Sunday, October 25, 2009

சண்டே ஸ்பெஷல்

இது என் அடுத்த பதிவிற்காக தயார் பண்ணியது இல்லை, அவசர உப்புமா போல் இன்று மதியம்தான் தயார் பண்ணியது. இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று மதியம் வழக்கம் போல் என் ஜன்னலுக்கு வெளியில் கண்ணை கழுவிக்கொண்டு இருக்கும் போது, அடுத்த கட்டிடத்தை சுத்தம் செய்வதை பார்த்தேன்.

பல முறை, பல இடங்களில், கட்டிடம் சுத்தம் செய்வதை பார்த்து இருந்தாலும், தென்கொரியாவில் மிக வித்தியாசமாக இருப்பதை பார்த்தேன்.

ஒரு பாதுகாப்பு கயிறு கூட இல்லாமல், அவர்கள் அசாத்தியமாக இந்த வேலையை செய்கிறார்கள். வேலைக்கு நடுவில் ஒருவர் தன் செல்போனில் பேசியது என்னை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அவர்கள் அந்த வேலையை முடித்துவிட்டு வீட்டிக்கு போகும் முன், அது இங்கு உங்கள் பார்வைக்கு.

தென்கொரியா கட்டிட துப்புரவு வீடியோ



மேல் உள்ள வீடியோவை பார்க்க முடியாதவர்கள், இங்கு சொடுக்கி யு-டியூபில் பார்க்கவும்.


தென்கொரியா கட்டிட துப்புரவு படங்கள்

அசாதரணமாக அந்த கட்டிட உச்சியில், மூவர் வந்து கயிற்றை கட்டினார்கள்.



பலகையை தூக்கி வெளியில் போட்டார்கள்.



ஈர தரையில் கூட நாம் நடக்க யோசிப்போம், ஆனால் அவர்கள் யோசிக்காமல் தண்ணீரை "கண்ணாடி சுவர்" முழுவதும் அடித்தார்கள்.



இடுப்பில் ஒரு பாதுகாப்பு கயிறு கூட இல்லாமல், அசாதரணமாக ஒருவர்
வெளியில் குதித்தார்.



அவர் பலகையில் உக்காரும் வரை வெளியில் இருந்து பார்த்த இன்னொருவரும் குதித்தார்.



இருவரும் பலகையில் அமர்ந்த படி, தங்கள் கயிற்றை தாங்களாகவே இறக்கி கழுவ ஆரமித்தார்கள்.



மூன்றாம் நபர் பக்க வாட்டில் வந்து பின்னால் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்.



கட்டிடத்தின் உயரத்தை பாருங்கள்.



எவ்வளவு சாதாரணமாக வேலை நடக்கிறது பாருங்கள்.





அவர்கள் கீழே வந்ததும், போய் கையை கொடுத்து விட்டு, வீட்டிற்கு போனவுடன் என் இணையதளத்தை பாருங்கள் என்று சொல்லிவிட்டு (சும்மா ஒரு விளம்பரம்) வந்தேன்.

அப்போது தான் புரிந்து கொண்டேன், இவர்கள் சாதாரண கட்டிட பணியாளர்கள் மட்டுமே (நம்ம சித்தாள் மாதிரி).

இவர்களே இப்படி என்றால், தென்கொரியாவின் தீயணைப்பு படை, ராணுவம், கமாண்டோக்கள் பற்றி நான் சொல்லவா வேண்டும்.

என்ன, பதிவ படிச்சாச்சுல, இன்னைக்கு லீவுதான? சும்மா இணையத்துல கண்ண கழுவாம, போய் வீட்ட கழுவுங்க.

மீண்டும் சந்திப்போம், நன்றி.

18 பின்னூட்டம்:

Anonymous said...

அட. இதெல்லாம் இப்ப நம்மூர்லயும் வந்திடுச்சுங்க.

தேவன் மாயம் said...

ஆச்சரியமாத்தான் இருக்கு!

முரளிகண்ணன் said...

ஆச்சரியம் ஆனால் உண்மை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...,

ப்ரியமுடன் வசந்த் said...

mm
ம்ம்..

GEETHA ACHAL said...

