அதி வேகமாக வளர்ந்து வரும் இணையத்தில், எத்தனையோ வசதிகள் வந்து விட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அதில் இன்று முன்நிலையில் இருப்பது லிங்கிடு-இன்.
பதிவுலகில் லிங்க்வித்தின் அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் "லிங்க்வித்தின்" பயன் பாட்டிற்கும் இந்த "லிங்கிடு-இன்" பயன் பாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை இங்கு முதலில் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.
"லிங்கிடு-இன்" முழுக்க முழுக்க அலுவலகம், வேலை சார்ந்த ஒரு புரபசனல் நெட்வொர்க் லிங் ஆகும்.
இங்கு கணினி சார்ந்த தொழில்துறை மட்டுமில்லாமல், அணைத்து வேலை சார்ந்த மனிதவள துறை மேலாளர்கள் தங்கள் வேலைக்கு தேவையான மற்றும் தகுந்த மக்களை தேட, அன்றாடம் பார்க்கும் ஒரு தளமாக இது மாறி வருகிறது. இந்த இணையதளத்தை பற்றியும் அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
யாஹூ, விண்டோஸ்லைவ்மெயில், ஜிமெயில் போல நண்பர்களுடன் மட்டுமில்லாமல், நம் உடன் படித்தவர்கள், முன்பு வேலை பார்த்தவர்கள் மற்றும் தற்போது வேலை பார்ப்பவர்கள் என்று அனைவருடனும் தொடர்பில் இருக் மற்றும் அனைவருடைய தகவல்களை அல்லது ரெசியுமையும் இதில் பார்க்கமுடியும். மற்றும் நம் தொழில், வேலை சார்ந்த தகவல் பரிமாறும் ஒரு இணையதளமே "லிங்கிடு-இன்".
இதில் கட்டண சேவையும் உண்டு, இலவச சேவையும் உண்டு என்றாலும், இலவச சேவை வசதிகளே நம் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது.
நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் கீழ் உள்ள முகவரியில் சென்று உங்களுக்கு என்று ஒரு "உறுப்பினர் முகவரி உருவாக்க" வேண்டியது தான், இதனால் உங்களுக்கு என்று ஒரு தனி பக்கம் இந்த தளத்தில் கிடைத்து விடும், இதில் நீங்கள் உங்களை பற்றிய தகவல்கள் படிப்பு,படித்த இடம், வேலை பார்த்த மற்றும் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிற அலுவலக தகவல்களை பதிந்து விட்டால் போதும், இதன் மூலம் உங்கள் வேலை சார்ந்தவர்கள் உங்களை பற்றி அறிய முடியும்.
ஏர்க்கனவே இதில் உள்ள டேட்டாபேசில் அனேகமாக அணைத்து பள்ளி, கல்லுரி மற்றும் அலுவலக முகவரிகள் உள்ளன, அப்படியே உங்களுக்கு தேவையான பெயர் இல்லாவிட்டலும், புதிதாக உங்களால் உருவாக்க முடியும், இதனால் ஏர்க்கனவே இந்த தளத்தில் உறுப்பினராக உள்ள உங்கள் பள்ளி, கல்லுரி மற்றும் அலுவலக நண்பர்கள், மற்றும் இனி வரும் நண்பர்கள் தகவல்களை நீங்கள் பார்க்கவும், உங்கள் தகவல்களை மற்றவர்கள் பார்க்கவும் முடியும்.
இதில் இன்னொரு நம்பிகைதரும் விசையம் என்னவென்றால்? பொய்யான நிறுவன தகவல்களையோ அல்லது பொய்யான அனுபவத்தையோ தரமுடியாது என்பதாகும், அப்படி கொடுத்தால் அந்த நிறுவனத்தை சார்ந்த அனைவரும் உடன் வேலை பார்த்தவர் என்ற முறையில் உங்கள் தகவல்களை பார்க்க முடியும் இல்லையா?
