Friday, May 6, 2016

இந்து ஒரு மதமல்ல

வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி.

தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்லது என் மதத்தை பற்றி இங்கு குறை ஏதாவது இருக்குமா என்ற மதவாத தேடலோடு நீங்கள் இந்த பக்கத்திற்கு வந்து இருந்தால், மன்னிக்கவும் இது உங்களுக்கான பக்கமோ, பதிவோ இல்லை அதனால் உங்கள் நேரத்தை இங்கு வீணடிக்க வேண்டாம் .

இந்து மதம் அல்லது இந்து சமயம் (Hindu or Hindu Religion) என்றுதான்  பொதுவாக இப்போதெல்லாம் பேசப்படுகிறது, அது உண்மையல்ல மதம் சார்ந்த வார்த்தைகள் இடையில் வந்தவர்களால் திணிக்கப்பட்ட ஒன்றுதான்.

உண்மையில் இந்துவத்துவம் (Hinduism) என்பது ஒரு கலாச்சாரம் (Culture) மற்றும் அதுவே அவர்களின்  பாரம்பரியம் (Tradition) என்று சொல்லும் ஒருவரின் காணொளியை சமீபத்தில் எதார்த்தமாக கேட்க நேர்ந்ததின் பிரதிபலிப்பே இதை என்னை எழுத தூண்டியது என்பதுதான் உண்மை  

ஒரு பொதுவான இடத்தில நம்முடைய பெயரை கொண்ட யாரையோ வேறு யாரோ ஒருவர் அழைக்கும் போது, நாமும் நம்மையறியாமல் திரும்பி பார்ப்பது போல, இது என்னுடைய கலாச்சாரம் பற்றி பேச பட்டதால் என்னையறியாமல் மனம் அதனுள் நுழைந்தது.


இடையில் வந்த மதம் கொண்ட மனிதர்கள் இந்துவத்துவம் என்பதையும் மதம் என்று நினைத்து அப்படியே பேச, எழுத காலப்போக்கில் நமக்கும் இந்து மதம் என்றே மனதில் பதிந்து விட்டது.

இது எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் பின்பற்றும் மனதை காயப்படுத்த சொல்லவில்லை, காரணம் அப்படி அவர்கள் நினைத்ததில் அவர்கள் தவறும் எதுவும் இல்லை.

மதம் என்பது ஒரு சாரத்தின் அடிப்படை கொள்கைகளை ஒன்றாக்கி அது சார்த்த மக்களை நல்வழியில் நடத்த ஒருவர் துவக்கியதாகவும், அதை விரும்பி ஏற்றுக்கொண்டு அந்த கொள்கைகளை (Protocols) பின்பற்றிவர்களுக்கும் சொந்தமான ஒரு சொல்லாகும்.

இதில் கவனிக்க வேண்டியது, அப்படி ஒரு மார்கத்தில் செல்லும் போது அவர்களுக்கு தெரியும் நாம் எங்கிருந்து, எதற்காக, எங்கு செல்கிறோம் என்று. உதாரணமாக, கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது.

அதாவது சித்தார்த்த கௌதமர் என்ற தனி ஒரு மனிதன், தனது சொந்த முயற்சியாலும், அனுபவத்தாலும் உருவாக்கப்பட்ட வழியாகும் பௌத்தம், அதை அடிப்படையாக கொண்டு உருவானது பௌத்த மதம் அல்லது புத்த மதம் .

பௌத்த மதம் (Buddhism) முதன் முதலில் இந்தியாவில் தான் தோன்றியது,  எனவேதான் இன்றும் புத்த மதத்தின் தாய்நாடு இந்தியா என்றும் அது இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.

இப்படி பல இடங்களில் பல நல்ல மகான்கள் பல தத்துவங்களையும் பல சமயங்களையும்  உருவாக்கி இருக்கிறார்கள்.

எல்லாச் சமயங்களும் பணிவு, இரக்கம், பெருந்தன்மை, அன்பு என்று ஒரே நீதியையே போதிக்கின்றன, ஆனால் அதை அவர்கள் வாழ்ந்த, வாழும் பகுதி மற்றும் பழக்கத்தை பொருத்து அந்த பகுதி மக்களுக்கு புரியும் விதவிதமான சொற்களுடன், விதவிதமான பெயர்களைக் கொண்டு, விதவிதமான  உதாரணம் மற்றும் குறிகளைப் பயன்படுத்தி தங்கள் சமயங்களை விளக்குகின்றனர். 

இந்த வகையில் வந்த யாருமே எனக்கு தெரிந்து மற்ற சமயங்களைத் தவறு எனக் கூறுவதில்லை, இவ்வளவு ஏன், அவர்கள் யாருமே தங்களை கடவுளின் மகனாகவோ, கடவுளின் தூதுவராகவோகூடப் பிரகடனம் செய்து கொண்டதில்லை.

இடையில் வந்த தரகர்கள் மதத்தின் பெயரால் தவராக மக்களை ம(த)ன மற்றம் செய்ததின் விளைவே இன்று மக்கள் மனத்தால் மதத்தால் வேறுபட்டு இருகின்றனர் .


மக்கள் குறுகிய மனப்பான்மையோடு தங்கள் வழியுடன் மட்டும் ஒட்டிக்கொள்ளும் போதுதான், மற்ற சமயங்களை சகித்துக்கொள்ள முடியாமல், தன் வழி தான் சரி என்ற பெருமையும், தான் சொல்வது தான் சரி என்ற பிரிவினையும் வந்தது.

சரி, இதில் இந்து கலாச்சாரம் என்ன சொல்கிறது? அல்லது இவற்றில் இருந்து எவ்வாறு வேறு படுகிறது என்று ஒரு கேள்வியை யாரேனும் இந்த இடத்தில் வைக்க கூடும்.

உண்மையில் இந்து பாரம்பரியம் எதுவுமே சொல்லவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இதை நான் என் நம்பிக்கைக்காக மட்டும் சொல்லவில்லை, முதலில் இந்துவத்தில் மதத்திற்கு அடிப்படியான எந்த கொள்கைககளும் இல்லை, இதில் எந்த வரைமுறைகளும் இல்லை, இதுதான் கடவுள், இதைதான் படிக்கவேண்டும், இப்படிதான் பிராத்தனை செய்யவேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.

அப்படி ஏதாவது எங்காவது இருந்தால் அது மேலே சொன்னபடி இடையில் வந்த தரகர்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும்.

இந்து கலாச்சாரத்தில், எதை வேண்டுமானாலும் படிக்கலாம், எதை வேண்டுமானாலும் கடவுளாக நினைக்கலாம்,  எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பிராத்தனை செய்யலாம்.

ஒரு இடத்தை கோவிலாக்கி அங்கே ஒருவர்  சூடம் வைக்கலாம், அதே இடத்தில் வேறு ஒருவர் சேவல், ஆடு என்று உயிர் பலியும் கொடுக்கலாம் , அதே இடத்தில் வேறு ஒருவர் சாராயம் படைக்க முடியும்.

இதற்கான காரணம் இந்து கலாச்சாரத்தில் எதுவுமே சொல்லப்படவில்லை, அதனால் அவரவர் விருப்பதிற்கு, அவரவர் சக்திக்கு, அவரவர் மனதில் பட்டதை அல்லது தன் முன்னோர்கள் சொல்லி கேட்டதை, செய்து பார்த்ததை செய்கிறார்கள் .

இதில் கவனிக்க வேண்டியது "செய்கிறார்கள்", யாரும் எழுதிவைக்காமல், செய்ய சொல்லாமல், தானகவே செய்கிறார்கள் அததனால் தான் இந்து என்பது ஒரு கலாச்சாரம் அவர்களின்  பாரம்பரியம்.

இதில் யார் கடவுள்?, என்ற பேச்சே இல்லை கரணம், இங்கு எல்லாமே கடவுளாகத்தான் பார்க்கப்படுகின்றன, மண்ணும் கடவுள், பொண்ணும் கடவுள், மரமும் கடவுள், மயிலும் கடவுள், குழந்தையும் தெய்வம், இறந்தவரும் குல-தெய்வம்.

எப்படி இந்துவத்தில் யார் யார் கடவுள் என்று சொல்லவில்லையோ, அதே போல யார் எல்லாம் கடவுள் இல்லை என்றும் எங்கும் எதிலும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன், யார் வேண்டுமானாலும் புதிய கடவுளை படைக்க முடியும், அதுவும் யாரை வேண்டுமானலும் கடவுளாக்க முடியும்.       

இன்றும் நம் மக்களிடையே இதை பார்க்க முடியும், இறந்து போன தன் தாயின் சேலையை, இறந்து போன தன் குடும்ப கன்னி பெண்ணை, தன் குடும்பத்தை காப்பற்றிய நாயை, இப்படி புதிய கடவுள்களை படைத்தவர்கள் நம்மிடயே ஏராளம்.

சரியான உதாரணம் வேண்டுமானால் எதிரி நாட்டு ராணி விட்ட சாபத்தால், வாரிசு (குழந்தை) வரம் இல்லாமல் இன்றும் மைசூர் மகராஜா குடும்பம் சாபமிட்ட ராணி அலமேலம்மாவை  (ராயரின் மனைவியை)  உடையார் ராஜ வம்சத்தின் குல தெய்வமாக்கி வணங்கி வருகிறார்கள் என்பது 400 வருட வரலாற்று பதிவுகள்.   

ராஜ வம்சம் தொடர ஒவ்வொரு ராஜாவும் பட்ட அவஸ்தையும், சாபத்தின் படி. தலக்காடு மணல் மேடானதும், இன்றுவரை காவேரி நதி அங்கே மணல் கொண்டு சேர்ப்பதும் நாம் அனைவரும் அறிந்த உண்மை.
  

இன்னும் சொல்கிறேன், தட்டி பாருங்கள் கூகுளை (www.google.com) இயற்கை, மனிதன் மற்ற உயிர்களை கடவுளாக பார்த்ததை தாண்டி, புல்லட் கடவுள் (Shri Om Bana and Bullet Banna), வெளிநாடு விசா கடவுள் (Visa Chilkur Balaji Temple) என்று இந்துவத்தின் எல்லை பிரபஞ்சம் போல நாளுக்கு நாள் விரிந்து கொண்டே இருக்கிறது.

ஆக, இதில் மிக தெளிவான விசையம் என்னவென்றால், யார் அல்லது எது கடவுள் என்பதில் இங்கு எந்த குழப்பமும்  இல்லை, காரணம் இது ஒருவரால் சொல்லப்பட்டோ அல்லது எழுதப்பட்டு அதை படித்து வருபவை அல்ல.

எந்த கட்டாயமும் அல்லது தனித்து வைக்கும் கட்டுப்படும் இல்லாமல் பொது நல நோக்கோடு  காலம் காலமாக மக்களை எதோ ஒரு சக்தி ஒரு சமூக வட்டத்திற்குள் வழிநடத்தி செல்கிறது, அந்த சக்தி கடவுளா இல்லாயா என்பது பற்றி எழுதுவது இங்கு என் நோக்கம் அல்ல.

எந்த ஒரு வழிகாட்டலும் தேவையில்லாமல் மக்களை தன் கட்டுக்குள் வைத்து சுழலும் அந்த பாரம்பரிய சக்தியே  என் எண்ணகளில் இந்து கலாச்சாரமாக தெரிகிறது.

ஆனாலும் இது எப்படி மதமாக காட்டபடுகிறது? இந்த கலாச்சாரம் எப்படி மதம் என்னும் வட்டதிற்குள் புகுத்தப்பட்டது என்று பார்த்தால் அதற்கும் மனிதனே பொறுப்பாகிறான் .

மேலே சொன்னபடி தனி ஒரு மனிதன், தனது சொந்த முயற்சியாலும், அனுபவத்தாலும் உருவாக்கப்பட்ட வழியாக வந்தது மதம், இது தடம் மாறி மனிதனுக்கு மதம் பிடிக்கும் போது, அவனால் மதம் இல்லாமல் வாழமுடியாமல் போகிறது.

இந்துவத்தில் இதை உருவாக்கியவர் என்று யாரும் இல்லை, மேலும் இதை வழிநடத்தவும் யாரும் தேவை இல்லை என்பதால் தான் என்னவோ, யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இதை பற்றி விமர்சனம் செய்ய முடியும், அதை பற்றி இதில் யாரும்  கேள்வி கேட்க போவதில்லை எந்த ஒரு விமர்சனத்துக்கும் பதில் விமர்சனமும் வரபோவதில்லை.

ஆனால் மற்ற எந்த ஒரு மதம் அல்லது சமயத்தை இப்படி எதுவும் விமர்சனம் செய்து விட முடியாது என்பது இங்கு சிந்த்திக்க வேண்டியது.

இதை சாதமாக்கி இடையில் மதம் பிடித்த மனிதர்கள் புகுத்தல்தான் இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்பது இந்து மதமாக காட்டப்படுகிறது.

காரணம் எத்தனயோ மதங்கள் வந்தன எத்தனயோ மறைந்தும் போனது, ஆனால் யாரும் இல்லாமல் இது மட்டும் எப்படி தானாக சுழலுகிறது நாளுக்கு நாள் வளருகிறது என்று அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

காலம் காலமாக முட்டையில் இருந்து வந்ததாவும் அது மட்டுமே பிறப்பின் தன்மை என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஒரு கோழியிடம் போய், ஒரு பெண்ணின் பிரசவ முறையை சொன்னால் அந்த கோழி என்ன நினைக்கும்?