பார்க்கவே பயமாக தான் இருக்கு...ம்ம்ம்....ஆனால் உண்மையில் அப்படி ஒரு சூழ்நிலை எற்படின், நாமும் அப்படி தான் இருப்போம்..

பித்தனின் வாக்கு said...

என்னதான் பயிற்சி இருந்தாலும், இடுப்பில் பாதுகாப்பு கயிறு இல்லாமல் இருப்பது, சட்டப்படி குற்றம். ஆனால் அங்கு என்ன முறை என்பது தெரியவில்லை. இது சிங்கப்பூராக இருப்பின் அந்த பணியாளர்கள், அவர்கள் பணிபுரியும் நிறுவனம். அந்த பணியில் அமர்த்திய நிறுவனம் என சகலரையும் புரட்டி எடுத்துவிடுவார்கள். ஏறக்குறைய 10000 டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டிவரும். பாதுகாப்பு விசயத்தில் மிகவும் முன்னூரிமை தரும் நாடு.

ஈ ரா said...

நம்ம ஊரில் நிறைய பெயிண்டர்கள் இப்படி அடிக்கிறார்கள் ஜி.. பார்க்கும் நமக்கு மனம் பதைபதைக்கும், அவர்களோ அசால்ட்டாக செய்கிறார்கள்..

என்ன இருந்தாலும் ஏதாவது சேப்டி இருந்தால்தான் நல்லது...

படங்கள் அருமை..

நிகழ்காலத்தில்... said...

\\அவசர உப்புமா போல் இன்று மதியம்தான் தயார் பண்ணியது. இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கு\\

ரொம்பப் பிடிச்சிருக்கு..

நம்ம தமிழ்நாட்டில இப்படி வேலை செய்ய ஆள் இல்லை,:))

சிங்கக்குட்டி said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி bxbybz.

சிங்கக்குட்டி said...

நன்றி,நன்றி,நன்றி,நன்றி...

தேவன் மாயம்,
முரளிகண்ணன்,
சுரேஷ்,
வசந்த்.

சிங்கக்குட்டி said...

நன்றி கீதா,

ஆனாலும், உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி...சூழ்நிலை வந்தாலும் என்னால் இது முடியுமா என்பது சந்தேகமே!

சிங்கக்குட்டி said...

உண்மை பித்தனின் வாக்கு,

அவர்களுடன் பேசிய போது, அவர்களும் ராணுவ தேசிய சேவை பயிற்ச்சியில் இருந்துள்ளதை அறிந்து கொண்டேன்.

மேலும் சிங்கப்பூரை பற்றி சொல்லியா தரவேண்டும், அருமையான ஊர்.

சிங்கக்குட்டி said...

உண்மை ஈ ரா, பாதுகாப்பு மிக முக்கியம்.

நான் முதன் முதலில் எடுத்த வீடியோ மற்றும் எடிட்டிங் பற்றி யாருமே ஒன்னுமே சொல்லவில்லையே!!

சிங்கக்குட்டி said...

நன்றி நிகழ்காலத்தில்.

அதி விரைவில் தமிழ்நாட்டில இப்படி கட்டிடங்களை நாமும் பார்க்கலாம்.

சொல்ல மறந்து விட்டேன், இந்த படத்தில் உள்ளது சாம்சங் நிறுவனத்தில் பழைய அலுவலகம்.

நசரேயன் said...

//இவர்களே இப்படி என்றால், தென்கொரியாவின் தீயணைப்பு படை, ராணுவம், கமாண்டோக்கள் பற்றி நான் சொல்லவா வேண்டும்//

ஒ.. அங்கேயும் அப்படித்தானா

Menaga Sathia said...

இங்கயும் அப்படி பார்க்கும்போது ப்ரமிப்பா இருக்கும்.ஆனால் அவர்கள் தைரியமா வேலை செய்யறதைப் பார்க்கும் போது பாராட்ட தோனும் எனக்கு.சாதரணமா 10வது மாடில இருந்து கீழ பார்த்தாலே எனக்கு தலை சுத்தும்.இவங்கலாம் ரியலி கி ரேட் தான்...

சிங்கக்குட்டி said...

நன்றி நசரேயன்.

நன்றி மேனகா.

Post a Comment

 

Blogger Widgets