Saturday, May 23, 2009

நான் ரசித்து படித்த குட்டிக்கதைகள்

ஒரு சர்கஸ் குழுவிடம் சிக்கி கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கரி மட்டுமே கொடுத்தார்கள். கட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித்திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது.

ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகைக்கட்சிசாலை உரிமையாளார் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிட கொடுப்பார்கள் என்று நாக்கை சப்பு கொடிக்கொண்டது.அமரிக்காவில் சென்று இறங்கிய முதல் நாள் காலையில் அதற்கு அழகாக பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலில் டிபன் கொடுத்தார்கள். ஆசையோடு அதை பிரித்த சிங்கம், உள்ளே வாழைப்பழங்கள் மட்டுமே இருபத்தை பார்த்து ஏமாந்து போனது. நாடு விட்டு நாடு மாறி வந்திருக்கும் நேரத்தில், கறி கொடுத்தால் வயிறு கெட்டுவிடும் என்ற கவலையில் தருகிறார்கள் என நினைத்தது அது.

ஆனால் அடுத்த நாளும் வாழைப்பழம்தான் கொடுத்தார்கள். மூன்றாவது நாள் பார்சல் கொண்டு வந்து கொடுத்தவனை கொஞ்சம் நிற்கச் சொல்லிவிட்டு பிரித்துப்பார்த்தது. அன்றும் அதே! பார்சல் கொடுத்த ஆசாமியை கோபத்தோடு ஓங்கி அறைந்துவிட்டு, நான் யார் தெரியுமா? காட்டுக்கே ராஜாவான சிங்கம், எத்தனை விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவேன் தெரியுமா? கேவலம் எனக்கு வாழைப்பழம் தருகிறீர்கள். என்ன ஆச்சு உங்கள் நிர்வாகத்துக்கு! என்று சத்தம் போட்டது.

பார்சல் கொடுத்தவன் பணிவாக சொன்னான் ...ஐயா ! தாங்கள் சிங்கம் என்பது எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருப்பது குரங்கின் விசாவில் அதனால் குரங்குக்கான உணவைத்தான் உங்களுக்கு தரமுடியும்!.

கருத்து:-

தெரியாத இடத்தில் டீம் மெம்பராக அவதிப்படுவதைவிட சொந்த மண்ணில் "பி.எம்"மாக இருப்பது நல்லது-ன்னு சொல்லுவேன்னு நினைக்க கூடாது. தெரியாத இடத்தில் குரங்கு மாதிரி அவதிப்படுவதைவிட, சொந்த மண்ணில் சிங்கமாக இருப்பது நல்லது.


-----------------------------
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து
-----------------------------

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

-----------------------------
உலகத்திற்கு உப்பாய் இரு
-----------------------------

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

-----------------------------

Saturday, May 16, 2009

டெல்லி [இறுதி] பாகம்- IV - ஹிந்தி தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது!

நாங்க "வாக் இன் இன்டெர்வியு" போக, மத்த நேரத்துல "ஏக் காவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா"-ன்னு ஹிந்தி படிச்சுகிட்டு இருந்தப்போ, என் குரு ராஜேஷ் என்னை அடிக்கடி கேட்பார், எப்போ முழுசா ஹிந்தி பேசுவேன்னு?

அதுமட்டும் இல்லாம எனக்கு உதாரணமா என் நண்பன் "ஜான்" அவனை பாரு தினம் வீட்டுக்கு தேவையான எல்லா பொருளும் வாங்க எவ்ளோ ஆர்வமா போறான்னு!

அதுதான் பிள்ளைக்கு அழகு, நாலு பேரோட பேசினாத்தான் உனக்கும் ஹிந்தி பேச வரும்ன்னு வசை பாடுவாரு.

எனக்கு செம காண்டா ஆகிடும், என்னடா இது? நாமளாவது ஒரு நாலு வார்தை சேந்தாப்புல பேசுவோம், இதுக்கு ஹிந்தி ஒன்னுமே புரியாதே?

போன வாரம் கூட இவனும் சுச்சு மாமாவும் ஆட்டோவுல போயிட்டு, ஆட்டோகாரன் பச்சீஸ் (இருபத்தஞ்சு ரூபா) கேட்டதுக்கு! இல்ல, இல்ல நாங்க நேத்து கூட பச்சாஸ்-குதான் போனோம்ன்னு சண்டை போட்டு "அம்பது ரூபா" கொடுத்துட்டு வந்தாங்களே!

"பச்சீஸ்-கும் (இருபத்தஞ்சு ரூபா) பச்சாஸ்-கும் (அம்பது ரூபா)" வித்தியாசம் தெரியாத இவனுக்குள்ள இப்படி ஒரு ஹிந்தி ஆர்வமா?

சரி, இவனே போய் சமாளிக்கும் போது, இன்னிக்கு நம்மளும் கூட போய் பாத்துருவோம்-ன்னு ஆர்வமா ஜான்கிட்ட சொன்னேன்.

அவனும் சரி, சரி வா..! இப்பத்தான் தோனுதாக்கும்....? ஆனா ஒரு கண்டிசன் எல்லா விசையத்தையும் மாதிரி இதையும் வச்சு என்ன ஓட்டக்கூடாது ஓகேவா-ன்னு கேட்க?

நானும் "ச்ச" இவரப்போய் நம்ம ஓட்டி, நம்ம ஹிந்தி பேசுவதை நாமே கெடுத்துக்ககூடாது-ன்னு, சரி ஜான் யார் கிட்டையும் இத பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லிட்டு கூட போனேன்.

ஜான் வழக்கம் போல எல்லா "காஸ்மெட்டிக்கும்" போட்டுகிட்டு கீழ வர, நேரா ஒரு காய்விற்கும் கடைக்கு போனோம், போகும் போதே என்கிட்ட சொன்னார், எதுவும் பேசாதே கவனமா பார்ன்னு.

நானும் ஒருவேளை உதட்டு அசைவை கவனிக்கனும்னு போல-ன்னு நினைச்சுகிட்டு, அவர் என்ன பேச போராருன்னு கவனமா பாத்துக்கிட்டு நின்னேன்.

அவரை பார்த்ததும் கடைக்காரர் கையெல்லாம் ஆட்டி "ராம் ராம்-ஜி"-ன்னு சொல்ல நான் ஜானோட செல்வாக்கை பாத்து சும்மா அசந்து போய்டேன்.ஆனா, இவர் பதிலுக்கு சிரிச்சரே தவிர, ஒரு வார்த்தை கூட பேசல, நேரா போனார் போய்...!

அதுக்கப்புறமா எல்லாம் ஒரே "ஆக்சன்" தான்!

ஜான்:- ஒரு ஒருகிலோ எடை கல்லை எடுத்து கொடுத்தாரு...!

