சண்டையே இல்லாமல் ஏன் இந்த பிரிவு?!!
நண்பர்கள் தினத்திற்கு ஏன்? மின் அஞ்சல் அனுப்பவில்லை? என்னை மறந்துட்டியா? அப்படி என்னடா கோவம்? என்று கேட்டிருந்த என் நண்பனுக்காகவும் மற்ற நண்பர்களையும் சேர்த்து எழுதிய பதிலில் "னோம்" என்பதை "வோம்" என்று பொதுப்படை மாற்ற அதுவே இந்த பதிவு .
இந்த பதிவு வெளிநாடு போகதுடித்த நண்பர்களின் வழக்கமான பேச்சு மொழி என்பதால், சற்று மாறுபட்ட தமிழாக இருக்கும் .
காயங் காத்தால எழுந்ததும் காப்பி தண்ணிய குடிக்கிரமோ இல்லையோ (சும்மா ரைம்மிங்குக்காக "க" னாவுக்கு "க" னா போட்டு பார்த்தேன்).....ஏ வருது வருது விலகு விலகுன்னு கத்திகிட்டே டவுசர பிடிச்சுக்கிட்டு ஓடுற அவசரத்திலும், எலேய் குமாரு நீ வரலையான்னு கத்திகிட்டே தெரு முக்குக்கு முக்கிகிட்டே (திரும்ப சும்மா ரைம்மிங்குக்காக "மு" னாவுக்கு "மு" னா போட்டு பார்த்தேன்) ஓடுவோம்.
அதையும் ஒழுங்கா முடிக்காம, நடுவுல ரெண்டு ஆட்ட கில்லியோ இல்ல, கவனமா "பச்சா" போடாம "தக்காளி குண்ட" மட்டும் குறி வச்சு அடிச்சு ஒரு ஆட்டாமோ ஆடிகிட்டே வீட்டுக்கு வந்து, எருமமாடே எத்தன தடவ சொல்லுறது வீட்டுல கக்கூஸ் இருக்கில்லன்னு பாட்டு வாங்கிட்டே கக்கா கழுவி, காக்கா குளிய போட்டுட்டு, வீட்டு பாடத்த பண்ணாததுதுக்கு வீட்டுலையும் திட்ட வாங்கி, அத காதுல போட்டுக்காம, கைய சுத்தி தலைக்கு மேல ஜோல்னா பைய முதுகுல ஹோண்டா பேகு நினப்புல போட்டு கிட்டு மறக்காம மதிய சாப்பாட்டு வயர் கூடைய தூக்கிகிட்டு ஓடுவோம்.
நாலு தெருவு தள்ளி இருக்கிற ஸ்கூல்லுக்கு, பத்து தெரு சுத்தி ஒவ் ஒருத்தன் வீட்டு வாசல்லையும் போய் கத்தி கூட்டு சேத்துகிட்டு போனோம், கைலயே பாட்டில் நிறைய தண்ணி இருந்தாலும், போற ஒவ்வொரு வீட்டுலையும் கேட்டு கொஞ்சம் தண்ணி வாங்கி குடிப்போம்.
அந்தா இந்தான்னு, ஒரு வழியா ஆடிகிட்டே ஸ்கூல்லுக்கு போய், வீட்டு பாடத்த பண்ணாததுதுக்கு வீட்ல வாங்குனது போக மிச்சத்த வாத்திகிட்ட வாங்கி கட்டிகிட்டு, கடைசி பெஞ்சுல எப்படா மதிய சாப்பாட்டு பெல் அடிக்கும்னு ஜன்னல பாத்துகிட்டு உக்காருவோம்.
