பாடலை இனிதான் கேட்க வேண்டும்.

    //எனவே இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை! என்பது என் எண்ணம்.//

    அருமை.

    ReplyDelete
  2. நன்றி ராமலக்ஷ்மி.

    கண்டிப்பாக பாடல் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன், பாடலை கேட்ட பின் சொல்லுங்கள் :-)

    ReplyDelete
  3. வாங்க ஸ்வாமி.

    "தத்வமஸி" என்ற சொல்லுக்கு "நீயே தான் அது" அல்லது "அது நீயாக இருக்கிறாய்" என்பது அர்த்தம் என்று நினைக்கிறேன் (தவறாக இருந்தால் மன்னிக்கவும்).

    சபரிமலை செல்லும் போது அங்கு "ஐயப்பன் சன்னதி" முகப்பில் உள்ள இந்த சொல்லை "எல்லா உயிர்களிலும் இறைவனே இருக்கிறான்" என்று மனிதனுக்கு உணர்த்தவே எழுதப்பட்டு உள்ளது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    நன்றி!.

    ReplyDelete
  4. //தனிப்பட்ட மதசார்பான படங்களை தவிர்த்து விட்டு "Pray" என்ற பொது வார்த்தையை நீங்கள் விரும்பும் "கடவுளை" அல்லது "கொள்கையை" நினைத்து //

    நல்ல வரிகள் நண்பரே...ரசித்தேன்.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு சிங்கக்குட்டி..

    ReplyDelete
  6. இலங்கையில் பாம்பாட்டி சித்தர், குடைச்சாமி என பலர் இருந்தாலும் யோகர் சுவாமிகளே இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுபவர்.

    ReplyDelete
  7. நன்றி பூங்குன்றன்.

    நன்றி வெற்றி.

    ReplyDelete
  8. நன்றி எப்பூடி

    பாம்பாட்டி சித்தர் பதினெட்டு தமிழ் சித்தர்களில் ஒருவர்.

    "யோகர்"? புரியவில்லை!

    பழனி "போகரை"த்தான் நீங்கள் குறிபிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    எனக்கு மிக பிடித்த சித்தர் "போகர்".

    ReplyDelete
  9. அட்டகாசமான பதிவு நண்பா

    மனதார்ந்து வாழ்த்துகிறேன் (எனக்கும் போகர் மிகவும் பிடிக்கும்)

    விஜய்

    ReplyDelete
  10. நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி சிங்கக்குட்டி :)

    ReplyDelete
  11. மிகத் தெளிவானதும் நம்பிக்கையானதுமான பதிவு.அறிந்துகொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  12. அருமையான வரிகள்

    // இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை! என்பது என் எண்ணம். ///

    நல்லா சொல்லிருக்கீங்க .

    அப்புறம் , சேக் முகம்மது பாடிய " தமிழகத்து தர்காக்களை ..." என்ற பாடலில் தமிழ் நாட்டில் எத்தனை தர்காக்கள் உள்ளன , என்பதை அறியலாம் .

    ReplyDelete
  13. நல்ல அனுப பூர்வமான பதிவு இது. நல்ல விசயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சிங்ககுட்டி. நான் என் வெள்ளியங்கிரி நிறைவுப் பகுதியில் சில அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். பார்க்கவும் நன்றி.

    ReplyDelete
  14. நன்றி விஜய்.

    உங்களை போலவே நானும் கற்றுக்கொண்டதுதான் இது.

    போகரை பற்றி புத்தகங்களில் வராத தகவல்கள் கூட சேகரித்து வைத்து இருக்கிறேன், நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பகிர்ந்து கொள்வோம் :-)

    _____________________________________________

    நன்றி அண்ணாமலையான்.

    நன்றி சுடுதண்ணி.

    நன்றி ஹேமா.

    நன்றி ஸ்ரீராம்.

    _____________________________________________

    நன்றி ஸ்டார்ஜன், அப்படியே " தமிழகத்து தர்காக்களை " பாடலை இணையத்தில் எங்கு கேப்பது என்ற லிங்கையும் கொடுக்கபடாதா?

    _____________________________________________

    நன்றி பித்தனின் வாக்கு,பார்த்து ஓட்டும் போட்டு விட்டேன் சுதாகர் பாபா!

    வீட்டில் இருந்தால் மட்டுமே என்னால் பின்னூட்டம் போட முடியும் என்பதால் அதிகமாக பின்னூட்டம் போட முடிவதில்லை, ஆனால் பதிவுகளை படித்து ஓட்டு போட்டு விடுவேன் அனைவருக்கும் :-)
    _____________________________________________

    ReplyDelete
  15. பல்வேறு சமயங்களில் இருக்கும் இலக்கிய வளங்களின் நல்ல ஒரு தொகுப்பாய்வு.

    ReplyDelete
  16. //"யோகர்"? புரியவில்லை!//


    யோகர் சுவாமிகள் என்பது சரியானது, இவருக்கு யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறை என்னும் இடத்தில் ஒரு மணிமண்டபம் உண்டு , அது தவிர யாழ்ப்பாணத்தின் பிரபல கோவிலான நல்லூரில் இவரது நினைவாக ஒரு இடமும் உண்டு.

    ReplyDelete
  17. உங்கள் எண்ணங்களையும் அழகாக இணைத்திருக்கிறீர்கள்..

    ReplyDelete
  18. சில சித்தர்களுக்கு சூஃபி ஞானிகளும், சில சூஃபி ஞானிகளுக்குச் சித்தர்களும் குருவாய் இருந்த நிகழ்வும் உண்டு

    :)

    ReplyDelete
  19. நல்ல விளக்கமான பதிவு.

