எப்பூடி யார் அழைத்து இருந்தாலும், அது எப்பூடி? என்று கேட்டிருக்க முடியும்!. ஆனால், அழைத்ததே எப்பூடி எனும்போது, அது எப்பூடி, எப்பூடி-கிட்டேயே எப்பூடி என்று எப்பூடி கேட்க முடியும் சொல்லுங்க?
டேய்ய்ய்ய்ய்ய்ய்...அடங்குடா!, உன்னையும் மதிச்சு ஒருத்தர் தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு ஓவர் ஆட்டமா? என்று நீங்கள் நினைப்பது புரிவதால், ஹி ஹி ஹி தொடருகிறேன்.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ட்டி......குட்டி.......சிங்கக்குட்டி....!
(நேற்றுதான் வால்டர் வெற்றிவேல் பார்த்துக் கொண்டு இருந்தேன் அந்த பாதிப்புதான்)
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
என்னப்பா இது விட்டா, சிங்கம் உங்க வீட்டுக்கு வந்துச்சா! இல்ல (ஹேய் நோ நோ மம்மி பாவம் மம்மி பாவம்) உங்கப்பா காட்டுக்கு போனாரான்னு கேட்பீங்க போல?
அந்த கதையை சொல்கிறேன் கேளுங்க..!
எது, சிங்கக்கதையா? ஹேய் என்ன சின்னபுள்ளதனாமா இருக்கு, நான் சொல்ல வந்தது பெயர் கதையை, ஒழுங்கா கேளுங்க.
எனக்கு ஒரு பதினோரு பனிரெண்டு வயசு இருக்கும், அப்ப நான் ஆறாவது படித்துக்கொண்டு இருந்தேன்?
டேய் இப்பவரையும் நீ ஆறாவதுதாண்டா படிச்சிருக்க!.
நோநோநோ...யாரது கூட்டத்துல இருந்து குரல் கொடுக்குறது....! கதைய கேளுங்க.
புலவர் இராமசாமி இராமசாமி-ன்னு ஒரே ஒரு அருமையான தமிழ் ஆசிரியர், ரெட்டை சுழியில் ஒரு சுழி முன் சுழியோடு சாமிக்கு விட்டிருந்த முடி பிடரிவரை தொங்க அழகாக இருந்த என்னை...!(இப்ப இல்லங்க சின்னபுள்ளைல அழகா இருத்தேன், அட எங்கம்மா சத்தியமா அழகாத்தான் இருந்தேன் நம்புங்கையா) எதோ காரணத்தில் அவருக்கு என்னை பிடித்துப்போக, வாடா "சிங்கக்குட்டி" என்றுதான் அழைப்பார்.
அதை தொடந்து என் நண்பர்கள், அவர்கள் குடும்பம் என்று அதே பெயரில் அழைக்க, பின் அதுவே என் நிரந்தர பெயராகிவிட்டது.
ஹும்ம்... அது ஒரு காலம்...ஒன்ஸ் அப்பான டைம் மண்டை மேலே எவ்ளோ முடி!.
இதன் உச்ச கட்டமாக பல வருடம் சென்றும், என் பால்ய நண்பன் ஒருவன் அவன் கல்லூரி நண்பனுக்கு என்னை அறிமுக படுத்தும் போது கூட "மீட் மை பெஸ்ட் பிரன்ட் மிஸ்டர் சிங்கக்குட்டி" என்று பீட்டர் விட, அவன் நண்பர் என்னை பார்த்த பார்வை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
அவ்ளோதாம்பா என் பெயர் கதை. இப்ப திருப்தியா...! சரி போங்க மிச்சத்தையும் படிங்க.
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....
உண்மையை சொல்லப்போனால் அப்போது வலைபதிவுன்னா எனக்கு என்னான்னே தெரியாது (இப்போது மட்டும் தெரியுமாக்கும் என்றெல்லாம் கேட்க கூடாது, ஓகே).
அடுத்த சில வரிகளை மட்டும் உங்களுக்கு பிடித்த நடிகை குரலில் படிக்கவும்.
