Wednesday, July 29, 2009

மனமும் மதமும்

Religious is Something to Behave.... Not to Act....

"யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி, " மதம் " பிடித்துப்போனால் மற்றவர்களுக்கு ரொம்பவே தொல்லை தான்" இது நான் சமிபத்தில் ரசித்த ஒரு வசனம்.
சரி, இதை இங்கு குறிப்பிட்டு சொல்லுவானேன் என்றால், ஒரு மதத்தின் பலன் என்பது, நாம் அதன் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை பொருத்து மாறுபடுகிறது, அதே போல் எந்த ஒரு மத வேதத்திலோ இதிகாசத்திலோ மற்ற மதத்தின் நம்பிக்கையை காயப்படுத்தி எந்த ஒரு வார்த்தையும், எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை, அந்த அந்த மத நூல்கள், தன் மத வழிபாட்டு பாதையில் இறை ஜோதியில் கலக்க வழி காட்டுகிறது.

எல்லாம் வல்ல இறவனை சென்று அடைய இரு பக்கங்களும் அழகான பூக்கள் நிறைந்த பசுமையான ஒரு பாதை தான் மதம், இதில் கதம்ப ரோஜாக்கள் நிறைந்த மஞ்சள் பாதையானாலும் சரி, மல்லிகை கலந்த பச்சை பாதையானாலும் சரி, திராச்சையும் மெழுகுவர்த்தியின் ஒளியும் கலந்த வெள்ளை பாதையானாலும் சரி, இறுதில் சென்று அடையும் இறை அருள் ஒன்று தான்.

எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுளால் ரச்சிக்க படுவாய் என்ற கருத்தைதான் சொல்லுகின்றன.இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது.

கிறித்துவம் - பாவம், கடவுளின் மோட்சம், சாத்தானின் நரகம் எனவும்,

இஸ்லாம் - இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று அதே கோட்பாடுகளைத்தான் கொண்டுள்ளன.

ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை ‘நிர்வாண நிலை’ என்றழைக்கின்றன.

இந்த உண்மையை அறிந்தவர்கள், அவர் எந்த மதத்தை சார்தவராக இருந்தாலும் சரி, அவர்கள் அடக்கத்திலேயே அது தெரியும், சற்று உற்று கவனித்தால், அவர்கள் தன் மதத்தை மதிக்கும் அதே அளவு , மற்ற மத நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுப்பார்கள்.

ஒரு உண்மையான இந்துவோ, இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்துவரோ தன் மதத்தின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை என்பது, தன் கடவுள் தன்னோடு இருக்கிறார் அவர் தம்மை என்றும் காப்பாற்றுவார், இது அவர்கள் தங்கள் மதத்தின் மீதும் தங்கள் கடவுளின் மீதும் வைத்து இருக்கும் நம்பிக்கை, நிச்சயமாக இது என்றும் பொய்க்காது.

இதை அறியாத பலர், இன்று கடவுளின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையின் அளவை மற்றவர்களுக்கு முன் காட்டி நடிப்பதயே விருப்புகிறார்கள், அதுவும் குறிப்பாக தன் மதமில்லாத மற்ற மதத்தினர் முன் அப்படி நடந்து கொள்வது ஒரு நாகரிகமற்ற செயல் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள விரும்புவது இல்லை.

எனக்கு மேல் சொன்ன மூன்று மதம் மட்டுமில்லாமல் பல மத நண்பர்கள் உண்டு, நான் பார்த்த வரை யாரும் மற்ற மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்களே தவிர, எந்த நம்பிக்கையையும் கேலியோ, கிண்டலோ பண்ணியதில்லை, அதே போல் தன் மதம் மட்டுமே உயர்ந்தது என்று சொல்லியதில்லை.இந்துவுக்கு "பெருமாளே" அல்லது "ராமா" என்பதும், கிறிஸ்துவருக்கு "இயேசுவின் கிருபையால்" என்பதும், இஸ்லாமியருக்கு "இன்ஷா அல்லா" என்பதும் மற்ற "புத்தம் சரணம் கச்சாமி" போன்ற சுவாசத்துக்கு இணையான பல மத சார்பான வார்த்தைகள் வழக்கத்தில் உள்ளன, ஆனால் இவற்றிக்கு கூட இடம் பொருள் ஏவல் உண்டு என்பதை உணர்ந்து, நம் நம்பிக்கையும் மதமும் எந்த விதத்திலும் மற்றவர் நம்பிக்கையோ, மதத்தையோ புண்படுத்தாமல் நடப்பதே, நம் மதத்தின் பொருளை நாம் உணர்ந்ததுக்கு அர்த்தமாகும்.

