Tuesday, May 4, 2010

பிகரு பிகருதான், அது சூப்பர் பிகருதான்!

ஆசிய நாடுகளில் நான் பார்த்த வரை தென்கொரிய பெண்கள் மிகவும் அழகு என்றே சொல்வேன், ஜப்பானிய சீன பெண்களை போலவேதான் இவர்கள் நிறமும் என்றாலும், அவர்களை விட இவர்கள் முகலட்சணம் மற்றும் நல்ல(சாமுத்திரிகா)உடல்வாகுடையவர்கள். குறிப்பாக இவர்கள் உடை அமைப்பு மிக அற்புதமாக இருக்கும்.

இங்கே படத்தில் இருக்கும் பெண்கள் எதோ ஆயிரத்தில் ஒன்று என்று நினைக்க வேண்டாம், தெருவில் இறங்கி நடந்தால் கிட்டதட்ட அனைவரும் இதே போலத்தான் இருப்பார்கள்.ஆனால், தென்கொரியாவில் குளிர்காலம்தான் அதிகம். மைனஸ் பதினாறு டிகிரி வரை போகும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், அதனால் கண்ணை தவிர மற்ற முழு உடலையும் மறைக்கும் குளிர்கால உடைதான் பெரும்பாலும் பயன் படுத்த வேண்டி இருக்கும்.

வசந்த காலம், கோடை காலம், பருவகாலம் , குளிர்காலம் என்பதில் பருவகாலம் கூட காற்று அதிகமாக இருப்பதால் முழு உடை தேவைப்படும், இந்த காரணத்தாலோ என்னமோ வசந்த காலமும் கோடைகாலமும் வரும் "மே முதல் ஆகஸ்ட்" வரை இந்த நான்கு மாதமும் மக்களுக்கு மிக பிடித்த பருவமாகிறது.

அதிலும் மே மற்றும் ஜூன் "செர்ரி ப்லோஸ்சம்" (Cherry Blossom) சீசன் என்பதால் நகர் முழுவதும் பூக்களால் மூடி இருப்பது போல மிக அருமையாக இருக்கும்.

இந்த காலத்தில் தென்கொரியாவில் கண்ணை கவருவது பூக்கள் மட்டுமல்ல இன்னொரு விசையமும் இருக்கிறது.

குளிர் குறைய குறைய இங்கு பெண்களின் ஆடை கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் குறைந்து கொண்டே வரும், அதுவும் அவர்களின் பளீர் நிறத்துக்கு பொருந்தும் அடர் சிவப்பு, நீளம் என்று பார்கவே கண்ணை கட்டும்.

இந்த பருவத்தில் தங்கமணியை வெளியில் அழைத்து போகும் போதெல்லாம் (இந்த நான்கு மாதமும் முடித்த வரை தனியாகத்தான் போவேன் என்று நான் சொல்லாவிட்டால் உங்களுக்கு தெரியாதா என்ன?)என்னை சாப்பிங் அழைத்து போகும் சாக்கில் நல்லா கண்ணை கழுவிக்கிறாயா நடத்து நடத்து!.

என்று சொல்லிக்கிட்டே வந்தாலும், யப்பா அவள பாருங்க! என்னா பிகரு சும்மா பளபளன்னு இருக்கா! என்று சொல்லி நான் பார்க்க தவறும் பெண்களை காட்ட தவறுவதில்லை.

இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் சென்ற வாரத்தில் நடந்த என் "மெட்ரோ" பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்."மெட்ரோ" போக்குவரத்தை பற்றி சென்ற பதிவில் பார்தோம், இனி இது ரயிலுக்கு உள்ளே நடப்பது.

அது என்னவோ தெரியாது நான் பயணிக்கும் போது மட்டும் உருப்படியாய் ஒரு பெண்ணும் நான் இருக்கும் அந்த பகுதில் கண்ணில் படவே படாது, என்ன கொடுமை சார் இது என்று நினைத்து நினைத்து இப்போதெல்லாம் அதை பற்றி நினைப்பதே கிடையாது.

