தேமேன்னு நான் உண்டு, என் படிப்பு உண்டுன்னு, நல்லாத்தான் வாழ்க்கை போய்கிட்டு இருந்துச்சு.
அப்பத்தான் சோக்கா வந்தா, என் சொப்பன சுந்தரி!
கண்கள் சந்திக்க காதல் பற்ற, தமிழே சரியாக தெரியாத நான்கூட கவிதையாய் கொட்டினேன்!
சும்மா சொல்லகூடாது, அந்த பிங்க் ட்ரெஸ்சில் பார்க்க பிகரு சும்மா கும்முன்னு இருப்பா!
இப்படி என் காதல் கண்ணுக்கு அவள் ஒரு தேவதையாகவே தெரிந்தாள்!
அப்புறம் என்ன...! ஆரிய உதடுகள் என்னது, திராவிட உதடுகள் உன்னது, ஆரியம் திராவிடம் ரெண்டும் ஒன்னாய் கலக்கட்டுமே!
இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக "காதல் வளர்த்தேன்...காதல் வளர்த்தேன்...."
அது மட்டுமா, விழியில் விழுந்து உயிரில் கலந்து, என் இதயத்தை திறந்த அந்த அழகு தேவதைக்கு பல காதல் பரிசுகளை கொடுத்தேன்.
(ஒரே செமஸ்டருக்கு பீஸ் கட்ட நான்கு முறை வீட்டில் பணம் வாங்கினேன்.)
ஒவ்வொரு முறையும் என் தேவதை என் காதலை ஏற்றுக்கொள்ளும் போதெல்லாம், பூரிப்பில் மூழ்கினேன்...சந்தோஷத்தில் திளைத்தேன்...!
அவளை பிரிந்து ஒரு நிமிடம் கூட இருக்க முடியாமல், "என் வீட்டில் இரவு அங்கே பகலா இல்லை இரவா" என்று விடிய விடிய மொபைல், லேன்ட் லைன் என்று மாறி மாறி பேசினேன்...!
பதிலுக்கு அவள் பாடினாள்(அவள் பேச்சு கூட என் காதுக்கு சங்கீதமாய் இருந்தது.)
இப்படி ராத்திரி முழுவதும் கண் முழித்து காதலித்த களைப்பில், மறுநாள் பரிச்சையில் கேட்கவா வேண்டும்...!
நம்ம நண்பர்கள் எல்லாம் அவளை பார்த்த போது, சும்மா முகத்துல "ஈ" ஆடல...!
அத பார்த்த எனக்கு முகத்துல பெருமை தாங்கல...!
இப்படியே சந்தோஷத்தில் இருந்த போதுதான் வந்தது "காதலர் தினம்"!
ஐஸ்ல இருந்து எடுத்த ஆப்பிள் மாதிரி "பூவோட" வருவான்னு நினைத்தேன்...!
அவள் அதே மாதிரி தான் வந்தாள்!
ஆனால், பூவை மட்டும் இப்படி கொண்டு போய் இன்னொருவனிடம் கொடுத்து கட்டிக்கொண்டாள்?
என்னது யார் அவனா?
ஐய்!...இஸ்கு பிஸ்கு...அந்த நாய் படத்த மட்டும் என் பிளாக்ல நான் போட மாட்டேனே!.
சரி சரி ஆட்டைய கவனிங்க,
அந்த கொடுமைய பார்த்தவுடன, எனக்கு செம காண்டாகி, ஜிவ்வுன்னு உச்சி மண்டைக்கு ஏறிடுச்சு...!
வந்த கடுப்புல அப்படியே அவள போட்டுதள்ள மனசு துடித்தது...!
ஆனாலும் கோவத்த அடக்கிகிட்டு, அவள பார்த்து போடி கொய்யாலன்னு இப்படி காட்டிட்டு வந்தேன்...!
காட்டிட்டு வந்துட்டேனே தவிர, பிஞ்சு மனசால தாங்க முடியல காதலை மறக்க முடியாமல், சோகம் தங்காமல் கண்ணீராய் கொட்டியது...!
புண்பட்ட மனதை புகை விட்டு மாற்ற நினைத்தேன்!.
வெறும் புகையில் கரையும் காதலா என் காதல்?
துக்கம் தொண்டையை அடைக்க, சோகம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் "எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்!"
இப்படி மப்பும் மந்தமுமாய் நாள் ஓட, அப்பத்தான் எனக்கு காதல்ன்னா என்னன்னு புரிஞ்சது!.
யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் கொடுத்து "அட்டு பிகரை அழகான பிகராக்கி", வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்...அறியாத வயசு புரியாத மனசு...!
