Sunday, September 13, 2009

வரம்தந்த தேவதை



இந்த வரம்தரும் தேவதையை என்னிடம் அனுப்பி, என்னை இந்த பதிவை எழுத அழைத்த மேனகாவுக்கு என் நன்றி.

எல்லோருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும், அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்!.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக, உங்கள் கண் முன்னாடி "ஏஞ்சல் எனும் தேவதை" வந்து உங்களுக்கு பத்து வரங்கள் தருகிறது. நீங்கள் என்ன, என்ன வரம் கேட்பீர்கள்?

இதோ தேவதையிடம் என் வரங்கள்.

முதல் வரம் : பத்து வரங்களையும் கேட்ட பின் "இன்னுமா இந்த உலகம் "ஏஞ்சல் தேவதை-யை" நம்புகிறது என்று சொல்லக்கூடாது.

இரண்டாவது வரம் : என் பிறப்பின் பலனை முழுதாக அடைந்து, நான் யார் என்று எனக்கு புரிய வேண்டும்.

மூன்றாவது வரம் : இனி ஒரு பிறப்பில்லாத மோட்சத்தை அடைய வேண்டும்.

நான்காவது வரம்: துரோகம் என்ற வார்த்தையும் செயலும் மனிதனுக்கு மறந்து போக வேண்டும்.

ஐந்தாவது வரம் : சண்டை போடும் இரு தரப்பை தவிர மற்ற யாரையும் எந்த ஆயுதமும் கொள்ளக்கூடாது, போர் வீரனின் தற்காப்பு ஆயுதம் தவிர மற்ற அணு ஆயுதங்கள் அனைத்தும் அழிந்து போகவேண்டும்.

ஆறாவது வரம் : உலகின் அத்தனை போதை வஸ்துக்களும் அழிந்து போகவேண்டும்.

ஏழாவது வரம் : தன் மனைவி, கணவனை தவிர மற்ற அனைவரும் மனித மூளைக்கு சகோதரி சகோதரனாக மட்டுமே தெரியவேண்டும்.

எட்டாவது வரம் : மனிதனாய் படைத்த பணம் மனிதனை அடிமை படுத்தாமல், மனிதனிடம் அடிமையாய் இருக்க வேண்டும். ஆக தன் உழைப்பும் அதில் நேர்மையாக கிடைக்கும் பலனும் மட்டுமே உண்மை, என்று எல்லா மனித மனதிற்கும் புரியவேண்டும்.

ஒன்பதாவது வரம்: அன்பே கடவுள் அறிவே தெய்வம், மற்ற அனைத்தும் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் உள்ள "மாயை" என்று பிறக்கும் போதே புரியவேண்டும்.

பத்தாவது வரம் : பிறக்கும் போது பிறவிகடமை என்னும் பாவத்துடன் அழுதுகொண்டே பிறக்கும் மனிதகுலம், எந்த நோய் நொடியும் இல்லாமல், இறக்கும் போது வந்த கடமை அனைத்தும் முடித்த சந்தோசத்தில் சிரித்துக்கொண்டே இறக்க வேண்டும்.



ஆக, என் கடமை முடிந்து. இப்போ இந்த தேவதையை வேறு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பனும், கீழே அவர்கள் பெயரை சொடுக்கி அவர்கள் பக்கத்திற்கு செல்லவும்.

1.கிரி

2.ரஹ்மான்

3.கோவி.கண்ணன்

4.பழனியிலிருந்து சுரேஷ்

23 பின்னூட்டம்:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அழைப்புக்கு நன்றி தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தொடர்ந்துவிட்டேன்

சிங்கக்குட்டி said...

நன்றி சுரேஷ், உங்கள் பதிவும் அருமை.

Jaleela Kamal said...

அனைத்து வரங்களின் பதிவும் அருமை.

Btc Guider said...

உங்க தேவதை வரம் தருமா
அருமையான பதிவு.

Btc Guider said...

நானும் பதிவு போட்டாச்சு,

Menaga Sathia said...

அனைத்து வரங்களின் பதிவும் அருமை!!

Unknown said...

