
இந்த வரம்தரும் தேவதையை என்னிடம் அனுப்பி, என்னை இந்த பதிவை எழுத அழைத்த மேனகாவுக்கு என் நன்றி.
எல்லோருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும், அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்!.
அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக, உங்கள் கண் முன்னாடி "ஏஞ்சல் எனும் தேவதை" வந்து உங்களுக்கு பத்து வரங்கள் தருகிறது. நீங்கள் என்ன, என்ன வரம் கேட்பீர்கள்?
இதோ தேவதையிடம் என் வரங்கள்.
முதல் வரம் : பத்து வரங்களையும் கேட்ட பின் "இன்னுமா இந்த உலகம் "ஏஞ்சல் தேவதை-யை" நம்புகிறது என்று சொல்லக்கூடாது.
இரண்டாவது வரம் : என் பிறப்பின் பலனை முழுதாக அடைந்து, நான் யார் என்று எனக்கு புரிய வேண்டும்.
மூன்றாவது வரம் : இனி ஒரு பிறப்பில்லாத மோட்சத்தை அடைய வேண்டும்.
நான்காவது வரம்: துரோகம் என்ற வார்த்தையும் செயலும் மனிதனுக்கு மறந்து போக வேண்டும்.
ஐந்தாவது வரம் : சண்டை போடும் இரு தரப்பை தவிர மற்ற யாரையும் எந்த ஆயுதமும் கொள்ளக்கூடாது, போர் வீரனின் தற்காப்பு ஆயுதம் தவிர மற்ற அணு ஆயுதங்கள் அனைத்தும் அழிந்து போகவேண்டும்.
ஆறாவது வரம் : உலகின் அத்தனை போதை வஸ்துக்களும் அழிந்து போகவேண்டும்.
ஏழாவது வரம் : தன் மனைவி, கணவனை தவிர மற்ற அனைவரும் மனித மூளைக்கு சகோதரி சகோதரனாக மட்டுமே தெரியவேண்டும்.
எட்டாவது வரம் : மனிதனாய் படைத்த பணம் மனிதனை அடிமை படுத்தாமல், மனிதனிடம் அடிமையாய் இருக்க வேண்டும். ஆக தன் உழைப்பும் அதில் நேர்மையாக கிடைக்கும் பலனும் மட்டுமே உண்மை, என்று எல்லா மனித மனதிற்கும் புரியவேண்டும்.
ஒன்பதாவது வரம்: அன்பே கடவுள் அறிவே தெய்வம், மற்ற அனைத்தும் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் உள்ள "மாயை" என்று பிறக்கும் போதே புரியவேண்டும்.
பத்தாவது வரம் : பிறக்கும் போது பிறவிகடமை என்னும் பாவத்துடன் அழுதுகொண்டே பிறக்கும் மனிதகுலம், எந்த நோய் நொடியும் இல்லாமல், இறக்கும் போது வந்த கடமை அனைத்தும் முடித்த சந்தோசத்தில் சிரித்துக்கொண்டே இறக்க வேண்டும்.

ஆக, என் கடமை முடிந்து. இப்போ இந்த தேவதையை வேறு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பனும், கீழே அவர்கள் பெயரை சொடுக்கி அவர்கள் பக்கத்திற்கு செல்லவும்.
1.கிரி
2.ரஹ்மான்
3.கோவி.கண்ணன்
4.பழனியிலிருந்து சுரேஷ்