Wednesday, September 30, 2009

திருநங்கைக(ளை)ளுக்கு எதுவுமே செய்யவேண்டாம்

I - ஆமாம் கண்டிப்பாக, ஏன்? என்றால் அவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், அல்லது தகாத முறையில் அணுகி பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்று நினைத்த "நல்லவர்கள்".

II - அதெப்படி இவன் இப்படி சொல்லலாம், எதுவுமே செய்யாவிட்டால்! எப்படி அவர்கள் இந்த சமுதாயத்தில் முன்னேற முடியும்?

"மாட்னான்டா மச்சான்"......வா உள்ள போய் பின்னூட்டத்த போட்டு இவன கிழிப்போம் என்று நினைத்த "ரொம்ப நல்லவர்கள்".

தலைப்பில் "(ளை)" விட்டு விட்டு நீங்கள் படித்திருந்தால்! இந்த பதிவிற்குள் நீங்கள் வந்ததன் நோக்கம், மேல் சொன்ன இரண்டில் ஒன்றாகவே இருக்கும் என்பதை நான் அறிவேன், உண்மையில் இந்த இரண்டு காரணமுமே இல்லாமல்! நீங்கள் வந்து இருந்தால் உங்களுக்கு கூடுதலாக ஒரு நன்றி :-)).

இப்படி இந்த இரண்டு நோக்கத்தில், எந்த நோக்கத்தோடு நீங்கள் வந்து இருந்தாலும், பதிவை முழுவதும் படித்ததும் "அடடா வடை போச்சே" என்று பின்னூட்டம் போடும் முன் புலம்ப போவதுதான் உண்மை.

அதனால "ஓவர் டென்சன ஓரமா ஒதுக்கி வச்சுட்டு" முழு பதிவையும் படிங்க மக்களே.சரி, இனி முதல் I-காரணத்தை பார்போம்.

தகாத முறையில் அணுகி பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் மற்றும் விபச்சாரம் செய்கிறார்கள், என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தாயினும், அதன் காரணத்தையும் கண்டிப்பாய் நாம் இங்கு பார்க்க வேண்டும் இல்லையா?

திருநங்கை அல்லாத வேறு ஆண் திருடவோ, பிச்சை எடுக்கவோ அல்லது பணம் பிடுங்கவோ செய்யவில்லையா?

திருநங்கை அல்லாத வேறு பெண் பாலியல் தொழில், விபச்சாரம் செய்யவில்லையா?

பின் ஏன்? அப்படி பட்டவர்களுக்கு கொடுக்கும் அடிப்படை அங்கிகாரம் கூட, திருநங்கைகளுக்கு கிடைப்பதில்லை? என்பதை இங்கு நாம் கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும்.

"வாழ வழியில்லாத தன் குடும்பத்தை காப்பாற்ற, கதையின் நாயகி தன் உடலை விற்கிறாள்", அல்லது "கதையின் நாயகன் சிறு வயதில் ஒரு நேர உணவுக்காக திருட ஆரபித்து, தனக்கு பணம் கொடுகாதவர்களை அடித்து, வளர்ந்து பின்னாளில் மிக பெரிய உலக கடத்தல் மன்னனாக வருகிறான்."

இந்த கருவை சார்ந்த திரைகதை எனக்கு தெரிந்த வரை, எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெற்றிவாகை சூடிய திரை படங்கள் ஆகும், இதை நாம் ஏற்றுக்கொள்வோம், கொண்டாடி விருதும் கொடுப்போம், ஏன்? என்றால் அது வெறும் பொழுதுபோக்குகாக மட்டும்.

இதுவே நம் சமுதயாத்தில் நமக்கு நடுவில் நடந்தால்? நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது இல்லையா?

எப்படி? என்று சிந்தித்து பார்த்தால், சொந்த வீட்டில், சொந்த நாட்டில் வாழ அங்கிகாரம் இல்லை, வேலை செய்ய தயாராய் இருந்தாலும், படித்த படிப்பையே ஏற்க மறுக்கும் சமுதாயம், மொத்தத்தில் உயிர் வாழ வேறு எந்த வழியுமே இல்லை?

இந்த சூழ்நிலையில், இங்கு ஒரு மனித உயிர் என்னதான் செய்யமுடியும்?

இன்னும் சற்று சிந்தித்து பார்த்தால், எங்கோ கண்டம் தாண்டி இந்தியன் தாக்கப்பட்டால் இங்கிருந்து குரல் கொடுக்கிறோம்...கடல் தாண்டி தமிழன் தாக்கப்பட்டால் இங்கிருந்து குரல் கொடுக்கிறோம் (குரல் மட்டும்தான் கொடுக்கிறோம் என்பது வேறு விசையம்)...நம் நாட்டில் நம்மை சுதந்திரமாக வாழவிடவில்லை என்று வெள்ளைகாரனை வரலாறாக்கி, இன்றும் நம் தலைமுறைகளை படிக்க செய்கிறோம் இல்லையா?.

ஆனால், நம் நாட்டில், நம்முடன் பிறந்த மக்களை, நாமே வாழ விடாமல், எல்லா வழிகளையும் நசுக்கி, அவர்களை சமுதாயத்தில் நம்மில் ஒருவராக ஏற்க மறுப்பதை! என்னவென்று சொல்லுவது? இதை ஒழிக்க இன்னும் எந்த "சுபாஸ் சந்திரபோஸ்" பிறப்புக்கு நாம் காத்திருக்கிறோம்?.

உலகிலேயே உயர்ந்த வலி என்று சொல்லப்படும் "பிரசவ வழியை விட அதிகமான உடல் வலியை திருநங்கையாக மாற அவர்கள் அடைகிறார்கள்", ஆனால் தினம் தினம் அதை விட கொடிய மனவலிகளை மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அவர்களுக்கு தருகிறோம் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

அதனால், முதலில் நல்ல முறையில் வாழ அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் ஒரு சமஇடத்தை கொடுத்து விட்டு, அதன் பின் கணக்கு எடுத்துப் பார்த்தால், நிச்சியமாக பாலியல் மற்றும் பிச்சை எடுக்கும் திருநங்கைகள் எண்ணிக்கை அதை தொழிலாக செய்யும் மற்ற ஆண், பெண்ணை விட வெகுகுறைவாகவே இருக்கும் என்பது இங்கு என் கருத்து.இங்கு இடைமறிக்கும் இரண்டாம் - II -காரணத்தை பார்போம்.

அதெல்லாம் சரி, எதுவுமே செய்யவேண்டாம் என்று எப்படி சொல்லலாம்? பின் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்? என்பதுதான் இங்கு கேள்வியாகக்கூடும்.

முதலில் தனிப்பட்ட முறையில், நாம் இதுவரை என்ன நல்லது செய்து விட்டோம்? என்று நினைத்து பார்க்கவேண்டும்!

அதனால் திரும்ப சொல்கிறேன் "திருநங்கைகளுக்கு நாம் எதுவுமே செய்யவேண்டாம்!..... அப்படியே கீழே ஒவ்வென்றாக "ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்" ரைமிங்ள படிங்க.

திருநங்கைகளோடு பேசுவதும் பழகுவதும், அவர்களைப் பற்றி பேசுபவர்களும் திருநங்கையாக மட்டுமே இருக்க முடியும் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

திருநங்கைகளை கண்டால் அவர்கள் மனம்,உடல் காயப்படும் படி பேசவோ, துன்புருத்தவோ வேண்டாம்.

அவர்கள் எதாவது தேவைப்படும் நோக்கத்தில் நம்மை அணுகினால், பாலியல் நோக்கத்தோடு அல்லது பிச்சை கேட்ட மட்டுமே அணுகுவதாய் நினைக்க வேண்டாம்.

அப்படியே பண உதவி (பிச்சை என்று கூட சொல்ல வேண்டாமே) கேட்டு வந்தால் உதவ மனம் இல்லாவிட்டால், அவர்களை இழிவு படுத்தி பேசவோ அடிக்கவோ வேண்டாம்.

உங்களை நாடி வருபவர்களுக்கு நீங்கள் உதவ நினைத்தாலும், பரிதாபத்தை காட்டி அவர்கள் தாழ்வு மனப்பன்மையை வளர்க்கும் விதமாக எதுவும் செய்துவிட வேண்டாம்.

மனிதனாய் பிறந்த அனைவரும் சமம் அதனால், பொது இடங்களில், நடை முறை வாழ்கையில் அவர்களை வித்தியாசப்படுத்தி தனிமைப் படுத்த வேண்டாம்.

வெறும் அரசியல் ஆதாயம், விளம்பரத்துக்கு மட்டும் அவர்களை பயன்படுத்த வேண்டாம்.

தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் தகுந்த வேலை வாய்ப்பை கெடுக்க வேண்டாம்.

ஆண்கள், பெண்கள் சேர்ந்து போகும் நண்பர்கள் கூட்டத்தில் திருநங்கைகள் இருக்கக்கூடாது என்று நினைக்க வேண்டாம்.

நாம் இப்படி "எதுவுமே செய்யாமல் இருந்தால்", அதுவே அவர்கள் இந்த சமுதாயத்தில் முன்னேற நல்ல வழி வகுக்கும்.

எப்படி என்றால்,

முதலில் இந்த சமுதாயத்தில் நமக்கு இடம் இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை விலகும், இதனால் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ போல், நாமமும் இந்த சமுதாயத்தில் வாழ முடியும் என்ற தன்னபிக்கை பிறக்கும்.

வாழ வழியும், சக மக்களின் அன்பும் ஆதரவும் கிடைத்து அவர்களும் இந்த சமுதாயத்தில் சமமாக மதிக்கப்படும் போது, மற்றவர்களைப்போல கண்ணியமான வாழ்கை வாழ அவர்களும் கல்வி, கலையை வளர்த்துக் கொள்வார்கள்.

இதனால் அவர்களுக்கு பிச்சை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் அவசியம் இருக்காது.

இப்படி மற்றவர்களை போல அவர்களாகவே தங்களை வளர்த்துக்கொள்ள முடியும், ஆகையால் நம் அன்றாட வாழ்கையை விட்டு விட்டு, திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக நாம் தனியாக பெரிய தியாகம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை, அவர்களையும் சமமாக சமுதாயத்தில் நடத்துவதை தவிர.

சரி, இப்படி செய்வதால் என்ன ஆகும்?

ஒவ்வொரு தனி மனிதனும், இப்படி செய்தால், வெகு சீக்கிரத்தில் ஆண், பெண் இருக்கும் எல்லா இடத்திலும் எல்லா துறைகளிலும் நம்மில் ஒருவராக சக்தியின் அம்சமான திருநங்கைகளை பார்க்க முடியும், அதன் பின் தான் நாம் கொண்டாடும் சுதந்திர தினத்துக்கும் ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும்.

ஆகவே திருநங்கைகளுக்கு முடிந்த வரை அன்றாட வாழ்கையில் வலியை கொடுத்து, தீண்டாமை கொடுமை பண்ணி, அவர்கள் முன்னேற்றத்க்கு முட்டுகட்டை போடாமல் இருந்தாலே போதும் என்பதே இந்த பதிவவின் நோக்கம்.

இந்த பதிவில் "நாம்" என்று என்னையும் சேர்த்து சொன்னதன் நோக்கம், சமுதாயத்தில் நானும் ஒருவன் என்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்த காலத்தில் டெல்லியில், ஒரு சில நூறு ரூபாய் நோட்டுக்களை கொடுத்து உதவியதை தவிர, நானும் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்பதே உண்மை.

மேலும் இதுவரை எனக்கு, திருநங்கை(கள்) நட்பு கிடைத்தது இல்லை, இனி கிடைத்தால் ஒரு நல்ல நண்பனாக, அவர்கள் மனதை புரிந்து கொள்ள முயர்ச்சி செய்ய எனக்கு எந்த தயக்கமும் இல்லை.திருநங்கை வரலாறு, நாம் அனைவரும் அறிந்தது என்றாலும், தெரியாமல் வருபவர்களுக்கு இங்கு சொடுக்கி,"திருநங்கைகள் வரலாறு" தெரிந்து கொண்டு, சக்தியின் அம்சமான திருநங்கைகளை அந்த கடவுளின் குழந்தைகளை வணக்காவிட்டாலும், சமமாக மதித்து நட்புடன் பழக கற்றுக்கொள்ளுங்கள்.

சரி, இவ்வளவு பெரிய பதிவை திருநங்கைகளை பற்றி எழுதி விட்டு, அவர்களுக்கு பயன் படும் எந்த தகவலும் இல்லாமல்! எப்படி பதிவை முடிப்பது?

இதோ திருநங்கைகளுக்கு ஒரு நல்ல தகவல்.

அரவாணிகளுக்கு உதவி செய்வதற்காகவே சென்னை அண்ணாநகர் மேற்குவள்ளலார் காலனியில் “இந்தியன் கம்யூனிட்டி வெல்பர் அசோசியேஷன்” (ஐசிடபிள்யூஓ) செயல்பட்டு வருகிறது.

அரவாணிகள் பற்றி மக்களிடம் உள்ள எண்ணத்தை மாற்றி, அவர்களையும் நம்மில் ஒருவராக நினைத்து பழக இந்த அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஐ.சி.டபிள்யூ.ஓ. சார்பில் அரவாணிகளுக்கு அகில இந்திய அளவில் அழகிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு "மிஸ் இந்தியா" பட்டம் வழங்கப்படும். இந்தியாவில் இப்படி ஒரு போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

கூவாகம் உள்பட பல இடங்களில் அரவாணி களுக்கு நடத்தப்படும் அழகிப்போட்டிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அரவாணி மிஸ் இந்தியா போட்டியில் எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 150 அரவாணிகள் கலந்து கொள்கிறார்கள்.

அரவாணிகளிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த சென்னையில் டிசம்பர் மாதம் 19-ந்தேதி இந்த அழகிப்போட்டி நடத்தபட உள்ளது.

உலக அழகிப்போட்டிகளில் நடத்தப்படுவது போலவே இந்த அழகிப்போட்டி நடக்கும். அரவாணிகளின் அணிவகுப்பு, ஒய்யார நடை, நவீன உடைஅலங்காரம் இடம்பெறும். இறுதியில் கேள்வி- பதில் சுற்றும் உண்டு.

வெற்றிபெறும் அரவாணிக்கு மிஸ் இந்தியாபட்டத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அரவாணிக்கு ரூ.7,400, 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.5,000 பரிசு கொடுக்கப்படும். இதுதவிர அழகான கூந்தல், அழகான கண், அழகான தோல் கொண்ட அரவாணிகளும் தேர்வாகி பரிசு பெறுவார்கள்.

இந்த போட்டியில் பங்கேற்கும் அரவாணிகள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த வாய்ப்பு கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி தங்களுக்குள்ள குறைகள், பிரச்சினைகள் சொல்லவும் இந்த மேடை அரவாணிகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

அரவாணி மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அரவாணிகள் 26184392, 65515742 மற்றும் 98401 88821 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ஐ.சி.டபிள்யூ.ஓ. செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் தினசெய்தித்தாள் ஒன்றில் கூறி உள்ளார்.


உங்கள் வருகைக்கு நன்றி!.

Sunday, September 27, 2009

உலக இதய தினம்

இன்று செப்டம்பர் 27, உலக இதய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது, இந்த முறை "ஞாயிற்று கிளைமையில்" வைத்து "வொர்க் வித் ஹார்ட்" என்பதை சின்னமாக கொண்டு உள்ளது குறிப்பிடதக்கது.உணவு பழக்கம், வாழ்க்கை முறையால் நகரத்தில் வசிப்போருக்கு இதய நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிவோம், பின் ஏன் இந்த முறை இப்படி ஒரு தலைப்பை சின்னமாக கொண்டு உள்ளது! என்பதை இங்கு சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேல் சொன்ன காரணங்களை விட, இப்போது அதிகமாக இதய நோய் பாதிப்பு ஏற்பட காரணமாய் இருப்பது "மனஉளைச்சல்", ஆனால் இதன் காரணம் வேலை பளு, என்று தவறாக புரிந்து கொல்லப்படுவது வருந்ததக்கது.

உண்மையை சொல்லப்போனால், நம் வேலைக்கும், மனஉளைச்சலுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது! என்பதை தெளிவுபடுத்தி, உங்கள் வேலையை இதய பூர்வமாக விரும்பி செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்ததான், இந்த முறை இப்படி ஒரு தலைப்பு அதுவும் ஞாயிற்று கிளைமையில்.

ஏன்? மற்றும் எப்படி! என்று இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் வேலையை, வேலைக்காக மட்டும் காதலியுங்கள், அதில் கிடைக்கும் ஊதியம், அதிகாரம், புகழ் என்பது இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும், அதாவது உங்கள் வேலையை நீங்கள் விரும்பி எடுத்தாக இருக்கவேண்டும். ஆக ஒரு நல்ல தரமான வாழ்கைக்காக நமக்கு பிடித்த ஒரு வேலையே தவிர, வேலைக்காக நம் வாழ்க்கை இல்லை, என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருங்கள்.

