Monday, May 11, 2009

டெல்லி பாகம்-I - "ராஜஸ்தான் ரயிலில் ரவுசு"

முகு: இந்த பதிவில் உள்ள படங்களுக்கும், பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், சும்மா...! ஒரு கண் குளிர்சிக்காகவும், ராஜஸ்தான் "எபெக்ட்டுக்காகவும்" தான்.

நண்பர்களோட டெல்லில தங்கி வேலை பார்த்த நேரம் அது, ஒரு நண்பனோட அக்காவுக்கு ரெட்டை குழந்தை பிறந்து இருந்தது, அவுங்க கணவரோட பணி விமான படை தலமான ஜோத்பூர், அது நமக்கு டெல்லில இருந்து பக்கம் என்பதால், நண்பர்கள் எலோரும் ராஜஸ்தான் போக ஒரு பிலான் போட்டோம்.

நானும் என் நண்பர்கள், குமார், ஜான், சுரேஷ் என்கிற சுச்சு மாமா, என்னோட குரு ராஜேஷ், அவரோட தம்பி கார்த்தி என்கிற சோட்டு, அவனோட நண்பன் விஜயன் என்கிற வில்ஸ் விஜி, எலோரும் புறப்பட தயார் ஆனோம். இதில் ராஜேசும், விஜியும் தான் நல்லா ஹிந்தி பேசுவாங்க, மத்த நாங்க எல்லாம் தத்தி.

("அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை பரப்பும் நாட்டுபுற நடன மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை தொலைத்தது யார்?")நம்ம கலாச்சாரம் மாறாம டிக்கெட் எடுக்குறதுக்கு முன்னாடியே சரக்கு, தம் எல்லாம் வாங்க போனோம்.

அதுவும் நம்ம பண்பாடு "நாலு பேரும் ஒன்னா பாருக்கு போனாலும், ஆளாளுக்கு ஒரு சரக்கும் மிக்ஸ்சிங்கும் வாங்க வேண்டும் என்பது தானே!, அந்த முறையை காப்பாத்த நாமும் ஆளாளுக்கு ஒரு சரக்கும் மிக்ஸ்சிங்கும் மறாக்காம தனித்தனியா தம் வாங்கியாச்சு.

வீட்டுக்கு வந்து ஆளுக்கு ஒரு ரவுண்டு முடிச்சிட்டு, மிக்ஸ்சிங் மாறாம கோக், சோடான்னு ஒரு ஆறு இரண்டு லிட்டர் பாட்டில் முழுவதும் எடுத்தாச்சு. இதுல சைடிஷ் வேற ஒரு பத்து பாக்கெட்.

இப்படியே போய் ஒரே பெட்டில இருக்க எட்டு சீட்டையும் வாங்கி ஒரு வழியா ரயில் புறப்பட்டாச்சு.

பொது நல நோக்கோட ஜான் மேல இருந்த ரெண்டு சீட்டுக்கும் நடுவுல ஒரு துண்ட கட்டி அதுல எல்லா சைடிஷ்சையும் கொட்டி ரவுண்டு கட்ட ஆரபிச்சோம், அப்பத்தான் டெல்லில ரயில்ல தம் தண்ணி அடிக்க கூடாதுன்னு சட்டம் வந்த புதுசு.

ரிஸ்க் எடுக்குறதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு உங்களுக்கு தெரியாதா என்னா?

இப்படியே ஒரு மூணு ரவுண்டு போச்சு, நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு.

சுச்சு மாமா ஒரு கைல கிளாஸ் இன்னொரு கைல தம்மோட, இயற்கைய ரசுச்சுகிட்டே குடிக்க போறேன்னு சொல்லி தொலைக்க, உடனே ஜானும் சேர்ந்துகிட்டு போய் கதவை திறந்துகிட்டு நின்னாக நம்ம மக்க.

நானும் நாலு ரவுண்டு மப்புல, மேல் சீட்ல ஒக்காந்துகிட்டு எதிர் சீட்ல கால நீட்டி மட்டை ஆகி இருந்தேன்.

மத்த மக்க எல்லாம் மப்புல அமரிக்க பொருளாதாரம் மற்றும் இந்திய முன்னேற்றம் பற்றி மும்பரமா பேசி, இல்ல இல்ல கத்திகிட்டு வந்தாங்க (சுத்தமான பீட்டர் மொக்கை).திடீன்னு பொத பொதன்னு போலீஸ் ரெண்டு பக்கமும் வந்தாங்க, வந்தவுன்ன என்ன பாத்து ஒரு போலீஸ் "நீச்சே உட்டாவ் வ் வ் வ் னு" (கீழ இறங்குன்னு) கத்தினார்.