அப்படி இல்லாமல், அதாவது நாம் நம் நம்பிக்கையை நம்மை சுற்றி இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வைக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் நம் மதமில்லாத மற்றவர்கள் முன் நடந்தால் இதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

உதாரணமாக, ஒரு அமைதியான கிறித்துவ அல்லது இஸ்லாம் திருமணத்திற்கு போன ஒருவர், "பெருமாளே இந்த மண மக்களை காப்பாற்று "கோவிந்தா கோவிந்தா"" என்று கத்தினால் அது எப்படி இருக்கும்? இங்கு நம் நம்பிக்கை நிச்சயம் மற்றவர்களை காயப்படுத்தும் இல்லையா?

இத்தகைய செயல் , பார்த்தாயா நான் எப்படி என் மதத்தை அல்லது என் கடவுளை நினைக்கிறேன் என்று மற்றவர்களுக்கு கட்டுவதாக தானே அர்த்தமாகிறது?

இதில் பக்தி எங்கே இருக்கிறது? இது நடிப்புக்கு சமம் தானே? அது மட்டுமில்லாமல் இது கடவுளுக்கு புரியாதா?

ஆக, இது கடவுளின் பெயரால் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து, கடவுளிடம் நாம் ஏமாந்து போகும் ஒரு செயல் இல்லையா இது?

இல்லை என்றால் , பிறகு ஏன் மற்றவர் நம்பிக்கைக்கு புறம்பான ஒரு வார்த்தையையோ, செயலையோ, நாம் மற்றவர் முன் அல்லது அவர்கள் கவனிக்கும்படி செய்ய வேண்டும்?.

நாம் நம்புகிறோம் என்பதற்காக மற்றவர்களும் நம்பவேண்டும் என்பதர்காகவா? அல்லது மற்றவர் நம்பிக்கையை பொய் என்று சொல்லி அவர்களை அல்லது அவர்கள் நம்பிக்கையை காயப்படுத்துவதர்காகவா?

இது எதுவுமே இல்லாமல், நாம் நம் கடவுள் பாசத்தை, பக்தியை காட்ட நினைத்தால், அதே வார்த்தைகளை, நாம் ஏன் மனதிற்குள் சொல்ல கூடாது? நமக்கு தெரியும் மற்றும் நாம் நினைக்கும் கடவுளுக்கு கண்டிப்பாக தெரியும் இல்லையா? ஆக, இது போல் நடந்து கொள்வது ஒரு அர்த்தமில்லாத செயலாகி, நம் மத புனிதத்தை நாமே கெடுப்பதற்கு சமமாகிறது.உன் மதமில்லாத மற்ற மதத்தினர் முன் எப்போதும், நீ என்னை நினைப்பதை (நினைப்பதாக) காட்டு என்றோ, அல்லது அவர்கள் கேட்கும், பார்க்கும் படி நீ என்னை நினைதால் மட்டுமே நான் உன்னை காப்பேன் என்றோ, நான் அறிந்த வரை எந்த ஒரு மத வேதமும், கடவுளும் சொல்லவில்லை.

எனக்கு தெரிந்த வரை, எந்த ஒரு உயிரோ அல்லது நம்பிக்கையோ காயப்படும்படி செய்யும் போது, நாம் எந்த மதமாக இருந்தாலும் சரி, நம் பக்தியின் பலனை இழந்து பாவத்திற்கு ஆளாகிறோம் , அதுவே தாய் தந்தை ரத்த உறவாகவாகும் போது , இங்கு நம் பிறப்பின் பலனை இழந்து விடுகிறோம்?

இதுவே இந்து மதத்தில் கர்மா என்றும், கிறித்துவ மதத்தில் சாத்தானின் வேதம் என்றும், இஸ்லாம் மதத்தில் ஈமான் என்றும் அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்படும் இதயசுத்தியான நம்பிக்கை, இதன்படி பார்த்தால், ஒருவர் ஒரு மதத்தின் அடிப்படை கொள்கைகளை விளங்காமல், அந்த மதத்தின் கடமைகளை மட்டும் தன் சுயநலத்துக்காக அல்லது சுக, துக்கங்களுக்காக செய்வதன் மூலம், அவருக்கு எந்த பயனும் ஏற்படாது என்ற ஒரே கருத்தைதான் கூறுகிறது.