நான் வன்ததே ஒரு விப்த்துதான், ஏன்னா அப்பே என்கு டமில் எழத கூட டெரியாது, அப்த்தான் நம்ம கிரி சார் சொல்ச்சு, ஒன்னும் கவ்லை படாதே, உன்கு நல்ல எதிர் காலம் இர்க்கு, நீ நல்லா கோவாப்ரேட் பண்ணி துநிஞ்சு வல்பதிவு உலகில் கால்டி எத்து வைன்னு, அதான் இன்க்கு நாம் உங்க முன்னாடி பதிவரா நிக்து.
அத் மட்ம் நட்கலைனா, அமரிக்காவுல நா பட்ச்சுகிட்டு இருந்த டாக்டர் படிப்பை முடிச்சு, நம்ம பழனி சுரேசுக்கு எதிரா "நினைவுகளே" அப்டின்னு கடை போட்டிருக்கும்.
அப்புறம் என்னாங்க, நான் என்ன சினிமா நடிகையா?
அட எல்லோரையும் போலவே, வழக்கம் போல கூகிளில் எதையோ தேடும் போது, நம்ம கிரி எழுதிய பழைய "சிங்கபூர் தை பூசம்" இடுகை கண்ணில் பட, அதை தொடந்து தமிழில் தேட கற்றுக்கொண்டு தேடும் போது என் கனவில் தென்பட்டது நசரேயன் எழுதிய "அமெரிக்காவில் பீர் குடித்த கதை" பட...!
எப்படி இவர்கள் தமிழில் எழுதுகிறார்கள் என்ற ஆர்வத்தில் அப்படியே படிச்சு படிச்சு, தட்டி தடவி எதை எதையோ எழுதியாச்சு.
ஆனாலும், எழுத வந்த சில மாதங்களிலேயே, நம்ம எழுதுனதையும் மதிச்சு படிச்சு "தமிழ் மணம் 2009" விருதை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் இங்கு என் நன்றியை மீண்டும் சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் (எங்க வச்சேன் பாத்தீங்களா டச்சிங்).
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
என்னது...! என் வலைப்பதிவு பிரபலமடைந்து விட்டதா...! சொல்லவேவேவேயில்ல...!
ஹலோ, என்ன வைச்சு காமிடி கீமிடி பண்ணலையே!
அடடே வடை போச்சே?
இது தெரியாம நான் ஒரு ஆறேழு தடவை சரக்கடிக்கும் போது கூட, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படி என் வலைப்பதிவை பிரபலமடையச் செய்யவது என்று யோசித்து இருக்கேனே?
ஆனா! தம்பி, "டீ" இன்னும் வரவில்லை?
நல்லாத்தான் எழுதுறோம் அப்புறம் ஏன் "ஹிட்டு, ஓட்டு" ஒன்னும் தேறமாட்டேங்குது? எப்படித்தான் கண்டு பிடிக்கிறதோ!.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இல்லை, காரணம் வலைப்பதிவு என் பொழுது போக்கு மட்டுமே, அது ஒரு போதும் என் சொந்த வாழ்கையை பாதிப்பதை நான் விரும்பவில்லை.
ஆம், "திருமண உறவுகள் சொந்தமாகவா! பகையாகவா?" என்ற குழப்பத்தை தெளிவு படுத்திக்கொள்ள நினைத்து, மற்றவர்கள் அனுபவத்தை தெரிந்து கொள்ள எழுதினேன்.
விளைவு; அனைவருக்குமே இப்படிதான் என்று புரிந்து கொண்டு, வீட்டுக்கு வீடு பல் பொடி...சீ...வாசப்படி என்று மன சமாதானம் ஆகி விட்டேன்,
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
ஏலே யாரப்பத்து நாக்கு மேல பல்ல போட்டு என்ன வார்த்த கேட்டுபுட்ட?