கடைகாரர்:- அந்த கல்லை வாங்கி தராசுல வச்சாரு...!

ஜான்:- ஒரு வெங்காயத்தை எடுத்து கொடுக்க,

கடைகாரர்:- ஒரு கிலோ வெங்காயம் கொடுக்க,

ஜான்:- ஒரு ரெண்டு கிலோ கல்லை எடுத்து கொடுக்க,

கடைகாரர்:- அந்த கல்லை வாங்கி தராசுல வைக்க

ஜான்:- ஒரு தக்காளியை கொடுக்க,

கடைகாரர்:- ரெண்டு கிலோ தக்காளியை கொடுக்க, இப்படியே எல்லாம் வாங்கியாச்சு.

(வடிவேலு மருதமலை காமெடி மாதிரி) நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்...!

இப்பவும் எனக்குள்ள ஒரு சந்தேகம்?

காசை கொடுக்கணுமே? மொத்தம் என்ன விலைன்னு அவர் எப்படி சொல்லுவாரு?

ஜான் எப்படி புரிஞ்சு காசை கொடுப்பருன்னு யோசிச்சுகிட்டு கடைகாரரை பார்த்தா அவரு ஒன்னுமே சொல்லல!

என் சந்தேகம் தீராம, ஜான் பக்கம் திரும்பினா, அவர் "கூலா" ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தாரு.

கடைகாரரும் வாங்கி வைத்துக்கொண்டு மிச்ச பணத்தை கொடுத்து "ராம் ராம்-ஜி"-ன்னு சொல்ல, இவர் பதிலுக்கு சிரித்து விட்டு வந்தார்.

நான் அப்படியே ஜானை பாத்தேன்...!

அவரும் கொஞ்சம் கூட அசராமல் நீ என்ன நினைத்து என்னை லுக் விடுகிறாய் என்று எனக்கு புரிகிறது.

எப்படி பாத்தாலும் காய் வாங்கும் விலை மொத்தமா நூறு ரூபாய்க்குள்ள தான வரும்? அதான் தான் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு, நூறு ரூபா நோட்டா மாத்தி வச்சு இருக்கேன்.

சிம்பிள், தினம் ஒரு நூறு ரூபா நோட்டு, இத விட்டுட்டு உன்னை மாதிரி அவனுககிட்ட பேச்சு வாங்க வேண்டிய இருக்காது பாரு-ன்னு சொன்னாரு.

அவ்ளோதான், எனக்கு மண்டைல கொம்பு முளைச்சு, காதுல புகை வராத குறை!

என்னப்பா இதெல்லாம்? உன்ன போய் அந்த ஆளு ராஜேஷ் நல்லவேன்னு நினைச்சுகிட்டு இருக்காரே?

அதை விட கொடுமை உன்கூட போய் ஹிந்தி கத்துக்க வந்தேன் பாருன்னு என்ன நானே நொந்துகிட்டேன்.

அதுக்கும் அவர் அசராம சொன்ன பீட்டர் பதில்...!

" யு சி மேன், கம்யுனிகேசன் இஸ் நாட் வாட் யு டாக், கம்யுனிகேசன் இஸ் வாட் யு மேக் அதர்ஸ் டு அண்டர்ஸ்டாண்ட்" ஓகே-ன்னு பீட்டர் விட...!

அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன், இனி எவன் என்னை என்ன திட்டினாலும் சரி, இல்ல வாயில் ஒரு செருப்பை கொடுத்துட்டு, இன்னொரு செருப்பால் என்ன அடித்தாலும் சரி...! இவன் கூட போய் ஹிந்தி கத்துக்க நினைக்க மட்டும் கூடவே கூடாது என்று.

அது ஓர் அழகிய நிலா காலம், ஆனால் அந்த நட்பு இப்போது இல்லையே என்று மனம் சில அந்தி மாலை பொழுதில் நினைக்கும்.

நன்றி!.

Friday, May 15, 2009

டெல்லி பாகம்- III - சோட்டுவின் தலைவலி நடிப்பு

எங்க குரூப்ல , நண்பன் காதரும், குரு ராஜேஷும் மட்டும் வேலை பாத்த நாட்கள் அது, மத்த நான், சோட்டு-கார்த்தி, வில்ஸ் விஜி,குமார், ஜான் எல்லோருக்கும் வேலை தேடுறது தான் வேலை, தினம் காலையில குருவும், நண்பனும் , வேலைக்கு போகும்போது, எங்களுக்கு அம்பது ரூபாவும் நாலு வில்ஸ் சிகரெட், நாலு கிளாசிக் ரெகுலெர் சிகரெட் (ரெண்டு பேரும் வேற வேற பிரண்ட்) குடுத்துட்டு போவாங்க, இந்த அம்பது ரூபா எதுக்குனா நாங்க "வாக் இன் இன்டெர்வியு" போக, மத்த நேரத்துல எதாவது படிக்கணும் இல்லேன்னா ஹிந்தி பழகனும்னு கண்டிசன்வேற (நாங்க ஹிந்தி பழகுன கதைய அடுத்த பதிவில் சொல்றேன்) கார்த்தியும் விஜியும் வயசு கம்மிங்கரதால அவங்களுக்கு கண்டிசன் ரொம்ப ஜாஸ்தி.

அப்ப சாப்ட்வேர் கம்பெனில ஜாவா ப்ரோக்ராமர் ஜன்னலுக்கு வெளில புல்லு மேஞ்ச மாடு கூட, அமரிக்காவுக்கு பிசினஸ் கிளாஸ்ல போய் பால் கறக்க முடியுற நேரம் (இப்போ ஒரு கல்ல எடுத்து ஜன்னலுக்கு வெளில கூட்டத்துல எரிஞ்சா, அது கண்டிப்பா ஜாவா ப்ரோகிராம் தெரிஞ்ச ஒருத்தர் மேலதான் படுங்கிறது வேற விஷயம்) அந்த அடிப்படை ஆர்வத்தில் மக்கள் எல்லாம் ஜாவா புக்கும், நான் நெட்வொர்க் புக்கும் எடுத்துட்டு படிக்க (படிக்கிற மாதிரி படம் காட்ட) உக்காந்துருவோம், நண்பனோட ஒரு சிஸ்டம் இருந்தது அதுல வேற போட்டி போட்டுக்கிட்டு ஆர்வமா படிக்கிற மாதிரி யாராவது உக்காந்துருவோம் எதுக்குனா, மக்கள் ரெண்டும் வேலைக்கு போனவுன்ன கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் "தல"யோட "என்ன சொல்ல போகிறாய்" பாட்ட போட்டுக்கிட்டு "டேவ்-2 கேம் விளையாட" .

