Monday, August 31, 2009

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

முகு:- இந்த பதிவில் உள்ள எந்த ஒரு பதிவரின் பக்கத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் அவர்களின் பெயரில் மேல் சொடுக்கவும்.

தென்கொரியாவில் இது கோடை காலத்தில் இருந்து இழையுதிர் காலத்திற்கு மாறும் பருவம். உண்மையில் கோடை, இழையுதிர், குளிர் மற்றும் வசந்தம், இந்த நான்கு பருவத்தில் "இழையுதிர்கால காற்று" மற்றும் "வசந்தகாலம்"தான் மனதிற்கு ஆனந்தம் தரும் பருவங்கள்.

இந்த பருவத்தில் மாத இறுதி நெருங்க...நெருங்க...பருவகாற்று அதிகரிப்பதை போல, பதிவுலகிலும் என் பக்க(ம்)த்தில் இதமாக காற்றடிக்கும் பருவமாகி இருக்கிறது.

அன்பு தங்கை பாயிஷாகாதரின் பதிவில் என்னை அறிமுக படுத்தியதும்.

அருமை தோழிகள் ஸ்வர்ணரேக்காவின் விருதும் மேனகாவின் தொடர் பின்னூட்ட ஊக்குவிப்பும்.....



மற்றும் நண்பர்கள், முரளிகண்ணன், ஷ‌ஃபிக்ஸ், ஆகாயமனிதன், முக்கோணம், ரஹ்மான், பழனியிலிருந்து சுரேஷ், உண்மைத் தமிழன், பிரியமுடன்வசந்த், கோவி.கண்ணன், நிகழ்காலத்தில், ரம்யா, சக்கரை சுரேஸ், டக்ளஸ், டுபுக்கு, அன்பு, தேவன்மாயம், ராமலக்ஷ்மி, பிரேம்குமார், கீதாஆச்சல், ஷிர்டிசாய்தாசன், Bradpetehoops, நட்புடன் ஜமால், சூர்யா ௧ண்ணன், மகேஷ்வரன், சபிஅஹ்மத், முத்து கணேசன், சதீஷ்பிரபு-க்கும்

அதற்கும் மேல் அறுபத்தி மூன்று நாடுகளில் இருந்து வந்து நாட்டு கொடியை என் பக்கத்தில் நட்டதோடு தமிழிஸ்- ல் ஓட்டளித்தது, என் பதிவுகளை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட எல்லா முகம் தெரியாத நண்பர்களுக்கும் சேர்த்து, என் மனமார்ந்த நன்றி...நன்றி...நன்றி.



தொடர்ந்து உங்கள் ஆதரவையும், புது நண்பர்களின் அறிமுகத்தையும் என்றும் விரும்பும் உங்கள் நண்பன் - சிங்கக்குட்டி.

இனி ஒரு தங்கையின் விருப்பம், "A" முதல் "Z" வரை.

இதன் விதிமுறைகள்.

1-உங்களின் இந்த விபரங்களை உங்கள் பதிவில் பயன் படுத்தவும்.

2-இது உங்களை பற்றிய "A,B,C" ஆகும்.

3- நான்கு புதிய பதிவுலக நண்பர்களை இதில் அறிமுக படுத்தவும்.

4- நீங்கள் அறிமுக படுத்தும் புதிய நண்பர்களுக்கு அதை பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்துகள்.

5- மீண்டும், மீண்டும் ஒரே நண்பர்கள் வருவதை தவிர்க்கவும், ஆகயால் இந்த வலை பதிவு வட்டம் மேலும், மேலும் விரிவடையும்.

இதோ இனி என் பங்கு.

1. A – Available/Single? இல்லை, (பின்னாடி இருந்து தங்கமணி "சரியான லூசுடா நீ" "ஆமான்னு" போட்டாதான நிறைய பொண்ணுக படிக்கும்).

2. B – Best friend? : எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னோடு நட்ப்பாய் இருக்கும் இருவர், ஒன்று "நான்" மற்றொன்று "சரவணகுமார்".

3. C – Cake or Pie?: கேக்.

4. D – Drink of choice? : இளநீர், அதிக உப்பில்லாத மோர்.

5. E – Essential item you use every day? : என் சோனி MP3.

6. F – Favorite color? : நீலம்,கருப்பு.

7. G – Gummy Bears Or Worms?: ஜில்ல்ன்னு பீர் (சும்ம்மா :-)).

8. H – Hometown? - இந்தியாவில் சரித்திரத்தில் அசுரர்கள் ஆண்ட, சுதந்திர போராட்ட வீர வரலாறுடைய ஒரு நகரம்.

9. I – Indulgence? - ஓவியம், கவிதை(இப்போது இல்லை).

10. J – January or February? ஜனவரி (இந்த கேள்வியின் அர்த்தம் எனக்கு புரியவில்லை, இருந்தாலும் குளிர் மாத "ஜனவரி" பிடிக்கும்).