அதாவது ஒவ்வொரு ஆத்மாவும் அதனதன் செயலுக்கு பொறுப்பு .

மனிதனாய் பிறந்தவன், மனிதனாய் இறப்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு, நீ எப்படி, எங்கு இருந்து வந்தாயோ, அப்படியே, அங்கு திரும்ப சென்று அடைவாய், இதற்கு நீ தகுதி அடையும் மன பக்குவம் வந்து உன்னை சுற்றி இருக்கும் மாயைகளை உணர்ந்து உன்னை நீயே அறியும் வரை, அதாவது உன் சொந்த சுக, துக்கங்களுக்காக இயற்கை நடை முறைகளை உன் வசதிக்கு ஏற்றவாறு மற்றும் பாவத்தை செய்யும் வரை, நீ மீண்டும் மீண்டும் பாவப்பட்ட மனிதனாய் பிறந்து கொண்டே இருப்பாய் என்று வேதங்கள் சொல்கிறது.

அதனால் தான் இந்த உலகில் உள்ள அத்தனை பாவத்தையும் துரோகத்தையும் மனிதனால் மட்டுமே செய்ய முடிகிறது, எங்காவது ஒரு சிங்கமோ, புலியோ அல்லது ஒரு பாம்போ தன் இனத்திர்க்கோ, குடும்பத்திற்கோ துரோகம் செய்வதாய், பாவம் செய்வதாய் பார்க்க முடியுமா?

நாம், நம் மதம் மற்றும் அதன் புனிதத்தை மதிப்போம் அதன் வழி நடப்போம், அதே போல் மற்ற மதத்தின் வழியில் நடக்க தேவையில்லை என்றாலும், அதன் மீது ஒருவர் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு நம் மதத்தை எந்த அளவு மதிக்கிறோமோ அதே அளவு கண்டிப்பாக நாம் மதிப்பு கொடுக்க வேண்டும், அதுவே நாம் நம் மதத்திற்கு செய்யும் பெரிய தொண்டு ஆகும்.

இன்னும் சொல்லப்போனால் கடவுள் உண்டு (உருவம் இல்லாதவர்,உருவம் உள்ளவர், அன்பே கடவுள்) என்று ஏதோ ஒரு வகையில் சொல்பவர்களை நான் மதிக்கிறேன் அவர்களின் கடவுள் நம்பிக்கைக்காக, அதே போல் கடவுளே இல்லை என்று சொல்பவர்களை நான் இன்னும் அதிகமாக மதிக்கிறேன் அவர்கள் மனிதனை மதிப்பதற்காக, மேலும் கடவுளே இல்லை என்பது கொள்கையானாலும் இவர்கள் எந்த கோவிலையும் இடித்ததாக சரித்திரம் இல்லை.

ஆனால் கடவுள் உண்டு என்று சொல்லிக்கொண்டு, நான் வணங்கும் கடவுள் மட்டுமே கடவுள் என்றும், மற்ற அனைத்தும் பொய் என்று சொல்லி எல்லாம் வல்ல இறைவனையும் தன் கீழ்த்தரமான சின்ன புத்தி போல, மொழி, முறை கொண்டு தன் சொந்த சுக, துக்கங்களுக்காகவும், அரசியல், வியாபாரத்துக்காகவும், கடவுளையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வர நினைப்பவர்களை மட்டும், என்றும் மதிக்க அல்ல மனிதனாய் நினைக்கவே என் மனம் இடம் தரவில்லை.

இவர்கள் மட்டுமே இந்த உலகின் சாத்தான்கள், இவர்கள் சமுதாயத்தில் விதைப்பது தான் மத மாற்றம் என்னும் விஷ செடி, இது விருச்சமாகும் முன் வேரோடு அழிப்போம்.

