Friday, December 25, 2009

வலைபதிவர்கள் அனைவருக்கும்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்து உள்ளது, பொதுவாகவே வருட இறுதியில் வேலை அதிகமாக இருக்கும் என் துறையில் இந்தமுறை கடந்த சில நாட்களாக கொஞ்சம் அதிகமாகவே வேலை இருந்தது.

ஒரு வழியாக பண்டிகைகால விடுமுறையாக, இது ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை.

பண்டிகைகால விடுமுறை என்றதும் வழக்கம் போல, தொலைகாட்சியில் பட்டிமன்றம் பார்க்க மற்றும் ஓடாத உருப்படி இல்லாத மொக்கை படங்களை கூட ஓடுவதாக காட்டும் நோக்கத்தில், தங்கள் சொந்த தொலைகாட்சியில் அதை மட்டுமே திரும்ப திரும்ப காட்டுவதை பார்ப்பது என்பதுதானே நம் கலாச்சாரம்!.

நம் கலாச்சாரம் போல இங்குள்ள மக்களிடம் நல்ல குணங்கள் இல்லை என்பதால், அதில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு(திருந்தி), வெளியில் சென்று மக்களோடு கலந்து மகிழ்ச்சியை கொண்டாடுவது என்று முடிவு செய்து இருக்கிறேன்.

பண்டிகை மகிழ்ச்சியை மக்களுடன் கலந்து கொண்டாடுவது, என்று முடிவானவுடன், நம் அடுத்த கலாச்சாரம் நினைவுக்கு வர...!

அட! "பனி இல்லாத மார்கழியா!, சரக்கில்லாத பண்டிகையா!" என்று மனம் சொல்ல, மூச்சு காற்று கூட புகையாக போகும் இந்த கொரியா குளிர் காலத்துக்கு தேவையான சரக்கு, மிக்சிங், சைடிஷ் என்று எல்லாம் தயார்.

எல்லாம் இருந்தாலும், தினம் தினம் சந்திக்கும் நம் பதிவர்கள் இல்லாவிட்டால் எப்படி?

ஆகவே, வாங்க சேர்ந்து அடிச்சு வருட இறுதி பண்டிகை தினங்களை கொண்டாடுவோம்.சரக்கு!சரக்கு ரெடி, இப்ப மிக்சிங்!.

சரக்கு அடிக்காதவுங்க கூட குடிக்கும் படி சில விசையம் வேண்டும் இல்லையா?பதிவுகளுக்கு விருது வழங்குவதும் வாங்குவதும் கூட பண்டிகை தினம் போல ஒரு வகை மகிழ்ச்சிதான்.

ஆனால், ஒவ்வொரு முறையும் யாராவது எனக்கு விருது தருகிறேன் என்று அழைத்தவுடன், எனக்குள் மகிழ்ச்சியோடு ஒரு சிறு பதற்றமும் தொற்றிக்கொள்ளும்!.

நம்மதான் படிக்கும் போது இருந்து எப்பவும் கடைசி பெஞ்சு மக்களாச்சே!, மற்றவர்களுக்கு நம்ம எப்படி விருது கொடுப்பது? என்பதோடு எனக்குள் மேலும் சில குழப்பங்கள் வந்து விடும்.

நமக்கு விருது கொடுத்தவர்களுக்கே பதில் விருது கொடுப்பதா?

இவ்வளவு பெரிய பதிவுலகத்தில், அருமையாக இருக்கிறது என்றுதான் சிலரை மட்டும் பின் தொடருகிறோம், அந்த சிலரில் விருதுக்கு என்று தனியாக சிலரை எப்படி தேர்வு செய்வது?

ஏன் என்றால், என் தனிப்பட்ட கொள்கைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், எல்லோருடைய எழுத்தும், திறமையும் எனக்கு பிடிக்கிறதே!

மேலும், சில பதிவர்கள் விருதுகளை தங்கள் தளத்தில் பயன் படுத்துவது இல்லை, அதனால் அவர்களை விட்டு விடுவதா?

என்று பல வகையாக குழம்பி..., ஒரு வகையான முடிவுக்கு வந்து சிலரை தேர்ந்து எடுத்தால்! நான் தான் முன்னமே சொன்னனே "நம்ம எப்பவும் கடைசி பெஞ்சு கோஷ்டின்னு".

நமக்கே ஒரு விருது கிடைச்சதுனா, நம்ம தேர்ந்து எடுத்த அந்த பதிவருக்கு அதே விருது கிடைச்சு இருக்காதா என்ன?, ஏற்கனவே அந்த விருதை அவருக்கு இருவருக்கும் மேல் கொடுத்து இருக்கிறார்கள்?

இப்ப என்ன செய்வது! என்று நீண்ட குழப்பத்தில் இருந்த நான், ஒரு வகையாக முடிவுக்கு வந்து...!

இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, வரும் அத்தனை நூற்றாண்டிலும் உலகம் போற்றும் படி, தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்ட "மைக்கேல் ஜாக்ஸன்" இந்த மண்ணை விட்டு பிரிந்த இந்த 2009 வருடத்தின் இறுதியில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த விருதுகளை சில பதிவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

இது கூல்கீதாஆச்சல்

மேனகாசத்யா

ஜலீலாவின் சமையல் அட்டகாசங்கள்

சூர்யா ௧ண்ணன்

பிரியமுடன் வசந்த்

முத்துச்சரம் ராமலக்ஷ்மி

சந்தனமுல்லை

ஈ ரா

அம்முவின் சமையல்

தியாவின் பேனா

சுமஜ்லா

கலகலப்ரியா

இது நைஸ்சுரேஷ்

நட்புடன் ஜமால்

எப்பூடி

ஸ்வர்ணரேகா

வானம்பாடிகள்

நினைவுகளுடன்-நிகே

ஹேமா

ரஹ்மான்

பித்தனின் வாக்கு

ஷ‌ஃபி

பிரியமுடன் பிரபு

அடுத்து யாரு என்று யோசித்து கொண்டு இருக்கும் போது...

"இப்படி எல்லோருக்கும் நீங்களே கொடுத்து விட்டால், அப்புறம் அவர்கள் யாருக்கு கொடுப்பாங்க?" என்று பின்னால் இருந்து தங்கமணியின் குரல் கேட்டது!.

ஆஆ, நான் பல நாள் யோசித்து மும்பரமாக வேலை செய்யும் போது "மொழி படத்தில் வரும் பிரகாஸ்ராஜ்" போல் இப்படி சிந்திக்க உன்னால் மட்டுமே முடியும்.....ஆனாலும் உன் கேள்வியில் நியாயம் இருக்கிறது.

எனவே நான் இத்தோடு நிறுத்திக்கொண்டு, மற்றவையை மேலே விருது பெற்ற பதிவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.

இனி அவர்கள் விருப்பம் போல் அவர்கள் விரும்பிய மற்றும் விரும்பும் பதிவர்களுக்கு, இந்த விருதை கொடுத்து மகிழ, வரும் புத்தாண்டை அனைவருக்கும் நலம் கொடுக்கும் இனிய வருடமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொண்டாடுவோம்.

அடப்பாவி...சிங்கக்குட்டி...சரக்கு சரக்குன்னு சொல்லி...சரக்கே இல்லாம ஒரு இடுகைய போட்டுட்டியேடா? என்று சொல்லும் உங்கள் "மைன்ட் வாய்ஸ்சை" என்னால் "கேச் பண்ண" முடிகிறது ...!

சரக்கும் அடிக்க மாட்டோம், மிக்சிங்கும் சரி இல்லை, என்று நினைக்கும் உங்களுக்காகவே, ஒரு "சூப்பர் சைடிஷ்" மக்கா கீழ பாருங்க...!ஏய்... ஏய்...இடுகைக்கு கீழ பாருமா!

இனி பேப்பர் பேனா, பென்சில், சிலேட், பல்பம் எதுவும் தேவை இருக்காது, ஆம் எல்லா துறையிலும் வளர்ந்து வரும் கணினி குழந்தைகளை விட்டு விடுமா என்ன?

இதோ வந்துகொண்டு இருக்கிறது, ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான மடி கணினி, அதுமட்டுமல்ல இதுவே உலகின் ஆக குறைந்த மடி கணினியாக இருக்கும்.ஆம், இதன் விலை தோராயமாக "மூவாயிரத்து ஐநூறு ரூபாய்" அதாவது "எழுபத்தி ஐந்து அமெரிக்க டாலர்" ."OLPC Laptop" என்று சொல்லப்படும் இந்த மடி கணினியின் பெயர் "XO-3".

இது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் படி (மைக்கிரோ சாப்ட் நிறுவனத்தின் மென் பொருளை பயன் படுத்தாத முறையில்) வடிவமைக்க பட்டு இருக்கிறது.தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக, இது பின்னாளில் இன்னும் வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2012 ஆம், வருடத்தில் இதை சந்தைக்கு கொண்டு வரும் வேலை நடந்து வருகிறது,
எனவே மக்களே நாமும் "அ,ஆ,இ" மற்றும் "க,ங,சா" எல்லாம் வரும்படி அடிப்படை கணினி மென்பொருளை வடிவமைக்கும் நேரத்துக்கு வந்து கொண்டு இருக்கிறோம்.


அல்லது, இதையும் நம் மக்களே அமெரிக்க சென்று அங்கு அவர்கள் நிறுவனத்திற்கு இதை வடிவமைத்து கொடுத்து, அதன் காப்புரிமையை அவர்கள் வாங்கும்படி செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

சரக்கு, மிக்சிங், சைடிஷ்ன்னு, யாருக்கு என்ன பிடிச்சதோ! என்ன பிடிக்கலையோ! அத சொல்லுங்க, அப்பத்தான வரும் புது வருசத்தில் இன்னமும் நல்லா பண்ணுவோம்!.

நன்றி!.
 

Blogger Widgets