Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sunday, July 3, 2011

தாஜ்மஹாலுக்கு பின்னால்...!

எல்லா மதங்களும் நல்ல மதங்களே, ஆனால் எல்லா மனிதர்களும் நல்ல மனிதர்கள் அல்ல, அதிலும் அவர்களுக்கு "மதம்" என்னும் "மதம்" பிடித்து போகும் போது அவர்கள் மனிதர்களாகவே இருப்பது இல்லை.

இதையே நபிகள் நாயகம் சொன்னார், நல்ல மனிதன் என்பவன் தன் மதத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், ஆனால் தன் மதத்தில் அல்லது மதத்தின் பெயரில் ஒருவன் தவறு செய்யும் போது, அந்த தவறை கண்டிக்காமல் அவனுக்கு துணை போகிறவன் தீவிரவாதியாகிறான் என்று.

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இது இன மத ரீதியாகவோ அல்லது இந்தியாவின் அடையாள சின்னங்ககளில் ஒன்றின் பெருமையை குறைக்கவோ எழுதவில்லை.

நான் கடந்து வந்த பாதையில் பல இடங்களில் பல தரப்பட்ட மனிதர்களால் வாய்வழி சொல்லாக கேள்வி பட்ட தகவல்களை இங்கு தொகுப்பதே என் நோக்கமே தவிர, இதில் எது உண்மை, எது உண்மையல்ல என்று எனக்கும் தெரியாது.

ஆனால், என்னை விட இதை பற்றி அதிகம் தெரிந்தவர்கள், நான் அறிந்த தகவல்களை ஆதாரத்தோட உறுதி படுத்தவோ அல்லது தவறாக எதுவும் இருந்தால் அதை சரியாக மாற்றவோ உதவும் என்ற நோக்கில் இங்கு இதை பகிர்கிறேன்.



இன்று உலக அளவில் மிக பிரபலமாக இருக்கும் இந்திய உணவு "பிரியாணி" இதை கண்டு பிடித்தவர் தாஜ்மஹாலில் உறங்கும் மும்தாஜ்தான், அவர் கறி பிரட்டலில் பிரியாணி சமைக்கும் வாசம் அந்த பகுதியையே மயக்கி பசியை தூண்டுமாம்.

இங்கு ஒரு கிளை தகவல் வந்து சேர்க்கிறது.

இஸ்லாமியர்களில் ஒரு வழக்கம் இருக்கிறது, இளம் மனைவியை விதவையாக்கி விட்டு செல்லும் கணவனின் மூத்த அல்லது இளைய சகோதரர்களில் ஒருவர் அந்த இளம் விதவையின் வாழ்கை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும்.

அப்படி திருமணம் செய்யும் போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், இன்னொரு மனைவியாக ஏற்றுக்கொள்வதில் தடையேதும் இல்லை.

இதை இங்கு சொல்ல காரணம், மும்தாஜ் திருமணமாகி இளம் வயதில் தன் கணவனை இழந்ததால் அவர் கணவரின் திருமணமான சகோதரர் மும்தாஜையும் தன் மனைவியாக்கிகொண்டார்.

இவ்வாறு ஒருநாள் தன் வீட்டில் மும்தாஜ் பிரியாணி சமைத்துக்கொண்டு இருக்க, வழக்கம் போல வாசனை அந்த பகுதியை தூக்கியது.

அப்போது அந்த பகுதியில் தன் சுற்றங்களுடன் வலம் வந்த "ஷாஜஹான்" இந்த வாசத்தில் மயங்கி தன் சேவகனை சென்று அது என்ன என்று பார்த்து வர அனுப்பினார்.

அரசாங்க சேவகன் மூலம் அரசர் தான் சமைக்கும் உணவின் வாசத்தில் மயங்கியதை கேட்டு மகிழ்ந்த மும்தாஜ் அவருக்கு ஒரு தட்டில் வைத்து கொடுத்து அனுப்பினார்.

அந்த புது உணவை சுவைத்து மகிழ்ந்த ஷாஜஹான், இத்தனை சுவையான உணவை சமைத்தவருக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று சொல்லி அவரை அழைத்து வர சொன்னார்.

அரசன் முன் வந்து நின்ற மும்தாஜை பார்த்ததும், அவரின் அழகில் மயங்கி மும்தாஜை தன் காதல் மனைவியாக்கி கொள்ளவிரும்புவதாக சொல்லி (கணவரை மிரட்டி என்றும் கேட்டதுண்டு) அவரை தன்னோடு அழைத்து சென்று விட்டார்.

ஷாஜஹானுக்கும் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், அழகில் அதிக நாட்டம் கொண்ட ரசிகனாம் அவர்.



பின்னாளில் மும்தாஜ் மீது மிகுந்த காதல் கொண்டிருந்த ஷாஜஹான், 1631 ஆம் ஆண்டு புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மும்தாஜ் மரணமடைந்துவிட, அவர் மீது கொண்ட காதலால் மும்தாஜுக்கு ஒரு நினைவு சின்னம் கட்டவேண்டும் என்று ஷாஜகான் விரும்பினார்.

அதன் விளைவாகவே ஆக்ராவில் யமுனையாற்றின் கரையில் தாஜ்மஹால் கட்டப்பட்டது.

தாஜ்மஹால் வேலைகள் முடிந்து மும்தாஜின் உடலை இங்கு அடக்கம் செய்யும் வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில்தான் வைக்கப்பட்டிருந்ததாம்.

முழுவதும் வெள்ளை சலவைகள் மூலம் தாஜ்மஹால் கட்டப்பட்டதால் நாட்டின் பொருளாதரமே பாதிக்கப்பட்டதாம், ஆனாலும் அதை பற்றி வருந்தாமல் யமுனையாற்றின் மறு கரையில் தாஜ்மஹால் போலவே கருப்பு சலவைகள் மூலம் தனக்கு ஒரு நினைவு சின்னம் எழுப்பி தான் இறப்புக்கு பிறகு தான் உடலை மும்தாஜின் சமாதியை பார்ப்பது போல அமைக்கும் வேலையில் இறங்கிவிட்டாராம்.




இதில் கோவம் கொண்ட அவர் பட்டத்து வாரிசான ஷாஜஹானின் மகன் ஓரங்கசிப் தந்தை என்றும் பாராமல் அவரை சிறையில் வைத்து தான் ஆட்சியை எடுத்து நடத்தினாராம்.

தன் கருப்பு தாஜ்மஹால் ஆசை நிறைவேறாமல் போனதால் சிறையில் இருந்த தன் கடைசி காலத்தில் ஷாஜஹான் தன்னையும் மும்தாஜின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யுமாறு கேட்டுகொண்டாராம்.

இது இப்படி போக, இன்னொரு பக்கம் அது தாஜ்மஹாலே அல்ல என்றும், அது ஷாஜஹானின் காலத்துக்கு முன்பே இருந்த ராஜபுத்திர கட்டிடகலை அமைப்பில் உருவாக்க பட்ட கோவில் என்றும் வெவ்வேறு ஆதாரம் மற்றும் புகை படங்களோடு பல கட்டுரைகள் வருகின்றன.

இவர்கள் சொல்வது, கரையான்கள் கட்டிய வீட்டை நல்ல பாம்பு தன் வீடாக்கி கொண்டதை போல, மொகலாய ஆட்சியில் இந்த கோவில் தாஜ்மஹாலாக மாற்ற பட்டு விட்டதாகவும், உலகில் எந்த இஸ்லாமிய கட்டிடகலை அமைப்பிலும் தாஜ்மஹால் போல இல்லை என்றும், மேலும் "மஹால்" என்று முடியும் எந்த கட்டிடமும் தாஜ்மஹாலுக்கு முன் கட்டும் வழக்கம் மொகலாய, இஸ்லாமிய கட்டிடகலையில் இல்லை என்றும் தங்கள் பக்க கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

ஒரு கோடி ஆண்டுக்கு முன் விசையங்களை தோண்டி எடுக்கும் ஆய்வாளர்கள், வெறும் முந்நூறு வருடத்துக்கு முன்னய ஆதாரத்தை தோண்டி எடுப்பது என்ன பெரிய விசையமா என்றும் கேள்வி கேட்கிறார்கள்?

இதை பற்றி அதிகம் படிக்க, படங்களை பார்க்க இணைப்பை இங்கு கொடுத்துள்ளேன்.


தாஜ்மஹாலா கோவிலா?


தாஜ்மஹால் பற்றிய கேட்ட சில சுவாரசியமான தகவல்கள்

இருபது ஆண்டுகளாக கட்டி முடிக்க பட்ட தாஜ்மஹாலின் வடிவமைப்பாலரின் கை விரல்களை வெட்டி எடுத்து அவரை சிறையில் அடைத்து விட்டாராம் ஷாஜஹான்.

இனி வரும் நாட்களில் இதுபோல வேறு யாருக்கும் வடிவமைத்து கொடுக்ககூடாது என்பது ஷாஜஹானின் நோக்கம்.

மரண படுகையில் இருந்த அந்த வடிவமைப்பாளர், இது போல நடக்கும் என்று தெரிந்துதான், அந்த கட்டிடத்தில் ஒரு குறையை வைத்து உள்ளேன்.

அதாவது மழை வரும் போது ஒரு துளி நீர் மும்தாஜின் சமாதி வரை வடியும் என்றும், அதை தன்னை தவிர வேறு யாரும் இனி எந்த காலத்திலும் சரி செய்ய முடியாது என்பதுதான் அவர் சொன்ன தகவல்.

அதே போல அக்குறையை இன்றுவரை யாராலும் சரி செய்ய அல்ல எப்படி, எங்கே இருந்து நீர் உள்ளே வருகிறது! என்று கூட கண்டு பிடிக்கக்கூட முடியவில்லையாம்.

இதே போல மற்றொரு சுவையான தகவல்.

கடந்த நூற்றாண்டின் நடுவில் தாஜ்மஹாலில் பராமரிப்பு நடை பெற்ற போது, ஒரு இடத்தில ஓட்டை விழுவதை கண்டறிந்த ஆய்வாளர்கள் அதை எப்படி கட்டிடத்தின் மற்ற இடத்திற்கு பாதிப்பு வராமல் சரி செய்வது என்று குழம்பி விடை கண்டு பிடிக்க முடியாமல், தாஜ்மஹாலில் பராமரிப்பு புத்தகத்தை புரட்டினார்களாம்.

அதில் இரநூறு வருடங்களுக்கு முன் இதே போல ஒரு இடத்தில வந்த ஓட்டையை அடைக்க வெள்ளியை காய்ச்சி ஊற்றி அடைத்ததாய் படித்து வியந்து, அதே போல செய்து பிரச்சனையை தாஜ்மஹாலுக்கு வேறு பாதிப்பில்லாமல் சரி செய்தார்களாம்.

எது எப்படியோ, வரலாற்றில் எது உண்மையோ எனக்கு தெரியாது, ஆனால் இன மத காலத்தை கடந்து இந்தியாவின் ஒரு முக்கிய அடையாள சின்னமாக கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹாலை இன்று பார்த்தாலும் ஒரு நிமிடம் யாருக்கும் மூச்சு முட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நன்றி மீண்டும் விரைவில் சந்திப்போம்.

Photobucket

Photobucket

Monday, April 25, 2011

சாய்பாபா...!

இது சாய்பாபா கடவுளா இல்லையா என்றோ!, அல்லது அவர் இயற்கை எய்தியதை கிண்டல் செய்யவோ!, அல்லது மதசார்பான ஆன்மீக பதிவோ அல்ல.

என் வாழ்கையில் சாய்பாபாவோடான அனுபவத்தையும் நான் புரிந்து கொண்டதையும் பகிர்ந்து கொள்வதே இங்கு என் நோக்கம்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பிறப்பின் அடிப்படையில் இந்து மத முறையில் கடவுள் நம்பிக்கை கொண்ட குடும்பமானாலும், உயிரோடு வாழும் எந்த மனிதரையும் கடவுள் என்று காலில் விழும் பழக்கம் இல்லாததுதான் எங்கள் குடும்பம்.

அதே போல நாங்கள் நம்பவில்லை என்பதால் மற்ற யாரையும் விமர்சனமும் செய்ததும் இல்லை.

இந்த நிலையில் எங்கள் பக்கத்துக்கு வீட்டில் குடிவந்தவர்களுடன் எங்களுக்கு மிக நெருங்கிய பழக்கம் வந்தது, அவர்களும் ஆண் பிள்ளை இல்லை என்பதால் என் மீது சொந்த மகன் போல அன்பு செலுத்தினர்.

"சாய்பாபா" என்ற வார்த்தையே முதன் முதலில் கேள்விபட்டது அவர்கள் மூலம்தான், அவர்கள் குடும்பம் அவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவரை கடவுளாக தொழுது வந்தனர்.

அப்போது எனக்கு ஒரு ஐந்து வயதிற்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், ஒரு முறை வழக்கம் போல சாய்பாபாவின் அற்புதங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்த அந்த அம்மா, அவர் கொடைக்கானல் வருவதாகவும் அவரை நேரில் சந்திக்க எங்களையும் அழைத்து செல்வதாக சொல்ல...!

அவர்களுடன் இருந்த நட்பின் அடிப்படையில் என் தாயும் சம்மதிக்க, ஒரு விடுமுறை பயணம் போல அனைவரும் தயாரானோம்.



கொடைக்கானலில் அது ஒரு அழகான மற்றும் அமைதியான பங்களா, அதுதான் சாய் ஸ்ருதி ஆசிரமா என்று சரியாக எனக்கு நினைவில்லை.

நாங்கள் காத்திருக்க, சிறிது நேரத்தில் முழு காவி உடையுடன் சாய்பாபா நடந்து வந்தார், நடை பாதைக்கு இருபுறமும் மக்கள் அவரை கும்பிட, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தபடி எங்களை கடந்து போனார்.

சிறுவனாக அங்கு கொடுத்த சாய்பாபா படத்தை கையில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்த நான், என்ன நினைத்தேனோ, அவர் பின்னால் ஓடி, அவர் முன் சென்று பாதையில் நின்று அவரிடம் அந்த படத்தை நீட்டினேன்.

அவர் நடக்கும் பாதையில் யாருமே போகவில்லை என்றாலும் நான் மிக சிறுவன் என்பதால் என்னை யாரும் தடுக்க வில்லை என்றே நினைக்கிறேன்.

என்னை பார்த்து சிரித்த அவர் என் தலையில் தன் கையை வைத்து " பங்காரு...! பங்காரு...!" என்று சொன்னவர்  (தெலுங்கில் பங்காரு என்றால் தங்கம் என்று அர்த்தம்) நான் நீட்டிய படத்தை வாங்கி "With Love Baba" என்று கையப்பமிட்டு மீண்டும் என்னிடமே கொடுத்து விட்டு சென்றார்.

அதன் பின் அந்த படம் நீண்ட நாட்கள் எங்கள் வீட்டில் இருந்த நினைவு இருக்கிறது, ஆனால் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை!. இதுதான் நான் அவரை சந்தித்த அனுபவம்.

அதன் பின் நாட்கள் நகர வளரும் பருவத்தில் விவேகானந்தர் சுபாஸ் முதல் கீதை, குரான் பழைய (புதிய) ஏற்பாடு முதல் ஓசோ வழியாக கண்ணதாசனின் "கம்ப ரசம்" வரை (இது தடை செய்த புத்தகம் என்று நினைக்கிறேன்) கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிக்கும் விடலை பருவத்தில் சாய்பாபா மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.

காரணம் கையில் இருந்து விபூதி, மோதிரம், வாயில் இருந்து லிங்கம் எல்லாம் எடுத்துதான் ஒரு கடவுள் தன்னை கடவுள் என்று நிரூபிக்க வேண்டுமா? அல்லது ஒரு கடவுள் தன்னை தானே கடவுள் என்று சாதாரண மக்களிடம் உணர்த்த விரும்புவது ஏன்? என்று எனக்குள் பல கேள்விகளை கேட்டு கொள்வேன்.

இப்படியாக நான் என் பாதையில் போக மொத்தமாக சாய்பாபா என்ற வார்த்தையையே மறந்து போனேன், அவர் சார்ந்த செய்திகளை கூட படிப்பதில்லை, ஆனாலும் "திரு.அப்துல்கலாம்" போல அறிவியல் விஞ்ஞானிகள் கூட இவர்கள் காலில் விழுவதை பார்த்து குழம்பி இருக்கிறேன்.



இப்படி வருடங்கள் ஓட, மீண்டும் அவர் விசையத்தில் என் கவனம் போனது தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டபோது, ஒரு நாட்டின் தேசிய அரசாங்க பணியில் ஒரு மத சாமியாரின் பங்கு என்னவாக இருக்க போகிறது, இவரை ஏன் முன்னிலை படுத்துகிறார்கள் என்று படிக்கும் போதுதான் புரிந்தது, சாய் சேவா என்று ஆங்காங்கே பஜனைகள் பாடிக்கொண்டு இருந்த ஒரு ஆன்மீக அமைப்பு "சாய் சேவா சமிதி" என்று நாட்டின் மிக பெரிய ஒரு சமூக சேவை அமைப்பாக வளர்ந்து இருப்பது.

இந்த சேவை நிறுவனம் ஆந்திரா-தமிழக அரசுகள் கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் அமைக்கும் பணிக்காக அதாவது சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.100 கோடி நிதியை அந்த நிறுவனத்தின் தலைவரான சாய்பாபா தனது டிரஸ்ட்டில் இருந்து வழங்கியுள்ளார் என்று தெரிந்த போது, வியப்பை விட அந்த நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு எனக்கு வந்தது.

எனக்கு தெரிந்து இந்திய வரலாற்றில் வேறு எந்த ஒரு ஆன்மீக மத சார்பான நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகையை நாட்டு மக்கள் நன்மைக்காக கொடுத்ததில்லை என்றுதான் நினைக்கிறேன்.

இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,மராட்டியம், ஒரிசா மாநிலங்களிலும் தனது டிரஸ்ட்டின் மூலம் நிதி கொடுத்து குடிநீர் திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.

ஆந்திரமாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 750 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து கிட்டத்தட்ட12 லட்சம் மக்களுக்கு மேல் பயன் அடைந்து வருகின்றனர்.