மதம் என்பது அதன் புனித அறநெறி வழிகளை கடைப்பிடித்து நடப்பதர்க்காக மட்டுமே தவிர, மற்றவர் முன் நடிப்பதர்க்காக அல்ல... என்பதை சத்தம் போட்டு சொல்லவே இங்கு விரும்புகிறேனே தவிர, மற்ற மதங்களை இழிவு படுத்தும் நோக்கம் இல்லை.

சரி, எத்தனயோ பிரச்சனைகள் இருக்கும் இந்த சமுதாயத்தில், இதனால் என்ன பிரச்சனை வந்து விட போகிறது என்று நீங்கள் கேட்கலாம்? அதை எனக்கு தெரிந்த ஒரு உண்மை கதை மூலம் இனி வரும் "கடவுளும் காதலும்" பதிவில் பார்ப்போம்.

மீண்டும் சந்திப்போம் நன்றி.

அது வரை மதம் பிடித்து இருந்தால், வந்து ஓட்ட போட்டு அப்படியே ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு போங்க, இல்ல என் மனம் பிடித்து இருந்தாலும் போடுங்க ....!

அட, எதுவுமே பிடிக்கலைனாலும் வந்து நாலு வார்த்தை திட்டிடாவது போங்கையா ..... !

Thursday, July 23, 2009

பதிவுலகில் பத்து

முன்குறிப்பு: பதிவுலகின் மூலம் பறந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்தை பத்து பக்கங்களுக்குள் அடக்கும் மக்கள், பதிவுலகின் மூலம் கிடைக்கும் பின்னூட்டங்களுக்கும், விளபரங்களுக்கும் நன்றி சொல்லும் அதே வேளையில், அதன் நன்மை தீமைகளையும் சுட்டிக்காட்ட வேண்டியது இங்கு பதிபவர்களின் கடமை ஆகிறது, அதன் ஒரு முயற்சியே இந்த பதிவு.

இனி என் மனதிற்கு பட்ட, பதிவுலக "செய் மற்றும் செய்யகூடாத" பத்து விசயங்களை பார்ப்போம், ரெடி ஜூட் ....

பதிவுலக பெரியோர்களே, புலிகளே, சிங்கங்களே மற்றும் பின்னூட்ட சிருத்தைகளே, இந்த பதிவுலகின் சின்னபிள்ளை ஏதோ கைப்புள்ள தனமா "டென் டூ'ஸ் அண்ட் டூ நாட்'ஸ் இன் ப்லாக்ஸ்-னு" இங்க எழுதுறத, உங்க வீட்டு பிள்ளையா நினச்சு ஏத்துகணும்னு, இந்த பதிவுலக பதினெட்டு பட்டியையும் கேட்டுகிறேன், அப்புறம் அங்க குத்தம் இங்க குத்தம்னு சொல்ல பிடாது.
பதிவுலகம் வந்த காரணம்.
_________________________

1- தமிழ் மொழியில் எழுத, படிக்க,

2- அறிவினை வளர்க்க மற்றும் பகிந்து கொள்ள,

3- புதிய நண்பர்களை இணைத்தில் சந்திக்க மற்றும் உரையாட,

4- மற்ற நண்பர்களின் வலைப்பதிவு ஆர்வத்தை ஊக்குவிக்க,

5- நமக்கு தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்ல, தெரியாததை தெரிந்தவர்களிடம் படிக்க,

6- வாழ்க்கை அனுபவத்தை பகிந்து கொள்ள,

7- அன்றாட கடமைகளை முடித்தபின் இணைத்தில் இளைப்பாற,

8- பார்தத்தும் படித்ததும் பதிவாகும்போது, நாடு நடுவில் மானே தேனை சேர்த்து நம் கற்பனை திறனை வளர்க்க,

9- நான் மட்டுமே இணையத்தில் என்றில்லாமல், நானும் இணையத்தில் என்று சிறிது விளம்பரப்பட,

10- எல்லாத்துக்கும் மேல் (வடிவேலு மாதிரி) என்னையும் மதிச்சு ஒரு கூட்டம் தினம் வந்து படிச்சு பினூட்டம் போடுதேனு கர்வப்பட,

பிகு: ஹும்.... என்னால்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிருக்கு, இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பி இந்த பதிவ தொடந்து படிக்குது...... சரி, இத பத்தி கடைசி வரில பாப்போம்.


பதிவுலகில் செய்யவேண்டியது.
_____________________________

1- நல்ல புதிய நண்பர்களை தேடுங்கள் தொடருங்கள்..