ஏ பசுபதி, அந்த கிழக்கால இருக்க தென்ன தோப்பையும், இதோ வடக்க கண்ணுக்கு தெரியுற வரை இருக்க நெல்லு காட்டையும், ஆ அப்படியே உள்ர இருக்க ஆயிரம் பவுனு நகையையும், நம்ம "எப்பூடிக்கு" எப்படியோ போகட்டும்னு தானமா கொடுல...!
நீதில...நேர்மைல...இ பெத்த ராயுடு எந்துக்குல "ப்லாக்குல" சம்பாதிக்கணும், நேனு அத்தனையும் "வைட்ல" சம்பாதிக்கும்ல...!
ஹி ஹி ஹி, பொழுது போக்குக்கே ஒன்னும் ஆணி புடுங்க முடியவில்லை, இதுல "சம்பாதிப்பதற்காகவா" என்று கேட்டால் என்னத்தை சொல்வது?
எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
சந்திரமுகி தலைவர் டைலாக்தான் " ஒருத்தனுக்கு எந்திருச்சே நிக்க முடியலையாம், இதுல ஒம்ப்பதெட்டு பொஞ்சாதி கேட்டாதாம்".
ஹுக்ஹும், இருக்க ஒன்னுக்கே முடியலயாம், இதுல இன்னொன்னு!, அதுவும் வேற மொழியில வேற தேவையா?
ஹேய்ய்ய்...! நான் "ப்லாக்க" சொன்னேன்.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
அத வேற ஏங்க நியாபக படுத்துறீங்க? நேத்து கூட சரக்கடிச்சு மனசு ஏங்குச்சு, கோபம், பொறாமைல பொங்குச்சு.
அது ஒன்னுமில்லீங்க, நம்ம "பிரிட்னி ஸ்பியர்ஸ்"- க்கு பின் தொடருபவர்கள் ஐந்து மில்லியனாம்.
ஹும், அந்த பொண்ணுக்கு இருக்கது, நமக்கு இல்லாம போச்சேன்னு! பொறாமை மற்றும் கோபம்.
என்னது எதுவா? ஹலோ நோ பேட் திங்க்கிங்ஸ், நான் "பின் தொடருபவர்களை" சொன்னேன்...! ஓகே.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதன் முதலில் பின்னூட்டத்தில் பாராட்டிய மனிதர் கோ.வி.கண்ணன், நல்ல மனிதர், அவர் பாராட்டியதில் மகிழ்ச்சி.
நம்ம பதிவை படிக்கிற கொடுமை போதாதா? இதுல போன் போட்டு வேற இவனோட பேசனுமான்னு நினைத்தார்களோ என்னவோ? என்னை தொடர்புகொள்ள இது வரை யாரும் என் தொலை பேசி எண்ணை கேட்டதில்லை.
ஆனால், துபாயில் இருந்து என் பதிவை விரும்பும் நண்பர் ஒருவர் திருமண அழைப்பு கொடுத்தார்.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
எம்.ஜி.ஆர் உடல்கட்டு, சிவாஜி கர்ஜனை குரல், ரஜினி ஸ்டைல்+சுருசுருப்பு, கமல் கலர் என்று ஒரு கம்பீரமான சிங்கத்தை, இது வரை படத்தில் பார்த்திருப்பீர்கள்...! டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்...! சினிமாவில் பார்த்திருப்பீர்கள்...! ஏன், ஜூ-வில் பார்த்திருப்பீர்கள்...!
ஆனா, எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா...! பார்த்திருக்கீர்களாளா...! பார்த்திருக்கீர்களாளாளாளாளாளா...!
ஹலோ! உங்களைப் பற்றி கேட்டால், இப்ப எதுக்கு தேவை இல்லாமல் ஏதேதோ பேசுகிறீர்கள்? இதுதானே உங்கள் கேள்வி?
இல்லங்க நானும் பாத்ததில்லை, அதான் யாராவது பார்த்திருந்தால்! எங்கேன்னு கேட்டு, ஓடிப்போய் நானும் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்னு ஒரு ஆசை! ஹி ஹி ஹி!.
நான் யாருன்னு எனக்கே இன்னும் சரியா புரியல? இதுல பதிவுலகத்துக்கு தனியா என்னாத்த சொல்வது?
இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்.
நீண்ட நாட்கள் கழித்து திரும்ப வந்திருப்பதால், யார் இந்த தொடர் பதிவை எழுதிவிட்டார்கள், யார் இன்னும் எழுதவில்லை என்று தெரியாது, அதனால்!
திருச்சி, திண்டுக்கல், மதுரை,பழனி, பெரியகுளம், தேனி, கம்பம், போடி, நத்தம், காரைக்குடி என்று தென் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர்கள் யார் வேண்டுமானாலும் அவர்கள் உள்ளூர் தமிழில் தொடருங்க, நாங்க சந்தோசமா படிக்கிறோம்.
உங்கள் அன்புக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றி!.
Wednesday, August 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
37 பின்னூட்டம்:
நான் யாருன்னு எனக்கே இன்னும் சரியா புரியல? இதுல பதிவுலகத்துக்கு தனியா என்னாத்த சொல்வது?
///////
மிக அருமை.........
கலக்கலாக எழுதி இருக்கின்றிங்க...சிங்ககுட்டி பெயருக்கு இவ்வளவு பெரிய flashbackஆ....
சிங்கக்குட்டி பதிவை படித்து சிரிச்சு மாளலை..நல்லா நகைச்சுவையா சொல்லிருக்கிங்க..சிங்கக்குட்டி ப்ளாஷ்பேக் சூப்பர்ர்..நான் கூட யோசிப்பேன் ஏன் இவர் சிங்கக்குட்டின்னு பெயர் வைத்திருக்கார்ன்னு..
ஹா.., ஹா..., நல்லாயிருக்க தல, நானும் இப்படித்தான் தீடீர்ன்னு எழுதிட்டேன். ரொம்ப நாளா இணையம் பக்கமே வர முடியறது இல்ல, அப்புறம் பார்த்தா இத எழுதிட்டே இருக்காங்க.., ஆனா இந்த மாதிரி பதிவெல்லாம் ஜனரஞ்சக பதிவர்களுக்குத்தான். பெரிய பெரிய பதிவர்கள் நிறையப் பேர் எழுதாம இருக்காங்க. அவர்களையெல்லாம் கூட எழுத வைக்கலாம்
எனக்குக் கொஞ்சம்கூட தெரியாமலேயே தமிலீஷ இண்ட்லில சேர்த்திட்டாங்க. திடீர்னு நம்ம பிளாக்ல இண்டிலய பார்த்து பயந்துட்டேன்
//எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா...! பார்த்திருக்கீர்களாளா...! பார்த்திருக்கீர்களாளாளாளாளாளா...!//
கல்யாணம் ஆகலேன்னு கேள்விப் பட்டிருக்கோம்
//ஆனா, எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா...!
பார்த்திருக்கீர்களாளா...//
இல்லவே இல்லை
சிங்கா ட்டி......குட்டி.......சிங்கக்குட்டி....! கலக்குரிங்க போங்க....
யாத்தி எத்தாதண்டி !!?? ....ஹேய்ய்ய்...! நான் "உங்கள் பதிவை" சொன்னேன். ஹி ஹி
கடைசில உங்க நிஜ பெயர சொல்லவே இல்ல....????!!!
எனக்கு ஒரு பதினோரு பனிரெண்டு வயசு இருக்கும், அப்ப நான் ஆறாவது படித்துக்கொண்டு இருந்தேன்? அந்த வயசுல எல்லாருமே ஆறாவது தான் படிபாங்க ட்டி......குட்டி.......சிங்கக்குட்டி....!
[--"நம்ம பதிவை படிக்கிற கொடுமை போதாதா? இதுல போன் போட்டு வேற இவனோட பேசனுமான்னு நினைத்தார்களோ என்னவோ? என்னை தொடர்புகொள்ள இது வரை யாரும் என் தொலை பேசி எண்ணை கேட்டதில்லை.