பெல் அடிச்சதும் ஓடி போய் காலியா இருக்க எல்லா மரத்தையும் விட்டுட்டு, நம்ம பக்கத்துக்கு தெரு பசங்க வழக்கமா உக்கார்ர மரத்துக்கு கீழ இடத்த பிடிச்சு அவிங்கள வம்முக்கு இழுத்தாதான் , நமக்கு சாப்பாடு உள்ள இரங்கும். உண்ட மயக்கத்துல மத்தியானம் தூங்கி, வாத்தி கிரவுண்டுல ஓட சொல்லும்போது, நமக்கு முன்னாடியே நம்ம குரூப் முழுசும் அங்க ஓடிக்கிட்டு இருக்கும்.
இப்படி பொழுத போக்கி, "ஸ்கூல்ல எப்பவும் நான் தான் முதல் ஆளுன்னு" நாம சொல்லுறதுக்கு உண்மையான அர்த்தமா பெல் அடிச்சதும் மொதோ ஆளா ஸ்கூல விட்டு வெளில ஓடி வந்தோம். வீட்டுக்கு வந்ததும் வராததுமா பைய தூக்கி போட்டுட்டு...வெளில ஓடி போய் திரும்ப கில்லி, குண்டு, குச்சி தள்ளி, சிப்பி ..தேன் பட்டு பிடிக்கிரதுன்னு, நம்ள மாதிரி பெரிய ஸ்போர்ட்ஸ் மேன் யாருமே அப்போ இல்ல.
இப்படி ஒரு அஞ்சு வருசம்தான்......அடுத்து நீங்க ஆறாவது சேரணும்னு நம்ள நாடார் ஸ்கூல், சி.எஸ். ஐ ஸ்கூல், ஆர்.சி ஸ்கூல், இஸ்லாம் அரபி ஸ்கூல்ன்னு பெத்தவிங்க பிரிக்க பாக்க அழுது அடம் பிடிச்சு முடிஞ்சவரை எல்லோரும் ஒரே ஸ்கூல்ல சேருவோம்.... ..சேர முடியாதவனை கவலைப்படாத மாப்ள ...நம்ம பத்தாவது முடிச்சிட்டு ஒரே ஸ்கூல்ல சேருவோம்னு ஆறுதல் சொன்னோம்.
அப்போ எல்லாம், முழு பரிச்சை லீவுக்கு எவனாவது ஊருக்கு போனாலும், போன் இருக்க வீட்ட தேடி போய் எல்லோரும் சேந்து கால் பண்ணி, மாப்ள நீ இல்லாம நாங்க போன மேட்ச்சுல என்ன ஆச்சு தெரியுமான்னு..... போன்கார நண்பனோட அப்பா வந்து விரட்டுற வரைக்கும் கதை அடிப்போம்.
அப்புறம் நாள் ஓட, வருஷம் ஓட, மாப்ள இப்போ நம்ம பெரிய பசங்க ஆகிட்டோம், இனியும் மரத்துல செஞ்சு பச்சை பெயிண்ட் அடிச்ச பேட்ட வச்சுகிட்டு தெரு முக்கு செட்டியார் வீட்டு செவுத்துல கரிக்கோடு போட்டு விளையாண்டா "டோர்னமென்ட்" எல்லாம் போக முடியாதுன்னு பிளான் போட்டு , "ஆபரேஷன் அஞ்சாவது சந்து கிரிகெட் கிட்ஸ்" ஆரபிப்போம், அதாவது லீவு வரதுக்கு முன்னாடி, நம்ம கடலை மிட்டாய், தொக்கு உருண்டை, பால்கோவா வாங்காம காச சேத்து "புல் கிரிகெட் கிட்ஸ்" வாங்கனும்-ன்னு
ஆனா, மூணு வருசமநாளும் அந்த ஆபரேஷன் முடிக்க முடியாது, எல்லாத்துக்கும் காரணமா ஒரு மூணு பேரு, அதாவது நம்ம குரூப்ல காச சேக்க சொல்லி குடுத்து வச்ச ரெண்டு கருப்பு ஆடு, அப்புறம் நம்ம கருப்பு வைரம் அதாங்க ரஜினி .....!!! ?? எஸ்....தலைவர் சூப்பர் ஸ்டார் ...!
