அலுவலக நண்பர்களிடம் இருந்து மின் அஞ்சலில் வந்த படங்கள் இவை, இதை பார்த்தும் பதிவு மூளை "மானே தேனே" போட்டு பதிவாக்கிவிட்டது.
ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க "சும்மா திரிஞ்ச ஓணான பிடிச்சு வேட்டிக்குள்ள விட்டுட்டு, அப்புறம் குத்துதே குடையுதே-ன்னு புலம்புவானேன்னு".
அது மாதிரி, தெருவுல சும்மா போன ஆசாரியை (பன்றியை) வழிய பிடிச்சு "முத்தம்" கொடுத்து, எனக்கொரு "ஆப்பு" வைங்கன்னு கேட்டு வாங்கிக்கிட்டு, அப்புறம் வலிக்குதேன்னு ஆசாரியை, ஸாரி...ஸாரி... பன்றியை யாரும் குறை சொன்னா எனக்கு "கொலை" கோவம் வரும்.
சரி, சரி, ரொம்ப மொக்கை போடாம விசையத்த படம் போட்டு காட்டுறேன். பாத்ததுக்கு அப்புறம் இனிமே யாரும் "பன்றி காய்ச்சல்"-ன்னு சொல்லப்பிடாது.












இப்படி பாவத்த எல்லாம் நம்ம செஞ்சிட்டு, பழிய மட்டும் பன்றி மேல் போடக்கூடாது இல்லையா?
மேலும் இனி யாரும் "வெள்ளை அம்மனிகளுக்கு முத்தம்" கொடுக்கும் முன் சற்று யோசிக்கவும்.
சரி, தகவல் எதுவும் சொல்லாமல் வெறும் படத்தோடு பதிவை எப்படி முடிப்பது? அதனால் .......
பன்றிகளின் பக்கம் உள்ள இந்த நியாத்தை புரிந்து கொண்ட தென்கொரியா மற்றும் சில நாடுகள் ஏர்கனவே இதன் பெயரை "இன்-"புளு"ஸ்சா ஏ எச்1 என்1" என்று மாற்றிவிட்டன.
அப்படியே இங்கு உங்கள் வாக்கை பதிவு செய்யலாமே?