Sunday, September 27, 2009

உலக இதய தினம்

இன்று செப்டம்பர் 27, உலக இதய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது, இந்த முறை "ஞாயிற்று கிளைமையில்" வைத்து "வொர்க் வித் ஹார்ட்" என்பதை சின்னமாக கொண்டு உள்ளது குறிப்பிடதக்கது.



உணவு பழக்கம், வாழ்க்கை முறையால் நகரத்தில் வசிப்போருக்கு இதய நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிவோம், பின் ஏன் இந்த முறை இப்படி ஒரு தலைப்பை சின்னமாக கொண்டு உள்ளது! என்பதை இங்கு சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேல் சொன்ன காரணங்களை விட, இப்போது அதிகமாக இதய நோய் பாதிப்பு ஏற்பட காரணமாய் இருப்பது "மனஉளைச்சல்", ஆனால் இதன் காரணம் வேலை பளு, என்று தவறாக புரிந்து கொல்லப்படுவது வருந்ததக்கது.

உண்மையை சொல்லப்போனால், நம் வேலைக்கும், மனஉளைச்சலுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது! என்பதை தெளிவுபடுத்தி, உங்கள் வேலையை இதய பூர்வமாக விரும்பி செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்ததான், இந்த முறை இப்படி ஒரு தலைப்பு அதுவும் ஞாயிற்று கிளைமையில்.

ஏன்? மற்றும் எப்படி! என்று இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் வேலையை, வேலைக்காக மட்டும் காதலியுங்கள், அதில் கிடைக்கும் ஊதியம், அதிகாரம், புகழ் என்பது இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும், அதாவது உங்கள் வேலையை நீங்கள் விரும்பி எடுத்தாக இருக்கவேண்டும். ஆக ஒரு நல்ல தரமான வாழ்கைக்காக நமக்கு பிடித்த ஒரு வேலையே தவிர, வேலைக்காக நம் வாழ்க்கை இல்லை, என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருங்கள்.

முடிவில்லாத பிரச்சனை, என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை, போன வாரம் உங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக நீங்கள் நினைத்த வேலை இன்று முடிந்து இருக்கும், அதே போல் போன மாதம் வேறு வேலை, மற்றும் போன வருசமும் கூட வெவ் வேறு வேலைகள்.

ஆனால் இன்று? அது எதுவும் இல்லாமல் புதிதாய் வேறு ஒரு வேலை பளு, உங்களை மனஉளைச்சலுக்கு உள்ளகுவதாய் நீங்கள் நினைக்ககூடும்! அது உண்மை அல்ல.

இப்படி சிந்தித்து பாருங்கள், எப்படியும் முடிய போகிற ஒரு வேலைக்கு, நாம் ஏன் மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டும்? காரணம் உங்கள் முழு கவனமும் வேளையில் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. வீட்டு சூழ்நிலை, வங்கி கடன், வேலை நிரந்தரம், எதிர்கால கனவு, வாழ்கை துணையுடன் கருத்து வேறுபாடு என்று, இப்படி ஏதாவது ஒன்று வேலை நேரத்தில், ஏன் வேலை பார்க்கும் நேரத்தில் கூட உங்கள் உள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.

அப்படி இருக்கும் போது மூளையின் கவனம் சிதறி, செயல்திறன் குறைந்து, எளிதாக முடியக்கூடிய வேலை கூட, உங்கள் நேரத்தை நிச்சியம் சோதிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகள் உங்கள் அன்றாட வாழ்கையில் உங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. ஆக, உங்கள் வேலைக்கும் மனஉளைச்சலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது புரிகிறதா?

இதை எப்படி கட்டுக்குள் கொண்டு வர முடியும்? என்று வியக்க வேண்டாம், அது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை.

முதலில் உடல், தினம் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் காலை, மதியம், மாலை அல்லது இரவு, ஏதாவது கொஞ்ச நேரத்தை உடற்பயிற்சி செலவிடுங்கள், சத்தான உணவை சரியான நேரத்தில் உண்ணுவதை வழக்கமாக்குங்கள். உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் என்ற திருமூலர் வாக்கின்படி, உங்கள் உடலையும் மனதையும் கட்டுக்குள் கொண்டு வர கண்டிப்பாய் உங்களால் முடியும்.

அடுத்து வாழ்க்கை முறை, பொது வாழ்க்கை (அலுவலகம், வேலை) சொந்த வாழ்கை (நண்பர்கள் உறவினர்கள்) தனிப்பட்ட அல்லது சொந்த வாழ்கை (கணவன், மனைவி, குழந்தைகள்), இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே தவிர, ஒன்றுக்கொன்று நிச்சியமாய் சம்பந்த பட்டது இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

அதனால், இதில் நீங்கள் எந்த இடத்தில இருந்தாலும் "இரையை விரட்டும் சிங்கம் போல, உங்கள் கவனம் முழுவதும் அதில் மட்டுமே இருக்கட்டும்" (நூறு மான்கள் ஓடினாலும் அங்கும் இங்கும் கவனம் சிதறாமல், ஒரே மானை துரத்தும்). மற்றதை பற்றி நினைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், இதனால் ஒன்றில் உள்ள விருப்பு வெறுப்பை மற்றொன்றில் கலக்க முடியாமல் போய்விடும்.