இது தவிர இந்த ஆசிரம நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழம், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை என பல மாநிலங்களில் பிரமாண்டமாக ஏழைகளுக்கு அனைத்தும் இலவச மாக இந்த நிறுவனம் கொடுகிறது என்று தெரிந்த போது...!

அவர் கடவுளோ இல்லையோ!, அது எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனால் இந்த நிறுவனத்தின் நல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் செயலாகவே என் மனதில் பட்டது.

எத்தனயோ லட்சம் மக்கள் தனி ஒரு நிறுவனத்தால் அல்லது அந்த நிறுவன தலைவரால் பயன் பெறுகிறார்கள் என்றால், அது இருப்பவனிடம் கொள்ளை அடித்து இல்லாதவனுக்கு கொடுக்கும் ஒரு கொள்ளைகார நிறுவனமாக இருந்தால் கூட பாராட்டலாமே...!

அப்படி இருக்கும் போது, இது ஒரு சாதாரண ஆன்மீக அமைப்பு இதை பாராட்டுவதில் எனக்கு தவறாக எதுவுமே தோன்றவில்லை.

தாகத்தை தீர்க்கும் நதி நீருக்கு யாரும் நதிமூலம் பார்ப்பதில்லை, அது போல அது எப்படி வந்த பணமாயினும் எதற்கு பயன் படுகிறது என்ற அடிப்படையில் இங்கு நான் ரிஷிமூலம் பார்க்க விரும்பவில்லை.

ஒரு சில நூறுகளை கொடுத்து ஓட்டு வாங்கி கணக்கிடமுடியாத அளவு ஊழலை செய்யும் அரசியல் கட்சிகள் கூட மக்களுக்கு இப்படி எதுவும் செய்வதில்லையே?

அப்படி இருக்க ஒரு தனிமனிதர் தன் நிறுவனத்தின் மூலம் இதை அனைத்தையும் சாதித்து இருக்கும் போது அவர் அந்த நிறுவன தொண்டர்களுக்கு கடவுளாக தெரிவதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவரால் மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைத்த அனைவருக்கும் இவர் வேறு எப்படி தோன்ற முடியும் நினைக்கிறீர்கள்?

சற்று சிந்தித்து பாருங்கள்...!, இன்றைய அரசியல் கொள்ளையர்களை விட "சாய்பாபா" ஒன்றும் அத்தனை மோசமாக என் கண்களுக்கு தெரியவில்லை.

எனவே, அவர் கடவுளா இல்லையா என்ற பைசாவுக்கு பெறாத விவாதங்களை ஒதுக்கிவிட்டு, பல நல்ல விசையங்களை செய்த ஒரு நல்ல  நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், உடலை விட்டு பிரிந்த அந்த ஆத்மா அமைதியில் உறங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Friday, April 8, 2011

அன்னா ஹசாரேவை ஆதரிப்போம்.



இந்த பதிவை பொறுத்த வரை இந்த விளம்பரத்தில் வரும் சிறுவனின் நிலையில் நான் என்னால் முடிந்த ஆதரவை தருகிறேன்.





காரணம் இது வார்த்தை ஜாலம் காட்டி சிரிக்க வைத்து ஓட்டு வாங்க பதிந்த பதிவு அல்ல.

தமிழன் என்பதை தாண்டி இந்தியன் என்ற முறையில், என் நாட்டுக்காக களமிறங்கி இருக்கும் தியாகி "அன்னா ஹசாரேவுக்கு" என் ஆதரவை தெரிவிக்கும் பதிவு மட்டுமே.

அன்னா ஹசாரேவை பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் நான் புதிதாக உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

அப்படியும் தெரியாத யாராவது இருந்தால், அவர்களுக்காக நண்பர் கிரி மற்றும் ராமலக்ஷ்மி எழுதிய இணைப்புகளை கீழே கொடுக்கிறேன், படித்து அனைவரும் உங்களால் முடிந்த ஆதரவை உங்கள் தளத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

கிரியின்

ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்!

அரசியல்வாதிகளுக்குத் தடை – அன்னா ஹசாரே அதிரடி!

அன்னா ஹசாரேவை புறக்கணிக்கும் தமிழகம்

ராமலக்ஷ்மியின்

விதை விருட்சமாகும்,அன்னா ஹசாரேக்கு ஆதரவைத் தருவோம்.

இந்த இணையதளத்தில் உங்கள் ஆதரவை கையெழுத்து மூலம் கொடுக்க முடியும்!

தாய் நாட்டையும் நாட்டுக்காக உண்மையாக பாடுபடும் தலைவர்களையும் நம் இரு கண்களை போல, நம் தாயை போல மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

இனம், ஜாதி, மதம், மொழி மறந்து இந்தியனாய் இதில் ஒன்றுபடுவோம் வாருங்கள்...!





வந்தே மாதரம்...!

Wednesday, April 6, 2011

தேர்தல் கனவு...!

வணக்கம் நண்பர்களே,

உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் இந்த பதிவை துவங்குவோம்.

இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் சச்சினுக்கு இரண்டு புறமும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முதல் உலக கோப்பை நாயகன் கபில்தேவ் இருவரையும் அமர்த்தி பெருமை படுத்தினால் இன்னும் அமர்களமாக இருக்கும் என்பது என் விருப்பம்.


தேர்தல் விதிமுறைகள்...!

கட்சி விதிகள்

எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் மூன்று தேர்தல்களுக்குள் குறிப்பிட்ட அளவு தொகுதியில், அதாவது அந்த கட்சியை சேர்ந்த மொத்த வேட்பாளர்களில் இருபத்தைந்து சதவீதம் வெற்றி பெறாவிட்டால், அந்த கட்சியின் உரிமை ரத்தாகி, அந்த கட்சியை கலைத்து விடவேண்டும்.

அப்படி ரத்தாகும் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது இனி யாருமே பயன்படுத்த முடியாமல் தடையாகி விடும்.



நாட்டில் ஒரு தனி கட்சி என்பதே தனி கொள்கையின் அடிப்படையில் இருப்பதால், எந்த ஒரு கட்சியும் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிட முடியும்.

அப்படி இன்னொரு கட்சியுடன் கூட்டணியாக இணைய விரும்பும் பட்சத்தில், இரண்டில் ஏதாவது ஒரு கட்சியை கலைத்து அதன் உரிமையை ரத்து செய்து, ஒரே கட்சியாக மட்டுமே செயல்பட, போட்டியிட முடியும்.

ஒரு முறை இணைந்த பின் மீண்டும் பிரிந்தால், அதே கட்சியை துவங்க முடியாது, வேறு கட்சியை துவங்கினாலும், புதிய சின்னம் மட்டுமே கொடுக்க படும்.

மேலும் ஒரு முறை சேர்ந்து பின் பிரிந்து மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே கட்சி துவங்க உரிமை கேட்க முடியும்.

கட்சியின் பொது குழு தலைவர் மற்றும் இதர பொறுப்புகளில் ஒருவர் அறுபத்தைந்து வயது வரை மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன் பின் அவர் அனுபவத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வழிகாட்டியாக ஒரு மதியுரை அமைச்சர் பதவிக்கு மட்டுமே தகுதி பெறமுடியும்.

யார் ஆட்சியாயினும் குடும்பத்தின் மொத்த வருமானத்தை, சொத்துக்களை கணக்கில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு அரசு சலுகைகள் மட்டுமே தர முடியுமே தவிர, இலவசம் என்று எதுவும் கொடுக்க முடியாது.



இலவசமாக கொடுக்கும் அனைத்தும் லஞ்ச ஒழிப்பு விதிமுறைகளுக்கு கீழே கொண்டுவரப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாதி, மொழி சார்ந்த கட்சிகள் துவங்க முடியாது, எல்லா அரசு ஆவணங்களில் இருந்தும் ஜாதி பற்றிய விபரங்கள் உடனடியாக நீக்கி விடப்படும்.

எந்த கட்சியும் அந்த கட்சி சார்பான தனிப்பட்ட தகவல் தொடர்பு தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி நடத்த முடியாது, அப்படி வேறு தொடர்புகளில் நடத்தும் தகவல் தொடர்பு எதிலும் கட்சி சார்பான சின்னம், முத்திரை எதையும் பயன்படுத்த கூடாது.

மேலும் அந்த தகவல் தொடர்பு மூலம் வரும் செய்திகள் உண்மையல்ல என்று எந்த ஒரு நிறுவனமும், குடிமகனும் நிரூபிக்கும் பட்சத்தில், அந்த தகவல் தொடர்பு நிறுவன உரிமை உடனடியாக ரத்து செய்வதோடு, அத்துறை சார்ந்த அத்தனை அசையும், அசையாத சொத்துக்களும் அரசாங்க சொத்தாகிவிடும்.

அரசியல் பதவி விதிமுறைகள்

ஜனநாயக நாட்டில் அரசியல் பதவிக்கு போட்டியிட கிரிமினல் வழக்கு இல்லாத மற்றும் வங்கி கடன் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்காத குடிமகன் யாருக்கும் உரிமை உண்டு என்றாலும், அப்பதவியின் நிலையை கருத்தில் கொண்டு போட்டியிட தகுதியான குடிமகனை சில கட்டுப்பாடுகளுக்குள் உட்பட்டு மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.



நாட்டின் குடிமகனாக நாள் முதல் இருப்பது வருடங்கள் உள்நாட்டில் வசித்திருக்க வேண்டும் (உயர் கல்விக்காக மட்டும் வெளிநாடு சென்றிருக்கலாம்).

கண்டிப்பாக முதுகலை பட்டம், அதுவும் ஆரம்ப பள்ளி முதல் அனைத்தும் முழுநேர படிப்பின் மூலம் (மாலை, தொலைதூர மற்றும் திறந்தவெளி எல்லாம் செல்லாது) நாட்டின் அல்லது உலக முன்னணி பல்கலைகழகம் மூலம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது தாய் மொழி அல்லது போட்டியிடும் மாநில மொழி, இந்தியாவில் அதிகம் பேசும் மொழி ஹிந்தி, உலகில் அதிகம் பேசும் மொழி ஆங்கிலம் என்று மும்மொழிகளில் (செம்மொழி கதை எதுவும் விடாமல்) முறையாக பேச, படிக்க மற்றும் எழுத தகுதி, தகுந்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது பத்து வருடங்கள் அவர் படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்த அனுபவமும் அதில் "பொதுமக்களிடம்" நல்ல பெயரும் பெற்று இருக்க வேண்டும்.

அப்படி இருந்து ஒருவர் வெற்றி பெரும் வகையில், அவருக்கு அதே துறையை ஒதுக்க வேண்டும். உதாரணமாக ஒரு காவல் அல்லது போக்குவரத்து மந்திரி என்பவர் மற்ற விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அதே துறையில் குறைந்தது பத்து ஆண்டுகள் நாட்டுக்காக பணி செய்து இருக்க வேண்டும்.

மூன்று முறைக்கு மேல் ஒருவர் பொது தேர்தலில் போட்டியிட முடியாது, அவர் சார்ந்த கட்சியின் மதியுரை பதவிகளில் அவர் இருப்பதில் எந்த தடையும் கிடையாது.



ஒரு கட்சியின் சார்பில் பொது தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின், அந்த வெற்றி வேட்பாளர் கட்சி மாறினால், கட்சியை விட்டு விலகும் போதே அவர் பதவியும் அவரை விட்டு விலகும். மேலும் அவர் அடுத்த பத்து தேர்தலில் எந்த ஒரு கட்சி சார்பாகவும் போட்டியிட முடியாது.

அது மட்டும் இல்லாமல், அவர் பதவி விலகிய தொகுதியின் இடை தேர்தல் செலவு முழுவதும் அவரோ அல்லது அவர் போகும் புதிய கட்சியோ ஏற்று கொள்ள வேண்டும்.

நாட்டின் அரசியல் தலைமை பொறுப்பில் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்த தவறு, ஊழல் நிரூபிக்கப்பட்டால், அதே தவறை செய்த குடிமகனுக்கு சட்டப்படி கிடைக்கும் தண்டனையை போல மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும்.

எந்த ஒரு நேர்மையான அல்லது எப்படி பட்ட அரசியல் தலைவராக இருப்பினும், அதை மட்டுமே தகுதியாக கொண்டு அவரின் வாரீசு அல்லது ரத்த உறவுகள் யாரும் மேலே உள்ள மற்ற அரசியல் தலைமை விதிகள் பொருந்தாத பட்சத்தில், அவர்கள் எந்த ஒரு அரசியல் பதவிகளுக்கும் போட்டியிட முடியாது.

காவல் மற்றும் நீதித்துறை இரண்டும், ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர் நேரடி கட்டுபாட்டில் இருக்கவேண்டும், இவர்கள் இருவரையும் நேரடியாக மக்கள் பொது தேர்தலில் மட்டுமே தேர்ந்து எடுக்க முடியும்.



மேலும் "ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்" இருவரும் எந்த கட்சியை சார்ந்தும் இருக்க முடியாது, இவர்கள் "தவறுகளை" முப்படை தளபதிகள், சுபிரீம் கோர்ட் நீதிபதிகள் குழு மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்த குழு மட்டுமே கட்டுபடுத்த முடியும்.

நாட்டின் எந்த ஒரு அரசியல் தலைவரையும் தகுந்த முறை மற்றும் காரணத்தோடும் எந்த ஒரு குடிமகனும் சந்திக்க முடியவில்லை என்றால், காவல் மற்றும் நீதித்துறையை நாட அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

அட போதுங்க, அதான் கனவுன்னு சொல்லியாச்சுல்ல, இத்தோட இப்போதைக்கு முடிச்சுக்குவோம்...!

போங்கப்பா, போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க, இன்னுமா இந்த உலகம் இதை நம்பிகிட்டு இருக்கு?.


நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Saturday, March 26, 2011

இதுவா என் (தாய்) தமிழ்நாடு...!

வணக்கம் நண்பர்களே,

என்னடா இது...! காணாமல் போனவன் திடீர் என்று வருகிறானே என்று நினைக்க வேண்டாம், அது ஒரு பெரிய கதை அதை தனியாக இன்னொரு சமயம் பார்ப்போம்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்ற மகிழ்ச்சி சற்றும் குறையாமல் ஒரு அருமையான இந்திய பயணத்தை முடித்து கடந்த மாதம் திரும்பி வந்தாலும், சில பல காரணக்களால் பதிவுகள் பக்கம் வர முடியவில்லை.

எப்போதும் போல இல்லாமல் இது ஒரு நீண்ட விடுமுறையாக இருந்த காரணம் நான் இந்த முறை சென்றது தனிப்பட்ட வேறு சில வேலைகளாக என்பதால்தான்.

ஒவ்வொரு முறையும் நம் மண்ணின் வளர்ச்சியை, மாற்றத்தை பார்த்து பெருமை பொங்க திரும்ப வரும் நான், இந்த முறை சற்று மனம் தளர்ந்து வந்ததுதான் உண்மை.

இந்த முறை நான் சென்ற வேலைகளுக்காக, மதுரை, பழனி, திருச்சி, திண்டுக்கல், நத்தம் என்று தென் தமிழ் நாட்டில் என் விடுமுறையை பயன் படுத்தினேன்.

நான் கல்லூரியில் படித்த காலத்தில் இந்த பகுதிகளில் பஸ் பயணம் என்பது எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிக பிடித்த ஒரு விசையமாகும்.

அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று நடுவில் வரும் நெடுஞ்சாலை தவிர இரண்டு பக்கமும் பச்சை பாய் விரித்தது போல செழிப்போடு காட்சி அளிக்கும் வயல்வெளிகள், தூரத்தில் தெரியும் தென்னை மரங்கள் என்று மனதை மயக்கும் ஒரு அழகான தமிழ் தாய் நாட்டின் விவசாய அடையாளம்.




மற்றொன்று இந்த சூழ்நிலைக்கு தகுந்து அந்த தனியார் பேருந்துகள் இசைக்கும் தமிழ் பாடல்கள்.

குறிப்பாக மதுரை, பழனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை ரோட்டில் மதியம் மூன்று மணியளவில் அவர்கள் இசைக்கும் "ஒருநாளும் உனை மறவாத, முத்துமணி மாலை" போன்ற பாடல்களை விரும்பாத யாருமே இருக்க முடியாது.

பல வருடம் கடந்து அதே பழைய நினைவுகளை சுமந்து கொண்டு போன எனக்கு இந்த முறை மிக பெரிய ஏமாற்றம் தான் மிச்சம்...!

நான் பார்த்த வயல்வெளிகள் அனைத்தும் கூந்தலை இழந்த பெண்போல மொட்டையாக இருப்பதை பார்த்ததும், ஏனோ அது என் சொந்த பெண் போல மனம் லேசாக இல்லை, இல்லை கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.

அதை விட கொடுமை, அது அனைத்தும் வீடு கட்டும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பட்டிருப்பதை பார்க்க பார்க்க மன கொதிப்பு மட்டும் ஏனோ அடங்கவே இல்லை.

என்னடா இது நம் மக்களா இப்படி மாறி விட்டார்கள் என்று விசாரித்தால், இந்த முறை நான் பார்த்த அனைவருமே சொன்னது ஒன்றே ஒன்றுதான்.

அட உனக்கு என்னப்பா, கடல்தாண்டி சீமைல இருக்க, இங்க நாய் பேய் கூட சொந்த வீடு வாங்கிருச்சு, நம்ம மட்டும் என்ன குறைச்சலா?

அதான் நம்ம நிலத்தை பிளாட் போட்டு கொடுத்தா சொந்த வீடும் கொடுத்து கையில் பணமும் தருவதாய் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சொன்னார்.



சரி, நாமும் எவ்வளவு நாளுக்குதான் இப்படி சேற்றிலும் குடிசையிலும் கிடப்பது, நமமெக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டாமா என்று நிலத்தை கொடுத்து விட்டேன் என்பதுதான் அது!.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல வரிசையாக எல்லா நிலத்திலும் அந்த நகர், இந்த நகர் என்ற பெயர் பலகையை பார்க்கும் போது வெறுப்பு மட்டுமே மிஞ்சியது.

நான் பார்த்த வரை நம் மக்களிடம் சொந்த வீடு வாங்குவது என்பது இப்போது ஒரு வாழ்க்கை லட்சியத்தில் முக்கிய ஒன்றாக மாறிவிட்டது.

என்ன கொடுமை இது?

