Wednesday, May 6, 2009

தென் கொரியாவில் ஒரு வாடகை வீடு!

தென் கொரியாவில் ஒரு வாடகை வீட்டில் குடி இருந்தேன், ஆறு நாட்டில் வாடகை வீட்டு அனுபவம் இருந்தாலும், கொரியா அனுபவம் கண்டிப்பா இங்க சொல்லனும்னு தோனுச்சு, கொரியா வாடகை வீட்டு ரூல்ஸ் எல்லாம் கைப்புள்ள காமெடிய விட படு காமெடியா இருக்கும்.

புதுசா வீடு குடி போகனுண்ணா, என்ன என்ன பண்ணனும் பாருங்க.

1-5000 அமெரிக்க டாலர் முன் பணம் ( 250000 இந்திய பணம்)

2-ஒரு வருட ஒப்பந்தம் (ஒரு வருடத்துக்கு காம்மியா ஒப்பந்தம் பண்ண முடியாது).

3-புரோக்கர் தரகு பணம் (300 முதல் 400 அமெரிக்க டாலர் வரை - 19500 இந்திய பணம்)

சரி இதெல்லாம் நம்ம சரியா பண்ணா, நம்ம புரோக்கர் நமக்கு சாதகமா இருப்பாங்கனு நீங்க நினச்ச அது உங்க தப்பு, அதுக்கு "கம்பெனி பொறுப்பாகாது".

ஒரு வழியா வீட்டுல குடி போனா, ஒப்பந்த காலம் முடியும் முன் வீட்ட காலி பண்ண முடியாது.

ஒரு வேலை வீட்ட காலி பன்னும்படியா சந்தர்ப்பம் வந்தா, "நீங்க காலியா வர்றதுக்கு நாங்க ஒரு ஆளை துணைக்கு பிடிச்சா விட முடியும்" கவுண்டமணி ஒரு படத்துல ஆட்டோ டிரைவர் கிட்ட சொன்னா மாதிரி கேக்கலாம்னு நினைக்காதிங்க, இங்க நிஜமாவே அப்படிதான் சின்னபுள்ள தனமா சொல்லுவாங்க, அது மட்டும்தான்னு நினைக்காம மிச்ச காமெடியையும் படிங்க.

ஒப்பந்த காலம் முடியும் முன் காலி பண்ணனும்னா,

1-புது ஆளை கண்டுபிடிக்க, புரோக்கர் தரகு பணம் (300 முதல் 400 அமெரிக்க டாலர் வரை - 19500 இந்திய பணம்)

2-மாத வாடகை நாம்ம சொங்கி புரோக்கர் அடுத்த ஆளை கண்டுபிடிகிற வரை (மாதம் 500 அமெரிக்க டாலர் வரை - 25000 இந்திய பணம்)

3-இதர மாத செலவுகள் மின்சாரம், குடிநீர் பணம் (100 முதல் 150 வரை அமெரிக்க டாலர் - 8000 இந்திய பணம்)

4-இது எல்லாம் முடியற வரை நம்ம 5000 அமெரிக்க டாலர் முன் பணமும் திரும்ப கிடைக்காது.

ஒருவழியா இதுஎல்லாம் நம்ம சரியா செய்தலும், நம்ம முன் பணத்த ஆறு மாசம் வரை வீட்டுகாரரே வச்சு இருக்க இடம் இருக்குனு, நம்ம சொங்கி புரோக்கரே சொல்லிக்கொடுப்பாரு. இதுல என்ன கொடுமைனா இது எல்லாம் சுத்த கொரியன் மொழிலதான் இருக்கும், இங்க தினசரி வாழ்கைக்கு கொரியன் மொழியதவிர நாம வேற எதுவும் செய்ய முடியாது.

நானும் தத்தி தத்தி, ஒரு வழியா வீட்ட பிடிச்சு ஒரு வருசத்த ஓட்டியாச்சு, இப்போ எனக்கு இன்னும் ஏழு மாசம் தான் இங்க வேலை, அதுனால நம்ம புரோக்கர் மூலமா பேசலாமுன்னு போனா, ஒரு வருடத்துக்கு காம்மியா ஒப்பந்தம் பண்ணனும்னா நீங்க நேரா வீட்டு சொந்தகாரர்கிட்ட பேசுங்கன்னு, கப்பிதனமா சொல்லிருச்சு நம்ம சொங்கி புரோக்கர் .