2- அலுவக வேலைகளை எப்படி வீட்டில் பார்ப்பது இல்லையோ, அது போல் பதிவு சம்மத பட்ட வேலைகளை அலுவகத்தில் கண்டிப்பாக பார்காதிர்கள் மற்றும் வேறு பதிவுகளை படிப்பதை கூட தவிருங்கள்.

(நீங்கள் செல்லும் இணையதள முகவரிகள் அடங்கிய பிராக்ஸ்சி ரிப்போர்ட் உங்கள் மேலதிகாரிகளுக்கு நெட் வொர்க் அட்மினால் அனுப்பப் படலாம்)

3- வாழ்க்கை அனுபவத்தை பகிந்து கொள்ளும் போது தவிர்க்க வேண்டிய விசயங்களை தவிர்த்து, உங்கள் பதிவால் பின் நாளில் நீங்களோ, உங்களை சார்ந்தவர்களோ பாதிக்க படாமலும் மன வேதனை படாதவாறு பதிவது உங்கள் கடமை.

4- ஏதோ பதிய வேண்டும் என்று இல்லாமல், வாரத்துக்கு ஒரு முறையானாலும் சரி, மாதத்துக்கு ஒரு முறை ஆனாலும் சரி, தாமதம் பாராமல் நல்ல தரமான பதிவை பதிவதால் உங்கள் வாசகர்கள் உங்களை விட்டு நிச்சியம் ஓடிவிட மாட்டார்கள்.

5- நீங்கள் பார்த்தவை, படித்தவை உங்கள் பதிவாகும் போது, உங்கள் தனி திறமையான "மானே ..தேனை .." நடு நடுவில் சேர்த்து படிப்பவருக்கு விறுவிறுப்பை கூட்டுங்கள்.

6- உங்கள் பதிவில் அது சம்மந்த பட்ட படங்கள் சேர்ப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள், இதனால் உங்கள் பழைய பதிவுகள் "லிங்க்வித்தின்" மூலம் முதல் பக்கத்தின் முடிவில் படத்துடன் வரும், புதிய வாசகர்கள் உங்கள் பழைய பதிவை படிக்க இது உதவும்.

7- உங்கள் பதிவோ, பதிவின் பின்னூட்டமோ மற்ற இன, மதத்தை காயப்படுத்தாமல் இருக்கவேண்டும்,இளையவர்கள் படிக்க கூடாத தகவல்கள் இருந்தால், இளையவர்கள் படிக்க முடியாத படி வயது வந்தோர்களுக்கு மட்டும் முறையை பயன் படுத்துங்கள், இதுவே நல்ல பதிவரின் முக்கிய அடயாளம் ஆகிறது.

8- எந்த ஒரு பதிவையும் பதியும் போது, இதை பற்றி நம்மை விட தெரிந்த பதிவர்கள் இணையத்தில் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, நீங்கள் சொல்லும் கருத்துக்கு அடிப்படை என்றால், அது சம்மந்த பட்ட பதிவுகளை படித்து, கருத்து வேறு பாடு இல்லாத உண்மை தகவல்களை மட்டும் பதிவதில் தவறொன்றும் இல்லை.

(இதனால் சரியான கருத்தை சொல்லும் தரமான இடத்தை உங்கள் இணையதளம் அடையும்.)

9- உங்கள் இணையதளத்தில் பல பதிவுக்கும் பின்னூட்டங்களும் ஒன்றுகொன்று இணைந்து ஒரே பக்கத்தில் படிப்பவரை குழப்பும் விதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், முடிந்த வரை ஒரு பக்கத்தில் ஒரு பதிவை மட்டும் வைக்கலாம் பழைய பதிவுகளுக்கு "லிங்க்வித்தின்" பயன் படுத்தலாம்.

10- கடைசியாக, உங்கள் ப்லோக் என்பது உங்கள் சிந்தனைகளின் பிரதிபலிப்பு என்பதால், உங்கள் மனதையும் சிந்தனைகளையும் போல் உங்கள் இணையதளத்தையும் சுத்தமான கருதுக்களால் நிரப்புங்கள்.


