நீண்ட இடைவெளிக்கு பிறகு, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்து உள்ளது, பொதுவாகவே வருட இறுதியில் வேலை அதிகமாக இருக்கும் என் துறையில் இந்தமுறை கடந்த சில நாட்களாக கொஞ்சம் அதிகமாகவே வேலை இருந்தது.
ஒரு வழியாக பண்டிகைகால விடுமுறையாக, இது ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை.
பண்டிகைகால விடுமுறை என்றதும் வழக்கம் போல, தொலைகாட்சியில் பட்டிமன்றம் பார்க்க மற்றும் ஓடாத உருப்படி இல்லாத மொக்கை படங்களை கூட ஓடுவதாக காட்டும் நோக்கத்தில், தங்கள் சொந்த தொலைகாட்சியில் அதை மட்டுமே திரும்ப திரும்ப காட்டுவதை பார்ப்பது என்பதுதானே நம் கலாச்சாரம்!.
நம் கலாச்சாரம் போல இங்குள்ள மக்களிடம் நல்ல குணங்கள் இல்லை என்பதால், அதில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு(திருந்தி), வெளியில் சென்று மக்களோடு கலந்து மகிழ்ச்சியை கொண்டாடுவது என்று முடிவு செய்து இருக்கிறேன்.
பண்டிகை மகிழ்ச்சியை மக்களுடன் கலந்து கொண்டாடுவது, என்று முடிவானவுடன், நம் அடுத்த கலாச்சாரம் நினைவுக்கு வர...!
அட! "பனி இல்லாத மார்கழியா!, சரக்கில்லாத பண்டிகையா!" என்று மனம் சொல்ல, மூச்சு காற்று கூட புகையாக போகும் இந்த கொரியா குளிர் காலத்துக்கு தேவையான சரக்கு, மிக்சிங், சைடிஷ் என்று எல்லாம் தயார்.
எல்லாம் இருந்தாலும், தினம் தினம் சந்திக்கும் நம் பதிவர்கள் இல்லாவிட்டால் எப்படி?
ஆகவே, வாங்க சேர்ந்து அடிச்சு வருட இறுதி பண்டிகை தினங்களை கொண்டாடுவோம்.
சரக்கு!
சரக்கு ரெடி, இப்ப மிக்சிங்!.
சரக்கு அடிக்காதவுங்க கூட குடிக்கும் படி சில விசையம் வேண்டும் இல்லையா?
பதிவுகளுக்கு விருது வழங்குவதும் வாங்குவதும் கூட பண்டிகை தினம் போல ஒரு வகை மகிழ்ச்சிதான்.
ஆனால், ஒவ்வொரு முறையும் யாராவது எனக்கு விருது தருகிறேன் என்று அழைத்தவுடன், எனக்குள் மகிழ்ச்சியோடு ஒரு சிறு பதற்றமும் தொற்றிக்கொள்ளும்!.
நம்மதான் படிக்கும் போது இருந்து எப்பவும் கடைசி பெஞ்சு மக்களாச்சே!, மற்றவர்களுக்கு நம்ம எப்படி விருது கொடுப்பது? என்பதோடு எனக்குள் மேலும் சில குழப்பங்கள் வந்து விடும்.
நமக்கு விருது கொடுத்தவர்களுக்கே பதில் விருது கொடுப்பதா?
இவ்வளவு பெரிய பதிவுலகத்தில், அருமையாக இருக்கிறது என்றுதான் சிலரை மட்டும் பின் தொடருகிறோம், அந்த சிலரில் விருதுக்கு என்று தனியாக சிலரை எப்படி தேர்வு செய்வது?
ஏன் என்றால், என் தனிப்பட்ட கொள்கைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், எல்லோருடைய எழுத்தும், திறமையும் எனக்கு பிடிக்கிறதே!
மேலும், சில பதிவர்கள் விருதுகளை தங்கள் தளத்தில் பயன் படுத்துவது இல்லை, அதனால் அவர்களை விட்டு விடுவதா?
என்று பல வகையாக குழம்பி..., ஒரு வகையான முடிவுக்கு வந்து சிலரை தேர்ந்து எடுத்தால்! நான் தான் முன்னமே சொன்னனே "நம்ம எப்பவும் கடைசி பெஞ்சு கோஷ்டின்னு".
