Monday, September 21, 2009

சும்மா ஒரு ரீமிக்ஸ்

பதிவுக்கு முன் தமிழ்த்துளி தேவாவின் அன்பு விருதுக்கு என் நன்றி.
ரீமிக்ஸ் பாட்டு...அப்புறம் ரீமிக்ஸ் தலைப்பு...அப்புறம் ரீமிக்ஸ் படம்...இப்படி எல்லாமே "ரீமிக்ஸ்" இது தான இப்ப டிரன்டு!...அப்ப ஏன்? ஒரு ரீமிக்ஸ் பதிவு இருக்க கூடாது?

என்று, எத்தனையோ இடையறாத என் பணிகளுக்கு மத்தியில்!, எப்படி என் பதிவை பதிவுலக சரித்திரத்தில் இடம் செய்யலாம்? என்று நினைத்துக்கொண்டே, மகா சிந்தனையில் காலை கழிவறையில் நான் அமர்ந்திருக்கும் போது!...கன நேரத்தில் என் ஞானத்தில் உதையமனதுதான் இந்த பதிவு.

இது எந்த தனிப்பட்ட பதிவையோ, பதிவரையோ குறிப்பிடாத கற்பனை பதிவு என்பதால், சும்மா பதிவை அனுபவிக்கனும்,...ஆராயக்கூடாது...ரெடி ஜூட்...பின்னனியில் மக்கள் முனு முனுப்பு: இந்த பதிவர் பதிவ படிக்க படிக்க ரொம்ப "குஜாலா" இருக்கும் தெரியுமா...ரொம்ப பெரிய மொக்கை எல்லாம் இருக்காது...

மொக்கை (பதிவு) சித்தர் வந்துட்டாரு...மொக்கை (பதிவு) சித்தர் வந்துட்டாரு...உதிவியாளர் கத்திக்கொண்டே ஓடி வர பின்னனி பாடல் ஒலிக்கிறது...

"ப்லாக்கர் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...வலை பதிவர்...வலை பதிவர்..."

பதிவர்: எலே பக்கி மக்களா...எதுக்குல இந்த மொக்க ப்லாக்க பாக்கீக...எதுக்கு பாக்கீகங்கறேன்?????...எலே இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மீடியா... பேப்பரு... எல்லாம் அழியபோகுதுல...நீங்க எல்லாம் கெட்ட ப்லாக்கரா ...மொக்க பதிவரா ஆகபோரீகலே...எலே பிப்ரவரி முப்பதோட இந்த டிவி, மெகா சீரியல் எல்லாம் அழிய போகுதுல !.

பின்னூட்டம் போடுபவர்: பிப்ரவரிக்கு ஏதுங்க முப்பது ?

பதிவர்: அத ஏம்புள்ள, எங்கிட்ட கேக்க...கிறுக்கு பதிவரே அத ஏன் எங்கிட்ட கேக்க...அந்த "லொடுக்கு" ப்லாக்ல பட்சி சொல்லுலத நான் சொல்லுதிரேன்...அது மட்டுமில்லலே...நீங்க எல்லாம் கெட்ட பதிவரா மொக்க அடிமையா போகபோறிகலே...எலே ஒரு சங்கதி, இந்த இணையத்துல...பதிபவேன் படிச்சிட்டு ஓட்டோட பின்னூட்டம் போதுபவன்...ரெண்டுபேர தவிர மத்த எல்லாம் தமிலிஸ் ஹிட் லிஸ்ட்ல பின்னாடி போகப்போறீகலே.

உதிவியாளர்: பதிவரே அப்ப நீங்க?

பதிவர்: எலே, என்னய்யாலே கேக்க...மொட்ட பின்னூட்ட பயலே...நா பதிவு
பதிய ஆரபிச்சு மூவாயிரம் வருசமாச்சுல...இது என்னோட முன்நூராவது ப்லாக்குல இது...பார்வையாளர்: நீங்க பதிவர் ...ஆனா மொக்கை சித்தர்னு பேரு வச்சு இருக்கீகலே...