இந்த முறை பாஸ்போர்ட் விசையமாக இந்திய தூதரகம் வரை செல்ல வேண்டும், இரண்டு ரயில் மாறி ஒருமணி நேரம் முப்பது நிமிட பயணம், சரி, நம்ம ஜாதகப்படி எப்படியும் கண்ணை கழுவ யாரும் வர போவதில்லை என்ற நம்பிக்கையில், வழக்கம் போல என் சோனி எம்.பி-3 யை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டேன்.அன்னிக்குன்னு பாருங்க அந்த கம்பார்ட் மென்ட் முழுவதும் பெண்கள் மட்டும்தான் இருந்தார்கள், பல இருக்கைகளும் காலியாகவே இருந்தது.

ஆகா, தங்கமணி கூட இல்லையே என்று வருத்தப்பட்டாலும் (நம்புங்கப்பா சத்தியமா) சரி விடு இன்னைக்கு நேரம் போவதே தெரியாது கண்ணை கழுவுவோம் என்று சன்கிளாசை (அப்பதான யாரை பார்க்கிறோம் என்று தெரியாது) இறக்கி விட்டுக்கொண்டு என் எம்.பி-3 யை எடுத்து கிளப் பாடல்களை கேட்கும் நோக்கில் ஆன் பண்ணிக் கொண்டு சுற்றி ஒரு லுக் விட்டேன்.

என் அருகில் ஒரு உயரமான பெண் ஆறடி இருக்கும் முழங்காலுக்கு மேல் (ரொம்பவே மேல்) இருக்கும் படி ஒரு சீருடை அணித்து இருந்தார் விமான பணிப்பெண் என்று நினைக்கிறேன் தெளிவான முகம்.

இந்த பக்கம் ஒரு பெண் பாத்ரூமில் இருந்து அப்படியே வந்தது போல ஒரு துண்டை மற்றும் சுற்றியது போல புசு புசு வென்று ஒரு உடை அணிந்து கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்.

அந்த பக்கம் அதை விட, எங்கேமா டிரஸ் என்று கேட்கும் படி, கிட்டதட்ட நான் கடவுள் படத்தில் நயன்தாரா (இந்த இடுகைக்கு இதுதான் இவர் பெயர்) வேடத்தில் வருபவர் அணிதிருப்பதை போலவே சிவப்பும் கருப்பும் கலந்து கொஞ்சம் துணியை மேலும் கீழும் சுற்றி இருந்தார்.

ஆகா, என்ன அழகு என்று ஜொள்ளிக்கொண்டு எம்.பி-3 யை பார்த்தால்! தியான பாடல் பகுதியை தவிர வேறு எதையும் காணவில்லை, தங்கமணிக்கு போனை போட்டு, என் எம்.பி-3 யை யார் எடுத்தது என்று கேட்டேன்?.

ஏப்பா என்ன ஆச்சு! நான்தான் எடுத்தேன்.

என் பாடல்கள் எதையுமே காணோம்? தியான பாடல்கள் மட்டும்தான் இருக்கிறது என்றேன்.

அப்படியா!, நேற்று மதியம் நான்தான் குழந்தைகள் தூக்கியதும் பாட்டு கேட்க எடுத்தேன், "லவ்" பண்ணும் போது கொடுத்த பாட்டு எல்லாம் இருந்ததா, என்னோட எம்.பி-3ல காப்பி பண்ண நினைத்தேன், காப்பி பண்ணும் போது மூவ் பண்ணிவிட்டேன் போல, என்று சொல்ல.

எனக்கு வந்த கோவத்தில்...சரி விடும்மா வந்ததும் திரும்ப எனக்கு காப்பி பண்ணி வைத்து விடு என்று சொன்னேன் (வேற என்ன சொல்ல முடியும்).

ஆகா, தலைவரோட "ஆசை நூறுவகை","வச்சுக்கவா உன்ன மட்டும்" முதல் ஆதவன் "ஹனி ஹனி" வரை அருமையான பாடல் எல்லாம் இப்ப இல்லாம போச்சே என்று நினைத்தேன்.

அது சரி, சுத்தி ஒரே கலர் கலரா இருக்கா என்ன? என்று தங்கமணி திரும்ப கேட்க?

