வணக்கம் நண்பர்களே,
தென்கொரியாவில் குளிர் காலம் ஆரமித்துவிட்டது, கடந்த வாரம் முதல் நல்ல பனிபொழிவு துவங்கிவிட்டது.
தென்கொரியாவின் பருவநிலைகளை பற்றி சில பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த பதிவு முழுதாக தென்கொரியாவின் தட்பவெட்ப நிலைகளை மட்டும் வைத்து எழுதுவதால், இனி இங்கு வரவிருக்கும் நம் மக்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.
தென்கொரியாவை பொறுத்தவரை, மொழி, உணவு பிரச்சனைக்கு அடுத்த படியாக வருவது இங்குள்ள தட்பவெட்ப நிலைதான்.
ஒரு வருடத்தில் நான்கு வகையான சீதோசன நிலைகள் வருகின்றது, அதை இங்கு பார்ப்போம்.
ஏப்ரல் முதல் ஜூன் வரை (Spring Session), கடும் குளிர் காலம் முடிந்து வருவதால் இது மழையோடு துவங்கும், இதனால் குச்சியாக கிடந்த அத்தனை செடிகளும் மரங்களும் பசுமையாகி விடும்.
இதை மழைகாலம் என்பதை விட பூக்களின் காலம் என்றுதான் சொல்ல வேண்டும், எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக பூக்கள்தான் தெரியும்.
நகரமே அத்தனை அழகாக இருக்கும், சாதாரன உடைகளுடன் ஒரு சுவட்டர் அல்லது லேசான குளிர்தாங்கும் ஜாக்கெட் போதுமானது.
வெட்பநிலை 10 தல் 15 டிகிரி சென்டிகிரேட் போல இருக்கும்.
செர்ரி பிளாசம் வருவதும் இந்த காலத்தில்தான், உலகெங்கும் இருந்து மக்கள் இதைகாண கொரியா, ஜப்பான் வருவது வழக்கம்.
நான் செர்ரி பிளாசம் ஜப்பானில் இருந்த போதுதான் முதன் முதலில் பார்த்தேன். ஆனால் இங்கு வந்தவுடன்தான் என் வீட்டு வாசலிலேயே பார்த்தேன். தென்கொரியாவை பொறுத்தவரை எல்லா இடங்களிலும் பாரம்பரிய பூக்கள் பூக்கும் மரங்கள் இருகின்றன.
இந்த காலத்தில் சீனாவில் இருந்து வரும் தூசி படலம் (Yellow sand dust) அதிகமாக காணப்படும். இது தோலுக்கும் குறிப்பாக கண்களுக்கு பாதிப்புகளை கொடுக்கும், அதனால் எப்போதும் வெளியே சென்று வந்தவுடன், முதலில் கை, கால் முகம் கண்கள் அனைத்தும் சுத்தமாக கழுவவேண்டும். சுத்தமாக கழுவும் முன் குறிப்பாக குழந்தைகளை கொஞ்சவோ முத்தமிடவோ கூடாது.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை (Summer), வெட்பநிலை மாறி கோடை காலம் வரும், மொத்தமாக பார்க்கும் போது வெட்ப நிலை 25 முதல் 28.3 டிகிரி சென்டிகிரேட்தான் என்றாலும், காற்றில் ஈர தன்மை வெகுவாக குறைத்திருக்கும்.
சாதாரண உடையில் இருக்கலாம், ஆனால் என்னதான் சாதாரண உடையில் இருந்தாலும் வேர்வையும் பிசு பிசுப்பு தன்மையும் அதிகமாக இருக்கும், வீட்டில் குளிசாதனம் இல்லாமல் இருக்க முடியாது.
தென்கொரியாவை பொறுத்த வரை வீட்டு பொருட்கள் வாங்குவது முதல் குடும்ப வரவு செலவு அனைத்தும் பெண்கள்தான் என்பதால், வெளியில் எங்கும் அதிகமாக பெண்களை மட்டுமே பார்க்க முடியும்.
இந்த காலத்தில் வெயில் கூட கூட, பெண்கள் ஆடை குறையும், குளியலரையில் இருந்து அப்படியே வந்தது போல அரையும் குறையுமாக வண்ணமயமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அவ்வளவு சின்ன டிடவுசரில் அவர்களை பார்த்தல் ஆண்களுக்கே வெக்கம் வந்துவிடும்.
