Wednesday, October 28, 2009

நான் ஆத்திகனா! நாத்திகனா!

குறை நிறைகளை மட்டும் தேடும் ஒரு மனிதனின் மனநிலையை சொல்வதை தவிர, இங்கு எந்த மத மற்றும் மத இதிகாசங்களை இழிவு படுத்துவது என் நோக்கமல்ல.

எந்த ஒரு தனிப்பட்ட மதத்தை மட்டும் விரும்பும் மதவாதிகளின் புத்திக்கு புரிந்தாலும், "மதவாத" மனம் ஏற்றுக் கொள்ளாது என்பதால், அவர்கள் இந்த பதிவை தவிர்ப்பதால், நாம் "தேவையற்ற" விவாதத்தை தவிர்க்கலாம்.


பிறந்தவுடன் நீ ஒரு இந்துவகிறாய் என்றார்கள் கீதையை படித்தேன், ஆகா எத்தனை அருமையான அறநெறி கருத்துகள்.ஆனால், பிறப்பின் தவறுக்கு காரணமான அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய எல்லா துன்பமும் அவமானமும், ஏன் கர்ணனுக்கு மட்டும் இறக்கும் வரை துரத்தியது?

இத்தனைக்கும் அவன் நல்லவன் ,கொடைவள்ளல், அவனுக்கு மட்டும் "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தது" என்று ஏன் இங்கு ஒரு சப்பை கட்டு?

அதே போல் எந்த ஒரு "கடனும்" அந்த தாயை கடைசிவரை ராஜ மாதா அந்தஸ்தில் இருந்து இறக்கிவிட வில்லையே? என்றேன்!

ஏனிந்த "பக்(bug)" என்றேன்?

இந்துவாகிய பிறப்பின் காரணத்தால், உன்னை மன்னிக்கிறோம் என்று, என் கேள்வியே எனக்கு பதிலாய் தர பட....

அது கூட சரி, ஆனால் எல்லாம் "நானே" என்றுதானே சொல்லி இருக்கிறது!, பின் ஏன்? நாம் சைவம், வைணவம் என்று பேசுகிறோம்? அப்படி என்றால் ஹரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில் மண்ணு என்பது உண்மை இல்லையா?

மேலும் இதில் மற்ற மத கோவில்கள் அவமதிப்பதை பற்றி இதில் ஒரு வார்த்தை கூட இல்லையே?

பின் ஏன்? வரலாற்றை காரணம் காட்டி, இப்போதுள்ள புனித கோவில்கள் இடிக்கப்படுகின்றன (இது எல்லா மதத்துக்கும் பொதுவான கேள்வி?) என்றேன்.

பகவத்கீதையை மதிக்க தெரியாத நீ... எப்படி இந்துவாக இருக்க முடியும் ஓடிப்போ என்றார்கள்.

எனக்கு வந்தது கோவம், கீதையில் படித்ததை போல பிடி சாபம் என்று,

"எது நடந்ததோ, நடக்கிறதோ, நடக்க போகிறதோ, அது நன்றாகவே நடந்தது, நடக்கிறது, நடக்கும்" என்ற கீதை வாசகத்தை நினைத்து கொண்டு...

கிரிஸ்துவ பள்ளியில் போய் சேர்ந்து விட்டேன், இங்கு படித்த ஏழு ஆண்டுகளில்,

கருனையின் திரு உருவமான இந்த மகானை வணங்கும் போது இருக்கும் நம் பணிவு, கருணை, ஏன்! மற்ற எல்லா இடத்திலும் நமக்கு மறந்து போகிறது என்றேன்?, நீ புதிது நன்றாக படி என்றது பதில்.

சரி என்று, பழைய ஏர்பாடு, புதிய ஏர்பாடு என்று இன்னும் ஆழமாக போக, முத்து முத்தான அன்பு, அமைதி வாழ்கையின் வழிகாட்டி கருத்துகள் அதில்.ஆனால், எதிரிக்கும் கருணை காட்டு, சுகமோ துக்கமோ, பழரசம் அருந்தி கொண்டாடுங்கள் என்றுதானே சொல்லி இருக்கிறது?