ஓகே.. ஓகே ... டேய்ய்ய்ய்ய்....நீங்க கிரிக்கெட் மட்ட வாங்காம இருக்க தலைவர் என்னடா பண்ணுனாருன்னு காண்டு ஆகாதிங்க, பொறுமை பொறுமை மக்களே.....ஓவர் டென்சன் உடம்புக்கு ஆகாது.
எப்படின்னா, அப்பபாத்து தான் தலைவரோட நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்திராவிலிருந்து வரிசையா படிக்காதவன்,நான் அடிமை இல்லை,மிஸ்டர் பாரத்-ன்னு ரிலீஸ் ஆகும், தலைவர் பட டோக்கன் ஷோவுக்கு இல்லாத காசு என்னடா காசுன்னு, நம்ம கருப்பு ஆடுகள் காச சுட்டு டோக்கன் மட்டும் வாங்காம ...."கருநாகத்தை கொஞ்ச முடியுமா ...ரஜினியை மிஞ்ச முடியுமான்னு" போஸ்டர் எல்லாம் அடிச்சு மொதோ நாள் ராத்திரியே கொடி கட்ட ஓடிடுவோம், இப்படி எங்க கூடத்துல நானும் ஒரு கருப்பு ஆடு :-)).
இப்பதான் யார் யாருக்கோ போஸ்டர் அடிக்கிராங்க .. .... போஸ்டரும் சரி, பன்ச் டயலாக்கும் சரி, தலைவர தவிர வேற யாருனாலும் அது காமெடி லிஸ்ட்ல போய்ரும்.
இப்படியே வண்டிய ஓட்டி அப்புறம் விடுதலை-ரிலீஸ்ல மாட்டி ஆப்பு வாங்கி "ஆபரேஷன் அஞ்சாவது சந்து கிரிகெட் கிட்ஸ்"ச ஊத்தி மூடிடுவோம்.
அப்பவும் சலிக்காம நம்ம டீம் கேப்டன் திரும்ப "ஆபரேஷன் மால்புரோ" ஆரபிச்சு தனி தனியா ஆளுக்கு ஒரு கிட் வாங்கினதான் டீம்ல இடம்னு சொல்லி ஒரு "பேட்" வாங்குவான், நம்மலும் வேற வழி இல்லாம கடைசியா "அப்டானமல்"கிட் மட்டும்தான் வாங்குவோங்கறது வேற விஷயம்.
அந்தா இந்தான்னு அடுத்த லெவல் வரும் போது, நம்ம தெருல்ல இருந்து கிரிகெட் கிரவுண்டு வர ஒவ்வொரு தெரு பொண்ணுகளையும் சைட் அடிக்க ஆரபிப்போம் ..அதுலயும் ஒரே பொண்ண எல்லாரும் காதலிப்போம் ....இதனால நமக்குள்ள அப்பப்போ சண்ட வேற வரும்.
இப்படியே நாளொரு மேனியுமா பொழுதொரு வண்ணமுமா, நம்ம கிரிக்கெட் டீம விட வேகமா நம்ம காதல் வளர வளர.....பத்தாவது பரிச்சை வர்ரவரை எந்த ஒரு பொண்ணு கிட்டையும் பேசி இருக்கவே மாட்டோம்.....அதிகபச்சமா நம்ம குரூப்லயே தைரியமான ஒரு ரெண்டு "தல" அந்த பொண்ணு வீட்டுல போய் கொஞ்சம் தண்ணி வாங்கி குடிச்சு இருக்கும், அதுவும் அந்த பொண்ணு கொண்டு வந்து குடுத்து தொலச்சாக்க அப்புறம் அந்த ரெண்டையும் கைல பிடிக்க முடியாது.