பதிவுலகில் செய்ய கூடாதது.
___________________________

1- உங்கள் இயல்பு வாழ்க்கை மாறாமல் உங்கள் குழந்தை, மனைவி மற்றும் நன்பர்களுடன் உங்கள் நேரம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

2- வீட்டில் வலைபதிவு நேரம் தவிர மற்ற பொதுவாழ்வு மற்றும் அலுவக நேரங்களில் சுத்தமாக பதிவோ, பின்னூட்டமோ பற்றி சிந்திக்காதிர்கள் அது நாளடைவில் உங்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்க கூடும்.

3- வெளியில் பார்க்கும் படிக்கும் அனைத்தையும் அதே நேரத்தில் வலைபதிவு கண்ணோட்டதில் பார்த்து பதிவின் "மானே ..தேனை .." வார்த்தைகளை சிந்திக்காதிர்கள், எதையும் அப்படியே அனுபவியுங்கள், பின்னால் வலை பதியும் நேரத்தில் மட்டும் அதை பற்றி சிந்தித்தால் போதும்.

4- அழகான பூக்கள் நிறைந்த ஒரு பதையில் நாள் முழுவதும் நடந்து தூங்க போகும் முன் அன்று கிடைத்த அனுபவத்தை டைரி எழுதுவதை போல் தான் ஒரு வலை பதிவும், உங்கள் கவனம் முழுவதும் அந்த டைரி எழுதுவதில் மட்டும் இருந்தால், அந்த அழகான நாளின் பூக்கள் நிறைந்த பதையில் நடந்த உண்மையான இன்பத்தை நீங்கள் இழக்க கூடும். இதனால் நாளடைவில் உங்களை நீங்களே தனிமைப்படுத்த கூடும்.

5- பார்க்கும் அனைவரிடமும் அல்லது அணைத்து நேரத்திலும் வலைப்பதிவை பற்றி மட்டுமே பேசாதீர்கள்.

6- முறையான சான்று இல்லாத தகவல்களையோ அல்லது இளையவர்களை தவறான பாதைக்கு வழிகாட்டும் மற்றும் பாலுணர்ச்சி பற்றிய தகல்களை எல்லோரும் இணையத்தில் படிக்கும் படி திறந்து வைக்காதிர்கள்.

7- உங்கள் வலைபதிவு நேரத்தில் அல்லது நீங்கள் மும்பரமாக வலைப்பதிவில் இருக்கும் போது, உங்கள் குழந்தைகளோ அல்லது மனைவியோ அருகில் வந்தால், இணையத்தில் இருந்து இதயத்தை முழுதுமாக வெளியில் எடுத்து விட்டு முழு கவனத்தையும் நேரத்தையும் அவர்களுக்கு கொடுங்கள்.

வலைபதிவு நம் வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர, வலைபதிவு மட்டுமே நம் வாழ்க்கை அல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.

8- நீங்கள் கணினியில் இருக்கும் போது உங்கள் குடும்பத்தினர் அருகில் வந்தால் கோபப்படுவதை அறவே தவிருங்கள், இதனால் உங்கள் குழந்தைகளோ அல்லது மனைவிக்கோ கணினியின் மீதும் வலைப்பதிவின் மீதும் வெறுப்பு வர கூடும், இது உங்கள் குழந்தைகளின் எதிர்கால கணினி படிப்பை பாதிக்கலாம்.

9- பதிவின் சுவரசியத்துக்காக உங்கள் குடும்பத்தினரோ, நண்பர்களோ வருந்தக்கூடிய அல்லது படிக்க விரும்பாத தகவல்களை பதியாதிர்கள், இதனால் உங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்க கூடும்.

10- உங்கள் வேலை பதிக்காத அளவு ஒரு நாளுக்கோ, வாரத்துக்கோ அல்லது மதத்துக்கோ வலைப்பதிவுக்கான உங்கள் நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கி பயன் படுத்துங்கள், உதாரணமாக...

10.1- பேச்சிலராய் இருந்தால் நான்கு அல்லது ஐந்து மணி நேரம், இதில் சரி பாதி உங்கள் சொந்த பதிவிர்க்கோ அல்லது பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் பதியவோ பயன் படுத்தலாம், மீதி இரண்டு மணி நேரத்தை மற்ற நண்பர்களின் பதிவை படிக்கவும் பின்னூட்டம் போடவும் பயன் படுத்தலாம், மேலும் வார விடுமுறை நாட்களையும் பயன் படுத்தலாம்.