நண்பர்களே, வீடு என்பது இயற்கை சீதோசன நிலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மனிதன் கண்டுபிடித்த நாகரீக வளர்ச்சியின் ஒரு பகுதிதானே தவிர, அது சமுதாயத்தில் நம்மை அடையாள படுத்துவது அல்ல அப்படி நாம் மாற்றினால் அது நம் வீழ்ச்சியின் ஆரப்பமே.

மேலும் ஒரு வீட்டின் விலை என்பது, அது கட்ட பட்டிருக்கும் நிலத்தின் அரசால் மதிப்பிட பட்ட விலை, அதின் பயன் படுத்த பட்டிருக்கும் கல் மற்றும் மரத்தின் விலை, அதோடு அதை கட்ட வேலை செய்தவர்களின் கூலி என்பதே ஆகும்.

ஆனால், இன்று அந்த கல்லையும் மணலையும் சேர்த்த கட்டிடத்தின் விலையை கண்மண் தெரியாமல் உயர்த்திக்கொண்டு போவது என்பது கொடுமை, அதை விட கொடுமை அதையும் நம் மக்கள் வங்கியில் கடன் வாங்கி வாங்குவது என்பது மிக மிக கொடுமை.

எந்த ஒரு வங்கியிலும் வீட்டு கடன் வாங்கி இருக்கும் ஒருவர், தன் மாத தவணை மற்றும் தன் மொத்த தவணையின் கூட்டு தொகை என்ன என்பதை ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி கணக்கிட்டு பாருங்கள், உங்கள் வாழ்நாள் உழைப்பு இப்படியா வீண் போக வேண்டும் என்று தோன்றும்?

இது ஒரு பக்கம் இருக்க, நம் சொந்த தொழிலான விவசாயத்தை அழித்து, அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவது என்பது, சொந்த செலவில் சூன்யம் வைத்து நம்மை நாமே அழிப்பதற்கு சமம்.

இப்படி விவசாயம் அழிந்து போவதால் இன்று காய்கறிகளின் விலை வாசி நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்து இருப்பதோடு நம் தேவைக்கு பக்கத்து மாநிலங்களை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.

தற்போது அரசாங்கம் விளைநிலத்தை கட்டிடம் கட்ட விற்பனை செய்ய கூடாது என்று சட்டம் கொண்டு வருவதாக கேள்வி, ஆனாலும் விளைநிலங்களை அழிப்பது குறைந்த மாதிரி தெரியவில்லை.

இப்படி விளை நிலத்தின் விலையை ரியல் எஸ்டேட் ஏற்றி விட்டுக்கொண்டிருக்கும் பண போதையில் நம் மக்கள் விளைநிலங்களை கண் மண் தெரியாமல் விற்பனை சந்தைக்கு கொண்டுவர, இடையில் புகுந்து கேரளா மக்கள் மொத்தமாக இந்த நிலங்களை வாங்கி போட்டு இருக்கிறார்கள்.

இது இப்படியே தொடர்ந்தால் பிற்காலத்தில் நம் சொந்த மண்ணின் விலையை அவர்கள் நிர்ணயிக்ககூடும் அல்லது அவர்கள் விவசாயம் செய்து அதை நமக்கே விற்கக்கூடும், இந்தியன் என்ற தாய் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறுதானே?

இப்படியே போனால், வடிவேல் (அவருக்கும் இப்போது நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன், இதை பற்றி வேறு பதிவில் பார்ப்போம்) காமிடியில் வருவது போல தமிழ் நாட்டில் விவசாயம் செய்ய தமிழனுக்கு எந்த இடமும் இல்லாமல் போய், ஒரு கேரட் இரநூறு ரூபாய் என்னும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.



ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, இப்போதும் நமக்கு சிந்தித்து செயல்பட நேரம் இருக்கிறது. நாம் சேற்றில் "கால்" வைப்பதால் நம் மக்கள் சோற்றில் "கை" வைக்க முடிகிறது என்ற பெருமையோடு நம் பாரம்பரிய விவசாயத்தை அழிந்து விடாமல் காப்பது நம் தாய்மண்ணுக்கு செய்யும் கடமையாகும்.

அப்படி நாம் உணரவில்லை என்றால் அது பணத்துக்காக தாயை விற்பதற்கு சமம் என்று காலம் ஒருநாள் கண்டிப்பாய் உணர்த்தும்.

இயற்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சோதித்தாலும், சற்றும் மனம் தளராமல் ஜப்பானில் விவசாயம் செய்ய இடமில்லாமல் கிடைக்கும் இடத்தை (மலைகளை கூட வெட்டி) விளை நிலமாக்கி பட்ட படிப்பை முடித்த இளைய தலைமுறைகள் கூட விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால், நாம் இருக்கும் விளை நிலத்தை மலடாக்கி கட்டிடம் கட்டுகிறோம்?.

நாகரீகத்தில் முன்னேறுகிறோம் என்று நினைத்து, நம் சொந்த அடையாளத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அது இங்கு தவறாகாது என்று நினைக்கிறேன்.

நான் இந்த முறை சென்ற வேலை என் வாழ்நாள் கனவின் முக்கிய ஒன்றாகும், சில ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் தென்னை மரங்களை வைத்து நடுவில் ஒரு வீட்டை கட்டி, அந்த வீட்டின் பின்புறம் எனக்கு தேவையான காய்கறிகளை நானே பயிர் செய்து என் முதுமை காலத்தில் வாழவேண்டும் என்பது என் கனவு.

அதற்கான முதல் வேலையாக அமைதியான இடத்தில உள்ள விளை நிலங்களை தேடி சென்றபோது தான் மேல் சொன்ன அனைத்தும் என் கண்ணில் பட்டது.

இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் அனைவரும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வது என்பது சாத்தியமாகாது என்பது உண்மை.

ஆனால், விவசாயத்தில் இருப்பவர்கள் அதை தொலைத்து விடாமல் பாதுகாக்கலாமே?

மேலும், விவசாய இடமில்லாமல் நகரத்தில் இருப்பவர்கள் கூட, வீட்டில் ரோஜா தொட்டி வைப்பதை போல நமக்கு தேவையான மிளகாய், தக்காளி, கீரை போன்றவற்றை சொந்தமாக வளர்த்து பயன் படுத்தலாமே?.

நம் குழந்தைகளும் இந்த வீட்டு விவசாய முறை மூலம் நம் பாரம்பரிய விவசாய தொழிலை மறக்காமல் இருக்க இது உதவும் என்பது என் நம்பிக்கை.

நீங்கள் எவ்வளவு படித்து எந்த நாட்டிலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் தாய்க்கு செய்யும் பிறவி கடமையை போல, உங்கள் தாய் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது எந்த ஒரு சூழ்நிலையிலும், விவசாய நிலையத்தை விவசாயத்தை தவிர மற்ற எந்த ஒரு பயன் பாட்டுக்கும் விற்காமல் இருப்பதே ஆகும்.

நன்றி, மீண்டும் விரைவில் சந்திப்போம்.

Wednesday, October 27, 2010

விளையாட்டு பொம்மை விளையாட்டல்ல!

இந்தியா என் தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் ...!

என்னாங்க எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? உண்மையில் இன்றைய வாழ்கை முறை அப்படித்தான் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது.

ஆனால், கொடுமை என்னவென்றால் எதற்காக நம் வாழ்கையை இத்தனை பரபரப்பாக மாற்றிக்கொண்டோம் என்ற அடிப்படை காரணத்தையே இந்த பரபரப்பில் மறந்து விடுகிறோம்.

பண்டைய காலத்தில் ஒரு நாட்டின் மீது படை எடுத்து அந்த நாட்டின் வளத்தை மற்றும் இடத்தை தன் நாடாக மாற்றி கொண்டார்கள், மக்கள் அடிமைகளாக்க பட்டார்கள்.

நாளைடைவில் நாகரீகம் வளர, கொள்கைகள் ஒத்து வராத நாடுகளுக்கு நடுவில் போர் வந்தது, அதை சரி படுத்த உலக சபைகள் வந்ததும், போர் என்று சண்டை போடுவது குறைந்தாலும், தங்கள் நாட்டை முன்னிலை படுத்த பல முயற்சிகள் கையாளப்பட்டன.



சோவியத் ரஷ்யா இருக்கும் வரை உலகம் இரு வல்லரசு நாடுகளை பார்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால் சோவியத் துண்டானது நாம் அறிந்த கதை.

இதில் வல்லரசு நாடுகளுக்கும் அதன் ஜால்ரா நாடுகளுக்கும் ஒரு பிரச்னையும் கிடையாது, ஏழை நாடுகளுக்கு "சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல" எவனாவது தங்களை அரவணைக்கும் பட்சத்தில் எந்த கவலையும் கிடையாது.

இரண்டும் இல்லாமல் நடுவில் இருக்கும் அல்லது வளர்ந்து வரும் வல்லரசாகும் வாய்பிருக்கும் நாடுகள் படும் அவஸ்தைதான் மிக கொடுமையானது.

இதெல்லாம் தெரிந்த கதைதானே இதை ஏன் இங்கு சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம்.

ஒரு பக்கம் தீவிரவாதம், உலகின் தலை சிறந்த சுற்றுலாத்தளம் சிம்லா, ஜம்மு, காஸ்மீர் என்று அத்தனையும் பாகிஸ்தான் தீவிரவாத போரினால் ராணுவதலமாக மட்டுமே உள்ளது.

இந்த பக்கம் அருணாச்சல பிரதேசம் எங்களுடையது என்று சீனா சொந்தம் கொண்டாடி குடைச்சல் கொடுகிறது, கீழே இலங்கை பிரச்னையை வைத்து உள்நாட்டில் அரசியல் நடக்கிறது.

இப்படி எல்லைகளில் பிரச்சனை மட்டும் போதாது என்று, மும்பை, கல்கத்தா கோவை என்று தொழில் நகரங்களில் குண்டு வெடிப்பு தூண்டல் என்றும் அதை சரி கட்ட உலகவங்கி கடன் என்றும், வரலாற்றுப்படி இந்தியா ஒரு "தீபகர்ப்பம்" என்பதை நினைவில் கொண்டு வருகிறார்கள்.

அதாங்க, மூன்று பக்கம் பிரச்சனையும் ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்டு இருக்கிறதல்லவா!.

இந்த நிலையில் நாமோ வியாபாரம் என்ற பெயரில் வந்து நூற்றுகணக்கான ஆண்டுகள் நம் நாட்டை ஆண்ட மாவைத்தான் இன்னும் அரைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால், உலகம் இன்று போர் இல்லாமல், வியாபாரிகளே வராமல் வியாபார பொருட்கள் மட்டும் வந்து நாட்டை அடிமை படுத்தும் முயற்சியில் அதி வேகமாக எங்கோ போய் கொண்டு இருக்கிறது!.

என்ன சொல்கிறேன் என்று புரியவில்லையா? சமீபத்தில் அனைவரும் அறிந்த சில செய்திகளில் தலைப்பை மட்டும் பார்ப்போம்.

உடைக்க வந்த கப்பல் கழிவு மற்றும் நச்சு பொருட்களுடன் வந்து நாட்டை குப்பை தொட்டியாக்கும் முயற்சி.

இயற்கை விவசாயத்தை கெடுக்கும் நோக்கத்தில் இறக்குமதியாகும் ஒட்டு அல்லது செயற்கை விதைகள்.

இறக்குமதி செய்யப்பட்ட குழந்தைகள் பால் பவுடரில் கலப்படம் அதனால் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து.

இறக்குமதி ரேடியோவில் உள்நாட்டு அரசாங்க வயர்லெஸ் பேச்சை கேட்க முடிகிறது.

இவை எல்லாம் நம்மை அல்லது நம் நாட்டை உடனே பாதிக்காவிட்டாலும் மெதுவாக கொல்லும் விஷம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சும்மா, ஒரு உதாரணத்துக்காக சொல்ல வேண்டும் என்றால் உள்நாட்டில் கேட்கும் ரகசிய அலைகளை அல்லது இணையத்தில் இருக்கும் அவர்கள் தயாரிப்பு கணினி நாம் செய்யும் தகவல் பரிமாற்றத்தையோ சேகரித்து அவர்களுக்கு அனுப்பும் படி வடிவமைப்பது என்ன சிரமமா?

உள்நாட்டில் தயாரிக்க முடியாத செயற்கை விதைகளை குறைந்த விலையில் இன்று கொடுத்து, நம் இயற்கை விவசாயத்தை மெதுவாக அழித்து, பின் நம் நாட்டில் என்ன அல்லது எவ்வளவு விதைக்க வேண்டும் என்பதையும் அதன் விலையையும் அவர்கள் முடிவு செய்யும் படி, மீண்டும் நம்மை வணிக முறையில் அடிமை படுத்தும் ஒரு முயற்சியாகத்தான் இவை அனைத்தும் எனக்கு தோன்றுகிறது.

அது சரி, அப்படி என்றால் அரசு என்ன செய்கிறது அத்தனையையும் தடை செய்ய வேண்டியதுதானே என்று ஒரு கேள்வி இங்கு பொதுவாக வரும், அந்த காரணத்தை புரிந்து கொள்ளவே வல்லரசுகளின் தூண்டுதலில் நம் அண்டை வீட்டுகாரர்கள் கொடுக்கும் "தீபகர்ப்ப" குடைச்சல்களை மேலே சொன்னேன்.

ஒரு பக்கம் உள்நாட்டு ரியல் எஸ்டேட் தேச துரோகிகள் விளை நிலம் முதல் புதை (சுடுகாடு) நிலம் வரை உருமாற்றி விற்று விடுகிறார்கள், மீதம் இருப்பதையும் வெளிநாட்டு கலப்பு விவசாயத்தால் அடிமை படுத்த முயற்சி நடக்கிறது மற்றும் நம் பாரம்பரிய சொந்த மருந்து, மூலிகைகளின் காப்புரிமையை வேறு நாடுகள் வைத்திருகின்றன.

இவை அனைத்தும் கண்டிப்பாக நாளை நம்மை அல்லது நம் சந்ததியை, நம் நாட்டை பாதிக்க போகிற விசையங்கள் தான்.

இதில் இன்று நம் உடனடி கவனம் செலுத்த வேண்டிய, நடப்பில் நம்மை அறியாமலே நம் வருங்கால சந்ததியை பாதித்து கொண்டு இருக்கும் ஒரு விசையம் இருக்கிறது என்றால் அது மலிவு விலையில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் விளையாட்டு பொருட்கள்தான்.

சமீபத்தில் ஆசியாவில் பல முன்னணி நாடுகள் இதை பற்றி எச்சரித்து, பலமாக சோதித்து பல கப்பல் பொருட்களை தடை செய்து திருப்பி அனுப்பி இருக்கின்றன.

கண்ணை கவரும் அடர் பளீர் நிறத்தில் இருக்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மெதுவாக இருக்கவும், பளபளப்பு குறையாமல் இருக்கவும், பொம்மைகளின் முடிகள் உண்மையான முடியை போலவும், மெதுவாகவும் தோன்ற கலக்கப்படும் ரசாயன நச்சு பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதே இதன் அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.



பொதுவாகவே குழந்தைகள் எந்த ஒரு பொருளையும் வாயில் வைக்கும் பழக்கம் கொண்டவர்கள், அதை அதிகமாக கண்டிக்கும் பட்சத்தில் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் இத்தகைய பொம்மைகளை அவர்கள் வாயில் வைக்கும் போது உள்ளே செல்லும் ரசாயனமமோ, முடியோ அல்லது வேறு பொருட்களோ குழந்தைகளை அதி தீவிரமாக பாதிக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் இதனால் என்னென்ன பாதிப்புகள் குழந்தைகளுக்கு வரும் என்று ஒரு முறையாவது உங்கள் நேரத்தை ஒதுக்கி கேட்டு பாருங்கள், நீங்கள் எல்லை இல்லா அதிர்ச்சி அடைவது உறுதி.

ஆம், உயிரே பாதிக்கும் அளவு கூட இந்த விசையம் குழந்தைகளை பாதிக்கலாம்.

இந்த இடத்தில மீண்டும் இந்த பதிவின் முதல் வரியை நினைவு படுத்துகிறேன், நாம் இத்தனை பரபரப்பாக உயிரை கொடுத்து உழைப்பது யாருக்கு நாளை நம் சந்ததி வளமாக வாழத்தானே?

அப்படி இருக்க, நாமே இத்தகைய பொருட்களை வாங்கி தருவது, நம் சொந்த சம்பாத்தியத்தில் சொந்த குழந்தைக்கு விஷம் வாங்கி தருவது போலதான் என்பது என் கருத்து.

இதை நேரடியாக நாடு தடை செய்வதில் இருக்கும் "தீபகர்ப்ப" பக்க விளைவுகளை நாம் அறிவோம், ஆனாலும் இதை தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா?

இதை பற்றி நான் யோசித்ததில் எனக்கு கிடைத்த ஒரு வழி இதுதான்.

எப்படி இருந்தாலும் சில்லறை வியாபார பொருட்கள் என்பது பயன்பாட்டு சந்தையை மற்றும் அந்த சந்தையின் பண பலத்தை பொறுத்துதான் ஒரு நாட்டில் நுழைக்க படுகிறது.

இத்தகைய பொருட்களின் வெற்றியும் தோல்வியும் அந்த பொருளுக்கு சந்தையில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் விற்பனையை பொறுத்துதான் தீர்மானிக்க படுகிறது.

அப்படி இருக்க, விலை கொடுக்கும் நான் ஏன் எனக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடாது?

விலை சற்று அதிகமாக கொடுத்தாலும் அது என் குழந்தைகளின் நலனுக்கு என்று நினைக்கும் போது, என் குழந்தையின் உயிரை, உடல் நலத்தை விட அந்த கூடுதல் தொகை ஒன்றும் எனக்கு முக்கியமாக படவில்லை.

அதனால் எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன் அது பொம்மையோ கேமிராவோ கணினியோ, முதலில் நான் கேட்பது எந்த நாட்டு தயாரிப்பு என்பதுதான், சர்ச்சைக்கு மற்றும் சந்தேகத்துக்கு இடமாகும் சீன பொருட்களை கண்டிப்பாக நான் வாங்குவது இல்லை.

சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்ல தரமான நாடுகளால் தயாரிக்க, அங்கீகரிக்க பட்ட அல்லது பாரம்பரிய இந்திய தயாரிப்பில் புகழ் பெற்ற நிறுவனங்களின் பொருட்களையே வாங்குகிறேன

முதலில் நான் இந்த கொள்கையை கடைபிடிக்க துவங்கிய போது என்னை வித்தியாசமாக பார்த்தாலும், என் குடும்பமும் நண்பர்களும் இதன் பலனை அறிந்து இப்போது இதே போல் பொருட்களை வாங்க துவங்கி உள்ளார்கள்.



நம் தாய்நாட்டுக்கு உடனடி தேவையான தனிமனித சுதேசியை பற்றி என் கருத்தை முன்பே "அக்காமாலாவையும் கப்சியையும்" விடுங்கையா!" பதிவில் எழுதி இருந்தேன், இதுவும் அதை போல ஒன்று தான்.

நீங்கள் தெருவில் வாங்கும் ஒரு ரூபாய் பொம்மை முதல் லட்சத்தில் வாங்கும் ரேடியோ, கணினிவரை முதலில் எந்த நாட்டு தயாரிப்பு என்று பாருங்கள்.

தயாரிப்பு நாட்டு விபரம் இல்லாத பொருட்களை அல்லது பிரச்சனைக்குரிய சீன தயாரிப்பை வாங்காமல் போவதோடு மட்டும் இல்லாமல், தயாரிப்பு நாட்டு பெயர் இல்லாத அல்லது இந்த நாட்டு தயாரிப்பு என்ற காரணத்தால் தான் மட்டுமே இதை வாங்கவில்லை என்பதை அந்த விற்பனையாளரிடம் மறக்காமல் சொல்லுங்கள்.

கூடியவரை உள்ளாட்டு தயாரிப்பை வாங்குவோம் அல்லது அந்தந்த நாட்டு நேரடி தயாரிப்பை மட்டும் கேட்டு வாங்குவோம், "சோனி" என்றால் ஜப்பான் "சாம்சங்" என்றால் தென்கொரியா என்று ஒரு நாட்டின் நேரடி தயாரிப்பை சற்று விலையில் அதிகமானாலும் நலம் கருதி வாங்குவோம்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நீங்கள் வேர்கடலையை விலையாக கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு "குரங்குதான்" கிடைக்கும், உங்கள் தேவை "டெடிபீர்" என்றால் நீங்கள் முத்திரி பருப்பைத்தான் விலையாக கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

இப்படி ஒவ்வொருவரும் துவங்கி அவர்கள் குடும்பம் நண்பர்கள் அவர்களை தொடந்து அவர்கள் குடும்பம் என்று இது சற்று மெதுவாக பரவினாலும் நமக்கும் நம் நாட்டுக்கும் நலம் கிடைப்பது என்னவோ உறுதி.

சற்று சிந்தித்து பாருங்கள் விற்காத அல்லது மக்கள் விரும்பாத பொருட்களை எந்த நிறுவனமும் வாங்க போவதில்லை, விற்பனை ஆகாத பொருட்களை தொடர்ந்து இறக்குமதி அல்லது உற்பத்தி செய்யவும் போவதில்லை.

நாடு சட்டம் அரசாங்கம் என்று அனைத்தும் மேலிருந்து தான் வரவேண்டும் என்று இல்லாமல், நம் நலம் மற்றும் நாட்டின் நலம் கருதி ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் இப்படி கீழே இருந்து கூட நாட்டு நலனை காக்க முடியும் (Reverse Mapping) .

நன்றி, மீண்டும் சந்திப்போம்!.

Monday, February 15, 2010

நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது "டமில்" எப்.எம்!

நான் சிறு வயதாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் ஒரு பிலிப்ஸ் வானொலி இருக்கும், எங்கள் வீட்டில் எனக்கு மிக பிடித்த ஒரு விசையம் அது. அதிலும் வானொலி கேட்ட இன்னும் விருப்பம், அதற்கு இரண்டு காரணம்.

ஒன்று, எனக்கு தமிழ் பாடல்கள் கேட்க மிக பிடிக்கும். இன்னொன்று, அந்த தொகுப்பாளர்களின் தமிழ் குரல். மனதை மயக்கும் அந்த குரலுக்காகவே ஒரு சில நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்பது என் முக்கிய வேலைகளில் ஒன்று.

ஒவ்வொருவரும் தங்கள் தனி திறமையுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இன்றும் என் மனதை விட்டு மறையவில்லை.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், "சரோஜ் நாராயண் சுவாமி", "பி.ஹச்.அப்துல் ஹமிட்" மற்றும் "கே.எஸ்.ராஜா". எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது, நான் கே.எஸ்.ராஜா-வை போல "ஸ்டைலாக" நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தது.

பி.ஹச்.அப்துல் ஹமிட் அவர்கள் நின்ற இடத்தில் ஒரு லட்சம் பாடல் வரை, கேட்ட நொடியில் பாடல் இடம் பெற்ற படம், பாடியவர் பெயர், இசை அமைத்தவர், படலை எழுதியவர் என்று வரிசை படுத்தும் திறன் கொண்டவர் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.

நாளடைவில் வானொலி கேட்கும் பழக்கம் எப்போது என்னை விட்டு சென்றது என்று சரியாக நினைவில் இல்லை. வாழ்கையை தேடி ஓடி திரிந்ததில் அத்தனையும் தமிழ் பேசாத நகரங்கள், நாடுகள்.



இன்று போல் அப்போது எல்லாம் இணைய வழி வானொலிகள் இருந்ததில்லை, அந்தந்த வானொலிகள் அந்தந்த குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே கேட்க முடியும்.

அதன் பின், இணைய பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தொலைகாட்சி, எம்.பி-3என்று மாற!, வானொலி என்ற வார்த்தையே சுத்தமாக மறந்து போனது.

இப்போதுதான் கணினி, மொபைல் முதல் கைகடிகாரம் வரை வானொலி, தொலைகாட்சி எல்லாம் கேட்க முடியுமே.

இப்படி இணைய தொழில்நுட்பம் வளர்ந்த நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் வானொலி கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது, நான் முதல் முறையாக சிங்கை சென்று விமான நிலையத்தில் இருந்து டாக்ஸியில் போகும் போது, அது 2005-ல் என்று நினைகிறேன்.

இது என்ன நிகழ்ச்சி என்று அந்த வாகன ஓட்டியிடம் கேட்க!, இது சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8 என்று அவர் சொன்னார். அப்போது பேசிக்கொண்டு இருந்தவர் பெயர் "மீனாக்ஷி" என்று நினைக்கிறேன்.

இந்த முறை கேட்டவுடன் பிடிக்க காரணம் மூன்று, அமைதியான மற்றும் அருமையான குரல், அந்த மழை தூரும் இரவு நேர நிகழ்ச்சியின் மென்மை, முக்கியமாக அந்த சூழ்நிலையில் அவர்கள் பேசிய அழகிய தமிழ்.

இப்படி ஆரமித்து அங்கு இருந்த நாட்களில் திரும்ப வானொலி கேட்க தொடர்வது (கைதொலைபேசியில்) என் வழக்கமாகிவிட்டது.

அடுத்தடுத்த நாட்களில் என்னை அதிகம் கவர்ந்தது அவர்கள் தமிழ், நிகழ்ச்சிக்கு நடுவில் அவர்கள் கொடுக்கும் வாழ்கை குறிப்புகள், "வானம் வசப்படும்" என்ற ஒரு நிகழ்ச்சி.மற்றும் இரவு சுமார் ஏழு முதல் எட்டு மணியலவில், ஒரு மருத்துவர் தரும் தன்னம்பிக்கை தொடர்பான சொற்பொழிவு. அவர் பெயர் நினைவில் இல்லை அருமையான ஒரு இஸ்லாமிய பெயர்.

இது எல்லாவற்றையும் விட "விமலா", எந்த வேலை இருந்தாலும், தினம் தினம் மாலை நேரம் இவர் நிகழ்ச்சியை மட்டும் தவற விடுவதில்லை, அப்படி ஒரு அழகான (இனிய) குரல் அவருக்கு (அவரும் அழகுதான்).

அதிலும் அவர் கேட்கும் கேள்விக்கு சரியான விடை தெரிந்தாலும், மற்றவர்களை மகிழவைக்கும் அவரை சிரிக்க வைக்குமாறு குறுந்தகவல் மூலம் ஒரு நகைச்சுவை விடையை அங்கிருந்த ஒவ்வொரு நாளும் அனுப்ப தவறியதில்லை.

என் நண்பர்கள் என்னை, நீ வந்திருக்கும் இந்த சில நாட்களில் எங்களுடன் நேரத்தை பகிராமல், கைதொலைபேசியை வைத்துக்கொண்டு "விமலா" பைத்தியமாகி விட்டாய் என்று சொல்லி கேலி செய்யவே தொடங்கி விட்டார்கள். அதன் பின் சிங்கை செல்லும் போது எல்லாம் ஒலி 96.8 நிகழ்ச்சியை நான் ஒரு போதும் தவற விடுவதில்லை.

இதை தவிர வேறு எங்கும் எனக்கு தமிழ் வானொலி கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட எம்.பி-3 இருப்பதால், நான் அதிகம் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

இப்படி மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு, சமீபத்தில் இணையத்தில் கண்ணை கழுவிக்கொண்டு இருக்கும் போது, தமிழ் எப்.எம் வானொலிகள் "சென்னையில் இருந்து நேரடி ஒளிபரப்பு" என்று எதோ ஒரு விளம்பரம் கண்ணில் பட, வானொலி கேட்கும் ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது.

அதில் எதோ ஒரு எப்.எம் நிகழ்ச்சியை சொடுக்க, அடுத்த பத்து நிமிடத்தில் எனக்கு ரத்த ஓட்டம் கூடி விட்டது (மாற்றி மாற்றி வேறு சில நிலையங்களையும் கவனித்தேன்).

ஒரு பெண் நிகழ்ச்சியை தொகுத்து கொடுத்து கொண்டிருந்தார், அப்பப்ப...என்ன ஒரு பேச்சு நடை, எனக்கு இவை உண்மையில் தமிழ் எப்.எம்-தானா? என்று ஒரு சந்தேகம் வந்து விட்டது.

அந்த பெண் வீட்டில் ஏதாவது அவசர வேலையை விட்டு விட்டு வந்தாரா! அல்லது அந்த நிறுவனத்தில் விளம்பர தொழில் நோக்கமா! என்று தெரியவில்லை அவ்வளவு ஒரு அவசரமான பேச்சு. அதுவும் வடிவேல் சொன்னா மாதிரி "இப்ப நீ என்ன பேசுன? இதுல தமிழே இல்லையே!" என்று கேட்க தோன்றியது.

தமிழ் எப்.எம் வானொலியில் (அவர்கள் சொந்த நிறுவன விளம்பரத்தில் கூட தமிழ் இல்லை) இப்படி அவசரமாக அதுவும் "ஆங்கிலம்" பேசுவது எனக்கு நாகரீகமாக தெரியவில்லை.

ஒரு அமெரிக்கரை கொதிக்கும் சுடுதண்ணீரில் காலை விட சொல்லி விட்டு, வேகமாக நீ தமிழில் "திருக்குறள்" படித்தால் தான் காலை வெளியே எடுக்க முடியும் என்று சொன்னால்!, அவர் தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்குமோ!, அப்படிதான் அவர்கள் பேசிய விதம் எனக்கு தோன்றியது.

இங்கு மதவாதி போல் ஆங்கிலம் பேசுவதை தவறு என்று நான் சொல்லவில்லை!.

"ஆங்கிலம்" என்பது ஒரு மொழி மட்டுமே அறிவல்ல!. தமிழ் பேச தெரியாத வேறு மக்களுடன் நாம் சொல்ல வந்ததை பகிர்ந்து கொள்ளும் போது பயன் படுத்துவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து ஏன் தேவை இல்லாத எல்லா இடங்களிலும்?

மேலும் ஆங்கிலம் கேட்க எத்தனையோ இணையம், வானொலி மற்றும் தொலைகாட்சி பகுதிகள் இன்று இருக்கிறது, பின் ஏன் ஒரு தமிழ் பகுதியில் இப்படி?

நாங்கள் தமிழ் தலைவர்கள், தமிழ் வளர்ப்போம், இமயத்தில் தமிழ் கொடி பறக்கும், தமிழ் செம்மொழி, இந்திய அரசாங்க ஆவணங்கள் கூட தமிழில் வேண்டும் என்று சொல்லி போராட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் யாருக்கும் இது கண்ணில் படவில்லையா? என்று கூட குழம்பி விட்டேன்.

தமிழ் வளர்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் நடை முறை பொது வாழ்கையில் தமிழில் ஒழுங்காக பேசுவோம் மற்றும் பேச தூண்டுவோம்.



குறைந்த பட்சம் பொது மக்கள் தினசரி பயன் பாட்டில் இருக்கும் வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் தமிழ் பயன் படுத்த இவர்கள் முயற்சிக்கலாமே?, தமிழ் மட்டும் என்று கூட அல்ல, தமிழையும் என்று சொன்னால் அது இங்கு மிகை ஆகாது.

இங்கு என் எண்ணங்களின் சில கேள்விகள், சில வேண்டுகோள்!.

தமிழ் "எப்.எம்" வானொலியில் தமிழில் பேசினால் குற்றமா?

தமிழ் வானொலி விளம்பரங்கள் கூட ஆங்கிலத்தில் இருப்பதுதான் நாகரீகமா?

தமிழ் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு நடுவில் கொடுக்கும் தகவல்களில் மக்களுக்கு பயன்படும் படி ஒரு நல்ல தரம் வேண்டாமா?


இன்று வெளிநாட்டு தமிழ் வானொலிகள் கூட சுத்தமான தமிழ் மட்டும் பயன் படுத்தும் போது, நம் தமிழ் நாட்டு எப்.எம் மக்கள் ஏன் தமிழை இப்படி கொலையாய் கொல்கிறார்கள்?

இன்னும் கொடுமை அந்த தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு நடுவில் கொடுக்கும் கேள்விகள் (தகவல்கள்) யப்பப்பா...

"யாரை அடிக்க மிக பிடிக்கும்", "யாரை திட்ட மிக பிடிக்கும்", "ஓர் நாளுக்கு எத்தனை முறை கண்ணாடியை பார்ப்பீர்கள்?"

இன்றைய நம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பயனுள்ள தகவல்கள் இது இல்லையா!.

அதை விட கொடுமை, விளம்பரத்துக்காக நேரத்தை ஒதுக்க, அவர்கள் பேச்சில் இருக்கும் அவசரம் (பரபரப்பாக அல்லது சுறுசுறுப்பாக பேசுவதும், அவசரமாக பேசுவதும் ஒன்றாகாது).

காலை அலுவலகம் செல்லும் ஒருவர், கார் ஓட்டும் போது இதை கேட்டால் சுத்தம். ஒன்று ரத்த கொதிப்பு எகிறி கார் மரத்தில் முட்டிவிடும் அல்லது அன்று முழுவதும் அலுவல வேலை "அதோ" கதிதான்.

அப்போதே அவர் எண்ணுக்கு அழைத்து "மறக்க தெரியவில்லை எனது காதலை, மறக்கும் உருவமில்லை எனது காதலி" என்ற 90-களில் வந்த இந்த பாடல் எந்த படம் என்று தெரியுமா? என்று கேட்டு, பத்து வினாடிக்குள் சொல்லாவிட்டால்!, நீ எல்லாம் ஒரு பாடல் தொகுப்பாளரா என்று சொல்ல தோன்றியது.

குறை சொல்வதாய் நினைக்க வேண்டாம் நண்பர்களே!, சற்று சிந்தித்து பாருங்கள்.

இன்று இணையத்தில் கிடைக்காத தமிழ் பாடல்களே கிடையாது. அப்படி இருந்தும் உலக தமிழ் மக்கள் தமிழ் வானொலியை தேடி வருவதற்கு காரணம்!, வெறும் தமிழ் பாடல் கேட்கும் நோக்கில் மட்டுமல்ல.

தாய் மொழி பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாத நாடுகளில் இருக்கும் நம் மக்கள், உங்களை போல நம் மக்களின் அன்றாட நடை முறை தமிழை மற்றும் நம் சொந்த நாடு, நகரத்து நடவடிக்கைகளை கேட்டு மகிழத்தான்.

எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! என்று சொன்ன தமிழ் திருநாடு இல்லையா நம் நாடு.


இப்படி உலகமெங்கும் ஒலிக்கும் உங்கள் குரல் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகளில், நல்ல தரமான தமிழை பயன்படுத்த வேண்டாமா?

நல்ல தமிழில் பேசுங்கள், உங்களிடம் பேச அழைப்பவர்களிடமும் தமிழில் மட்டும் பேச ஊக்க படுத்துங்கள். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கு தேவையான குரல் வேகத்தை மட்டும் கொடுத்து, தகுந்த இடைவெளியில் வார்த்தைகளை உச்சரியுங்கள். மேலும் உங்கள் மற்றும் மற்ற நிறுவன விளம்பரங்கள் தமிழில் இருக்குமாறு தேர்ந்தெடுங்கள்.

நிகழ்ச்சி நேரம் "காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவு" என்று நேரத்துக்கும் அன்றைய சூழ்நிலை, (குறைந்தது அந்தந்த நகரத்தின்) வானிலைக்கும் தகுந்த கருத்துகளை தொகுத்து கொடுங்கள்.

அப்போதைய போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து விதி முறைகள், சாலை விளிப்புணர்வு, தன்னம்பிக்கை கருத்துகள், கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தைகள் வளர்ப்பு, கல்வி, லஞ்ச ஒழிப்பு, உலக நிகழ்வு, அறிவியல், உலக அரசியல், இந்திய வரலாற்றில் இன்று என உங்கள் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் பகிர நல்ல விசையங்கள் நிறைய இருக்கிறது.

நம் தாய் நாட்டில் நம் தாய் மொழி பேசினால் அசிங்கம் ஒன்றும் இல்லையே!, இதை பற்றி உங்களை சற்று சிந்தித்து பார்க்கத்தான் இங்கு வேண்டுகிறேன்.