நானும் சுதாரிச்சு கீழ இறங்க போன போது நடுவுல இருந்த துண்டை அவரு துப்பாக்கியால தட்டி விட்டாரு, உள்ள இருந்த சரக்கு, தம், மிக்ஸ்சிங்ன்னு மொத்தமா கீழ விழ, அத பார்த்தவுடன் அவருக்கு பெரிய அதிர்ச்சி.

"சாலா பூரா பார் கோல்தியா கியா" (மச்சான் முழுசா ஒரு பார் திறந்து வச்சு இருக்கியா)னு கேட்டு ஒரு அறை விட்டான் பாருங்க...! அடிச்ச மப்பு தெளிஞ்சு கண்ணுல வட்ட வட்டமா நச்சதிரம் பறந்தது எனக்கு.

உடனே நம்ம குரு ஹிந்தில எதோ சொல்ல அவருக்கு ஒரு அறை, ஒரே கலவரமா போச்சு.

அப்புறம் நம்ம போலீஸ் எல்லோருடைய பொருளையும் செக்பண்ணி டிக்கெட், லேப்டாப், பாஸ்போர்ட், மொபைல் எல்லாம் எடுத்துகிட்டு எங்கடா போறீங்க நீங்க தீவிரவாதியான்னு கேட்க?

நம்ம கூட்டத்துல எதோ ஒன்னு "அண்ணே நம்ம தீவிரமா வெளிநாட்டு வேலை தேடுரவாதின்னு கூட தெரியமா நம்மள போயி தீவிரவாதியான்னு கேட்குது பாருங்க!

இவரு சிறப்பு போலீஸ் இல்லண்ணே, சிரிப்பு போலீஸ் போல நீங்க அவரோட ஐ.டி கார்ட் செக் பண்ணுகண்ணே-ன்னு மப்புல சின்னபுள்ள தனமா சொல்லி தொலைச்சுருச்சு.

அவ்வளவுதான் அந்த போலீஸ் செம காண்டா ஆகிட்டாரு.

உடனே எல்லோரும் கிளம்பு அடுத்த ஸ்டேஷன்ல இறங்குங்க ரயில்வே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உங்கள ஒப்படைகிறேன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் வழக்கம் போல நம்ம சிரிப்பு ஸாரி, சிறப்பு போலீஸ், அப்டியே கூட்டிகிட்டு போய் கழிவறை பக்கத்துல நிக்க வச்சு வழக்கம் போல கதையை ஆரமிக்க, அந்த கடமை தவறாத "அலைக்ஸ் பாண்டியன்" சரி, சரி, நீங்க எல்லாம் படிச்சா பசங்க, போலீஸ் கேஸ் எல்லாம் உங்களுக்கு வேணாம், ஆளுக்கு ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போங்கன்னு நல்ல ஒரு தீர்ப்பை சொன்னாரு.

நாங்களும் ஆளுக்கு ஆயிரம் ரூபாயா யா யா யா...ஐயோ ...ஐயோ ...எங்ககிட்ட மொத்தமே ஆயிரம் ரூபா தாங்க இருக்கு சொன்னோம்.

அதையும் விடாம வாங்கி கொண்டு, சரி எல்லா பாட்டிலையும் கழிவறைல போய் கொட்டுங்கன்னு சொல்லிட்டு, கொஞ்சம் பெரிய மனசோட யாராவது இன்னும் குடிக்கனும்னா கழிவறை உள்ள போய் குடிங்கன்னு அனுமதி வேற கொடுத்தாரு.

எல்லாம் பயத்துல ஒருத்தர் முகக்தை ஒருத்தர் பார்க்க, நானும் நம்ம குரு ராஜேசும் மட்டும் கன்னத்துல கைய வச்சுக்கிட்டு "தென் பாண்டி சீமைல தேரோடும் வீதில மான் போல வந்தவனே யார் அடிச்சாரோன்னு" ரயில் பேக்ரவுண்டு எபெக்ட்ல பாட்டு கேட்க கழிவறைக்குள்ள போய் முடிச்ச வரை ஒரே மூச்சுல குடிச்சுட்டு வந்தோம்.

(அடி நாங்கதான வாங்குனோம்).

ஒரு வழியா எல்லா பிரச்சனையும் முடிஞ்சு எல்லோரும் அவரவர் சீட்டுல போய் படுத்தோம். போகும் போதே அடி எப்படின்னு நம்ம மக்களோட அக்கறையான விசாரிப்புவேற!.

எல்லாம் போய் படுத்தோமே தவிர ஒருத்தனும் தூங்கல, எப்படா ராஜஸ்தான் வரும்ன்னு பாத்துகிட்டு இருந்தோம்.திடீன்னு திரும்ப எங்க பெட்டில லைட்டை யாரோ போட தட, தடன்னு எல்லோரும் எழுந்து பாத்தோம், யாரோ ஒருத்தர் நின்னுக்கிட்டு இங்க எதாவது பிரச்சனையான்னு கேட்டார்.

