Thursday, November 25, 2010

தென்கொரியா போர் பதட்டம்!

எப்போதும் போலத்தான் அன்று மதியமும் இலையுதிர் கால குளிரில் நடுங்காமல் இருக்க அலுவலக ஹீட்டர் எங்களை சூடேற்றிக்கொண்டு இருக்க, மதிய உணவாக உள்ளே சென்ற கோழியும் சிலபல இலைதழைகளும் எங்கள் கண்களை சொருக வைத்துக்கொண்டு இருந்தாலும், நாங்கள் அலுவலக கணினியை வெறித்துக்கொண்டு இருந்தோம்.

திடீரென்று ஒரு பலத்த சத்தம் கட்டடங்கள் ஆடுவதை போல உணர்வு, எங்கும் ஒரே தீ மற்றும் புகை, மக்கள் பதட்டமாக வட கொரியா குண்டு போடுகிறது ஓடி பதுங்குங்கள் என்று கத்தியபடி பதுங்கு குழியை தேடி இங்கும் அங்கும் ஓடும் ஒரு சில நிமிடங்களில் இன்னும் பல குண்டுகள் வந்து விழுகின்றன.

இந்நிலையில் உள்ளே நுழைந்த தென் கொரிய ராணுவ ஹெலிகாப்டர்கள் பதிலுக்கு தாக்க எங்கும் ஒரே குண்டு மழை...!

எனக்கும் வேறு வழி எதுவும் தெரியவில்லை, உடனே குடையை விரித்துக்கொண்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்...!

என்ன புரியலையா?

அதான் ஒரே குண்டு "மழைன்னு" சொன்னோம்ல :-)...!

சரி, சரி முறைக்க வேண்டாம், வெட்டி பில்டப்பை முடிந்து கொண்டு விசையத்துக்கு வருவோம்.


கடந்த சில நாட்களாகவே இது போல் ஏதாவது நடக்கக்கூடும் என்று எதிர் பார்த்த தென்கொரிய அரசு மிக சரியாக பாதுகாப்பு முறைகளை தயார் நிலையில் வைத்திருந்தது, போர் கால அவசர நடவடிக்கைகள், பொது மக்கள் தற்பாதுகாப்பு முறைகள் போன்றவை எஸ்.எம்.எஸ் மூலம் அவப்போது வந்த வண்ணம் இருந்தது.

உலக நாடுகள் குறிப்பாக ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா மிக உன்னிப்பாக இந்த விசையத்தை நேரடியாக கண்காணிப்பதால் அப்படி எதுவும் நடக்காது என்று இருந்த மதிய வேலை, வடகொரியா தன் சேட்டையை துணிந்து காட்டிவிட்டது.

தென்கொரியாவின் இயாங்பியாங் தீவில் ஐம்பது முறை F-16 பீரங்கி குண்டுகளை வீசி திடீர் தக்குதல் நடத்த, அந்த தீவில் இருந்த தென்கொரியாவின் ராணுவ தரப்பில் இருந்து எம்பது ரவுண்டு துப்பாக்கி சூடு தற்காப்புக்காக நடத்த பட்டது.

அதன் பின் இரு நாடுகளும் முதலில் தாக்குதலை தாங்கள் துவக்கவில்லை என்று அறிவித்து இருக்கிறது.வடகொரியா தென்கொரியா எல்லையை நிலத்திலும் நீரிலும் (DMZ) பிரித்தது முதல் இருநாடுகளுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது, இந்த நிலையில் இந்த தக்குதல் போர் வரும் சூழ்நிலையை கொடுத்திருப்பதால், சீனா, ரஷ்யா, ஜப்பான் நாடுகள் இந்த பதட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாகப் போராடும் என்று அறிவித்து இருக்கிறது.

தென்கொரியா அரசு தரப்பில் இருந்து வடகொரியா தன் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ளா விட்டால் மிக மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்து இருக்கிறது.

