Saturday, October 10, 2009

பதினெட்டு சித்தர்கள்

சித்தர்கள் என்றல் யார்? என்றும் தமிழ் சித்தர்கள் பதினெட்டு என்றும் கிடைத்த தகவல்களை பார்த்தோம்.

அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த பதினெட்டு சித்தர்கள் திரு உருவங்களும், பெயரும், இன்றும் அவர்கள் அருள் தரும் சன்னதிகளின் விவரம் பற்றி தகவல்களை இங்கு பார்ப்போம்.

1- திருமூலர் - சிதம்பரம்

2- இராமதேவர் - அழகர்மலை

3- அகஸ்தியர் - திருவனந்தபுரம்

4- கொங்கணர் - திருப்பதி

5- கமலமுனி - திருவாரூர்

6- சட்டமுனி - திருவரங்கம்

7- கரூவூரார் - கரூர்

8- சுந்தரனார் - மதுரை

9- வான்மீகர் - எட்டிக்குடி

10- நந்திதேவர் - காசி

11- பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்

12- போகர் - பழனி

13- மச்சமுனி - திருப்பரங்குன்றம்

14- பதஞ்சலி - இராமேஸ்வரம்

15- தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்

16- கோரக்கர் - பேரூர்

17- குதம்பை சித்தர் - மாயவரம்

18- இடைக்காடர் - திருவண்ணாமலை

பதினெட்டு சித்தர்கள்களின் திரு உருவங்கள்.



மேல் சொன்ன பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும், நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள பழைய ஓலைச்சுவடியின் சான்று.

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.

இது தவிர, மதுரை அழகர் கோவிலின் முன்பாக பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியாக உள்ள "பதினெட்டு படிகளும்", இந்த பதினெட்டு சித்தர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இங்கு ஆடி பதினெட்டு அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

முதலில் சொன்னது போல், இந்த பதினெண் சித்தர்கள் பெயரிலும் பல கருத்தக்கள் கிடைக்கின்றன, அவற்றில் எனக்கு கிடைத்த சில,

1. கும்ப முனி, 2. நந்தி முனி, 3. கோரக்கர், 4. புலிப்பாணி, 5. புகண்ட ரிஷி, 6. திருமுலர், 7. தேரையர், 8. யூகி முனி, 9. மச்சமுனி, 10. புண்ணாக்கீசர், 11. இடைக்காடர், 12. பூனைக் கண்ணன், 13. சிவவாக்யர், 14. சண்டிகேசர், 15. உரோமருஷி, 16. சட்டநாதர், 17. காலாங்கி, 18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது.

1. அகத்தியர், 2. போகர், 3. நந்தீசர், 4. புண்ணாக்கீசர், 5. கருவூரார், 6. சுந்தரானந்தர், 7. ஆனந்தர், 8. கொங்கணர், 9. பிரம்மமுனி, 10. உரோமமுனி, 11. வாசமுனி, 12. அமலமுனி, 13. கமலமுனி, 14. கோரக்கர், 15. சட்டைமுனி, 16. மச்சமுனி, 17. இடைக்காடர், 18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.

1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டைமுனி, 6. திருமுலர், 7. நந்தி, 8. கூன் கண்ணன், 9. கொங்கனர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. உரோமருஷி, 16. புண்ணாக்கீசர், 17. சுந்தரனானந்தர், 18. பிரம்மமுனி என்கிறது அபிதான சிந்தாமணி.

இனி இந்த சித்தர்ககள் வாழ்ந்த மற்றும் வாழும் காலத்தை இங்கு பார்ப்போம்.

எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.


1- திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.

2- இராமதேவர்– மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.

3- அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.

4- கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருப்பதி.

5- கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.

6- சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.

7- கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்(கரூர்).

8- சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.

9- வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.

10- நந்திதேவர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.

11- பாம்பாட்டி சித்தர் – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.

12- போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – பழனி.

13- மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.

14- பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.

15- தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.

16- கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.

17- குதம்பை சித்தர் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.

18- இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.

சித்தர்களின் யோகம் மற்றும் யோக முறைகள்

'யோகம்' என்பது 'யுஜ்' என்பதிலிருந்து 'யோக்' ஆகி வந்திருக்கிறது. அதாவது இணைத்தல் என்ற பொருளில். சிதறும் மனச் சக்தியைக் கூட்டுதல், ஆதியில் இருந்த நிலையில் தன்னைச் சேர்த்தல், யாதுமான சக்தியினிடம் சரணாகதியடைந்து அதனுடன் தன்னைச் சேர்த்தல், விசேஷ புருஷன் அல்லது இறைவனுடன் தன்னை இணைத்தல், - இதுவே யோகம்.

யோக, சமாதி நிலையை அடைய எட்டு அங்கங்களான

1- இயம,
2- நியம,
3- ஆசன,
4- பிராணாயாம,
5- பிரத்தியாகார,
6- தாரண,
7- தியான,
8- சமாதி.

எனப்படும் எட்டு படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும், யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் 'ஹிரண்யகர்பர்' என்பவராம். அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் "மஹரிஷி பதஞ்சலி" என்று சொல்லப்படுகிறது.

அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள், வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும்,யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர். இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்கிறார்கள்.

இவர் தந்தை: அத்திரி முனிவர்.
இவர் தாய்: கோணிகா.

இவரின் வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால் 'ஆத்திரேயர்', கோணிகாவின் பிள்ளையென்பதால் 'கோணிகாபுத்திரர்'.

இவர் எழுதிய மூன்று நூல்கள்

1- யோகத்தினை விளக்கும் 'யோக சாஸ்திரம்',
2- மொழி இலக்கணமான 'மஹாபாஷ்யம்',
3- ஆயுர் வேத்மாகிய 'சரகம்' என்ற 'ஆத்திரேய சம்ஹிதை'.

ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்.

இந்த யோக நிலையை அடையுமுன், உலக வாழ்க்கையில் மேலாக எனப்படும் பொருள், புகழ், திறமை, பலம், சுகம் அடைவதற்கான எட்டு மஹா யோக 'சித்தி'களும் ஏற்படும்

யோக 'சித்தி' என்பது என்ன என்று தேடினால்?

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகள் ஆகும். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

அட்டமா சித்திகள்

1- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.

3- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4- கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5- பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.

6- பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.

7- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

8- ஈசத்துவம்(இறைத்துவம்) - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

என்ற பல வியக்க வைக்கும் தகவல்கள் கிடக்கிறது.

ஆகவே, இந்த கலி காலத்தில் இறைவனை அடைய, மேல் சொன்ன சித்தர்களின் வாழ்வை படித்து அவர்கள் வாக்குப்படி நடப்போம்.

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

36 பின்னூட்டம்:

GEETHA ACHAL said...

மிகவும் அறிய நல்ல பதிவு...பல விஷயங்கள் தெரியாதவை...


சித்தர்கள் படங்கள் அருமை...

உங்களுடைய பதிவினை ஒரு print-out எடுத்து தான் அம்மாகிட்ட கொடுக்க வேண்டும்...பல அறிய கருத்துகள்..

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி..

GEETHA ACHAL said...

நீங்கள் கூறுவது உண்மை தான், சிங்ககுட்டி..அம்மாவை 4 வருடம் கழித்து இப்பொழுது தான் பார்கிறேன்...அதனால் நேரம் போவதே தெரிவில்லை...பிஸி எல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் அம்மாவுடன் இருப்பதால் நேரம் போவதே தெரிவதில்லை.

உங்கள் வீட்டில் அனைவரும் நலமா.இங்கு நானும் அக்ஷ்தாவும் நலமா இருக்கின்றோம்...

கிரி said...

சிங்கக்குட்டி எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்றாலும், நீங்கள் இதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. பாராட்டுகள்.