அதாவது தனியாக இனிப்பு, புளிப்பு, கசப்பு என்றில்லாமல், பழரசம் அருந்தும் ஒரு சமமான மன நிலையை, உணர்வை போல, வெற்றியும் தோல்வியும் சமமாக பாருங்கள், நண்பனையும் எதிரியையும் சமமாக மதியுங்கள் என்றுதானே இருக்கிறது.

அதற்க்கு எதுக்கு, நாம் நம் நாட்டில் கிடைக்கும் பழரசமெல்லாம் விட்டு விட்டு, வெளிநாட்டு திராச்சை மதுவகையை தேடுகிறோம்? எந்த ஒரு குறிபிட்ட காலாசாரத்தையும் பின் பற்றுங்கள் என்று இதில் எங்கும் சொல்ல வில்லையே?

அனைவரிடமும், கருணை காட்டு என்று சொன்ன எந்த இடத்திலும் இதில், மற்ற மத ஜாதி பாகுபாடுகளை குறை சுட்டி காட்டி, அவனை என்னிடம் கூட்டிக்கொண்டு வா என்றோ, ஒருவனை தாழ்த்தி என்னை உயர்த்து என்றோ, எங்கும் இதில் காணவே இல்லையே! என்றேன்?

பைபிளை மதிக்க தெரியாத நீ... எப்படி கிரிஸ்துவனாக முடியும் என்று வெளியே கை காட்டப்பட்டது,

"யார் உன்னை விட்டு பிரிந்தாலும் நான் உன்னை விட்டு ஒரு போதும் பிரிவதில்லை" என்ற பைபிள் வாசகத்தை நினைத்து கொண்டு, "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற அவரின் சொல்லை சுவற்றில் மட்டும் வைத்திருப்பவர்களை பார்த்து சிரித்து கொண்டே ...

நான் வெழியில் வர, என் வாலிப வயது உள்ளே வந்தது, அது வரை சிறுவர்கள் நட்பாய் இருந்ததால் கவனிக்க தவறியது அப்போது புரிந்தது, என்னை பார்த்தால் முகத்தை மூடிகொண்டாள், இத்தனை வருடமாய் என்னோடு விளையாடிய பக்கத்து வீட்டு சகோதரி. ஏன்? என்று எனக்கு புரியாவிட்டாலும்.

அந்த இனிமையான தொழுகை ராகத்தை கேட்டுகொண்டே சூரியன் அடிவானத்தில் மறைந்து போவதை எப்போதும் போல் அன்றும் பார்க்க மொட்டை மாடிக்கு ஓடிய போது,
இஸ்லாமியத்தை, ஏன் படிக்க மறந்தாய் என்றது அடிமனது.

மாமன் மச்சான் என்று பழகிய, இத்தனை நண்பர்களின் குடியிருப்பு நம்மை சுற்றி இருந்தும், இத்தனை நாள் இது ஏன் தோணாமல் போய்விட்டது என்று?

அரபு புரியாததால் திருமறை குரானில் "லாஇலாஃக "இல்லல்லாஃ முஹம்மதுர் ரசூலுல்லாஃ" என ஆரம்பத்தில் பெரியவர்களிடம் இருந்து கேட்டறிந்தது.

வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை; முஹம்மது (சல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆகும்" என்பதை உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும், "இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன்" திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது என்பதில் தொடங்கி.

மலக்குகள், முன்னைய வேதங்கள் மற்றும் இறைதூதர்கள், இறப்பின் பின் வாழ்க்கை, நம்பிக்கை (கலிமா), பிரார்த்தனை (தொழுகை), நோன்பு (விரதம்), தானம் (சக்காத்து), புனித பயணம் (ஃஅஜ்), மற்ற கடமைகள், இறைவனை நினைவுகூர்தல், சன்னி மற்றும் சியா சுஃபி போன்ற பிரிவுகள், உணவு மற்றும் உடை என்று முஹம்மது நபிக்கு எல்லாம் வல்ல இறைவனால் கொடுக்கப்பட்டதை படிக்கும் போது, எவ்வளவு நல்ல கருத்துக்கள் இந்த 6666 வசனங்களுக்குள், இறைவனை தவிர இதை யாராலும் தர இயலாது என்று புரிந்தது.ஆனால், இத்தனை நல்ல புனித கருத்துக்களில், முகத்தை மறைப்பது போல சில நடைமுறை வழக்கங்கள் கட்டாயமாக்கப்படவில்லையே? அப்படி என்றால் முகத்தை மறைகாதவர் இஸ்லாமியர் இல்லையா?