சுதாரித்துக்கொண்டு, அப்படி இல்ல சும்மா பாட்டு கேட்கலாம் என்று இழுத்தேன்...!உன்ன பத்தி எனக்கு தெரியாதா என்ன? வேணும்னா அந்த பொண்ணுகிட்ட போன கொடு, நான் மச்சான் ரொம்ப நல்லவரு வல்லவருன்னு சொல்லி கோர்த்து விடுகிறேன், எனக்கு ஒண்ணுமில்லை, பாவம் யாரு பெத்த பொண்ணோ! அது தலைஎழுத்து அப்படி இருந்தா யாரு காப்பாத்த முடியும்!.

அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ போனை வை, என்று நான் பதில் சொல்ல.

நடத்து மச்சான் நீ நடத்து, வெட்டியா கண்ண கழுவாம ஒழுங்கா தியான பாட்ட கண்ண மூடிகிட்டு கேளு என்று சொல்லி போன் வைக்கப்பட்டது.

என்ன கொடுமை இது? என்று நினைத்துக்கொண்டு ஒரு பாடலை துவக்க அது ராகவேந்திரா படத்தில் இருந்து "அழைக்கிறான் மாதவன்" பாடல்.

இனி வருவது என் கண் பார்த்ததும்,என் காது கேட்டதும் மட்டுமே.

அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்...மணிமுடியும் மயில் இறகும் எதிர்வரவும் துதி புரிந்தேன்...!

ஒரு வழியாக நிலைக்கு வந்து அருகில் இருந்த "விமான பணிப்பெண்" நினைவில் வர எங்கே என்று பார்த்தேன்.

தேடினேன் தேவ தேவா தாமரை பாதமே...வாடினேன் வாசு தேவா வந்தது நேரமே...ஞான வாசல் நாடினேன்...!

இப்படி ஓடிக்கொண்டிருக்க என் அருகில் "ஹலோ" என்று ஒரு குரல் கொஞ்சியது!

காதில் நான் கேட்டது வேணுகானாமிர்தம்...!

திரும்பி பார்த்தல் நயன்தாரா பெண் என் (மிக) அருகில் அமர்ந்து இருந்தார்.

கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்.

ஆர் யு பிரம் பங்களா? என்று அவள் கேட்க, எப்படி இவர்களுக்கு மட்டும் உடம்பில் ஒரு மச்சம் வடு கூட இல்லாமல், ஒரே மாதிரி பொம்மை போல இருக்கிறார்கள் என்று நினைதுக் கொண்டே "நோ இந்தியா என்றேன்.

மாயனே நேயனே மாசில்லாத தூயனே, ஆத்மா நியாயம் அடைந்த பின்...!

உங்களுக்கு கொரியன் தெரியுமா? என்று கேட்க, நான் கொஞ்சம் தெரியும் என்று சொல்லி பேச்சை வளர்க்க விரும்பாமல், தெரியாது என்று சொல்லிவிட்டு (அதிக பட்சம் இப்பெண்களுக்கு இவ்வளவுதான் ஆங்கிலம் தெரியும் என்பது எனக்கு தெரியும்) எங்கடா அந்த விமான பணிப்பெண்ணை காணோம் என்று கண்களால் தேட...!

னும் தேடினேன் தேவ தேவா தாமரை பாதமே...!

பார்த்தல் எனக்கு நேர் எதிர் இருக்கையில் "அமர்ந்து" இருந்தார்.

குருவே சரணம்...குருவேவே சரணம்...குருவேவேவே சரணம்...குருவேவேவேவே சரணம்...!

அப்படியே கீழிருந்து மேலாக ஒரு "லுக்" விட்டேன்...!

ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா...ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா... ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர, குருவேவேவேவே சரணம்...!

அந்த பெண் எதோ புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருக்க, அடுத்த ஸ்டேசன் வந்தது தான் தாமதம், நான் கண்ணை கழுவது பொறுக்காமல் திறந்து விட்ட வெள்ளம் போல திபு...திபுவென்று கூட்டம் வந்து நடுவில் நின்று விட்டார்கள்.

ஞான திரு மேனி காண வர வேண்டுமே...சீத பூ வண்ண பாதம் தொழ வேண்டுமே...பக்தன் வரும் போது பாதை தடை ஆனதே...காட்டு பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே...!

தாயாகி தயை செய்யும் தேவா, தடை நீங்கி அருள் செய்ய வா வா...நான் செய்த பாவம் யார் தீர்க்க கூடும், நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்...!


