என்னை பற்றி நானே என்ன சொல்வது?
உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.
இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.
இந்த உலகில் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் "அம்மா" மதிப்பிட முடியாத என் அன்னைக்கு மட்டுமல்ல அன்னையுள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் "அன்னையர் தின வாழ்த்துக்கள்"
தாய், நம்முடைய பிறப்புக்கு மூலம் அவளே. உலகத்தில் நமக்கு சர்வ நிச்சயமாக தெரிந்தது எது? தாய், அவள் மட்டுமே......இன்ன தாயின் வயிற்றில் பிறந்தோம் என்பது மட்டுமே நாம் அறிவோம், தாய் காட்டித்தான் தகப்பனை அறிவோம், தகப்பன் கொண்டு போய் உட்காரவைத்து "ஹரி நமத்து சிந்தம்: என்று எழுத சொல்லும்போது தான் நாம் குருவை அறிவோம், அன்பே கடவுள் அறிவே தெய்வம், என்று குரு சொல்லி கொடுத்த பின்னாலேதான் நாம் தெய்வத்தை அறிவோம், அதனலேதான் சுருக்கமாக நான்கு சொற்களைவைத்து "மாதா, பிதா, தெய்வம், குரு" என்று சொன்னார்கள்.
இந்த நான்கினுடைய வரிசையிலே சர்வ நிச்சயமாக நமக்கு தெரிந்த ஒரே உண்மை மாதா, சந்தேகத்துக்கு இடமாக இருப்பது தெய்வம், சர்வ நிச்சயமாகவும், சந்தேகத்துக்கு இடமாகவும் இருப்பது பிதாவும், குருவும் , இந்த இருவர் பற்றி சந்தேகம் எழலாம் இந்த சந்தேகங்கள் உண்மையாகவும் இருக்கலாம், தெய்வம் முழுக்க சந்தேகத்துக்கு இடமானது ஆனால் அடையும் பொது அது முழுக்க உண்மையானது, மாதா, சந்தேகத்துக்கே இடம் இல்லதவள் அவளிடம் இருந்தே நம்முடைய ஜனனம் ஆரம்பம் ஆகின்றது,
அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்
அன்னையுள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் - கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து.