மேலும் இதன் முதல்வரியே "இல்லல்லாஃ முஹம்மதுர் ரசூலுல்லாஃ" என்பதை உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும், "இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன்" திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது என்று தானே சொல்லி இருக்கிறது.

இதை ஏற்காத மற்றவர்களை பற்றி கவலை பட இதில் எதுவுமே இல்லாத போது, நாம் ஏன்? இதை புரியாத அல்லது ஏற்காதவர்களிடம், நாம் ஏற்றுக்கொண்டது "சரி" என்று வாதிட அல்லது புரியவைக்க முயற்சிக்க வேண்டும்?

மேலும் இதை ஏற்று கொள்வதாய் சொல்லும் ஒருவனோ ஒருத்தியோ, இதை ஏற்காத குடும்பம் என்று தெரிந்தும், அன்பை காதலெனும் விதையாக்கி, இதை ஏற்றால்தான் இணைய முடியும் என்று மற்ற வழிகளை அடைத்து அந்த இருவரின் சந்தோசத்துக்காக, மாறு பட்ட கொள்கையையுடைய இரு குடும்பத்தை ஏன்? துன்பத்துக்கு ஆளாக்க வேண்டும்?

நம்மால் நிகழும் ஒவ்ஒரு துன்பத்துக்கும், எல்லாம் வல்ல இறைவனிடம் தண்டனை உண்டு என்று, இறப்பின் பின் வாழ்க்கை பகுதியில் சொல்லப்பட்டு உள்ளதே?

இது எதோ, கடவுளுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத, நடுவில் ஒருசில மதவாதிகளின் "சிறுபான்மை பெருபான்மை" தலைமுறை பெருக்க அரசியல் போல உள்ளதே? என்றேன்.

திருக்குரானை மதிக்க தெரியாத நீ... எப்படி இஸ்லாமியனாக முடியும் என்று இங்கும் வெளியே கை காட்டப்பட...

"இந்த குர் ஆனைப்போல ஒன்றை கொண்டு வருவதற்காக, அவர்களில் சிலர், சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும் கூட இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது. - (திருக் குர்ஆன்-17:88)" - என்ற குரானின் வாசகத்தை நினைத்து கொண்டு வெளியே வரும் போது...

உலக நாயகன் கமல் போல என்னை நானே கேட்டுக்கொண்டேன்!

வெல்... நான் என்ன கீதையை, பைபிளை, குரானை மதிக்க வேண்டாம் என்றா சொன்னேன், அதில் உண்மையாக இருக்கும் கருத்துக்களை எல்லோரும் மதித்து அதன் படி உண்மையாய் நடந்தால்! நல்லா இருக்கும் என்று தானே சொன்னேன்.

சரி, யார் என்ன சொன்னால் நமகென்ன, நம் மனதை கேட்டு பார்ப்போம், உண்மைல நீ யாரூடா செல்லம்? என்று எனக்குள் நானே குழம்பியபோது.

அட என்னப்பா இது? எப்படி சுருக்கினாலும் ஒரே பதிவில் முடிக்க முடியவில்லை?, அதுனால சின்னதா ஒரு சிங்கப்பூர் ட்ரிப் போயிட்டு வந்து நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.

தேடல் தொடரும்...

24 பின்னூட்டம்:

சிங்கக்குட்டி said...

திரும்ப வரும் வரை, மதத்தின் பெயரால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சுட்டிகாட்ட படும் இந்த பதிவின் நோக்கத்தை, மதத்தை குறை சொல்வதாய் தவறாக புரிந்து கொண்டவர்கள் எல்லாம் ரவுண்டு கட்டி திட்டி முடிங்க.