ஆனால், துபாயில் இருந்து என் பதிவை விரும்பும் நண்பர் ஒருவர் திருமண அழைப்பு கொடுத்தார்."---]
நான் உங்க கூட பேச ஆவலாக உள்ளேன்.....! என்னுடய தொலைபேசி என் தங்களிடம் உள்ளது .. விருப்பம் இருந்தால் கால் பண்ணுங்க இல்லாட்டி நம்பர் கொடுங்க.....
2 நாள் முன்னாடி மெயில் கூட பண்ணுனேன் ஒரு சின்ன ரிப்ளை கூட இல்ல......
உண்மையில நீ சிங்கம்ல்ல,,,,ஒரே காமடி .... வாழ்த்துக்கள்
எம்.ஜி.ஆர் உடல்கட்டு, சிவாஜி கர்ஜனை குரல், ரஜினி ஸ்டைல்+சுருசுருப்பு, கமல் கலர் என்று ஒரு கம்பீரமான சிங்கத்தை, இது வரை படத்தில் பார்த்திருப்பீர்கள்...! டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்...! சினிமாவில் பார்த்திருப்பீர்கள்...! ஏன், ஜூ-வில் பார்த்திருப்பீர்கள்...!
ஆனா, எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா...! பார்த்திருக்கீர்களாளா...! பார்த்திருக்கீர்களாளாளாளாளாளா...!
ஹலோ! உங்களைப் பற்றி கேட்டால், இப்ப எதுக்கு தேவை இல்லாமல் ஏதேதோ பேசுகிறீர்கள்? இதுதானே உங்கள் கேள்வி?
இல்லங்க நானும் பாத்ததில்லை, அதான் யாராவது பார்த்திருந்தால்! எங்கேன்னு கேட்டு, ஓடிப்போய் நானும் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்னு ஒரு ஆசை! ஹி ஹி ஹி!.
..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சத்தம் போட்டு சிரிச்சேன்..... யம்மா...... நகைச்சுவை புயலில், உருவான பதிவு.
ரசித்து சிரிக்க வைத்த பதிவு..
செம நகைச்சுவையா எழுதி இருக்கீங்க..ரசிச்சுப் படிச்சேன்...ஆமா...நீங்க...துரை சிங்கமா....
சிங்கம் சிங்கம்தான்...பா !
சிரிச்சு முடில.சிங்கமே...சிங்கமே !
அருமையான பதில்கள்.. நல்லா காமெடியா ரசிக்கும்படியா எழுதிருக்கீங்க.. இப்பவும் உங்க பெயரை தெரிஞ்சிக்கமுடியலியே.. உங்க பெயரை எனக்கு மட்டும் சொல்லுங்க.. நா எல்லோர்க்கிட்டயும் டமாரம் அடிச்சி சொல்லுவேனே.. ஹா ஹா ஹா...
//ஹும், அந்த பொண்ணுக்கு இருக்கது, நமக்கு இல்லாம போச்சேன்னு! பொறாமை மற்றும் கோபம். //
இதில ஏதும் டபிள் மீனி இங்க இல்லையே!
அப்புறம் உங்க ஆயிரம் பவுன் நகை கிடைச்சுது, நன்றில :-)
//எப்பூடி யார் அழைத்து இருந்தாலும், அது எப்பூடி? என்று கேட்டிருக்க முடியும்!. ஆனால், அழைத்ததே எப்பூடி எனும்போது, அது எப்பூடி, எப்பூடி-கிட்டேயே எப்பூடி என்று எப்பூடி கேட்க முடியும் சொல்லுங்க?//
ஆரம்பமே கண்ணை கட்டுதே
//அவ்ளோதாம்பா என் பெயர் கதை. இப்ப திருப்தியா...!//
அதெல்லாம் சரி கடைசி வரை உங்க ஒரிஜினல் பேரை சொல்லவே இல்லையே
//அட எல்லோரையும் போலவே, வழக்கம் போல கூகிளில் எதையோ தேடும் போது, நம்ம கிரி எழுதிய பழைய "சிங்கபூர் தை பூசம்" இடுகை கண்ணில் பட//
அப்ப நானும் ரவுடி தான்னு சொல்றீங்க! :-)
என்ன பண்ணுவது இருபது வருட கதையை சில வரிகளில் சொல்ல வேண்டாமா?