முடிவில்லாத பிரச்சனை, என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை, போன வாரம் உங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக நீங்கள் நினைத்த வேலை இன்று முடிந்து இருக்கும், அதே போல் போன மாதம் வேறு வேலை, மற்றும் போன வருசமும் கூட வெவ் வேறு வேலைகள்.

ஆனால் இன்று? அது எதுவும் இல்லாமல் புதிதாய் வேறு ஒரு வேலை பளு, உங்களை மனஉளைச்சலுக்கு உள்ளகுவதாய் நீங்கள் நினைக்ககூடும்! அது உண்மை அல்ல.

இப்படி சிந்தித்து பாருங்கள், எப்படியும் முடிய போகிற ஒரு வேலைக்கு, நாம் ஏன் மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டும்? காரணம் உங்கள் முழு கவனமும் வேளையில் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. வீட்டு சூழ்நிலை, வங்கி கடன், வேலை நிரந்தரம், எதிர்கால கனவு, வாழ்கை துணையுடன் கருத்து வேறுபாடு என்று, இப்படி ஏதாவது ஒன்று வேலை நேரத்தில், ஏன் வேலை பார்க்கும் நேரத்தில் கூட உங்கள் உள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.

அப்படி இருக்கும் போது மூளையின் கவனம் சிதறி, செயல்திறன் குறைந்து, எளிதாக முடியக்கூடிய வேலை கூட, உங்கள் நேரத்தை நிச்சியம் சோதிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகள் உங்கள் அன்றாட வாழ்கையில் உங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. ஆக, உங்கள் வேலைக்கும் மனஉளைச்சலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது புரிகிறதா?

இதை எப்படி கட்டுக்குள் கொண்டு வர முடியும்? என்று வியக்க வேண்டாம், அது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை.

முதலில் உடல், தினம் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் காலை, மதியம், மாலை அல்லது இரவு, ஏதாவது கொஞ்ச நேரத்தை உடற்பயிற்சி செலவிடுங்கள், சத்தான உணவை சரியான நேரத்தில் உண்ணுவதை வழக்கமாக்குங்கள். உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் என்ற திருமூலர் வாக்கின்படி, உங்கள் உடலையும் மனதையும் கட்டுக்குள் கொண்டு வர கண்டிப்பாய் உங்களால் முடியும்.

அடுத்து வாழ்க்கை முறை, பொது வாழ்க்கை (அலுவலகம், வேலை) சொந்த வாழ்கை (நண்பர்கள் உறவினர்கள்) தனிப்பட்ட அல்லது சொந்த வாழ்கை (கணவன், மனைவி, குழந்தைகள்), இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே தவிர, ஒன்றுக்கொன்று நிச்சியமாய் சம்பந்த பட்டது இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

அதனால், இதில் நீங்கள் எந்த இடத்தில இருந்தாலும் "இரையை விரட்டும் சிங்கம் போல, உங்கள் கவனம் முழுவதும் அதில் மட்டுமே இருக்கட்டும்" (நூறு மான்கள் ஓடினாலும் அங்கும் இங்கும் கவனம் சிதறாமல், ஒரே மானை துரத்தும்). மற்றதை பற்றி நினைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், இதனால் ஒன்றில் உள்ள விருப்பு வெறுப்பை மற்றொன்றில் கலக்க முடியாமல் போய்விடும்.

கோபப்படும் விசையத்தை கூட பொறுமையுடன் சிரித்த முகமாக, ஆனால் தப்பை உணர்த்தும் விதமாக எடுத்து சொல்ல பழகுங்கள். வீட்டிற்க்கு வெளியே செல்லும் போது காலனி அணியும் போது, அதே இடத்தில வீட்டு பிரச்னைகளை விட்டு விட்டு செல்லுங்கள், அதே போல் வீட்டிற்கு உள்ளே வரும் போது கலட்டி விடும் காலணிகளோடு, அலுவலக மற்றும் வெளி உலக பிரச்னைகளையும் சேர்த்து கலட்டி விட்டு விடுங்கள்.

குடும்ப வாழ்கை முறை, வீட்டிற்கு உள்ளே வந்ததும், இனி உங்கள் முழு கவனமும் ஆசையான வாழ்கை துணை, அன்பான குழந்தைகளுக்கு அரவணைப்பான தாய், தந்தை, என்று வீட்டில் மட்டும் இருக்கட்டும். முடிந்த வரை அலுவலக வேலையை வீட்டிலும், வீட்டு வேலையை அலுவலகத்திலும் தவிருங்கள்.

வேலை முடிந்து வரும் துணையை, அலங்கரித்த சிரித்த முகமாய் வரவேற்க பழகுங்கள் (தினம் ஒரு திருமணதிற்கு செல்வதாய் நினைத்துக்கொண்டு, உங்கள் துணை வரும் நேரத்தில், உங்களை தயார் படுத்துங்கள் அதில் ஒன்றும் தவறில்லை), அதே போல் வந்திருக்கும் மனநிலை அறிந்து தேநீர் அல்லது நீர் கொடுத்து, சிறிது நேரம் சென்ற பின், பேச பழகி கொள்ளுங்கள், உணர்ச்சி வசப்படகூடிய விசையத்தை உள்ளே வந்தவுடன் தவிர்த்து, இன்னொரு நல்ல சந்தர்பத்தில் சொல்லுங்கள்.

அலுவலகம் முடிந்ததும், வீட்டு வேலை, குழந்தைகளுக்கு, துணைக்கு என்று உங்கள் நேரத்தை பகிர்ந்து செலவிடுங்கள், இன்றைய அவசர உலகத்தில் படுக்கை அறை என்பது வாழ்வை திசை திருப்பக்கூடிய சக்தி கொண்ட இடம் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

இங்கு எந்த கருத்து வேறு பாடும் இல்லாமல், இரு தரப்பிலும் கண்டிப்பாய் பார்த்துக்கொள்ள வேண்டும், அதே போல் மற்ற எந்த விசையத்தையும் படுக்கை அறைக்கு வெளியில் முடிந்த வரை பேச, விவாதிக்க கற்றுக்கொள்ளுங்கள், கூட்டு குடும்பமாய் இருந்தால் மொட்டை மாடி போன்ற இடங்களை தேர்ந்தெடுப்பதே நல்லது.

அதே போல் இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில், சோர்வை காரணம் கட்டாமல் இங்கு முடிந்த வரை மற்றவர் "எண்ணத்திற்கு" மதிப்பு கொடுங்கள்.

கடைசியாக, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தூங்கும் நேரம் மற்றும் சூழ்நிலையை உருவாக்கி, தினம் தேவையான அளவு தூங்க கற்று கொள்ளுங்கள். முடிந்த வரை வாழ்கை துணைகள் தனியாக படுப்பதை தவிர்த்து சேர்ந்து உறங்குவது நல்லது.

முதலில் சற்று கடினமாக இருந்தாலும், போக போக, இது ஒரு இனிய அனுபவமாகி விடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால், நம் அன்றாட வாழ்கையில், இதை மட்டும் கடைபிடித்து வந்தால், இதயநோய் என்பது வரலாற்றில் மாணவர்கள் படிக்க கூடியதாய் நம்மால் நிச்சியம் மாற்ற முடியும்.இதயநோய் பற்றிய இன்னும் சில பொதுவான தகவல்கள் உங்கள் பார்வைக்கு.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும், 1 கோடியே 70 லட்சம் பேர் இதய நோயால் இறக்கின்றனர். இவர்களில் 20 லட்சம் பேர் இந்தியர்கள். இந்தியாவில் 6 கோடி பேருக்கு இதய நோய் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நகர்புறங்களை சேர்ந்தவர்கள். சென்னையில் 4 சதவீதம் பேரும், டெல்லியில் 7.8 சதவீதம் பேரும் இதய நோயாளிகளாக உள்ளனர் என்று மத்திய நலத்துறை அமைச்சக 2007-ன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. புகை பழக்கத்தையும், குடி பழக்கத்தையும் கைவிட்டாலே பெரும்பாலானவர்களை இதய நோய் தாக்காது.

அடுக்கு மாடி கட்டிடங்களில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் லிப்ட்டுகளில் செல்வதற்கு பதில், படிக்கட்டுகளில் ஏறிச் செல்வது நல்லது. மதிய உணவுக்கு பிறகு குட்டி தூக்கம் போடுவதால் இதய நோயை தடுக்கலாம். அதிகம் கோபப்படாமல் அமைதியாக இருப்பதும் இதயத்துக்கு நல்லது.

இதயத்தை காக்கும் அடிப்படை விதிகள்.