அது எப்படி இந்த பெண்ணால் முட்டை ஓட்டை மட்டும் உள்ளே வைத்துக்கொண்டு தனியாக குட்டியை வெளியே அனுப்பமுடியும், அதும் ஒரே ஒரு முட்டை ஓடு வைத்துக்கொண்டு பல முறை பல குட்டிகளை மட்டும் அனுப்ப முடியும் என்றுதான் அதன் எண்ணம் இருக்கும்.

இது போலதான் மதம் பிடித்த மனிதர்கள், தனக்கு மதம் தவிர எதுவும் தெரியாது என்பதை அறியாமல், ஒரு கலாச்சாரத்தை தனக்கு தெரிந்த மதத்திற்குள் இழுத்து வர முயற்சி செய்தார்கள்,செய்கிறார்கள்,இனியும் செய்யலாம், ஆனால் அது அவர்கள் தவறு என்று சொல்லிவிட முடியாது என்பதை விட சொல்லகூடாது என்பதே சரியான முறை.

இந்து கலாச்சாரம் என்பது பாரம்பரியமாக கொண்டு போகவே தவிர யாரையும், எந்த இறை நம்பிக்கையையும் விமர்ச்சனம் செய்ய பயன் பட்டதும் இல்லை இனியும் பயன் பட கூடாது என்பதும் இந்த கலாச்சாரத்தின் ஒரு அங்கம் தான்.   

மொத்தத்தில் ஒரு பெரிய நூலகத்தில் இருந்து ஒருவர் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்து வருகிறார், எடுத்தவருக்கு தெரியும் இதை போல பல புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்று இருக்கிறது அதில் இருந்து நாம் கடைபிடிக்க அல்லது கற்க நிறைய இருக்கிறது என்று.

ஆனால், அவரிடம் இருந்து அந்த ஒரு புத்தகத்தை மட்டும் வங்கி படித்த மற்ற ஒருவருக்கு இது புரியாது, அவரை பொறுத்தவரை இது மட்டும் தான், இதில் நாம் அனைத்தும் படித்து முடித்து விட்டோம் வேறு எதுவும் இங்கே இல்லை என்பதுதான், இதையே அவர் தனக்கு அடுத்து வருபவருக்கு அவர் அவருக்கு அடுத்து அடுத்து சொல்லக்கூடும் அதில் அவர்கள் தவறு எதுவும் இல்லை.

இந்து கலாச்சாரம் பழகுபவர்கள் மற்ற சமய இன மதத்தவர்களுடன் இணைந்து இந்த பாரம்பரியதில் நடப்பதும், மற்ற மதம், சமய மக்கள் அந்த இந்து கலாச்சாரம் எப்படி பாரம்பரிமாக வருகிறது, எது உயர்ந்தது, எது தாழ்ந்தது, ஏன் அது மதமாக இருக்கவில்லை? என்று அர்த்தமற்ற பாகுபாடு பார்க்காமல், ஒரே குலம், ஒரே இனம் அது மானித இனம், அதில் பல கலாச்சாரம், பல பாரம்பரியம், அதில் அனைவரும் சமம் என்று உணர்ந்து நடப்பதே நம் மனித குலத்திற்கும், நாம் விரும்பும் மதத்திற்கும் செய்யும் உண்மையான பிறவி கடமை ஆகும்.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

Saturday, May 24, 2014

கோச்சடையான் ரஜினியின் பாஷா இல்லை...!

வணக்கம் நண்பர்களே,

வருடம் கூட கூட தன் வயதை குறைத்து கொண்டு ஓட்டத்தில் வேகத்தை கூட்டும் சிங்கையின் வேகத்துக்கு இணையாக என் வாழ்கை வேகத்தை கூட்ட வயது கூடிக்கொண்டே போகும் நான் ஓட முயன்று கொண்டு இருப்பதால், இணையம், பதிவுகள் பக்கம் வர முடியாத சங்கடத்தை சந்திக்கும் படியாகிவிட்டது.

எத்தனயோ தடைகளையும், சங்கடங்களையும் தாண்டி திரைக்கு வந்து ஆனந்த தாண்டவம் போட்டுகொண்டு இருக்கிறார் மாவீரன் கோச்சடையான்.


நான் திரை விமர்ச்சனம் எழுதுவது கிடையாது (எழுதுறதே இல்ல இதுல எதுக்கு இந்த படம் அதான...சரி விடுங்க விடுங்க ), அதனால் இது கண்டிப்பாக கோச்சடையான் விமர்ச்சனம் அல்ல, ரஜினி ரசிகனாக என் முதல் பார்வையில் கோச்சடையான் அவ்வளவுதான்.

சினிமா என்பது ஒரு தொழில், அதில் "வந்து விட்டீர்களா சுவாமி", "போகாதீர்கள் நாதா" என்பது முதல் " இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோல கொப்பற கொய்யா" என்பது வரை பல கால கட்டங்களில் பலரால் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பட்டு இருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்த படி அல்லது மைல்கல் முதல் முயற்சிதான் "கோச்சடையான்".

சரித்திர கதையையும், நடிகர்களின் நடிப்பையும் பற்றி பலரும் திரை விமர்ச்சனமாக கொடுத்து கொண்டு இருப்பதால், அதே விசையத்தை வேறு வாரத்தைகளை போட்டு இங்கு நான் கொடுக்க போவதில்லை.

மாவீரன் கோச்சடையான் மீது மக்கள் கொண்டுள்ள புகழ் பிடிக்காத மன்னனே எதிரி நாட்டிடம் வீரர்களை அடிமை படுத்தியாதாக சூது செய்து நயவஜகமாக ராஜ துரக குற்றம் சுமத்தி மரணதண்டனை கொடுக்கிறான்.

மரணத்தின் வாசலில், நான் வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நம் வீரர்களை காப்பாற்று ரானா என்று ஒரு மகனிடமும், மன்னரை காப்பதே நம் கடமை சேனா என்று சொல்லி மற்றொரு மகனிடம் தன் தளபதி வாளை கொடுத்து விடை பெறுகிறார் கோச்சடையான்,

மகன்கள் இங்கு பிரிகிறார்கள், தந்தை மரணத்தை கண்முன் கண்ட மகன் ரானா, தன் தந்தை மீதுள்ள பழியை போக்கி அதே மக்கள் துணையோடு மன்னனை வஞ்சம் தீர்க்கிறார், அந்த இடத்தில் மன்னரை காப்பதே நம் கடமை என்று சொல்லி கோச்சடையான் கொடுத்த வாளுடன் வந்து நிற்கிறார் இன்னொரு ரஜினி சேனா, இருவரும் மோத வேண்டிய கட்(டாய)த்தில்.. தொடரும் என்று சொல்லி முடிக்கிறார்கள்.

நிம்மதியாக போய் வாருங்கள் தந்தையே என்று கோச்சடையான் நெற்றியில் ரானா முத்தமிடும்போது இது ஒரு "Motion Capture" படம் என்பதயும் மறந்து "Apocalypto படம்" பார்ப்பது போல ஒரு உணர்வு வந்தது.

(Note: The amount of work does not vary with the complexity or length of the performance to the same degree as when using traditional techniques. This allows many tests to be done with different styles or deliveries, giving a different personality only limited by the talent of the actor.)

ஆக மொத்தம்....!

புதிய தொழில் நுட்பத்தில் ரஜினியை கொடுத்த சௌந்தர்யாவுக்கு சந்தோசமாக ஒரு சபாஸ்.

ரவிகுமாரின் உழைப்பு சந்தேகத்துக்கு இடமில்லாமல் அருமை, குறிப்பாக வசனங்கள் ஆக.... அட்டகாசம்.

ரகுமான் சொல்லவே வேண்டாம் இசையும் பாடலும் தேனில் விழுந்த பலா போல் தித்திப்பு.

இனி தலைவர்.....

இளமை இனிமேல் போகாது.... முதுமை எனக்கு வாராது.... என்ற முத்து பாடல் வரிகளை இனி நிஜமாகிவிட்டது, அதிலும் "கோச்சடையாரின் சிவ தாண்டவமும், ராணாவின் மூங்கில் சண்டையும், இனி ரஜினியை எல்லா வகையிலும் பார்க்க முடியும் என்று உறுதி செய்து விட்டது.

சிங்கை மருத்துவ மனையில் இருந்து சென்ற பிறகு திரையில் வரும் முதல் படம் என்ற நினைப்பில் சென்ற எனக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அதே நடை, ஸ்டைல், அதே குரல் என்று சிறிது நேரத்தில் ரஜினியை உணர முடிந்தது. 


பல காட்சிகளில் மற்றவர்கள் நடையும், ரஜினி மற்றும் தீபிகாவின் கண் அமைப்பும் இன்னும் கொஞ்சம் சரியாக கொண்டு வந்து இருக்க வேண்டும், 3-D யில் பார்த்தால் சரியாக வரும் என்று நினைக்கிறேன்

நிறுத்து.... நீ ரஜினி ரசிகன் என்பதால் எல்லாமே உனக்கு மட்டும் நல்லாதான் இருக்கும், போப்பா போ....இதானே.... அப்படி இல்லை,

நண்பர்களே, ஒரு விசையத்தை இங்கு நாம் கவனிக்க வேண்டும், ரஜினி ரசிகனை தவிர பொதுவாக மற்ற அனைவருக்கும், ரஜினி படம் பார்க்க போகும் போதே அது பாஷா, அண்ணாமலை என்ற ஒரு எண்ணம் இருக்கும், காரணம் அவர் ஒரு ஆக்சன் ஹீரோ.

நான் இதுபோல கருத்துக்கள் வரும் போதெல்லாம் சொல்லும் ஒரு விஷயம், வெறும் பாஷாவும், அண்ணாமலையும் அல்ல ரஜினி.

ஒரு நடிகனான வில்லன், இரண்டாம் கதாநாயகன் என்று, நகைச்சுவை, திருடன், அடியாள் கதாநாயகன் முதல் அறிவியல் ஆராச்சியாளர் வரை, ரஜினிக்கு பல முகம் உண்டு, அதில் பல விசையங்கள் ரஜினியை தவிர வேறு யார் செய்து இருந்தாலும், சகிக்கவே முடியாத விசையமாகி இருந்து இருக்கும் என்பதை பொதுவாக அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்.

அதே போல, மாறி வரும் தொழில் நுட்பத்தில் உலக நாடுகளுக்கு இணையாக அதுவும் குறிப்பாக இந்திய சினிமாவில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்றால், அது ரஜினி என்ற மத்திரத்தை தவிர வேறு எந்த ஒரு நடிகராலும் துணிந்து செய்யமுடியாத ஒன்று என்பதை மட்டும் என்னால் தெளிவாக சொல்ல முடியும்.

மொத்தத்தில் பத்து வருடத்திற்கு முன் மொபைல் என்பதும், முப்பது வருடத்திற்கு முன் ஜீன்ஸ் என்பதும் இந்தியாவில் எப்படி இருந்து என்றும், இன்றும் அது நம் தெருக்களில் எப்படி கிடைக்கிறது என்பதும் நாம் அனைவரும் பார்பதுதான்.

அதே போல், இனி இந்திய சினிமா வரலாற்றில் இது போல, ஏன் இதை விட இன்னும் நேர்த்தியாக கூட பல படங்கள் வந்து மறைந்தாலும், இதன் துவக்கம் "கோச்சடையான்" என்பதும் அது அன்று இருந்த சூழ்நிலையில் ரஜினியால் மட்டுமே சாத்தியம் என்பதும் சினிமா வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கல்வெட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில், கோச்சடையான், ரஜினியின் பாஷாவோ அண்ணாமலையோ அல்ல, ஆனால் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்ற எண்ணத்தோடு இந்த படத்தை பாருங்கள்.

முதல் காட்சி பார்த்து முடிந்ததும் தலைவருக்கு என் ட்விட்: After watching first show in singapore, I felt, Kochadaiyaan is not a Masterpiece of Rajini. it's a MileStone of Indian Cinema.

எல்லாம் சொல்லி இதை சொல்லாமல் எப்படி முடிப்பது.....!

நாங்கள்லாம் ரஜினி பட போஸ்டரையே நாலு மணி நேரம் நகாராம பாப்போம், அப்படி இருக்க கோச்சடையாரின் தாண்டவத்தை கேட்கவா வேண்டும்.

All the Rajni Fan's Don't Miss this Chance....!

நன்றி, மீண்டும் சந்திப்போம்.

சம்போபோபோ மகா தேவா................!

Thursday, February 2, 2012

நாம் நூறாவது குரங்காக கூட இருக்கலாம்!

வணக்கம் நண்பர்களே,

மனிதனோடு மிக நெருங்கிய வாழ்கை முறையை கொண்ட மிருகம் குரங்கு எனபதை நாம் அனைவரும் அறிவோம், சமீபத்தில் இதை பற்றிய ஒரு நல்ல தகவல் எனக்கு கிடைத்தது, அதை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிங்கையில் எனக்கு முரளி என்று ஒரு நண்பர் இருக்கிறார், மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட அவருடன் அடிக்கடி சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்வது எங்கள் வழக்கம்.

ஆன்மிகம் மட்டுமின்றி அது போல நேரத்தில் இருவருக்கும் தெரிந்த ஆரோக்கியமான கருத்துக்களை மற்ற உலக நடப்புகளை பற்றி இருவருமே பகிர்ந்து கொள்வோம்.

அது போல பேசிக்கொண்டு இருந்த ஒரு நேரத்தில் அவர் சொன்ன ஒரு தகவல்தான் இது.

அவரின் ஆன்மீக ஆர்வத்தை தொண்டு என்ற போர்வையில் இடைத்தரகர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று நான் சொல்ல, அதற்கு அவர் ஆன்மீகம் பற்றி ஒரு நல்ல விளக்கம் கொடுத்தார்.