எனக்கு புரிந்தவரை, உண்மையில் வடகொரியாவின் இந்த தாக்குதலில் அடிப்படை காரணம் என்பது, இந்த தக்குதல் நடந்த தீவில் இருக்கும் தென்கொரிய ராணுவமும் அமெரிக்கா ராணுவமும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் திட்டதின் படி அமெரிக்கா விமானம்தாங்கி போர்க்கப்பல் இங்கு வந்துள்ளது, இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வடகொரியா செயல் பட்டு இருக்கிறது, காரணம் வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்தது இருக்கிறது.மேலும் கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று, வடகொரிய கடல் எல்லைக்கருகில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டு அந்த கப்பலில் இருந்த 49 வீரர்களும் பலியானார்கள். இது வடகொரியாவின் செயல் என்றும் நீர்மூழ்கி குண்டு மூலம் தன் கப்பலை வடகொரியா மூழ்கடித்ததாக தென்கொரிய விசாரணைக் குழு அறிக்கை கடந்த மே மாதம் வடகொரியாவை குற்றம் சாட்டியது போன்றவைதான் காரணம்.

தக்குதல் நடந்த தீவில் வசிக்கும் மக்களோடு தென்கொரியவின் ராணுவ முகாம் இருக்கிறது, குண்டு வீச்சுக்குப் பின் பொது மக்கள் உடனடியாக ராணுவ பாதுகாப்பு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர், காயம் பட்ட மக்கள் சிகிச்சைக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் தீவில் இருபவர்களுக்கு தேவையான பொருட்கள் தீவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

தென் கொரியாவின் இரண்டு வீரர்கள் இந்த தாக்குதலில் தங்கள் தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்து இருக்கிறார்கள், அவர்களுக்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்த படுகிறது.

தாக்குதலில் பதிப்படைந்த பகுதியில் ராணுவம், தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுக்கள் போர்கால சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.

தென்கொரிய மக்கள் நாம் இதற்கு சரியான பதிலடி கொடுத்து வடகொரியாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று அங்கங்கே வடகொரியாவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள், நேற்று இரவுக்கு மேல் சம்பந்த பட்ட துறைகளை தவிர மற்ற இடங்களில் இயல்பு வாழ்கை பாதிக்காமல் தொடர்கிறது.

இது போராக மாறும் பட்சத்தில் உடனடியாக பாதிக்க படும் ஜப்பான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் இப்படி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை தவிர்த்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என கூறியுள்ளன.

இரு நாடுகளின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள், வடகொரியாவின் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் மற்றும் அரசியல் தலைமை மாற்ற அறிவிப்பு போன்றவற்றால் இப்பிரச்னை இன்னும் தீவிரமடையக் கூடும் என்று கருதுகின்றனர்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே மற்றும் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற எண்ணத்தோடு நானும் கவலைகளை விட்டு விட்டு இதை பற்றி பதிவு எழுத வந்து விட்டேன், இதில் என் அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்க.

போர் தக்குதல் விசையம் பரவியதும், நம்ம போன் ரொம்ப பிசி, இந்தியா, சிங்கபூர், மலேசியா என்று கோபால் பல்பொடி விளப்பரம் மாதிரி எல்லா பக்கமும் இருந்து அழைப்புகள், அம்மா, அப்பா, நண்பர்கள் என்றும், கிரி போன்று பதிவுலக நண்பர்களும் மாறிமாறி நலம் விசாரிக்க உண்மையில் மனம் லேசாகி விட்டது.

இவ்வளவு பேரை சொல்லிவிட்டு முக்கியமான நம்ம ஆளை சொல்லாமல் விடலாமா?

விசையம் தெரிந்து அவசராக அழைத்த தங்கமணி, என்னா மச்சி ஆரமிச்சிடானுகளா? இவிங்க எப்பவுமே இப்படித்தான், அட விடுங்க பாஸ், இதுக்கெலாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?

