தலைப்பை பார்த்த உடன், உங்களுக்கு இது எப்படி பட்ட பதிவு என்று புரிந்து இருந்தாலும், இங்கு மீண்டும் சொல்ல வேண்டியது என் கடமை.
என் எழுத்தில் ஆபாசம் இல்லை என்று நினைத்தாலும், உங்கள் பார்வைக்கு சம்மந்தபட்ட படத்தில் இருக்கலாம் என்பதால், விரும்பாதவர்களுக்கு இந்த பதிவில் இருந்து விடுமுறை (குறிப்பாக சகோதரிகளுக்கு).
பள்ளிக்கு விடுமுறை விட்டாலும் பின்னூட்ட திடலில் வந்து, யாரும் என்னை கபடி ஆடக்கூடாது.
அட யாரும் திட்டாதிங்கப்பான்னு, இதுக்குமேல எப்படிப்பா சொல்ல முடியும்.
கற்காலத்தில் ஆடைகளின்றி காடுகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த மனித இனம், படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உடை, உணவு, இருப்பிடம், உறவுமுறை என்று நாகரிகத்துக்கு மாறினாலும், வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியில் மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே செல்வான்.
அதாவது பர பரப்பான, நகர வாழ்கையை விட்டு விலகி ஓய்வுக்காக கடற்கரை, காடுகளை நாடி விடுமுறைக்கு, அல்லது வேலை ஓய்வு பெற்ற பின் மிச்சமுல்ல வாழ்கையை அமைதியாக நடத்த விரும்பி செல்ல ஆரமிப்பதே இதன் ஆரம்பம்.
என்பதை, எங்கோ, எப்போதோ படித்தது எனக்கு நினைவில் இருந்தாலும், இந்த விசையத்தை படித்த போது, அது உண்மைதான் என்று நினைக்க தோன்றியது.
அப்படி என்ன கருத்து இது?
திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செய்யும் நாம், வாரத்தில் ஒரு நாள் வெள்ளி மட்டும் அலுவலக உடை (Formal Dresse) இல்லாமல் நமக்கு பிடித்த இதர உடை(Casual Dress) அணியமுடியும் இல்லையா.
ஆனால் உடையே இல்லாமல் நினைத்து பார்க்க முடியுமா? அதாவது "நிர்வாணமாக" அலுவலகம் செல்ல முடியுமா என்றால்?
நீங்கள் என்னை எப்படி பார்ப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் அதை உண்மையாக்கி இருக்கிறார் ஒரு தனியார் விற்பனை அலுவலகத்தின் தலைமை நடத்துனர் "டேவிட் டயலோர்" என்பவர்.
ஆம், அந்த அலுவலகத்தின் நிறுவனதலைமை நடத்துனர் "டேவிட்" தன் தொழிலாளர்களை "நிர்வாணமாக" அலுவலகம் வர அனுமதி கொடுத்து தன் பணியாளர்களை (இன்ப) அதிர்ச்சிக்கு உள்ளாகினார், இதன் மூலம் தன் பணியாளர்களை வேலை திறன் மற்றும் கூட்டு நடவடிக்கை அதிகரிக்கமுடியும் என்ற எண்ணத்தோடு, ஒரு நாள் மட்டும் தன் பணியாளர்களை நிர்வாணமாக அலுவலகம் வர அனுமதித்தார்.
ஆனால், அவரே ஆச்சரிய படும் வகையில்! அந்த அலுவலக மக்கள் அவரின் "நிர்வாணவெள்ளி" திட்டத்தை வரவேற்று ஆதரவு கொடுக்க, வியக்கதக்க வகையில் அதனால் அவர்கள் தொழிலும் பெரும் வளர்ச்சியை கொடுத்துள்ளது.
நிதி நெருக்கடியில் இருந்த தன் நிறுவனத்தை காப்பாற்ற, பல தரப்பட்ட விளம்பர முயற்சியை பற்றி சிந்தித்த அவர், தன் அலுவலக பணியாளர்கள், துணிகளை களைவதன் மூலம் தங்கள் மனதில் இருக்கும் அழுக்கான சிந்தனைகளையும் களைந்து விட்டு, ஒருவருக்கொருவர் "திறந்த மனதுடன்" வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசிக்கொள்ள இது உதவும் என்றார். இதனால் வேலைத்திறன் அதிகரிக்கும் என்பது அவர் நோக்கம்.
