Wednesday, August 10, 2011

வணக்கம் சிங்கப்பூர்!

வணக்கம் நண்பர்களே, தென்கொரிய புயல் கரையை கடந்து விட்டது.

வாழ்கை என்பதே ஒரு பயணம், அதில் நமக்கு சொந்தமானது என்பது எதுவுமே இல்லை என்பதை உறுதியாக நம்புகிறவன் நான்.

ஆனால், வாழும்வரை நம்மை சுற்றி இருக்கிற விசையங்கள் மற்றும் நடக்கும் நிகழ்சிகளை பொறுத்தே நம் வாழ்கை முறையும் இருக்கும் என்பதையும் நான் மறப்பதில்லை.

அதனால்தான் என்னவோ, நான் வசிக்கும் ஊர் மற்றும் இருக்கும் இடத்தை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருப்பேன்.

தென்கொரியாவில் முழுதாக நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டாலும், தென்கொரியா என்னவோ எனக்கு சலிப்பே தட்டவில்லை, அவ்வளவு நிம்மதியான மற்றும் அழகான வாழ்கை முறை அங்கு.

இருந்தாலும், ஒரு தனிமனிதன் குடும்ப சக்கரத்தில் நுழைந்தவுடன், சில சொந்த விருப்பு வெறுப்புகளை கட்டாயமாக மாற்றி கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.

இதில் தப்பி விட நான் ஒன்றும் அவதாரம் இல்லை என்பதால், சில தனிப்பட்ட காரணத்தை கருத்தில் கொண்டு தென்கொரியாவை விட்டு வரவேண்டிய நிர்பந்தம் உண்டாகி விட்டது.

இந்த முறை இந்தியா அல்லது இந்தியாவிற்கு அருகில் இருக்கும் நம் தமிழ் கலாச்சாரத்தை கொண்ட இடத்திற்குத்தான் போக வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடும் இதில் சேர்ந்து கொண்டது, காரணம் தென்கொரியாவை விட்டு வரும் நோக்கமே குழந்தைகளின் ஆரம்ப கல்விக்காகத்தான்.

வெறும் ஆங்கில வழி அல்லது கொரிய மொழி கல்வி என்பதில் எனக்கும் சரி, என் குடும்பத்தினருக்கும் சரி விருப்பமில்லை,. தாய் மொழி இல்லாத வாழ்கை என்ன ஒரு வாழ்கை என்பதே அதன் உண்மையான காரணம்.

அதன் காரணமாகவே இந்த முறை மிக கவனமாக நான் தேர்ந்து எடுத்தது "சிங்கப்பூர்".



சிங்கப்பூரை பொறுத்த வரை எல்லாம் பார்த்து பழகிய இடங்கள்தான், அதே போல மாற்றம் என்பது சிங்கையில் புதிது இல்லை என்றாலும், நான் பார்த்த சிங்கை இப்போது ரொம்பவே மாறி இருக்கிறது, மக்கள் தொகையும் அதிகமாக தெரிகிறது.

மொத்த சிங்கப்பூரையும் கையடக்க ஆப்பில் தொலைபேசியில் அடக்கி வைத்து இருக்கிறார்கள், போகும் இடம், வழி முதல் அடுத்த பேருந்து வரும் நேரம், அருகில் இருக்கும் இடம், வாடகை வீடு, அங்காடி, மருத்துவமனை என்று அனைத்தையும் தொலைபேசியே சொல்லி விடுகிறது.

மாற்றம் பல இருந்தாலும் எப்போதும் போலவே பொலிவு குறையாத "புது பெண்" போல சிங்கை வழக்கத்தை விட அதிகமாகவே என் மனதை கவர்கிறது,

முதல் நாள் சாலை ஓர உணவு விடுதியில் இரவு உணவுக்காக சென்ற நான், என் தேவையை கேட்டு உதவி செய்ய வந்த பெண்ணிடம் பேசிய போதுதான், கேட்டு பழகிய உள்ளூர் தமிழ் வார்த்தைகள் என்றாலும், கடந்த நான்கு ஆண்டு கொரிய வாழ்கையில் சுத்தமாக அதை நான் மறந்து விட்டேன் என்று புரிந்தது.