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி கீதா, இங்கும் இந்தியாவிலும் அனைவரும் நலம்.

அம்மாவுடன் உங்கள் உங்கள் நேரத்தை பற்றி பகிர்ந்து கொண்டதுக்கும் நன்றி, குடும்பத்தில் அனைவருக்கும் என் வணக்கத்தை சொல்லவும்.

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கு நன்றி கிரி,

ஆர்வம் இல்லை என்றாலும் உங்கள் பின்னூட்டத்துக்கும் மேலும் ஒரு நன்றி!.

வாழ்கை என்பதே ஒரு "யாத்ரா"தானே, அதில் ஒவ்ஒரு வினாடியையும் நாம் படிக்கும் அல்லது கடக்கும் போது, நமக்கு கிடைப்பது புது புது அனுபவம்தானே.

துளசி கோபால் said...

இந்த நவராத்ரி விழாவில் மயிலை கபாலி கோவிலில் பதினெட்டு சித்தர் அலங்காரம் ஒன்று பார்த்தேன். (அதெல்லாம் படங்களோடு பதிவும் போட்டாச்சு) இவர்களைப்பற்றி ஒன்னும் தெரியவில்லை.
இப்போ உங்கள் இடுகை மூலமாக இவர்கள் பெயர் மற்றும் விவரங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி.

சிங்கக்குட்டி said...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி கோபால்.

உங்கள் பதிவையும் http://thulasidhalam.blogspot.com/2009/09/1.html படித்தேன், மிக அருமையாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.

தொடரட்டும் நம் நட்பு.

Raja Simma Pandiyan said...

சித்தர்கள் ௦ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்கள், அட்டமா சித்திகள் என்பனவற்றையெல்லாம் நம்ப முடியவில்லையே...உண்மையா?

ஈ ரா said...

பகிர்வுக்கு நன்றி சிங்கக் குட்டி

நிகழ்காலத்தில்... said...

சிறந்த முயற்சி சிங்கக்குட்டி..


வாழ்த்துக்கள்


\\வயது ஆதாரமாக தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும்\\

பெயர்களைக் குறிப்பிட்டால் ஆர்வமுடையவர்கள் தொடர்ந்து பயன்பெற உதவுமே...

Anonymous said...

சிங்கக்குட்டி ரொம்ப சூப்பர்...நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்..?பர்சனல்னு நினைத்தால் சொல்ல வேணாம்..எதற்கு கேட்கிறேன் என்றால் ஒரு வேளை நீங்கள் பத்திரிகை நிருபராக இருந்தால் எனக்கு உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் .. சித்தரை பற்றியும் சரி..மற்ற விடயங்களை பற்றியும் சரி ரொம்ப தெளிவாக ஆராய்ந்து ரொம்ப நல்ல தகவல்களை சொல்கிறீர்களே அதனால் தான் நீங்கள் நிருபராக இருப்பீர்களோ என்று நினைத்து கேட்கிறேன்..:)நல்ல பதிவு..இதே போல் இன்னும் நறைய இன்ட்ரஸ்டிங் பதிவு எதிர்பார்க்கிறேன்..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் உழைப்பு பாராட்டத்தக்கது.., தேடல் பிரமிப்பூட்டுகிறது. கண்டிப்பாக உங்கள் தேடல் என்றாவது ஒருநாள் பூர்த்தியடைய வாழ்த்துக்கள்..,

Unknown said...

dear singakutty

I dont no all about siddargal but one of the Korakkaa siddar's samadhi is nagapaatinam district,excatly nagai-velangannai interior road,the village name is noth poigainallur,it is is the road site ,very famous,every fullmoon day special poojas are there.

may be the peroor is not correct

c.shanmugavelu
csvlto2009@gmail.com

சிங்கக்குட்டி said...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜசிம்மா.

ஆத்திகம், நாத்திகம் பேசுவது பேசுபவரின் "ஈகோவை" பொறுத்து முடிவில்லாதது என்பதால் அதை தவிர்த்து உங்கள் கேள்விக்கு இங்கு பதில் சொல்ல முயற்ச்சிக்கிறேன்.