மாறுபட்ட நல்ல சமூக சிந்தனை மற்றும் அப்படி மனதில் பட்டதை அதே போல செய்வது சுவாமி விவேகானந்தர் போல ஒரு சிங்கத்தால்தான் முடியும், என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, அதே போல அனைவருமே அவரைப்போல வீர துறவியாக இருக்க முடியாது என்பதும் உண்மையே.

ஆகவே, இந்த மாதிரி ஒரு வாழ்கை முறையில் இருக்கும் நான் ஒரு நூறாவது குரங்காக இருப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை என்றார்.



அது என்ன நூறாவது குரங்கு என்று நான் கேட்க? அவர் சொன்னது இதுதான்.

கடந்த நூறாண்டின் துவக்கத்தில், குரங்குகளை வைத்து ஒரு ஆராச்சி நடந்ததாம், ஜப்பானுக்கு அருகே உள்ள ஒன்றுகொன்று தொடர்பில்லாத சில மழைகாடு தீவுகளில் பல குரங்குகளை கொண்டு விட்டு விட்டாகளாம், அதன் பின் அந்த குரங்குகள் உணவுக்காக பலவகை பழங்களை அந்த தீவுகளில் இருந்த குப்பைகளில் குறிப்பாக சகதிகளில் கொட்டிவிட்டு நடப்பதை கண்காணிக்க துவங்கினார்களாம்.

பசியின் காரணமாக குரங்குகளும் அந்த பழங்களை எடுத்து உண்டன, இப்படியே நாட்கள் நகர ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு குரங்கு சகதியில் இருந்து எடுத்த பழத்தை ஊதி விட்டு பின் சாப்பிட, ஆராய்ச்சியாளர்களின் கண்காணிப்பு ஆர்வம் அதிகரித்ததாம்.

ஒரு சில நாட்களுக்கு பிறகு அந்த கூட்டத்தில் இருந்து வந்த ஒரு குட்டி குரங்கு, தன் உணவை எடுத்துக்கொண்டு தனியாக ஓடுவதை கண்டு அந்த குரங்கை கண்காணிக்க, சகதியில் இருந்து எடுத்த பழத்தை கொண்டு சென்ற குட்டி குரங்கு அருகே இருந்த நீரோடையில் அந்த பழத்தை கழுவி விட்டு பின் சாப்பிட துவங்கியதாம்.

அன்று முதல் அனைவரும் கூர்ந்து கண்காணிக்க, இந்த குரங்கு மட்டும் தொடந்து உணவை கழுவிவிட்டு உண்பதை கைவிடவில்லையாம்.



இப்படியாக ஒரு குறிப்பிட்ட காலம் நகர ஒவ்வொன்றாக மற்ற அனைத்து குரங்குகளும் அதே போல உணவை சகதியில் இருந்து கழுவிவிட்டு உண்பதை கண்டதும் ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தோசம் ஒரு புறம் இருக்க, ஒரு வேலை இந்த குட்டி குரங்கை பார்த்து மற்ற குரங்குகள் சக்தியை கழுவவேண்டும் என்று பழகி இருக்குமோ என்று சந்தேகமும் வந்ததாம்.

இப்படி சில காலம் நகர நகர, ஒன்றுகொன்று தொடர்பில்லாத அந்த மழைகாடு தீவுகளில் இருந்த ஒவ்வொரு தீவிலும் இருந்த குரங்குகள் தன் உணவை சகதியில் இருந்து எடுத்து கழுவி விட்டு உண்பதை காண முடிந்ததாம்.

இந்த ஆராய்சியின் முடிவில் அத்தனை குரங்குகளும் இதே போல் செய்வதை கொண்டு மனித நாகரீக வளர்ச்சியை பற்றி ஒரு புத்தகம் வெளிவிட பட்டதாம்.

இதன் மூலம் நமக்கு புரியும் கருத்து என்பது, நல்ல சிந்தனைகள் மற்றும் செயல்கள் செய்யும் போது, அதில் உள்ள குறை நிறைகளை பற்றி கவலை படாமல் தொடந்து செய்வதன் மூலம் அது நீண்ட தூரம் பயணம் செய்து பலரை நல்வழி படுத்தும் என்பதுதான் என்று நண்பர் சொல்லி முடித்தார்.

நண்பர் சென்று நீண்ட நேரம் ஆகியும் எனக்கு இந்த கதையை கேட்ட திருப்தியில் கிடைத்த சந்தோசம் மட்டும் குறையவே இல்லை, காரணம் இதையே வெவ்வேறு மத துறவிகள் அவர்கள் சமூகத்திற்கு வேறு வேறு வார்த்தைகளில் சொல்லி இருப்பதை எப்போதே படித்தது நினைவில் வந்தது.

நபிகள் பற்றி படித்த போது அவர் சொன்ன ஒரு தகவல், எல்லா சமூககத்தினரும் அவர்கள் இனத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், அதே நேரத்தில், தன் இனத்தில் மீது வெறி கொண்டவன் தீவிரவாதியாகிறான்.

அப்படி வெறி கொண்ட யாரையும் எந்த சமூகத்தினரும் மன்னிக்கவே கூடாது, இல்லையெனில் அந்த வெறி தீ பொறிபோல பரவிவிடும்.

இதே கருத்தை சுவாமி விவேகானந்தரும் சொல்லி இருக்கிறார், நாம் யார் என்பதை நம் எண்ணங்களே உருவாக்குகின்றன, ஆகவே நல்ல விசையத்தை பற்றி சிந்தியுங்கள், காரணம் எண்ணங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் சக்தி கொண்டவை, வார்த்தைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

“We are what our thoughts have made us; so take care about what you think. Words are secondary. Thoughts live; they travel far.” - Swami Vivekananda.

அவ்வளவு ஏன், "பெரியதாக கனவு காணுங்கள்" அந்த நல்ல சிந்தனை ஒரு நாள் நிஜமாகும் என்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொல்லி இருக்கிறார் இல்லையா?.

நண்பர்களே, நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், என்பதை விட, நல்ல விசையங்களை பற்றி சிந்திக்க செய்தாலே போதும். அது தானாகவே காற்றில் கலந்து மற்ற அனைத்து மக்களையும் சென்று சேர்ந்து விடும்.

இதைத்தான் இந்து மதத்தில், இந்த பிரபஞ்சம் அனைத்து கேள்விகளுக்கும் விடையை திறந்து வைத்து இருக்கிறது. அதை நல்ல சிந்தனையுடன் மனதை ஒரு நிலை படுத்தும் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

Tuesday, January 31, 2012

புகையிலை விரிச்சா போச்சு! பெண் பிள்ளை சிரிச்சா போச்சு!

வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு குடிபெயர்வது எனக்கு ஒன்றும் புதிய அனுபவம் இல்லை என்றாலும், இந்த முறை எனக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது.

எப்போதும் எனக்கென்று ஒரு ஊர், எனக்கென்று சில மக்கள் என்று ஒரு பெட்டியுடன் கண் மூடி கண் திறக்கும் முன் கடல் கடந்து இனம் மொழி பாராமல் கிடைப்பதை உணவாக கொண்டு அந்த உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து விடுவேன்.

ஆனால் இந்த முறை, புதிய வேலை, மனைவி, குழந்தைகள், அவர்கள் தங்கும் இடம், படிக்கும் இடம் என்று ஒவ்ஒன்றாக பார்த்து பார்த்து செய்து முடிக்கும் முன் போதும் போதும் என்று இருந்தாலும், அதுவும் ஒரு இனம் புரியாத சுகமாகவே இருந்தது.

அது, இது என்று ஒரு வழியாக எல்லாம் முடிந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பியதும், நம் கிரி (இப்போது இருவர் வீடும் அடுத்தடுத்த தெருவில்) என்ன பாஸ் எழுதுவதை விட்டு விட்டதை போல் தெரிகிறது என்று சொன்ன போதுதான், எனக்கு வலைப்பூ என்று ஒன்று இருப்பதே நினைவில் வந்தது.

என் முன்னைய பதிவில் சொன்னதை போல, சிங்கையை பற்றி என்னால் புதிதாக வேறு யாரும் சொல்லாததை எதுவும் எழுதி விட முடியாது.

என்னை விட பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த களம் இது. அதே நேரம் என்னை சுற்றி நடக்கும் சில நல்ல விசையங்களை எனக்கு தெரிந்த எழுத்து நடையில் சொல்வதுதான் இந்த வலைப்பூவில் இனி என் நோக்கம்.

சிங்கையில் எனக்கு மிக பிடித்த விசையங்களில் ஒன்று, இரவு உணவுக்கு பிறகு பாடல் கேட்டுக்கொண்டே ஒரு சிறிய நடை பயணம்,

அன்று வானம் மப்பும் மந்தாரமுமாய் பல நிறத்தில் மேகங்கள் முட்டிக்கொண்டு இருந்தது.

அருமையான காற்றுடன் மிக லேசான மழை தூறல் என் மனதை வருட, காதுக்கு "என் மேல் விழுந்த மழை துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!" பாடலை கொடுத்து விட்டு மெதுவாக சாலை ஓரமாக நடக்க துவங்கினேன்.



இரவு நேரம் மட்டுமில்லாது, மழை பெரிதாகி விடும் என்று நினைத்து மக்கள் யாரும் சாலையில் இறங்கவில்லை என்றாலும், காற்றோடு கலந்து மழை நீரையும் கிழித்துக்கொண்டு சர்ர்ர்ர்ர் என்று சொல்லும் சில வாகனங்கள் என் பாடலின் அமைதியை திசை திருப்ப, அடுத்து வந்த சிறிய சாலைக்குள் என் நடையை திருப்பினேன்.

எதிர்பார்த்ததை போலவே கருப்பு போர்வையின் இருபக்கமும் மஞ்சள் புள்ளி வைத்ததை போல நீண்ட சாலையின் இருபக்கமும் தெருவிளக்கின் வெளிச்சத்தை தவிர வேறு யாரும் இல்லை.

ஒரு ஐந்து நிமிடம் கடந்து இருக்கும் சற்று தூரத்தில் தெரிந்த பேருந்து நிறுத்தத்தில் இருவர் அமர்ந்து இருப்பது விளக்கின் வெளிச்சத்தில் நிழலாக தெரிந்தது.

விளக்கின் கீழ் மஞ்சள் ஒளியில் மழைதூறல் அதன் கீழ் பேருந்து நிறுத்த குடை அதன் கீழ் இரு உருவம் நிழலாக பார்க்க அருமையாக இருந்தது.

புகைப்படம் எடுக்க முடியாமல் போன வருத்ததுடன், பாட்டை நிறுத்தி விட்டு ஆப்பிள் கை தொலைபேசியில் பார்த்தால் படம் எடுக்கும் படி ஒன்றுமே தெரியவில்லை.

அப்படியே பார்த்துக்கொண்டே நடந்து எங்களுக்குள் இருந்த தூரம் குறைய, அந்த பெண்ணின் குரல் சற்று சத்தமாகவே அந்த இரவில் எனக்கு கேட்டது.

ஆர்வத்துடன் அவர்கள் பேசுவதை கேட்க சற்று மெதுவாகவே நடந்து அருகே செல்ல, அந்த பெண்ணின் குரலில் இருந்த அளவு இளமை அவர் வயதில் இல்லை.

அது ஒரு தத்தாவும் பாட்டியும் என்று பார்த்தவுடன் புரிந்தது, ஆனால் அந்த பாட்டி சற்று பதட்டத்துடன் இருந்தார்.

பாட்டியின் கையை பிடித்து கொண்டு சாமாதானம் சொன்ன விதத்தில் இருந்து பாட்டியின் அருகே இருந்தவர் அவர் கணவர் என்று புரிந்தது.

இந்த நேரத்தில் இவர்களுக்கு என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் பேருந்துக்கு நிற்ப்பதை போல நானும் நின்று அவர்கள் பேசுவதில் என் காதை கொடுத்தேன்.

கேட்டவுடன் புரிந்தது அவர்கள் பேசுவது சீன மொழி என்று, ஆனால் புரியாதது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தான்.

ஒருவேளை உடல் நிலை முடியாமல் மருத்துவமனை செல்ல இருக்கிறார்களோ என்று நினைக்கவும் முடியவில்லை, காரணம் அந்த நேரத்தில் சென்ற இரண்டு வாடகை கார்கள் காலியாகவே சென்றது. எங்கள் அருகில் வந்தபோது மெதுவடைந்து நாங்கள் வரவில்லை என்று உறுதியானவுடன் தான் எங்களை கடந்து சென்றது.

பாட்டி இன்னுமும் படபடப்பாக பேச, அந்த முதியவர் அவரை சமாதான படுத்தும் அதே நேரத்தில் கை தொலை பேசியையும் பேருந்து வரும் சாலையிலும் கண்களை மாற்றிக்கொண்டுதான் இருந்தார்.

ஒருவேளை அவர்களிடம் வாடகை காரில் செல்ல பணமில்லையோ? நாம் வேண்டுமானால் உதவலாமா என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் பிரச்சனை வேறாக இருந்து நம்மை தவறாக நினைத்துவிடுவார்களோ என்று என் மனம் என் எண்ணங்களுக்கு தடை போட்டது.

சரி, என்னதான் நடக்கிறது என்று இன்னும் சற்று நேரம் பார்ப்போம் என்று நினைத்து கொண்டு, என் பார்வையை முதல் முறையாக அவர்கள் பக்கம் திருப்பும் அதே நேரத்தில், அந்த பாட்டி என்னிடம் எதோ கேட்டார்.