1. டயட் - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரட், அதிகமான புரோட்டின்

2. உடற்பயிற்சி - இரண்டு மணிநேரம் +அரை மணி நேர நடை குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள். (ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதையும், லிப்ட் பயன்படுத்தவத்தையும் தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி இறங்குகள்)

3. புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விடுங்கள்.

4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.

5. இரத்த அழுத்தம் மற்றும் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள்.

இதய நோயாளிகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் 2007-ன் ஆய்வு தெரிவிக்கிறது. இதய நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவுக்கு 9 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது

நன்றி! வாழ்க வளமுடன்.

Monday, September 21, 2009

சும்மா ஒரு ரீமிக்ஸ்

பதிவுக்கு முன் தமிழ்த்துளி தேவாவின் அன்பு விருதுக்கு என் நன்றி.
ரீமிக்ஸ் பாட்டு...அப்புறம் ரீமிக்ஸ் தலைப்பு...அப்புறம் ரீமிக்ஸ் படம்...இப்படி எல்லாமே "ரீமிக்ஸ்" இது தான இப்ப டிரன்டு!...அப்ப ஏன்? ஒரு ரீமிக்ஸ் பதிவு இருக்க கூடாது?

என்று, எத்தனையோ இடையறாத என் பணிகளுக்கு மத்தியில்!, எப்படி என் பதிவை பதிவுலக சரித்திரத்தில் இடம் செய்யலாம்? என்று நினைத்துக்கொண்டே, மகா சிந்தனையில் காலை கழிவறையில் நான் அமர்ந்திருக்கும் போது!...கன நேரத்தில் என் ஞானத்தில் உதையமனதுதான் இந்த பதிவு.

இது எந்த தனிப்பட்ட பதிவையோ, பதிவரையோ குறிப்பிடாத கற்பனை பதிவு என்பதால், சும்மா பதிவை அனுபவிக்கனும்,...ஆராயக்கூடாது...ரெடி ஜூட்...பின்னனியில் மக்கள் முனு முனுப்பு: இந்த பதிவர் பதிவ படிக்க படிக்க ரொம்ப "குஜாலா" இருக்கும் தெரியுமா...ரொம்ப பெரிய மொக்கை எல்லாம் இருக்காது...

மொக்கை (பதிவு) சித்தர் வந்துட்டாரு...மொக்கை (பதிவு) சித்தர் வந்துட்டாரு...உதிவியாளர் கத்திக்கொண்டே ஓடி வர பின்னனி பாடல் ஒலிக்கிறது...

"ப்லாக்கர் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...வலை பதிவர்...வலை பதிவர்..."

பதிவர்: எலே பக்கி மக்களா...எதுக்குல இந்த மொக்க ப்லாக்க பாக்கீக...எதுக்கு பாக்கீகங்கறேன்?????...எலே இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மீடியா... பேப்பரு... எல்லாம் அழியபோகுதுல...நீங்க எல்லாம் கெட்ட ப்லாக்கரா ...மொக்க பதிவரா ஆகபோரீகலே...எலே பிப்ரவரி முப்பதோட இந்த டிவி, மெகா சீரியல் எல்லாம் அழிய போகுதுல !.

பின்னூட்டம் போடுபவர்: பிப்ரவரிக்கு ஏதுங்க முப்பது ?

பதிவர்: அத ஏம்புள்ள, எங்கிட்ட கேக்க...கிறுக்கு பதிவரே அத ஏன் எங்கிட்ட கேக்க...அந்த "லொடுக்கு" ப்லாக்ல பட்சி சொல்லுலத நான் சொல்லுதிரேன்...அது மட்டுமில்லலே...நீங்க எல்லாம் கெட்ட பதிவரா மொக்க அடிமையா போகபோறிகலே...எலே ஒரு சங்கதி, இந்த இணையத்துல...பதிபவேன் படிச்சிட்டு ஓட்டோட பின்னூட்டம் போதுபவன்...ரெண்டுபேர தவிர மத்த எல்லாம் தமிலிஸ் ஹிட் லிஸ்ட்ல பின்னாடி போகப்போறீகலே.

உதிவியாளர்: பதிவரே அப்ப நீங்க?

பதிவர்: எலே, என்னய்யாலே கேக்க...மொட்ட பின்னூட்ட பயலே...நா பதிவு
பதிய ஆரபிச்சு மூவாயிரம் வருசமாச்சுல...இது என்னோட முன்நூராவது ப்லாக்குல இது...பார்வையாளர்: நீங்க பதிவர் ...ஆனா மொக்கை சித்தர்னு பேரு வச்சு இருக்கீகலே...

பதிவர்: எலே பதிவர்னு சொல்லி இருக்கெனாலே...நா எப்பையாவது பதிவர்னு சொல்லி இருக்கெனா...நான் வெறும் ப்லாக் படிகிரவேன்...பதிவுல படம் பக்குரவேன்...இந்த பேரு பிரச்னைக்காக தாம் புள்ள நான் பின்னூட்டம் கூட போதுரருது இல்ல...எலே எல்லா ப்லாக்கும் படிச்சாத்தாம்புள்ள இந்த பதிபவர்களுக்கு விடிவு காலம் ...

அடுத்த பார்வையாளர்: பதிவரே நான் சாப்ட்வேர் இன்ஜினியர்...நான் ப்லாக் போடலாமா?

பதிவர்: எலே ப்லாக்க போட்டு "லே-அவுட்ட எடிட்" பண்ணுனாதால நீ சாப்ட்வேர் இன்ஜினியர்...இன்னும் கொஞ்ச நாள்ல "ப்லாக் பேரு" எல்லாம் ரெசியூம்ல வரப்போகுதுலே...எலே ஏ எம் ப்லாக்க பாத்துட்டு நிக்க போ போய் ப்லாக்க போடு...

பின்னூட்டம் போடுபவர்: எதுக்கு பதிவரே எல்லாரையும் பின்னூட்டத்துல திட்ரீக?

பதிவர்: எலே நேர்ல திட்டுனா நீ தாங்குவியா...இல்ல நீ தாங்குவியாலே...இந்த எழவுக்கு தான் மனுஷ பய ப்லாக்கே நான் படிக்குதத நிப்பாட்டி ஐந்நூறு வருசமாச்சு...என்ன ஏம் புள்ள வம்முக்கு இளுக்கீக........இந்த பரவ, மிருகம் இதுக ப்லாக்குதான் நா படிக்கிறது...

பின்னூட்டம் போடுபவர்: அது சரி பதிவரே, இந்த பதிவு எல்லாம் எதுல இருந்து வருது பதிவரே ...

பதிவர்: எலே சின்ன பதிவே, நல்லா சொல்லுதேன் கேட்டுக்க...ஏ இந்த பதிவு மட்டுமில்லலே...எல்லா பதிவும் தமிழ்ல இருந்துதாலே வருது.

அடுத்த பார்வையாளர்: வணக்கம் பதிவரே ...எனக்கு கல்யாணமாகி நாலு வருசமா பதிவு போடுறேன்...எனக்கு குழந்தையே இல்ல பதிவரே...

பதிவர்: ஏ, அத ஏன் இங்க கேக்குற....புள்ளய பத்தி பதிவுல கேக்குறது...அப்புறம் "அசைவமான பதிவுன்னு" பின்னூட்டம் போட்டு "அடல்ஸ்ஒன்லில" சேக்குறது...போபோ.

அந்த பார்வையாளரோட அம்மா: பதிவரே கோவிச்சுகாதீக......ப்லாக் போடுறேன்... ப்லாக் போடுறேன்னு...... இவளுக்கு புள்ள இல்ல! அதுக்கு ஒரு வழிய சொல்லுங்க...

பதிவர்: ஏ அப்படிங்கிரயா...ப்லாக் போடுறேன்! ப்லாக் போடுறேன்னு இருந்ததுக்கு பதிலா...உன் ப்லாக்ல யாரையாவது...

உதிவியாளர்: பதிவரேரேரேரேரே...

பதிவர்: அட சின்ன புத்தி மக்கா...உன் ப்லாக்ல யாரயாவது...இந்த பதிவு வேலை எல்லாம் பாக்க சொல்லி இருந்தா, இந்நேரம் இந்த பிரச்சனை இருக்காதுன்னு சொல்ல வந்தேன்ல...

சரி சரி...போற வழில நம்ம சோமசூத்ரா ப்லாக் இருக்குல...அந்த ப்லாக்ல போய் நாலு பதிவ படிச்சு மூணு பின்னூட்டத்த போடு...இன்னும் இருபத்துநாலு மணி நேரத்துல பிள்ள தமிலிஸ் தமிழ்மணம் ஹிட் லிஸ்ட்ல வரலைனா என்ன செருப்பால அடி ...