விங்ஞானத்துக்கும் மெய்ஞானத்துக்கும் இடையே உள்ள அடிப்படை கேள்வி இது. ஆகவே சமிபத்திய ஒரு செய்தியை எடுத்துக்கொள்வோம்.

"சனி கிரகத்தை சுற்றி ஒரு பெரிய பனி வளையம் உள்ளது" இது நாசாவின் அதிநவீன தொலைநோக்கியின் மூலம் கண்டு பிடித்ததாக சொல்லி இந்த வார பத்திரிகைகளின் என்னை போலவே நீங்களும் படித்துஇருக்க கூடும்.

இத்தனை நவீன உலகத்தில் மனிதன் நிலாவில் கால் வைத்து கொடி நட்டு நாற்பது வருடங்கள் ஒரு மாதம் இன்றோடு பதினேழு நாள் (ஜுலை பதினாறு 1969) கழித்து ஒரு உபகரணத்தை கொண்டு கண்டுபிடிக்க முடிந்ததை, எப்படி எந்த ஒரு ஆராய்ச்சி வசதியும் இல்லாமல் ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்க முடியும்?

(நம் புராண கல் வெட்டுகளில் கூட இந்த வலையைத்தை சனி கிரகத்தை சுற்றி நாம் காண முடியும்! இது எப்படி சாத்தியமாகும்? மேலும் நம் இன்றைய விங்ஞானம்தான் அந்த கல்வெட்டை ஆராய்ந்து, அது எத்தனை வருட பழையது என்று நிரூபிக்கிறது)

எப்படி சாத்தியம் என்று எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டோ?

எனவே, எது எப்படியோ உங்கள் கேள்விக்கு வருகிறேன், இன்றைய அவசர உலகத்தில் மனிதனுக்கு ஒரு புகைப்பட ஆதாரம் தேவைப்படுகிறது, ஏர்இந்தியாவின் புகைப்படத்தை போட்டு, இது விமானி இல்லாமல் பறக்க கூடிய தானியியங்கி விமானம் என்று சொன்னால் நம்பும் நாம் "புஸ்பக விமானம்" என்று சொன்னால் நம்ப மறுப்பது ஏன்?

கட்சி சமய ஜாதி கொள்கை ஏதுமில்லாமல் (இது அனைத்தும் நிரந்தரமல்ல) ஒரு முறை சிந்தித்து பாருங்கள்.

மேலும் உடற்பயிற்சி செய்தால் நீண்ட நாள் நலமாய் வாழ முடியும் என்ற அறிவியலை நம்பும் நாம், அதற்கு அடிப்படையான யோகாவை நம்ப மறுப்பது ஏன்?

மஞ்சள் வேம்பு போல இதையும் அமெரிக்கா ஒரு நாள் காப்புரிமை வங்கி, இது எங்கள் ஆராய்ச்சி என்று வெளியிடும் போது மட்டுமே நாங்கள் நம்புவோம் என்றால், அதற்கும் ஒரு உதாரணம் சமிபத்திய தொழில்நுட்பம் "நானோ".

நீங்களும் படித்து இருக்க கூடும் இதை,

மனிதனை அப்டியே இளமையாக வைத்து இருக்க உதவும் நானோவின் மூலம் இன்னும் இருபது ஆண்டுகளில் இறப்பில்லாத மனித வாழ்கை சாத்தியம்.

இதைதானே சித்தர்களும் சொன்னார்கள், நீளமான பதிலுக்கு மன்னிக்கவும்.

மீண்டும் ஒருமுறை உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜசிம்மா.

சிங்கக்குட்டி said...

மிக்க நன்றி ஈரா, தொடரட்டும் நம் நட்பு.

சிங்கக்குட்டி said...

நன்றி நிகழ்காலத்தில்.