அது சீன மொழியல்ல, மலாய் மொழி என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது, அவர் என்னை மலாய் மொழி பேசுபவர் என்று நினைத்து இருக்க வேண்டும்.

என் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்ட தாத்தா, இந்த நேரத்தில் வரவேண்டிய இரவு பேருந்து போயிருக்குமோ? என்று ஆங்கிலத்தில் கேட்டார்.



எனக்கும் தெரியாமல் கையில் இருந்த என் ஆப்பிளை (கை தொலைபேசி) கேட்க, அது இன்னும் ஏழு நிமிடத்தில் ஒரு பேருந்தும் அதற்கடுத்து பதினாறு நிமிடத்தில் ஒரு பேருந்தும் வரும் என்று சொன்னதை சொன்னதோடு, அவர்கள் இருவரும் மீண்டும் படபடப்புடன் பேச தொடங்கி விட்டார்கள்.

நானும் அடுத்தவர் விசையத்தை கேட்பது நாகரீகமாகாது என்று அவர்களிடம் எதுவும் பேசவில்லை.

ஆக, இவர்கள் பேருந்துக்குதான் காத்து இருக்கிறார்கள் எனபது புரிந்தது.

ஒருவேளை குடும்ப சண்டையாக இருக்குமோ?, கோவம் கொண்டு அம்மா வீட்டுக்கு போக இருக்கும் மனைவியை இவர் சமாதான படுத்துகிறாரோ! என்று நினைத்த அதே நேரம், என்னை நானே மனதுக்குள் குட்டிகொண்டேன்.

இவரே பாட்டி, இவரின் அம்மா என்றால், அவர் இது வரை இருப்பது இந்நேரம் உலக அதிசியமாக இருந்தால்தான் உண்டு.

அடகெப்பா உன்னை யாரப்பா இப்படியெல்லாம் யோசிக்க சொல்வது? என்று செந்திலை கேட்கும் கவுண்டரின் குரல் மனதுக்குள் ஒலிக்க, மெதுவாக சிரித்துக் கொண்டேன்.

மழை லேசாக வேகம் எடுக்க துவங்கினாலும், குடை இல்லாமல் நடந்து வீட்டுக்கு போக முடியும் என்று தோன்றியதால், அப்படியே நிற்பதை தொடர்ந்தேன்.

சாலை முடிவில் பேருந்து வந்து திரும்பும் வெளிச்சம் தூரத்தில் தெரிந்ததும் இருவருமே படபடப்புடன் எதோ சொல்லிகொண்டே எழுந்து நின்று விட்டார்கள்.

அந்த பேருந்து அருகே வரும் போதே, ஒரு இளம் பெண் படிக்கட்டில் எட்டி பார்த்துகொண்டே வந்தார்.

அருகில் வந்தவுடன் அது ஒரு இளம் வயது பள்ளி மாணவி என்று அவரின் சீருடை சொன்னது. இவர்கள் வயதோடு அந்த பெண்ணின் வயதை பார்த்தால் கண்டிப்பாக மகளாக இருக்க முடியாது, பேத்தியாகத்தான் இருக்கும் என்று எனக்கு புரிந்தது.

பேருந்து முழுவதுமாய் நிற்கும் முன்னவே பாட்டி எதோ கத்த, அதை காதில் வாங்காமல், தன் கை தொலை பேசியை நீட்டி தன் தாத்தாவிடம் எதோ சொல்லிகொண்டே அந்த பெண் இறங்கினாள்.

கை தொலை பேசியில் சார்ஜ் இல்லை என்று சொல்லுகிறாள், என்று எனக்கு நானே புரிந்து கொண்டேன்.

கோபத்துடன் கத்திகொண்டே சென்ற பாட்டி ஒரு அறை வைக்க போகிறார் என்று நான் நினைத்ததை போல எதுவும் இல்லாமல், அவர் தன் பேத்தியை அரவணைத்து தலையை தடவி அந்த பெண்ணை மேலிருந்து கீழ் வரை பார்க்க, தத்தா அவளிடம் இருந்த கை பையை வாங்கி கொண்டார்.

ஆனாலும் பாட்டி இன்னமும் பேசுவதை (கத்துவதை) நிறுத்தவில்லை, அந்த பெண்ணும் இப்போதும் அதை காதில் வாங்காமல் தாத்தாவிடம் பேசுவதை நிறுத்தியபாடில்லை.

என்னவென்று புரியாமல் நின்ற என்னிடம் அந்த தாத்தா, இது தன் மகளின் மகள், இவள் படிப்புக்காக நாங்கள் இவளோடு இங்கு தங்கி இருக்கிறோம், இன்று இவள் வர தாமதமானதால், பாட்டி பயந்து விட்டதாக ஒற்றை வார்த்தையில் சொல்லிகொண்டே மூவரும் பேருந்து நிறுத்தத்தின் பின் புறம் இருந்த பாதையில் நடக்க துவங்கி விட்டார்கள்.

புகையிலை விரிச்சா போச்சு, பெண் பிள்ளை சிரிச்சா போச்சு, ஒரு பெண்ணை வளர்த்து நல்ல ஒருவரிடம் சேர்க்கும் வரை, பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல, என்று நம்ம ஊர் பாட்டிகள் சொல்லவது நினைவில் வர, எனக்கும் எதோ என் மகள் பத்திரமாக வந்து சேர்ந்ததை போல மனம் இதமாக, சிரித்துக்கொண்டே மீண்டும் நடக்க துவங்கினேன்.

இனம் மொழி நாடு எதுவாக இருந்தாலும் சரி, எல்லா தாய்மையும் பெண்மையை ஒரே பாசத்தோடும் பயத்தோடும் தான் பாதுகாக்கிறார்கள்.

பதிவை முடிக்கும் முன், நான் சிங்கை வந்ததும் என்னை சந்தித்த, தொலை பேசியில் அழைத்து பேசிய நண்பர்கள் கிரி, சத்ரியன் மற்றும் அனைவருக்கும் என் நட்புடன் நன்றி!.

நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Photobucket

Photobucket

Wednesday, August 10, 2011

வணக்கம் சிங்கப்பூர்!

வணக்கம் நண்பர்களே, தென்கொரிய புயல் கரையை கடந்து விட்டது.

வாழ்கை என்பதே ஒரு பயணம், அதில் நமக்கு சொந்தமானது என்பது எதுவுமே இல்லை என்பதை உறுதியாக நம்புகிறவன் நான்.

ஆனால், வாழும்வரை நம்மை சுற்றி இருக்கிற விசையங்கள் மற்றும் நடக்கும் நிகழ்சிகளை பொறுத்தே நம் வாழ்கை முறையும் இருக்கும் என்பதையும் நான் மறப்பதில்லை.

அதனால்தான் என்னவோ, நான் வசிக்கும் ஊர் மற்றும் இருக்கும் இடத்தை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருப்பேன்.

தென்கொரியாவில் முழுதாக நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டாலும், தென்கொரியா என்னவோ எனக்கு சலிப்பே தட்டவில்லை, அவ்வளவு நிம்மதியான மற்றும் அழகான வாழ்கை முறை அங்கு.

இருந்தாலும், ஒரு தனிமனிதன் குடும்ப சக்கரத்தில் நுழைந்தவுடன், சில சொந்த விருப்பு வெறுப்புகளை கட்டாயமாக மாற்றி கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.

இதில் தப்பி விட நான் ஒன்றும் அவதாரம் இல்லை என்பதால், சில தனிப்பட்ட காரணத்தை கருத்தில் கொண்டு தென்கொரியாவை விட்டு வரவேண்டிய நிர்பந்தம் உண்டாகி விட்டது.

இந்த முறை இந்தியா அல்லது இந்தியாவிற்கு அருகில் இருக்கும் நம் தமிழ் கலாச்சாரத்தை கொண்ட இடத்திற்குத்தான் போக வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடும் இதில் சேர்ந்து கொண்டது, காரணம் தென்கொரியாவை விட்டு வரும் நோக்கமே குழந்தைகளின் ஆரம்ப கல்விக்காகத்தான்.

வெறும் ஆங்கில வழி அல்லது கொரிய மொழி கல்வி என்பதில் எனக்கும் சரி, என் குடும்பத்தினருக்கும் சரி விருப்பமில்லை,. தாய் மொழி இல்லாத வாழ்கை என்ன ஒரு வாழ்கை என்பதே அதன் உண்மையான காரணம்.

அதன் காரணமாகவே இந்த முறை மிக கவனமாக நான் தேர்ந்து எடுத்தது "சிங்கப்பூர்".



சிங்கப்பூரை பொறுத்த வரை எல்லாம் பார்த்து பழகிய இடங்கள்தான், அதே போல மாற்றம் என்பது சிங்கையில் புதிது இல்லை என்றாலும், நான் பார்த்த சிங்கை இப்போது ரொம்பவே மாறி இருக்கிறது, மக்கள் தொகையும் அதிகமாக தெரிகிறது.

மொத்த சிங்கப்பூரையும் கையடக்க ஆப்பில் தொலைபேசியில் அடக்கி வைத்து இருக்கிறார்கள், போகும் இடம், வழி முதல் அடுத்த பேருந்து வரும் நேரம், அருகில் இருக்கும் இடம், வாடகை வீடு, அங்காடி, மருத்துவமனை என்று அனைத்தையும் தொலைபேசியே சொல்லி விடுகிறது.

மாற்றம் பல இருந்தாலும் எப்போதும் போலவே பொலிவு குறையாத "புது பெண்" போல சிங்கை வழக்கத்தை விட அதிகமாகவே என் மனதை கவர்கிறது,

முதல் நாள் சாலை ஓர உணவு விடுதியில் இரவு உணவுக்காக சென்ற நான், என் தேவையை கேட்டு உதவி செய்ய வந்த பெண்ணிடம் பேசிய போதுதான், கேட்டு பழகிய உள்ளூர் தமிழ் வார்த்தைகள் என்றாலும், கடந்த நான்கு ஆண்டு கொரிய வாழ்கையில் சுத்தமாக அதை நான் மறந்து விட்டேன் என்று புரிந்தது.

கோழி சோறுடன் டைகர் பீர் (புலிப்பால்) கேட்க நினைத்து, ஆன்டி டைகர் பீர் கேன் (beer can) என்று சொல்ல, சற்றும் தன் புன்னகை மாறாமல் "கேன் கேன் லா" (can can la), "போத்தில் ஆர் டின்"(Bottle or Tin) என்று பதில் கேள்வி கேட்க, "பீர் டின்" என்று சொல்லவேண்டும் என்பதை நினைத்து இருவருமே சிரித்து விட்டோம்.

இனி தென்கொரியாவை போல என்னை சுற்றி இருக்கும் நகரத்தை பற்றி எழுதுவது என்பது சற்று சிரமம் என்பதை நான் நன்கு அறிவேன், காரணம் என்னை விட மூத்த பதிவர்கள் இங்கு அதிகம் மற்றும் அவர்கள் எழுதாத புதிய இடம் எதுவும் இங்கு என் கண்ணில் பட்டு விடப்போவதில்லை.

ஆகவே, வழக்கம் போல என்னை சுற்றி நடக்கும் விசையங்களை சார்ந்த நல்ல பதிவுகளுடன் உங்களை இனி அடிக்கடி இணையத்தில் சந்திக்க முயற்சிக்கிறேன்.

மொத்தத்தில் சிங்கையின் நாற்பத்தி ஆறாவது பிறந்தநாளை கொண்டாடும் சிங்கை மக்கள் மற்றும் தமிழ் பதிவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

ஆம், வாழ்கை பயணத்தில் அடுத்தது என்ன என்று தெரியும்வரை...!

இனி நான் சிங்கைவாசி...! மறுபடியும் மறந்து விட்டேன் பாருங்கள், மன்னிக்கவும், இனி நான் சிங்கைவாசி "லா" :-).

நன்றி மீண்டும் சந்திப்போம்.

Sunday, July 3, 2011

தாஜ்மஹாலுக்கு பின்னால்...!

எல்லா மதங்களும் நல்ல மதங்களே, ஆனால் எல்லா மனிதர்களும் நல்ல மனிதர்கள் அல்ல, அதிலும் அவர்களுக்கு "மதம்" என்னும் "மதம்" பிடித்து போகும் போது அவர்கள் மனிதர்களாகவே இருப்பது இல்லை.

இதையே நபிகள் நாயகம் சொன்னார், நல்ல மனிதன் என்பவன் தன் மதத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், ஆனால் தன் மதத்தில் அல்லது மதத்தின் பெயரில் ஒருவன் தவறு செய்யும் போது, அந்த தவறை கண்டிக்காமல் அவனுக்கு துணை போகிறவன் தீவிரவாதியாகிறான் என்று.

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இது இன மத ரீதியாகவோ அல்லது இந்தியாவின் அடையாள சின்னங்ககளில் ஒன்றின் பெருமையை குறைக்கவோ எழுதவில்லை.

நான் கடந்து வந்த பாதையில் பல இடங்களில் பல தரப்பட்ட மனிதர்களால் வாய்வழி சொல்லாக கேள்வி பட்ட தகவல்களை இங்கு தொகுப்பதே என் நோக்கமே தவிர, இதில் எது உண்மை, எது உண்மையல்ல என்று எனக்கும் தெரியாது.

ஆனால், என்னை விட இதை பற்றி அதிகம் தெரிந்தவர்கள், நான் அறிந்த தகவல்களை ஆதாரத்தோட உறுதி படுத்தவோ அல்லது தவறாக எதுவும் இருந்தால் அதை சரியாக மாற்றவோ உதவும் என்ற நோக்கில் இங்கு இதை பகிர்கிறேன்.



