Friday, September 10, 2010

பதிவரசியல்!

என்னாங்க நடக்குது இங்க?

ஆனா, ஒன்று மட்டும் உறுதி பிரச்சனயை நோக்கி எறியப்படும் கற்களும், அதற்கு பதிலடி கொடுக்க எறியப்படும் கற்களும், இரண்டுமே பதிவுலகம் என்ற கண்ணாடி வீட்டிற்குள் இருந்துதான் எறியப்படுகிறது என்பதுதான் வேதனை.

நினைவுகள் என்பது நம் மகிழ்ச்சியை பதிந்து வைக்கத்தானே தவிர, நம் தவறுகளை, வருத்தங்களை செதுக்கி வைக்க அல்ல.

தவறுகளை, துக்கத்தை மறப்பதே எப்போதும் நல்லது. எங்காவது கல்யாண நிகழ்ச்சி புகைப்பட ஆல்பம் போல, இது எங்கள் வீட்டு இழவு நிகழ்ச்சி ஆல்பம் என்று பார்க்க முடியுமா?

ஆனால், பதிவுலகில் அடுத்த தலைமுறை பதிவர்கள் அத்தகைய ஆல்ப பதிவுகளை கண்டிப்பாக பார்க்க முடியும்.

(கவனிக்க; தவறுகள் எல்லை மீறும் போது அதை கண்டிக்க, தண்டிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை)

பதிவர்கள் ஒன்று பட வேண்டும் அல்லது குழு வேண்டும் என்பதின் அடிப்படை நோக்கம் என்ன? நாளை பதிவர்கள் ஒரு பெரிய சக்தியாக, சமுதாய வழிகாட்டியாக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தானே?



பதிவுலகிலும் அது உண்மை எனில், நாளை ஒரு அங்கீகாரத்திற்காக அரசாங்கத்தையோ சம்மந்த பட்ட அதிகார குழுவையோ அணுகும் போது, இதுதானே நீங்கள் சொல்லும் பதிவுலகம் என்று, இன்று எழுதப்படும் பதிவரசியல் இடுகைகளும் மோசமான வார்த்தைகளும் உங்கள் முன் போடப்படுமா இல்லையா? சற்று சிந்தித்து பாருங்கள்.

மேலும் இங்கு என்ன நடக்கிறது!.

"ஆதரிக்கும் குழு, எதிர்க்கும் குழு" என்று எல்லா பிரச்னைகளிலும் குழு சேர்க்கும் முயற்சி மட்டுமே நடக்கிறது, அதில் அடிப்படை உண்மை பிரச்சனை அடிபட்டு போய் விடுகிறது, வழக்கம் போல இதற்கு பகடை காயாக இப்போதும் சில பதிவர்கள் சிக்கி விட்டார்கள்.

இதில் நான் எந்த குழுவையும் சாராதவன் என்ற உடன் சந்தர்ப்பவாதியாகி நடுநிலைமையாக காட்டிக்கொள்ள பார்க்கிறாய் என்று சொல்ல வேண்டாம், அதுவல்ல சரியான காரணம்.

இங்கு பிரச்சனை சித்தரிக்கப்படும் (திசை திருப்ப படும்) அடிப்படை முறையே சரியாக இல்லை என்பதால்தான். ஒரு பிரச்சனையை எழுதும் போது கருத்தின் ஆழம் தேவையே தவிர அதில் அடுக்கு மொழியோ கவிதையோ தேவை இல்லை.

இங்கு இரண்டு பதிவர்களுக்கு நடுவில் மனஸ்தாபம், ஒருவருக்கு ஒரு பதிவர் செய்வது சரி என்று படுவது போல மற்றொருவருக்கு இன்னொரு பதிவர் செய்வது சரி என்று படலாம், அதை அவர் ஆதரிக்கலாம், இதில் எந்த தவறும் இல்லை.



ஆனால் நான் இதில் நான் கவனித்தது என்னவென்றால், பிரச்சனை இரண்டு பதிவர்களுக்கு, இரண்டுமே மனிதர்கள்தான், இருவருமே பதிவர்கள்தான் இதில் பாலினம் எங்கிருந்து வருகிறது?

அது ஆண் பெண் பேதமாகி, பெண்ணடிமை ஆணாதிக்கம் என்று ஏன் திசை திருப்பி விடப்படுகிறது?

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, ஒரு ஆணை விட, ஒரு பெண்ணுக்கும் தன்னையும் தன் மானத்தையும் காக்கும் சக்தி அதிகமாகவே இறைவனால் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உடல் அமைப்பில் நம் இனத்தை பெருக்க இருவரும் மாறுபட்டு இருப்பதை தவிர, இருபாலுக்கும் மனித இனம் என்பதுதான் சரியான அடையாளம், பிரச்சனைகளை சந்திக்கும், சமாளிக்கும் திறன் இருவருக்குமே சமமாகத்தான் இருக்கிறது, நல்லவர்கள் கெட்டவர்கள் இரண்டிலும் கலந்துதான் இருக்கிறார்கள்.