சரி, சரி, நோட்டு பேனா எல்லாம் ரெடியா இருக்கு, சீக்கிரம் சொல்லுங்க, எங்க எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு, எங்கே எல்லாம் இன்வெர்ஸ்மென்ட் இருக்கு, யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரனும், நீங்க யாருக்காவது தரணுமான்னு, நிறுத்தாம பேசுது என் செல்லம்?

எவ்வளவு கேள்வி? என்ன ஒரு அக்கறைன்னு, நான் அப்டியே ஷாக் ஆகி சொன்னேன்?முடிவே ஆகிடுச்சா? நான் வேணும்னா ஒரு மாப்ளையும் பார்த்து சொல்லவான்னு கேட்டா? அதுக்கும் அசரலையே!

ஐய்யய்யோ...திரும்பவும் மொதல்ல இருந்தாதாதாதா...மீ பாவம்ன்னு சொல்லுது அம்மிணி, ஐய்யோ ஐயோ...இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கு.

நன்றி.

20 பின்னூட்டம்:

எஸ்.கே said...

ஏற்கனவே இயற்கை அபாயங்களால் உலகம் அங்கங்க அழிஞ்சுகிட்டு இருக்கு! இதில இவங்க வேற போர் அது இதுன்னு!

மங்குனி அமைச்சர் said...

சீக்கிரம் சொல்லுங்க, எங்க எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு, எங்கே எல்லாம் இன்வெர்ஸ்மென்ட் இருக்கு, யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரனும்,////

ஹா,ஹா,ஹா,....................

ஸ்வர்ணரேக்கா said...

//மீ பாவம்ன்னு சொல்லுது அம்மிணி //

--- உண்மையிலேயே தங்கமணி பாவம் தான்..

அது சரி... இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் மீடியாக்கள், தினமும் நமது எல்லையில் நிகழும் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லையே...

S.Menaga said...

சிங்கக்குட்டி நலமா இருக்கிங்களா?? இந்த பதிவின் மூலம்தான் தெரியும் போர் நடப்பது...

ஆமா கடைசியில் உங்க தங்கமணியை போட்டு ஒரு தாக்கு தாகிருக்கிங்களே...அவங்க இத படிச்சாங்களா??...

ஹேமா said...

போர்...அலுப்பாயிருக்கு சிங்கா !

Chitra said...

எப்படி இருக்கீங்க? படங்களை பார்க்கும் போதே பயமாக இருக்குதுங்க.

கிரி said...

//தென்கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று, வடகொரிய கடல் எல்லைக்கருகில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டு அந்த கப்பலில் இருந்த 49 வீரர்களும் பலியானார்கள். இது வடகொரியாவின் செயல் என்றும் நீர்மூழ்கி குண்டு மூலம் தன் கப்பலை வடகொரியா மூழ்கடித்ததாக தென்கொரிய விசாரணைக் குழு அறிக்கை கடந்த மே மாதம் வடகொரியாவை குற்றம் சாட்டியது போன்றவைதான் காரணம்.//

அரசியல்ல ஒன்றுமே புரியலை. யாரைத்தான் நம்புவது!

ஆனால் நீங்கள் கூறிய பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை கேட்ட போது உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. இவர்களைப்போல கட்டமைப்பு நம் கனவில் கூட நடக்காது போல.. :-(

RK நண்பன்.. said...

சிங்கா என்ன கொடுமை இது.... வியலக்கிழமை எனக்கு போனேளா கூப்டும்போது ரொம்ப ஜாலியா பேசுநீங்க...... நானும் நியூஸ் பாக்களை அண்ணாச்சி உங்க பதிவு பார்த்த பின்னாடிதான் எனக்கே தெரியும்...