இப்படியே ஒரு வழியா பத்தாவத முடிச்சுடுவோம், அப்புறம் பாலிடெக்னிக் பாதி, ஹைஸ்கூல் பாதின்னு பிரிஞ்சாலும், பதினொன்னுல பிரிச்சு போனது பனிரெண்டுல ஊத்தி பாலிடெக்னிக் வர .... நம்ம ஆர்சி வாங்க திரும்ப ஒண்ணா சேந்து நாம டைரக்ட் செகண்ட் இயர் பிஇ அல்லது பிடெக் போவோம்டா மச்சான்ன்னு மனச தேத்திக்குவோம், பத்து கிலோமீட்டர்ல வீடு இருந்தாலும், காலேஜ் பக்கத்துல நண்பனோட ரூம்ல தங்கி அடிப்போம், சாரி படிப்போம்.
ஆனாலும் நம் கிரிகெட் டீம் பிரியாது, ஊரே ஜாதி மத கலவரம்னு இருந்தாலும், நம்ம கிசோக் எங்க.... ஜாகிர்காதர் எங்க.... குமார் எங்கன்னு தேடி போய் டோர்னமென்ட் விளையாட கூட்டிட்டு வருவோம்........மீதி நேரம் எல்லாம் ஒரு பொண்ணு விடாம சைட் அடிப்போம்.
இப்படியே விளையாடி சைட் அடிச்சா எங்க தேரும், நம்ம கூட படிச்ச பொண்ணு, நம்ம அரியர் எழுத போகும் போது எக்ஸாமினாரா வந்தாலும்.... ...நீ பழசெல்லாம் மறந்துட்ட தங்கமணி-ன்னு ஓட்டுவோம்..... மீதி நேரம் எப்பவும் "நாய்க்கு வேலையே இல்லாட்டியும் ...நாலு தெருவ சுத்தி வந்து, தெரு முக்குல நாக்க தொங்க போட்டுகிட்டு ஒக்காருற மாதிரி" ஊரசுத்தி வந்தா, பஸ்ஸ்டாண்ட் முக்கு "டீ"கடை தான் நம்ம ஸ்பாட்.
அங்க ஒக்காந்து "அமெரிக்க ஏகாதி பத்தியத்தையும், ரஸ்ய பொருளாதாரத்தை பற்றியும்" அக்கவுண்ட்ல தம் அடிச்சுகிட்டே அலசி ஆராய்வோம். இந்த அறிவு நாம பெத்தவிங்களுக்கு பொறுக்காது, சோத்த போடும்போது திட்டையும் சேத்து போட்டாலும், நம்ம சலிக்காம கைய கழுவும் போது எல்லா திட்டையும் சேத்து கழுவிட்டு திரும்ப ஸ்பாட்க்கு போய்ருவோம்.
இப்படியே முக்கியமா பேசிகிட்டு இருக்கும் ஒரு மாலை பொன்னான வேலை, டேய் மாமா, அங்க குழந்தையை கூட்கிட்டு வர ஆண்டி தெரிஞ்ச நடையா இருக்கே? யாருன்னு பாருன்னு ஒருத்தன் சொல்ல, எல்லாரு முகமும் திரும்பும்......
அட இது நம்ம சைட் அடிச்ச பழைய சிவில் பேபி அவ பேருகூட .... கீதாவோ...சீதாவோ-ன்னு நாம பேர கண்டுபிடிக்கும் போதே, அந்த பொண்ணு நேரா நம்ம கிட்ட வந்து .....
ஹாய் டேய்ஸ் (பாய்ஸ்சோட சுருக்கமாம்).... என்னடா? நீங்க எல்லாம் இன்னுமா இங்கயே இருக்கீங்க உருப்பட்ட மாதிரித்தான்? சரி,சரி இது என் பொண்ணு கவிதா, போகும் போது வரும் போதும் ஏதாவது ஓட்டிராதிங்கடா-ன்னு சொல்லி.... "அங்கிளுக்கு பை பை" சொல்லுடா செல்லம்-ன்னு குழைந்தையை கூட்டிகிட்டு போக......ஒருத்தன் முகத்துலையும் "ஈ" ஆடாது.
