Wednesday, June 10, 2009

உலகின் சிறந்த விமான நிலையம்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பல முறை சியோலின் இன்ஷான் விமான நிலையத்தை பயன்படுத்தி இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் மாற்றத்தையும், புதுமையும் என்னால் உணர முடியும்.

அப்போதெல்லாம் ஏன்! இது வரை இந்த விமான நிலையம் சிறந்த விமான நிலைய விருதை அடையவில்லை? என என்னை நானே கேட்டுக் கொள்வேன்.



அதே நேரத்தில் கடந்த முறை சென்னை விமான நிலையத்தில் இறங்கிய (இனிய) அனுபவத்தையும் என் மனம் நினைத்து, அசை போட்டு நொந்து போகிறது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை தனியாக இங்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

இந்த வருட ஸ்கைட்ராக்ஸ் ஆராய்ச்சி நிறுவன முடிவை படித்த போது என் ஆசை தீர்ந்தது.

கடந்த 11 ஆண்டுகளாக உலகின் சிறந்த விமான நிலையங்களைப் பட்டிலிட்டு வருகிறது பிரிட்டனின் ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) ஆராய்ச்சி நிறுவனம்.

உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக தென்கொரிய இன்ஷான் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டுக்கான தனது பத்து மாத சிறந்த விமான நிலைய ஆய்வின் முடிவில், தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த ஹாங்காங் விமான நிலைய இடத்தை தென்கொரிய தலைநகர் சியோலின் இன்ஷான் விமான நிலையம் பிடித்தது.

டெர்மினலைப் பராமரிக்கும் பாங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் என அனைத்திலுமே இன்ஷான் விமான நிலையம் மிகச் சிறப்பாக செயல்படுவதாக ஸ்கைட்ராக்ஸ் தெரிவித்துள்ளது.

4- நான்காவது சிறந்த விமான நிலையமாக ஜூரிச்

5- ஐந்தாவது இடத்தில் மியூனிச் விமான நிலையம்

6- ஜப்பானின் கன்சாய்க்கு 6-வது இடம்

7- கோலாலம்பூருக்கு 7-வது இடமும்

8- ஆம்ஸ்டர்டாம் விமான நிலைத்துக்கு 8-வது இடமும்

9- ஜப்பானின் சென்ட்ரல் ஜப்பான் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்றீர் நகோயா, 9-வது இடமும்

10- நியூஸிலாந்தின் ஆக்லாந்து விமான நிலையத்துக்கு 10-வது இடமும் தரப்பட்டுள்ளது.

அதிலும் இந்த முறை,

- துபாய் சர்வதேச விமான நிலையம், சிறந்த வரி விலக்கு கடைகளுக்காக பரிதுரைக்கப் பட்டு இருக்கிறது.

- ஹாங்காங் சிறந்த உணவு விடுதிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

- ஜப்பான்னின் கன்சாய் ஆக மிக சுத்தமான கழிவறைகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

- மலேசியா தனது கடந்த ஆண்டு இடத்தை இந்த ஆண்டும் தக்க வைத்துக்கொண்டது.

இந்தியாவுக்கு இந்த முறை இடம் கிடைக்கவில்லை என்றாலும், டெல்லி உள்ளிட்ட பல விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் காலத்தில் இந்தியா இந்த வரிசையில் இடம் பிடிக்க அரசு மற்றும் விமான நிலைய உழியர்கள் மற்றும் அல்லாமல், பொது மக்களும் அக்கறை எடுப்பது இந்தியராகிய நம் கடமையாகிறது.

நன்றி!.
 

Blogger Widgets