ஆனா மக்களே "கபர்தார்" (ஜாக்கரதை)!, நம்ம ஊர் மாதிரி நினைத்துக்கொண்டு தவறாக ஏதாவது செய்தால் போலிஸ் வந்து நம் டிடவுசரை கழட்டிவிடும்.
செப்டம்பர் முதல் நவம்பர் வரை (Autumn), அப்படி இப்படின்னு கண்ணை கழுவி கோடை காலத்தை முடித்தால் வருவது அற்புதமான இலையுதிர் காலம், என்னை பொறுத்தவரை, தென்கொரியாவிற்கு வர இதுதான் சரியான சமயம்.
வெட்பநிலை 10 டிகிரிக்கு கீழே இருந்தாலும், மரங்கள் எல்லாம் இலைகள் பழுத்து மஞ்சள் மற்றும் காப்பி நிறத்தில் நகரமே அவ்வளவு அழகாக இருக்கும்.
ஆசியாவில் இதை போல ஜப்பான் மற்றும் சீனாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணமுடியும் என்று நினைக்கிறேன், நகரை சுற்றி பார்க்க இது மிக சிறந்த நேரம்.
இதே சமயத்தில் இங்கு திருவிழாக்கள் வருவதால் விடுமுறை, கேளிக்கை, கொண்டாட்டம் என்று எங்கும் மகிழ்ச்சி மயமாக இருக்கும்.
இலையுதிர் காலம் முடிய போகும் போது ஓரிரு வாரம் காற்று அடிக்கும் பாருங்க, சும்மா நம்ம வீட்டையே நாலு தெரு தள்ளி கொண்டு போய் வைத்துவிடும் அப்படி பகலும் இரவும் பேய் காற்று அடிக்கும்.
சுட்டி பெண்கள் வேண்டும் என்றே (குட்டை)பாவாடையோடு வருவார்கள்.
டிசம்பர் முதல் மார்ச் வரை (Winter), அடித்த காற்றில் எல்லா இலைகளும் உதிர்ந்து நகரமே மொட்டை அடித்தது போல இருக்கும் போது குளிர்காலம் துவங்கும்.
பொதுவாக டிசம்பர் முதல் வாரத்தில் -01 முதல் -03 டிகிரி சென்டிகிரேட் என்று துவங்கும் பனிபொழிவின் அளவு கூடிக்கொண்டே போக போக வெட்ப நிலை எதிர்பார்க்காத அளவு குறைந்து கொண்டே போகும்.
அதிக பட்சமாக -10 முதல் -15 டிகிரி சென்டிகிரேட்வரை போகக்கூடும், முப்பது வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரியில் -20+ டிகிரி சென்டிகிரேட் சென்றது.
குளிர் காலத்தின் துவக்கம் டிசம்பர் முதல் ஜனவரி பாதிவரை லேசான பனிபொழிவாக இருப்பதாலும் கிறிஸ்மஸ், புதுவருடம் என்று விடுமுறைகள் வருவதாலும், நகரமே வண்ண மயமாக அதுவும் இரவு நேரம் மிக ரம்யமாக இருக்கும்.
வானில் பனிமழை தூவ, தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு "லாஸ்ட் கிறிஸ்மஸ், ஜிங்கில் பெல்ஸ்" போன்ற பாடல்கள் ஒலிக்க, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தங்கள் துணையுடன் கொரியா டக்கீலா "சோஜு" சூட்டில் கட்டியணைத்துக்கொண்டு நடக்க, நாடே திருவிழா கோலத்தில் மிதக்கும்.
வார இறுதி இரவு வாழ்கைக்கு மற்றும் தேனிலவு சுற்றுலாவுக்கு இது அற்புதமான காலம்.
அதன் பின், குளிர் கூட கூட, அதிக அளவு குளிர்தாங்கும் ஆடைகள் இல்லாமல் வெளியே போக முடியாது, வீட்டில் ஹீட்டர் மூலம் வெட்ப நிலையை +20+ டிகிரிக்கு மாற்றாமல் இருக்க முடியாது.
