Thursday, July 23, 2009

பதிவுலகில் பத்து

முன்குறிப்பு: பதிவுலகின் மூலம் பறந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்தை பத்து பக்கங்களுக்குள் அடக்கும் மக்கள், பதிவுலகின் மூலம் கிடைக்கும் பின்னூட்டங்களுக்கும், விளபரங்களுக்கும் நன்றி சொல்லும் அதே வேளையில், அதன் நன்மை தீமைகளையும் சுட்டிக்காட்ட வேண்டியது இங்கு பதிபவர்களின் கடமை ஆகிறது, அதன் ஒரு முயற்சியே இந்த பதிவு.

இனி என் மனதிற்கு பட்ட, பதிவுலக "செய் மற்றும் செய்யகூடாத" பத்து விசயங்களை பார்ப்போம், ரெடி ஜூட் ....

பதிவுலக பெரியோர்களே, புலிகளே, சிங்கங்களே மற்றும் பின்னூட்ட சிருத்தைகளே, இந்த பதிவுலகின் சின்னபிள்ளை ஏதோ கைப்புள்ள தனமா "டென் டூ'ஸ் அண்ட் டூ நாட்'ஸ் இன் ப்லாக்ஸ்-னு" இங்க எழுதுறத, உங்க வீட்டு பிள்ளையா நினச்சு ஏத்துகணும்னு, இந்த பதிவுலக பதினெட்டு பட்டியையும் கேட்டுகிறேன், அப்புறம் அங்க குத்தம் இங்க குத்தம்னு சொல்ல பிடாது.




பதிவுலகம் வந்த காரணம்.
_________________________

1- தமிழ் மொழியில் எழுத, படிக்க,

2- அறிவினை வளர்க்க மற்றும் பகிந்து கொள்ள,

3- புதிய நண்பர்களை இணைத்தில் சந்திக்க மற்றும் உரையாட,

4- மற்ற நண்பர்களின் வலைப்பதிவு ஆர்வத்தை ஊக்குவிக்க,

5- நமக்கு தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்ல, தெரியாததை தெரிந்தவர்களிடம் படிக்க,

6- வாழ்க்கை அனுபவத்தை பகிந்து கொள்ள,

7- அன்றாட கடமைகளை முடித்தபின் இணைத்தில் இளைப்பாற,

8- பார்தத்தும் படித்ததும் பதிவாகும்போது, நாடு நடுவில் மானே தேனை சேர்த்து நம் கற்பனை திறனை வளர்க்க,

9- நான் மட்டுமே இணையத்தில் என்றில்லாமல், நானும் இணையத்தில் என்று சிறிது விளம்பரப்பட,

10- எல்லாத்துக்கும் மேல் (வடிவேலு மாதிரி) என்னையும் மதிச்சு ஒரு கூட்டம் தினம் வந்து படிச்சு பினூட்டம் போடுதேனு கர்வப்பட,

பிகு: ஹும்.... என்னால்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிருக்கு, இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பி இந்த பதிவ தொடந்து படிக்குது...... சரி, இத பத்தி கடைசி வரில பாப்போம்.


பதிவுலகில் செய்யவேண்டியது.
_____________________________

1- நல்ல புதிய நண்பர்களை தேடுங்கள் தொடருங்கள்..

2- அலுவக வேலைகளை எப்படி வீட்டில் பார்ப்பது இல்லையோ, அது போல் பதிவு சம்மத பட்ட வேலைகளை அலுவகத்தில் கண்டிப்பாக பார்காதிர்கள் மற்றும் வேறு பதிவுகளை படிப்பதை கூட தவிருங்கள்.

(நீங்கள் செல்லும் இணையதள முகவரிகள் அடங்கிய பிராக்ஸ்சி ரிப்போர்ட் உங்கள் மேலதிகாரிகளுக்கு நெட் வொர்க் அட்மினால் அனுப்பப் படலாம்)

3- வாழ்க்கை அனுபவத்தை பகிந்து கொள்ளும் போது தவிர்க்க வேண்டிய விசயங்களை தவிர்த்து, உங்கள் பதிவால் பின் நாளில் நீங்களோ, உங்களை சார்ந்தவர்களோ பாதிக்க படாமலும் மன வேதனை படாதவாறு பதிவது உங்கள் கடமை.

4- ஏதோ பதிய வேண்டும் என்று இல்லாமல், வாரத்துக்கு ஒரு முறையானாலும் சரி, மாதத்துக்கு ஒரு முறை ஆனாலும் சரி, தாமதம் பாராமல் நல்ல தரமான பதிவை பதிவதால் உங்கள் வாசகர்கள் உங்களை விட்டு நிச்சியம் ஓடிவிட மாட்டார்கள்.