திரும்ப வந்து தொடருவோம்.

சந்தனமுல்லை said...

:-)

நாளும் நலமே விளையட்டும் said...

என்ன சொல்ல நினைசிங்கனு புரியல. ஆனா எந்த மதமும்(எழுதப்பட்ட) அதை பாதுகாப்பவர்களும் உண்மை அறியாதர்கள் என்பதை காட்டுகிறீர்கள்.

மதங்களை நம்புவதன் மிக மோசமான துன்பம் அவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலை ஆட்ட வேண்டும்.

சிங்கக்குட்டி said...

நன்றி சந்தனமுல்லை.

சிங்கக்குட்டி said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி //நாளும் நலமே விளையட்டும்//

அடுத்த பதிவையும் படியுங்கள் கண்டிப்பாக புரியும்:-)

Mrs.Menagasathia said...

நான் திட்டல உங்களை..

ஈ ரா said...

மீதியையும் பார்த்துபுட்டு சொல்றேன்..

SUREஷ் (பழனியிலிருந்து) said...

விவேகானந்தர் கூட இப்படித்தான் நிறைய கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாராம் பரமஹம்சரைப் பார்க்கும் வரையில்

APSARAVANAN said...

Nanraaga irunthathu..Enakku purinjuchuppaa..

வால்பையன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...

விவேகானந்தர் கூட இப்படித்தான் நிறைய கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாராம் பரமஹம்சரைப் பார்க்கும் வரையில்//

பார்த்தபின் அவருக்கு இருந்த ஷீசோபெரினியா இவருக்கும் ஒட்டி கொண்டதாம்!

தத்துவங்கள் சொல்பவர்களெல்லாம் கடவுள்கள் என்றால், இன்று தத்துவ பேராசிரியர்கள் தான் கடவுள்கள்!?

சிங்ககுட்டி நிரைய படிச்சிருக்கிங்க!, நிறைய கேள்வி கேட்டிருக்கிங்க!

ரொம்ப பெருமையாக இருக்கு, தொடருங்கள்!

தியாவின் பேனா said...

அருமையான ஆரம்பம் தொடரட்டும்

லெமூரியன் said...

நல்ல இருக்குங்க....அத விட நீங்க எடுத்ருக்ற தலைப்புல சும்மா புகுந்து விளையாடலாம்ங்க.....வாங்க நிறைய பேசுவோம்...

கேசவன் .கு said...

/// எந்த ஒரு தனிப்பட்ட மதத்தை மட்டும் விரும்பும் மதவாதிகளின் புத்திக்கு புரிந்தாலும், "மதவாத" மனம் ஏற்றுக் கொள்ளாது என்பதால், அவர்கள் இந்த பதிவை தவிர்ப்பதால், நாம் "தேவையற்ற" விவாதத்தை தவிர்க்கலாம். ////

நம் மக்களுக்கு நல்லதை சொன்னால் தான் பிடிக்காதே உலகம் உருண்டை என்ற கல்லாலேயே அடிச்சி கொன்னவங்க, அண்ணா (அண்ணான்னு கூப்பிடலாமா !!) மத மாற்றம் முக்கியம் இல்ல, மன மாற்றம் தான் ரொம்ப முக்கியம். யாருக்கு அது முழுதா புரிஞ்சதோ அவங்க இந்த மனிதர்களிடம் இருந்து விலகி விடுவார்கள்.

உதாரணத்திற்கு இதோ ஒரு பாடல் :

"ஒன்றென்றிரு ! தெய்வம் உண்டென்றிரு. உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு. பசித்தோர் முகம்பார் ! நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு. நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு ! மனமே உனக்கே உபதேசம் இதே "

என்றார் பட்டினத்தார்.

கொஞ்சம் ஓவரா பேசி விட்டேனோ !!

கேசவன் .கு said...

sorry
spellin mistake

///உருண்டை என்றவரை கல்லாலேயே அடிச்சி கொன்னவங்க///

வால்பையன் said...

