Friday, April 24, 2009

எனக்குள் ஒரு கவிஞன்

எனக்குள் ஒரு கவிஞன் இருந்தான் , நிஜமாதாம்ப்பா நம்புங்க .

அக்கௌன்ட் வச்சு அடிக்கிற தம்ம, அம்ப்பது பேர் சேந்து அடிக்கிற கல்லுரி காலத்தில், என்னோட காதல் கவிதைகள் பல காதலுக்கு தூது போயிருக்கு(ஒரு தலை காதலுக்கு கூட) இன்னும் நம்பலேன ஒரு குட்டி கவிதை சாம்பிள் சரியா?

இறுகிப்போன என் இதயத்குள் ,
இறந்துபோன உன் நினைவுகள்,
உருகிஓடும் என் கண்ணிரால்,
கழுவ முடியாத கனவுகள்.

எப்படி...., நாங்களும் எழுதுவோம்ல கவிதை ...

சரி , இப்ப விசயத்துக்கு வருவோம், இப்படியே நானும் " பாரதி என் காதலன்கிற " நெனப்புல பல பக்கத்த கிறுக்கி தள்ளுவேன் , என்னோட நண்பன் குமார்தான் என் எல்லா கவிதைக்கும் முதல் ரசிகன், என்னோட ஒரு " கவிதை தொகுப்ப " அவன் பத்திரமா எடுத்து வச்சு இருந்தது எனக்கு தெரியாது, நாட்கள் நகர, வருஷங்கள் ஓட பனிரெண்டு வருசத்துக்கு அப்புறம் என் கல்யாணத்துக்கு அந்த " கவிதை தொகுப்ப" அழகா கலர் பேப்பர்லாம் சுத்தி என் மனைவிகிட்ட கொடுத்தான், நானும் ரொம்ப நம்ம பெருமையை நெனச்சு " ரொமான்டிக் லுக்கோடா " மனைவிய பார்தேன் , அப்புறம் கல்யாண வேலைல அப்படி இப்படின்னு இருந்ததுல இந்த கவிதை மேட்டர மறந்துட்டேன்.

ஒரு நாள் குமாரோட போன்ல மொக்கையபோட்டு இருகும்போது மாப்ள கேட்டான், என்ன மச்சான் தங்கச்சி நம்ம கவிதை பரிச பாத்து சும்மா அசுந்துருச்சாடானு கேட்டான், நானும் வேக வேகமபோய் என் அன்பு மனைவிகிட்ட மாப்ல குமாரோட பரிச பாத்தியானு கேட்டேன், கொஞ்சம் கூட யோசிகாம என் மனைவி சொன்ன பதில கேட்டு நானும் மாப்ளையும் ஆடி போய்டோம் ஆடி.

அப்படி என்ன சொன்னானு பாக்கணுமா ?....படிங்க படிங்க புரியும்

"அட போங்க, நீங்களும் உங்க மாப்ளையும், அவரு பரிச கொடுத்த பேப்பர்ல ஒரு பக்கம் தான் அத்தை சொன்ன சமையல் குறிப்பெல்லாம் எழுத முடிஞ்சது, பின் பக்கமெல்லாம் எதோ எழுதி இருகுங்குகன்னு....சொன்னா பாருங்க :-),

அன்னைக்குதான் நான் புரிஞ்சுகிட்டேன் காதலக்கும் கவிதைக்கும் " ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரம்னு". அந்த பொன்னான நாளுக்கு அப்புறம் எனக்குள்ள இருந்த கவிஞன் என்ன ஆனான்னா ..........:-(

"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" ...ஆ ..ஸ்டார்ட் த மியூசிக்னு ..... சொல்லிட்டு எனக்குள் ஓடினவன் தான்.........இன்னைக்கு வரைக்கும் வரவே இல்ல.

"என்ன கொடுமை சார் இது" இப்போ நீங்க சொல்றது எனக்கு கேக்குது, ஓகே, ஓகே...

இதோட என்னோட கவிதை அனுபவத்த முடித்து கொள்கிறேன், ரொம்ப சொன்னா உங்களுக்கும் போர் அடிக்கும். அதுனால வேற ஒரு அனுபவத்தோட திரும்ப சந்திப்போம்.

என் வலைப்பதிவில், உங்கள் நேரத்துக்கு என் அன்பான நன்றி.
 

Blogger Widgets