நாங்களும் வேற எவனோ திரும்ப பணம் கேட்க வந்துட்டான்னு, ஒன்னும் இல்ல எல்லாம் முடிஞ்சதுன்னு சொன்னோம்.

உடனே அவர் பயப்படாதீங்க நான் "ரயில்வே சி.பி.சி.ஐ.டி" இங்க பாதுகாப்புக்கு வந்த போலீஸ் உங்ககிட்ட பணம் லஞ்சம் வாங்கியதாக எனக்கு தகவல் வந்தது அது உண்மையாய் இருந்தால் நான் உங்களுக்கு அந்த பணத்தை திரும்ப வங்கி தர முடியும்னு சொன்னாரு.

நாங்களும் இழந்த குசி திரும்ப வர எல்லா விசையத்தையும் அவரிடம் சொன்னோம். உடனே அவர் போய் டி.டி.ஆரை அழைத்து வந்தார், அவரும் தன்னிடம் இருந்த தாள்களை சரி பார்த்து அந்த போலீஸ் நம்பர் பற்றிய தகவல்களை எல்லாம் சொன்னார்.

உடனே நம்ம சி.பி.சி.ஐ.டி உடனே யார் யாருக்கோ மொபைல்ல போனை போட்டு காரசாரம பேசுனாரு.

ஒரு அஞ்சு நிமிடத்தில் நம்மகிட்ட பணம் வாங்கின அலக்ஸ் பாண்டியன் கோபமா வந்தாரு, வந்த வேகத்துல என்னென்னவோ கத்திக்கிட்டு, எங்க உடமைகளை எல்லாம் எடுத்தாரு உடனே டி.டி.யாரும், சி.பி.சி.ஐ.டி-யும் அவரை தடுத்து, இதை செய்ய உங்களுக்கு உரிமையில்லை.

அவர்கள் குடித்தால் நீங்கள் டி.டி.யார் - கிட்ட தான் சொல்ல முடியும் தவிர, மற்ற படி ஓடும் வண்டியில் அவர்களை அடிக்கவோ பணம் வாங்கவோ உங்களுக்கு உரிமையில்லை.

இப்போது நீங்கள் அவங்களுக்கு ஓடும் ரயிலில் குடித்தற்க்கான ஒரு "சார்ஜ் சீட்" கொடுங்கள், ஆனால் நீங்கள் அதற்கான சாட்சியாக அவர்கள் குடித்த பாட்டிலை சமர்பிக்க வேண்டும்.

நானும் உங்கள் மேல் ஓடுகிற ரயிலில் பயணியை அடித்தது மற்றும் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்கான "சார்ஜ் சீட்" கொடுக்கிறேன்னு ஒரு பிட்ட போட போலீஸ் இன்னும் காண்டகிட்டார்.

அப்புறம் ஒரு சில நிமிடத்தில் நம்ம பணம் கைக்கு வந்து விட்டது, நாங்களும் நிம்மதியாக ராஜஸ்தான் போய் சேர்ந்தோம்.

அடுத்த நாள், எப்படி அந்த போலீஸ் நம்ம சீட்டுக்கு மட்டும் சரியா வந்ததுன்னு யோசிச்சு நாங்க மொக்கைய போட்டுக்கிட்டு இருந்த போதுதான் சுச்சு மாமா ஒரு உண்மைய சொல்லுச்சு.

இந்த மக்க ஓடும் வண்டியில் கதவை திறந்துகிட்டு நின்றபோது அந்த வழியாக வந்த போலீஸ் அவர்கள் கையில் இருந்த தம்மை கீழ போட சொல்லி ஹிந்தில சொல்ல, நம்ம மக்க அவரை பார்த்து "வி டோன்ட் நோ ஹிந்தி-னு" பீட்டர் விட அவரும் கடுப்பாகி பக்கதுல வந்து பார்த்த போதுதான் சரக்கு மேட்டார் அவருக்கு தெரிஞ்சு இருக்கு.

அவரும் வேறு எதோ கேட்க போய், நம்ம மக்கள் விடாம பீட்டர் விட்டு "டாக் டு அவர் பிரெண்ட்ஸ்னு" எங்க சீட்டை கைய காட்டி இருக்குதுக பக்கிக.

அது ஒரு அழகிய நிலாக்காலம்.

இதை விட, டெல்லியில் வில்ஸ் விஜியோட "ஒரு ருபா பிச்சை" கதை ஒன்னு இருக்கு, அந்த மேட்டரோட உங்களை "நெக்ஸ்ட் மீட் பண்றேன்".

நன்றி!.

0 பின்னூட்டம்:

Post a Comment

 

Blogger Widgets