கோழி சோறுடன் டைகர் பீர் (புலிப்பால்) கேட்க நினைத்து, ஆன்டி டைகர் பீர் கேன் (beer can) என்று சொல்ல, சற்றும் தன் புன்னகை மாறாமல் "கேன் கேன் லா" (can can la), "போத்தில் ஆர் டின்"(Bottle or Tin) என்று பதில் கேள்வி கேட்க, "பீர் டின்" என்று சொல்லவேண்டும் என்பதை நினைத்து இருவருமே சிரித்து விட்டோம்.

இனி தென்கொரியாவை போல என்னை சுற்றி இருக்கும் நகரத்தை பற்றி எழுதுவது என்பது சற்று சிரமம் என்பதை நான் நன்கு அறிவேன், காரணம் என்னை விட மூத்த பதிவர்கள் இங்கு அதிகம் மற்றும் அவர்கள் எழுதாத புதிய இடம் எதுவும் இங்கு என் கண்ணில் பட்டு விடப்போவதில்லை.

ஆகவே, வழக்கம் போல என்னை சுற்றி நடக்கும் விசையங்களை சார்ந்த நல்ல பதிவுகளுடன் உங்களை இனி அடிக்கடி இணையத்தில் சந்திக்க முயற்சிக்கிறேன்.

மொத்தத்தில் சிங்கையின் நாற்பத்தி ஆறாவது பிறந்தநாளை கொண்டாடும் சிங்கை மக்கள் மற்றும் தமிழ் பதிவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

ஆம், வாழ்கை பயணத்தில் அடுத்தது என்ன என்று தெரியும்வரை...!

இனி நான் சிங்கைவாசி...! மறுபடியும் மறந்து விட்டேன் பாருங்கள், மன்னிக்கவும், இனி நான் சிங்கைவாசி "லா" :-).

நன்றி மீண்டும் சந்திப்போம்.

33 பின்னூட்டம்:

சத்ரியன் said...

//பொலிவு குறையாத "புது பெண்" போல சிங்கை//

ஐஸ்!

//இனி நான் சிங்கைவாசி "லா" :-). //

ஓகே. வாங்க ’லா’.

வருக வருக வணக்கம் ”சிங்கக்குட்டி”.

சிங்கக்குட்டிய பாக்கனும்னா- ”மண்டாய் (MANDAI ZOO) மிருக காட்சி சாலை”க்கு தான் வரனுமுங்களா?

சிங்கக்குட்டி said...

@சத்ரியன்வரவேற்புக்கு மிக்க நன்றி சத்ரியன்.

ஐஸ் என்று எதுவும் இல்லை, உண்மையில் எனக்கு பிடித்த இடங்களில் முக்கியமானது சிங்கப்பூர் :-).

ஒரு மின் அஞ்சல் அனுப்புங்க, நீங்க சொல்லும் இடத்துக்கே சிங்கக்குட்டி வந்து விடும் :-).

விரைவில் சந்திப்போம்.

Chitra said...

Welcome!!!!! Good to see you back in the blog world!

Best wishes!!! Enjoy Singapore!!!

Menaga Sathia said...

இப்போ சிங்கையிலா இருக்கீங்க,எஞ்சாய்"லா"...

ஆமினா said...

//இனி நான் சிங்கைவாசி...! மறுபடியும் மறந்து விட்டேன் பாருங்கள், மன்னிக்கவும், இனி நான் சிங்கைவாசி "லா" :-).
//

அடடா...

வாழ்த்துக்கள் :)

ILA (a) இளா said...

அப்படிங்களாலா... கலக்குங்க. இனிமே தைரியமா சிங்கம் படம் போட்டுக்கலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

சத்ரியன் said...

@சிங்கக்குட்டி

தொடர்புக்கு,
ramheartkannan@gmail.com

9623 5852

Vijayashankar said...

Best Wishes!

How easy it is to get a job in Singapore? Could you please post a blog that could help Senior IT professionals?

கிரி said...

சிங்கக்குட்டி பெரிய சிங்கத்தை (என்னைச் சொல்லல :-D) பார்க்க சிங்கப்பூர் க்கு வந்தாச்சு! :-)

Jaleela Kamal said...