பதிவர்: எலே பதிவர்னு சொல்லி இருக்கெனாலே...நா எப்பையாவது பதிவர்னு சொல்லி இருக்கெனா...நான் வெறும் ப்லாக் படிகிரவேன்...பதிவுல படம் பக்குரவேன்...இந்த பேரு பிரச்னைக்காக தாம் புள்ள நான் பின்னூட்டம் கூட போதுரருது இல்ல...எலே எல்லா ப்லாக்கும் படிச்சாத்தாம்புள்ள இந்த பதிபவர்களுக்கு விடிவு காலம் ...

அடுத்த பார்வையாளர்: பதிவரே நான் சாப்ட்வேர் இன்ஜினியர்...நான் ப்லாக் போடலாமா?

பதிவர்: எலே ப்லாக்க போட்டு "லே-அவுட்ட எடிட்" பண்ணுனாதால நீ சாப்ட்வேர் இன்ஜினியர்...இன்னும் கொஞ்ச நாள்ல "ப்லாக் பேரு" எல்லாம் ரெசியூம்ல வரப்போகுதுலே...எலே ஏ எம் ப்லாக்க பாத்துட்டு நிக்க போ போய் ப்லாக்க போடு...

பின்னூட்டம் போடுபவர்: எதுக்கு பதிவரே எல்லாரையும் பின்னூட்டத்துல திட்ரீக?

பதிவர்: எலே நேர்ல திட்டுனா நீ தாங்குவியா...இல்ல நீ தாங்குவியாலே...இந்த எழவுக்கு தான் மனுஷ பய ப்லாக்கே நான் படிக்குதத நிப்பாட்டி ஐந்நூறு வருசமாச்சு...என்ன ஏம் புள்ள வம்முக்கு இளுக்கீக........இந்த பரவ, மிருகம் இதுக ப்லாக்குதான் நா படிக்கிறது...

பின்னூட்டம் போடுபவர்: அது சரி பதிவரே, இந்த பதிவு எல்லாம் எதுல இருந்து வருது பதிவரே ...

பதிவர்: எலே சின்ன பதிவே, நல்லா சொல்லுதேன் கேட்டுக்க...ஏ இந்த பதிவு மட்டுமில்லலே...எல்லா பதிவும் தமிழ்ல இருந்துதாலே வருது.

அடுத்த பார்வையாளர்: வணக்கம் பதிவரே ...எனக்கு கல்யாணமாகி நாலு வருசமா பதிவு போடுறேன்...எனக்கு குழந்தையே இல்ல பதிவரே...

பதிவர்: ஏ, அத ஏன் இங்க கேக்குற....புள்ளய பத்தி பதிவுல கேக்குறது...அப்புறம் "அசைவமான பதிவுன்னு" பின்னூட்டம் போட்டு "அடல்ஸ்ஒன்லில" சேக்குறது...போபோ.

அந்த பார்வையாளரோட அம்மா: பதிவரே கோவிச்சுகாதீக......ப்லாக் போடுறேன்... ப்லாக் போடுறேன்னு...... இவளுக்கு புள்ள இல்ல! அதுக்கு ஒரு வழிய சொல்லுங்க...

பதிவர்: ஏ அப்படிங்கிரயா...ப்லாக் போடுறேன்! ப்லாக் போடுறேன்னு இருந்ததுக்கு பதிலா...உன் ப்லாக்ல யாரையாவது...

உதிவியாளர்: பதிவரேரேரேரேரே...

பதிவர்: அட சின்ன புத்தி மக்கா...உன் ப்லாக்ல யாரயாவது...இந்த பதிவு வேலை எல்லாம் பாக்க சொல்லி இருந்தா, இந்நேரம் இந்த பிரச்சனை இருக்காதுன்னு சொல்ல வந்தேன்ல...

சரி சரி...போற வழில நம்ம சோமசூத்ரா ப்லாக் இருக்குல...அந்த ப்லாக்ல போய் நாலு பதிவ படிச்சு மூணு பின்னூட்டத்த போடு...இன்னும் இருபத்துநாலு மணி நேரத்துல பிள்ள தமிலிஸ் தமிழ்மணம் ஹிட் லிஸ்ட்ல வரலைனா என்ன செருப்பால அடி ...