இந்த "அவமானம் தாங்காம, ஆறு நாள் "பாண்டிசேரி போய் ரூம் போட்டு" அரியர்ஸ்ச முடிக்க பிளான் பண்ணுவோம்", அந்த இந்தான்னு அரியர்ஸ்ச முடிச்சாசுன்னு வீட்டுக்கு போனா அங்க அப்பா ...."அக்கா யூஜி படிக்கும்போது ஆரபிச்சு, தங்கச்சி பீஜி முடிக்கும் போது " எம் மகன் கோர்ஸ்ச முடிச்சிட்டான்னு சொல்ல.....அம்மா ஆரத்தி எடுப்பாங்க.
மீண்டும் அவமானம் .. ... நம்மள வேணாமுன்னு சொன்ன இந்த ஊரு நமக்கு வேணாம்டா மாப்ளன்னு சொல்லி யோசிக்கும் போது, இதே மாதிரி வீட்டில் அவமான படுத்தப்பட்டு மூணு வருசத்துக்கு முன் வட நாட்டுக்கு ஓடி போன நண்பன் அங்க நல்ல வேலைக்கு போறது நியாபகத்துக்கு வர, ஒருத்தன நம்பி ஒன்பது பேரு டெல்லி, பாம்பே-ன்னு கிளம்பிருவோம்.
அடுத்து வரும் வாழ்க்கை என்னவென்று தெரியாத போதும், எதுவுமே சொந்தம் இல்லாம இருந்தாலும் ... .....நாம் எப்போதும் ஒண்ணா இருப்போம், முன் கதவு , பின் கதவு , சைடு கதவு என்று எல்லா முயற்சிக்கும் பலனாக ஒரு நாள் நமக்கும் ஒரு வேலை கிடைத்துவிடும் , ஒரே வீட்டில் இருந்தாலும் அந்த வேலைய செய்ற எட்டு மணி நேரத்தில் ஒன்பது போன் அடித்து பேசும்வோம்.
எனக்கு இன்னும் கூட நியாபகம் இருக்கு நான் காதலிச்ச பொண்ண கேட்டு, எனக்காக ஒவ் ஒருத்தனும் அந்த பொண்ணோட அப்பா அம்மாகிட்ட பேசுனது.
இப்படியே நாள் ஓட... வேலை வளர, ஒவ் ஒருத்தனா வெளிநாடு கிளம்புவோம், போற ஒவ் ஒருத்தனையும் ஏர்போர்ட் வரை கூட்டிகிட்டு போய் சிரித்த முகக்துடன் கண்ணாடிக்கு பின் அவன் முகம் மறையும் வரை கை ஆட்டிவிட்டு கனத்த மனதுடன் வீட்டுக்குள் வரும் போது வீடே வெறிச்ன்னு ஒரு தனிமை இருக்கும் .
அந்த வாரம் தண்ணி அடிக்கும்போது அவனுக்கும் "க்ளாஸ்" வைப்போம், அதுக்கு முன்னாடியே அவன் யாஹூ வெப்கேம்ல வந்து சேந்துவிடுவான், மீதி வாரத்துக்கு மூணு போன், நாலு மெயில் வரும், இப்படியே வரிசைல நாமளும் ஒரு நாள் கடைசியா வெளிநாடு கிளம்புவோம், அடுத்த வருஷம் எல்லோரும் இதே ஊரில் சந்திப்போம்னு ஒரு சத்தியத்தோட.