பார்வையாளரோட அம்மா சலிப்பாக: ஐய "அந்த" ப்லாக்லயா...

பதிவர்: எலே...என்ன ப்லாக்ன்னு இளப்பமா சொல்லுத...ஏ "ப்லாக்கு என்பார் பின்னூட்டம் என்பார்...படிச்சுட்டு ஓட்ட போடாம நாசமா போவர் பட்டாங்கி ப்லாக்கு படி"...இது சூதாடி சித்தர் சொன்னது...போபோ சு...சூ...ஸூ

மேலிருந்து சத்தம்: க கா க காக காக கா...

பதிவர்: ஏ... என்ன... காக கா க காக ...ஏலே இங்க வா...ஏ காக்கான்னு ப்லாக் பேர வச்சு, ஒரு காக்கா படபதிவு கூட இல்லையாமே...ஏ பட்சி சொல்லுதுல்ல.

கடைசியா ஒன்னு சொல்லுதே மக்களே...ஏ பாக்க வேண்டியத பாத்து, படிக்க வேண்டியத படிச்சு, பதிய வேண்டியத பதிஞ்சாதான...கிடைக்க வேண்டியது கிடைக்கும்...

இன்னும் தொலாயிரம் வருசத்துக்கு அப்புறம் பதிவே இருக்காது! எல்லாம் வீடியோ...ஆடியோ...வாய்ஸ்-தான்.

Tuesday, September 15, 2009

மத சடங்குகள்

கடவுள், மதம் மட்டுமில்லாமல் இப்போது மத சடங்குகளையும் பற்றி வரும் விமர்ச்சனம் அனைத்தும் நாம் அனைவரும் அறிவோம். அதுவும் இந்து திருமண சடங்கு மற்றும் மந்திரங்களை பற்றித்தான் இணையத்தில் அதிகமாக நாம் காணமுடியும்.

இதில் என் தனிப்பட்ட கருத்தை சொல்லவே இந்த முயற்சியே தவிர, மற்ற யாருடைய கருத்தையும் தவறென்று விவாதிக்க அல்ல.

திருமண கன்னிகா தானம் என்பது ஒரு அருமையான இந்து மத சடங்கு மற்றும் சந்தோசமான குடும்ப நிகழ்ச்சி.

இந்த கன்னிகாதானத்தில், ஒரு தகப்பன் தனது மகளை அக்னி, நிலம், ஆகாயம் மற்றும் அனைத்து சக்திகளையும் சாட்சியாக வைத்து, மணமகனிடம் எனது மகளை உனக்கு மனைவியாக தாரை வார்க்கிறேன், இவளை நீ ஒரு போதும் கண் கலங்காமல் காப்பாற்று என்றும், பின் அந்த மணமகன் அவளை கண் கலங்காமல் காப்பாற்றுவேன் என்பதும்.

அதே போல் மணமகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தின் அடிப்படையில், தன் சொந்த பந்தங்களை எல்லாம் கணவனுக்கு பின் வைத்து, கணவனுக்கு உண்மையாக வாழ்வேன் என்றும் அனைத்து சக்திகளுக்கு முன் உறுதி கூருவது தான் இந்த சடங்கின் பொருள் மற்றும் நோக்கம்.

இந்து மதமும், தமிழர் வரலாறும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததுதான், முதலில் முட்டையா கோழியா என்பது போல், இதில் இந்துமதமா இல்லை தமிழனா? என்ற விவாதம் இங்கு வேண்டாமே "ப்ளீஸ்", மொத்தத்தில் இந்துமத பாரம்பரிய வழிமுறைகளை தமிழர்கள் கடைப்பிடித்து வருகிறோம்.

ஆரம்ப காலத்தில், வெறும் மாலை மாற்றியே திருமணம் நிகழ்ந்ததாகவும், தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னர், படிப்படியாக, திருமணத்தைச் சடங்காக மாற்றியதாக சொல்லப்படுகிறது.இன்று நிகழ்வதை போல் இந்த முறை மூலம் திருமணம் ஒரு அந்தனரால் (பிராமினரால்) அக்னி வளர்த்து மந்திரம் சொல்லி நடத்தி வைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நிகழ்ந்ததும், பிராமணரை முன் வைத்துதானாம்.

இந்த திருமண வழிமுறையில் உள்ள சடங்குகள், சேலையை வேட்டியுடன் இணைத்து தீயினைச் சுற்றுவதும், அம்மி மிதித்து காலில் மெட்டி அணிவித்து அருந்ததி பார்ப்பதும், தாய்மாமன் முன்னின்று திருமணத்தைச் செய்வதன் அர்த்தம் என்ன? என்று பலர் பலவாறும் கூறுவார்கள்.

தமிழர்களிடத்தே, திருப்பாவை கூறித் திருமணம் செய்வதும் வழக்கில் இருந்துள்ளது, இருக்கின்றது என்றும். இதைத்தான் தாய்லாந்திலும், திருப்பாவையை மொழி பெயர்த்து, அதைப் பாடி திருமணங்களை தாய்லாந்து நாட்டவர் செய்கின்றனர் என்றும் ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும், தற்பொழுது நடைபெறும் சில தமிழர் திருமணங்களில் தமிழில் மந்திரம் கூறி, திருக்குறள் கூறி, மாங்கல்யம் கட்டுகின்றார்கள், காரணம் என்னவென்றால், சமஸ்கிருதத்தை சரியாக தமிழர் விளங்கிக் கொள்வது சற்றுக் கடினம் என்பதால்.

ஆனால், அந்தனர்கள் சமஸ்கிருதத்தில் நன்கு கற்று தெரிந்தவர்கள், அதனால் தான் முறையாக கற்று தேர்ந்தவர்களை அழைப்பது, இப்படி அழைப்பதால் எந்த தவறும் இல்லை என்றே நான் சொல்லுவேன்.மற்றபடி, இடையில் உள்ள இந்த மொழி இடைவெளியை சாதகமாக்கிக்கொண்டு, இந்து திருமண முறைகளையும் மந்திரங்களையும் ஆபாசமாக்கி எழுதுவதும், மத மாற்றத்துக்காக இதை பெரிதாக்கி ஆபாச படுதிக்காட்டுவதும் இன்று ஒரு நாகரீகமாகி விட்டது என்பதுதான் வருந்ததக்க உண்மை.

ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், ஒவ்வொரு மதத்திலும் வழக்கத்தில் உள்ள புராண வார்த்தைகளுக்கும், செயளுக்கும் இலைமறை காயாக பல அர்த்தங்கள் உண்டு என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம், அதை நாம் இங்கு மறந்து விடக்ககூடாது.

அன்று மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளிர்ந்தநீரில் குளித்து விட்டு, வீதியில் பஜனை பாடி சென்றால் இறை அருள்கிட்டும் என்று சொன்னால், அது பிழைப்புக்காக சிலர் சொன்னது, உண்மை என்றால் ஆண்டவன் வந்து நேரில் சொல்லட்டும் என்று இதை ஜாதி,மத மற்றும் நாத்திக பிரச்னையாக்கி நக்கல் பேசிய நல்லவர்கள்,

இன்று ஓசோன் பூமிக்கு மிக அருகில் வரும் டிசம்பார் மாதத்தில் (அதே மார்கழி மாதத்தில்) காலை நேரத்தில் நடந்தால் ரத்த ஓட்டம் சீராகி, மூளை நன்றாக வேலை செய்யும் என்று சொன்ன உடன், தங்களுக்கு இல்லாத ஒன்றை வேலை செய்ய வைக்க முதல் ஆளாய் கடற்கரைக்கு ஓடியது வேடிக்கை இல்லையா?

அது போலத்தான் திருமண சடங்கு மற்றும் மந்திரங்கள், இந்த மந்திரங்கள் எப்படி மற்ற யாருடைய நம்பிக்கைகளை விமர்ச்சிப்பது இல்லையோ, அது போல, இதை நம்புவர்களின் மனதை மற்ற யாரும் காயப்படுத்தக்கூடாது, அதுவே நல்ல மனிதநேயம் ஆகும்.

இவற்றில் சர்சைக்கு உள்ளாகும் இந்து திருமணத்தில் சொல்லப்படுகின்ற சில சமஸ்கிருத மந்திரங்கள் இவை.
 
"சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது, அதனால்....

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படலாம்!, இந்த மந்திரங்களை பற்றி சந்தேகம் எழலாம்? இன்னும் சொல்லப்போனால் அந்த சந்தேகங்கள் உண்மையாககூட இருக்கலாம்!.