அதையும் தாண்டி பசங்க எதாவது எசகு பிசகா பண்ணி நண்பன்கிட்ட மட்டிக்கிட்டா, "ராஜ் ஆர்யன் மல்கோத்ர" (ராஜேஷ்) தான் நண்பன் "நாராயண் ஷங்கர்" கிட்ட இருந்து காப்பத்த டிராம் அடிச்சுகிட்டே வருவாரு (Mohabbatein படம் பார்த்தவர்களுக்கு புரியும்) இந்த பேர இவங்களுக்கு யார் வச்துனு கண்டுபிடிக்க "யாரோ@யாஹூ.காம்" ன்னு ஒரு ஐடி எல்லாம் கிரியேட் பண்ணி ட்ரை பண்ணுனாங்க.

சரி, விஷயத்துக்கு வருவோம்,

இப்படியே, நாங்களும் நாள ஒட்டிகிட்டு காலைல வேலை தேட, மதியம் முழுக்க வீட்டுல தம்மடிக்க சீடி பாக்கனு பொழுத போக்குவோம், சரியா ஆறு மணியானா திரும்ப ரெண்டு பசங்களும் புத்தகம் சிஸ்டம்னு போய் உகந்துருவங்க, நண்பனும் குருவும் குளிர்காலமா இருந்தா ஓல்ட்மக் ரம், கோடை காலமா இருந்தா பீருன்னு ஏதாவது வாங்கிட்டு வர தினம் கல கலன்னு இருக்கும்.

இந்த ரெண்டுல விஜி எல்லா நேரமும் படுக்க தம் அடிக்கனு இருந்தாலும், நண்பன் கண்ன்னுல மட்டும் சரியா படிக்கிறப்ப மட்டும் தான் படுவான், சோட்டு-கார்த்தி எல்லாம் சரியாத்தான் பண்ன்னுவான், ஆனா ஏதாவது எடக்கு முடக்கா, பண்ணும் போது மட்டும் தான் மாட்டுவான், சுருக்கமா சொலனும்னா, நாள் பூர விஜி படம் பாக்க கேம் விளையடனு இருந்துட்டு புதம்கம் எடுக்கவும், சோட்டு-கார்த்தி நாள் பூரா படிக்க சிஸ்டம்ல வொர்க் பண்ணிட்டு ரிலாக்ஸ்சா ஒரு தம்ம பத்த வைக்கவும் நண்பன் பாக்கவும் சரியா இருக்கும், அன்னைக்கு பூரா எங்களுக்கு "டாம் & செர்ரி கார்டூன்" பார்த்த மாதிரி இருக்கும்.

ஒரு நாள் இப்படித்தான், நானும் விஜியும் படுத்துகிட்டு படம் பாத்துகிட்டு இருந்தோம், கார்த்தி சிஸ்டம்ல எதோ படிச்சிகிட்டு இருந்தான், அதோட இல்லாம விஜிக்கு அட்வைஸ் வேற பண்ணினான். விஜி வீணா மாட்டி பேச்சு வாங்காத, வா, வந்து எதாவது படி, இவர நம்பாத, இவர ஒன்னும் சொல்ல மாட்டங்க, அதயும் சேத்து நமக்கு தான் விழும்னு.

நானும் விஜியும், போ, தம்பி, போ ...எல்லாம் நாங்க பாத்துகிறோம், நீ ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாருன்னு சொல்லிட்டு, ஒரு புது பட சீடிய (திருட்டு சீடி) பாத்துக்கிட்டு இருந்தோம், நாங்க படம் பாக்க தாம் அடிக்கன்னு இருந்தது அவனுக்கு தாங்க முடியல, விஜி எதுக்கோ போக, இவனும் வந்து ஒரு தம்ம பத்த வச்சுக்கிட்டு படுத்துகிட்டு படம் பாக்க ஆரம்பிச்சான்.

திரும்பி வந்த விஜி போய் சிஸ்டத்துல ஒக்கார, நான் எதுக்கோ வெளிய வந்தேன், வரும் போதே நண்பன் வர்ரத பாத்துட்டு உள்ள போய் "சோட்டு, இப்படி படுத்துகிட்டு தம்மோட படிக்காம படம் பாக்குறத நண்பனோ, அண்ணனோ மட்டும் பாத்தா என்னடா பண்ணுவனு" அவன இழுத்து விட....

அவன் கொஞ்சம் கூட யோசிக்காம, படம் பாத்து கிட்டே சட்டுனு எழுந்துரிச்சு தலைல கைய வைச்சுகிட்டு " அண்ணே ஒரே தல வலிண்ணே-னு பிட்ட போட்டு எஸ்கேப் ஆவமுலான்னு சொல்லிகிட்டுடே திரும்ப" அங்க இவன் நிக்கிறதா பாத்தவுன்ன முகத்துல ஒரு எபெக்ட் கொடுத்தான் பாரு, இந்னிக்கும் எனக்கு அந்த முகம் நியாபகம் இருக்குனா பருங்க.

அவளோதான் நண்பனுக்கு ஒரே காண்டு, உடனே, எடு உன் பெட்டிய, கிளம்முமா நீ, இனி இங்க இருக்காத தமிழ் நாட்டுக்கு போனு செம வசை பாடிட்டான், இவனும் ஒன்னும் பேச முடியாம வெளியே போய் நின்னுகிட்டு இருந்தான்.

அப்பறம் வழக்கம் போல, டிரம் அடிச்சுகிட்டே "ராஜ் ஆர்யன்" (ராஜேஷ்) வந்து காப்பாத்தி விட்டார்.

இன்னைக்கு அமரிக்கவுல கிரீன் கார்டு BMW எல்லாம் வச்சு இருந்தாலும், எப்ப போன் பண்ணினாலும் மறக்க முடியுமான்னு கேட்பான்.


நன்றி மீண்டும் சந்திப்போம்

Wednesday, May 13, 2009

டெல்லி பாகம்- II - "ஒரு ருபா பிச்சை"

டெல்லில தங்கி வேலை பார்த்த இனொரு நேரத்துல, என் நண்பர்கள், குமார், ஜான், சுரேஷ் என்கிற சுச்சு மாமா, எனோட குரு ராஜேஷ், அவரோட தம்பி கார்த்தி என்கிற சோட்டு, அவனோட நண்பன் விஜயன் என்கிற வில்ஸ் விஜி, எங்க எல்லோருக்கும் பொழுது போக்கே யாரயாவது ஓட்டுறதுதான், யாருமே கிடைகலனா, சில சமயம் எங்கள நாங்களே ஓட்டிகுவோம். அதுலேயும் "வில்ஸ் விஜிய (எப்பயுமே வில்ஸ் சிகரட் கைல வச்சு இருக்கறதால வில்ஸ் விஜி) கலாய்ச்சு மொக்கைய போடுறது எங்க எல்லோருக்குமே பிடிச்ச பொழுதுபோக்கு.