அதனால் ஆணாதிக்கம் பெண்ணடிமை என்று பதிவுலகத்திலும் இல்லாத ஒன்றை உருவாக்க தேவை இல்லை, காரணம் யாரும் யாருக்கும் அடிமையும் கிடையாது, அடிமை படுத்தவும் முடியாது.

அன்பை தவிர வேறு எதுவும் யாரையும் அடக்க உதவாது என்பதுதான் உண்மை.

கட்டிய சொந்த மனைவியாக இருந்தாலும், நீ எனக்கு பெண்ணடிமையாக இரு என்றால், நடுவிரலை முகத்துக்கு நேரே காட்டி விட்டு போய் விடும் காலம் இது.

இப்படி இருக்கும் நிலையில் உலகம் மறந்து மாறி போன பெண்ணடிமை, ஆணாதிக்கம் போன்ற போர்வைகளை எடுத்து விடுவோமே!.

மனிதன் நட்பாக பழகி, பின் சேர்ந்து வாழ்ந்து சந்ததிகள் பெருகி, பின் உறவுகள் வந்து, இப்படித்தானே சமயம், மதம், ஜாதி அனைத்தும் வந்திருக்கும், இப்படி அனைத்திற்கும் அடிப்படியாக இருக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்போம், ஆண் பெண் பேதம் வேண்டாம்.

அதில் பதிவர்கள் என்ற வகையில் நமக்கு ஒத்து போகும் கருத்துக்களுடன் சேர்ந்து நடப்போம், அதே நேரத்தில் மற்றவருக்கும் கருத்துரிமை இருக்கிறது என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

ஆண்மை என்பது தன் துணையை தவிர உதவி, நட்பு நாடி வரும் பெண்ணை தன் குடும்ப பெண்கள் போல சகோதரத்துடன் பார்ப்பதில் தான் இருக்கிறது.

பெண்மை என்பது தன் துணையுடன் உடல் ரீதியாகவும் மற்ற அனைத்து மக்களிடமும் உயிரினதிடமும் மனரீதியாக தாய்மை உணர்வுடன் அன்பாக இருப்பதில்தான் முழுமையடைகிறது.


நல்லது கெட்டது இரண்டு பக்கமும் கலந்துதான் இருக்கிறது, தேவையை பொறுத்து அதன் சதவீதம் மாறுபடுகிறது, இதில் இன்னும் ஏன் இந்த ஆண் பெண் பேதம்?.



பிடித்த பதிவர்களை விரும்பி பின் தொடர்வதை போல, ஒருவரின் நடவடிக்கை மற்றும் கருத்து பிடிக்கவில்லை என்றால் விலகி இருப்பதே நல்லது, அதை விட்டுவிட்டு, அவரையோ அவர் பதிவுகளையோ கொச்சை படுத்தி எழுதுவது என்பது அசிங்கம்.

இதில் யார் வரம்பு மீறினாலும் கண்டிக்க தேவை பட்டால் சட்டரீதியாக தண்டிக்க பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறு பாடும் இருக்காது என்று நம்புகிறேன்.

இதை விட்டுவிட்டு பதிவர் குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க நினைப்பது, பதிவர் என்ற முறையில், நம் மீது நாமே சேற்றை பூசிக்கொள்வதற்கு சமம்.

கடைசியாக என் மனதில் பட்டது, மன்னிப்பு கேட்பது எப்படி ஒரு நல்ல மனித தன்மையோ, அதே போல் மன்னிப்பது இறை குணம், ஆகவே காயங்களை வடுவாக்கி காலம் முழுவதும் எடுத்து செல்லாமல், மனித நேயத்தோடு கழுவி துடைத்து விட்டு, புதிய பாதையை நிமிர்ந்து பாருங்கள், பதிவுலகில் நீங்களும் பதிவுலகமும் சாதிக்க எவ்வளவோ நல்ல விசையங்கள் இருக்கிறது.

உங்கள் இடுகையால் மற்றவர் மனம் காயப்படும் என்று உங்கள் மனசாட்சி சொன்னால், வேண்டாம் அந்த இடுகை அழித்து விடுங்கள், அது ஒன்றும் கோழைத்தனம் கிடையாது.

இந்த நல்ல நாளில், மன வருத்தம், ஆதங்கத்தில் இருக்கும் பதிவர்களுக்கு பகையை மறந்து மனதில் நல்ல முடிவை தோன்ற செய்து, தவறு செய்தது யாராக இருப்பினும் அதை உணர்ந்து மற்றவரிடம் சமாதானமாக போக அருள் செய்யுமாறு அந்த திருவண்ணாமலை இறைவனை வேண்டுவதோடு!,

பசியின் கொடுமையை உணர்ந்து, இறை அருள் பெற விரதமிருந்து, ஏழை வரியை கொடுத்த பின் தொழுகை முடித்து பெருநாள் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும், அல்லா உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னைகையை செலுத்த என் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துக்களை சொல்லி!,

இன்று படித்த "வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து" என்ற செய்தி இந்த இடுகைக்கு சரியாக ஒத்து போவதால் அதை உங்களுடன் பகிர்ந்து இந்த இடுகையை முடித்துக்கொள்கிறேன்.