நாடகம் விடும் வேளைதான் உச்ச காட்சி நடக்குதம்மா...! அமெரிக்க தொழில் அதிபர்ன்னு போனியேடி...! கடைசில அவன் அங்க கார்பரேட் கம்பெனிக்கு கக்குஸ் கழுவிகிட்டு இருக்கானே...!
ஓ ... இளைஞர்களே படிக்கிற வயசுல பிகரு பின்னாடி சுத்திட்டு, பின்னாடி முன்னாடி நடந்தத "பிளாக்" போட்டு எழுதாம, ஒழுங்கா படிச்சு முன்னேற பாருங்க...! பிகரு தன்னால பின்னால வரும்.
Tuesday, April 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
26 பின்னூட்டம்:
//அத பார்த்த எனக்கு முகத்துல பெருமை தாங்கல...!//
மேல உள்ள கமெட்டுக்கு போட்டோ சூப்பரு.
கலக்கலா இருக்கு.
:-)
//யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் கொடுத்து "அட்டு பிகரை அழகான பிகராக்கி", வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்...//இதனை படிச்சுட்டு நல்லா சிரித்துவிட்டேன்...//இளைஞர்களே படிக்கிற வயசுல பிகரு பின்னாடி சுத்திட்டு, பின்னாடி முன்னாடி நடந்தத "பிளாக்" போட்டு எழுதாம, ஒழுங்கா படிச்சு முன்னேற பாருங்க...! பிகரு தன்னால பின்னால வரும்//உண்மை தான்...போல...
ஒவ்வொரு வரிக்கும் சரியான படங்களை போட சிங்ககுட்டிக்கு எப்படி தான் நேரம் கிடைத்ததோ...அதுவும் பிஸியான அப்பாவாகிய பிறகுமா இப்படி....
ha ha nice one....
Singakutti i need some information from you regarding "Wedding Thamboolam Gift" what kind of "Thamboolam Sets" is good to give? i need to order for 1200 sets & my budjet is arround 10-15 rs only for each sets..
can u suggest good one... and f possible please give me some web link regarding "wedding Thamboolam"
குட்டீஸுக்கு, சொல்வது போல், பெரிய பெட்டீஸ் களுக்கும் வாழை பழத்துல ஊசி ய ஏத்திட்டீங்க;
ரொம்ப அருமை படத்துக்கு கொடுத்த விளக்க்கஙள்,
உங்கள் பட்ஜெட் பதினைத்து ரூபாய் என்று வைத்துக்கொள்வோம், இதற்குள் வருபவர்கள் எப்போதும் பயன்படுத்தும் படி அல்லது நினைவில் இருக்கும் படி எதுவும் செய்து விட முடியாது. அப்படியே ஏதாவது கொடுத்தாலும் வருபவர்களால் எளிதில் வாங்க கூடியதாய்தான் இருக்கும், அதற்காக எதுவும் கொடுக்காமலும் வரவேற்க முடியாது.
மொத்தம் 15*1200=18000 ரூபாய்.
மொத்த சந்தைக்கு சென்று மஞ்சள் எலுமிச்சை ஒரு 1500 வாங்கிவிடுங்கள் (விலை பேசும் போது பலத்தை முகர்ந்து பார்க்க வேண்டாம்).
திருமண தினத்தன்று ஒரு நேரடி குடும்ப உறுப்பினர் (உறவினர் அல்ல) நேரடியாக வாசலில் நின்று வரும் அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்லி வரவேற்று வந்தமைக்கு நன்றி சொல்லி ஒரு எலுமிச்சை கொடுத்து விடவும்.
மொத்த விலையில் 1*1500=1500 16500 ரூபாய், ஆக மிச்சம் 16500 ரூபாய்.
எப்படியும் உங்கள் நகரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் இருக்கும், அதில் படிக்கும் ஐம்பது குழந்தைகளாவது இருக்கும்.அவர்களுக்கு முன் கூட்டியே நேரடியாக சென்று சொல்லி திருமணத்திற்கு அனைவரையும் அழைத்து மொத்தம் நாற்பதா ஐம்பதா மற்றும் எந்த வகுப்பு குழந்தைகள் என்று குறித்து கொள்ளவும்.
ஆக மொத்தம் ஐம்பது சாப்பாடு 10*50=500 ரூபாய் ஆக மிச்சம் 16000 ரூபாய்.
இந்த மீத பணத்திற்கு அவர்கள் கல்விக்கு உதவும் புத்தகம்,நோட் பென்சில்,பேனா என்று வாங்கி, திருமணதிற்கு பிறகு உறவினர் பரிசு புகைப்படம் என்று முடிந்தவுடன், அவர்களை மேடைக்கு அழைத்து சென்று புது தம்பதிகள் கையால் வங்கியதை கொடுக்க சொல்லுங்கள்.