10.2- திருமணமாகி குழந்தை(கள்) இருந்தால் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மேல் சொன்ன "சரி பாதி" கணக்கை பயன் படுத்தி இணையத்தில் செலவிடலாம்.

10.3- திருமணமாகி இன்னும் குழந்தை இல்லாமல் இருந்தால் (அதற்கான கடமையை முடித்து விட்டு தான்) மனைவியிடம் அன்றய தினத்தை பற்றி பேசியவுடன் கிடைக்கும் நேரத்தில் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தை பயன் படுத்தலாம், இதிலும் "சரி பாதி" உட்படும்.

10.4- இதில் எந்த வகையிலும் சேராமல் புது தம்பதி (கணவனோ அல்லது மனைவியோ) என்றால், பூவே உனக்காக சார்லி குளிக்கும் காமெடியை பார்த்து விட்டு கீழே படிக்கவும்.

முண்டம்....... முண்டம்.......... படிக்க வேண்டியாத படிக்காம இங்க வந்து என்ன கருமத்த பதிய போகுது, போ போய் படுக்க ஊப்ப்ஸ் ஸாரி ஸாரி....... படிக்க வேண்டியத போய் படி, தொண்ணூறு நான் இந்த பக்கம் வராத........ போ.... போஓஓஒ.இப்போ பின்னூட்டம் பத்து.
_________________________

1- அவன் என்ன சொல்லுவான், இவன் என்ன சொல்லுவான்னோ, இப்போ என்ன பின்னூட்டம் வந்து இருக்கும்ன்னு யோசிக்காம, தேவையான பின்னூட்டதுக்கு மட்டும் விளக்கம் கொடுங்க, மற்ற நேரத்த புது பதிவுக்கு கொடுங்க.

2- "கலக்கல், இருக்கிறது, நல்ல திரும்பம், எதிர் பார்கவே இல்லை, ரொம்ப அருமை, மீ த பஸ்ட்" இப்படி ரெடிமேட் பின்னூட்டம் பயன் படுத்தாதிர்கள்

3- தலைப்பை மட்டும் பார்த்து விட்டு சம்மந்தமே இல்லாத பின்னூட்டம் போடாதிர்கள்

4- பதிவு எதுவாக இருந்தாலும் பின்னூட்டம் போடவேண்டும் என்று கட்டாய படாமல், உண்மையில் நீங்கள் விரும்பிய அல்லது ரசித்த பதிவுக்கு போடும் பின்னூட்டத்தில் தான் உங்கள் இயல்பு வெளிப்படும்.

5- மற்றவர் பதிவிற்கு வரும் பின்னூட்டதிற்கோ பின்னூட்ட கேள்விக்கோ நீங்கள் பதில் பின்னூட்டம் போடவேண்டாம், அதாவது உங்கள் இணையதளத்திற்கு வரும் பின்னூட்ட கேவிக்கு மட்டுமே நீங்கள் பதில் பின்னூட்டம் போட கூடும்.

6- பின்னூட்டதிற்கே பின்னூட்டம் போடுவதை முடிந்த வரை தவிர்க்கவும், இது பதிவரின் கவனத்தை புது பதிவு வேலையில் இருந்து பழைய பதிவு பக்கமே இழுக்கும்.

7- பின்னூட்டத்தில் வாதாட வேண்டாம் மற்றும் பின்னூட்டத்தை தனி பக்கத்தில் திறக்குமாறு வைத்துக் கொள்வதே நல்லது.

8- யாராக இருந்தாலும், தவறான வார்த்தை இல்லாத பின்னூட்டத்தை அழிக்க வேண்டாம், இது பின்னூட்டம் போடுவரை வருத்த பட வைக்க கூடும், அப்படி அழித்தால் அந்த பதிவின் எல்லா பின்னூட்டத்தையும் அழிக்கவும்.

9- உங்களுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போடும் நண்பர்களின் பதிவுகளை படித்து உங்களுக்கு பிடித்த பதிவிற்கு மறக்காமல் பின்னூட்டம் போட வேண்டும்.

10- முடிந்த வரை பின்னூட்டத்தில் இருக்கும் Word வெரிபிகேசனை எடுத்து விடவும், இதனால் உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர் சலிப்படையாமல் பின்னூட்டம் எழுதுவார்

ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாட ஏதோதோ சொல்லி இந்த பதிவ ஓட்டியாச்சு.