காரணம் என்னான, விஜி ஆளு பக்க ஆருஅடில நம்ம பொன்னம்பலம் மாதிரி இருப்பான், அலுவலகம் போற நேரம் தவிர, மத்த எல்லா நேரமும் ஒரே துணிலதான் இருப்பான், ஒரு அழுக்கு ட்ரவுசர், ஒரு அழுக்கு பனியன், அது உண்மைல என்ன கலர்னு எங்க யாருக்குமே சத்தியமா தெரியாது. அந்த கருமத்த துவைச்சா என்னடான்னு கேட்டா, அண்ணே இப்பதாண்ணே வங்கி ரெண்டு வருசமச்சுனு சொல்லி, சலிக்காம அதயும் போட்டுகிட்டே எங்கயும் வருவான்.

ஒரு சீடி விடாம வாங்கி பக்குரதுதான் அவனோட வேலை, அது என்ன மொழி சீடியா இருந்தாலும், ஆனா விஜி நல்ல புத்திசாலீ, அப்பவே அவன் படிக்குற புத்தகமும் சரி, பாக்குற சீடியும் சரி, பாதி எங்களுக்கு புரியவே புரியாது (சரி..சரி... இப்போ மட்டுமும் நாங்க என்ன ஒபாமாவுக்கு டியுசனா எடுக்க போறோம், இப்பயும் புரியாது தான்).

இப்படியே ஒரு நான் ராத்திரி சாப்பாட்டுக்கு நண்பர்கள் எல்லாம் வழக்கம் போல கீழ உள்ள ஒரு பஞ்சாபி கடைக்கு (அந்த கடை பஞ்சாபி ஆன்ட்டி படு அம்சமா இருப்பதால அந்த கடைக்கு நாங்க வச்ச பேரு "மடிப்பு அம்சா கடை" ) சாப்ட போனோம், தம்பி விஜியும், என்கிட்டே வழக்கம் போல தன் சந்தேகத்த கேட்க எல்லோரையும் மொக்கைய போட்டுகிட்டே வந்தோம்.

நான்: குமார், போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிய என்னடா சொன்ன, இந்த வாரம் கூப்பிட்டதுக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டாரு?

குமார்: இல்ல மாப்ஸ், நொய்டாலிருந்து வந்துட்டு ஒடனே கிளம்புறேன்னு சொன்னாரு, இருங்க பாஸ் போலாமுன்னு நானும் சோட்டும் சொன்னோம்

நான்: சரி, அதுக்கா அவரு கடுப்பனாறு? உண்மைய சொல்லுமா ?

குமார்: அதுக்கு இல்லடா, அவரு இல்ல இல்ல நான் போய் துணி துவைக்கனும்னு சொன்னாரா?

நான்: சரி,

குமார்: நான் சொன்னேன், இதுக்கு எதுக்குங்க முப்பது கிலோமீட்டர் போகணும், இந்தா நாங்க ரெண்டு பக்கெட் புல்லா நனைச்சு வச்சு இருக்கோம், போய் ஆசைதீர துவைங்கனு சொன்னோம், அது தப்பா மாப்ஸ்...

நான்: அது தப்பே இல்லடா, ஆனா அவன் போய் இந்த வாரம் ஆள கூட்டிகிட்டு வந்தா அப்ப வரும் தப்பு தாரை எல்லாம்.

நான்: சரி, தம்பி நீ அந்த தோசை கடை மாஸ்டர்ர என்ன கண்ணு சொன்ன, அவன் ஒம்மேல கடுப்பா இருக்கான்?

சோட்டு: நாங்க சாப்ட போனப்ப, தோசைய நல்லா போடுங்கனு சொன்னதுக்கு, என்க்கேவா, நான் நாலு வருசமா தோசை போடுறேன் தெரியுமான்னு சொன்னாண்ணே.

நான்: நீ என்ன கண்ணா சொன்னா அத சொல்லு ?

சோட்டு: நான் நாலு வருசமாவா இன்னுமா எடுக்க முடியலானு சொன்னேன் அதுக்கு போய் அவன் கடுப்பானா நான் என்னாண்ணே பண்ண முடியும்?

விஜி: அத விடுங்கண்ணே, தினம் நான் கலைல போகும் போது ஒரு பொண்ணு விடாம பாத்தா என்னண்ணே அர்த்தம்?

நான்: நீ கதவ முடிட்டு போகலைனு அர்த்தம்?

விஜி: அண்ணே, அது இல்லானே, நான் ஆபீஸ் போகும் போது பாத்தா?

நான்: ஓ.. அதுவா, இந்த காட்டான் இருக்க ஏரியாலயா, நம்மளும் இருக்கமான்னு பாப்பா போல...

விஜி: இல்லண்ணே...பஸ் ஸ்டாப்லேயும் பாத்தா என்ண்ணே அர்த்தம்?

நான்: இவன் நிக்கிற இந்த பஸ் ஸ்டாப்புல, இனி ஜென்மத்துக்கும் நாம வரக்கூடாதுன்னு அர்த்தம்...

விஜி: போங்கண்ணே, அவ பஸ்ல ஏறியும் திரும்பி பாப்பா தெரியுமா..

சோட்டு-கார்த்தி: வேணாம் விஜி "டெல்லியில் இளம்பெண் தற்கொலைன்னு "தினத்தந்தில" வர காரணமா ஆகிராத...

குமார்: தம்பி அவனுக்கு பொறாமை, யு கேரி யான்...

நான்: அது தம்பி, ஒரு வேலை நீ அந்த பஸுல ஏரூறியான்னு பாக்கத்தான்...

விஜி: ஆமாண்ணே, அதுக்கு என்ண்ணே அர்த்தம், ஓர் வேலை நானும் அந்த பஸ்ல ஏரூனா...

நான்: அவ பாத்ததும், அதுக்கு தாம்மா, ஓர் வேலை நீயும் அந்த பஸ்ல ஏரூனா, அடுத்த நாளிருந்து அவ வேற பஸ்ல போக வேண்டி இருந்து இருக்கும் ...

விஜி: போங்கண்ணே,உங்களுக்கு ஒன்னுமே தெரியல, அதுனால நான் உங்களுக்கு குடுத்த "டாக்டர் மத்தர்பூதம்" பட்டத்த திரும்ப வங்கிக்கறேன்.