மொத்தத்தில் அன்று நான் பல எப்.எம் வானொலி நிகழ்ச்சிகள் மாற்றி மாற்றி கேட்டதில், ஒரே ஒரு ஆறுதல் அவர்கள் தொகுத்து கொடுத்த நல்ல பாடல்கள். ஆனால் நான்கு நிமிட தமிழ் பாடலில் குறைந்த அழுத்தம், அடுத்த இருபது நொடி அவர்கள் அவசர ஆங்கில பேச்சில் மற்றும் விளம்பரத்தில் அதிகரித்து விடுகிறது.

இன்னொன்று எந்த எப்.எம் அலைவரிசை என்று நினைவில் இல்லை, அந்த தொகுப்பாளர் பெயர் "தீபா" என்று நினைக்கிறேன்!. தானும் "முடிந்த வரை" தமிழில் பேசி, தன்னிடம் பேசியவர்களையும் தமிழில் பேச சொல்லி ஊக்கப்படுத்தினார்.

அவருக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும். அவர் நிகழ்ச்சியை முழுவதும் தமிழில் தொகுத்தால் நிச்சியம் உலக தமிழர்களை அவர் நிகழ்ச்சி அதிகம் கவரும்.

சரி, எல்லாம் இவர்களை மட்டும் சொன்னால் அது நியாயமாகாது, வானொலியை கேட்கும் நேயர்களுக்கும் இதில் மிக முக்கிய பங்கு உண்டு. இதற்காக நாம் தனியாக எதுவும் செய்ய வேண்டாம்.

குறைந்தது தொலைபேசியில் பேச அழைக்கும் போது அல்லது அவர்களால் அழைக்க படும்போது, ஒவ்வொருவரும் முடிந்த வரை நல்ல தமிழில் பேசுங்கள்.

மேலும் பேசி முடிக்கும் முன் உங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள் நல்ல தமிழில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்களிடம் குறிப்பிட்டு சொல்லலாமே?.

இப்போது கூட, இந்த இடுகையை படித்து விட்டு நீங்கள் ஓட்டு அல்லது பின்னூட்டம் போடுகிறீர்களோ இல்லையோ!,

ஆனால், உங்களில் யாராவது வானொலி பிரியர்கள் இருந்து, நீங்கள் பேசும் போது இந்த கருத்தை குறிபிட்டால் அதுவே எனக்கு மிக மகிழ்ச்சி.

என் இடுகையில் உங்கள் நேரத்துக்கு நன்றி!.

Thursday, November 12, 2009

சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

பதிவுக்கு முன் ஜலீலாவின் அன்பு விருதுக்கு நன்றி.




பொருளியல் மந்தம் ஆட்குறைப்பு!?

நம் கணினி துறை மட்டுமில்லாமல் பொதுவாக எல்லா துறையை பொறுத்த வரையுமே இது ஒரு மோசமான காலம் என்பதை நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம், கடந்த 2001-2002-ம் ஆண்டு கூட இதே நிலை இருந்தாலும், அதன் பாதிப்பு இந்த அளவு இல்லை என்பதே உண்மை.

ஆகவே, நானும் இத்துறையை சார்ந்தவன் என்ற முறையில், இதன் வருங்காலத்தை பற்றி அறிந்து கொள்ள இது சம்மந்த பட்ட அனைத்து தகவல்களையும் படிப்பதை சமீபகாலமாக வழக்கமாக்கிகொண்டேன்.

சில மாதங்கள் முன் வரை எங்கு திரும்பினாலும், "பொருளியல் மந்தம்", " வேலை குறைப்பு", "சம்பள குறைப்பு" போன்ற தகவல்கள் மட்டுமே வந்து வேலை இழந்தவர்களை விட, "வேலை பார்ப்பவர்களைத்தான்" கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கின.

இப்போது உண்மையில் மந்தநிலை ஓரளவுக்கு மாறிவிட்டாலும், இன்னும் இந்த பொருளியல் மந்த நிலையை சாதகமாக்கி கொண்டு பல நிருவனங்கள் குறிப்பாக மென்பொருள் துறையில் தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்வது என்பது, நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அதாவது நீண்ட நாட்களாக பணி செய்த அனுபவத்தில் உயர்ந்த சம்பளத்தில் இருப்பவர்களை நீக்கி விட்டு அல்லது அவர்களை குறைந்த சம்பளம் உள்ள வேறு நாட்டு கிளைகளுக்கு மாற்றிவிட்டு, அதே வேலையை குறைந்த சம்பளத்தில் வேறு ஒருவரை நியமிப்பது .

ஏன் இப்படி? இந்த நிலை மாற நாம் என்ன செய்யவேண்டும்? என்ற தேடலின் ஆரம்பமே இந்த பதிவு.



சமீபத்தில் சிங்கையில் நான் தங்கி இருந்த நண்பரின் வீட்டில் சில தின பத்திரிகை செய்திகளை படிக்க முடிந்தது.

ஆகா, என்ன ஒரு தன்னம்பிக்கை தரும் தகவல்கள், மேலும் ஒரு தின பத்திரிகையில் எல்லா மக்களையும் சென்று அடையும் படி எவ்வளவு அழகாக "SWAT" சூத்திரத்தை (Strength.Weakness,Analysis,Target) விளக்கி சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல், எவ்வளவு துல்லியமான புள்ளி விபரங்களையும், நாட்டின் வளர்ச்சி பாதையையும், அதில் மக்கள் பங்கையும், எவ்வளவு அழகாக எடுத்துச்சொல்லி வழி காட்டுகிறார்கள்.

இதனால் எல்லா தரப்பு மக்களுக்கும், நாம் ஒரு மோசமான பொருளியல் சூழ்நிலையில் இருந்தாலும், எல்லா வகையிலும் நம்மை முன்னேற்ற ஒரு வலுவான, தரமான அரசாங்கம் நம்முடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுக்கும் இல்லையா?

இதன் மூலம் மக்கள் எந்த வகையான மனஉளைச்சலுக்கும் ஆளாகாமல், நாம் செய்ய வேண்டியது எல்லாம், நம் நாட்டிற்க்கு ஒத்துழைக்கும் வகையில், "ஒற்றுமையுடன் கூடிய கடுமையான உழைப்பு" மட்டுமே என்ற பாதைக்கு எளிதாக மக்களை கூட்டிச் செல்ல இது வழி வகுக்கும் இல்லையா?

அத்தகைய செய்திகளில் சிலவற்றை, இங்கே உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன், படித்து பாருங்கள்.

I - புயலைக் கடந்தோம், வலுவாக எழுவோம்.

பொருளியலைப் பொறுத்தவரை புயலை நாம் கடந்து விட்டோம் என்றாலும் சூழ்நிலை இன்னமும் தெளிவாக இல்லை. இருந்தாலும் இந்தச் சிரமத்தைச் சமாளித்துச் சாதிக்க சிங்கப்பூரிடம் பல சாதக அம்சங்கள் இருக்கின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். உலக சூழ்நிலை நிலைபெறுகிறது.சிங்கப்பூரின் தொழிலாளர் சூழல் நிலைபெற்று இருக்கிறது. சில நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் மூன்றாம் காலாண்டு நன்றாக இருக்க வேண்டும் என்றார் திரு லீ சியன் லூங்.

அதற்கு அப்பால் பார்க்கையில் நிலவரம் தெளிவாக இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஹைஃபிளக்ஸ் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் நன்றாகச் செயல்படுகின்றன. புதிய தொழில் துறைகள் அரும்புகின்றன. ஊழியர்கள் மறுபயிற்சி பெறுகிறார்கள். பொருளியல் வளர்ச்சிக் கழகம் பன்னாட்டு நிறுவனங்களுடன் பத்து ஆண்டுத் திட்டம் ஒன்றைத் தீட்டி வருகிறது. அத்தகைய நிறுவனங்களை ஊக்குவித்து அவற்றின் அதி நவீன தயாரிப்பு ஆலைகளை, தலைமையகங்களை கட்டுப்பாட்டு நிலையங்களைச் சிங்கப்பூரில் அமைக்கும்படி செய்வது இலக்கு.

இந்த மாற்றங்களுக்குத் தோதாக ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் பாய லேபார் செண்ட்ரல், ஜூரோங் லேக் வட்டாரத்தில் புதிய பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். ஏற்கனவே 50 பயிற்சி நிலையங்கள் தீவு முழுவதும் இருக்கின்றன. இது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் சொன்னார். புதிய உத்திகள், முதலீடுகள், ஊழியர்கள் மேம்பாடு ஆகியவற்றுடன் நாம் வலுவாக மறுபடியம் முன்னேறுவோம் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.

II - எதிர்பார்த்ததை விட அதிக லாபம் ஈட்டியது டிபிஎஸ் வங்கி.

டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக $552 மில்லியன் லாபம் ஈட்டியிருக்கிறது. இது முதல் காலாண்டை விட 21 விழுக்காடு அதிகமாகும். ஓராண்டுக்கு முன்பு கிடைத்த $652 மில்லியன் நிகர லாபத்தோடு ஒப்பிடுகையில், இது 15 விழுக்காடு குறைவாகும். ஆனால் ஆய்வாளர்கள் கணித்திருந்த $455 மில்லியனைவிட அதிகமாகும். சென்ற ஆண்டு இரண்டாம் லாண்டோடு ஒப்பிடுகையில், இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் வருமானம் 8 விழுக்காடு அதிகரித்து $1.79 பில்லியனை எட்டியது. டிபிஎஸ் குழுமத்தின் வலுவான அடிப்படைக்கும் வாடிக்கையாளர்களுடனான ஆழமான உறவுக்கும் 2009ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களின் பலாபலனே சான்று என்று டிபிஎஸ் தலைவர் கோ பூன் ஹுவீ கூறினார். டிபிஎஸ் குழுமம் பங்கு ஒன்றுக்கு 14 காசுகள் லாப ஈவை அறிவித்தது. முந்திய காலாண்டிலும் இதே லாப ஈவு வழங்கப்பட்டது.

III - அதே ஒற்றுமையுடன் மேலும் சாதிப்போம் மேம்படுத்தவும் உழைக்கவும் தயாராக இருந்தால் வேலைகள் உண்டு.

சிங்கப்பூர் வரலாற்றின் முதல் 50 ஆண்டுகளில் ஐக்கியமாக சிங்கப்பூரர்கள் சாதித்ததைப் போல் அடுத்த 50 ஆண்டுகளிலும் பலவற்றையும் ஐக்கியமாகச் சாதிக்கும் பெரும் பயணம் தொடங்கி விட்டது என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார். உடனடி, நீண்டகால அடிப்படைகளில் செயல்பட்டால் சிங்கப்பூரின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். ஐக்கியமாக இருந்தால் பொருளியல் பிரச்சினைகளைச் சமாளித்து வளரலாம். சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தலாம். சிங்கப்பூருக்குச் சேர்ந்து உருக்கொடுக்கலாம் என்றார் பிரதமர் லீ. சிங்கப்பூர் ஆறு, வீடுகள், புதுநகர்கள், சமூக நிலையங்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் மேம்பட்டன.
சிங்கப்பூர் ஆறு முதல் மெரினா பே வரை முற்றிலும் சிங்கப்பூர் உருமாறி விட்டது. முதல்தர கல்வி முறை, எல்லாருக்கும் வசதியான பொதுப் போக்குவரத்து, வசிக்க, வேலைபார்க்க, விளையாடி மகிழ தலைசிறந்த இடமாகச் சிங்கப்பூர் உருவாகும். ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றி, இணக்கமிக்க பிணைப்புமிக்கச் சமூகமாகத் தொடர்ந்தால் அடுத்த 50 ஆண்டுகளில் கற்பனைக்கு எட்டாத மாற்றம் ஏற்படும் என்றார் திரு லீ.

IV - சிங்கப்பூர் வர்த்தகம் இரண்டாம் காலாண்டில் 3.8% அதிகரிப்பு.

சிங்கப்பூரின் மொத்த வர்த்தகம் இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் 14 விழுக்காடு சுருங்கிய பிறகு, இரண்டாம் காலாண்டில் 3.8 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. சென்ற ஆண்டு நான்காம் காலாண்டுக்குப் பிறகு மொத்த வர்த்தகம் வளர்ச்சி அடைந்திருக் கும் முதல் காலாண்டு இது. ஓராண்டுக்கு முன்போடு ஒப்பிடுகையில், மொத்த வர்த்தகம் இரண்டாம் காலாண்டில் 27 விழுக்காடு சுருங்கியது. முதல் காலாண்டில் வர்த்தகம் 28 விழுக்காடு சுருங்கியது. திங்கட்கிழமை காலை ஐஈ சிங்கப்பூர் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் முதல் காலாண்டில் 7.4 விழுக்காடு சுருங்கியபிறகு, இரண்டாம் காலாண்டில் 7.6 விழுக்காடு அதிகரித்தது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் இரண்டாம் காலாண்டில் 14 விழுக்காடு குறைந்தன. முதல் காலாண்டின் சரிவு 26 விழுக்காடு. மின்னணுப் பொருட்கள், மின்னணு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்தது இதற்குக் காரணம். இவ்வாண்டில் மொத்த வர்த்தகம் 25 முதல் 22 விழுக்காடு சுருங்கும் என முன்னதாகக் கணிக்கப் பட்டிருந்தது. புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பிறகு, மொத்த வர்த்தகம் 23 முதல் 21 விழுக்காடு வரை சுருங்கும் என்று கணிப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அதே வேளையில், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் 12 முதல் 10 விழுக்காடு வரை சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் காலாண்டில் நடந்த மொத்த வர்த்தகத்தின் மதிப்பு $178 பில்லியன். இது முதல் மூன்று மாதங்களின் $165 பில்லியனைவிட அதிகம். மொத்த ஏற்றுமதிகளும் மொத்த இறக்குமதிகளும் இரண்டாம் காலாண்டில் முறையே 25 விழுக்காடும் 28 விழுக்காடும் சுருங்கின. மின்னணுப் பொருட்களின் உள்நாட்டு ஏற்றுமதி முதல் காலாண்டில் 32 விழுக்காடு சரிந்த பிறகு, இரண்டாம் காலாண்டில் 23 விழுக்காடு சரிந்தது. மின்னணுப் பொருட்கள் அல்லாத எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி முதல் காலாண்டில் 21 விழுக்காடு சரிந்த பிறகு, இரண்டாம் காலாண்டில் 8.6 விழுக்காடு சரிந்தது.

இரண்டாம் காலாண்டில் தைவான் தவிர்த்து மற்ற பத்து முக்கிய சந்தைகளுக்கும் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி சரிந்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடு களுக்குச் செல்லும் ஏற்றுமதியே மிகப்பெரிய சரிவைக் கண்டது. “மொத்த வர்த்தகத்தின் சரிவு ஓரளவு நிலைப்படுகிறது என்பதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன. “உலகப் பொருளியலும் நிலைப்படுவதாகத் தெரிகிறது. இருந்தாலும், மந்தநிலை இன்னும் முடியவில்லை என்பதால் பொருளியல் மீட்சி மிதமாகவே இருக்கும்” என்று ஐஈ சிங்கப்பூர் தெரிவித்தது.

இவ்வாண்டின் எஞ்சிய மாதங்களில், வெளி நிலவரங்கள் தொடர்ந்து நலிவடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அது எச்சரித்தது.


நம் பாரதி கனவு கண்ட "சுதேசிமித்திரன்" பத்திரிக்கையை போல, வியாபார நோக்கம் மட்டுமே குறியாக இல்லாமல், சிறந்த மக்கள் சேவை செய்துவரும் சிங்கை "தமிழ் முரசு" என்னும் அந்த பத்திரிகைக்கு மேலும் வளர மற்றும் தன் மக்கள் சேவையை தொடர "என் மனமார்ந்த வாழ்த்துக்கள்".

சரி, இனி நம் பதிவை பார்ப்போம்.

இந்த தகவல்களை படிக்கும் போது நமக்கு என்ன தோன்றுகிறது? எவ்வளவு நம்பிக்கையான தகவல்கள், எவ்வளவு கடைமை உணர்வு மற்றும் நாட்டின் வளர்ச்சியின் அக்கறை கொண்டுள்ள உண்மையான தலைவர்கள்.

இதை போல வழிகளை, நாம் ஏன் கடை பிடிக்க கூடாது! என்ற எண்ணம் வருகிறது இல்லையா?

அதெல்லாம் சரி, இதற்கு தனிப்பட்ட நாம் அல்லது பதிவராகிய நாம் என்ன செய்ய முடியும்?

இதை நடிகைக்கு "வரும் காதல் எஸ்.எம்.எஸ்-சையும்", "குடும்ப விவாகரத்து மற்றும் விபச்சார பிரச்னைகளையும்" கலர் படத்துடன் முதல் பக்கத்தில் போடும் சில பல "பத்திரிக்கைகள்" அல்லவா இதை செய்ய வேண்டும் என்று நினைக்க கூடும்.

நிச்சியம் இல்லை நண்பர்களே, "இணையம்" இன்று இதுதான் உலகின் முன்னணி மற்றும் வேகமான "லாப" நோக்கம் மட்டும் குறியாக இல்லாத பத்திரிக்கை.

எந்த பத்திரிக்கை பிரதிகளும் செல்லாத இடம், நாடு, எல்லாம் நம் மக்களை வீட்டில் சென்று நேரில் சந்திப்பது உங்கள் தமிழ் பதிவுகள் இல்லையா?

அது மட்டுமில்லாமல், அனேகமாக நம் எல்லா பத்திரிக்கைகளும் இன்று பதிவுலக பதிவில் இருந்து, நல்ல தகவல்களை எடுத்து மக்களுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன இல்லையா?

அப்படி இருக்கும் போது, நாம் ஏன் நம்மால் ஆனா முயற்சியை செய்ய கூடாது?

சரி, அப்படி என்னதான் செய்ய முடியும்?

இன்று பதிவு உலகில் கணினி துறை மட்டுமில்லாமல் எல்லா துறைகளையும் சார்ந்தவர்கள் இருப்பதால், உங்கள் பதிவுகளில் உங்கள் துறை சார்ந்த நல்ல தகவல்களை, பொதுவான வளர்ச்சி விகிதத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பொருளியலைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் முழு சீராகாவிட்டாலும், கீழ் நோக்கி சென்ற "மந்தநிலை மாறிவிட்டது" என்பதே உண்மை இதை அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய செய்யலாமே?