5- நீங்கள் பார்த்தவை, படித்தவை உங்கள் பதிவாகும் போது, உங்கள் தனி திறமையான "மானே ..தேனை .." நடு நடுவில் சேர்த்து படிப்பவருக்கு விறுவிறுப்பை கூட்டுங்கள்.

6- உங்கள் பதிவில் அது சம்மந்த பட்ட படங்கள் சேர்ப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள், இதனால் உங்கள் பழைய பதிவுகள் "லிங்க்வித்தின்" மூலம் முதல் பக்கத்தின் முடிவில் படத்துடன் வரும், புதிய வாசகர்கள் உங்கள் பழைய பதிவை படிக்க இது உதவும்.

7- உங்கள் பதிவோ, பதிவின் பின்னூட்டமோ மற்ற இன, மதத்தை காயப்படுத்தாமல் இருக்கவேண்டும்,இளையவர்கள் படிக்க கூடாத தகவல்கள் இருந்தால், இளையவர்கள் படிக்க முடியாத படி வயது வந்தோர்களுக்கு மட்டும் முறையை பயன் படுத்துங்கள், இதுவே நல்ல பதிவரின் முக்கிய அடயாளம் ஆகிறது.

8- எந்த ஒரு பதிவையும் பதியும் போது, இதை பற்றி நம்மை விட தெரிந்த பதிவர்கள் இணையத்தில் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, நீங்கள் சொல்லும் கருத்துக்கு அடிப்படை என்றால், அது சம்மந்த பட்ட பதிவுகளை படித்து, கருத்து வேறு பாடு இல்லாத உண்மை தகவல்களை மட்டும் பதிவதில் தவறொன்றும் இல்லை.

(இதனால் சரியான கருத்தை சொல்லும் தரமான இடத்தை உங்கள் இணையதளம் அடையும்.)

9- உங்கள் இணையதளத்தில் பல பதிவுக்கும் பின்னூட்டங்களும் ஒன்றுகொன்று இணைந்து ஒரே பக்கத்தில் படிப்பவரை குழப்பும் விதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், முடிந்த வரை ஒரு பக்கத்தில் ஒரு பதிவை மட்டும் வைக்கலாம் பழைய பதிவுகளுக்கு "லிங்க்வித்தின்" பயன் படுத்தலாம்.

10- கடைசியாக, உங்கள் ப்லோக் என்பது உங்கள் சிந்தனைகளின் பிரதிபலிப்பு என்பதால், உங்கள் மனதையும் சிந்தனைகளையும் போல் உங்கள் இணையதளத்தையும் சுத்தமான கருதுக்களால் நிரப்புங்கள்.


பதிவுலகில் செய்ய கூடாதது.
___________________________

1- உங்கள் இயல்பு வாழ்க்கை மாறாமல் உங்கள் குழந்தை, மனைவி மற்றும் நன்பர்களுடன் உங்கள் நேரம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

2- வீட்டில் வலைபதிவு நேரம் தவிர மற்ற பொதுவாழ்வு மற்றும் அலுவக நேரங்களில் சுத்தமாக பதிவோ, பின்னூட்டமோ பற்றி சிந்திக்காதிர்கள் அது நாளடைவில் உங்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்க கூடும்.

3- வெளியில் பார்க்கும் படிக்கும் அனைத்தையும் அதே நேரத்தில் வலைபதிவு கண்ணோட்டதில் பார்த்து பதிவின் "மானே ..தேனை .." வார்த்தைகளை சிந்திக்காதிர்கள், எதையும் அப்படியே அனுபவியுங்கள், பின்னால் வலை பதியும் நேரத்தில் மட்டும் அதை பற்றி சிந்தித்தால் போதும்.

4- அழகான பூக்கள் நிறைந்த ஒரு பதையில் நாள் முழுவதும் நடந்து தூங்க போகும் முன் அன்று கிடைத்த அனுபவத்தை டைரி எழுதுவதை போல் தான் ஒரு வலை பதிவும், உங்கள் கவனம் முழுவதும் அந்த டைரி எழுதுவதில் மட்டும் இருந்தால், அந்த அழகான நாளின் பூக்கள் நிறைந்த பதையில் நடந்த உண்மையான இன்பத்தை நீங்கள் இழக்க கூடும். இதனால் நாளடைவில் உங்களை நீங்களே தனிமைப்படுத்த கூடும்.

5- பார்க்கும் அனைவரிடமும் அல்லது அணைத்து நேரத்திலும் வலைப்பதிவை பற்றி மட்டுமே பேசாதீர்கள்.

6- முறையான சான்று இல்லாத தகவல்களையோ அல்லது இளையவர்களை தவறான பாதைக்கு வழிகாட்டும் மற்றும் பாலுணர்ச்சி பற்றிய தகல்களை எல்லோரும் இணையத்தில் படிக்கும் படி திறந்து வைக்காதிர்கள்.