இப்படியாய் மொக்கைய போட்டுக்கிட்டு சாப்டு முடிச்சிட்டு திரும்ப வந்துகிட்டு இருந்தோம், வர்ற வழியல விஜி ஒரு சீடி கடைல போய் புது சீடி ஏதாவது இருக்கனு பாக்க நாங்க எல்லாம், பேசிகிட்டே முன்னடி நடந்தோம், தம்பி விஜி சீடியோ, பீடவோ வாங்க பணம் கம்மியா இருக்க, அண்ணே ஒரு ரூபா இருந்தா குடுங்கன்னு சொல்லிக்கிட்டு பின்னாடி ஓடி வர, எங்களுக்கு முன்னாடி வந்த வேற யாரோ தமிழ் மக்கள், இவன் உருவத்தையும், அழுக்கு துணியையும் பாத்துட்டு, ஐயோ பாவம்னு சொல்லிகிட்டு ஒரு ஒருருபா காச இவன் கையல வைக்க, நாங்க திரும்பி பாக்கவும் சரியா இருந்தது.

ஒரு விநாடி நாங்க எல்லாம் (விஜியும் சேத்து) அதிர்ச்சி ஆனாலும், நடந்தத யூகிச்சு, சிரிச்சா ...இன்னைக்கும் விஜினு சொன்ன நாங்க எல்லோரும் நினைச்சு சிரிக்க முடியுற ஒரு நிகழ்சி அது.

Monday, May 11, 2009

டெல்லி பாகம்-I - "ராஜஸ்தான் ரயிலில் ரவுசு"

முகு: இந்த பதிவில் உள்ள படங்களுக்கும், பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், சும்மா...! ஒரு கண் குளிர்சிக்காகவும், ராஜஸ்தான் "எபெக்ட்டுக்காகவும்" தான்.

நண்பர்களோட டெல்லில தங்கி வேலை பார்த்த நேரம் அது, ஒரு நண்பனோட அக்காவுக்கு ரெட்டை குழந்தை பிறந்து இருந்தது, அவுங்க கணவரோட பணி விமான படை தலமான ஜோத்பூர், அது நமக்கு டெல்லில இருந்து பக்கம் என்பதால், நண்பர்கள் எலோரும் ராஜஸ்தான் போக ஒரு பிலான் போட்டோம்.

நானும் என் நண்பர்கள், குமார், ஜான், சுரேஷ் என்கிற சுச்சு மாமா, என்னோட குரு ராஜேஷ், அவரோட தம்பி கார்த்தி என்கிற சோட்டு, அவனோட நண்பன் விஜயன் என்கிற வில்ஸ் விஜி, எலோரும் புறப்பட தயார் ஆனோம். இதில் ராஜேசும், விஜியும் தான் நல்லா ஹிந்தி பேசுவாங்க, மத்த நாங்க எல்லாம் தத்தி.

("அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை பரப்பும் நாட்டுபுற நடன மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை தொலைத்தது யார்?")நம்ம கலாச்சாரம் மாறாம டிக்கெட் எடுக்குறதுக்கு முன்னாடியே சரக்கு, தம் எல்லாம் வாங்க போனோம்.

அதுவும் நம்ம பண்பாடு "நாலு பேரும் ஒன்னா பாருக்கு போனாலும், ஆளாளுக்கு ஒரு சரக்கும் மிக்ஸ்சிங்கும் வாங்க வேண்டும் என்பது தானே!, அந்த முறையை காப்பாத்த நாமும் ஆளாளுக்கு ஒரு சரக்கும் மிக்ஸ்சிங்கும் மறாக்காம தனித்தனியா தம் வாங்கியாச்சு.

வீட்டுக்கு வந்து ஆளுக்கு ஒரு ரவுண்டு முடிச்சிட்டு, மிக்ஸ்சிங் மாறாம கோக், சோடான்னு ஒரு ஆறு இரண்டு லிட்டர் பாட்டில் முழுவதும் எடுத்தாச்சு. இதுல சைடிஷ் வேற ஒரு பத்து பாக்கெட்.

இப்படியே போய் ஒரே பெட்டில இருக்க எட்டு சீட்டையும் வாங்கி ஒரு வழியா ரயில் புறப்பட்டாச்சு.

பொது நல நோக்கோட ஜான் மேல இருந்த ரெண்டு சீட்டுக்கும் நடுவுல ஒரு துண்ட கட்டி அதுல எல்லா சைடிஷ்சையும் கொட்டி ரவுண்டு கட்ட ஆரபிச்சோம், அப்பத்தான் டெல்லில ரயில்ல தம் தண்ணி அடிக்க கூடாதுன்னு சட்டம் வந்த புதுசு.

ரிஸ்க் எடுக்குறதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு உங்களுக்கு தெரியாதா என்னா?

இப்படியே ஒரு மூணு ரவுண்டு போச்சு, நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு.

சுச்சு மாமா ஒரு கைல கிளாஸ் இன்னொரு கைல தம்மோட, இயற்கைய ரசுச்சுகிட்டே குடிக்க போறேன்னு சொல்லி தொலைக்க, உடனே ஜானும் சேர்ந்துகிட்டு போய் கதவை திறந்துகிட்டு நின்னாக நம்ம மக்க.

நானும் நாலு ரவுண்டு மப்புல, மேல் சீட்ல ஒக்காந்துகிட்டு எதிர் சீட்ல கால நீட்டி மட்டை ஆகி இருந்தேன்.

மத்த மக்க எல்லாம் மப்புல அமரிக்க பொருளாதாரம் மற்றும் இந்திய முன்னேற்றம் பற்றி மும்பரமா பேசி, இல்ல இல்ல கத்திகிட்டு வந்தாங்க (சுத்தமான பீட்டர் மொக்கை).திடீன்னு பொத பொதன்னு போலீஸ் ரெண்டு பக்கமும் வந்தாங்க, வந்தவுன்ன என்ன பாத்து ஒரு போலீஸ் "நீச்சே உட்டாவ் வ் வ் வ் னு" (கீழ இறங்குன்னு) கத்தினார்.

நானும் சுதாரிச்சு கீழ இறங்க போன போது நடுவுல இருந்த துண்டை அவரு துப்பாக்கியால தட்டி விட்டாரு, உள்ள இருந்த சரக்கு, தம், மிக்ஸ்சிங்ன்னு மொத்தமா கீழ விழ, அத பார்த்தவுடன் அவருக்கு பெரிய அதிர்ச்சி.

"சாலா பூரா பார் கோல்தியா கியா" (மச்சான் முழுசா ஒரு பார் திறந்து வச்சு இருக்கியா)னு கேட்டு ஒரு அறை விட்டான் பாருங்க...! அடிச்ச மப்பு தெளிஞ்சு கண்ணுல வட்ட வட்டமா நச்சதிரம் பறந்தது எனக்கு.

உடனே நம்ம குரு ஹிந்தில எதோ சொல்ல அவருக்கு ஒரு அறை, ஒரே கலவரமா போச்சு.

அப்புறம் நம்ம போலீஸ் எல்லோருடைய பொருளையும் செக்பண்ணி டிக்கெட், லேப்டாப், பாஸ்போர்ட், மொபைல் எல்லாம் எடுத்துகிட்டு எங்கடா போறீங்க நீங்க தீவிரவாதியான்னு கேட்க?