ஏனென்றால், "தெய்வம் முழுக்க சந்தேகத்துக்கு இடமானது, ஆனால் அடையும்போது அது முழுக்க உண்மையானது" என்று அர்த்தமுல்ல இந்து மதம் சொல்கிறது. அது போலத்தான் இந்து மத சடங்குகளும்.சரி, இதற்கு இந்துவாகிய தமிழன் என்னதான் செய்ய முடியும்? என்று நினைத்துப் பார்த்தேன், அதில் எனக்கு தோன்றிய கருத்துக்களை இனி பார்ப்போம்.

இங்கு பிரச்சனையின் மையம் மொழி மற்றும் அதன் அர்த்தம், அதனால் அனைவரும் சமஸ்கிருதத்தில் கற்றுத்தேற வேண்டும் என்பது நடவாத ஒன்று, மேலும் நான் பழைய பதிவில் சொன்னபடி "கடவுளின் மொழி இது மட்டுமே" என்று சொல்லி கடவுளையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வரும் முயற்சியாகிவிடும் இது.

திருப்பாவையோ, தேவாரமோ அல்லது திருவாசகமோ பாடி திருமணங்களைச் செய்யச் சொல்லலாம், இதில் தவறு ஏதும் இல்லை, ஏன் என்றால் மதத்தை போலவே, இதுவும் அவரவர் நம்பிகையை பொருத்தது மாறுபடும்.

அதே நேரத்தில் "சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லித் தான்" திருமணம் செய்ய வேண்டும் என்றில்லை, என்ற கருத்தையும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம், ஏன் என்றால் இன்று அது பலருக்கு புரியவில்லை என்பதும் நியாயம்.

ஆனால், சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லி திருமணம் செய்வது தவறு என்றோ முட்டாள் தனம் என்றோ, ஏக மனதாக அதன் மீது நம்பிக்கை வைத்து உள்ளவர்கள் மனம் காயப்படும் படி ஏற்றுகொள்ள முடியாது.

அதற்கு பதிலாக "புரிய வில்லை என்று புரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்கும்" நல்ல கேள்விக்கு விளக்கம் கொடுக்கும் முறையில், அதே மந்திரத்தை தமிழில் இன்றைய கால நிலைக்கு ஏற்ற அர்த்ததுடன் சொல்லச் சொல்லலாம்.

அல்லது ஒருவர் சமஸ்கிருதத்தில் சொல்லும் போது மற்றொருவர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அப்போது நடை பெரும் சடங்கின் காரணத்தையும் விளக்கத்தையும் அனைவரும் கேட்கும் படி தமிழில் சொல்ல செய்யலாம்.

ஏன் என்றால், "தமிழ் வளர்ப்போம்" என்பது எப்படி எல்லா வகையிலும் நியாயமோ, அதுபோல தமிழை வளர்க்க சமஸ்கிருதத்தை கொல்வேன் என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது, என்பதே இங்கு என் கருத்து.

அது சரி, யார் யாருக்கோ புரியவில்லை என்பதற்காக, நான் ஏன்? இதை செய்ய வேண்டும் என்றால்? வெற்று பத்திரத்தில் சாட்சி கையெழுத்து வாங்குவதைப்போல இல்லாமல், நாம் விரும்பி திருமணத்திற்கு அழைத்த அனைவருக்கும் புரியாத ஒன்றை செய்வதை விட, அது என்னவென்று படித்துக்காட்டி அனைவருக்கும் புரிய வைப்பது நம் கடமை தானே?

இதனால் நிச்சயம் நமது பாரம்பரிய கலாச்சாரம் கெட்டு விடாது, மேலும் நமது கலாச்சாரத்தை அனைவரும் புரிந்து கொண்டு, எந்த ஆபாச விமர்ச்சனமும் இல்லாமல் வளரவே இது வழிவகுக்கும்.

இப்படி செய்வதால், இந்த தர்மம் கெட்டு விடும், அந்த கலாச்சாரம் மாறிவிடும் என்று குப்பை காரணம் சொல்லி குட்டையை குழப்பி குதர்க்கம் சொல்லுபவர்களிடம், ஐயா, கால நிலைக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே வருவது தான் நமது மனித கலாச்சாரம்! என்று அதன் விளக்கத்தை கொடுக்கவேண்டும்.

அதாவது, தந்தையின் தொழிலை செய்யும் அடிமை மகனும், கணவனை இழந்த விதவையை கழு அல்லது உடன்கட்டை ஏற்றி கொள்ளப்படுவதும் கூட நமது கலாச்சாரமாக இருந்ததுதான், அவ்வளவு ஏன், பாரதி வந்து தன் செல்லம்மாளை கையை பிடித்துக்கொண்டு பாருங்கள் முட்டாள்களே என்று வீதியில் நடக்கும் வரை, அது கூட நமது கலாச்சாரம் இல்லைதான்.

ஆக, காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான நடைமுறைகளை மாற்றிக்கொள்வது தான் ஒரு கலாச்சார வளர்ச்சிக்கு உண்மையில் உதவும் இல்லையா?மேலும், நம் இறை நம்பிக்கை மற்றவர்களின் இறை நம்பிக்கையை பாதிக்காதவாரு அனைவரையும் எளிதில் சென்று அடைய நாம் வழி வகுக்காவிட்டால், வேறு யார் வந்து செய்வார்கள்? என்பதே இங்கு என் கருத்தே தவிர, தனிப்பட்ட மதத்தை பரப்புவதோ அல்லது எந்த ஒரு மதத்தையோ, இறை நம்பிக்கையோ இழிவு படுத்துவது இங்கு என் நோக்கமல்ல.

சரி, இதை ஏன்? நான் சொல்ல வேண்டும் என்றால், மாற்று மதமோ கொள்கையோ உள்ளவர்கள் சொன்னால்தான், இது நாத்திக, சமய, ஜாதி, பிரச்சனை.

ஆனால், என் மதத்தில் எனக்கு இல்லாத உரிமையா? என்ற திமிருடன், ஏற்று கொள்ளக்கூடிய மாற்றத்தை, என் இறை நம்பிக்கை, மதத்தின் புனிதம் கெட்டு விடாமல் நான் வரவேற்கிறேன் என்று சொல்ல முடியும் இல்லையா.

அதுமட்டும் இல்லாமல், என் மத, இறை நம்பிக்கை இழிவு படுத்தப்பட்டு கொச்சை படுத்தப்படும் போது, அங்கு நான் வந்து விளக்கம் கொடுத்து அந்த அழுக்கை கழுவாமல், வேறு ஒருவர் வந்து செய்யும் வரை என்னால் காத்திருக்க முடியாது என்ற கர்வத்துடன் தலை நிமிர்ந்து சொல்லும் போது, நம் நம்பிகையை குறை சொல்லி விட்டானே, என்ற ஆதங்கத்தில் மற்ற எந்த மதமோ, மத நம்பிக்கையோ அவமான படுத்த இங்கு வழி இல்லாமல் போய் விடும் இல்லையா?

அதனால்தான் சொல்கிறேன்.

நன்றி!

இதன் தொடர்புள்ள முந்தைய பதிவுகளை படிக்காதவர்களுக்காக, இங்கு மீண்டும் அந்த தலைப்புகளுக்கு இணைப்பு கொடுத்து இருக்கிறேன்.

மனமும் மதமும்

காதலும் கடவுளும்

ஐய்யய்யோ! இந்த மொக்கைய படிச்சதே பெரிய விசையம்! இதுக்கு முன்கதை வேறயான்னு, நீங்க நினைக்கிறது எனக்கு கேட்கிறது :-)).

ஆக, மக்களுக்கு சொல்லிக்கிறது என்னான...பதிவு பிடிச்சா ஓட்ட போடுங்க, இல்லனா பின்னூட்டத்துல திட்ட போடுங்க .......திட்டு எல்லாம் எங்களுக்கு லட்டு மாதிரி தெரிஞ்சுக்கங்க .....

ஏய்...ஹலோ ... என்ன போன பதிவுல திட்ட வாரேனிங்க...ஆளையே காணோம் ????

Sunday, September 13, 2009

வரம்தந்த தேவதைஇந்த வரம்தரும் தேவதையை என்னிடம் அனுப்பி, என்னை இந்த பதிவை எழுத அழைத்த மேனகாவுக்கு என் நன்றி.

எல்லோருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும், அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்!.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக, உங்கள் கண் முன்னாடி "ஏஞ்சல் எனும் தேவதை" வந்து உங்களுக்கு பத்து வரங்கள் தருகிறது. நீங்கள் என்ன, என்ன வரம் கேட்பீர்கள்?