11. K – Kids & their names? ஒரு அதிஸ்ட தேவதை "அஹானா".

12. L – Life is incomplete without? - என் தன்நம்பிக்கை.

13. M – Marriage date? 25 அக்டோபர் 2006.

14. N – Number of siblings? மூன்று சகோதரிகள்.

15. O – Oranges or Apples? ஆரஞ்ச்.

16. P – Phobias/Fears? "போபியா" எதுவும் இல்லை, "பயம்" மனசாட்சிக்கும் கடவுளுக்கும் மட்டும்.

17. Q – Quote for today? : There is nothing to lose in this world, but everything to Learn, Gain and Yearn.

18. R – Reason to smile? : அனைவரையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள.

19. S – Season? பனிவிழும் குளிர்காலம்.

20. T – Tag 4 People? ஸ்வர்ணரேக்கா, பிரியமுடன்வசந்த், தேவன் மாயம், முத்துச்சரம்.

21. U – Unknown fact about me? எப்போதும் பாசத்தை தேடுவது.

22. V – Vegetable you don't like? கத்திரிக்காய்.

23. W – Worst habit? முன்கோவம்.

24. X – X-rays you've had? "கைவிரல்" ஜப்பானில் பனியில் விளையாடிய பாதிப்பு.

25. Y – Your favorite food? கோழி, நண்டு.

26. Z – Zodiac sign? சிம்மம்.

வழக்கம் போல உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிந்து தமிழிஸ்- ல் ஓட்டளிக்க வேண்டுகிறேன், நன்றி.

மீண்டும் ஒரு புதிய பதிவோடு உங்களை விரைவில் சந்திக்கிறேன். அது வரை உங்களிடம் இருந்து அன்புகூறி விடை பெறுவது உங்கள் சிங்கக்குட்டி ...சிங்கக்குட்டி ...சிங்கக்குட்டி ...(எக்கோ எபெக்ட்-ங்க).

34 பின்னூட்டம்:

SUFFIX said...

நன்றி நண்பரே, நானும் இந்த பதிவுலகத்திற்க்கு புதியவன் தான், தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கமே எனது படைப்புக்கள். தொடருட்டும் நமது நட்பு.

Menaga Sathia said...

உங்களின் பதிவில் என்னையும் குறிப்பிட்டதற்க்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி!!மேலும் உங்க எழுத்துநடை சிறக்கவும்,விருது பெற்றதற்க்கும் வாழ்த்துக்கள்!!

உங்கள் அதிர்ஷ்ட தேவதையின் பெயர் அழகாயிருக்கு.

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள் ஷ‌ஃபிக்ஸ்.

நன்றி மேனகா, "அஹானா" என்றால் "சூரியனின் முதல் கதிர்" என்பது தமிழ் அர்த்தம், "ஒன்றே ஒன்று" என்பது கொரியன் மொழி அர்த்தம்.

Anbu said...

thanks anna

Anbu said...

Please Remove For Word Verification....

Suresh said...

All the best rock as you do :-)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.

Unknown said...

உங்களின் பதிவில் என்னையும் நினைவு வைத்து குறிப்பிட்டதற்க்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி அண்ணன்.
உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கு. இன்னும் நிறைய நிறைய பதிவுகள் எழுதி பல அவார்டுகள் வாங்க வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்கள் சிங்கக்குட்டி

நன்றிக்கு நன்றி :)))

நிகழ்காலத்தில்... said...

ப்ரொபைலில் மெயில் வசதி ஏற்படுத்துங்கள்

\\6. F – Favorite color? : நீளம்,கருப்பு.\\

நீலம் சரியா?

சிங்கக்குட்டி said...

நன்றி அன்பு, தங்கை சொல்லை தட்ட முடியுமா? (சும்மா த-னாவுக்கு த-னா போட்டு பார்த்தேன்) இதுவரை கவனிக்கவில்லை, இப்போது எடுத்துவிட்டேன் .

நன்றி சுரேஷ்.

ஜமால், நீங்களும்தான் இதில் அடக்கம், திரும்ப படிங்க :-))

என்னமா பாயிஷாகாதர்!, காதல் படத்துல "உங்ககிட்ட இன்னும் எதிர்பக்குறேன், நீங்க நல்ல வருவீங்கன்னு" சொல்லறமாதிரி இருக்கு? அண்ணன வச்சு "காமிடி கீமிடி" எதுவும் பண்ணலயே?..... சும்மா :-)) வாழ்த்துக்கு நன்றி.

சிங்கக்குட்டி said...

இல்லங்க "நிகழ்காலத்தில்" இது "நீளமான கருப்பு" (தல குனியுற நிலைமை தமிழனுக்கு வராதுங்க, எப்படி சமாளிச்சேன் பாத்திங்களா).
தவறுக்கு மன்னிக்கவும் மாற்றிவிட்டேன்.
மின் அஞ்சல் வசதி விரைவில் முயற்சிக்கிறேன். மேலும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றி தல.., ஓட்டுப் போட்டாச்சு..,

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு எப்போதும் என் நன்றி சுரேஷ் :-)

உண்மைத்தமிழன் said...