நம்ம கூட்டத்துல எதோ ஒன்னு "அண்ணே நம்ம தீவிரமா வெளிநாட்டு வேலை தேடுரவாதின்னு கூட தெரியமா நம்மள போயி தீவிரவாதியான்னு கேட்குது பாருங்க!

இவரு சிறப்பு போலீஸ் இல்லண்ணே, சிரிப்பு போலீஸ் போல நீங்க அவரோட ஐ.டி கார்ட் செக் பண்ணுகண்ணே-ன்னு மப்புல சின்னபுள்ள தனமா சொல்லி தொலைச்சுருச்சு.

அவ்வளவுதான் அந்த போலீஸ் செம காண்டா ஆகிட்டாரு.

உடனே எல்லோரும் கிளம்பு அடுத்த ஸ்டேஷன்ல இறங்குங்க ரயில்வே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உங்கள ஒப்படைகிறேன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் வழக்கம் போல நம்ம சிரிப்பு ஸாரி, சிறப்பு போலீஸ், அப்டியே கூட்டிகிட்டு போய் கழிவறை பக்கத்துல நிக்க வச்சு வழக்கம் போல கதையை ஆரமிக்க, அந்த கடமை தவறாத "அலைக்ஸ் பாண்டியன்" சரி, சரி, நீங்க எல்லாம் படிச்சா பசங்க, போலீஸ் கேஸ் எல்லாம் உங்களுக்கு வேணாம், ஆளுக்கு ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போங்கன்னு நல்ல ஒரு தீர்ப்பை சொன்னாரு.

நாங்களும் ஆளுக்கு ஆயிரம் ரூபாயா யா யா யா...ஐயோ ...ஐயோ ...எங்ககிட்ட மொத்தமே ஆயிரம் ரூபா தாங்க இருக்கு சொன்னோம்.

அதையும் விடாம வாங்கி கொண்டு, சரி எல்லா பாட்டிலையும் கழிவறைல போய் கொட்டுங்கன்னு சொல்லிட்டு, கொஞ்சம் பெரிய மனசோட யாராவது இன்னும் குடிக்கனும்னா கழிவறை உள்ள போய் குடிங்கன்னு அனுமதி வேற கொடுத்தாரு.

எல்லாம் பயத்துல ஒருத்தர் முகக்தை ஒருத்தர் பார்க்க, நானும் நம்ம குரு ராஜேசும் மட்டும் கன்னத்துல கைய வச்சுக்கிட்டு "தென் பாண்டி சீமைல தேரோடும் வீதில மான் போல வந்தவனே யார் அடிச்சாரோன்னு" ரயில் பேக்ரவுண்டு எபெக்ட்ல பாட்டு கேட்க கழிவறைக்குள்ள போய் முடிச்ச வரை ஒரே மூச்சுல குடிச்சுட்டு வந்தோம்.

(அடி நாங்கதான வாங்குனோம்).

ஒரு வழியா எல்லா பிரச்சனையும் முடிஞ்சு எல்லோரும் அவரவர் சீட்டுல போய் படுத்தோம். போகும் போதே அடி எப்படின்னு நம்ம மக்களோட அக்கறையான விசாரிப்புவேற!.

எல்லாம் போய் படுத்தோமே தவிர ஒருத்தனும் தூங்கல, எப்படா ராஜஸ்தான் வரும்ன்னு பாத்துகிட்டு இருந்தோம்.திடீன்னு திரும்ப எங்க பெட்டில லைட்டை யாரோ போட தட, தடன்னு எல்லோரும் எழுந்து பாத்தோம், யாரோ ஒருத்தர் நின்னுக்கிட்டு இங்க எதாவது பிரச்சனையான்னு கேட்டார்.

நாங்களும் வேற எவனோ திரும்ப பணம் கேட்க வந்துட்டான்னு, ஒன்னும் இல்ல எல்லாம் முடிஞ்சதுன்னு சொன்னோம்.

உடனே அவர் பயப்படாதீங்க நான் "ரயில்வே சி.பி.சி.ஐ.டி" இங்க பாதுகாப்புக்கு வந்த போலீஸ் உங்ககிட்ட பணம் லஞ்சம் வாங்கியதாக எனக்கு தகவல் வந்தது அது உண்மையாய் இருந்தால் நான் உங்களுக்கு அந்த பணத்தை திரும்ப வங்கி தர முடியும்னு சொன்னாரு.

நாங்களும் இழந்த குசி திரும்ப வர எல்லா விசையத்தையும் அவரிடம் சொன்னோம். உடனே அவர் போய் டி.டி.ஆரை அழைத்து வந்தார், அவரும் தன்னிடம் இருந்த தாள்களை சரி பார்த்து அந்த போலீஸ் நம்பர் பற்றிய தகவல்களை எல்லாம் சொன்னார்.

உடனே நம்ம சி.பி.சி.ஐ.டி உடனே யார் யாருக்கோ மொபைல்ல போனை போட்டு காரசாரம பேசுனாரு.

ஒரு அஞ்சு நிமிடத்தில் நம்மகிட்ட பணம் வாங்கின அலக்ஸ் பாண்டியன் கோபமா வந்தாரு, வந்த வேகத்துல என்னென்னவோ கத்திக்கிட்டு, எங்க உடமைகளை எல்லாம் எடுத்தாரு உடனே டி.டி.யாரும், சி.பி.சி.ஐ.டி-யும் அவரை தடுத்து, இதை செய்ய உங்களுக்கு உரிமையில்லை.

அவர்கள் குடித்தால் நீங்கள் டி.டி.யார் - கிட்ட தான் சொல்ல முடியும் தவிர, மற்ற படி ஓடும் வண்டியில் அவர்களை அடிக்கவோ பணம் வாங்கவோ உங்களுக்கு உரிமையில்லை.

இப்போது நீங்கள் அவங்களுக்கு ஓடும் ரயிலில் குடித்தற்க்கான ஒரு "சார்ஜ் சீட்" கொடுங்கள், ஆனால் நீங்கள் அதற்கான சாட்சியாக அவர்கள் குடித்த பாட்டிலை சமர்பிக்க வேண்டும்.

நானும் உங்கள் மேல் ஓடுகிற ரயிலில் பயணியை அடித்தது மற்றும் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்கான "சார்ஜ் சீட்" கொடுக்கிறேன்னு ஒரு பிட்ட போட போலீஸ் இன்னும் காண்டகிட்டார்.

அப்புறம் ஒரு சில நிமிடத்தில் நம்ம பணம் கைக்கு வந்து விட்டது, நாங்களும் நிம்மதியாக ராஜஸ்தான் போய் சேர்ந்தோம்.

