Monday, May 9, 2011

"அட்சய திருதியை + புகைப்படம்"

அட்சயத் திருதியை இரண்டு நாட்களாக மாற்றிவிட்டதாக வந்த செய்தியை படித்து சிரித்தாலும், இது காலப்போக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வந்த "சித்திரை தமிழ் புத்தாண்டை" அரசியல் ஆதாயத்துக்காக "தை" முதல் நாள் மாற்றியது போல, வியாபார உள் நோக்கோடு நம் வியாபாரிகளாய் மாற்றிக்கொண்டது என்பதை வரும் தலைமுறைகள் மறந்து தங்கள் சேமிப்பை கரைக்க போகிறார்கள் என்ற வேதனையும் நெருடுகிறது.

யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை? என ஒரு சந்தேகமும் கூடவே வருகிறது?

"அட்சயத் திருதியை" என்று இந்துமதம் சொல்வது என்ன? என்பதை புரிந்து கொள்ள எடுத்த முயற்சியே இந்த பதிவு.

பூரியசஸ் மன்னரின் கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை.

அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் "அட்சய பாத்திரம்" போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை "அட்சய திரிதியை" என்று சொல்லும் வழக்கம் வந்தது.

இந்து மதத்தை பொறுத்தவரை "வளருதல் அல்லது என்றுமே குறையாதது" என்னும் பொருளே "அட்சயம்", பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.

கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான்.

ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது.

அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.

உண்மையில் அன்று சுமங்கலி பூஜைசெய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பதுதான் மிக சிறந்த செயலாகும்.

அன்றைய தினம் தானம் கொடுபவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை.அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை.

இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த "தங்கம் வாங்க வேண்டும்" என்பது.

உண்மையில் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் "கல்"உப்பு போன்றவைதான் (நன்றி தினமலர் ஆன்மீக வினா விடை).

நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் "கல்"உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின்பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விசையம்).

இது போல அட்சயத் திருதியை தினத்தில் லட்சுமிகரமான எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும் வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் அர்த்தம்.

கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது.

அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக(கடவுளாக) தெரிகிறது.

அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து.

ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகும்.

வழக்கம் போல பொதுவாக தெரிந்த விசையத்தை பற்றி என் சொந்த கருத்தை பகிர்வதோடு முடிக்காமல், இன்று நான் "கிளிக்"யத்தில் பிடித்தவை சில உங்கள் பார்வைக்கு (Sony DSC-H50).

(புகைப்படத்தை சொடுக்கி பார்த்தல் இன்னும் அழகாக தெரியும்)

நன்றி.

என்றும் அன்புடன்,

Photobucket

Photobucket

17 பின்னூட்டம்:

கக்கு - மாணிக்கம் said...

அட்சய திருதியை கூத்துக்கள் எல்லாம் இந்த மீடியாக்கள் பண்ணும் அமளியால் மக்களும் அவ்வழி செல்கின்றனர்.ஆன்மிகம் என்ற சொல் எந்த அளவிற்கு வியாபாரத்தில் புழங்குகிறது பாருங்கள்.
அந்த வெள்ளைப்பூவில் அமர்ந்த தேனீ மிக நன்றாக வந்துள்ளது.

Jaleela Kamal said...

நல்ல இருக்கு..

ராமலக்ஷ்மி said...

நல்ல கருத்துக்கள்.

படங்கள் யாவும் அழகு. பகிர்வுக்கு நன்றி!

Chitra said...

படங்கள் கொள்ளை அழகு. அற்புதம்! மலரும் வண்டும் - சூப்பர்!

கிரி said...

சிங்கக்குட்டி கலக்கல் குட்டியா இருக்கீங்களே! பல விஷயம் தெரிந்து இருக்கீங்க.. எனக்கு இதில் ஒன்று கூட தெரியாதது வருத்தம் அளிக்கிறது. நானும் இந்து மதம் பற்றி கொஞ்சமாவது படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.. ஆர்வமே வரமாட்டேங்குது.

தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது ஆனாலும் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை :-) அதனால் தான் இரண்டு நாள் ஆக்கிட்டாங்க போல ;-)

படங்கள் ஓகே. அடுத்த முறை படம் எடுக்கும் போது சப்ஜெக்ட் கட் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி ரொம்ப நேரமா நடந்துட்டே இருக்கீங்களே..கால், கழுத்து வலிக்க வில்லையா ;-)

சிங்கக்குட்டி said...

@கக்கு - மாணிக்கம்உண்மைதான் மாணிக்கம் நம் மக்கள் இருப்பதை வைத்து சந்தோசமாக வாழ நினைப்பதில்லை என்பதுதான் வருத்தம்.

உங்கள் கருத்துக்கு நன்றி, இப்போதுதான் படம் எடுக்க கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

சிங்கக்குட்டி said...

@Jaleela Kamalமிக்க நன்றி ஜலீலா.

ரொம்ப நாட்களாக ஆளேயே காண முடியவில்லை?

சிங்கக்குட்டி said...

@ராமலக்ஷ்மிநன்றி ராமலக்ஷ்மி.

எனக்கு உங்கள் தளத்தில் வரும் படங்கள் மிக பிடிக்கும்.

விரைவில் உங்களை போல இன்னும் நல்ல படங்களை எடுக்க கற்று கொள்ள முயற்சிக்கிறேன்.

சிங்கக்குட்டி said...

@Chitraநல்லது சித்ரா, இப்போதுதான் கற்று கொண்டு இருக்கிறேன் :-).

சிங்கக்குட்டி said...

@கிரிஅடுத்த முறை சந்திக்கும் போது இது பற்றி நிறைய பேசுவோம் கிரி, எல்லா மதங்களும் நல்ல மதங்களே, அதில் இந்து மதம் பழமையான ஒரு அற்புதமான மதம்.

என்ன ஒன்று! மனிதனுக்கு அதில் மதம் பிடித்து விட்டால் யானையை போலவே ரொம்ப சிக்கல்தான் :-).

தங்கம் விற்று அரிசி வாங்க வேண்டிய நிலையை நோக்கி நம் நாடு போய் கொண்டு இருக்கிறது கிரி, அடுத்த உலக போர் உணவுக்காக விவசாய இடங்களை குறிவைத்து இருக்கலாம்.

படம் எடுக்க DSC மூலம் இப்போதுதான் கற்று கொண்டு இருக்கிறேன், விரைவில் DSLR-க்கு மாறி நல்ல படங்களை எடுக்க முயற்சிக்கிறேன்.

நன்றி.

விக்கி உலகம் said...

அண்ணே திரண்ட கருத்துக்கள்.நெறைய விஷயங்கள் தெரிஞ்சி கிட்டேன் நன்றி!

RK நண்பன்.. said...

சிங்கா எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சி தல,

அனைத்து புகைப்படங்களும் அருமை...

சீக்கிரம் டி‌எஸ்‌எல்‌ஆர் வாங்கி கலக்குங்க..

RK நண்பன்.. said...

மற்றபடி இத்தனை விளக்கங்களுடன் கலக்குறீங்க தல. கிரி சொன்ன போல இதை பற்றிய அடிப்படியே எனக்கு தெரியாது...

உங்கள பார்த்தா போராமையா இருக்கு தல... :-)

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

சிங்கக்குட்டி said...

@RK நண்பன்..நலம் நண்பா நீங்கள் எப்படி?.

சிங்கக்குட்டி said...

@RK நண்பன்..நானும் இப்போதுதான் கற்றுக்கொண்டு இருக்கிறேன் நண்பா, முயன்றால் முடியாதது எதுவும் உண்டா என்ன?

சிங்கக்குட்டி said...

@இராஜராஜேஸ்வரிஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி :-).

Post a Comment

 

Blogger Widgets