அப்ப சிங்கக்குட்டி, சிங்கப்பூரில் தஞ்சமா ...லா.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ என்ன ஒரு அடக்கத்தோடு எழுதி இருக்கீங்க..:) உங்களைச்சுத்தி நடக்கும் விசயங்களை உங்கள் பார்வையில் தொடர்ந்து எழுதுங்க..

இராஜராஜேஸ்வரி said...

வருகைக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

சிங்கக்குட்டி said...

@Chitra நல்லது சித்ரா, இனி அடிக்கடி இணையத்தில் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்.

சிங்கக்குட்டி said...

@S.Menagaஹாய் மேனகா எப்படி இருக்கீங்க? கீதா எப்படி இருக்காங்க?

ஆம், இப்போதுதான் சிங்கை வந்து அனைத்தும் சகஜ நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது, இனி வழக்கம் போல இணையத்தில் உலவ முடியும் :-).

சிங்கக்குட்டி said...

@ஆமினாநன்றி "ஆமினா" ... வாவ் அருமையான பெயர் இந்த பெயரின் அர்த்தம் என்னவென்று சொல்ல முடியுமா?

சிங்கக்குட்டி said...

@ILA(@)இளாநன்றி இளா.

அட ஆமா, இதை மறந்து விட்டேன் பாருங்கள் :-) எப்படியோ என் பெயருக்கும் ஊருக்கும் ஒரு தொடர்பு வந்து விட்டது.

சிங்கக்குட்டி said...

@சத்ரியன்உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி சத்ரியன், நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக சந்திப்போம்.

சிங்கக்குட்டி said...

@Vijayashankarநன்றி விஜயஷங்கர்.

வேலை கிடைப்பது பற்றி எனக்கு தெரிந்ததை ஒரு பதிவாக தர முயற்சிக்கிறேன் விரைவில்.

எனக்கு ஒரு மின்அஞ்சல் உங்கள் வேலை விபரங்களை பற்றி அனுப்புங்கள்.

சிங்கக்குட்டி said...

@கிரிகிரி யார் அந்த பெரிய சிங்கம், எதுவும் உள்குத்து இருக்கா?

உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி கிரி.

சிங்கக்குட்டி said...

@Jaleela Kamalஆமாம் ஜலீலா, சிங்கம் சிங்கை வந்து விட்டது.

உங்கள் நோம்பு எப்படி போகிறது, எங்களுக்கும் சேர்த்து "துவா" செய்யவும் :-).

சிங்கக்குட்டி said...

@முத்துலெட்சுமி/muthuletchumiநன்றி முத்துலெட்சுமி எழுதிடுவோம்.

//என்ன ஒரு அடக்கத்தோடு எழுதி இருக்கீங்க//

ஏதாவது உள்குத்து இருக்கா?

சிங்கக்குட்டி said...

@இராஜராஜேஸ்வரிவாழ்த்துக்கு மிக்க நன்றி ராஜி, எப்படி இருக்கீங்க?

RK நண்பன்.. said...

welcome back singa... enna romba naala aalaye kaanomenu parthen....

nalla enjoy pannunga...

mudinja mail pannunga..

RK நண்பன்.. said...

@கிரி

நீங்க புலினு நெனச்சேன்.. (பாயும் புலி)

:-)

cheena (சீனா) said...

அன்பின் சிங்கக்குட்டி - சிங்கை வாசியானதற்கு வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

//cheena (சீனா) said...
அன்பின் சிங்கக்குட்டி - சிங்கை வாசியானதற்கு வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
repeatu

Muthuvel Sivaraman said...

Mr Singakuti when is ur next post?

TamilTechToday said...

Hi i am JBD From JBD

Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

சிங்கக்குட்டி said...

@RK நண்பன்..என்ன நண்பா எப்படி இருக்கீங்க?

நம்ம கிரியும் நானும் இப்போ ஒரு ஏரியா தெரியுமா :-).

சிங்கக்குட்டி said...

@cheena (சீனா)மிக்க நன்றி சீனா, நீங்களும் சிங்கையா?

சிங்கக்குட்டி said...

@jaisankar jaganathanநல்லது ஜெகநாதன் :-)

சிங்கக்குட்டி said...

@Muthuvel Sivaramanஹாய் முத்துவேல் எல்லாம் சுகம்தானே?

பதிவுதானே எழுதியாச்சு :-)

Post a Comment

 

Blogger Widgets