அடுத்த நாள், எப்படி அந்த போலீஸ் நம்ம சீட்டுக்கு மட்டும் சரியா வந்ததுன்னு யோசிச்சு நாங்க மொக்கைய போட்டுக்கிட்டு இருந்த போதுதான் சுச்சு மாமா ஒரு உண்மைய சொல்லுச்சு.

இந்த மக்க ஓடும் வண்டியில் கதவை திறந்துகிட்டு நின்றபோது அந்த வழியாக வந்த போலீஸ் அவர்கள் கையில் இருந்த தம்மை கீழ போட சொல்லி ஹிந்தில சொல்ல, நம்ம மக்க அவரை பார்த்து "வி டோன்ட் நோ ஹிந்தி-னு" பீட்டர் விட அவரும் கடுப்பாகி பக்கதுல வந்து பார்த்த போதுதான் சரக்கு மேட்டார் அவருக்கு தெரிஞ்சு இருக்கு.

அவரும் வேறு எதோ கேட்க போய், நம்ம மக்கள் விடாம பீட்டர் விட்டு "டாக் டு அவர் பிரெண்ட்ஸ்னு" எங்க சீட்டை கைய காட்டி இருக்குதுக பக்கிக.

அது ஒரு அழகிய நிலாக்காலம்.

இதை விட, டெல்லியில் வில்ஸ் விஜியோட "ஒரு ருபா பிச்சை" கதை ஒன்னு இருக்கு, அந்த மேட்டரோட உங்களை "நெக்ஸ்ட் மீட் பண்றேன்".

நன்றி!.

Sunday, May 10, 2009

என் மூன்றாவது கண்ணில் பட்டது - Digital Eye

எந்த ஒப்பனையும் இல்லாத என் Sony DSC-H50 ன் படங்கள்.

தூக்கம் வராத ஓர் இரவில் தூங்கும் நகரத்தை பார்த்த போது..படுக்க வைச்சு கட்டி நிமித்தி இருப்பாங்களோ?இலை இல்லாத காட்டில் பூத்த பூக்கள்....காரம் சாரமா ஒரு கிளிக் :-)பூக்களோடு பூவாய் ...என்ன அழகு....பூக்களோடு சில வார்த்தைகள்......
இந்த பூவின் பின்னால் இருப்பது "முழு சூரியன்" என்றால் நம்ப முடியுமா?"சின்ன பூ, சின்ன பூ, கண்ணெல்லாம் வண்ணபூ-னு" ராதா பாடுவாங்களே அதே பூதான்...

இது உண்மையான பூக்கள் அல்ல...உங்கள் நேரத்துக்கு என் நன்றி.

Thursday, May 7, 2009

அன்னையர் தின வாழ்த்துக்கள்இந்த உலகில் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் "அம்மா"
மதிப்பிட முடியாத என் அன்னைக்கு மட்டுமல்ல அன்னையுள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் "அன்னையர் தின வாழ்த்துக்கள்"தாய், நம்முடைய பிறப்புக்கு மூலம் அவளே. உலகத்தில் நமக்கு சர்வ நிச்சயமாக தெரிந்தது எது?
தாய், அவள் மட்டுமே......இன்ன தாயின் வயிற்றில் பிறந்தோம் என்பது மட்டுமே நாம் அறிவோம், தாய் காட்டித்தான் தகப்பனை அறிவோம், தகப்பன் கொண்டு போய் உட்காரவைத்து "ஹரி நமத்து சிந்தம்: என்று எழுத சொல்லும்போது தான் நாம் குருவை அறிவோம், அன்பே கடவுள் அறிவே தெய்வம், என்று குரு சொல்லி கொடுத்த பின்னாலேதான் நாம் தெய்வத்தை அறிவோம், அதனலேதான் சுருக்கமாக நான்கு சொற்களைவைத்து "மாதா, பிதா, தெய்வம், குரு" என்று சொன்னார்கள்.

இந்த நான்கினுடைய வரிசையிலே சர்வ நிச்சயமாக நமக்கு தெரிந்த ஒரே உண்மை மாதா, சந்தேகத்துக்கு இடமாக இருப்பது தெய்வம், சர்வ நிச்சயமாகவும், சந்தேகத்துக்கு இடமாகவும் இருப்பது பிதாவும், குருவும் , இந்த இருவர் பற்றி சந்தேகம் எழலாம் இந்த சந்தேகங்கள் உண்மையாகவும் இருக்கலாம், தெய்வம் முழுக்க சந்தேகத்துக்கு இடமானது ஆனால் அடையும் பொது அது முழுக்க உண்மையானது, மாதா, சந்தேகத்துக்கே இடம் இல்லதவள் அவளிடம் இருந்தே நம்முடைய ஜனனம் ஆரம்பம் ஆகின்றது,

அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்அன்னையுள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் - கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து.

அம்மா .
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.


அன்புடன்,
சிங்கக்குட்டி.

Wednesday, May 6, 2009

தென் கொரியாவில் ஒரு வாடகை வீடு!

தென் கொரியாவில் ஒரு வாடகை வீட்டில் குடி இருந்தேன், ஆறு நாட்டில் வாடகை வீட்டு அனுபவம் இருந்தாலும், கொரியா அனுபவம் கண்டிப்பா இங்க சொல்லனும்னு தோனுச்சு, கொரியா வாடகை வீட்டு ரூல்ஸ் எல்லாம் கைப்புள்ள காமெடிய விட படு காமெடியா இருக்கும்.

புதுசா வீடு குடி போகனுண்ணா, என்ன என்ன பண்ணனும் பாருங்க.

1-5000 அமெரிக்க டாலர் முன் பணம் ( 250000 இந்திய பணம்)

2-ஒரு வருட ஒப்பந்தம் (ஒரு வருடத்துக்கு காம்மியா ஒப்பந்தம் பண்ண முடியாது).

3-புரோக்கர் தரகு பணம் (300 முதல் 400 அமெரிக்க டாலர் வரை - 19500 இந்திய பணம்)

சரி இதெல்லாம் நம்ம சரியா பண்ணா, நம்ம புரோக்கர் நமக்கு சாதகமா இருப்பாங்கனு நீங்க நினச்ச அது உங்க தப்பு, அதுக்கு "கம்பெனி பொறுப்பாகாது".

ஒரு வழியா வீட்டுல குடி போனா, ஒப்பந்த காலம் முடியும் முன் வீட்ட காலி பண்ண முடியாது.

ஒரு வேலை வீட்ட காலி பன்னும்படியா சந்தர்ப்பம் வந்தா, "நீங்க காலியா வர்றதுக்கு நாங்க ஒரு ஆளை துணைக்கு பிடிச்சா விட முடியும்" கவுண்டமணி ஒரு படத்துல ஆட்டோ டிரைவர் கிட்ட சொன்னா மாதிரி கேக்கலாம்னு நினைக்காதிங்க, இங்க நிஜமாவே அப்படிதான் சின்னபுள்ள தனமா சொல்லுவாங்க, அது மட்டும்தான்னு நினைக்காம மிச்ச காமெடியையும் படிங்க.