இன்று உலக அளவில் மிக பிரபலமாக இருக்கும் இந்திய உணவு "பிரியாணி" இதை கண்டு பிடித்தவர் தாஜ்மஹாலில் உறங்கும் மும்தாஜ்தான், அவர் கறி பிரட்டலில் பிரியாணி சமைக்கும் வாசம் அந்த பகுதியையே மயக்கி பசியை தூண்டுமாம்.

இங்கு ஒரு கிளை தகவல் வந்து சேர்க்கிறது.

இஸ்லாமியர்களில் ஒரு வழக்கம் இருக்கிறது, இளம் மனைவியை விதவையாக்கி விட்டு செல்லும் கணவனின் மூத்த அல்லது இளைய சகோதரர்களில் ஒருவர் அந்த இளம் விதவையின் வாழ்கை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும்.

அப்படி திருமணம் செய்யும் போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், இன்னொரு மனைவியாக ஏற்றுக்கொள்வதில் தடையேதும் இல்லை.

இதை இங்கு சொல்ல காரணம், மும்தாஜ் திருமணமாகி இளம் வயதில் தன் கணவனை இழந்ததால் அவர் கணவரின் திருமணமான சகோதரர் மும்தாஜையும் தன் மனைவியாக்கிகொண்டார்.

இவ்வாறு ஒருநாள் தன் வீட்டில் மும்தாஜ் பிரியாணி சமைத்துக்கொண்டு இருக்க, வழக்கம் போல வாசனை அந்த பகுதியை தூக்கியது.

அப்போது அந்த பகுதியில் தன் சுற்றங்களுடன் வலம் வந்த "ஷாஜஹான்" இந்த வாசத்தில் மயங்கி தன் சேவகனை சென்று அது என்ன என்று பார்த்து வர அனுப்பினார்.

அரசாங்க சேவகன் மூலம் அரசர் தான் சமைக்கும் உணவின் வாசத்தில் மயங்கியதை கேட்டு மகிழ்ந்த மும்தாஜ் அவருக்கு ஒரு தட்டில் வைத்து கொடுத்து அனுப்பினார்.

அந்த புது உணவை சுவைத்து மகிழ்ந்த ஷாஜஹான், இத்தனை சுவையான உணவை சமைத்தவருக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று சொல்லி அவரை அழைத்து வர சொன்னார்.

அரசன் முன் வந்து நின்ற மும்தாஜை பார்த்ததும், அவரின் அழகில் மயங்கி மும்தாஜை தன் காதல் மனைவியாக்கி கொள்ளவிரும்புவதாக சொல்லி (கணவரை மிரட்டி என்றும் கேட்டதுண்டு) அவரை தன்னோடு அழைத்து சென்று விட்டார்.

ஷாஜஹானுக்கும் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், அழகில் அதிக நாட்டம் கொண்ட ரசிகனாம் அவர்.



பின்னாளில் மும்தாஜ் மீது மிகுந்த காதல் கொண்டிருந்த ஷாஜஹான், 1631 ஆம் ஆண்டு புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மும்தாஜ் மரணமடைந்துவிட, அவர் மீது கொண்ட காதலால் மும்தாஜுக்கு ஒரு நினைவு சின்னம் கட்டவேண்டும் என்று ஷாஜகான் விரும்பினார்.

அதன் விளைவாகவே ஆக்ராவில் யமுனையாற்றின் கரையில் தாஜ்மஹால் கட்டப்பட்டது.

தாஜ்மஹால் வேலைகள் முடிந்து மும்தாஜின் உடலை இங்கு அடக்கம் செய்யும் வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில்தான் வைக்கப்பட்டிருந்ததாம்.

முழுவதும் வெள்ளை சலவைகள் மூலம் தாஜ்மஹால் கட்டப்பட்டதால் நாட்டின் பொருளாதரமே பாதிக்கப்பட்டதாம், ஆனாலும் அதை பற்றி வருந்தாமல் யமுனையாற்றின் மறு கரையில் தாஜ்மஹால் போலவே கருப்பு சலவைகள் மூலம் தனக்கு ஒரு நினைவு சின்னம் எழுப்பி தான் இறப்புக்கு பிறகு தான் உடலை மும்தாஜின் சமாதியை பார்ப்பது போல அமைக்கும் வேலையில் இறங்கிவிட்டாராம்.




இதில் கோவம் கொண்ட அவர் பட்டத்து வாரிசான ஷாஜஹானின் மகன் ஓரங்கசிப் தந்தை என்றும் பாராமல் அவரை சிறையில் வைத்து தான் ஆட்சியை எடுத்து நடத்தினாராம்.

தன் கருப்பு தாஜ்மஹால் ஆசை நிறைவேறாமல் போனதால் சிறையில் இருந்த தன் கடைசி காலத்தில் ஷாஜஹான் தன்னையும் மும்தாஜின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யுமாறு கேட்டுகொண்டாராம்.

இது இப்படி போக, இன்னொரு பக்கம் அது தாஜ்மஹாலே அல்ல என்றும், அது ஷாஜஹானின் காலத்துக்கு முன்பே இருந்த ராஜபுத்திர கட்டிடகலை அமைப்பில் உருவாக்க பட்ட கோவில் என்றும் வெவ்வேறு ஆதாரம் மற்றும் புகை படங்களோடு பல கட்டுரைகள் வருகின்றன.

இவர்கள் சொல்வது, கரையான்கள் கட்டிய வீட்டை நல்ல பாம்பு தன் வீடாக்கி கொண்டதை போல, மொகலாய ஆட்சியில் இந்த கோவில் தாஜ்மஹாலாக மாற்ற பட்டு விட்டதாகவும், உலகில் எந்த இஸ்லாமிய கட்டிடகலை அமைப்பிலும் தாஜ்மஹால் போல இல்லை என்றும், மேலும் "மஹால்" என்று முடியும் எந்த கட்டிடமும் தாஜ்மஹாலுக்கு முன் கட்டும் வழக்கம் மொகலாய, இஸ்லாமிய கட்டிடகலையில் இல்லை என்றும் தங்கள் பக்க கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

ஒரு கோடி ஆண்டுக்கு முன் விசையங்களை தோண்டி எடுக்கும் ஆய்வாளர்கள், வெறும் முந்நூறு வருடத்துக்கு முன்னய ஆதாரத்தை தோண்டி எடுப்பது என்ன பெரிய விசையமா என்றும் கேள்வி கேட்கிறார்கள்?

இதை பற்றி அதிகம் படிக்க, படங்களை பார்க்க இணைப்பை இங்கு கொடுத்துள்ளேன்.


தாஜ்மஹாலா கோவிலா?


தாஜ்மஹால் பற்றிய கேட்ட சில சுவாரசியமான தகவல்கள்

இருபது ஆண்டுகளாக கட்டி முடிக்க பட்ட தாஜ்மஹாலின் வடிவமைப்பாலரின் கை விரல்களை வெட்டி எடுத்து அவரை சிறையில் அடைத்து விட்டாராம் ஷாஜஹான்.

இனி வரும் நாட்களில் இதுபோல வேறு யாருக்கும் வடிவமைத்து கொடுக்ககூடாது என்பது ஷாஜஹானின் நோக்கம்.

மரண படுகையில் இருந்த அந்த வடிவமைப்பாளர், இது போல நடக்கும் என்று தெரிந்துதான், அந்த கட்டிடத்தில் ஒரு குறையை வைத்து உள்ளேன்.

அதாவது மழை வரும் போது ஒரு துளி நீர் மும்தாஜின் சமாதி வரை வடியும் என்றும், அதை தன்னை தவிர வேறு யாரும் இனி எந்த காலத்திலும் சரி செய்ய முடியாது என்பதுதான் அவர் சொன்ன தகவல்.

அதே போல அக்குறையை இன்றுவரை யாராலும் சரி செய்ய அல்ல எப்படி, எங்கே இருந்து நீர் உள்ளே வருகிறது! என்று கூட கண்டு பிடிக்கக்கூட முடியவில்லையாம்.

இதே போல மற்றொரு சுவையான தகவல்.

கடந்த நூற்றாண்டின் நடுவில் தாஜ்மஹாலில் பராமரிப்பு நடை பெற்ற போது, ஒரு இடத்தில ஓட்டை விழுவதை கண்டறிந்த ஆய்வாளர்கள் அதை எப்படி கட்டிடத்தின் மற்ற இடத்திற்கு பாதிப்பு வராமல் சரி செய்வது என்று குழம்பி விடை கண்டு பிடிக்க முடியாமல், தாஜ்மஹாலில் பராமரிப்பு புத்தகத்தை புரட்டினார்களாம்.

அதில் இரநூறு வருடங்களுக்கு முன் இதே போல ஒரு இடத்தில வந்த ஓட்டையை அடைக்க வெள்ளியை காய்ச்சி ஊற்றி அடைத்ததாய் படித்து வியந்து, அதே போல செய்து பிரச்சனையை தாஜ்மஹாலுக்கு வேறு பாதிப்பில்லாமல் சரி செய்தார்களாம்.

எது எப்படியோ, வரலாற்றில் எது உண்மையோ எனக்கு தெரியாது, ஆனால் இன மத காலத்தை கடந்து இந்தியாவின் ஒரு முக்கிய அடையாள சின்னமாக கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹாலை இன்று பார்த்தாலும் ஒரு நிமிடம் யாருக்கும் மூச்சு முட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நன்றி மீண்டும் விரைவில் சந்திப்போம்.

Photobucket

Photobucket

Monday, May 9, 2011

"அட்சய திருதியை + புகைப்படம்"

அட்சயத் திருதியை இரண்டு நாட்களாக மாற்றிவிட்டதாக வந்த செய்தியை படித்து சிரித்தாலும், இது காலப்போக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வந்த "சித்திரை தமிழ் புத்தாண்டை" அரசியல் ஆதாயத்துக்காக "தை" முதல் நாள் மாற்றியது போல, வியாபார உள் நோக்கோடு நம் வியாபாரிகளாய் மாற்றிக்கொண்டது என்பதை வரும் தலைமுறைகள் மறந்து தங்கள் சேமிப்பை கரைக்க போகிறார்கள் என்ற வேதனையும் நெருடுகிறது.

யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை? என ஒரு சந்தேகமும் கூடவே வருகிறது?

"அட்சயத் திருதியை" என்று இந்துமதம் சொல்வது என்ன? என்பதை புரிந்து கொள்ள எடுத்த முயற்சியே இந்த பதிவு.

பூரியசஸ் மன்னரின் கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை.

அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் "அட்சய பாத்திரம்" போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை "அட்சய திரிதியை" என்று சொல்லும் வழக்கம் வந்தது.

இந்து மதத்தை பொறுத்தவரை "வளருதல் அல்லது என்றுமே குறையாதது" என்னும் பொருளே "அட்சயம்", பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.

கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான்.

ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது.

அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.

உண்மையில் அன்று சுமங்கலி பூஜைசெய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பதுதான் மிக சிறந்த செயலாகும்.

அன்றைய தினம் தானம் கொடுபவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை.



அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை.

இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த "தங்கம் வாங்க வேண்டும்" என்பது.

உண்மையில் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் "கல்"உப்பு போன்றவைதான் (நன்றி தினமலர் ஆன்மீக வினா விடை).

நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் "கல்"உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின்பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விசையம்).

இது போல அட்சயத் திருதியை தினத்தில் லட்சுமிகரமான எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும் வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் அர்த்தம்.

கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது.

அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக(கடவுளாக) தெரிகிறது.

அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து.

ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகும்.

வழக்கம் போல பொதுவாக தெரிந்த விசையத்தை பற்றி என் சொந்த கருத்தை பகிர்வதோடு முடிக்காமல், இன்று நான் "கிளிக்"யத்தில் பிடித்தவை சில உங்கள் பார்வைக்கு (Sony DSC-H50).

(புகைப்படத்தை சொடுக்கி பார்த்தல் இன்னும் அழகாக தெரியும்)













நன்றி.

என்றும் அன்புடன்,

Photobucket

Photobucket

Monday, April 25, 2011

சாய்பாபா...!

இது சாய்பாபா கடவுளா இல்லையா என்றோ!, அல்லது அவர் இயற்கை எய்தியதை கிண்டல் செய்யவோ!, அல்லது மதசார்பான ஆன்மீக பதிவோ அல்ல.

என் வாழ்கையில் சாய்பாபாவோடான அனுபவத்தையும் நான் புரிந்து கொண்டதையும் பகிர்ந்து கொள்வதே இங்கு என் நோக்கம்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பிறப்பின் அடிப்படையில் இந்து மத முறையில் கடவுள் நம்பிக்கை கொண்ட குடும்பமானாலும், உயிரோடு வாழும் எந்த மனிதரையும் கடவுள் என்று காலில் விழும் பழக்கம் இல்லாததுதான் எங்கள் குடும்பம்.

அதே போல நாங்கள் நம்பவில்லை என்பதால் மற்ற யாரையும் விமர்சனமும் செய்ததும் இல்லை.

இந்த நிலையில் எங்கள் பக்கத்துக்கு வீட்டில் குடிவந்தவர்களுடன் எங்களுக்கு மிக நெருங்கிய பழக்கம் வந்தது, அவர்களும் ஆண் பிள்ளை இல்லை என்பதால் என் மீது சொந்த மகன் போல அன்பு செலுத்தினர்.

"சாய்பாபா" என்ற வார்த்தையே முதன் முதலில் கேள்விபட்டது அவர்கள் மூலம்தான், அவர்கள் குடும்பம் அவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவரை கடவுளாக தொழுது வந்தனர்.