உங்கள் துறை, அலுவலகத்தின் சென்ற காலாண்டு வளர்ச்சியோடு ஒப்பிட்ட இந்த மற்றும் வரும் காலாண்டு வளர்ச்சியை பற்றி பொதுவாக கொடுக்கக்கூடிய புள்ளிவிபரத்தை கொடுங்கள்.

உங்கள் துறை, அலுவலகத்தின் வேலை வாய்ப்பை மற்றும் வேலைக்கு எடுக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள், வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் உங்களுக்கு தெரிந்த புதிய வேலை வாய்ப்பு முறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் பதிவின் மூலம், எந்த தரப்பு மக்களுக்கும் நியாயமான ஊதியம் கிடைக்கும், எந்த தரப்பு வேலையையும் செய்யமுன் வரும் ஒரு விளிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.

உங்கள் பதிவுகளை போல் பத்திரிகைகளும், ஊடகங்களும் சரியான, உண்மையான நிலையை மற்றும் "இன்று மக்களுக்கு உண்மையில் தேவையான தகவல்களை" கொடுக்க முன் வரும்.

அப்படி இல்லாமல் நாட்டு வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் இல்லாத செய்திகளுக்கு முன்னுரிமை, அங்கிகாரம் தருவதை தவிர்த்து பாருங்கள்.

இத்தகைய நம் போக்கு, இது வரை வேலை இழந்தவர்களுக்கும், இனி புதிதாக வேலைக்கு வர இருப்பவர்களுக்கும், எதிர்காலம் பற்றிய மனஉளைச்சலை முதலில் நீக்கி தன்னபிக்கை கொடுக்கும்.

இதனால் நம் மூத்த தலைமுறை மக்கள் மற்றும் நம் நாடு, நம்மை ஒரு நல்ல பாதையை நோக்கி அழைத்து செல்கிறது என்ற நம்பிக்கையில் மக்கள் மனம் சீராகி, தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் தேவையான எந்த வேலையானாலும் கடின உழைப்போடு செய்ய மகிழ்ச்சியாக தயார் ஆவார்கள்.

தம் "திறமையையும், கடின உழைப்பையையும்" மட்டும் மக்கள் நம்பும் நிலை வெகுவிரைவில் வர, இந்த பொருளியல் மந்த நிலையை சாதகமாக்கி கொண்டு, "ஒழுக்கமான வாழ்கைக்காக ஒரு வேலை என்ற நிலையை மாற்றி, வேலை மட்டுமே வாழ்கை என்று மனஉளைச்சலை" தரும் சூழ்ச்சகங்கள் பலன் தராமல் போகிவிடும்.

இதன்பின் மனித நேயம் இல்லாத வெறும் "லாப" நோக்கம் மறைந்து, மீண்டும் தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலையுடன் அதற்கு தகுந்த ஊதியத்துடன் வாய்ப்புகள் மக்களை தேடி வர ஆரம்பித்து விடும்.

பிகு:- இந்த பதிவின் கருத்து நம் மக்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களுடன் இந்த பக்கத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே.

Sunday, August 23, 2009

"அக்காமாலாவையும் கப்சியையும்" விடுங்கையா!



"வெற்றிவேல் வீரவேல்" "வந்தேமாதரம்" என்று என் தாய் நாட்டு சுதந்திரத்துக்கு பாடுபட்ட அத்தனை உயிர்களுக்கும் என் இதயம் கனிந்த அஞ்சலி.

தாமதமான சுதந்திர தின வாழ்த்தோடு துவங்கினாலும், வழக்கம் போல பெரிய மொக்கை எதுவும் இல்லாம, உருப்படியா ஏதாவது ஒரு விசையத்த இந்த பதிவில் சொல்ல முயற்ச்சிக்கிறேன். அதனால் தான் இந்த தாமதம்.

தென்கொரியாவில் காலை வேளையில் சாலைகளில் மற்றும் அலுவலகம் செல்லும் பாதை வாசல்களில் அழகிய சீருடை அணிந்த பெண்களை ஒரு வகை விற்பனை வண்டியுடன் காண முடியும், தினம் இவர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நம்ம ஊரில் "ஐஸ்" வண்டியுடன் விற்பதை போல, இவர்களும் ஏதோ! விர்ப்பதாய் ஒரு நினைப்புடன் இருந்தேன்.

ஆனால், இவர்கள் எல்லா அலுவலகங்களுக்கு உள்ளேயும் வந்து அங்கு வேலை பார்பவர்களில் தினம் குளிர்பானம் குடிக்கும் வாடிகையாளர்களுக்கு "விற்பனை" செய்து விட்டு போவதில் எனக்கு ஆச்சரியம், ஏன் என்றால் சாதரணமாக "வங்கி", "தேசிய சேவை ராணுவ தளம்" போன்ற அலுவலகங்களில் வேலை இல்லாத வெளி ஆட்களை அனுமதிப்பது இல்லை, அதுவும் விற்பனைக்கு என்ற போது, அது எப்படி இவர்களால் மட்டும் சாத்தியமாகிறது என்று எனக்கு புரியவே இல்லை.

இதனால் எனக்கு அதைபற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் கூடியது, சில நாட்கள் முன் ஒரு முறை அது என்னவென்று பார்க்க ஆவலுடன் அருகில் சென்று பார்த்தேன், அது முழுவதும் கொரியன் மொழியில் எழுதப்பட்ட சிறு சிறு மருந்து பாட்டில் திரவமாக இருந்ததால் அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை.



ஆனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி குடிப்பதை பார்த்து இருந்ததால், சரி எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை என்பது மட்டுமில்லாமல் விலையும் ஒன்றும் அதிகம் இல்லை "ஆயிரம் கொரியன்வேன்" இங்கு ஆயிரம் வேன் என்பது, நாம்ம ஊரில் "ஒரு ரூபாயை போல்" என்பதால் (இந்திய மதிப்பில் ஐம்பத்து ரூபாய்) நானும் ஒன்றை வாங்கி குடிக்கும் முன், இதை நான் குடிக்கலாமா என்று அந்த பெண்ணிடம் சைகையில் கேட்டு உறுதி படித்திக்கொண்டு (நாம எப்பவும் அலாட்டுங்க) குடித்து பார்த்தேன்.

பார்ப்பதற்கு மருந்து பாட்டிலை போல் இருந்தாலும், அதில் இருந்தது என்னவோ நம்ம ஊர் "லசி" (இனிப்பு கலந்த தயிர்) போல நல்ல சுவையுடன் இருந்தது, அதன் பிறகு அதை மறந்து விட்டு வேலையை துவங்க, சாதாரண நாட்களை விட அன்று உற்சாகமாக உணர்ந்தேன், அன்று நல்ல பசியும் எடுத்தது, சரி, இது நம்ம ஊர் "லசி" போல கொரியன் "லசி" என்று நினைத்துக் கொண்டேன்.

இன்னொரு முறை குடித்த போது, அன்றும் இதே போல உணர, இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன், என் அலுவலக நண்பியிடம் (பக்கத்து இருக்கைல இருக்கிறது கொரியன் பொண்ணு-ன்னு தங்கமணிக்கு இன்னும் தெரியாது) விசாரிக்க கிடைத்த தகவல்கள் வியக்க மட்டுமல்ல, மலைக்கவும் வைத்தன.

உண்மையில் அது மருத்துவ குணம் கொண்ட ஒரு குளிர்பானம், இந்த சூத்திரத்தை கண்டு பிடித்தவர் "நோபல் பரிசு" பெற்ற கொரியன் ஒருவர், அவர் தன் "வயிற்று புற்றுநோய்" பற்றிய ஆராய்ச்சிக்கும், அதை தடுக்கும் சூத்திரத்துக்காகவும் மருத்துவ துறை நோபல் பரிசு கிடைத்ததாம்.

அந்த சூத்திரத்தின் அடிப்படையில், கொரிய அரசாங்கத்தின் நேரடி பார்வையில் தயாரிக்க படுவது தான் இந்த குளிர்பானமாம், இதை பல மருத்துவ தனியார் வியாபாரிகளுக்கும் ஒப்பந்த அடிபடையில் தயாரிக்க அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறதாம்.

அது மட்டுமில்லாமல், இத்தகைய தயாரிப்புகளுக்கு மற்ற குளிர்பானத்தை போல வரி எதுவும் கிடையாது என்பதால், மக்களுக்கு இதை குறைந்த விலையில் கிடைக்க செய்யமுடிகிறது.

மற்ற உடலை கெடுக்கும் குளிர்பானத்தை குடித்து மக்கள் உடலை கெடுத்து கொள்ளாமல் இருக்கவே, இத்தகைய தயாரிப்பை மக்கள் மத்தியில் எளிதில் கிடைக்க செய்கிறார்கள். மேலும் இத்தகைய குளிர்பானங்களை "இரண்டு நாட்களுக்கு மேல் பயன் படுத்த முடியாது" என்பதாலும் தான், இந்த தயாரிப்பை விற்பனை செய்பவர்களால் எந்த அலுவலகங்களுக்கும் நேரில் செல்ல, சென்று விற்பனை செய்ய அனுமதி கிடைத்து இருக்கிறது.



இதை குடிப்பதன் மூலம், நல்ல செரிமானமாகுமாம், நல்ல பசி எடுக்குமாம், காலை கடன் உபாதைகள் நீங்குமாம், வயிற்று புற்றுநோய், குடல்நோய் வரும் சந்தர்ப்பம் அதிக அளவில் குறையுமாம், மேலும் இது அரசாங்க நேரடி கண்காணிப்பில் தயாராகும் உள்ளூர் தயாரிப்பு என்பதால், கலப்படம் இருக்காது மற்றும் பின் விளைவுகள் இருக்காது என்பதற்கு உத்திரவாதம் அதிகம் என்று அடித்து சொல்கிறார்கள்.

அதன் பின் தான் நான் கவனித்து பார்த்தேன், இங்கு இது மட்டுமில்லாமல் மற்ற அணைத்து குளிர்பானங்களும் திராச்சை, ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற நன்மை தரும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்ய படுகிறது.

இதை பார்த்த போது எனக்கு நம்ம ஊரில் நினைவில் வந்தது இரண்டு.

ஒன்று தினம் காலை வேலை ஊரில் பச்சை கண்டாங்கி கட்டி, தலையில் கூடையை வைத்துக்கொண்டு தயிர் விற்று வரும் அம்மா, அந்த கூடையில் ஒரு ஓரத்தில் மோர் கிண்ணத்தில் வெண்ணை உருண்டைகளை மிதக்க விட்டு இருக்கும் (நான் வாங்கும் போது ஒரு வெண்ணை உருண்டை ஐம்பது காசு).

இன்னொன்று வெள்ளை துண்டை தலையில் கட்டிக்கொண்டு, சட்டை இல்லாத உடம்புடன் இடுப்பில் வேட்டியுடன் சைக்கிளில் முன்னும் பின்னும் இளநீரை கட்டிக்கொண்டு வரும் முதியவர், இந்த முறை வந்த போது கூட தேசியபுற சாலைகளில் புளிய மரதடியில் விற்பதை பார்த்து போய் வாங்கி குடித்தேன்.

சரி, இப்ப நம்ம விசையத்துக்கு வருவோம், இதுக்கும் "அக்காமாலாவையும் கப்சியையும்" விடுவதற்கும் என்ன சம்மந்தம் என்றால்?

நாமும் இப்படி நமது பாரம்பரிய குளிர்பானமான இளநீர், மோர் என்று தினம் பருகி உடல் நலனை காப்பதுடன், இந்த உடலுக்கு தீங்கு விளைவிக்கும் "அக்காமாலா, கப்சி" போன்ற அந்நிய குளிர்பானத்தை தவிர்க்கலாமே?

இதை மட்டும் ஏன் இங்கு நான் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்று நினைப்பவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், ஒரு புது "அக்காமாலாவையோ அல்லது கப்சியையோ" வாங்கி அதை திறந்தவுடன் ஒரு "கோழியின் கால் எலும்பை" போட்டு உடனே மூடிவிடவும், இருபத்து நான்கு மணி நேரம் கழித்து அந்த "எலும்பின் நிலையை" பார்த்தல் உண்மை புரியும்.

சரி, இப்படி இந்த குளிர்பானங்களை தவிர்ப்பதால், நம் உடலுக்கு மட்டும் தான் நன்மையா? என்றால் நிச்சியம் இல்லை!, எப்படி என்றால்.

இதனால், அழிந்து வரும் நம் பாரம்பரிய இயற்கை உணவு முறைகள் மீண்டும் வழக்கத்திற்கு வரும் மற்றும் உள்ளூர் விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவார்கள், இதனால் அழிந்து வரும் விவசாயம் நம் நாட்டில் பெருகும், வீட்டிற்க்கு வரும் விருந்தாளிக்கு கூட இளநீர், மோர், பருத்திப்பால், பழசாறு, தேநீர் தரும் வழக்கம் மீண்டும் வரும்.

இப்படி நாம் அனைவரும் பயன்படுத்தும் விற்பனை தேவை அதிகரிப்பதால் அரசாங்கம் இத்தகைய குளிர்பானங்களை கிராமங்களில் கிடைப்பதை போலவே, பரபரப்பான நகர மக்களுக்கும் தினம் கிடைக்க ஏற்ற வகையில் புட்டிகளில் அடைத்து குறைந்தது "மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாத" வகையில் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை வரும், இப்படி குறிகிய கால பயன் பாட்டினாலும், இயற்கை உணவு முறை என்பதாலும் கலப்படம் இருக்க சந்தர்பம் வெகுவாக குறையும்.

மேலும் இதனால் நம் உள்ளூர் வேலை வாய்ப்பு பெருகும், உள்ளூர் தயாரிப்பு என்பதால் வரி அதிகம் இருக்காது, அதாவது அன்றாடம் நாம் குடிக்கும் குளிர்பானத்திற்கு, நாம் காப்புரிமை எனப்படும் "வரி வெளிநாட்டுக்கு செலுத்த வேண்டி இருக்காது". இதனால் நம் தயாரிப்பின் விலை குறையும், நாட்டின் பண வளர்ச்சி மற்றும் சுழற்சி அடையும்.

நாளடைவில் நம் மக்கள் இருக்கும் இடமெல்லாம் இத்தகைய நம் நாட்டு தயாரிப்புகள் தேவைப்பட, உலக சந்தையில் நம் நாட்டு தயாரிப்பு சர்வதேச உலக தரத்துடன் தயாரிக்கபட்டு, நம் வியாபாரம் அன்னிய செலவாணியில் உயர்வதால், நம் நாட்டு பண மதிப்பு உலக சந்தையில் உயரும்.

நம் பண மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஒவ்-ஒன்றாக, நம் உள்நாட்டு தயாரிப்பு அனைத்தும் நம் நாட்டு மக்களுக்கு வரி இல்லாமல் சகாய விலையில் நிச்சியம் கிடக்கும், அதாவது நம் நாட்டில் விளையும் "பாசுமதி அரிசி" நமக்கு கிலோ ஐந்து ரூபாயில் கிடைக்க கூட வழி வகுக்கும்.

அதன் பின் "என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?" என்ற கவிங்கரின் கனவு நினைவாகும்.



ஆக, இந்தியா இன்னும் இருபது ஆண்டுகளில் ஒரு வல்லரசு ஆகும் என்று படிப்பதோடு மட்டும் இல்லாமல், அதை நடை முறை படுத்த நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் இல்லையா?

இதை தினம் நாம் செலவிடும் ஒரு அந்நிய குளிர்பானத்தில் இருந்து துவங்கலாமே?

அதனால் தான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இந்த "அக்காமாலாவையும் கப்சியையும்" மொதல்ல விடுங்கையா.

சற்று சிந்தித்து பார்த்தால், இதுகூட இன்றைய நம் சமுதாய நடைமுறைக்கு அவசியமான ஒரு "சுதேசி" தான் நாண்பர்களே.

ஆகவே, நம் நாட்டை உயர்த்த ஒன்றுபடுவோம்,நம் நாட்டோடு சேர்ந்து நாமும் உயர்வோம்.

ஜெய்ஹிந்.


பிகு:- வழக்கம் போல படிச்சிட்டு "ஓட்ட போடாம" போங்க...... எப்பவும் ஓட்டு போடுங்கன்னுதான சொல்லுவோம், அதான் சும்மா ஒரு சேஞ்சுக்கு :-))...

இந்த பதிவின் கருத்து மக்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களுடன் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளவும்.

Saturday, May 16, 2009

டெல்லி [இறுதி] பாகம்- IV - ஹிந்தி தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது!

நாங்க "வாக் இன் இன்டெர்வியு" போக, மத்த நேரத்துல "ஏக் காவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா"-ன்னு ஹிந்தி படிச்சுகிட்டு இருந்தப்போ, என் குரு ராஜேஷ் என்னை அடிக்கடி கேட்பார், எப்போ முழுசா ஹிந்தி பேசுவேன்னு?

அதுமட்டும் இல்லாம எனக்கு உதாரணமா என் நண்பன் "ஜான்" அவனை பாரு தினம் வீட்டுக்கு தேவையான எல்லா பொருளும் வாங்க எவ்ளோ ஆர்வமா போறான்னு!

அதுதான் பிள்ளைக்கு அழகு, நாலு பேரோட பேசினாத்தான் உனக்கும் ஹிந்தி பேச வரும்ன்னு வசை பாடுவாரு.

எனக்கு செம காண்டா ஆகிடும், என்னடா இது? நாமளாவது ஒரு நாலு வார்தை சேந்தாப்புல பேசுவோம், இதுக்கு ஹிந்தி ஒன்னுமே புரியாதே?

போன வாரம் கூட இவனும் சுச்சு மாமாவும் ஆட்டோவுல போயிட்டு, ஆட்டோகாரன் பச்சீஸ் (இருபத்தஞ்சு ரூபா) கேட்டதுக்கு! இல்ல, இல்ல நாங்க நேத்து கூட பச்சாஸ்-குதான் போனோம்ன்னு சண்டை போட்டு "அம்பது ரூபா" கொடுத்துட்டு வந்தாங்களே!

"பச்சீஸ்-கும் (இருபத்தஞ்சு ரூபா) பச்சாஸ்-கும் (அம்பது ரூபா)" வித்தியாசம் தெரியாத இவனுக்குள்ள இப்படி ஒரு ஹிந்தி ஆர்வமா?