நீதியில் இருந்து பிறழாதீர்!

ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?' என ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் வினவினார்.

அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் இல்லை!, மாறாக மனிதன் தன் சமுதாயத்தார் (பிற மனிதன் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறியாகும் என்றார்கள்.

எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவனாவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்.

நீதி செலுத்துங்கள்! அது உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது.

இன, மத, மொழி வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காகப் போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

நன்றி!. மீண்டும் சந்திப்போம்!.

டிஸ்கி: இந்த இடுகை முழுக்க முழுக்க என் மனதில் பட்ட எண்ணமே தவிர, யாரையும் காயப்படுத்துவதவோ அல்லது எந்த பிரச்சனையையும் கிண்டுவதோ இங்கு என் நோக்கமல்ல.

16 பின்னூட்டம்:

கிரி said...

சிங்கக்குட்டி இந்த மாதிரி விளக்கம் கொடுப்பத்தை விட்டுவிட்டு நீங்க இருக்கிற "கொரியா" பற்றிய தகவல்கள் இருந்தா பதிவிடுங்க.. அட்லீஸ்ட் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்க பதிவிடுவதே மாசத்துல ஒண்ணோ இரண்டோ ... அதுல இந்த மாதிரி போட்டு ஏன் உங்க நேரத்தை வீண் செய்துட்டு இருக்கீங்க. யாரும் யார் கூறியும் திருந்தப்போவதில்லை... இவங்க இப்படியே தான் இருப்பாங்க.

தமிழக அரசியலே இந்த பதிவரசியல் முன்பு தோற்று விடும்...

ஹேமா said...

சிங்கா...என்னமோ புலம்புங்க.யார் காதிலயாவது விழுமான்னு பார்க்கலாம் !

மதார் said...

True sir .

Unknown said...

:-}

velji said...

மிக அவசியமான பதிவு!

Unknown said...

பதிவு காத்திரமாக இருக்கின்றது, ஆனால் இதனைப் பொருத்திப் பார்க்க எத்தனை பேர் தயாராக இருப்பார்களோ தெரியாது!

சிங்கக்குட்டி said...

@கிரிஉண்மைதான் கிரி பொதுவாக நானும் எந்த குழு அல்லது பதிவு அரசியல் பற்றி எதுவும் எழுதுவது இல்லை.

நாம் பின்தொடரும் மற்றும் படிக்கும் பதிவர்கள் என்னும் போது, சற்று மனம் கவலை அடைகிறது.

கொரியா பற்றி நல்ல தகவல்களுடன் விரைவில் வருகிறேன் :-).

சிங்கக்குட்டி said...

@ஹேமாநம் நண்பர்களை பற்றி நாம் கவலை படாவிட்டால் வேறு யார் செய்வார்கள் ஹேமா.

ஏதோ என்னால் முடிந்ததை சொல்லிவிட்டேன் :-).

சிங்கக்குட்டி said...

@மதார்வாங்க மதார்.
உங்கள் புரிதலுக்கு என் மனமார்ந்த நன்றி.

பகை மறந்து நட்பாய் இருந்தால் அதுவே போதும் :-).

சிங்கக்குட்டி said...

@சிநேகிதிநன்றி சிநேகிதி .

எதுவுமே சொல்லவில்லையே!

சிங்கக்குட்டி said...

@veljiநண்பர்களுக்கு பயன் படவேண்டும் என்பதே நோக்கம் :-)

சிங்கக்குட்டி said...

@ஈழவன் வாங்க ஈழவன்,

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று கீதை சொல்கிறது, நீ சிரிக்கும் சமயத்தை விட அழுகும் சமயத்தில் உன்னுடன் இருப்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள் என்று பைபிள் சொல்கிறது.

என் கடமையை நான் செய்து விட்டேன் :-) .

ஸாதிகா said...

நல்ல பகிர்வு.

அன்புடன் மலிக்கா said...

ஆதங்கத்தின் விளைவு இந்த பதிவு

பதிவுலகில் இதெல்லாம் சாதாரணமப்பா அப்படின்னு போகிறவர்கள் போய்கிட்டேயிருப்பாங்க சிங்கம்.

//என் கடமையை நான் செய்து விட்டேன் :-) //
நல்ல உள்ளம்.

சிங்கக்குட்டி said...

@ஸாதிகாநண்பர்களுக்கு பயன்படட்டுமே என்றுதான் ஸாதிகா :-).

சிங்கக்குட்டி said...

@அன்புடன் மலிக்காஉண்மைதான் மலிக்கா.

சரி, இனி வருவதாவது அப்படி இல்லாமல் இருக்கட்டுமே என என்னால் ஆன ஒரு சிறு முயற்சி.

Post a Comment

 

Blogger Widgets