அப்போது எனக்கு ஒரு ஐந்து வயதிற்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், ஒரு முறை வழக்கம் போல சாய்பாபாவின் அற்புதங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்த அந்த அம்மா, அவர் கொடைக்கானல் வருவதாகவும் அவரை நேரில் சந்திக்க எங்களையும் அழைத்து செல்வதாக சொல்ல...!

அவர்களுடன் இருந்த நட்பின் அடிப்படையில் என் தாயும் சம்மதிக்க, ஒரு விடுமுறை பயணம் போல அனைவரும் தயாரானோம்.



கொடைக்கானலில் அது ஒரு அழகான மற்றும் அமைதியான பங்களா, அதுதான் சாய் ஸ்ருதி ஆசிரமா என்று சரியாக எனக்கு நினைவில்லை.

நாங்கள் காத்திருக்க, சிறிது நேரத்தில் முழு காவி உடையுடன் சாய்பாபா நடந்து வந்தார், நடை பாதைக்கு இருபுறமும் மக்கள் அவரை கும்பிட, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தபடி எங்களை கடந்து போனார்.

சிறுவனாக அங்கு கொடுத்த சாய்பாபா படத்தை கையில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்த நான், என்ன நினைத்தேனோ, அவர் பின்னால் ஓடி, அவர் முன் சென்று பாதையில் நின்று அவரிடம் அந்த படத்தை நீட்டினேன்.

அவர் நடக்கும் பாதையில் யாருமே போகவில்லை என்றாலும் நான் மிக சிறுவன் என்பதால் என்னை யாரும் தடுக்க வில்லை என்றே நினைக்கிறேன்.

என்னை பார்த்து சிரித்த அவர் என் தலையில் தன் கையை வைத்து " பங்காரு...! பங்காரு...!" என்று சொன்னவர்  (தெலுங்கில் பங்காரு என்றால் தங்கம் என்று அர்த்தம்) நான் நீட்டிய படத்தை வாங்கி "With Love Baba" என்று கையப்பமிட்டு மீண்டும் என்னிடமே கொடுத்து விட்டு சென்றார்.

அதன் பின் அந்த படம் நீண்ட நாட்கள் எங்கள் வீட்டில் இருந்த நினைவு இருக்கிறது, ஆனால் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை!. இதுதான் நான் அவரை சந்தித்த அனுபவம்.

அதன் பின் நாட்கள் நகர வளரும் பருவத்தில் விவேகானந்தர் சுபாஸ் முதல் கீதை, குரான் பழைய (புதிய) ஏற்பாடு முதல் ஓசோ வழியாக கண்ணதாசனின் "கம்ப ரசம்" வரை (இது தடை செய்த புத்தகம் என்று நினைக்கிறேன்) கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிக்கும் விடலை பருவத்தில் சாய்பாபா மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.

காரணம் கையில் இருந்து விபூதி, மோதிரம், வாயில் இருந்து லிங்கம் எல்லாம் எடுத்துதான் ஒரு கடவுள் தன்னை கடவுள் என்று நிரூபிக்க வேண்டுமா? அல்லது ஒரு கடவுள் தன்னை தானே கடவுள் என்று சாதாரண மக்களிடம் உணர்த்த விரும்புவது ஏன்? என்று எனக்குள் பல கேள்விகளை கேட்டு கொள்வேன்.

இப்படியாக நான் என் பாதையில் போக மொத்தமாக சாய்பாபா என்ற வார்த்தையையே மறந்து போனேன், அவர் சார்ந்த செய்திகளை கூட படிப்பதில்லை, ஆனாலும் "திரு.அப்துல்கலாம்" போல அறிவியல் விஞ்ஞானிகள் கூட இவர்கள் காலில் விழுவதை பார்த்து குழம்பி இருக்கிறேன்.



இப்படி வருடங்கள் ஓட, மீண்டும் அவர் விசையத்தில் என் கவனம் போனது தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டபோது, ஒரு நாட்டின் தேசிய அரசாங்க பணியில் ஒரு மத சாமியாரின் பங்கு என்னவாக இருக்க போகிறது, இவரை ஏன் முன்னிலை படுத்துகிறார்கள் என்று படிக்கும் போதுதான் புரிந்தது, சாய் சேவா என்று ஆங்காங்கே பஜனைகள் பாடிக்கொண்டு இருந்த ஒரு ஆன்மீக அமைப்பு "சாய் சேவா சமிதி" என்று நாட்டின் மிக பெரிய ஒரு சமூக சேவை அமைப்பாக வளர்ந்து இருப்பது.

இந்த சேவை நிறுவனம் ஆந்திரா-தமிழக அரசுகள் கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் அமைக்கும் பணிக்காக அதாவது சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.100 கோடி நிதியை அந்த நிறுவனத்தின் தலைவரான சாய்பாபா தனது டிரஸ்ட்டில் இருந்து வழங்கியுள்ளார் என்று தெரிந்த போது, வியப்பை விட அந்த நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு எனக்கு வந்தது.

எனக்கு தெரிந்து இந்திய வரலாற்றில் வேறு எந்த ஒரு ஆன்மீக மத சார்பான நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகையை நாட்டு மக்கள் நன்மைக்காக கொடுத்ததில்லை என்றுதான் நினைக்கிறேன்.

இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,மராட்டியம், ஒரிசா மாநிலங்களிலும் தனது டிரஸ்ட்டின் மூலம் நிதி கொடுத்து குடிநீர் திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.

ஆந்திரமாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 750 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து கிட்டத்தட்ட12 லட்சம் மக்களுக்கு மேல் பயன் அடைந்து வருகின்றனர்.

இது தவிர இந்த ஆசிரம நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழம், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை என பல மாநிலங்களில் பிரமாண்டமாக ஏழைகளுக்கு அனைத்தும் இலவச மாக இந்த நிறுவனம் கொடுகிறது என்று தெரிந்த போது...!

அவர் கடவுளோ இல்லையோ!, அது எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனால் இந்த நிறுவனத்தின் நல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் செயலாகவே என் மனதில் பட்டது.

எத்தனயோ லட்சம் மக்கள் தனி ஒரு நிறுவனத்தால் அல்லது அந்த நிறுவன தலைவரால் பயன் பெறுகிறார்கள் என்றால், அது இருப்பவனிடம் கொள்ளை அடித்து இல்லாதவனுக்கு கொடுக்கும் ஒரு கொள்ளைகார நிறுவனமாக இருந்தால் கூட பாராட்டலாமே...!

அப்படி இருக்கும் போது, இது ஒரு சாதாரண ஆன்மீக அமைப்பு இதை பாராட்டுவதில் எனக்கு தவறாக எதுவுமே தோன்றவில்லை.

தாகத்தை தீர்க்கும் நதி நீருக்கு யாரும் நதிமூலம் பார்ப்பதில்லை, அது போல அது எப்படி வந்த பணமாயினும் எதற்கு பயன் படுகிறது என்ற அடிப்படையில் இங்கு நான் ரிஷிமூலம் பார்க்க விரும்பவில்லை.

ஒரு சில நூறுகளை கொடுத்து ஓட்டு வாங்கி கணக்கிடமுடியாத அளவு ஊழலை செய்யும் அரசியல் கட்சிகள் கூட மக்களுக்கு இப்படி எதுவும் செய்வதில்லையே?

அப்படி இருக்க ஒரு தனிமனிதர் தன் நிறுவனத்தின் மூலம் இதை அனைத்தையும் சாதித்து இருக்கும் போது அவர் அந்த நிறுவன தொண்டர்களுக்கு கடவுளாக தெரிவதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவரால் மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைத்த அனைவருக்கும் இவர் வேறு எப்படி தோன்ற முடியும் நினைக்கிறீர்கள்?

சற்று சிந்தித்து பாருங்கள்...!, இன்றைய அரசியல் கொள்ளையர்களை விட "சாய்பாபா" ஒன்றும் அத்தனை மோசமாக என் கண்களுக்கு தெரியவில்லை.

எனவே, அவர் கடவுளா இல்லையா என்ற பைசாவுக்கு பெறாத விவாதங்களை ஒதுக்கிவிட்டு, பல நல்ல விசையங்களை செய்த ஒரு நல்ல  நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், உடலை விட்டு பிரிந்த அந்த ஆத்மா அமைதியில் உறங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Friday, April 8, 2011

அன்னா ஹசாரேவை ஆதரிப்போம்.



இந்த பதிவை பொறுத்த வரை இந்த விளம்பரத்தில் வரும் சிறுவனின் நிலையில் நான் என்னால் முடிந்த ஆதரவை தருகிறேன்.





காரணம் இது வார்த்தை ஜாலம் காட்டி சிரிக்க வைத்து ஓட்டு வாங்க பதிந்த பதிவு அல்ல.

தமிழன் என்பதை தாண்டி இந்தியன் என்ற முறையில், என் நாட்டுக்காக களமிறங்கி இருக்கும் தியாகி "அன்னா ஹசாரேவுக்கு" என் ஆதரவை தெரிவிக்கும் பதிவு மட்டுமே.

அன்னா ஹசாரேவை பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் நான் புதிதாக உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

அப்படியும் தெரியாத யாராவது இருந்தால், அவர்களுக்காக நண்பர் கிரி மற்றும் ராமலக்ஷ்மி எழுதிய இணைப்புகளை கீழே கொடுக்கிறேன், படித்து அனைவரும் உங்களால் முடிந்த ஆதரவை உங்கள் தளத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

கிரியின்

ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்!

அரசியல்வாதிகளுக்குத் தடை – அன்னா ஹசாரே அதிரடி!

அன்னா ஹசாரேவை புறக்கணிக்கும் தமிழகம்

ராமலக்ஷ்மியின்

விதை விருட்சமாகும்,அன்னா ஹசாரேக்கு ஆதரவைத் தருவோம்.

இந்த இணையதளத்தில் உங்கள் ஆதரவை கையெழுத்து மூலம் கொடுக்க முடியும்!

தாய் நாட்டையும் நாட்டுக்காக உண்மையாக பாடுபடும் தலைவர்களையும் நம் இரு கண்களை போல, நம் தாயை போல மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

இனம், ஜாதி, மதம், மொழி மறந்து இந்தியனாய் இதில் ஒன்றுபடுவோம் வாருங்கள்...!





வந்தே மாதரம்...!

Wednesday, April 6, 2011

தேர்தல் கனவு...!

வணக்கம் நண்பர்களே,

உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் இந்த பதிவை துவங்குவோம்.

இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் சச்சினுக்கு இரண்டு புறமும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முதல் உலக கோப்பை நாயகன் கபில்தேவ் இருவரையும் அமர்த்தி பெருமை படுத்தினால் இன்னும் அமர்களமாக இருக்கும் என்பது என் விருப்பம்.


தேர்தல் விதிமுறைகள்...!

கட்சி விதிகள்

எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் மூன்று தேர்தல்களுக்குள் குறிப்பிட்ட அளவு தொகுதியில், அதாவது அந்த கட்சியை சேர்ந்த மொத்த வேட்பாளர்களில் இருபத்தைந்து சதவீதம் வெற்றி பெறாவிட்டால், அந்த கட்சியின் உரிமை ரத்தாகி, அந்த கட்சியை கலைத்து விடவேண்டும்.

அப்படி ரத்தாகும் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது இனி யாருமே பயன்படுத்த முடியாமல் தடையாகி விடும்.



நாட்டில் ஒரு தனி கட்சி என்பதே தனி கொள்கையின் அடிப்படையில் இருப்பதால், எந்த ஒரு கட்சியும் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிட முடியும்.

அப்படி இன்னொரு கட்சியுடன் கூட்டணியாக இணைய விரும்பும் பட்சத்தில், இரண்டில் ஏதாவது ஒரு கட்சியை கலைத்து அதன் உரிமையை ரத்து செய்து, ஒரே கட்சியாக மட்டுமே செயல்பட, போட்டியிட முடியும்.

ஒரு முறை இணைந்த பின் மீண்டும் பிரிந்தால், அதே கட்சியை துவங்க முடியாது, வேறு கட்சியை துவங்கினாலும், புதிய சின்னம் மட்டுமே கொடுக்க படும்.

மேலும் ஒரு முறை சேர்ந்து பின் பிரிந்து மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே கட்சி துவங்க உரிமை கேட்க முடியும்.

கட்சியின் பொது குழு தலைவர் மற்றும் இதர பொறுப்புகளில் ஒருவர் அறுபத்தைந்து வயது வரை மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன் பின் அவர் அனுபவத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வழிகாட்டியாக ஒரு மதியுரை அமைச்சர் பதவிக்கு மட்டுமே தகுதி பெறமுடியும்.

யார் ஆட்சியாயினும் குடும்பத்தின் மொத்த வருமானத்தை, சொத்துக்களை கணக்கில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு அரசு சலுகைகள் மட்டுமே தர முடியுமே தவிர, இலவசம் என்று எதுவும் கொடுக்க முடியாது.



இலவசமாக கொடுக்கும் அனைத்தும் லஞ்ச ஒழிப்பு விதிமுறைகளுக்கு கீழே கொண்டுவரப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாதி, மொழி சார்ந்த கட்சிகள் துவங்க முடியாது, எல்லா அரசு ஆவணங்களில் இருந்தும் ஜாதி பற்றிய விபரங்கள் உடனடியாக நீக்கி விடப்படும்.

எந்த கட்சியும் அந்த கட்சி சார்பான தனிப்பட்ட தகவல் தொடர்பு தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி நடத்த முடியாது, அப்படி வேறு தொடர்புகளில் நடத்தும் தகவல் தொடர்பு எதிலும் கட்சி சார்பான சின்னம், முத்திரை எதையும் பயன்படுத்த கூடாது.