இப்போ வாங்கைய்ய்ய்ய்யா...... வாங்க...... வந்து எவ்வ்வ்வ்வ்வ்லோவு முடியுமோ அவ்வ்வ்வ்வலோலோலோவு திட்டி பின்னூட்டம் போட்டுட்டு போங்க.

பட் ஒன் கண்டிசன்..... அப்பர் பாமிலி..... லோயர் பாமிலிய விட்டுட்டு மிடில்ல என்ன மட்டும் தான் திட்டனும் ஓக்கேகேகேகே.

ஏய் ஏய்ய்ய்ய் ஏய்..... நோ பேடு வோர்ட்ஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.....ஐ யாம் பாவம் :-(

ஹாய் ஆபிசர்......ஹி இஸ் மை பெஸ்ட் பலோயர் ....பட் நோ பின்னூட்டம் .......

Wednesday, July 8, 2009

மைக்கேல் ஜாக்ஸன் இறுதி (யாத்) திரை - II

ஜாக்சனின் உடல் அடக்க நிகழ்ச்சி நேற்று ஜூலை 7 2009 நடைபெற்றது.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுக்க, பல்லாயிரக்கணக்கானோரின் நேரடி அஞ்சலியுடன், பாப் உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சன் நேற்று இரவு ஜூலை 7 2009 பிரியா விடை பெற்றார்.இதுவரை உலகில் யாருடைய இறுதிச் சடங்கும் இந்த அளவுக்குப் பிரமாண்டமானதாக இருந்திருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக, ஜாக்சனின் இசையை சுவாசித்தபடி, அவருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர் ரசிகர்கள்.

தங்க முலாம் பூசப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஜாக்சனின் உடல், பாரஸ்ட் லான் ஹில்ஸ் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக மட்டும் நடத்தப்பட்டதால், குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. ரசிகர்களும் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.அதன் பின்னர் மைக்கேல் ஜாக்சனின் கடைசி விருப்பப்படி அவரது நினைவு நிகழ்ச்சி பிரபலமான ஸ்டேபிள்ஸ் மையத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குவிந்திருந்த 20 ஆயிரம் பேர் இந்த நினைவு நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பாதிரியார் லூசியஸ் ஸ்மித் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மரியா கேரி, டிரே லோரன்ஸுடன் இணைந்து பாடினார்.

இசையுலகைச் சேர்ந்த பாரி கோர்டி, கூடைப்பந்தாட்ட வீரர்கள் மாஜிக் ஜான்சன், கோபே பிரையன்ட், ஜெனிபர் ஹட்சன், ஜான் மேயர் என பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

பாடகர் ஸ்டீவி ஒன்டர் உருக்கமாக பேசி பாடினார். ஜாக்சனின் நெருங்கிய தோழியான டயானா ரோஸ் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் விடுத்த இரங்கல் செய்திகளை பாடகர் ஸ்மோக்கி ராபின்சன் வாசித்தார்.

முன்னதாக ஜாக்சனின் உடல் ஸ்டேபிளஸ் மையத்திற்கு ரசிகர்கள் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜாக்சனின் ஐந்து சகோதரர்கள், இரு சகோதரிகள், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஜாக்சனின் மகள் பாரீஸ் தனது தந்தை குறித்து பேசி முடித்ததும் அடக்க முடியாமல் கதறி அழுதார். அதேபோல ஜாக்சனின் சகோதரரான ஜெர்மைன் ஜாக்சனும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், ஸ்மைல் என்கிற பாடலைப் பாடினார்.உலகம் முழுவதும் ஜாக்சனின் நினைவு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யபப்ட்டது. மொத்தம் 16 டிவி நிறுவனங்கள் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்தன. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள டிவி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

உலகின் மிகப் பெரிய மீடியா நிகழ்ச்சியாக மாறிப் போயிருந்தது ஜாக்சனின் நினைவாஞ்சலி நிகழ்ச்சி, ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுக்க பூவுலகிலிருந்து விடை பெற்றார் ஜாக்சன்.

காலத்தால் மறக்க முடியாத ஜாக்சன் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், ஜாக்சனின் நினைவு என்றும் நம் மனதை விட்டு பிரிய போவதில்லை. 

Blogger Widgets