குழந்தைகளை இந்த காலத்தில் அதிக பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும், அடிக்கடி அவர்கள் உடல் வெட்ப நிலையை கண்காணிக்க வேண்டும்.ஜனவரி கடைசி முதல் எப்படா ஏப்ரல் வரும் என்று ஏங்குமளவு குளிர் நம்மை படுத்தி எடுத்து விடும்.
இங்கு கட்டிட அமைப்புகள் இங்குள்ள சீதோசன நிலைக்கு சாதகமாக அமைக்கபட்டுள்ளன, வீட்டின் தரைகள் மரத்தால் செய்து அதன் அடியில் ஹீட்டர் இணைப்பு கொடுக்க பட்டு இருக்கும், நாம் நம் வீட்டின் மின்விசிறியின் அளவை கூட்டுவது போல, ஹீட்டர் மூலம் வீட்டின் தட்பவெட்ப நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
குடிநீர் முதல் அனைத்து பயன்பாட்டு நீரும் சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் என்று நமக்கு வேண்டியவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், இவை அனைத்தும் நம் வீட்டின் கேஸ் இணைப்பின் மூலம் செயல்படும். அடுப்பு மற்றும் மின்விளக்கு போன்றவை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தும்.
இங்கு நான் குளிர் காலத்தில் இருந்து பலமுறை எல்லா இடங்களையும் பார்த்து விட்டதால், இந்த முறை புது வருடத்தை வரவேற்க விடுமுறைக்காக நான் இந்தியா செல்கிறேன்.
ஆகவே,நடந்தது நடந்தவையாக இருக்க, இனி நடப்பது நல்லதாக இருக்க, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னகையை செலுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ், புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி!.
Monday, December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
15 பின்னூட்டம்:
ஆகவே,நடந்தது நடந்தவையாக இருக்க, இனி நடப்பது நல்லதாக இருக்க, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னகையை செலுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ், புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.
.......நன்றிங்க. உங்களுக்கும் எங்களது மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தென் கொரியாவை பற்றிய தகவல்களுக்கும் நன்றிங்க.
நீங்கள் சொல்லியிருக்கும் காலநிலை இங்க மாதிரியேதான் இருக்கு.இங்கு பனிப்பொழிவு அதிகமாய் இருக்கு இந்த வருஷம்.வரும் விஷேச தினக்களுக்கான முன்கூட்டிய வாழ்த்துகள் உங்களுக்கு.
புகைப்படங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.
எனக்கு பனிப்பொழிவை பார்க்கவேண்டுமென்று ஆசைதான், ஆனால் இலங்கையில் பனி பொழிவதில்லை :-(
antha green color dress potta ponnu nalla irukku... :-)
valakkam pola kalakkal singa...
kulirukku ul sottar, veli sottar ellam pottukkonga. :-)
அருமையான தகவல்கள், புகைப்படமும் அதற்கான கமண்ட்டுகளும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தென் கொரியா வை பற்றிய பதிவு அருமை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ,
//ஆனா மக்களே "கபர்தார்" (ஜாக்கரதை)!, நம்ம ஊர் மாதிரி நினைத்துக்கொண்டு தவறாக ஏதாவது செய்தால் போலிஸ் வந்து நம் டிடவுசரை கழட்டிவிடும். //ஹ்ஹ ஹா கபர்தார்....என் வலை
http://samaiyalattakaasam.blogspot.com
இப்போது இப்படி போட்டுள்ளேன் முடிந்த போது வந்து கருத்து தெரிவிக்கவும்.
சிங்கக்குட்டி ஒரு வானிலை அறிக்கையே வாசிச்சுட்டீங்க! ஸ்னோ தான் நான் இன்னும் பார்த்தது இல்லை... சாதா குளிருக்கே எனக்கு உடல் உதறும் இதுல பனி பெய்யும் போது வந்தால் ..விளங்குன மாதிரி தான்.
அதே போல பழுத்த இலைகளை கொண்ட மரங்களை பார்க்க வேண்டும் என்பதும் ரொம்ப விருப்பம்.
எப்படி இருக்கீங்க ஜலீலா, கண்டிப்பாக உங்கள் புதிய பதிவுகளை படிக்கிறேன்.
வாழ்த்துக்கு நான்றி.
Post a Comment