பார்த்து இருங்க அண்ணாச்சி, ஆனா இவ்வளோ பிரச்சினைக்கு ஊடாலையும் இந்த பதிவு.... உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லயா... :-)

anyhow take care Bro, konjam comedya solli irunthalum anga irukkura ungalukku evalo kastamnu feel panna mudiuthu so plz be safe..

call u this sunday...

RK நண்பன்.. said...

@கிரி

""""அரசியல்ல ஒன்றுமே புரியலை. யாரைத்தான் நம்புவத""""""
என்ன கிரி இன்னுமா புரியல?? நம்ப கருணாநீதி அய்யவா நம்புங்க உங்கள காப்பாத்துவார்.... :-)

இல்லாட்டி இருக்கவே இருக்கார் நம்ப அஞ்சா நோஞ்சான் அலகிரி அண்ணன்...
என்ன ஒற்றுமை கிரியை காப்பாற்றிய அலகிரி....

சிங்கக்குட்டி said...

@எஸ்.கேஉண்மைதான் எஸ்.கே. இன்று நிலைமையை வடகொரியா இன்னும் சற்று மோசமாக்கி இருக்கிறது.

நான் சொன்னது போலவே, அமெரிக்க ராணுவம் கூட்டுப் பயிற்சி திட்டத்தோடு உள்ளே வந்தால் நடப்பது மிக மோசமாக இருக்கும் என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்தது இருக்கிறது.

சிங்கக்குட்டி said...

@மங்குனி அமைச்சர்ஹும்ம்ம் என்ன பண்ணுவது மங்குனி அமைச்சரே...!

ஒரு கட்டுகடங்காத மாவீரனின் வீர வாழ்கையில் இதெல்லாம் சகஜம்தானே? ஆனால் வரலாறு முக்கியம் அமைச்சரே.

சிங்கக்குட்டி said...

@ஸ்வர்ணரேக்காவாங்க ஸ்வர்ணரேக்கா.

தங்கமணிய விடுங்க அது காதல் பிரச்னை.

ஆனா இந்த மீடியா மேட்டர் ரொம்ப முக்கியம்.

இங்கே எல்லாம் மீடியாக்கள், அரசாங்க உடமையாக நாட்டுக்கு செயல் படுகிறது, யார் ஆளும் கட்சி என்பது இவர்கள் பிரச்சனையல்ல.

ஆனால் நம் நாட்டில், மீடியாக்கள் கட்சிகளின் கொ.பா.சே மட்டுமே, காரணம் அவர்கள்தானே மீடியாவின் சொந்தகாரர்கள்.

ஆனாலும், சி.ஆர்.பி செய்தியை யார் கேட்கிறீர்கள்? அதில் அவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள், பாவம் நம் மக்களுக்குதான் சீரியல் பார்கவே நேரமில்லை அதுவும் எல்லாமே கட்சிக்கு சொந்தமான சேனல்கள்தான்.

அரசியல்வாதி, ஆளும் கட்சி என்பது வேறு அரசாங்கம் என்பது வேறு, ஆளும் கட்சி அரசாங்கத்தின் ஒரு பகுதி மட்டுமே என்பதை புரிந்து மக்கள் திருந்தும்வரை இது மாறாது.

நன்றி.

சிங்கக்குட்டி said...

@S.Menagaவாங்க மேனகா, நாங்கள் நலம். ஆம் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமடையலாம் என்று தோன்றுகிறது.

ஐய்யய்யோ அது "தாக்கல்" இல்ல சகோ, "நக்கல்" தான், நாங்க எப்பவுமே இப்படிதான்.

புது மடி கணினி மற்றும் இணைய இணைப்பு இருப்பதால் படித்து இருப்பாங்க என்று நினைக்கிறேன்.

நன்றி.

சிங்கக்குட்டி said...