எல்லா வரங்களும் நல்லாதான் இருக்கு...

சிங்கக்குட்டி said...

வரம் கிடைத்து விட்டதாக நினைத்து இதை பின்பற்றி பார்க்கலாம் இல்லையா, அதுதான் என் வாரத்தின் நோக்கம்.

நன்றி ரஹ்மான், மேனகா, பாயிஷாகாதர் மற்றும் முதல் வருகை தந்துள்ள ஜலீலா.

SUFFIX said...

நல்லா சொல்லி இருக்கீங்க நண்பரே, பணம் பற்றிய விளக்கம் சூப்பர்.

சிங்கக்குட்டி said...

நன்றி ஷ‌ஃபிக்ஸ் :-)

கிரி said...

//தன் மனைவி, கணவனை தவிர மற்ற அனைவரும் மனித மூளைக்கு சகோதரி சகோதரனாக மட்டுமே தெரியவேண்டும்.//

ஐயய்யோ! அவ்வ்வ்வ்வ் கொஞ்சம் கருணை காட்டுங்க.. அப்புறம் யாரை தான் சைட் அடிக்கிறது ;-)

என்னை வேற கூப்புட்டுட்டீங்க ...நன்றி ..பதிவ போட்டுடுவோம் :-)

ப்ரியமுடன் வசந்த் said...

சிங்கம்லே..

அருமையான ஆசைகள் சிங்க குட்டி அத்தனையும் நிறைவேற வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

//பிறக்கும் போது பிறவிகடமை என்னும் பாவத்துடன் அழுதுகொண்டே பிறக்கும் மனிதகுலம், எந்த நோய் நொடியும் இல்லாமல், இறக்கும் போது வந்த கடமை அனைத்தும் முடித்த சந்தோசத்தில் சிரித்துக்கொண்டே இறக்க வேண்டும்.//

அட....

ப்ரியமுடன் வசந்த் said...

//மூன்றாவது வரம் : இனி ஒரு பிறப்பில்லாத மோட்சத்தை அடைய வேண்டும்.//

ஏன்?

ப்ரியமுடன் வசந்த் said...

//நான்காவது வரம்: துரோகம் என்ற வார்த்தையும் செயலும் மனிதனுக்கு மறந்து போக வேண்டும். //

இது சூப்பர்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஏழாவது வரம் : தன் மனைவி, கணவனை தவிர மற்ற அனைவரும் மனித மூளைக்கு சகோதரி சகோதரனாக மட்டுமே தெரியவேண்டும்.//

ஹி ஹி இது கொஞ்சம் பேராசை

சிங்கக்குட்டி said...

நன்றி கிரி,உலகில் சைட் அடிக்க சிறந்த அழகி கர்பமாக உள்ள மனைவி மட்டுமே...(ஹலோ... மற்றவன் மனைவி இல்லங்க).

நன்றி வசந்த், இத்தன கேள்வி கேட்டா பதில நான் ஒரு பதிவாத்தான் போடணும் :-))

பாவமுள்ள வரை மீண்டும் மீண்டும் ஒரு ஆத்மா பாவப்பட்ட மனிதனாய் பிறந்து கொண்டு இருக்கும் என்று அர்த்தம் உள்ள இந்து மதம் சொல்கிறது.

கோவி.கண்ணன் said...

மிக்க நன்றி எழுத முயற்சிக்கிறேன்

ராமலக்ஷ்மி said...

கேட்டதில் பெரும்பாலானவை தன்னலமற்ற வரங்கள். அதற்காகவே அருள்பாலிக்க வேண்டும் தேவதை!

சிங்கக்குட்டி said...

நன்றி கோவி.கண்ணன்.

வாங்க ராமலக்ஷ்மி! நீண்ட நாளுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி :-))

Anonymous said...

atleast unga devathai ஐந்தாவது வரம் kodukattum

சிங்கக்குட்டி said...

நன்றி நன்ரசிதா.

காயம் பட்ட உங்கள் இதயத்தில் வலி உங்கள் வார்தையில் எனக்கு புரிகிறது.

Post a Comment

 

Blogger Widgets