Tuesday, April 20, 2010

குட்டி(ஸ்) காதல் கதை!

தேமேன்னு நான் உண்டு, என் படிப்பு உண்டுன்னு, நல்லாத்தான் வாழ்க்கை போய்கிட்டு இருந்துச்சு.அப்பத்தான் சோக்கா வந்தா, என் சொப்பன சுந்தரி!கண்கள் சந்திக்க காதல் பற்ற, தமிழே சரியாக தெரியாத நான்கூட கவிதையாய் கொட்டினேன்!

சும்மா சொல்லகூடாது, அந்த பிங்க் ட்ரெஸ்சில் பார்க்க பிகரு சும்மா கும்முன்னு இருப்பா!இப்படி என் காதல் கண்ணுக்கு அவள் ஒரு தேவதையாகவே தெரிந்தாள்!அப்புறம் என்ன...! ஆரிய உதடுகள் என்னது, திராவிட உதடுகள் உன்னது, ஆரியம் திராவிடம் ரெண்டும் ஒன்னாய் கலக்கட்டுமே!இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக "காதல் வளர்த்தேன்...காதல் வளர்த்தேன்...."அது மட்டுமா, விழியில் விழுந்து உயிரில் கலந்து, என் இதயத்தை திறந்த அந்த அழகு தேவதைக்கு பல காதல் பரிசுகளை கொடுத்தேன்.

(ஒரே செமஸ்டருக்கு பீஸ் கட்ட நான்கு முறை வீட்டில் பணம் வாங்கினேன்.)ஒவ்வொரு முறையும் என் தேவதை என் காதலை ஏற்றுக்கொள்ளும் போதெல்லாம், பூரிப்பில் மூழ்கினேன்...சந்தோஷத்தில் திளைத்தேன்...!அவளை பிரிந்து ஒரு நிமிடம் கூட இருக்க முடியாமல், "என் வீட்டில் இரவு அங்கே பகலா இல்லை இரவா" என்று விடிய விடிய மொபைல், லேன்ட் லைன் என்று மாறி மாறி பேசினேன்...!பதிலுக்கு அவள் பாடினாள்(அவள் பேச்சு கூட என் காதுக்கு சங்கீதமாய் இருந்தது.)இப்படி ராத்திரி முழுவதும் கண் முழித்து காதலித்த களைப்பில், மறுநாள் பரிச்சையில் கேட்கவா வேண்டும்...!நம்ம நண்பர்கள் எல்லாம் அவளை பார்த்த போது, சும்மா முகத்துல "ஈ" ஆடல...!அத பார்த்த எனக்கு முகத்துல பெருமை தாங்கல...!இப்படியே சந்தோஷத்தில் இருந்த போதுதான் வந்தது "காதலர் தினம்"!

ஐஸ்ல இருந்து எடுத்த ஆப்பிள் மாதிரி "பூவோட" வருவான்னு நினைத்தேன்...!அவள் அதே மாதிரி தான் வந்தாள்!

ஆனால், பூவை மட்டும் இப்படி கொண்டு போய் இன்னொருவனிடம் கொடுத்து கட்டிக்கொண்டாள்?என்னது யார் அவனா?

ஐய்!...இஸ்கு பிஸ்கு...அந்த நாய் படத்த மட்டும் என் பிளாக்ல நான் போட மாட்டேனே!.சரி சரி ஆட்டைய கவனிங்க,

அந்த கொடுமைய பார்த்தவுடன, எனக்கு செம காண்டாகி, ஜிவ்வுன்னு உச்சி மண்டைக்கு ஏறிடுச்சு...!வந்த கடுப்புல அப்படியே அவள போட்டுதள்ள மனசு துடித்தது...!ஆனாலும் கோவத்த அடக்கிகிட்டு, அவள பார்த்து போடி கொய்யாலன்னு இப்படி காட்டிட்டு வந்தேன்...!

17

காட்டிட்டு வந்துட்டேனே தவிர, பிஞ்சு மனசால தாங்க முடியல காதலை மறக்க முடியாமல், சோகம் தங்காமல் கண்ணீராய் கொட்டியது...!புண்பட்ட மனதை புகை விட்டு மாற்ற நினைத்தேன்!.

19
  
வெறும் புகையில் கரையும் காதலா என் காதல்?

துக்கம் தொண்டையை அடைக்க, சோகம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் "எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்!"இப்படி மப்பும் மந்தமுமாய் நாள் ஓட, அப்பத்தான் எனக்கு காதல்ன்னா என்னன்னு புரிஞ்சது!.

யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் கொடுத்து "அட்டு பிகரை அழகான பிகராக்கி", வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்...அறியாத வயசு புரியாத மனசு...!

22

நாடகம் விடும் வேளைதான் உச்ச காட்சி நடக்குதம்மா...! அமெரிக்க தொழில் அதிபர்ன்னு போனியேடி...! கடைசில அவன் அங்க கார்பரேட் கம்பெனிக்கு கக்குஸ் கழுவிகிட்டு இருக்கானே...!

ஓ ... இளைஞர்களே படிக்கிற வயசுல பிகரு பின்னாடி சுத்திட்டு, பின்னாடி முன்னாடி நடந்தத "பிளாக்" போட்டு எழுதாம, ஒழுங்கா படிச்சு முன்னேற பாருங்க...! பிகரு தன்னால பின்னால வரும்.
 

Blogger Widgets