சரி, இவனே போய் சமாளிக்கும் போது, இன்னிக்கு நம்மளும் கூட போய் பாத்துருவோம்-ன்னு ஆர்வமா ஜான்கிட்ட சொன்னேன்.

அவனும் சரி, சரி வா..! இப்பத்தான் தோனுதாக்கும்....? ஆனா ஒரு கண்டிசன் எல்லா விசையத்தையும் மாதிரி இதையும் வச்சு என்ன ஓட்டக்கூடாது ஓகேவா-ன்னு கேட்க?

நானும் "ச்ச" இவரப்போய் நம்ம ஓட்டி, நம்ம ஹிந்தி பேசுவதை நாமே கெடுத்துக்ககூடாது-ன்னு, சரி ஜான் யார் கிட்டையும் இத பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லிட்டு கூட போனேன்.

ஜான் வழக்கம் போல எல்லா "காஸ்மெட்டிக்கும்" போட்டுகிட்டு கீழ வர, நேரா ஒரு காய்விற்கும் கடைக்கு போனோம், போகும் போதே என்கிட்ட சொன்னார், எதுவும் பேசாதே கவனமா பார்ன்னு.

நானும் ஒருவேளை உதட்டு அசைவை கவனிக்கனும்னு போல-ன்னு நினைச்சுகிட்டு, அவர் என்ன பேச போராருன்னு கவனமா பாத்துக்கிட்டு நின்னேன்.

அவரை பார்த்ததும் கடைக்காரர் கையெல்லாம் ஆட்டி "ராம் ராம்-ஜி"-ன்னு சொல்ல நான் ஜானோட செல்வாக்கை பாத்து சும்மா அசந்து போய்டேன்.



ஆனா, இவர் பதிலுக்கு சிரிச்சரே தவிர, ஒரு வார்த்தை கூட பேசல, நேரா போனார் போய்...!

அதுக்கப்புறமா எல்லாம் ஒரே "ஆக்சன்" தான்!

ஜான்:- ஒரு ஒருகிலோ எடை கல்லை எடுத்து கொடுத்தாரு...!

கடைகாரர்:- அந்த கல்லை வாங்கி தராசுல வச்சாரு...!

ஜான்:- ஒரு வெங்காயத்தை எடுத்து கொடுக்க,

கடைகாரர்:- ஒரு கிலோ வெங்காயம் கொடுக்க,

ஜான்:- ஒரு ரெண்டு கிலோ கல்லை எடுத்து கொடுக்க,

கடைகாரர்:- அந்த கல்லை வாங்கி தராசுல வைக்க

ஜான்:- ஒரு தக்காளியை கொடுக்க,

கடைகாரர்:- ரெண்டு கிலோ தக்காளியை கொடுக்க, இப்படியே எல்லாம் வாங்கியாச்சு.

(வடிவேலு மருதமலை காமெடி மாதிரி) நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்...!

இப்பவும் எனக்குள்ள ஒரு சந்தேகம்?

காசை கொடுக்கணுமே? மொத்தம் என்ன விலைன்னு அவர் எப்படி சொல்லுவாரு?

ஜான் எப்படி புரிஞ்சு காசை கொடுப்பருன்னு யோசிச்சுகிட்டு கடைகாரரை பார்த்தா அவரு ஒன்னுமே சொல்லல!

என் சந்தேகம் தீராம, ஜான் பக்கம் திரும்பினா, அவர் "கூலா" ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தாரு.

கடைகாரரும் வாங்கி வைத்துக்கொண்டு மிச்ச பணத்தை கொடுத்து "ராம் ராம்-ஜி"-ன்னு சொல்ல, இவர் பதிலுக்கு சிரித்து விட்டு வந்தார்.

நான் அப்படியே ஜானை பாத்தேன்...!

அவரும் கொஞ்சம் கூட அசராமல் நீ என்ன நினைத்து என்னை லுக் விடுகிறாய் என்று எனக்கு புரிகிறது.

எப்படி பாத்தாலும் காய் வாங்கும் விலை மொத்தமா நூறு ரூபாய்க்குள்ள தான வரும்? அதான் தான் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு, நூறு ரூபா நோட்டா மாத்தி வச்சு இருக்கேன்.

சிம்பிள், தினம் ஒரு நூறு ரூபா நோட்டு, இத விட்டுட்டு உன்னை மாதிரி அவனுககிட்ட பேச்சு வாங்க வேண்டிய இருக்காது பாரு-ன்னு சொன்னாரு.

அவ்ளோதான், எனக்கு மண்டைல கொம்பு முளைச்சு, காதுல புகை வராத குறை!

என்னப்பா இதெல்லாம்? உன்ன போய் அந்த ஆளு ராஜேஷ் நல்லவேன்னு நினைச்சுகிட்டு இருக்காரே?

அதை விட கொடுமை உன்கூட போய் ஹிந்தி கத்துக்க வந்தேன் பாருன்னு என்ன நானே நொந்துகிட்டேன்.

அதுக்கும் அவர் அசராம சொன்ன பீட்டர் பதில்...!

" யு சி மேன், கம்யுனிகேசன் இஸ் நாட் வாட் யு டாக், கம்யுனிகேசன் இஸ் வாட் யு மேக் அதர்ஸ் டு அண்டர்ஸ்டாண்ட்" ஓகே-ன்னு பீட்டர் விட...!

அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன், இனி எவன் என்னை என்ன திட்டினாலும் சரி, இல்ல வாயில் ஒரு செருப்பை கொடுத்துட்டு, இன்னொரு செருப்பால் என்ன அடித்தாலும் சரி...! இவன் கூட போய் ஹிந்தி கத்துக்க நினைக்க மட்டும் கூடவே கூடாது என்று.

அது ஓர் அழகிய நிலா காலம், ஆனால் அந்த நட்பு இப்போது இல்லையே என்று மனம் சில அந்தி மாலை பொழுதில் நினைக்கும்.

நன்றி!.

Friday, May 15, 2009

டெல்லி பாகம்- III - சோட்டுவின் தலைவலி நடிப்பு

எங்க குரூப்ல , நண்பன் காதரும், குரு ராஜேஷும் மட்டும் வேலை பாத்த நாட்கள் அது, மத்த நான், சோட்டு-கார்த்தி, வில்ஸ் விஜி,குமார், ஜான் எல்லோருக்கும் வேலை தேடுறது தான் வேலை, தினம் காலையில குருவும், நண்பனும் , வேலைக்கு போகும்போது, எங்களுக்கு அம்பது ரூபாவும் நாலு வில்ஸ் சிகரெட், நாலு கிளாசிக் ரெகுலெர் சிகரெட் (ரெண்டு பேரும் வேற வேற பிரண்ட்) குடுத்துட்டு போவாங்க, இந்த அம்பது ரூபா எதுக்குனா நாங்க "வாக் இன் இன்டெர்வியு" போக, மத்த நேரத்துல எதாவது படிக்கணும் இல்லேன்னா ஹிந்தி பழகனும்னு கண்டிசன்வேற (நாங்க ஹிந்தி பழகுன கதைய அடுத்த பதிவில் சொல்றேன்) கார்த்தியும் விஜியும் வயசு கம்மிங்கரதால அவங்களுக்கு கண்டிசன் ரொம்ப ஜாஸ்தி.

அப்ப சாப்ட்வேர் கம்பெனில ஜாவா ப்ரோக்ராமர் ஜன்னலுக்கு வெளில புல்லு மேஞ்ச மாடு கூட, அமரிக்காவுக்கு பிசினஸ் கிளாஸ்ல போய் பால் கறக்க முடியுற நேரம் (இப்போ ஒரு கல்ல எடுத்து ஜன்னலுக்கு வெளில கூட்டத்துல எரிஞ்சா, அது கண்டிப்பா ஜாவா ப்ரோகிராம் தெரிஞ்ச ஒருத்தர் மேலதான் படுங்கிறது வேற விஷயம்) அந்த அடிப்படை ஆர்வத்தில் மக்கள் எல்லாம் ஜாவா புக்கும், நான் நெட்வொர்க் புக்கும் எடுத்துட்டு படிக்க (படிக்கிற மாதிரி படம் காட்ட) உக்காந்துருவோம், நண்பனோட ஒரு சிஸ்டம் இருந்தது அதுல வேற போட்டி போட்டுக்கிட்டு ஆர்வமா படிக்கிற மாதிரி யாராவது உக்காந்துருவோம் எதுக்குனா, மக்கள் ரெண்டும் வேலைக்கு போனவுன்ன கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் "தல"யோட "என்ன சொல்ல போகிறாய்" பாட்ட போட்டுக்கிட்டு "டேவ்-2 கேம் விளையாட" .

அதையும் தாண்டி பசங்க எதாவது எசகு பிசகா பண்ணி நண்பன்கிட்ட மட்டிக்கிட்டா, "ராஜ் ஆர்யன் மல்கோத்ர" (ராஜேஷ்) தான் நண்பன் "நாராயண் ஷங்கர்" கிட்ட இருந்து காப்பத்த டிராம் அடிச்சுகிட்டே வருவாரு (Mohabbatein படம் பார்த்தவர்களுக்கு புரியும்) இந்த பேர இவங்களுக்கு யார் வச்துனு கண்டுபிடிக்க "யாரோ@யாஹூ.காம்" ன்னு ஒரு ஐடி எல்லாம் கிரியேட் பண்ணி ட்ரை பண்ணுனாங்க.

சரி, விஷயத்துக்கு வருவோம்,

இப்படியே, நாங்களும் நாள ஒட்டிகிட்டு காலைல வேலை தேட, மதியம் முழுக்க வீட்டுல தம்மடிக்க சீடி பாக்கனு பொழுத போக்குவோம், சரியா ஆறு மணியானா திரும்ப ரெண்டு பசங்களும் புத்தகம் சிஸ்டம்னு போய் உகந்துருவங்க, நண்பனும் குருவும் குளிர்காலமா இருந்தா ஓல்ட்மக் ரம், கோடை காலமா இருந்தா பீருன்னு ஏதாவது வாங்கிட்டு வர தினம் கல கலன்னு இருக்கும்.

இந்த ரெண்டுல விஜி எல்லா நேரமும் படுக்க தம் அடிக்கனு இருந்தாலும், நண்பன் கண்ன்னுல மட்டும் சரியா படிக்கிறப்ப மட்டும் தான் படுவான், சோட்டு-கார்த்தி எல்லாம் சரியாத்தான் பண்ன்னுவான், ஆனா ஏதாவது எடக்கு முடக்கா, பண்ணும் போது மட்டும் தான் மாட்டுவான், சுருக்கமா சொலனும்னா, நாள் பூர விஜி படம் பாக்க கேம் விளையடனு இருந்துட்டு புதம்கம் எடுக்கவும், சோட்டு-கார்த்தி நாள் பூரா படிக்க சிஸ்டம்ல வொர்க் பண்ணிட்டு ரிலாக்ஸ்சா ஒரு தம்ம பத்த வைக்கவும் நண்பன் பாக்கவும் சரியா இருக்கும், அன்னைக்கு பூரா எங்களுக்கு "டாம் & செர்ரி கார்டூன்" பார்த்த மாதிரி இருக்கும்.

ஒரு நாள் இப்படித்தான், நானும் விஜியும் படுத்துகிட்டு படம் பாத்துகிட்டு இருந்தோம், கார்த்தி சிஸ்டம்ல எதோ படிச்சிகிட்டு இருந்தான், அதோட இல்லாம விஜிக்கு அட்வைஸ் வேற பண்ணினான். விஜி வீணா மாட்டி பேச்சு வாங்காத, வா, வந்து எதாவது படி, இவர நம்பாத, இவர ஒன்னும் சொல்ல மாட்டங்க, அதயும் சேத்து நமக்கு தான் விழும்னு.

நானும் விஜியும், போ, தம்பி, போ ...எல்லாம் நாங்க பாத்துகிறோம், நீ ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாருன்னு சொல்லிட்டு, ஒரு புது பட சீடிய (திருட்டு சீடி) பாத்துக்கிட்டு இருந்தோம், நாங்க படம் பாக்க தாம் அடிக்கன்னு இருந்தது அவனுக்கு தாங்க முடியல, விஜி எதுக்கோ போக, இவனும் வந்து ஒரு தம்ம பத்த வச்சுக்கிட்டு படுத்துகிட்டு படம் பாக்க ஆரம்பிச்சான்.

திரும்பி வந்த விஜி போய் சிஸ்டத்துல ஒக்கார, நான் எதுக்கோ வெளிய வந்தேன், வரும் போதே நண்பன் வர்ரத பாத்துட்டு உள்ள போய் "சோட்டு, இப்படி படுத்துகிட்டு தம்மோட படிக்காம படம் பாக்குறத நண்பனோ, அண்ணனோ மட்டும் பாத்தா என்னடா பண்ணுவனு" அவன இழுத்து விட....

அவன் கொஞ்சம் கூட யோசிக்காம, படம் பாத்து கிட்டே சட்டுனு எழுந்துரிச்சு தலைல கைய வைச்சுகிட்டு " அண்ணே ஒரே தல வலிண்ணே-னு பிட்ட போட்டு எஸ்கேப் ஆவமுலான்னு சொல்லிகிட்டுடே திரும்ப" அங்க இவன் நிக்கிறதா பாத்தவுன்ன முகத்துல ஒரு எபெக்ட் கொடுத்தான் பாரு, இந்னிக்கும் எனக்கு அந்த முகம் நியாபகம் இருக்குனா பருங்க.

அவளோதான் நண்பனுக்கு ஒரே காண்டு, உடனே, எடு உன் பெட்டிய, கிளம்முமா நீ, இனி இங்க இருக்காத தமிழ் நாட்டுக்கு போனு செம வசை பாடிட்டான், இவனும் ஒன்னும் பேச முடியாம வெளியே போய் நின்னுகிட்டு இருந்தான்.

அப்பறம் வழக்கம் போல, டிரம் அடிச்சுகிட்டே "ராஜ் ஆர்யன்" (ராஜேஷ்) வந்து காப்பாத்தி விட்டார்.

இன்னைக்கு அமரிக்கவுல கிரீன் கார்டு BMW எல்லாம் வச்சு இருந்தாலும், எப்ப போன் பண்ணினாலும் மறக்க முடியுமான்னு கேட்பான்.










நன்றி மீண்டும் சந்திப்போம்

Wednesday, May 13, 2009

டெல்லி பாகம்- II - "ஒரு ருபா பிச்சை"

டெல்லில தங்கி வேலை பார்த்த இனொரு நேரத்துல, என் நண்பர்கள், குமார், ஜான், சுரேஷ் என்கிற சுச்சு மாமா, எனோட குரு ராஜேஷ், அவரோட தம்பி கார்த்தி என்கிற சோட்டு, அவனோட நண்பன் விஜயன் என்கிற வில்ஸ் விஜி, எங்க எல்லோருக்கும் பொழுது போக்கே யாரயாவது ஓட்டுறதுதான், யாருமே கிடைகலனா, சில சமயம் எங்கள நாங்களே ஓட்டிகுவோம். அதுலேயும் "வில்ஸ் விஜிய (எப்பயுமே வில்ஸ் சிகரட் கைல வச்சு இருக்கறதால வில்ஸ் விஜி) கலாய்ச்சு மொக்கைய போடுறது எங்க எல்லோருக்குமே பிடிச்ச பொழுதுபோக்கு.

காரணம் என்னான, விஜி ஆளு பக்க ஆருஅடில நம்ம பொன்னம்பலம் மாதிரி இருப்பான், அலுவலகம் போற நேரம் தவிர, மத்த எல்லா நேரமும் ஒரே துணிலதான் இருப்பான், ஒரு அழுக்கு ட்ரவுசர், ஒரு அழுக்கு பனியன், அது உண்மைல என்ன கலர்னு எங்க யாருக்குமே சத்தியமா தெரியாது. அந்த கருமத்த துவைச்சா என்னடான்னு கேட்டா, அண்ணே இப்பதாண்ணே வங்கி ரெண்டு வருசமச்சுனு சொல்லி, சலிக்காம அதயும் போட்டுகிட்டே எங்கயும் வருவான்.

ஒரு சீடி விடாம வாங்கி பக்குரதுதான் அவனோட வேலை, அது என்ன மொழி சீடியா இருந்தாலும், ஆனா விஜி நல்ல புத்திசாலீ, அப்பவே அவன் படிக்குற புத்தகமும் சரி, பாக்குற சீடியும் சரி, பாதி எங்களுக்கு புரியவே புரியாது (சரி..சரி... இப்போ மட்டுமும் நாங்க என்ன ஒபாமாவுக்கு டியுசனா எடுக்க போறோம், இப்பயும் புரியாது தான்).

இப்படியே ஒரு நான் ராத்திரி சாப்பாட்டுக்கு நண்பர்கள் எல்லாம் வழக்கம் போல கீழ உள்ள ஒரு பஞ்சாபி கடைக்கு (அந்த கடை பஞ்சாபி ஆன்ட்டி படு அம்சமா இருப்பதால அந்த கடைக்கு நாங்க வச்ச பேரு "மடிப்பு அம்சா கடை" ) சாப்ட போனோம், தம்பி விஜியும், என்கிட்டே வழக்கம் போல தன் சந்தேகத்த கேட்க எல்லோரையும் மொக்கைய போட்டுகிட்டே வந்தோம்.

நான்: குமார், போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிய என்னடா சொன்ன, இந்த வாரம் கூப்பிட்டதுக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டாரு?

குமார்: இல்ல மாப்ஸ், நொய்டாலிருந்து வந்துட்டு ஒடனே கிளம்புறேன்னு சொன்னாரு, இருங்க பாஸ் போலாமுன்னு நானும் சோட்டும் சொன்னோம்

நான்: சரி, அதுக்கா அவரு கடுப்பனாறு? உண்மைய சொல்லுமா ?

குமார்: அதுக்கு இல்லடா, அவரு இல்ல இல்ல நான் போய் துணி துவைக்கனும்னு சொன்னாரா?

நான்: சரி,

குமார்: நான் சொன்னேன், இதுக்கு எதுக்குங்க முப்பது கிலோமீட்டர் போகணும், இந்தா நாங்க ரெண்டு பக்கெட் புல்லா நனைச்சு வச்சு இருக்கோம், போய் ஆசைதீர துவைங்கனு சொன்னோம், அது தப்பா மாப்ஸ்...