மேலும் அந்த தகவல் தொடர்பு மூலம் வரும் செய்திகள் உண்மையல்ல என்று எந்த ஒரு நிறுவனமும், குடிமகனும் நிரூபிக்கும் பட்சத்தில், அந்த தகவல் தொடர்பு நிறுவன உரிமை உடனடியாக ரத்து செய்வதோடு, அத்துறை சார்ந்த அத்தனை அசையும், அசையாத சொத்துக்களும் அரசாங்க சொத்தாகிவிடும்.

அரசியல் பதவி விதிமுறைகள்

ஜனநாயக நாட்டில் அரசியல் பதவிக்கு போட்டியிட கிரிமினல் வழக்கு இல்லாத மற்றும் வங்கி கடன் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்காத குடிமகன் யாருக்கும் உரிமை உண்டு என்றாலும், அப்பதவியின் நிலையை கருத்தில் கொண்டு போட்டியிட தகுதியான குடிமகனை சில கட்டுப்பாடுகளுக்குள் உட்பட்டு மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.



நாட்டின் குடிமகனாக நாள் முதல் இருப்பது வருடங்கள் உள்நாட்டில் வசித்திருக்க வேண்டும் (உயர் கல்விக்காக மட்டும் வெளிநாடு சென்றிருக்கலாம்).

கண்டிப்பாக முதுகலை பட்டம், அதுவும் ஆரம்ப பள்ளி முதல் அனைத்தும் முழுநேர படிப்பின் மூலம் (மாலை, தொலைதூர மற்றும் திறந்தவெளி எல்லாம் செல்லாது) நாட்டின் அல்லது உலக முன்னணி பல்கலைகழகம் மூலம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது தாய் மொழி அல்லது போட்டியிடும் மாநில மொழி, இந்தியாவில் அதிகம் பேசும் மொழி ஹிந்தி, உலகில் அதிகம் பேசும் மொழி ஆங்கிலம் என்று மும்மொழிகளில் (செம்மொழி கதை எதுவும் விடாமல்) முறையாக பேச, படிக்க மற்றும் எழுத தகுதி, தகுந்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது பத்து வருடங்கள் அவர் படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்த அனுபவமும் அதில் "பொதுமக்களிடம்" நல்ல பெயரும் பெற்று இருக்க வேண்டும்.

அப்படி இருந்து ஒருவர் வெற்றி பெரும் வகையில், அவருக்கு அதே துறையை ஒதுக்க வேண்டும். உதாரணமாக ஒரு காவல் அல்லது போக்குவரத்து மந்திரி என்பவர் மற்ற விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அதே துறையில் குறைந்தது பத்து ஆண்டுகள் நாட்டுக்காக பணி செய்து இருக்க வேண்டும்.

மூன்று முறைக்கு மேல் ஒருவர் பொது தேர்தலில் போட்டியிட முடியாது, அவர் சார்ந்த கட்சியின் மதியுரை பதவிகளில் அவர் இருப்பதில் எந்த தடையும் கிடையாது.



ஒரு கட்சியின் சார்பில் பொது தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின், அந்த வெற்றி வேட்பாளர் கட்சி மாறினால், கட்சியை விட்டு விலகும் போதே அவர் பதவியும் அவரை விட்டு விலகும். மேலும் அவர் அடுத்த பத்து தேர்தலில் எந்த ஒரு கட்சி சார்பாகவும் போட்டியிட முடியாது.

அது மட்டும் இல்லாமல், அவர் பதவி விலகிய தொகுதியின் இடை தேர்தல் செலவு முழுவதும் அவரோ அல்லது அவர் போகும் புதிய கட்சியோ ஏற்று கொள்ள வேண்டும்.

நாட்டின் அரசியல் தலைமை பொறுப்பில் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்த தவறு, ஊழல் நிரூபிக்கப்பட்டால், அதே தவறை செய்த குடிமகனுக்கு சட்டப்படி கிடைக்கும் தண்டனையை போல மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும்.

எந்த ஒரு நேர்மையான அல்லது எப்படி பட்ட அரசியல் தலைவராக இருப்பினும், அதை மட்டுமே தகுதியாக கொண்டு அவரின் வாரீசு அல்லது ரத்த உறவுகள் யாரும் மேலே உள்ள மற்ற அரசியல் தலைமை விதிகள் பொருந்தாத பட்சத்தில், அவர்கள் எந்த ஒரு அரசியல் பதவிகளுக்கும் போட்டியிட முடியாது.

காவல் மற்றும் நீதித்துறை இரண்டும், ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர் நேரடி கட்டுபாட்டில் இருக்கவேண்டும், இவர்கள் இருவரையும் நேரடியாக மக்கள் பொது தேர்தலில் மட்டுமே தேர்ந்து எடுக்க முடியும்.



மேலும் "ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்" இருவரும் எந்த கட்சியை சார்ந்தும் இருக்க முடியாது, இவர்கள் "தவறுகளை" முப்படை தளபதிகள், சுபிரீம் கோர்ட் நீதிபதிகள் குழு மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்த குழு மட்டுமே கட்டுபடுத்த முடியும்.

நாட்டின் எந்த ஒரு அரசியல் தலைவரையும் தகுந்த முறை மற்றும் காரணத்தோடும் எந்த ஒரு குடிமகனும் சந்திக்க முடியவில்லை என்றால், காவல் மற்றும் நீதித்துறையை நாட அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

அட போதுங்க, அதான் கனவுன்னு சொல்லியாச்சுல்ல, இத்தோட இப்போதைக்கு முடிச்சுக்குவோம்...!

போங்கப்பா, போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க, இன்னுமா இந்த உலகம் இதை நம்பிகிட்டு இருக்கு?.


நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Saturday, March 26, 2011

இதுவா என் (தாய்) தமிழ்நாடு...!

வணக்கம் நண்பர்களே,

என்னடா இது...! காணாமல் போனவன் திடீர் என்று வருகிறானே என்று நினைக்க வேண்டாம், அது ஒரு பெரிய கதை அதை தனியாக இன்னொரு சமயம் பார்ப்போம்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்ற மகிழ்ச்சி சற்றும் குறையாமல் ஒரு அருமையான இந்திய பயணத்தை முடித்து கடந்த மாதம் திரும்பி வந்தாலும், சில பல காரணக்களால் பதிவுகள் பக்கம் வர முடியவில்லை.

எப்போதும் போல இல்லாமல் இது ஒரு நீண்ட விடுமுறையாக இருந்த காரணம் நான் இந்த முறை சென்றது தனிப்பட்ட வேறு சில வேலைகளாக என்பதால்தான்.

ஒவ்வொரு முறையும் நம் மண்ணின் வளர்ச்சியை, மாற்றத்தை பார்த்து பெருமை பொங்க திரும்ப வரும் நான், இந்த முறை சற்று மனம் தளர்ந்து வந்ததுதான் உண்மை.

இந்த முறை நான் சென்ற வேலைகளுக்காக, மதுரை, பழனி, திருச்சி, திண்டுக்கல், நத்தம் என்று தென் தமிழ் நாட்டில் என் விடுமுறையை பயன் படுத்தினேன்.

நான் கல்லூரியில் படித்த காலத்தில் இந்த பகுதிகளில் பஸ் பயணம் என்பது எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிக பிடித்த ஒரு விசையமாகும்.

அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று நடுவில் வரும் நெடுஞ்சாலை தவிர இரண்டு பக்கமும் பச்சை பாய் விரித்தது போல செழிப்போடு காட்சி அளிக்கும் வயல்வெளிகள், தூரத்தில் தெரியும் தென்னை மரங்கள் என்று மனதை மயக்கும் ஒரு அழகான தமிழ் தாய் நாட்டின் விவசாய அடையாளம்.




மற்றொன்று இந்த சூழ்நிலைக்கு தகுந்து அந்த தனியார் பேருந்துகள் இசைக்கும் தமிழ் பாடல்கள்.

குறிப்பாக மதுரை, பழனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை ரோட்டில் மதியம் மூன்று மணியளவில் அவர்கள் இசைக்கும் "ஒருநாளும் உனை மறவாத, முத்துமணி மாலை" போன்ற பாடல்களை விரும்பாத யாருமே இருக்க முடியாது.

பல வருடம் கடந்து அதே பழைய நினைவுகளை சுமந்து கொண்டு போன எனக்கு இந்த முறை மிக பெரிய ஏமாற்றம் தான் மிச்சம்...!

நான் பார்த்த வயல்வெளிகள் அனைத்தும் கூந்தலை இழந்த பெண்போல மொட்டையாக இருப்பதை பார்த்ததும், ஏனோ அது என் சொந்த பெண் போல மனம் லேசாக இல்லை, இல்லை கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.

அதை விட கொடுமை, அது அனைத்தும் வீடு கட்டும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பட்டிருப்பதை பார்க்க பார்க்க மன கொதிப்பு மட்டும் ஏனோ அடங்கவே இல்லை.

என்னடா இது நம் மக்களா இப்படி மாறி விட்டார்கள் என்று விசாரித்தால், இந்த முறை நான் பார்த்த அனைவருமே சொன்னது ஒன்றே ஒன்றுதான்.

அட உனக்கு என்னப்பா, கடல்தாண்டி சீமைல இருக்க, இங்க நாய் பேய் கூட சொந்த வீடு வாங்கிருச்சு, நம்ம மட்டும் என்ன குறைச்சலா?

அதான் நம்ம நிலத்தை பிளாட் போட்டு கொடுத்தா சொந்த வீடும் கொடுத்து கையில் பணமும் தருவதாய் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சொன்னார்.



சரி, நாமும் எவ்வளவு நாளுக்குதான் இப்படி சேற்றிலும் குடிசையிலும் கிடப்பது, நமமெக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டாமா என்று நிலத்தை கொடுத்து விட்டேன் என்பதுதான் அது!.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல வரிசையாக எல்லா நிலத்திலும் அந்த நகர், இந்த நகர் என்ற பெயர் பலகையை பார்க்கும் போது வெறுப்பு மட்டுமே மிஞ்சியது.

நான் பார்த்த வரை நம் மக்களிடம் சொந்த வீடு வாங்குவது என்பது இப்போது ஒரு வாழ்க்கை லட்சியத்தில் முக்கிய ஒன்றாக மாறிவிட்டது.

என்ன கொடுமை இது?

நண்பர்களே, வீடு என்பது இயற்கை சீதோசன நிலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மனிதன் கண்டுபிடித்த நாகரீக வளர்ச்சியின் ஒரு பகுதிதானே தவிர, அது சமுதாயத்தில் நம்மை அடையாள படுத்துவது அல்ல அப்படி நாம் மாற்றினால் அது நம் வீழ்ச்சியின் ஆரப்பமே.

மேலும் ஒரு வீட்டின் விலை என்பது, அது கட்ட பட்டிருக்கும் நிலத்தின் அரசால் மதிப்பிட பட்ட விலை, அதின் பயன் படுத்த பட்டிருக்கும் கல் மற்றும் மரத்தின் விலை, அதோடு அதை கட்ட வேலை செய்தவர்களின் கூலி என்பதே ஆகும்.

ஆனால், இன்று அந்த கல்லையும் மணலையும் சேர்த்த கட்டிடத்தின் விலையை கண்மண் தெரியாமல் உயர்த்திக்கொண்டு போவது என்பது கொடுமை, அதை விட கொடுமை அதையும் நம் மக்கள் வங்கியில் கடன் வாங்கி வாங்குவது என்பது மிக மிக கொடுமை.

எந்த ஒரு வங்கியிலும் வீட்டு கடன் வாங்கி இருக்கும் ஒருவர், தன் மாத தவணை மற்றும் தன் மொத்த தவணையின் கூட்டு தொகை என்ன என்பதை ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி கணக்கிட்டு பாருங்கள், உங்கள் வாழ்நாள் உழைப்பு இப்படியா வீண் போக வேண்டும் என்று தோன்றும்?

இது ஒரு பக்கம் இருக்க, நம் சொந்த தொழிலான விவசாயத்தை அழித்து, அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவது என்பது, சொந்த செலவில் சூன்யம் வைத்து நம்மை நாமே அழிப்பதற்கு சமம்.

இப்படி விவசாயம் அழிந்து போவதால் இன்று காய்கறிகளின் விலை வாசி நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்து இருப்பதோடு நம் தேவைக்கு பக்கத்து மாநிலங்களை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.

தற்போது அரசாங்கம் விளைநிலத்தை கட்டிடம் கட்ட விற்பனை செய்ய கூடாது என்று சட்டம் கொண்டு வருவதாக கேள்வி, ஆனாலும் விளைநிலங்களை அழிப்பது குறைந்த மாதிரி தெரியவில்லை.

இப்படி விளை நிலத்தின் விலையை ரியல் எஸ்டேட் ஏற்றி விட்டுக்கொண்டிருக்கும் பண போதையில் நம் மக்கள் விளைநிலங்களை கண் மண் தெரியாமல் விற்பனை சந்தைக்கு கொண்டுவர, இடையில் புகுந்து கேரளா மக்கள் மொத்தமாக இந்த நிலங்களை வாங்கி போட்டு இருக்கிறார்கள்.

இது இப்படியே தொடர்ந்தால் பிற்காலத்தில் நம் சொந்த மண்ணின் விலையை அவர்கள் நிர்ணயிக்ககூடும் அல்லது அவர்கள் விவசாயம் செய்து அதை நமக்கே விற்கக்கூடும், இந்தியன் என்ற தாய் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறுதானே?