இதோ தேவதையிடம் என் வரங்கள்.

முதல் வரம் : பத்து வரங்களையும் கேட்ட பின் "இன்னுமா இந்த உலகம் "ஏஞ்சல் தேவதை-யை" நம்புகிறது என்று சொல்லக்கூடாது.

இரண்டாவது வரம் : என் பிறப்பின் பலனை முழுதாக அடைந்து, நான் யார் என்று எனக்கு புரிய வேண்டும்.

மூன்றாவது வரம் : இனி ஒரு பிறப்பில்லாத மோட்சத்தை அடைய வேண்டும்.

நான்காவது வரம்: துரோகம் என்ற வார்த்தையும் செயலும் மனிதனுக்கு மறந்து போக வேண்டும்.

ஐந்தாவது வரம் : சண்டை போடும் இரு தரப்பை தவிர மற்ற யாரையும் எந்த ஆயுதமும் கொள்ளக்கூடாது, போர் வீரனின் தற்காப்பு ஆயுதம் தவிர மற்ற அணு ஆயுதங்கள் அனைத்தும் அழிந்து போகவேண்டும்.

ஆறாவது வரம் : உலகின் அத்தனை போதை வஸ்துக்களும் அழிந்து போகவேண்டும்.

ஏழாவது வரம் : தன் மனைவி, கணவனை தவிர மற்ற அனைவரும் மனித மூளைக்கு சகோதரி சகோதரனாக மட்டுமே தெரியவேண்டும்.

எட்டாவது வரம் : மனிதனாய் படைத்த பணம் மனிதனை அடிமை படுத்தாமல், மனிதனிடம் அடிமையாய் இருக்க வேண்டும். ஆக தன் உழைப்பும் அதில் நேர்மையாக கிடைக்கும் பலனும் மட்டுமே உண்மை, என்று எல்லா மனித மனதிற்கும் புரியவேண்டும்.

ஒன்பதாவது வரம்: அன்பே கடவுள் அறிவே தெய்வம், மற்ற அனைத்தும் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் உள்ள "மாயை" என்று பிறக்கும் போதே புரியவேண்டும்.

பத்தாவது வரம் : பிறக்கும் போது பிறவிகடமை என்னும் பாவத்துடன் அழுதுகொண்டே பிறக்கும் மனிதகுலம், எந்த நோய் நொடியும் இல்லாமல், இறக்கும் போது வந்த கடமை அனைத்தும் முடித்த சந்தோசத்தில் சிரித்துக்கொண்டே இறக்க வேண்டும்.ஆக, என் கடமை முடிந்து. இப்போ இந்த தேவதையை வேறு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பனும், கீழே அவர்கள் பெயரை சொடுக்கி அவர்கள் பக்கத்திற்கு செல்லவும்.

1.கிரி

2.ரஹ்மான்

3.கோவி.கண்ணன்

4.பழனியிலிருந்து சுரேஷ்

Thursday, September 10, 2009

லிங்கிடு-இன்

அதி வேகமாக வளர்ந்து வரும் இணையத்தில், எத்தனையோ வசதிகள் வந்து விட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அதில் இன்று முன்நிலையில் இருப்பது லிங்கிடு-இன்.

பதிவுலகில் லிங்க்வித்தின் அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் "லிங்க்வித்தின்" பயன் பாட்டிற்கும் இந்த "லிங்கிடு-இன்" பயன் பாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை இங்கு முதலில் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.

"லிங்கிடு-இன்" முழுக்க முழுக்க அலுவலகம், வேலை சார்ந்த ஒரு புரபசனல் நெட்வொர்க் லிங் ஆகும்.இங்கு கணினி சார்ந்த தொழில்துறை மட்டுமில்லாமல், அணைத்து வேலை சார்ந்த மனிதவள துறை மேலாளர்கள் தங்கள் வேலைக்கு தேவையான மற்றும் தகுந்த மக்களை தேட, அன்றாடம் பார்க்கும் ஒரு தளமாக இது மாறி வருகிறது. இந்த இணையதளத்தை பற்றியும் அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.

யாஹூ, விண்டோஸ்லைவ்மெயில், ஜிமெயில் போல நண்பர்களுடன் மட்டுமில்லாமல், நம் உடன் படித்தவர்கள், முன்பு வேலை பார்த்தவர்கள் மற்றும் தற்போது வேலை பார்ப்பவர்கள் என்று அனைவருடனும் தொடர்பில் இருக் மற்றும் அனைவருடைய தகவல்களை அல்லது ரெசியுமையும் இதில் பார்க்கமுடியும். மற்றும் நம் தொழில், வேலை சார்ந்த தகவல் பரிமாறும் ஒரு இணையதளமே "லிங்கிடு-இன்".

இதில் கட்டண சேவையும் உண்டு, இலவச சேவையும் உண்டு என்றாலும், இலவச சேவை வசதிகளே நம் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் கீழ் உள்ள முகவரியில் சென்று உங்களுக்கு என்று ஒரு "உறுப்பினர் முகவரி உருவாக்க" வேண்டியது தான், இதனால் உங்களுக்கு என்று ஒரு தனி பக்கம் இந்த தளத்தில் கிடைத்து விடும், இதில் நீங்கள் உங்களை பற்றிய தகவல்கள் படிப்பு,படித்த இடம், வேலை பார்த்த மற்றும் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிற அலுவலக தகவல்களை பதிந்து விட்டால் போதும், இதன் மூலம் உங்கள் வேலை சார்ந்தவர்கள் உங்களை பற்றி அறிய முடியும்.

ஏர்க்கனவே இதில் உள்ள டேட்டாபேசில் அனேகமாக அணைத்து பள்ளி, கல்லுரி மற்றும் அலுவலக முகவரிகள் உள்ளன, அப்படியே உங்களுக்கு தேவையான பெயர் இல்லாவிட்டலும், புதிதாக உங்களால் உருவாக்க முடியும், இதனால் ஏர்க்கனவே இந்த தளத்தில் உறுப்பினராக உள்ள உங்கள் பள்ளி, கல்லுரி மற்றும் அலுவலக நண்பர்கள், மற்றும் இனி வரும் நண்பர்கள் தகவல்களை நீங்கள் பார்க்கவும், உங்கள் தகவல்களை மற்றவர்கள் பார்க்கவும் முடியும்.

இதில் இன்னொரு நம்பிகைதரும் விசையம் என்னவென்றால்? பொய்யான நிறுவன தகவல்களையோ அல்லது பொய்யான அனுபவத்தையோ தரமுடியாது என்பதாகும், அப்படி கொடுத்தால் அந்த நிறுவனத்தை சார்ந்த அனைவரும் உடன் வேலை பார்த்தவர் என்ற முறையில் உங்கள் தகவல்களை பார்க்க முடியும் இல்லையா?

நீங்கள் உங்களுக்கு அல்லது உங்கள் வேலைக்கு சம்பதம் இல்லாதவர்கள் உங்களை பற்றிய எல்லா தவல்களையும் அனைவரும் பார்க்க முடியாதவாறு அனுமதிக்கும் வசதிகளும் இதில் உள்ளன. உங்களுக்கான அடையாள குறிச்சொல்லை பயன்படுத்தி உங்கள் தனிப்பக்கத்திர்க்கு சென்றால் இங்கு உங்கள் மற்ற நண்பர்களை இணைக்க வசதியும் இருக்கிறது, உங்களுடைய

யாஹூ
விண்டோஸ்லைவ்மெயில்
ஜிமெயில்
எஒஎல்

மற்றும் இதர நண்பர்களையும் இதில் உங்களால் இணைக்க முடியும்.

முதலில் உங்கள் "Profile-லை" தயார் படுத்துங்கள், பின் உங்கள் எல்லா நண்பர்களையும் உங்கள் "Contacts-ல்" இணையுங்கள்.

இது தவிர உங்கள் தொழில் மற்றும் வேலை சார்ந்த குழுக்களும் இங்கு உள்ளன, அதில் உங்களுக்கு தேவையான குழுவில் உங்களை இணைத்து விடுங்கள்.

இது மட்டுமில்லாமல் இதில் உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் உங்களைப் பற்றி மற்றும் உங்கள் வேலை திறமையை பற்றியும் உங்களுக்காக பரிந்துரை செய்ய முடியும்.