@?ஹேமாஉண்மைதான் ஹேமா, வல்லரசு நாடுகளின் போர் ஆயுதங்கள் காலாவதி ஆகும் முன் இப்படி பின் கதவில் பயன்படுத்தி, முன் கதவில் பதிக்க பட்ட இடங்களை சரி செய்யும் ஒப்பந்தகளை எடுத்து, தங்கள் நாட்டின் பண மதிப்பை உலக சந்தையில் நிலைப்படுத்தி கொள்கின்றன.

நடுவில் பாதிக்க படும் மக்களை பற்றி யார் கவலை படுகிறார்கள்?

இந்த உலகத்தில் பணமில்லாதவன் பிணமாகிவிட்டான்.

சிங்கக்குட்டி said...

@Chitraநலம்தான் சித்ரா, ஓரிரு நாட்கள் சென்றால்தான் நிலைமை முழுதாக புரியும்.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ.

சிங்கக்குட்டி said...

@கிரிமேலே ஹேமாவுக்கு சொன்ன அதேதான் உண்மை நிலை கிரி.

அதே போல், பாதுகாப்பு முறைகள் தென்கொரியாவில் சொல்ல முடியாது அவ்வளவு அருமை.

அதே போல ஸ்வர்ணரேக்கா பின்னூட்டத்துக்கு சொன்ன பதில் போல், நம் அரசியல்வாதிகளின் அடிப்படை கட்டமைப்பு மாறும் போதுதான் நம் நாட்டு கட்டமைப்பு மாற முடியும்.

இல்லை என்றால் தலைவர் சிவாஜியில் சொன்னது போல் பணக்காரன் மட்டுமே மேலும் ப்பணக்காரனாக ஆக முடியும் ஏழை மேலும் ஏழை ஆகவே முடியும்.

இன்று நம் நாட்டில் பணம் என்பது சர்க்கரை வியாதி போல் ஆகி விட்டது, அது இருப்பவனிடம் மட்டுமே கூடுகிறது, இல்லாதவனை நெருங்குவது இல்லை.

Raajneeti என்ற ஹிந்தி படத்தை பாருங்கள், நம் தளபதி போல இருந்தாலும், நம் நாட்டு நிலையை அப்பட்டமாக காட்டும்.

நன்றி!.

சிங்கக்குட்டி said...

@RK நண்பன்RK நண்பன், நடப்பது எல்லாம் நன்மைக்கே என்றாலும், பிரச்சனை வரும் போதுதான் நாம் இன்னும் வேகமாக, சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை சகோ.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

பித்தனின் வாக்கு said...

ஒரு முறை டிஸ்கவரி சேனலில் வடகொரியாவைக் காட்டினார்கள். அவர்கள் அமெரிக்கர்கள் மற்றும் தெங்கொரியாவிடம் எவ்வளவு கோபமாக உள்ளார்கள் என்று அப்போது பார்த்தேன். சரிங்க சார். நல்லா தைரியமா இருங்க. கடவுள் இருக்கார்.

சிங்கக்குட்டி said...

@பித்தனின் வாக்கு

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

புதிய வேலை எப்படி இருக்கிறது?

பயணமும் எண்ணங்களும் said...

தென்கொரியாவுக்கு பொறுமை அதிகம்தான்.. பாவம் மக்கள்..

//சரி, சரி, நோட்டு பேனா எல்லாம் ரெடியா இருக்கு, சீக்கிரம் சொல்லுங்க, எங்க எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு, எங்கே எல்லாம் இன்வெர்ஸ்மென்ட் இருக்கு, யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரனும், நீங்க யாருக்காவது தரணுமான்னு, நிறுத்தாம பேசுது என் செல்லம்?

எவ்வளவு கேள்வி? என்ன ஒரு அக்கறைன்னு, நான் அப்டியே ஷாக் ஆகி சொன்னேன்?முடிவே ஆகிடுச்சா? நான் வேணும்னா ஒரு மாப்ளையும் பார்த்து சொல்லவான்னு கேட்டா? அதுக்கும் அசரலையே! //

விவிசி.:))

Post a Comment

 

Blogger Widgets