இப்படியே ஒரு நீண்ட வீணை மீட்டும் இசை வரும் கேப்பில் அடுத்த ஸ்டேசன் வர, நின்று கொண்டிருந்த கூட்டம் இறங்க மீண்டும் அப்பெண் தெளிவாக தெரிந்தாள்.

குருவேவேவே சரணம்...! குருவேவேவே சரணம்...! குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா...!

ஐயோ...என்ன ஆச்சு இவனுக்கு? ஏன் இப்படி ஒரு "மொக்கை"ன்னு தான நினைக்கிறீங்க...!

என்னைக்கோ வரும் கோடை மழை மாதிரி, இருந்து இருந்து எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் அமைந்தது!, அதிலும் இப்படி ஒரு பாட்டை கேட்க எனக்கு எப்படி இருந்திருக்கும்?

"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்."

இது போல மொக்கையாக இல்லாமல், ஒரு அருமையான விசையத்துடன் மீண்டும் சந்திப்போம், நன்றி!.

28 பின்னூட்டம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் said...

///இது போல மொக்கையாக இல்லாமல், ஒரு அருமையான விசையத்துடன் மீண்டும் சந்திப்போம், ///

ஹா ஹா ஹா...!!! சத்தியமா இது மொக்கையே இல்லை!

சிங்கக்குட்டி said...

@???? ????? ?????????உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி "ஈகரை தமிழ் களஞ்சியம்" தொடர்ந்து வாங்க உங்களுக்கு பிடிக்கும் விசையம் கண்டிப்பாக இருக்கும் :-).

Mrs.Menagasathia said...

ஹா ஹா செம ஜொள்ளு விட்டுருக்கிங்கன்னு சொல்லுங்க....அதுசரி உங்க தங்கமணி இந்த இடுகையை படித்தாங்களா சிங்கக்குட்டி????

Chitra said...

தென் கொரியாவில் ஜொள்ளு சுனாமி வந்தது என்று, அதான் நியூஸ்ல சொன்னாங்களா?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

செம ஜொள்ளு

ஹேமா said...

//"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்."//

சிங்கா எவ்ளோ கஸ்டப்பட்டு எழுதியிருக்கீங்க.பொறுமையா வாசிச்சேன்.

LK said...

mudiyala

கிரி said...

//கண்ணை தவிர மற்ற முழு உடலையும் மறைக்கும் குளிர்கால உடைதான் பெரும்பாலும் பயன் படுத்த வேண்டி இருக்கும்//

என்ன கொடுமை சார்!

//வசந்த காலமும் கோடைகாலமும் வரும் "மே முதல் ஆகஸ்ட்" வரை இந்த நான்கு மாதமும் மக்களுக்கு மிக பிடித்த பருவமாகிறது.//

ஹைய்யா சிங்கக்குட்டிக்கு இனி ஜாலியோ ஜிம்கானா தான் :-)

//அதுவும் அவர்களின் பளீர் நிறத்துக்கு பொருந்தும் அடர் சிவப்பு, நீளம் என்று பார்கவே கண்ணை கட்டும்.//

இதுக்கு பேரு தான் கண்ணை கட்டுறதா! ஓஹோ (வடிவேல் ஸ்டைல் ல் படிக்கவும்)

சிங்கக்குட்டி அப்ப குஜால் குட்டியா இருந்து இருக்காரு! ;-)

செல்வராஜ் (R.Selvaraj) said...

இடுகைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. தமிழ்மணம் விருதுகள் குறித்து வந்த மின்னஞ்சலைப் பார்த்தீர்களா?

Jaleela said...

அட பரவாயில்லையே தங்கமணியும் சேர்த்து கோர்த்து விடுராஙகாலா>/
அங்கு கொரிய பெண்கள் இங்கு பிலிப்பைனிகள். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படி தேன்.

Ammu Madhu said...

//கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்.
//
:))

கவிதையா பின்றீங்க சிங்கக்குட்டி:)

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

சிங்கக்குட்டி said...

@Mrs.Menagasathiaஎன்ன இப்படி கேட்டுடீங்க மேனகா!.