இதன் மூலம் உங்கள் தொழில் மற்றும் வேலை பற்றிய ஒரு சர்வதேச அங்கிகாரம் உள்ள இணையதள ரெசியும் உங்களுக்கு கிடைக்கிறது, மேலும் உங்கள் தகுதிக்குரிய வேலை வாய்ப்பை கொண்ட அலுவலகங்கள் உங்களை எளிதில் கண்டுபிடிக்க இது உதவுகிறது, இத்தோடு இல்லாமல் தொடர்பில் இல்லாத உங்கள் பழைய நண்பர்கள், வேலை, தொழில் சார்ந்ததவர்கள் மற்றும் உங்களுக்கு தேவையான வேலையையும் இந்த தளத்தின் மூலம் நீங்களே தேடலாம்.இது தவிர இதர தகவல்களை மேல் சொன்ன இணையதளத்தில் படித்து உங்களுக்கு உபயோகப்படுவதாய் இருந்தால் பயன்படித்தி பாருங்கள்.

ஹலோ, வந்தது வந்துடிங்க! அப்படியே ஒரு ஓட்ட போட்டுட்டு.....ரெண்டுவரி பின்னூட்டம் போடாம போனா என்ன நியாயம் இது?

Thursday, September 3, 2009

கொஞ்சம் சிரி :-) கொஞ்சம் கடி :-(

முதலில் சகோதரி கீதா ஆச்சலின் விருதுக்கு என் அன்பான நன்றி.இனி பதிவுக்கு போகலாம்.

எப்போது என் மின் அஞ்சலை திறந்தாலும், என் கல்லூரி தோழி ராணியிடம் இருந்து அழகான படங்களுடன் கூடிய சிரிக்க அல்லது சிந்திக்கதக்க ஒரு தகவல் இருக்கும்.

எங்க இருந்துதான் அவருக்கு இப்படி எல்லா தகவலும் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டே தகவலை படிப்பதோடு சரி, அலுவலக வேலை பலுவால் என்னால் எந்த பதிலும் அனுப்ப முடிவதில்லை, சரி....சரி...

அதே போல் படங்களுடன் கூடிய தவல்கள், மின்அஞ்சல் என்னிடம் எதுவும் இல்லை என்பதை என்னென்ன சொல்லி சமாளிக்க வேண்டிஇருக்கு பாருங்க!

இப்படி நன்றி சொல்ல முடியாமல் இருந்த என் நினைப்பை சரி செய்ய, என் பக்கத்தில் அவர்கள் அனுப்பிய தகவல்களை திரட்டி, "ராணிக்காக" ஒரு பதிவை போடலாம் என்பது என் தங்கமணியின் யோசனை.

இனி படிக்கலாம், சிரிக்கலாம், அனுபவிக்கலாம், ஆனால் படத்தையும் கடியையும் சேத்து வச்சு ஆராயக்கூடாது சரியா?, "கடி தனியா", "படம்+தலைப்பு" தனியா பாருங்க.


1)

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் தான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்? அப்புறம் எப்படி பெயில் ஆகும்!.


(இங்க போட்டோ எடுத்தது யாரு?)


2)

கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்!.


(அப்ப இந்த வாண்டுக எல்லாம் என்ன "ஸ்பைடர்மேன்" கணக்கா?)


3)

ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும்!
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா!


(எங்க வீட்டுக்கும் ஒருத்தன் வந்தானே? என் புள்ள "பூச்சாண்டின்னு" தூக்கதுல கூட அழுதா)


4)

அப்பா அடிச்சா வலிக்கும்,
அம்மா அடிச்சா வலிக்கும்,
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது!


(இது ரொம்ப பழைய பதிவா இருக்குமோ?)


5)

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!


(நம்ம செந்தில், "கப்பல்ல"வேலைன்னு சொன்னமாதிரி, இது "விமானத்துல" வேலை!)


6)

காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்,
நனைந்த பின்பு ஜலதோஷம்.


("ஜாதி" பாக்க நாங்க என்ன கேவலம் மனுசனா?)


7)

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

ஐந்து கேள்விப்பா,

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்

வெரிகுட், கீப்பிடப்...


(சூடு தாங்கலையாம்!, இது கோடை காலத்தில்)


8)

டேய் என் ஜாதகப்படி, எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா? நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு?


(குளிர் தாங்கலையாம், இது குளிர் காலத்தில்)


9)

என்னங்க, ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.


(என்ன ஒரு "டச்சிங்" பாருங்க, ஆமா? திருடன பிடிக்க எப்படி ஓடுவாங்க!)


10)

நீங்க உடனடியா "மீன், ஆடு, கோழி" சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
"அதுங்க சாப்பிடுவதை" நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.


(எப்படித்தான் பிடிச்சாரோ இந்த மீன?)


11)

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா?
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சு பாக்குற அளவுக்கு!


(பாவம் யாரு பெத்த பொண்ணோ, ஆனாலும் இப்படி பாக்க கூடாது)


12)

உனக்கு திருமணமாகிவிட்டதா?
ஆகிவிட்டது,ஏன்?.
யாரை திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
ஒர் பெண்ணை.
பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல்? ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
ஏன் முடியாது?, என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..


(கூகிள்-ல தான் தேடனுமோ?)


13)

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க?
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்!!

2020ல் "டேட்டிங்" எப்படி போவாங்கன்னு ஒரு சின்ன கற்பனை,(படத்தில் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்).


ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில, 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய், சாவுகிராக்கி அது "ஜெராக்ஸ்" காப்பிடா!
14)

இன்னிக்கி கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை, அவங்களே சொன்னாங்க.


(குட்டி எப்படி?....நான் யானையை சொன்னேன்!
இப்பவே உண்மை தமிழன் "கொடுத்து வச்ச யானைன்னு" பின்னூட்டம் எழுத யோசிப்பாரு ....சும்மா...:-))


இப்போ "கக" அதாங்க கடைசி கடி :-)

"டீ" மாஸ்டர் "டீ" போடுவாரு,
"பரோட்டா" மாஸ்டர் "பரோட்டா" போடுவாரு,
"மேக்ஸ்" மாஸ்டர் "மேக்ஸ்" போடுவாரு,
"ஹெட்"மாஸ்டர் "மண்டய" போடுவாரா?.

இப்ப இந்த பதிவ படிக்கும் போது நீங்க "பயந்த" மாதிரியே நடக்கப் போகுது!!!!

இந்த "மொக்கை"க்கு கூட "ஓட்டு,பின்னூட்டம்" கேட்பானோ நினைச்சது உண்மையா இல்லையான்னு சொல்லுங்க.

Wednesday, September 2, 2009

பன்றி என்னங்க பாவம் பண்ணுச்சு

பன்றி என்னங்க பாவம் ப(ன்னி)ண்ணுச்சு?.

அலுவலக நண்பர்களிடம் இருந்து மின் அஞ்சலில் வந்த படங்கள் இவை, இதை பார்த்தும் பதிவு மூளை "மானே தேனே" போட்டு பதிவாக்கிவிட்டது.

ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க "சும்மா திரிஞ்ச ஓணான பிடிச்சு வேட்டிக்குள்ள விட்டுட்டு, அப்புறம் குத்துதே குடையுதே-ன்னு புலம்புவானேன்னு".

அது மாதிரி, தெருவுல சும்மா போன ஆசாரியை (பன்றியை) வழிய பிடிச்சு "முத்தம்" கொடுத்து, எனக்கொரு "ஆப்பு" வைங்கன்னு கேட்டு வாங்கிக்கிட்டு, அப்புறம் வலிக்குதேன்னு ஆசாரியை, ஸாரி...ஸாரி... பன்றியை யாரும் குறை சொன்னா எனக்கு "கொலை" கோவம் வரும்.

சரி, சரி, ரொம்ப மொக்கை போடாம விசையத்த படம் போட்டு காட்டுறேன். பாத்ததுக்கு அப்புறம் இனிமே யாரும் "பன்றி காய்ச்சல்"-ன்னு சொல்லப்பிடாது.இப்படி பாவத்த எல்லாம் நம்ம செஞ்சிட்டு, பழிய மட்டும் பன்றி மேல் போடக்கூடாது இல்லையா?

மேலும் இனி யாரும் "வெள்ளை அம்மனிகளுக்கு முத்தம்" கொடுக்கும் முன் சற்று யோசிக்கவும்.

சரி, தகவல் எதுவும் சொல்லாமல் வெறும் படத்தோடு பதிவை எப்படி முடிப்பது? அதனால் .......

பன்றிகளின் பக்கம் உள்ள இந்த நியாத்தை புரிந்து கொண்ட தென்கொரியா மற்றும் சில நாடுகள் ஏர்கனவே இதன் பெயரை "இன்-"புளு"ஸ்சா ஏ எச்1 என்1" என்று மாற்றிவிட்டன.

அப்படியே இங்கு உங்கள் வாக்கை பதிவு செய்யலாமே?
 

Blogger Widgets