இப்ப புரிஞ்சு இருக்கும் இனிமே யோசிக்க மாட்டீங்க சரியா?
உண்மைதான் சுரேஷ், அதனால் தான் எனக்கு தெரிந்த "பெரிய பதிவர்" சுரேஷ் அவர்களை எழுத அழைத்தேன் :-).
//தமிழிஷ் இண்ட்லி //
ஆமாம் சுரேஷ், நீங்கள் சொன்னவுடன் தான் நானும் கவனித்தேன்!, இப்போ நம்ம பழைய இடுகைகளை எல்லாம் திரும்பவும் இண்ட்லில் மீண்டும் இணைக்கனுமா ?
//கல்யாணம் ஆகலேன்னு கேள்விப் பட்டிருக்கோம்//
யாருக்குன்னு சொல்லவேயில்லை?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நீண்ட இடுகைக்கு மனிக்கவும்.
//நான் உங்க கூட பேச ஆவலாக உள்ளேன்.....! என்னுடய தொலைபேசி என் தங்களிடம் உள்ளது .. விருப்பம் இருந்தால் கால் பண்ணுங்க இல்லாட்டி நம்பர் கொடுங்க.....//
என்ன இப்படி சொல்லீடீங்க?
எப்ப வேண்டுமானாலும் பேசலாம்?
ஆனால், மன்னிக்கவும் என்னிடம் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்ததை மறந்து விட்டேன் போலும், மீண்டும் கொடுக்கமுடியுமா?
//2 நாள் முன்னாடி மெயில் கூட பண்ணுனேன் ஒரு சின்ன ரிப்ளை கூட இல்ல......//
மீண்டும் மன்னிக்கவும் ராஜ், ஊரில் இருந்து வந்தது முதல் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை, கணினி பழுதாகி விட்டது மாற்ற வேண்டும், மடி கணினியைதான் பயன் படுத்துகிறேன்.
இந்த பின்னூட்டத்தை பார்த்ததும் உங்கள் மின் அஞ்சலை பார்த்து பதில் அனுப்பி விட்டேன், என் தொலைபேசி எண்ணையும் கொடுத்து இருக்கிறேன், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ராஜ் :-).
படம் புதுசா? கலக்கலா இருக்கு :-)
என்ன கேட்டீங்க "//ஆமா...நீங்க...துரை சிங்கமா....//"?
இப்பதான கதையெல்லாம் சொன்னேன்? திரும்பவும் மொதல்ல இருந்தா?
ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே?
என்னாப்பா இது பெயர் கதை எல்லாம் சொல்லி முடிச்ச பிறகு பெயரை கேட்டால், சரித்திரத்தில் நாம் பொய் சொன்னதாக ஆகி விடாதா?
என்னது டபுள் மீனிங்கா? அடடே, எப்படி சொன்னாலும் கண்டு பிடிச்சுரீங்க ;-) .
இன்னுமா புரியவில்லை நீங்க ரவுடிதான் ரவுடிதான் ரவுடிதான்.
என் ஒரிஜினல் பெயர் தான் உங்களுக்கு தெரியுமே? நான் சிங்கை வந்த போது உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பியது என் ஒரிஜினல் பெயர்தான்.
என்ன ஒன்று உங்களை சந்திக்கத்தான் முடியவில்லை.
ஆனால், ஒரு நாள் நாம் கண்டிப்பாக சந்திப்போம் சிங்கையில்.
நீங்க மதுரையா?
சரி,கவலைய விடுங்க, நாம் பேசும்போது அல்லது சந்திக்கும் போது என் பெயர் உங்களுக்கு கண்டிப்பாக தெரியும் போதுமா.
ஒருவாறாக பெயர் காரணம் தெரிந்து கொண்டோம்:)!
Thank you for inviting me for the thodarpadhivu.
But I have already written in this topic.
http://konjamvettipechu.blogspot.com/2010/07/blog-post_28.html
Post a Comment