7- உங்கள் வலைபதிவு நேரத்தில் அல்லது நீங்கள் மும்பரமாக வலைப்பதிவில் இருக்கும் போது, உங்கள் குழந்தைகளோ அல்லது மனைவியோ அருகில் வந்தால், இணையத்தில் இருந்து இதயத்தை முழுதுமாக வெளியில் எடுத்து விட்டு முழு கவனத்தையும் நேரத்தையும் அவர்களுக்கு கொடுங்கள்.

வலைபதிவு நம் வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர, வலைபதிவு மட்டுமே நம் வாழ்க்கை அல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.

8- நீங்கள் கணினியில் இருக்கும் போது உங்கள் குடும்பத்தினர் அருகில் வந்தால் கோபப்படுவதை அறவே தவிருங்கள், இதனால் உங்கள் குழந்தைகளோ அல்லது மனைவிக்கோ கணினியின் மீதும் வலைப்பதிவின் மீதும் வெறுப்பு வர கூடும், இது உங்கள் குழந்தைகளின் எதிர்கால கணினி படிப்பை பாதிக்கலாம்.

9- பதிவின் சுவரசியத்துக்காக உங்கள் குடும்பத்தினரோ, நண்பர்களோ வருந்தக்கூடிய அல்லது படிக்க விரும்பாத தகவல்களை பதியாதிர்கள், இதனால் உங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்க கூடும்.

10- உங்கள் வேலை பதிக்காத அளவு ஒரு நாளுக்கோ, வாரத்துக்கோ அல்லது மதத்துக்கோ வலைப்பதிவுக்கான உங்கள் நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கி பயன் படுத்துங்கள், உதாரணமாக...

10.1- பேச்சிலராய் இருந்தால் நான்கு அல்லது ஐந்து மணி நேரம், இதில் சரி பாதி உங்கள் சொந்த பதிவிர்க்கோ அல்லது பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் பதியவோ பயன் படுத்தலாம், மீதி இரண்டு மணி நேரத்தை மற்ற நண்பர்களின் பதிவை படிக்கவும் பின்னூட்டம் போடவும் பயன் படுத்தலாம், மேலும் வார விடுமுறை நாட்களையும் பயன் படுத்தலாம்.

10.2- திருமணமாகி குழந்தை(கள்) இருந்தால் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மேல் சொன்ன "சரி பாதி" கணக்கை பயன் படுத்தி இணையத்தில் செலவிடலாம்.

10.3- திருமணமாகி இன்னும் குழந்தை இல்லாமல் இருந்தால் (அதற்கான கடமையை முடித்து விட்டு தான்) மனைவியிடம் அன்றய தினத்தை பற்றி பேசியவுடன் கிடைக்கும் நேரத்தில் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தை பயன் படுத்தலாம், இதிலும் "சரி பாதி" உட்படும்.

10.4- இதில் எந்த வகையிலும் சேராமல் புது தம்பதி (கணவனோ அல்லது மனைவியோ) என்றால், பூவே உனக்காக சார்லி குளிக்கும் காமெடியை பார்த்து விட்டு கீழே படிக்கவும்.

முண்டம்....... முண்டம்.......... படிக்க வேண்டியாத படிக்காம இங்க வந்து என்ன கருமத்த பதிய போகுது, போ போய் படுக்க ஊப்ப்ஸ் ஸாரி ஸாரி....... படிக்க வேண்டியத போய் படி, தொண்ணூறு நான் இந்த பக்கம் வராத........ போ.... போஓஓஒ.



இப்போ பின்னூட்டம் பத்து.
_________________________

1- அவன் என்ன சொல்லுவான், இவன் என்ன சொல்லுவான்னோ, இப்போ என்ன பின்னூட்டம் வந்து இருக்கும்ன்னு யோசிக்காம, தேவையான பின்னூட்டதுக்கு மட்டும் விளக்கம் கொடுங்க, மற்ற நேரத்த புது பதிவுக்கு கொடுங்க.

2- "கலக்கல், இருக்கிறது, நல்ல திரும்பம், எதிர் பார்கவே இல்லை, ரொம்ப அருமை, மீ த பஸ்ட்" இப்படி ரெடிமேட் பின்னூட்டம் பயன் படுத்தாதிர்கள்

3- தலைப்பை மட்டும் பார்த்து விட்டு சம்மந்தமே இல்லாத பின்னூட்டம் போடாதிர்கள்

4- பதிவு எதுவாக இருந்தாலும் பின்னூட்டம் போடவேண்டும் என்று கட்டாய படாமல், உண்மையில் நீங்கள் விரும்பிய அல்லது ரசித்த பதிவுக்கு போடும் பின்னூட்டத்தில் தான் உங்கள் இயல்பு வெளிப்படும்.