//"ஒன்றென்றிரு ! தெய்வம் உண்டென்றிரு. உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு. பசித்தோர் முகம்பார் ! நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு. நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு ! மனமே உனக்கே உபதேசம் இதே "//


பட்டினத்தார் உபதேசத்தை அவர் தான் சொல்லனும்! பணத்துக்கு பேயாய் அலையும் நாம் சொல்லக்கூடாது!

இப்போ பட்டினத்தார் என்ன கடவுள் மடியிலா உட்கார்த்திருக்கார்!, அவரும் மண்ணோடு மண்ணா தானே போனார்!

கிரி said...

சிங்கக்குட்டி என்ன காரணமோ தெரியவில்லை..நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் எதுவும் இதுவரை வரவில்லை. என்ன தவறு என்றும் புரியவில்லை.

உங்கள் மின்னஞ்சலை கொடுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

8:28 AM, October 31, 2009

சிங்கக்குட்டி said...

நன்றி மேனகா.

நன்றி ஈ ரா.

நன்றி சுரேஷ், நீங்க கற்பூரம் போங்க எப்படி பிடிச்சீங்க?

அடுத்த பதிவையும் படிக்க வேண்டுகிறேன்.

நன்றி சரவணன்.

நன்றி வால்பையன்.

//பணத்துக்கு பேயாய் அலையும் //

சரியான சிந்தனை :-)


நன்றி தியா.

நன்றி லெமூரியன், அட்டகாசமான பெயர், உண்மை பெயரா அல்லது புனை பெயரா?

உண்மை பெயராய் இருந்தால், உங்கள் தந்தைக்கு என் வணக்கத்தை சொல்லவும்.

உங்கள் சொந்த புனை பெயராய் இருந்தால் சபாஸ் :-)

நன்றி கேசவன், நீங்க தம்பின்னு கூட கூப்பிடலாம், நான் 32 வயதுதான்.

அருமையான பாடல், நன்றி.

சிங்கக்குட்டி said...

இருக்கட்டும் கிரி.

இரண்டு முறை மின்அஞ்சல் அனுப்பினேன், மேலும் எனக்கும் நேரம் கிடைக்கவில்லை.

நான் பதிவுலகத்திற்கு வர காரணமாய் இருந்த பதிவரை சந்திக்க முடியவில்லை :-(

சனி இரவு போட்கீ என்னும் இடத்தில் Halloween night நடந்ததால் உங்கள் பின்னூட்ட பதிலை இங்கு வந்த வந்தவுடன்தான் பார்த்தேன்.

நான் நினைத்தது என் மின் அஞ்சலில் தற்காலிக தொலைபேசி எண் இருந்ததால், எப்படியும் நீங்கள் அழைப்பீர்கள் என்று நினைத்தேன்.

அடுத்த முறை மீண்டும் சந்திக்க முயற்சிப்போம்.

ரஹ்மான் said...

உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு எனப்போதும் என் நன்றி ரஹ்மான் :-)

கோவி.கண்ணன் said...

மதங்கள் அனைத்தும் நிறுவனமயப்படுத்தப்பட்டு அரசுகள் ஆதரவுடன் இயங்கிவருகின்றன. புனித நூட்கள் ISO சான்றிதழ்போல் மத விற்பனை செய்வதற்கான ஒரு கையேடு மட்டுமே.

சிங்கக்குட்டி said...

உண்மை கோவி.கண்ணன்.

ஆனால், இதை மாற்ற மக்களாகிய நாம்தான் முயற்சிக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஜீவன்பென்னி said...

எனது வலைபூவிற்க்கு வந்து பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றி. இது அமீரகத்தில் இருக்கக்கூடிய ஏழு மாநிலங்கள்ல fujairaல இருக்கு. துபை,ஷார்ஜா,அபுதாபி முழு பாலைவனமா இருக்கும் புஜைரா, அலைன்,அஜ்மான்,ராஸ் அல் கைமா இந்த நாலு ஊரும் கொஞ்சம் பசுமையா இருக்கும்.

சிங்கக்குட்டி said...

நல்ல தகவலுக்கு நன்றி ஜீவன்பென்னி

Post a Comment

 

Blogger Widgets