    ReplyDelete
  20. //சொல்வது "திருமூலரோ" அல்லது "மஸ்தான் சாஹிபோ" அல்லது "ஜான் போப்போ" நாம் யாரென்று உண்மை நிலையை உணர, இந்த நிலையற்ற மனித வாழ்கையில் "சித்தார்" வழி செல்வதுதான் சிறந்தது.//

    சித்தன் போக்கு சிவன் போக்கு ! :)

    //எனவே இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை! என்பது என் எண்ணம்.//

    பொதுவாக அனைத்தும் ஒன்றே என்று கூறி இந்து மதத்திற்குள் அனைத்தையும் அமிழ்த்திப் பார்த்து அது அதற்கென ஒரு சிலையை வைத்துவிட்டு வழக்கம் போல் வருணம் போற்றுவது தான் இந்திய சமயவாதிகளின் நற்செயலாம். நீங்கள் அந்த புரிதலில் அப்படிச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  21. வாங்க எப்பூடி,
    அருமையான உங்கள் தகவலுக்கு நன்றி :-)

    _____________________________________________

    நன்றி முத்துலெட்சுமி.

    _____________________________________________

    வாங்க எம்.எம்.அப்துல்லா.

    உண்மைதான் நீங்கள் சொல்வது, நம் மக்களும் இதே போல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை.

    _____________________________________________

    நன்றி மாதேவி.

    _____________________________________________

    வாங்க கோவி.கண்ணன்.

    // அனைத்தும் ஒன்றே என்று கூறி இந்து மதத்திற்குள் அனைத்தையும் அமிழ்த்திப் பார்த்து ....//

    நீங்க விட்டாலும் உங்க குசும்பு விடாதே :-)

    நானும் அந்த அந்த புரிதலில் சொல்லவில்லை.

    உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் மத பேதம் இல்லாமல் இருப்பார்கள் (மேலே நம்ம எம்.எம்.அப்துல்லா சொன்னது போல்).

    மதம் இன்று மதத்தை தவிர மற்ற அனைத்து அரசியலுக்கு மட்டுமே பயன் படுகிறது என்பதை குறிக்கிறேன்.

    நன்றி!.
    _____________________________________________

    ReplyDelete
  22. புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  23. வாங்க தேவா, கருத்துக்கு நன்றி!.

    என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? அதிக வேலை பளுவா?

    ReplyDelete
  24. உங்க‌ளுக்கும், உங்க‌ள் குடும்ப‌த்தாருக்கும். புத்தாண்டு வாழ்த்துக்க‌ள், சிங்க‌க்குட்டி (பெய‌ர் தெரிய‌வில்லை)

    அருமையான விளக்க பதிவு.சித்தர், மஸ்தான் சாஹிபு பற்றி,சூஃபிகளை பற்றி அறிந்து கொண்டோம்.

    யாரையாவது திட்டும் போது கூட இவர் பெரிய சூஃபி என்பார்கள். சூஃபி என்றால் பெரிய இது இவருக்கு எல்லாம் தெரியுமாக்கும் அப்படின்னு சொல்லுவார்கள், ஆனால் சூஃபியின் விளக்கத்தை இந்த மூலம் தெரிந்து கொண்டேன்.

    எல்லாம் அறிந்த ஞானியை தான் சூஃபி என்கிறார்கள் இல்லையா?

    தொடருங்கள் எல்லாமே நல்ல அனுபவ பூர்வமான பதிவுகள்.
    நான் பின்னூட்டத்துக்கு கடைசி பெஞ்சு தான்.. அதான் லேட்டு.


    பாப்பாட்டி சித்த‌ர் ப‌ற்றி சுதாக‌ர் சார் வெள்ள‌ய‌ங்கிரி ப‌ய‌ண‌த்தில் சொல்லி இருக்கிறார்.


    ///உண்மைதான் நீங்கள் சொல்வது, நம் மக்களும் இதே போல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை.//

    உங்கள் ஆசை நிறைவேறனும்.

    ReplyDelete
  25. சாரி தப்பா போட்டு விட்டேன், பாம்பாட்டி சித்தர்

    ReplyDelete
  26. புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் ஜலீலா, நீங்கள் சிங்கக்குட்டின்னே சொல்லலாம் :-)

    உண்மையான இறைநம்பிக்கை கொண்டவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்,அது எந்த மதமாக இருந்தாலும்.

    இடையில் அரைகுறையாக தெரிந்த மதவாதிகள் மட்டுமே தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

    இதில் நாட்டின் அரசியலும் கலந்திருப்பதுதான் வேதனை, மாறும் இந்நிலை ஒருநாள் மாறும்.

    மீண்டும் உங்க‌ளுக்கும் உங்க‌ள் குடும்ப‌த்தாருக்கும் வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  27. ok, சிங்கக்குட்டி

    ReplyDelete
  28. தமிழகத்து தர்காக்கள்
    http://kayal100.tripod.com/index.html

    ReplyDelete
  29. ரொம்ப நன்றி ஜலீலா :-)
    _____________________________________

    தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி KC.

    ReplyDelete
  30. தாங்கள் பிரசுரித்துள்ளவை மிகவும் பிரயோசனமாவையாகும் மிகவும் நன்றிகள். எமது சூபித்துவ இணையத்தளமான அகமியம் (www.ahamiyam.tk)தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது

    ReplyDelete

  31. வணக்கம்

    கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
    நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
    இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    ReplyDelete