நானும் அதைபற்றி முதலில் யோசித்தேன், ஆனால் இரு பிரச்னைகள் என் முன் வந்தது.

ஒன்று புத்தகம்
_______________

பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும், பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும், சித்தர் பாடல்கள், சித்தர்கள் நாடி சாஸ்திரம், சித்தர்கள் கலைக் களஞ்சியம், சித்தர் மரபு போன்ற பல புத்தகங்களில் படித்த தகவல்.

படித்த அந்த தகவல் சரியா இல்லையா என்று பார்த்த பல தகவல் களஞ்சியங்கள்.

மற்றும் படித்த இந்த தகவல்கள் ஏர்கனவே பதிவில் இருக்கா இல்லையா என்றும், இருந்தால் அத்த தகவல் இதோடு ஒத்து போகிறதா இல்லையா என்றும் சரி பார்த்து,

இப்படி இருக்கும் அத்தனை பெயர்களைக் குறிப்பிடுவது எனக்கு சாத்தியாய் படவில்லை.

இரண்டு
________

பதிஉலகம் வந்த புதிதில், எல்லா புத்கத்தையும் இணையதளத்தையும் எல்லோராலும் படிப்பது சாத்தியமில்லை என்பதாலும், இந்த பதிவின் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாததாலும், நான் சில புத்தகம் மற்றும் தளங்களில் படித்த ஒரு தகவலை பகிரபோக, அது அந்த புத்தகத்தின் வியாபாரத்தை கெடுப்பதாய் நினைத்து அவர்கள் எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிவிக்க.

யாருடைய வருமானதையும் கெடுக்க விரும்பாமல் நான் அந்த பதிவை எடுத்து விட்டேன்.

ஆகவே இங்கு பொது தகவல்களை மட்டும் தொகுத்துள்ளேன்.

இருந்தாலும் இல்லை என்று உங்களுக்கு சொல்லாமல் சில புத்தகங்களின் பெயரை இங்கு கொடுத்துவிட்டேன்.

இப்பொழுது வார விடுமுறையில் வெளியில் இருப்பதால், தளங்களின் பெயரையும் வரும் திங்கள் இரவு உங்களுக்கு தருகிறேன்.

சிங்கக்குட்டி said...

என் சகோதரியிடம் என்ன "பர்சனல்" அம்மு. நான் பத்திரிகை நிருபர் இல்லை, என்றாலும் நீங்கள் கேட்கலாம்.

எனக்கு தெரிந்தாய் இருந்தால் சொல்கிறேன்,

எனக்கு தெரியாததாய் இருந்தாலும், ஒரு புது விசையத்தை தேடி படிக்க உதவியதுக்கு உங்களுக்கு நன்றி சொல்லி, தேடி பிடித்து சொல்வேன்.

தனிப்பட்ட விசையமாக இருந்தால் மின்அஞ்சல் அனுப்புகள்.

சிங்கக்குட்டி said...

உங்கள் வாக்கு பலிக்கட்டும் சுரேஷ்,

அப்படி இருந்தால், நான் மீண்டு உங்கள் ஊரைதான் வந்தடைவேன் போகரை விரும்புவதால்.

சிங்கக்குட்டி said...

நன்றி சின்னப்பா.

நீங்கள் என் முதல் பதிவையும் படிக்க வேண்டும், சித்தர்கள் பற்றி நாம் சொல்லும் அனைத்தும் குறிப்புகளே தவிர கண்டறிந்தது இல்லை.

அதாவது அவர்கள் கடைசியாக காட்சி தந்த இடங்களை பொருத்து இது மாறுபடுகிறது.

நான் கூட, கோவை திருப்பூர் போகும் வழியில் முருகன் மருதமலையில் இதுதான் பாம்பாட்டி சித்தர் சமாதி குகை என்று சொல்ல கேட்டும் பார்த்தும் இருக்கிறேன்.

ஆனால் அதுவும் அவர் தியானம் செய்த ஒரு இடம் என்று பின்னால் படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.

kanavugalkalam said...

mudiyala saamiiiiiiiiiiiiiiiii!!!!!!!!!!!!