மேலும் அவர் ஆடைகளைகளைந்து விட்டு அலுவலகம் வர அழைத்துதான், இது வரை தான் கையாண்ட வியாபார யுக்திகளில் உச்சகட்டமான யுக்தியாகும் என்றார்.

இது கேட்பதற்க்கு விந்தையாக இருந்தாலும், இது தான் எதிர்பார்த்த பலனை கொடுத்துவிட்டது என்றும், இது வார்தைகளில் விவரிக்க முடியாத தன்னைதானே மற்றும் மற்றவர்களை நம்பும் முகபாவ உணர்ச்சியாகும் என்பது அவர் கருத்து.
இனி இதற்காக அவர்கள் கையாண்ட முறைகள் மற்றும் பயிற்ச்சிகள்.
அநேகமாக அலுவலகத்தில் அனைவரும் ஆடைகளை இல்லாமல் வந்தாலும், ஒரு ஆணும், ஓர் பெண்ணும் மட்டும் சிறிய கருப்பு நிற உள்ளாடையோடு வந்தார்களாம்.
அழகிய இருபத்தி மூன்றுவயது, திருமணமாகாத "சாம் ஜாக்சன்" என்ற இளம் பெண் முழுவதும் நிர்வாணமாக வந்துள்ளார், இது பற்றி அவர் கூறுகையில் "அது ஒரு புத்திசாலிதனாமான எண்ணம்", ஏன் என்றால்? நாங்கள் ஒருவரை ஒருவர் பிறந்த மேனியாக பார்க்க முடிந்ததால், இப்போது எங்களுக்குள் உடல் வடிவமைப்பை பற்றி எந்த ஒளிவு மறைவும் கிடையாது என்றார்.
மேலும் இப்படித்தான் வரவேண்டும் என்று எங்களுக்கு எந்த நிர்பந்தமோ, நெருக்கடியோ எங்கள் நிர்வாகம் கொடுக்கவில்லை, எங்கள் விருப்பபடி முழு உடையுடனோ அல்லது உள்ளாடையுடனோ வந்திருக்க முடியும், ஆனால் நான் முழு நிர்வாணமாக வருவதயே விரும்பினேன், என் உடல் ஒன்றும் அவ்வளவு பார்க்க முடியாத வடிவத்தில் இல்லை என்று நினைக்கிறேன் என்றார், அந்த அழகு மங்கை.
மேலும் நாங்கள் அனைவருமே அழகானவர்கள், எங்களிடம் உடலில் பெரிது, சிறிது என்ற அளவு வித்யாசத்தை தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை என்பது அவர் கருத்து.
ஒரு வார காலத்திற்கும் மேலாக அந்த அலுவலக பணியாளர்கள் "நிர்வாண வெள்ளி" திட்டத்துக்காக பயிர்ச்சி எடுத்துக் கொண்டார்களாம்.
முதலில் அவர்களை அவர்கள் உடல் உறுப்பை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டதாம், உடன் வேலை பார்த்தவர்கள் கைகளையும், கால்களையும் ஜெராக்ஸ் எடுத்தாலும், "சாம் ஜாக்சன்" தனது மார்பகத்தை ஜெராக்ஸ் எடுத்தாராம்.
அதன் பிறகு அவர்கள் ஒரு நிர்வாண மாடல் பெண்ணின் உடலை வரைந்து, அந்த பெண்ணின் உடலமைப்பை பற்றிய அவள் எவ்வாறு உணர்ந்தாள்? என்ற கருத்தை கேட்டு புரிந்து கொண்டார்களாம்.
இறுதியாக அவர்கள் பிறந்த மேனியாக அலுவலகம் வர கேட்டுக்கொள்ள பட்டார்களாம், ஆனால் அவ்வாறு வர அவர்கள் விரும்பினால் மட்டுமே தவிர வேறு எந்த கட்டாயமும் இதில் இல்லை.
முதலில் கூச்சப்பட்ட சாம் இது பற்றி சொல்கையில்.
எங்களை மனம், உடல் ரீதியாகவும் தயார்படுத்தி உற்சாகப்படுத்த, டேவிட் தன் முழு ஒரு வார காலத்தை செலவிட நேர்ந்தது என்றார். முதன் முதலில் அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, ஒரு தயக்கமும், வெக்கமும் இருந்தாலும், என் இருக்கைக்கு சென்று அமர்ந்து என் வேலைகளை பார்க்க ஆரபித்தவுடன், நான் எந்த தயக்கமும் இல்லாமல் உற்சாகமாகவே உணர்ந்தேன் என்றார்.