சிங்கம்..

ஞாபகம் வைச்சிருந்து கூப்பிட்டதுக்கு மிக்க நன்றி..!

பதிவு போட கொஞ்சம் டைம் கொடுங்க..

நிச்சயம் போடுறேன்..!

Anonymous said...

சிங்கக்குட்டிக்கு உண்மையிலேயே பெரிய மனசு. இத்தனை பேருக்கு லின்க் கொடுக்கறதே நிறைய நேரம் எடுத்து இருக்கும்.

வாழ்த்துகள், நன்றிகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி

என்னோட பேர்ல எவ்ளோ சந்தேகம் உங்களுக்கு?

எல்லாம் ஒரேஆளுதான்

GEETHA ACHAL said...

தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்...

நட்புடன் ஜமால் said...

ஜமால், நீங்களும்தான் இதில் அடக்கம், திரும்ப படிங்க :-))]]


திரும்பாம படிச்சிட்டேன் நண்பரே

நன்றி.

கோவி.கண்ணன் said...

விருது கொடுத்ததற்கு நன்றி , விருது பெற்றவர்களுக்கு பாராட்டுகள்.

சிங்கக்குட்டி said...

நன்றி,நன்றி,நன்றி.
உண்மைத் தமிழன்,
ஷிர்டிசாய்தாசன்,
கீதா ஆச்சல், ஜமால்,
கோவி.கண்ணன்,
பிரியமுடன் வசந்த் (பேர்ல இருந்த சந்தேகம் தீர்ந்தது)

Raju said...

Thanx FOr ur Affection..!
:-)

சந்தனமுல்லை said...

A-Z நல்லா இருக்கு! :-) விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும், மகிழ்ச்சியும்!!

Bradpetehoops said...

Awesome! Thanks for the visit.

MABUHAY!

[Philippines Greeting]

சிங்கக்குட்டி said...

நன்றி டக்ளஸ்,
சந்தனமுல்லை,
Bradpetehoops.
நீங்கள் அனைவருமே பதிவுலகின் "ஸ்டார்தான்" உங்கள் பரிசு உங்கள் பக்கத்தின் பின்னூடத்தில் வந்து கொண்டே இருக்கிறது.....
மீண்டும் நன்றி.

Joe said...

Nice post!

you should've typed ilai not izhaiyudhirkaalam.
(Sorry transliteration not working in office PC)

சிங்கக்குட்டி said...

வாங்க ஜோ, உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது என் கருத்து. தொடர்ந்து வாருங்கள் :-))

Menaga Sathia said...

தங்களின் அன்பு பரிசை ஏற்றுக்கொண்டேன் சகோதரரே.மிக்க நன்றி+ரொம்ப சந்தோஷம்.
அந்த அவார்டை நீங்கள் உருவாக்கியதா?மிகவும் அழகாக இருக்கு.உங்களின் அன்புக்கு நான் என்ன எப்படி நன்றி சொல்லுவதுன்னு தெரியல...

சிங்கக்குட்டி said...

ஆம் மேனகா, இது என் நண்பர்களுக்காக என் சொந்த வடிவம், வடிவத்தை இன்னும் மேம்படுத்தி பின் உங்களுக்கு புதிய லிங்கை விரைவில் தருகிறேன். சிறிது அவகாசம் தாருங்கள்.

Btc Guider said...

உங்களின் பதிவில் என்னையும் குறிப்பிட்டதற்க்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி.
உங்கள் விருதுக்கு நன்றி. சில நாட்களாக ஊரில் இல்லாததால் உடனே பதில் எழுத முடியவில்லை மன்னிக்கவும்.
நன்றிகள் பல.

சிங்கக்குட்டி said...

வாங்க ரஹ்மான்....உங்கள் அன்புக்கு நன்றி.
மன்னிப்பு என்பது பெரிய வார்த்தை, அதை இறைவனுக்கு மட்டும் பயன் படுத்துங்கள்.

Jaleela Kamal said...

உங்கள் அனைத்து பகிர்வும், பதில்கலும் ரொம்ப அருமை.

ராமலக்ஷ்மி said...

//"பயம்" மனசாட்சிக்கும் கடவுளுக்கும் மட்டும்.//

அது போதுமே. வாழ்வீர்கள் வளமுடன்.

விரிகிற உங்கள் நட்புப் பட்டியலில் என் பெயரும். நன்றி சிங்கக்குட்டி, தாங்கள் தந்த நட்சத்திர விருதுக்கும் சேர்த்து.

சிங்கக்குட்டி said...

நன்றி ஜலீலா.

நன்றி ராமலக்ஷ்மி, அவனின்றி ஓர் அணுவும் அசையாது :-)).

Post a Comment

 

Blogger Widgets