Unknown said...

அருமையான பதிவு நன்றி!சித்தர்களின் சித்துகளை சிந்தனையில் சிகரமாக்கியமைக்கு நன்றி !

சிங்கக்குட்டி said...

வாங்க கனவுகள்காலம்

என்ன முடியலன்னு சொன்னா? எங்களுக்கு தெரிஞ்ச எதாவது வழி சொல்ல முடியும், உங்களுக்கு முடியாதாதுக்கு எல்லாம் சாமி வராது இல்லையா?

இல்லைனா "பெண் டிரைவர்" அதாங்க (USB ஸ்டிக்) பற்றி மேலும் ஏதாவது அறிய விஷயம் பற்றி இந்த சமுதாயத்துக்கு சொல்லுங்க.

உங்கள் வருகைக்கு நன்றி.

சிங்கக்குட்டி said...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலசங்கர்.

தொடரட்டும் நம் நட்பு.

Menaga Sathia said...

அருமையான பதிவு சிங்கக்குட்டி.நிறைய தகவல்களை சொல்லிருக்கிங்க.
எங்க ஊர் பாண்டிச்சேரி லாஸ்பேட்டையில் சுவாமி சித்தானந்தர் கோயில் இருக்கு.புகழ்+சக்தி வாய்ந்த கோயில்.அந்த கோயிலில் காலடி வைத்தாலே மனசுல அமைதி வந்துடும்.

சித்தர்கள் படமும் அருமை!!
இந்த பதிவை இன்னிக்குத்தான் பொறுமையா உட்கார்ந்துப் படித்து பின்னூட்டம் இட்டேன்.அதான் பின்னூட்டம் போட லேட்..

சிங்கக்குட்டி said...

நன்றி மேனகா.

பாண்டிச்சேரி மிக அருமையான ஒரு ஊர், ஆரோவில் எனக்கு ரொம்ப பிடித்த ஒரு இடம்.

ஈ ரா said...

//இன்றைய அவசர உலகத்தில் மனிதனுக்கு ஒரு புகைப்பட ஆதாரம் தேவைப்படுகிறது, ஏர்இந்தியாவின் புகைப்படத்தை போட்டு, இது விமானி இல்லாமல் பறக்க கூடிய தானியியங்கி விமானம் என்று சொன்னால் நம்பும் நாம் "புஸ்பக விமானம்" என்று சொன்னால் நம்ப மறுப்பது ஏன்?//

ரசித்தேன்...

சிங்கக்குட்டி said...

நன்றி ஈ ரா, ஆனால் அதுதானே இன்று உண்மை.

பித்தனின் வாக்கு said...

இன்றுதான் முதல் முறையாக உங்களின் வலைப் பதிவிற்கு வந்தேன். இனி நேரம் கிடைக்கும் போது எல்லாம் தங்களின் பழைய மற்றும் புதிய பதிவுகளை படிக்கின்றேன். எனக்கும் சித்தர்கள் மீது ஈடுபாடு உண்டு. நன்றி.

சிங்கக்குட்டி said...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பித்தனின் வாக்கு.

நம் இருவரின் பதிவு முகவரி படமும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருப்பதால், சமீபத்தில் தான் நானும் உங்கள் பக்கத்துக்கு வந்தேன், உள்ளே வந்து தலைப்பை படித்ததும் சட்டென்று மனதில் பட்டது இது!

//
பித்தனின் வாக்கு

பொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் ! உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன் !

பொய்யையும் உண்மையையும் புரிந்தவனாயினும் பேசாதிருப்பவன் சித்தன் !
//

மேலும் "நான் பித்தனா? இல்லை பைத்தியமா?" மற்றும் "அண்ணா நீங்க நல்லவரா? கொட்டவரா?" போன்ற சில பதிவுகளை படித்தேன்.