நான்: அது தப்பே இல்லடா, ஆனா அவன் போய் இந்த வாரம் ஆள கூட்டிகிட்டு வந்தா அப்ப வரும் தப்பு தாரை எல்லாம்.

நான்: சரி, தம்பி நீ அந்த தோசை கடை மாஸ்டர்ர என்ன கண்ணு சொன்ன, அவன் ஒம்மேல கடுப்பா இருக்கான்?

சோட்டு: நாங்க சாப்ட போனப்ப, தோசைய நல்லா போடுங்கனு சொன்னதுக்கு, என்க்கேவா, நான் நாலு வருசமா தோசை போடுறேன் தெரியுமான்னு சொன்னாண்ணே.

நான்: நீ என்ன கண்ணா சொன்னா அத சொல்லு ?

சோட்டு: நான் நாலு வருசமாவா இன்னுமா எடுக்க முடியலானு சொன்னேன் அதுக்கு போய் அவன் கடுப்பானா நான் என்னாண்ணே பண்ண முடியும்?

விஜி: அத விடுங்கண்ணே, தினம் நான் கலைல போகும் போது ஒரு பொண்ணு விடாம பாத்தா என்னண்ணே அர்த்தம்?

நான்: நீ கதவ முடிட்டு போகலைனு அர்த்தம்?

விஜி: அண்ணே, அது இல்லானே, நான் ஆபீஸ் போகும் போது பாத்தா?

நான்: ஓ.. அதுவா, இந்த காட்டான் இருக்க ஏரியாலயா, நம்மளும் இருக்கமான்னு பாப்பா போல...

விஜி: இல்லண்ணே...பஸ் ஸ்டாப்லேயும் பாத்தா என்ண்ணே அர்த்தம்?

நான்: இவன் நிக்கிற இந்த பஸ் ஸ்டாப்புல, இனி ஜென்மத்துக்கும் நாம வரக்கூடாதுன்னு அர்த்தம்...

விஜி: போங்கண்ணே, அவ பஸ்ல ஏறியும் திரும்பி பாப்பா தெரியுமா..

சோட்டு-கார்த்தி: வேணாம் விஜி "டெல்லியில் இளம்பெண் தற்கொலைன்னு "தினத்தந்தில" வர காரணமா ஆகிராத...

குமார்: தம்பி அவனுக்கு பொறாமை, யு கேரி யான்...

நான்: அது தம்பி, ஒரு வேலை நீ அந்த பஸுல ஏரூறியான்னு பாக்கத்தான்...

விஜி: ஆமாண்ணே, அதுக்கு என்ண்ணே அர்த்தம், ஓர் வேலை நானும் அந்த பஸ்ல ஏரூனா...

நான்: அவ பாத்ததும், அதுக்கு தாம்மா, ஓர் வேலை நீயும் அந்த பஸ்ல ஏரூனா, அடுத்த நாளிருந்து அவ வேற பஸ்ல போக வேண்டி இருந்து இருக்கும் ...

விஜி: போங்கண்ணே,உங்களுக்கு ஒன்னுமே தெரியல, அதுனால நான் உங்களுக்கு குடுத்த "டாக்டர் மத்தர்பூதம்" பட்டத்த திரும்ப வங்கிக்கறேன்.

இப்படியாய் மொக்கைய போட்டுக்கிட்டு சாப்டு முடிச்சிட்டு திரும்ப வந்துகிட்டு இருந்தோம், வர்ற வழியல விஜி ஒரு சீடி கடைல போய் புது சீடி ஏதாவது இருக்கனு பாக்க நாங்க எல்லாம், பேசிகிட்டே முன்னடி நடந்தோம், தம்பி விஜி சீடியோ, பீடவோ வாங்க பணம் கம்மியா இருக்க, அண்ணே ஒரு ரூபா இருந்தா குடுங்கன்னு சொல்லிக்கிட்டு பின்னாடி ஓடி வர, எங்களுக்கு முன்னாடி வந்த வேற யாரோ தமிழ் மக்கள், இவன் உருவத்தையும், அழுக்கு துணியையும் பாத்துட்டு, ஐயோ பாவம்னு சொல்லிகிட்டு ஒரு ஒருருபா காச இவன் கையல வைக்க, நாங்க திரும்பி பாக்கவும் சரியா இருந்தது.

ஒரு விநாடி நாங்க எல்லாம் (விஜியும் சேத்து) அதிர்ச்சி ஆனாலும், நடந்தத யூகிச்சு, சிரிச்சா ...இன்னைக்கும் விஜினு சொன்ன நாங்க எல்லோரும் நினைச்சு சிரிக்க முடியுற ஒரு நிகழ்சி அது.

Monday, May 11, 2009

டெல்லி பாகம்-I - "ராஜஸ்தான் ரயிலில் ரவுசு"

முகு: இந்த பதிவில் உள்ள படங்களுக்கும், பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், சும்மா...! ஒரு கண் குளிர்சிக்காகவும், ராஜஸ்தான் "எபெக்ட்டுக்காகவும்" தான்.

நண்பர்களோட டெல்லில தங்கி வேலை பார்த்த நேரம் அது, ஒரு நண்பனோட அக்காவுக்கு ரெட்டை குழந்தை பிறந்து இருந்தது, அவுங்க கணவரோட பணி விமான படை தலமான ஜோத்பூர், அது நமக்கு டெல்லில இருந்து பக்கம் என்பதால், நண்பர்கள் எலோரும் ராஜஸ்தான் போக ஒரு பிலான் போட்டோம்.

நானும் என் நண்பர்கள், குமார், ஜான், சுரேஷ் என்கிற சுச்சு மாமா, என்னோட குரு ராஜேஷ், அவரோட தம்பி கார்த்தி என்கிற சோட்டு, அவனோட நண்பன் விஜயன் என்கிற வில்ஸ் விஜி, எலோரும் புறப்பட தயார் ஆனோம். இதில் ராஜேசும், விஜியும் தான் நல்லா ஹிந்தி பேசுவாங்க, மத்த நாங்க எல்லாம் தத்தி.

("அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை பரப்பும் நாட்டுபுற நடன மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை தொலைத்தது யார்?")



நம்ம கலாச்சாரம் மாறாம டிக்கெட் எடுக்குறதுக்கு முன்னாடியே சரக்கு, தம் எல்லாம் வாங்க போனோம்.

அதுவும் நம்ம பண்பாடு "நாலு பேரும் ஒன்னா பாருக்கு போனாலும், ஆளாளுக்கு ஒரு சரக்கும் மிக்ஸ்சிங்கும் வாங்க வேண்டும் என்பது தானே!, அந்த முறையை காப்பாத்த நாமும் ஆளாளுக்கு ஒரு சரக்கும் மிக்ஸ்சிங்கும் மறாக்காம தனித்தனியா தம் வாங்கியாச்சு.

வீட்டுக்கு வந்து ஆளுக்கு ஒரு ரவுண்டு முடிச்சிட்டு, மிக்ஸ்சிங் மாறாம கோக், சோடான்னு ஒரு ஆறு இரண்டு லிட்டர் பாட்டில் முழுவதும் எடுத்தாச்சு. இதுல சைடிஷ் வேற ஒரு பத்து பாக்கெட்.

இப்படியே போய் ஒரே பெட்டில இருக்க எட்டு சீட்டையும் வாங்கி ஒரு வழியா ரயில் புறப்பட்டாச்சு.

பொது நல நோக்கோட ஜான் மேல இருந்த ரெண்டு சீட்டுக்கும் நடுவுல ஒரு துண்ட கட்டி அதுல எல்லா சைடிஷ்சையும் கொட்டி ரவுண்டு கட்ட ஆரபிச்சோம், அப்பத்தான் டெல்லில ரயில்ல தம் தண்ணி அடிக்க கூடாதுன்னு சட்டம் வந்த புதுசு.

ரிஸ்க் எடுக்குறதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு உங்களுக்கு தெரியாதா என்னா?

இப்படியே ஒரு மூணு ரவுண்டு போச்சு, நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு.

சுச்சு மாமா ஒரு கைல கிளாஸ் இன்னொரு கைல தம்மோட, இயற்கைய ரசுச்சுகிட்டே குடிக்க போறேன்னு சொல்லி தொலைக்க, உடனே ஜானும் சேர்ந்துகிட்டு போய் கதவை திறந்துகிட்டு நின்னாக நம்ம மக்க.

நானும் நாலு ரவுண்டு மப்புல, மேல் சீட்ல ஒக்காந்துகிட்டு எதிர் சீட்ல கால நீட்டி மட்டை ஆகி இருந்தேன்.

மத்த மக்க எல்லாம் மப்புல அமரிக்க பொருளாதாரம் மற்றும் இந்திய முன்னேற்றம் பற்றி மும்பரமா பேசி, இல்ல இல்ல கத்திகிட்டு வந்தாங்க (சுத்தமான பீட்டர் மொக்கை).



திடீன்னு பொத பொதன்னு போலீஸ் ரெண்டு பக்கமும் வந்தாங்க, வந்தவுன்ன என்ன பாத்து ஒரு போலீஸ் "நீச்சே உட்டாவ் வ் வ் வ் னு" (கீழ இறங்குன்னு) கத்தினார்.

நானும் சுதாரிச்சு கீழ இறங்க போன போது நடுவுல இருந்த துண்டை அவரு துப்பாக்கியால தட்டி விட்டாரு, உள்ள இருந்த சரக்கு, தம், மிக்ஸ்சிங்ன்னு மொத்தமா கீழ விழ, அத பார்த்தவுடன் அவருக்கு பெரிய அதிர்ச்சி.

"சாலா பூரா பார் கோல்தியா கியா" (மச்சான் முழுசா ஒரு பார் திறந்து வச்சு இருக்கியா)னு கேட்டு ஒரு அறை விட்டான் பாருங்க...! அடிச்ச மப்பு தெளிஞ்சு கண்ணுல வட்ட வட்டமா நச்சதிரம் பறந்தது எனக்கு.

உடனே நம்ம குரு ஹிந்தில எதோ சொல்ல அவருக்கு ஒரு அறை, ஒரே கலவரமா போச்சு.

அப்புறம் நம்ம போலீஸ் எல்லோருடைய பொருளையும் செக்பண்ணி டிக்கெட், லேப்டாப், பாஸ்போர்ட், மொபைல் எல்லாம் எடுத்துகிட்டு எங்கடா போறீங்க நீங்க தீவிரவாதியான்னு கேட்க?

நம்ம கூட்டத்துல எதோ ஒன்னு "அண்ணே நம்ம தீவிரமா வெளிநாட்டு வேலை தேடுரவாதின்னு கூட தெரியமா நம்மள போயி தீவிரவாதியான்னு கேட்குது பாருங்க!

இவரு சிறப்பு போலீஸ் இல்லண்ணே, சிரிப்பு போலீஸ் போல நீங்க அவரோட ஐ.டி கார்ட் செக் பண்ணுகண்ணே-ன்னு மப்புல சின்னபுள்ள தனமா சொல்லி தொலைச்சுருச்சு.

அவ்வளவுதான் அந்த போலீஸ் செம காண்டா ஆகிட்டாரு.

உடனே எல்லோரும் கிளம்பு அடுத்த ஸ்டேஷன்ல இறங்குங்க ரயில்வே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உங்கள ஒப்படைகிறேன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் வழக்கம் போல நம்ம சிரிப்பு ஸாரி, சிறப்பு போலீஸ், அப்டியே கூட்டிகிட்டு போய் கழிவறை பக்கத்துல நிக்க வச்சு வழக்கம் போல கதையை ஆரமிக்க, அந்த கடமை தவறாத "அலைக்ஸ் பாண்டியன்" சரி, சரி, நீங்க எல்லாம் படிச்சா பசங்க, போலீஸ் கேஸ் எல்லாம் உங்களுக்கு வேணாம், ஆளுக்கு ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போங்கன்னு நல்ல ஒரு தீர்ப்பை சொன்னாரு.

நாங்களும் ஆளுக்கு ஆயிரம் ரூபாயா யா யா யா...ஐயோ ...ஐயோ ...எங்ககிட்ட மொத்தமே ஆயிரம் ரூபா தாங்க இருக்கு சொன்னோம்.

அதையும் விடாம வாங்கி கொண்டு, சரி எல்லா பாட்டிலையும் கழிவறைல போய் கொட்டுங்கன்னு சொல்லிட்டு, கொஞ்சம் பெரிய மனசோட யாராவது இன்னும் குடிக்கனும்னா கழிவறை உள்ள போய் குடிங்கன்னு அனுமதி வேற கொடுத்தாரு.

எல்லாம் பயத்துல ஒருத்தர் முகக்தை ஒருத்தர் பார்க்க, நானும் நம்ம குரு ராஜேசும் மட்டும் கன்னத்துல கைய வச்சுக்கிட்டு "தென் பாண்டி சீமைல தேரோடும் வீதில மான் போல வந்தவனே யார் அடிச்சாரோன்னு" ரயில் பேக்ரவுண்டு எபெக்ட்ல பாட்டு கேட்க கழிவறைக்குள்ள போய் முடிச்ச வரை ஒரே மூச்சுல குடிச்சுட்டு வந்தோம்.

(அடி நாங்கதான வாங்குனோம்).

ஒரு வழியா எல்லா பிரச்சனையும் முடிஞ்சு எல்லோரும் அவரவர் சீட்டுல போய் படுத்தோம். போகும் போதே அடி எப்படின்னு நம்ம மக்களோட அக்கறையான விசாரிப்புவேற!.

எல்லாம் போய் படுத்தோமே தவிர ஒருத்தனும் தூங்கல, எப்படா ராஜஸ்தான் வரும்ன்னு பாத்துகிட்டு இருந்தோம்.



திடீன்னு திரும்ப எங்க பெட்டில லைட்டை யாரோ போட தட, தடன்னு எல்லோரும் எழுந்து பாத்தோம், யாரோ ஒருத்தர் நின்னுக்கிட்டு இங்க எதாவது பிரச்சனையான்னு கேட்டார்.

நாங்களும் வேற எவனோ திரும்ப பணம் கேட்க வந்துட்டான்னு, ஒன்னும் இல்ல எல்லாம் முடிஞ்சதுன்னு சொன்னோம்.

உடனே அவர் பயப்படாதீங்க நான் "ரயில்வே சி.பி.சி.ஐ.டி" இங்க பாதுகாப்புக்கு வந்த போலீஸ் உங்ககிட்ட பணம் லஞ்சம் வாங்கியதாக எனக்கு தகவல் வந்தது அது உண்மையாய் இருந்தால் நான் உங்களுக்கு அந்த பணத்தை திரும்ப வங்கி தர முடியும்னு சொன்னாரு.

நாங்களும் இழந்த குசி திரும்ப வர எல்லா விசையத்தையும் அவரிடம் சொன்னோம். உடனே அவர் போய் டி.டி.ஆரை அழைத்து வந்தார், அவரும் தன்னிடம் இருந்த தாள்களை சரி பார்த்து அந்த போலீஸ் நம்பர் பற்றிய தகவல்களை எல்லாம் சொன்னார்.

உடனே நம்ம சி.பி.சி.ஐ.டி உடனே யார் யாருக்கோ மொபைல்ல போனை போட்டு காரசாரம பேசுனாரு.

ஒரு அஞ்சு நிமிடத்தில் நம்மகிட்ட பணம் வாங்கின அலக்ஸ் பாண்டியன் கோபமா வந்தாரு, வந்த வேகத்துல என்னென்னவோ கத்திக்கிட்டு, எங்க உடமைகளை எல்லாம் எடுத்தாரு உடனே டி.டி.யாரும், சி.பி.சி.ஐ.டி-யும் அவரை தடுத்து, இதை செய்ய உங்களுக்கு உரிமையில்லை.

அவர்கள் குடித்தால் நீங்கள் டி.டி.யார் - கிட்ட தான் சொல்ல முடியும் தவிர, மற்ற படி ஓடும் வண்டியில் அவர்களை அடிக்கவோ பணம் வாங்கவோ உங்களுக்கு உரிமையில்லை.

இப்போது நீங்கள் அவங்களுக்கு ஓடும் ரயிலில் குடித்தற்க்கான ஒரு "சார்ஜ் சீட்" கொடுங்கள், ஆனால் நீங்கள் அதற்கான சாட்சியாக அவர்கள் குடித்த பாட்டிலை சமர்பிக்க வேண்டும்.

நானும் உங்கள் மேல் ஓடுகிற ரயிலில் பயணியை அடித்தது மற்றும் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்கான "சார்ஜ் சீட்" கொடுக்கிறேன்னு ஒரு பிட்ட போட போலீஸ் இன்னும் காண்டகிட்டார்.

அப்புறம் ஒரு சில நிமிடத்தில் நம்ம பணம் கைக்கு வந்து விட்டது, நாங்களும் நிம்மதியாக ராஜஸ்தான் போய் சேர்ந்தோம்.

அடுத்த நாள், எப்படி அந்த போலீஸ் நம்ம சீட்டுக்கு மட்டும் சரியா வந்ததுன்னு யோசிச்சு நாங்க மொக்கைய போட்டுக்கிட்டு இருந்த போதுதான் சுச்சு மாமா ஒரு உண்மைய சொல்லுச்சு.

இந்த மக்க ஓடும் வண்டியில் கதவை திறந்துகிட்டு நின்றபோது அந்த வழியாக வந்த போலீஸ் அவர்கள் கையில் இருந்த தம்மை கீழ போட சொல்லி ஹிந்தில சொல்ல, நம்ம மக்க அவரை பார்த்து "வி டோன்ட் நோ ஹிந்தி-னு" பீட்டர் விட அவரும் கடுப்பாகி பக்கதுல வந்து பார்த்த போதுதான் சரக்கு மேட்டார் அவருக்கு தெரிஞ்சு இருக்கு.

அவரும் வேறு எதோ கேட்க போய், நம்ம மக்கள் விடாம பீட்டர் விட்டு "டாக் டு அவர் பிரெண்ட்ஸ்னு" எங்க சீட்டை கைய காட்டி இருக்குதுக பக்கிக.

அது ஒரு அழகிய நிலாக்காலம்.

இதை விட, டெல்லியில் வில்ஸ் விஜியோட "ஒரு ருபா பிச்சை" கதை ஒன்னு இருக்கு, அந்த மேட்டரோட உங்களை "நெக்ஸ்ட் மீட் பண்றேன்".

நன்றி!.
 

Blogger Widgets