திருமண விருந்தில் மிச்சமானத்தை கொடுப்பதை விட, அவர்களை உறவினராக மதித்து அழைத்து விருந்து கொடுத்து வாழ்க்கைக்கு பயன் படும் பரிசை கொடுக்கும் மகிழ்ச்சியில் அந்த உள்ளங்கள் தரும் வாழ்த்தோடு அந்த தம்பதிகள் புது வாழ்வை தொடங்கட்டும், என் வாழ்த்துக்கள்.
என் மனதில் பட்டது, தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி, ஏதோ நம்ளாளமுடிஞ்சது.
ஆனா, நான் தங்கமணியை கட்டிவிட்டேன் :-), அதனால் தோல்வி இல்லை, காதல்தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
//காதல்தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.//
சரிதான்
நல்லயிருக்கு தலைவா!
படம் பார்த்துக் கதை சொல்லலாம்னு
பார்த்தா, (படக்)கதையை நீங்களே
சொல்லிட்டிங்கள்.
@சிங்கக்குட்டி
சிங்கா நான் உங்கள் விசிறி, உங்கள் ப்லோகின் தினசரி விசிட்டர்...
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.. நானும் இப்படி செய்யலாமா என்று முன்பு யோசித்து உள்ளேன், ஆனான் அவர்களை மண்டபத்துக்கே அழைத்துவந்து உபசரிக்கலாம் என்று நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கு தோன்றியது.. இருந்தாலும் என் குடும்பத்தாரிடம் ஆலோசனை செய்து விட்டு இறுதி முடிவு எடுக்கிறேன். மறுபடியும் தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி...
முன்பு எனக்கும் கல்யாண பத்திரிகை உண்டா என்று கேட்டு மெசேஜ் செய்திர்களே அனால் அதற்கு பதிலில் என்னுடைய தகவல் அனுப்பிய பின்பு எனக்கு நீங்கள் reply பண்ணவே இல்லை....
I guess u remember me..!!
நாம் அனைவரும் நண்பர்கள், என்னை நண்பா என்றே சொல்லுங்கள்.
படிக்கிற வயசிலே லவ்வு லவ்வுன்னு அலையிற
நம்ம பையன்களுக்கு செம குத்து. ஏதோ புத்தி வந்தா சரிதான்.
K. Thanigasalam
நாம் நண்பர்கள், காரணம் நம் எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கிறது, எனவே நண்பா என்றே சொல்லுங்கள்.
குடும்பத்துடன் கலந்து பேசி உங்கள் மனதுக்கு பிடித்த நல்ல முடிவெடுங்கள்.
என்னாங்க இப்படி சொல்லீடிங்க, என் சுயவிபர பக்கத்தில் உள்ள மின் அஞ்சலுக்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் அன்புக்கு மீண்டும் என் நன்றி.
எனக்கு எதோ படங்கள் மட்டும்தான் மாற்றி போடப்பட்டுள்ளதோ என தோன்றுகிறது...மறைக்காமல் சொல்லுங்கள் படங்களை விட்டு பார்த்தல் மிச்சம் முழுக்க உங்கள் சுய அனுபவன் தானே...just kidding ...simply superp thought ..all the best ....
http://allinalljaleela.blogspot.com/2010/05/blog-post_05.html
உங்களுக்கு ஒரு அவார்டு ராஜ கிரீடம் வந்து பெற்று கொள்ளுஙக்ள்.
அனுபவம் என்னவோ உண்மைதான் ஆனால் அவர் இப்போதும் என் காதலிதான் என் மனைவியாக :-)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)
கொன்னுடிங்க சிரித்து, சிரித்து ரசித்த Article ...
"கண்ணீராய் கொட்டியது" இங்கு கொஞ்சம் யோசனை வரவழைத்து, மனதின் உச்சிக்கு போய்டிங்க,
ஒரு அழகான வெட்டி வேலையை அருமையாக சித்தரித்த சிங்கக்குட்டியை ..."சிங்கம்ன சிங்கம்தான்" சொல்ல தோணுகிறது...
"இது உங்க வெட்டிவேலைதானே"
உங்களுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது :-)
//"இது உங்க வெட்டிவேலைதானே"//
ஐய்...அப்படி எல்லாம் விட்டுவோமா நாங்க "கட்டிடோம்ல" (நம்பி வந்தா உயிரை கொடுக்கும் இனம்ங்க நாங்க).
நன்றி!.
Post a Comment