5- மற்றவர் பதிவிற்கு வரும் பின்னூட்டதிற்கோ பின்னூட்ட கேள்விக்கோ நீங்கள் பதில் பின்னூட்டம் போடவேண்டாம், அதாவது உங்கள் இணையதளத்திற்கு வரும் பின்னூட்ட கேவிக்கு மட்டுமே நீங்கள் பதில் பின்னூட்டம் போட கூடும்.

6- பின்னூட்டதிற்கே பின்னூட்டம் போடுவதை முடிந்த வரை தவிர்க்கவும், இது பதிவரின் கவனத்தை புது பதிவு வேலையில் இருந்து பழைய பதிவு பக்கமே இழுக்கும்.

7- பின்னூட்டத்தில் வாதாட வேண்டாம் மற்றும் பின்னூட்டத்தை தனி பக்கத்தில் திறக்குமாறு வைத்துக் கொள்வதே நல்லது.

8- யாராக இருந்தாலும், தவறான வார்த்தை இல்லாத பின்னூட்டத்தை அழிக்க வேண்டாம், இது பின்னூட்டம் போடுவரை வருத்த பட வைக்க கூடும், அப்படி அழித்தால் அந்த பதிவின் எல்லா பின்னூட்டத்தையும் அழிக்கவும்.

9- உங்களுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போடும் நண்பர்களின் பதிவுகளை படித்து உங்களுக்கு பிடித்த பதிவிற்கு மறக்காமல் பின்னூட்டம் போட வேண்டும்.

10- முடிந்த வரை பின்னூட்டத்தில் இருக்கும் Word வெரிபிகேசனை எடுத்து விடவும், இதனால் உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர் சலிப்படையாமல் பின்னூட்டம் எழுதுவார்

ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாட ஏதோதோ சொல்லி இந்த பதிவ ஓட்டியாச்சு.

இப்போ வாங்கைய்ய்ய்ய்யா...... வாங்க...... வந்து எவ்வ்வ்வ்வ்வ்லோவு முடியுமோ அவ்வ்வ்வ்வலோலோலோவு திட்டி பின்னூட்டம் போட்டுட்டு போங்க.

பட் ஒன் கண்டிசன்..... அப்பர் பாமிலி..... லோயர் பாமிலிய விட்டுட்டு மிடில்ல என்ன மட்டும் தான் திட்டனும் ஓக்கேகேகேகே.

ஏய் ஏய்ய்ய்ய் ஏய்..... நோ பேடு வோர்ட்ஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.....ஐ யாம் பாவம் :-(

ஹாய் ஆபிசர்......ஹி இஸ் மை பெஸ்ட் பலோயர் ....பட் நோ பின்னூட்டம் .......

12 பின்னூட்டம்:

Menaga Sathia said...

அம்மாடி எப்படி இவ்வளவு பொருமையா எழுதிருக்கிங்க.அனைத்தும் நல்ல கருத்துக்கள்,அழகா சொல்லிருக்கிங்க.

சிங்கக்குட்டி said...

கருத்துக்கு நன்றி ..ஆனா......
//அம்மாடி எப்படி இவ்வளவு பொருமையா எழுதிருக்கிங்க//
என்ன வச்சு காமிடி கிமிடி பண்ணலயே...:-)

Dubukku said...

ஆஹா ரொம்ப வெவரமா கலக்கறீங்க :))

சிங்கக்குட்டி said...

வாங்க டுபுக்கு சார் :-) கருத்துக்கு நன்றி :-)

Unknown said...

நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.. நல்ல பதிவு..

Suresh said...

Miga arumaiyana vishiyangal nanba

Anbu said...

:-))

நிகழ்காலத்தில்... said...

நல்ல விசயங்களை ஒரே பதிவாக போட்டு கலக்கி விட்டீர்கள்.,

வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

தமிழிஸ்- ல் ஓட்டளித்ததுக்கும்...உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கும்,

நன்றி நன்றி நன்றி :-)
Faizakader
சுரேஷ்
அன்பு
நிகழ்காலத்தில் (உங்கள் "சித்தர்களின் கருத்துக்கள்" பதிவை படித்து விட்டு உங்களை மீண்டும் சந்திக்கிறேன் :-)

சிங்கக்குட்டி said...

சுரேஷ் உங்கள் நண்பர் வசந்குமார் இணயதள முகவரி எனக்கு கிடைக்குமா? என்னால் அவருடைய பதிவு எதையும் பார்க்க முடியவில்லை?

தேவன் மாயம் said...

அப்பன் மவனே சிங்கம்தான் நீங்க!!!

சிங்கக்குட்டி said...

நன்றி தேவன் மாயம். .. என்ன இந்த பக்கம் ஆளயே காணோம்??? அப்பப்ப வாங்க :-))

Post a Comment

 

Blogger Widgets