இப்படியே போனால், வடிவேல் (அவருக்கும் இப்போது நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன், இதை பற்றி வேறு பதிவில் பார்ப்போம்) காமிடியில் வருவது போல தமிழ் நாட்டில் விவசாயம் செய்ய தமிழனுக்கு எந்த இடமும் இல்லாமல் போய், ஒரு கேரட் இரநூறு ரூபாய் என்னும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.



ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, இப்போதும் நமக்கு சிந்தித்து செயல்பட நேரம் இருக்கிறது. நாம் சேற்றில் "கால்" வைப்பதால் நம் மக்கள் சோற்றில் "கை" வைக்க முடிகிறது என்ற பெருமையோடு நம் பாரம்பரிய விவசாயத்தை அழிந்து விடாமல் காப்பது நம் தாய்மண்ணுக்கு செய்யும் கடமையாகும்.

அப்படி நாம் உணரவில்லை என்றால் அது பணத்துக்காக தாயை விற்பதற்கு சமம் என்று காலம் ஒருநாள் கண்டிப்பாய் உணர்த்தும்.

இயற்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சோதித்தாலும், சற்றும் மனம் தளராமல் ஜப்பானில் விவசாயம் செய்ய இடமில்லாமல் கிடைக்கும் இடத்தை (மலைகளை கூட வெட்டி) விளை நிலமாக்கி பட்ட படிப்பை முடித்த இளைய தலைமுறைகள் கூட விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால், நாம் இருக்கும் விளை நிலத்தை மலடாக்கி கட்டிடம் கட்டுகிறோம்?.

நாகரீகத்தில் முன்னேறுகிறோம் என்று நினைத்து, நம் சொந்த அடையாளத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அது இங்கு தவறாகாது என்று நினைக்கிறேன்.

நான் இந்த முறை சென்ற வேலை என் வாழ்நாள் கனவின் முக்கிய ஒன்றாகும், சில ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் தென்னை மரங்களை வைத்து நடுவில் ஒரு வீட்டை கட்டி, அந்த வீட்டின் பின்புறம் எனக்கு தேவையான காய்கறிகளை நானே பயிர் செய்து என் முதுமை காலத்தில் வாழவேண்டும் என்பது என் கனவு.

அதற்கான முதல் வேலையாக அமைதியான இடத்தில உள்ள விளை நிலங்களை தேடி சென்றபோது தான் மேல் சொன்ன அனைத்தும் என் கண்ணில் பட்டது.

இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் அனைவரும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வது என்பது சாத்தியமாகாது என்பது உண்மை.

ஆனால், விவசாயத்தில் இருப்பவர்கள் அதை தொலைத்து விடாமல் பாதுகாக்கலாமே?

மேலும், விவசாய இடமில்லாமல் நகரத்தில் இருப்பவர்கள் கூட, வீட்டில் ரோஜா தொட்டி வைப்பதை போல நமக்கு தேவையான மிளகாய், தக்காளி, கீரை போன்றவற்றை சொந்தமாக வளர்த்து பயன் படுத்தலாமே?.

நம் குழந்தைகளும் இந்த வீட்டு விவசாய முறை மூலம் நம் பாரம்பரிய விவசாய தொழிலை மறக்காமல் இருக்க இது உதவும் என்பது என் நம்பிக்கை.

நீங்கள் எவ்வளவு படித்து எந்த நாட்டிலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் தாய்க்கு செய்யும் பிறவி கடமையை போல, உங்கள் தாய் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது எந்த ஒரு சூழ்நிலையிலும், விவசாய நிலையத்தை விவசாயத்தை தவிர மற்ற எந்த ஒரு பயன் பாட்டுக்கும் விற்காமல் இருப்பதே ஆகும்.

நன்றி, மீண்டும் விரைவில் சந்திப்போம்.

Monday, December 13, 2010

தென்கொரியா வரும்முன் கவனிக்கவேண்டியது!

வணக்கம் நண்பர்களே,

தென்கொரியாவில் குளிர் காலம் ஆரமித்துவிட்டது, கடந்த வாரம் முதல் நல்ல பனிபொழிவு துவங்கிவிட்டது.

தென்கொரியாவின் பருவநிலைகளை பற்றி சில பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த பதிவு முழுதாக தென்கொரியாவின் தட்பவெட்ப நிலைகளை மட்டும் வைத்து எழுதுவதால், இனி இங்கு வரவிருக்கும் நம் மக்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.

தென்கொரியாவை பொறுத்தவரை, மொழி, உணவு பிரச்சனைக்கு அடுத்த படியாக வருவது இங்குள்ள தட்பவெட்ப நிலைதான்.

ஒரு வருடத்தில் நான்கு வகையான சீதோசன நிலைகள் வருகின்றது, அதை இங்கு பார்ப்போம்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை (Spring Session), கடும் குளிர் காலம் முடிந்து வருவதால் இது மழையோடு துவங்கும், இதனால் குச்சியாக கிடந்த அத்தனை செடிகளும் மரங்களும் பசுமையாகி விடும்.

இதை மழைகாலம் என்பதை விட பூக்களின் காலம் என்றுதான் சொல்ல வேண்டும், எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக பூக்கள்தான் தெரியும்.



நகரமே அத்தனை அழகாக இருக்கும், சாதாரன உடைகளுடன் ஒரு சுவட்டர் அல்லது லேசான குளிர்தாங்கும் ஜாக்கெட் போதுமானது.

வெட்பநிலை 10 தல் 15 டிகிரி சென்டிகிரேட் போல இருக்கும்.

செர்ரி பிளாசம் வருவதும் இந்த காலத்தில்தான், உலகெங்கும் இருந்து மக்கள் இதைகாண கொரியா, ஜப்பான் வருவது வழக்கம்.

நான் செர்ரி பிளாசம் ஜப்பானில் இருந்த போதுதான் முதன் முதலில் பார்த்தேன். ஆனால் இங்கு வந்தவுடன்தான் என் வீட்டு வாசலிலேயே பார்த்தேன். தென்கொரியாவை பொறுத்தவரை எல்லா இடங்களிலும் பாரம்பரிய பூக்கள் பூக்கும் மரங்கள் இருகின்றன.

இந்த காலத்தில் சீனாவில் இருந்து வரும் தூசி படலம் (Yellow sand dust) அதிகமாக காணப்படும். இது தோலுக்கும் குறிப்பாக கண்களுக்கு பாதிப்புகளை கொடுக்கும், அதனால் எப்போதும் வெளியே சென்று வந்தவுடன், முதலில் கை, கால் முகம் கண்கள் அனைத்தும் சுத்தமாக கழுவவேண்டும். சுத்தமாக கழுவும் முன் குறிப்பாக குழந்தைகளை கொஞ்சவோ முத்தமிடவோ கூடாது.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை (Summer), வெட்பநிலை மாறி கோடை காலம் வரும், மொத்தமாக பார்க்கும் போது வெட்ப நிலை 25 முதல் 28.3 டிகிரி சென்டிகிரேட்தான் என்றாலும், காற்றில் ஈர தன்மை வெகுவாக குறைத்திருக்கும்.

சாதாரண உடையில் இருக்கலாம், ஆனால் என்னதான் சாதாரண உடையில் இருந்தாலும் வேர்வையும் பிசு பிசுப்பு தன்மையும் அதிகமாக இருக்கும், வீட்டில் குளிசாதனம் இல்லாமல் இருக்க முடியாது.

தென்கொரியாவை பொறுத்த வரை வீட்டு பொருட்கள் வாங்குவது முதல் குடும்ப வரவு செலவு அனைத்தும் பெண்கள்தான் என்பதால், வெளியில் எங்கும் அதிகமாக பெண்களை மட்டுமே பார்க்க முடியும்.

இந்த காலத்தில் வெயில் கூட கூட, பெண்கள் ஆடை குறையும், குளியலரையில் இருந்து அப்படியே வந்தது போல அரையும் குறையுமாக வண்ணமயமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அவ்வளவு சின்ன டிடவுசரில் அவர்களை பார்த்தல் ஆண்களுக்கே வெக்கம் வந்துவிடும்.



ஆனா மக்களே "கபர்தார்" (ஜாக்கரதை)!, நம்ம ஊர் மாதிரி நினைத்துக்கொண்டு தவறாக ஏதாவது செய்தால் போலிஸ் வந்து நம் டிடவுசரை கழட்டிவிடும்.

செப்டம்பர் முதல் நவம்பர் வரை (Autumn), அப்படி இப்படின்னு கண்ணை கழுவி கோடை காலத்தை முடித்தால் வருவது அற்புதமான இலையுதிர் காலம், என்னை பொறுத்தவரை, தென்கொரியாவிற்கு வர இதுதான் சரியான சமயம்.

வெட்பநிலை 10 டிகிரிக்கு கீழே இருந்தாலும், மரங்கள் எல்லாம் இலைகள் பழுத்து மஞ்சள் மற்றும் காப்பி நிறத்தில் நகரமே அவ்வளவு அழகாக இருக்கும்.





ஆசியாவில் இதை போல ஜப்பான் மற்றும் சீனாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணமுடியும் என்று நினைக்கிறேன், நகரை சுற்றி பார்க்க இது மிக சிறந்த நேரம்.

இதே சமயத்தில் இங்கு திருவிழாக்கள் வருவதால் விடுமுறை, கேளிக்கை, கொண்டாட்டம் என்று எங்கும் மகிழ்ச்சி மயமாக இருக்கும்.

இலையுதிர் காலம் முடிய போகும் போது ஓரிரு வாரம் காற்று அடிக்கும் பாருங்க, சும்மா நம்ம வீட்டையே நாலு தெரு தள்ளி கொண்டு போய் வைத்துவிடும் அப்படி பகலும் இரவும் பேய் காற்று அடிக்கும்.

சுட்டி பெண்கள் வேண்டும் என்றே (குட்டை)பாவாடையோடு வருவார்கள்.

டிசம்பர் முதல் மார்ச் வரை (Winter), அடித்த காற்றில் எல்லா இலைகளும் உதிர்ந்து நகரமே மொட்டை அடித்தது போல இருக்கும் போது குளிர்காலம் துவங்கும்.

பொதுவாக டிசம்பர் முதல் வாரத்தில் -01 முதல் -03 டிகிரி சென்டிகிரேட் என்று துவங்கும் பனிபொழிவின் அளவு கூடிக்கொண்டே போக போக வெட்ப நிலை எதிர்பார்க்காத அளவு குறைந்து கொண்டே போகும்.

அதிக பட்சமாக -10 முதல் -15 டிகிரி சென்டிகிரேட்வரை போகக்கூடும், முப்பது வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரியில் -20+ டிகிரி சென்டிகிரேட் சென்றது.

குளிர் காலத்தின் துவக்கம் டிசம்பர் முதல் ஜனவரி பாதிவரை லேசான பனிபொழிவாக இருப்பதாலும் கிறிஸ்மஸ், புதுவருடம் என்று விடுமுறைகள் வருவதாலும், நகரமே வண்ண மயமாக அதுவும் இரவு நேரம் மிக ரம்யமாக இருக்கும்.

வானில் பனிமழை தூவ, தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு "லாஸ்ட் கிறிஸ்மஸ், ஜிங்கில் பெல்ஸ்" போன்ற பாடல்கள் ஒலிக்க, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தங்கள் துணையுடன் கொரியா டக்கீலா "சோஜு" சூட்டில் கட்டியணைத்துக்கொண்டு நடக்க, நாடே திருவிழா கோலத்தில் மிதக்கும்.

வார இறுதி இரவு வாழ்கைக்கு மற்றும் தேனிலவு சுற்றுலாவுக்கு இது அற்புதமான காலம்.

அதன் பின், குளிர் கூட கூட, அதிக அளவு குளிர்தாங்கும் ஆடைகள் இல்லாமல் வெளியே போக முடியாது, வீட்டில் ஹீட்டர் மூலம் வெட்ப நிலையை +20+ டிகிரிக்கு மாற்றாமல் இருக்க முடியாது.

குழந்தைகளை இந்த காலத்தில் அதிக பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும், அடிக்கடி அவர்கள் உடல் வெட்ப நிலையை கண்காணிக்க வேண்டும்.ஜனவரி கடைசி முதல் எப்படா ஏப்ரல் வரும் என்று ஏங்குமளவு குளிர் நம்மை படுத்தி எடுத்து விடும்.



இங்கு கட்டிட அமைப்புகள் இங்குள்ள சீதோசன நிலைக்கு சாதகமாக அமைக்கபட்டுள்ளன, வீட்டின் தரைகள் மரத்தால் செய்து அதன் அடியில் ஹீட்டர் இணைப்பு கொடுக்க பட்டு இருக்கும், நாம் நம் வீட்டின் மின்விசிறியின் அளவை கூட்டுவது போல, ஹீட்டர் மூலம் வீட்டின் தட்பவெட்ப நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

குடிநீர் முதல் அனைத்து பயன்பாட்டு நீரும் சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் என்று நமக்கு வேண்டியவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், இவை அனைத்தும் நம் வீட்டின் கேஸ் இணைப்பின் மூலம் செயல்படும். அடுப்பு மற்றும் மின்விளக்கு போன்றவை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தும்.

இங்கு நான் குளிர் காலத்தில் இருந்து பலமுறை எல்லா இடங்களையும் பார்த்து விட்டதால், இந்த முறை புது வருடத்தை வரவேற்க விடுமுறைக்காக நான் இந்தியா செல்கிறேன்.

ஆகவே,நடந்தது நடந்தவையாக இருக்க, இனி நடப்பது நல்லதாக இருக்க, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னகையை செலுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ், புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி!.
 

Blogger Widgets