பார்வையாளரோட அம்மா சலிப்பாக: ஐய "அந்த" ப்லாக்லயா...

பதிவர்: எலே...என்ன ப்லாக்ன்னு இளப்பமா சொல்லுத...ஏ "ப்லாக்கு என்பார் பின்னூட்டம் என்பார்...படிச்சுட்டு ஓட்ட போடாம நாசமா போவர் பட்டாங்கி ப்லாக்கு படி"...இது சூதாடி சித்தர் சொன்னது...போபோ சு...சூ...ஸூ

மேலிருந்து சத்தம்: க கா க காக காக கா...

பதிவர்: ஏ... என்ன... காக கா க காக ...ஏலே இங்க வா...ஏ காக்கான்னு ப்லாக் பேர வச்சு, ஒரு காக்கா படபதிவு கூட இல்லையாமே...ஏ பட்சி சொல்லுதுல்ல.

கடைசியா ஒன்னு சொல்லுதே மக்களே...ஏ பாக்க வேண்டியத பாத்து, படிக்க வேண்டியத படிச்சு, பதிய வேண்டியத பதிஞ்சாதான...கிடைக்க வேண்டியது கிடைக்கும்...

இன்னும் தொலாயிரம் வருசத்துக்கு அப்புறம் பதிவே இருக்காது! எல்லாம் வீடியோ...ஆடியோ...வாய்ஸ்-தான்.

11 பின்னூட்டம்:

பிரியமுடன்...வசந்த் said...

அட ஏன் சிங்க குட்டி திடீர்ன்னு இப்பிடி?

Geetha Achal said...

எப்படி சிங்ககுட்டி..இப்படி எல்லாம்...விவேக் ஜோக்கினை பார்த்து இருப்பதால்...இதனை அதே ஸ்டைலில் படித்தேன்..ச...ச...சிங்ககுட்டி ஸ்டைலில் படித்தேன்..

கலக்குறிங்க..சிங்ககுட்டி...

சிங்கக்குட்டி said...

வாங்க வசந்த், ரொம்ப மதம் சுதேசின்னு கடுப்படிக்காம (பின்னூட்டமே வரமாட்டேகுது)நடுவுல ஒரு சின்ன ரிலாக்ஸ்க்குதான் :-))

உங்களுக்கு ஒரு குஜாலான மேட்டர் இருக்கு சீக்கிரம் வந்துரும் கவலைய விடுங்க.

சிங்கக்குட்டி said...

வாங்க கீதா, நன்றி.

அந்த விவேக் ஜோக்கை எல்லோரும் பாத்து இருப்பார்கள் என்ற நம்பிகையில் தான் பதிவில் வீடியோ லிங்க் கொடுக்கல :-)).

நசரேயன் said...

பதிவு எழுதுறதிலே இம்புட்டு கஷ்டம் இருக்குன்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும்

சிங்கக்குட்டி said...

வாங்க நசரேயன் நன்றி, இது பாராட்டா! இல்ல ஏதாவது உள்குத்து இருக்கா?

Mrs.Menagasathia said...

என்னாச்சு சிங்கக்குட்டி உங்களுக்கு.நல்லாயிருக்கு பதிவு.

சிங்கக்குட்டி said...

வாங்க மேனகா, தனியா ஏதாவது ஆகணுமா என்ன, நம்ம சும்மாவே அப்படித்தான :-))

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

சிங்கக் குட்டி....சிரிப்பு மூட்டி!! கலகலப்பா இருக்குங்க.

சிங்கக்குட்டி said...

நன்றி ஷ‌ஃபிக்ஸ் :-))

Jaleela said...

நானும் விவேக் ஸ்டைலிலேயே படித்து சிரிச்சாச்சு.

நல்ல ஒரு கலகலப்பு..

Post a Comment

 

Blogger Widgets