நான் என் ஆடைகளை களைந்து விட்டு வர ஒரு காரணமும் இருந்தது, இது உணர்ச்சிகரமாக இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக பேசிக்கொள்ள உதவியது, மேலும் அதன் பின் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி அதிவேகமாகிவிட்டது என்பதில் எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி என்றார்.
அந்த நிறுவனத்தின் நாற்பது வயது தலைவர் "மைக் ஓவென்" கூறுகையில், நாங்கள் பைத்தியமோ அல்லது முட்டாளோ! ஆனால் நான் மிக தெளிவாக அனைவரிடமும் சொல்லியது, இதில் எந்த கட்டாயமும் இல்லை, மேலும் உங்கள் "மனதுக்கு சரி" என்று பட்டால் மட்டும் செய்யுங்கள் என்பதே.
ஒரு ஆக்கபூர்வமான நிறுவனமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித தயக்கமோ பயமோ இல்லாமல் சேவை செய்ய முடிந்தது, இதை இரண்டு தொலைகாட்சி சேனல்கள் ஒலிபரப்பி, எங்கள் நிறுவனத்துக்கு மேலும் விளம்பரத்தை தேடிதந்தன என்றார்.
மேலும் இந்த முறையை தான் வியாபாரத்தில் புதுமையை விரும்பும் அனைவருக்கும் சிபாரிசு செய்வதாக சொன்னவர், இது "செக்ஸ் இல்லை" என்றார். நீங்கள் உங்கள் வியாபாரத்தில் புதுமையை புகுத்தும் போது, அது புத்துணர்ச்சியையும் சந்தோசமாக வேலை செய்யும் திறனையும் அதிகரிக்கும், இதையே நாங்கள் எதிர்பார்த்தோம் என்றகிறார்.
நான் (இது நான் சிங்கக்குட்டி) கூட, சமீபத்தில் இதே போல வேறு சில செய்தியைகளை படித்தேன்.
(I)- ஒரு நட்சத்திர விடுதி நிறுவனம் தங்கள் வியாபாரத்தை பெருக்க, ஒரு சில தளங்களை நிர்வாண பகுதியாக அறிவித்து இருக்கிறது, அதாவது அந்த பகுதியில் விடுதியில் தங்குபவர்கள் முதல் விடுதியில் வேலை செய்பவர்கள் வரை அனைவரும், உடைகள் எதுவும் இல்லாமல் பிறந்த மேனியாக உலாவ முடியும், மேலும் இத்திட்டதின் மூலம் அவர்கள் வியாபாரம் அதிக அளவில் பெருகி, முன் பதிவும் வருட கணக்கில் முடித்து விட்டதாம்.
(II) - தங்கள் திருமணத்தை பிறந்தமேனியாக நடத்தவே பலர் விரும்புவது, சிலர் செய்தும் காட்டி விட்டார்கள் இந்த புதுமையை (கொடுமையை)அதில் சில ஜோடிகள.


ஆக மொத்தத்தில் இது காலத்தின் "பரிணாம மாற்றமா?" அல்லது "கலி காலத்தின் கொடுமையா!" என்று எனக்கு புரியவில்லை, இதற்கு வரும் தலைமுறைகளுடன் சேர்ந்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
வெளி நாட்டுல என்னென்ன கொடுமை எல்லாம் நடக்குது பார்! என்று தங்கமணியிடம் காட்ட, சும்மா மத்த நாட்ட மட்டுமே குறை சொல்லாதிங்க.
இதுக்கு ஏன்? அவ்வளவு தூரம் போகணும், இதோ நம்ம நாடு கொல்கத்தாவில் நடந்த ஆடை அலங்கார போட்டிக்கு, நம்ம மந்த்ரா பேடி எப்படி "திறந்த மனதோடு" வந்து இருக்காங்க பாருங்கன்னு இந்த படங்களை காட்ட...!




வாயடைத்து போன நான் தங்கமணியிடம் கேட்டது...ஆடை அலங்கார போட்டி சரி!, ஆனா ஆடை எங்கமா?
மொத்தத்துல ஒன்னே ஒன்னு மக்களே, இதெல்லாம் பாத்துட்டு நானும் புதுமை பண்றேன்னு வர்ற வெள்ளிகிழமை அலுவலகத்துக்கு இது மாதிரி நீங்க போக முயற்சி பண்ணுனா! அதில் வரும் பின் விளைவுகளுக்கு நானோ, இந்த பதிவோ பொறுப்பில்லைங்க.
நன்றி! திரும்ப மீட் பண்ணுவோம்.