ஒப்பந்த காலம் முடியும் முன் காலி பண்ணனும்னா,

1-புது ஆளை கண்டுபிடிக்க, புரோக்கர் தரகு பணம் (300 முதல் 400 அமெரிக்க டாலர் வரை - 19500 இந்திய பணம்)

2-மாத வாடகை நாம்ம சொங்கி புரோக்கர் அடுத்த ஆளை கண்டுபிடிகிற வரை (மாதம் 500 அமெரிக்க டாலர் வரை - 25000 இந்திய பணம்)

3-இதர மாத செலவுகள் மின்சாரம், குடிநீர் பணம் (100 முதல் 150 வரை அமெரிக்க டாலர் - 8000 இந்திய பணம்)

4-இது எல்லாம் முடியற வரை நம்ம 5000 அமெரிக்க டாலர் முன் பணமும் திரும்ப கிடைக்காது.

ஒருவழியா இதுஎல்லாம் நம்ம சரியா செய்தலும், நம்ம முன் பணத்த ஆறு மாசம் வரை வீட்டுகாரரே வச்சு இருக்க இடம் இருக்குனு, நம்ம சொங்கி புரோக்கரே சொல்லிக்கொடுப்பாரு. இதுல என்ன கொடுமைனா இது எல்லாம் சுத்த கொரியன் மொழிலதான் இருக்கும், இங்க தினசரி வாழ்கைக்கு கொரியன் மொழியதவிர நாம வேற எதுவும் செய்ய முடியாது.

நானும் தத்தி தத்தி, ஒரு வழியா வீட்ட பிடிச்சு ஒரு வருசத்த ஓட்டியாச்சு, இப்போ எனக்கு இன்னும் ஏழு மாசம் தான் இங்க வேலை, அதுனால நம்ம புரோக்கர் மூலமா பேசலாமுன்னு போனா, ஒரு வருடத்துக்கு காம்மியா ஒப்பந்தம் பண்ணனும்னா நீங்க நேரா வீட்டு சொந்தகாரர்கிட்ட பேசுங்கன்னு, கப்பிதனமா சொல்லிருச்சு நம்ம சொங்கி புரோக்கர் .

புரோக்கராவது தேவலம், நம்ம வீட்டு சொந்தகாரர் அதவிட சுத்தம், நீங்க ஏழு மாசம் இருந்தா அப்புறம் குளிர் காலம் என்னால புது ஆளை கண்டுபிடிக்க முடியாது, அதுனால புதுசா யாராவது வரவரை நீங்க எல்லா செலவையும் பாத்துகிட்டா சரி, இல்லைனா நீங்க காலி பண்ணிங்கங்கனு ஒரு பிட்ட போட்டாரு.

இது நமக்கு ஒத்து வராதுன்னு, நானும் காலி பண்ண ஒத்துகிட்டு புதுசா ஒரு வீட்ட "ஒரு வருட ஒப்பந்தம் இல்லாமல்" தேடி கண்டு பிடிக்கரதுகுள்ள உயிர் போய் உயிர் வந்த மாதிரி ஆகிருச்சு .

அது போக, புது வீட்டுக்கு மாறும் போது ஒரு துணி அலமாரிய என்னால தூக்கி போடமுடியல, சரின்னு நாம வீட்டுக்காரர்கிட்ட சொன்னேன், அவரும் பெருந்தன்மையா சரின்னு சொன்னாரு, அதுனால எல்லாம் முடிஞ்சு சாவிய கொடுத்தாச்சு.

அடுத்த நாள் போன போட்டு நான் 20 டாலரூக்கு உனக்கு வாங்கித்தந்த அலமாரிய ஆளை வச்சு தூக்கி போட எனக்கு 60 டாலர் கொடுத்துட்டு, உன்னோட முன் பணத்த வங்கிக்கோ சொன்னாரு, நானும் என்னாட இது வம்பா போச்சு 20 டாலர் அலமாரிக்கு 60 டாலரா? அதுக்கு 5000 டாலரானு நொந்துகிட்டு, சரின்னு சொன்னேன், அவரும் விடாம "இவன் ரொம்ப நல்லவன்னு" நினைச்சாரோ என்னோவோ, திரும்ப போனபோட்டு எனக்கு ரெண்டு நாள் வடகையும் தந்தாதான் முன் பணத்த திருப்பி தருவேன்நாரூ, அது எதுக்குனா 20 டாலரூக்கு வாங்குன அந்த அலமாரிய 60 டாலர் கொடுத்து ஆளை வச்சு தூக்கி போட அவருக்கு ரெண்டு நாள் ஆனதாம், அதுனால அந்த அலமாரி ரெண்டு நாள் வீட்ல்ல இருந்ததுக்கு வீட்டு வாடகையாம்!!

போடா டுபுக்குன்னு, சொல்லிட்டு, நாம்ம புரோக்கர பாத்து சொன்னேன், அப்பதான் நம்ம முன் பணத்த ஆறு மாசம் வரை வீட்டுகாரரே வச்சு இருக்க இடம் இருக்குனு நம்ம புரோக்கரே எடுத்து சொல்லி, பேசாம அந்த பணத்துக்கு ஒத்துகிட்டு முன் பணத்த வாங்க பாருங்கன்னு அட்வைஸ் வேற பண்ணுச்சு அந்த சொங்கி, இது தான் வாங்கின புரோக்கர் தரகு பணத்துக்கு அவங்களோட நன்றி கடன்.

நானும் வேகமா, அது எப்படி நான் போய் "வீவக" வில் புகார் பண்ண போறதா சொல்லிடு அலுவலகத்துல என் கொரியன் நண்பர்கள்கிட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தை பத்தி கேட்டேன், எல்லோரும் சொன்ன ஒரே பதில், இங்க இது ரொம்ப சாதாரணம் அதுனால போசாம பணத்த வாங்க வழிய பாருன்னு.

ரொம்ப, என்னை நானை நொந்துகிட்டே வேற வழி இல்லாம அந்த பணத்த கொடுக்க வேண்டியதா போச்சு.

என்னதான் சொல்லுங்க சொர்கமே என்றாலும் அது நம்மூரபோல வருமா.

என் புது வீட்டு ஜன்னலிலேருந்து ஒரு கிளிக்.இதுனால கம்பெனி, பொது மக்களுக்கு சொல்லறது என்னான "கொரியா" வந்தா எதையும் "பிளான் பண்ணாம பண்ண வேண்டாம்" சாமியோ....
 

Blogger Widgets