நீங்கள் உங்களுக்கு அல்லது உங்கள் வேலைக்கு சம்பதம் இல்லாதவர்கள் உங்களை பற்றிய எல்லா தவல்களையும் அனைவரும் பார்க்க முடியாதவாறு அனுமதிக்கும் வசதிகளும் இதில் உள்ளன. உங்களுக்கான அடையாள குறிச்சொல்லை பயன்படுத்தி உங்கள் தனிப்பக்கத்திர்க்கு சென்றால் இங்கு உங்கள் மற்ற நண்பர்களை இணைக்க வசதியும் இருக்கிறது, உங்களுடைய
யாஹூ
விண்டோஸ்லைவ்மெயில்
ஜிமெயில்
எஒஎல்
மற்றும் இதர நண்பர்களையும் இதில் உங்களால் இணைக்க முடியும்.
முதலில் உங்கள் "Profile-லை" தயார் படுத்துங்கள், பின் உங்கள் எல்லா நண்பர்களையும் உங்கள் "Contacts-ல்" இணையுங்கள்.
இது தவிர உங்கள் தொழில் மற்றும் வேலை சார்ந்த குழுக்களும் இங்கு உள்ளன, அதில் உங்களுக்கு தேவையான குழுவில் உங்களை இணைத்து விடுங்கள்.
இது மட்டுமில்லாமல் இதில் உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் உங்களைப் பற்றி மற்றும் உங்கள் வேலை திறமையை பற்றியும் உங்களுக்காக பரிந்துரை செய்ய முடியும்.
இதன் மூலம் உங்கள் தொழில் மற்றும் வேலை பற்றிய ஒரு சர்வதேச அங்கிகாரம் உள்ள இணையதள ரெசியும் உங்களுக்கு கிடைக்கிறது, மேலும் உங்கள் தகுதிக்குரிய வேலை வாய்ப்பை கொண்ட அலுவலகங்கள் உங்களை எளிதில் கண்டுபிடிக்க இது உதவுகிறது, இத்தோடு இல்லாமல் தொடர்பில் இல்லாத உங்கள் பழைய நண்பர்கள், வேலை, தொழில் சார்ந்ததவர்கள் மற்றும் உங்களுக்கு தேவையான வேலையையும் இந்த தளத்தின் மூலம் நீங்களே தேடலாம்.
இது தவிர இதர தகவல்களை மேல் சொன்ன இணையதளத்தில் படித்து உங்களுக்கு உபயோகப்படுவதாய் இருந்தால் பயன்படித்தி பாருங்கள்.
ஹலோ, வந்தது வந்துடிங்க! அப்படியே ஒரு ஓட்ட போட்டுட்டு.....ரெண்டுவரி பின்னூட்டம் போடாம போனா என்ன நியாயம் இது?
Thursday, September 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
18 பின்னூட்டம்:
அருமை..........உபயோகமான பதிவு ...........
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ............
:)
ஓட்டு
போட்டாச்சு
--------------
இந்த லின்க்ட்டுல நானும் கீறேன் ...
attkaasamaana pathivu
அருமையான பதிவு,தகவலுக்கு நன்றி!!
great !!!!!!!!
நல்ல அறிமுகங்கள் - பகிர்வுக்கு நன்றி!
என்னிடமும் இந்த Linked In அக்கவுன்ட் இருக்கு நண்பரே, Face Book காட்டிலும் இந்த Networking Site உபயோகமாக் இருப்பது போல் தோண்றுகிறது. பகிர்விற்க்கு நன்றி.
நன்றி சிங்கக்குட்டி ..முன்பே இது பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்.. இது பற்றிய விளக்கத்திற்கு நன்றி
நீங்களும் நானும் ஒரே வேலை பார்க்கிறோம் என்பதை சமிபத்தில் படித்த உங்கள் பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன். நம் நட்பு தொடருட்டும்.
பின்னூட்டம் போடாம போனா என்ன நியாயம் இது?
மிரட்டலா! கொஞ்சலா!
see this link http://sashiga.blogspot.com/2009/09/blog-post_12.html
Post a Comment