கோபப்படும் விசையத்தை கூட பொறுமையுடன் சிரித்த முகமாக, ஆனால் தப்பை உணர்த்தும் விதமாக எடுத்து சொல்ல பழகுங்கள். வீட்டிற்க்கு வெளியே செல்லும் போது காலனி அணியும் போது, அதே இடத்தில வீட்டு பிரச்னைகளை விட்டு விட்டு செல்லுங்கள், அதே போல் வீட்டிற்கு உள்ளே வரும் போது கலட்டி விடும் காலணிகளோடு, அலுவலக மற்றும் வெளி உலக பிரச்னைகளையும் சேர்த்து கலட்டி விட்டு விடுங்கள்.

குடும்ப வாழ்கை முறை, வீட்டிற்கு உள்ளே வந்ததும், இனி உங்கள் முழு கவனமும் ஆசையான வாழ்கை துணை, அன்பான குழந்தைகளுக்கு அரவணைப்பான தாய், தந்தை, என்று வீட்டில் மட்டும் இருக்கட்டும். முடிந்த வரை அலுவலக வேலையை வீட்டிலும், வீட்டு வேலையை அலுவலகத்திலும் தவிருங்கள்.

வேலை முடிந்து வரும் துணையை, அலங்கரித்த சிரித்த முகமாய் வரவேற்க பழகுங்கள் (தினம் ஒரு திருமணதிற்கு செல்வதாய் நினைத்துக்கொண்டு, உங்கள் துணை வரும் நேரத்தில், உங்களை தயார் படுத்துங்கள் அதில் ஒன்றும் தவறில்லை), அதே போல் வந்திருக்கும் மனநிலை அறிந்து தேநீர் அல்லது நீர் கொடுத்து, சிறிது நேரம் சென்ற பின், பேச பழகி கொள்ளுங்கள், உணர்ச்சி வசப்படகூடிய விசையத்தை உள்ளே வந்தவுடன் தவிர்த்து, இன்னொரு நல்ல சந்தர்பத்தில் சொல்லுங்கள்.

அலுவலகம் முடிந்ததும், வீட்டு வேலை, குழந்தைகளுக்கு, துணைக்கு என்று உங்கள் நேரத்தை பகிர்ந்து செலவிடுங்கள், இன்றைய அவசர உலகத்தில் படுக்கை அறை என்பது வாழ்வை திசை திருப்பக்கூடிய சக்தி கொண்ட இடம் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

இங்கு எந்த கருத்து வேறு பாடும் இல்லாமல், இரு தரப்பிலும் கண்டிப்பாய் பார்த்துக்கொள்ள வேண்டும், அதே போல் மற்ற எந்த விசையத்தையும் படுக்கை அறைக்கு வெளியில் முடிந்த வரை பேச, விவாதிக்க கற்றுக்கொள்ளுங்கள், கூட்டு குடும்பமாய் இருந்தால் மொட்டை மாடி போன்ற இடங்களை தேர்ந்தெடுப்பதே நல்லது.

அதே போல் இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில், சோர்வை காரணம் கட்டாமல் இங்கு முடிந்த வரை மற்றவர் "எண்ணத்திற்கு" மதிப்பு கொடுங்கள்.

கடைசியாக, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தூங்கும் நேரம் மற்றும் சூழ்நிலையை உருவாக்கி, தினம் தேவையான அளவு தூங்க கற்று கொள்ளுங்கள். முடிந்த வரை வாழ்கை துணைகள் தனியாக படுப்பதை தவிர்த்து சேர்ந்து உறங்குவது நல்லது.

முதலில் சற்று கடினமாக இருந்தாலும், போக போக, இது ஒரு இனிய அனுபவமாகி விடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால், நம் அன்றாட வாழ்கையில், இதை மட்டும் கடைபிடித்து வந்தால், இதயநோய் என்பது வரலாற்றில் மாணவர்கள் படிக்க கூடியதாய் நம்மால் நிச்சியம் மாற்ற முடியும்.



இதயநோய் பற்றிய இன்னும் சில பொதுவான தகவல்கள் உங்கள் பார்வைக்கு.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும், 1 கோடியே 70 லட்சம் பேர் இதய நோயால் இறக்கின்றனர். இவர்களில் 20 லட்சம் பேர் இந்தியர்கள். இந்தியாவில் 6 கோடி பேருக்கு இதய நோய் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நகர்புறங்களை சேர்ந்தவர்கள். சென்னையில் 4 சதவீதம் பேரும், டெல்லியில் 7.8 சதவீதம் பேரும் இதய நோயாளிகளாக உள்ளனர் என்று மத்திய நலத்துறை அமைச்சக 2007-ன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. புகை பழக்கத்தையும், குடி பழக்கத்தையும் கைவிட்டாலே பெரும்பாலானவர்களை இதய நோய் தாக்காது.

அடுக்கு மாடி கட்டிடங்களில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் லிப்ட்டுகளில் செல்வதற்கு பதில், படிக்கட்டுகளில் ஏறிச் செல்வது நல்லது. மதிய உணவுக்கு பிறகு குட்டி தூக்கம் போடுவதால் இதய நோயை தடுக்கலாம். அதிகம் கோபப்படாமல் அமைதியாக இருப்பதும் இதயத்துக்கு நல்லது.

இதயத்தை காக்கும் அடிப்படை விதிகள்.

1. டயட் - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரட், அதிகமான புரோட்டின்

2. உடற்பயிற்சி - இரண்டு மணிநேரம் +அரை மணி நேர நடை குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள். (ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதையும், லிப்ட் பயன்படுத்தவத்தையும் தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி இறங்குகள்)

3. புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விடுங்கள்.

4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.

5. இரத்த அழுத்தம் மற்றும் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள்.

இதய நோயாளிகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் 2007-ன் ஆய்வு தெரிவிக்கிறது. இதய நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவுக்கு 9 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது

நன்றி! வாழ்க வளமுடன்.
 

Blogger Widgets