குறிப்பாக அந்த பதிவில் "இன்றைய இளைஞர்களுக்கு" என்று தொடங்கும் பகுதியில் உங்கள் ஒவ் ஒரு வரியும் அனைவரும் படிக்க வேண்டிய.ஒன்று.

சித்தர்கள் மீது ஈடுபாடு உள்ள நீங்கள், என் சிறிய பதிவு பக்கங்களோடு உங்கள் தேடுதலை முடித்துக் கொள்ளாமல், என்னை விட நிறைய தெரிந்தவர்களின் இது போல பக்கங்களை http://www.siddharsongs.blogspot.com படித்து நிறைவு பெற வேண்டுகிறேன்.

சிங்கப்பூரில் இருந்து சதுரகிரி சென்று வந்த ஒருவரின் பதிவிலும் நிறைய தகவல்களை முன்பு படித்தேன், தளத்தின் பெயர் நினைவில் இல்லை விரைவில் கண்டு பிடித்து சொல்கிறேன், இதை தொடர்ந்து வரும் அடுத்த பின்னூட்டத்திலும் சில தளங்களின் பெயரை தருகிறேன் படித்து மகிழுங்கள்.

தொடரட்டும் நம் நட்பு.

சிங்கக்குட்டி said...

காத்து இருந்தமைக்கு நன்றி நிகழ்காலத்தில், உங்களுக்கு கொடுத்த வாக்குப்படி, இதோ சில தளங்களின் பெயர்கள் இங்கு.

http://www.maestriinemuritori.go.ro/Cei%2018%20Siddha.htm

http://rahulmurali.tripod.com/id21.html

http://palani.org/bhogar-biography.htm

நீங்கள் கேட்ட அனைத்து தகவல்களும் இதில் இருக்கிறது என்று நம்புகிறேன். இன்னும் தேவை என்றாலும் தயங்காமல் மீண்டும் கேளுங்கள்.

R.Gopi said...

சித்த‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விரிவான‌ ப‌திவு மிக‌ சிற‌ப்பாக‌ எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து...

இதைப்ப‌ற்றி வ‌லையில் எங்கு நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் கிடைக்கும் என்று தெரிய‌ப்ப‌டுத்தினால், நிறைய‌ பேர் ப‌ய‌ன‌டைவ‌ர்...

நேர‌மிருப்பின் என் வ‌லைப்ப‌க்க‌ங்க‌ளையும் வந்து பாருங்க‌ள்...

www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com

நன்றி சிங்கக்குட்டி....

சிங்கக்குட்டி said...

நன்றி கோபி.

மேல் உள்ள பின்னூட்டங்களில் பல வலை தளங்களின் முகவரியை கொடுத்துள்ளேன், படித்து பாருங்கள்.

விரைவில் உங்கள் தளத்தில் உங்களை சந்திக்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் என் நன்றி.

தொடரட்டும் நம் நட்பு கோபி.

venkat said...

nalla pathivu

சிங்கக்குட்டி said...

நன்றி வெங்கட்.

தொடரட்டும் நம் நட்பு.

Sathuragiri Mahalingam said...

Namaskaram

Good Work on siddhars! Thanks for presenting the same in simple language, which even a beginner can understand! Kudos to you. But I have a question to you!

"The eighteen (18) mentioned in the siddhar lineage do not mean the head count as given in table by several people. Did you make any research on that?"

சிங்கக்குட்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்னிலிங்கம் .

என் சித்த‌ர்க‌ள் ப‌ற்றிய‌ முதல் பதிவில் தமிழ்ச் சித்தர்கள் பகுதியையும் படிக்க வேண்டுகிறேன்.

//பிற்காலத்தில் "பல சித்தர்கள் இவர்கள் வழியில் தோன்றினர்" என்றும், "ஒரே சித்தர் பல பெயர்களில் அழைக்கப்பட்டார்" என்றும், "பல சித்தர்கள் ஒரே பெயர்களில் அழைக்கப்பட்டார்" என்றும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன.//

Post a Comment

 

Blogger Widgets