புரோக்கராவது தேவலம், நம்ம வீட்டு சொந்தகாரர் அதவிட சுத்தம், நீங்க ஏழு மாசம் இருந்தா அப்புறம் குளிர் காலம் என்னால புது ஆளை கண்டுபிடிக்க முடியாது, அதுனால புதுசா யாராவது வரவரை நீங்க எல்லா செலவையும் பாத்துகிட்டா சரி, இல்லைனா நீங்க காலி பண்ணிங்கங்கனு ஒரு பிட்ட போட்டாரு.

இது நமக்கு ஒத்து வராதுன்னு, நானும் காலி பண்ண ஒத்துகிட்டு புதுசா ஒரு வீட்ட "ஒரு வருட ஒப்பந்தம் இல்லாமல்" தேடி கண்டு பிடிக்கரதுகுள்ள உயிர் போய் உயிர் வந்த மாதிரி ஆகிருச்சு .

அது போக, புது வீட்டுக்கு மாறும் போது ஒரு துணி அலமாரிய என்னால தூக்கி போடமுடியல, சரின்னு நாம வீட்டுக்காரர்கிட்ட சொன்னேன், அவரும் பெருந்தன்மையா சரின்னு சொன்னாரு, அதுனால எல்லாம் முடிஞ்சு சாவிய கொடுத்தாச்சு.

அடுத்த நாள் போன போட்டு நான் 20 டாலரூக்கு உனக்கு வாங்கித்தந்த அலமாரிய ஆளை வச்சு தூக்கி போட எனக்கு 60 டாலர் கொடுத்துட்டு, உன்னோட முன் பணத்த வங்கிக்கோ சொன்னாரு, நானும் என்னாட இது வம்பா போச்சு 20 டாலர் அலமாரிக்கு 60 டாலரா? அதுக்கு 5000 டாலரானு நொந்துகிட்டு, சரின்னு சொன்னேன், அவரும் விடாம "இவன் ரொம்ப நல்லவன்னு" நினைச்சாரோ என்னோவோ, திரும்ப போனபோட்டு எனக்கு ரெண்டு நாள் வடகையும் தந்தாதான் முன் பணத்த திருப்பி தருவேன்நாரூ, அது எதுக்குனா 20 டாலரூக்கு வாங்குன அந்த அலமாரிய 60 டாலர் கொடுத்து ஆளை வச்சு தூக்கி போட அவருக்கு ரெண்டு நாள் ஆனதாம், அதுனால அந்த அலமாரி ரெண்டு நாள் வீட்ல்ல இருந்ததுக்கு வீட்டு வாடகையாம்!!

போடா டுபுக்குன்னு, சொல்லிட்டு, நாம்ம புரோக்கர பாத்து சொன்னேன், அப்பதான் நம்ம முன் பணத்த ஆறு மாசம் வரை வீட்டுகாரரே வச்சு இருக்க இடம் இருக்குனு நம்ம புரோக்கரே எடுத்து சொல்லி, பேசாம அந்த பணத்துக்கு ஒத்துகிட்டு முன் பணத்த வாங்க பாருங்கன்னு அட்வைஸ் வேற பண்ணுச்சு அந்த சொங்கி, இது தான் வாங்கின புரோக்கர் தரகு பணத்துக்கு அவங்களோட நன்றி கடன்.

நானும் வேகமா, அது எப்படி நான் போய் "வீவக" வில் புகார் பண்ண போறதா சொல்லிடு அலுவலகத்துல என் கொரியன் நண்பர்கள்கிட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தை பத்தி கேட்டேன், எல்லோரும் சொன்ன ஒரே பதில், இங்க இது ரொம்ப சாதாரணம் அதுனால போசாம பணத்த வாங்க வழிய பாருன்னு.

ரொம்ப, என்னை நானை நொந்துகிட்டே வேற வழி இல்லாம அந்த பணத்த கொடுக்க வேண்டியதா போச்சு.

என்னதான் சொல்லுங்க சொர்கமே என்றாலும் அது நம்மூரபோல வருமா.

என் புது வீட்டு ஜன்னலிலேருந்து ஒரு கிளிக்.



இதுனால கம்பெனி, பொது மக்களுக்கு சொல்லறது என்னான "கொரியா" வந்தா எதையும் "பிளான் பண்ணாம பண்ண வேண்டாம்" சாமியோ....
 

Blogger Widgets