எனக்கும் தங்கமணி மிக பிடித்த பொழுதுபோக்கே மாலைவேளை இருவரும் கோர்த்துக்கொண்டு "சைட்" அடிப்பதுதான் :-).

எனக்கு பொருத்தமான பெண்ணை தேடுவதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, அதுமட்டுமல்ல என்னுடைய எல்லா இடுகையும் "புரூப் ரீடர்" தங்கமணி தான், படித்தது சரி பார்த்தபின்தான் பின்தான் வெளிவரும்.

சிங்கக்குட்டி said...

@Chitra(வடிவேலு பாணியில் படிங்க சித்ரா)

ஐய்யய்யோ நியூஸ்ல வேற வதுருச்சா! விட்டா சிங்கக்குட்டியானந்தா-ன்னு மாத்தி நம்மள பாப்புலர் பண்ணிடுவாங்க போல!

சிங்கக்குட்டி said...

@Starjan ( ????????? )என்ன பண்றது ஸ்டார்ஜன் "ஹி ஹி ஹி :-)"

சிங்கக்குட்டி said...

@????நன்றி ஹேமா,
நேரமின்மை காரணமாக முன்பு போல் இணையத்தில் உலவ முடியவில்லை.

சிங்கக்குட்டி said...

@LKசரி சரி விடுங்க எல்.கே :-)

அடுத்த ரவுண்டுல சரி பண்ணிடுவோம்!.

சிங்கக்குட்டி said...

@????ஐயோ கிரி,
சிங்கை மாதிரி நினைக்காதீங்க.

இங்க சான்சே இல்ல, நம்ம ஊரு சினிமா நடிகை இங்க வந்தா கூட ரொம்ப கிராமத்து பொண்ணு மாதிரி தெரிவாங்கன்னா பாத்துகங்க.

ஒரே அஜால் குஜால்தான் :-).

சிங்கக்குட்டி said...

@????????? (R.Selvaraj)நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி செல்வராஜ்.

பதில் அனுப்பி விட்டேன்.

சிங்கக்குட்டி said...

@Jaleelaஅந்த விசையத்தில் தங்கமணி இன்னும் என் காதலிதான், வீட்டிற்குள் வந்தால் தான் என் மனைவி குழந்தைகளுக்கு தாய் எல்லாம்.

ஆஹா, அங்கும் சிங்கை போல பிலிப்பைனி பெண்கள் "குட்டி ட்ரவுசர்" போட்டுகிட்டு சுத்துராங்களா?

சிங்கக்குட்டி said...

@Ammu Madhuஐயோ அம்மு அது சினிமா பாட்டு.

உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க, நான் ஒரு சூப்பர் கவிதை எழுதி தருகிறேன் :-).

சிங்கக்குட்டி said...

@thalaivanகவலைய விடுங்க இனி தலைவன் குழுவுக்கும் அனுப்பிடுவோம் :-).

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ம்ம்ம்ம்ம்ம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

ஸ்ரீராம். said...

பருவகாலம் கூட காற்று அதிகமாக இருப்பதால் முழு உடை தேவைப்படும்"//

அப்புறம் அது என்ன "பருவகாலம்" போங்க...! வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் பார்த்தீர்களா? சேட்டைக்காரனின் திருவிளையாடல்.

சிங்கக்குட்டி said...

@SURE?? (??????????????)வாங்க சுரேஷ், ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கீங்க :-).

சிங்கக்குட்டி said...

@????????.என்ன இப்படி கேட்டுடீங்க ஸ்ரீராம். கோடை காலத்துக்கும் கடும் குளிர் காலத்துக்கும் நடுவில் வரும் ஒரு அற்புதமானது "பருவகாலம்" தென்கொரியாவில் "அக்டோபர் மற்றும் நவம்பர்".

வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி :-)

Corporate Comedies. said...

Enna kodumai singakutti sir, Konjam illa rombave bore adikureenga. Ungala compare pannina naane parava illa atleast kadala pottu or coffee yavathu onna kudichuttu thaan varuven..

சிங்கக்குட்டி said...

@Corporate Comedies.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

திருமணத்திற்கு முன் இது நடந்து இருந்தால், நானும் ஒரு வகையில் முயற்சி செய்து இருப்பேன் :-௦)

உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.

Post a Comment

 

Blogger Widgets