அதுக்கப்புறம் போன்கார்டு மட்டும் தான் மெயில் இருக்காது, அதுவும் வர வர வாரத்துக்கு மாததுக்குன்னு படிபடியா குறையும், இதுக்கு நடுவுல நம்ம ஊர்ல சேந்தாப்புல ஒரே ஏரியாவுல நம்ம வீடு வாங்கினாலும், நம்ம எல்லோரும் சேந்து எல்லோரோட வீட்டுக்கு போக நேரம் கிடைக்காது.
இப்போதான் வரிசயா ஒவ் ஒருத்தனுக்கும் கல்யாணமாகும், எப்பவும் ஒண்ணாவே இருந்த நம்ம ஒவ் ஒருத்தன் கல்யாணத்திலும், நம்ம குரூப்ப தவிர மத்த எல்லோரும் இருந்தாலும் நமக்கு நேரம், லீவு கிடைக்காது, அப்புறம் வேலைல பிசி, வாழ்கையில பிசின்னு, ஒருத்தன ஒருத்தன் பாக்குறதும் பேசுறதும், லீப் இயர் மாதிரி நாலு வருசமானாலும் நடக்காது.....
எதுவுமே இல்லாத போது, எப்போதும் கூடவே இருந்த நண்பர்களுக்குள் யாஹூ, ஆபீஸ் போன் வீட்டு போன், மொபைல் போன், இன்டர்நெட் போன் ,தேவையான பணம், வருட விடுமுறைன்னு ... இப்படி எல்லாமே இருக்கும் போது.... ஏன் இந்த இடைவெளி?
திருமணம், வேலை, வாழ்க்கைனு இருத்தா "நட்புடன் இருக்க முடியாது" என்று ஏதாவது தத்துவமும் இருக்கிறதா என்ன? அப்படியே இருத்தாலும் வருடம் ஒரு முறையாவது நம்மால் சந்திக்க முடியாதா என்ன?
இப்படியே எங்கே போகிறது நம் நட்பு??? சண்டையே இல்லாமல் ஏன் இப்படி ஒரு பிரிவு?
எனக்கு நினைவு தெரித்தது முதல் எல்லாமே மாறிவிட்டது, நாம் பிறந்த ஊர் மாறியது, காதலி மனைவியானாள், மனைவி தாய் ஆனாள், நான் தகப்பன் ஆனேன், அலுவலகம் மாறியது, பதவி மாறியது.......எல்லாமே மாறிவிட்டது, ஆனால் இன்றுவரை மாறாதது நம் நட்பு மட்டும்தானே ?
அப்புறம் நமக்குள் ஏன்? எப்படி? இந்த இடைவெளின்னு கேக்குறத விட்டுட்டு.......ஏண்டா வாழ்த்து சொல்லலன்னு கேட்க வந்துடான் வெங்காயம்.......போங்கடா.....
சரி, மாப்ஸ், போனதெல்லாம் போகட்டும்......... வாங்கடா, வந்து வருசத்துல ஒரு அஞ்சு நாலாவது, நம்ம வளர்ந்த இடத்துல பழைய மாதிரி நம்ம நட்போட நமக்காக வாழ்ந்துதான் பார்ப்போம்.
வருஷம் முழுவதும் உழைத்தாலும் மாட்டுக்கு கூட பொங்கல் வைக்கிற ஊருடா நம்ம ஊரு, நாம நம்ம நட்புக்கு கொஞ்சம் நேரம் வைக்க கூடாதா?
மொத்தத்தில் "வெளிநாட்டில் கிடைத்தது வசதியான வாழ்கை என்றாலும்", இதில் இழந்தது, இழந்துகொண்டு இருப்பது சொந்தவாழ்கை ஆகிறது.
Sunday, August 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 பின்னூட்டம்:
ரொம்ப நீ...........ளமான பதிவு, ஆனால் படிக்க நல்லா இருக்கு நண்பா!!
எப்படி நீங்கள் இத்தனை நாட்களாக கண்ணில் சிக்காமல் இருந்தீர்கள்..? ஆச்சரியமாக உள்ளது..
வாழ்க வளமுடன்..
Post a Comment