நமக்கே ஒரு விருது கிடைச்சதுனா, நம்ம தேர்ந்து எடுத்த அந்த பதிவருக்கு அதே விருது கிடைச்சு இருக்காதா என்ன?, ஏற்கனவே அந்த விருதை அவருக்கு இருவருக்கும் மேல் கொடுத்து இருக்கிறார்கள்?
இப்ப என்ன செய்வது! என்று நீண்ட குழப்பத்தில் இருந்த நான், ஒரு வகையாக முடிவுக்கு வந்து...!
இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, வரும் அத்தனை நூற்றாண்டிலும் உலகம் போற்றும் படி, தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்ட "மைக்கேல் ஜாக்ஸன்" இந்த மண்ணை விட்டு பிரிந்த இந்த 2009 வருடத்தின் இறுதியில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த விருதுகளை சில பதிவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.
இது கூல்
கீதாஆச்சல்
மேனகாசத்யா
ஜலீலாவின் சமையல் அட்டகாசங்கள்
சூர்யா ௧ண்ணன்
பிரியமுடன் வசந்த்
முத்துச்சரம் ராமலக்ஷ்மி
சந்தனமுல்லை
ஈ ரா
அம்முவின் சமையல்
தியாவின் பேனா
சுமஜ்லா
கலகலப்ரியா
இது நைஸ்
சுரேஷ்
நட்புடன் ஜமால்
எப்பூடி
ஸ்வர்ணரேகா
வானம்பாடிகள்
நினைவுகளுடன்-நிகே
ஹேமா
ரஹ்மான்
பித்தனின் வாக்கு
ஷஃபி
பிரியமுடன் பிரபு
அடுத்து யாரு என்று யோசித்து கொண்டு இருக்கும் போது...
"இப்படி எல்லோருக்கும் நீங்களே கொடுத்து விட்டால், அப்புறம் அவர்கள் யாருக்கு கொடுப்பாங்க?" என்று பின்னால் இருந்து தங்கமணியின் குரல் கேட்டது!.
ஆஆ, நான் பல நாள் யோசித்து மும்பரமாக வேலை செய்யும் போது "மொழி படத்தில் வரும் பிரகாஸ்ராஜ்" போல் இப்படி சிந்திக்க உன்னால் மட்டுமே முடியும்.....ஆனாலும் உன் கேள்வியில் நியாயம் இருக்கிறது.
எனவே நான் இத்தோடு நிறுத்திக்கொண்டு, மற்றவையை மேலே விருது பெற்ற பதிவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.
இனி அவர்கள் விருப்பம் போல் அவர்கள் விரும்பிய மற்றும் விரும்பும் பதிவர்களுக்கு, இந்த விருதை கொடுத்து மகிழ, வரும் புத்தாண்டை அனைவருக்கும் நலம் கொடுக்கும் இனிய வருடமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொண்டாடுவோம்.
அடப்பாவி...சிங்கக்குட்டி...சரக்கு சரக்குன்னு சொல்லி...சரக்கே இல்லாம ஒரு இடுகைய போட்டுட்டியேடா? என்று சொல்லும் உங்கள் "மைன்ட் வாய்ஸ்சை" என்னால் "கேச் பண்ண" முடிகிறது ...!
சரக்கும் அடிக்க மாட்டோம், மிக்சிங்கும் சரி இல்லை, என்று நினைக்கும் உங்களுக்காகவே, ஒரு "சூப்பர் சைடிஷ்" மக்கா கீழ பாருங்க...!
ஏய்... ஏய்...இடுகைக்கு கீழ பாருமா!
இனி பேப்பர் பேனா, பென்சில், சிலேட், பல்பம் எதுவும் தேவை இருக்காது, ஆம் எல்லா துறையிலும் வளர்ந்து வரும் கணினி குழந்தைகளை விட்டு விடுமா என்ன?
இதோ வந்துகொண்டு இருக்கிறது, ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான மடி கணினி, அதுமட்டுமல்ல இதுவே உலகின் ஆக குறைந்த மடி கணினியாக இருக்கும்.
ஆம், இதன் விலை தோராயமாக "மூவாயிரத்து ஐநூறு ரூபாய்" அதாவது "எழுபத்தி ஐந்து அமெரிக்க டாலர்" ."OLPC Laptop" என்று சொல்லப்படும் இந்த மடி கணினியின் பெயர் "XO-3".
இது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் படி (மைக்கிரோ சாப்ட் நிறுவனத்தின் மென் பொருளை பயன் படுத்தாத முறையில்) வடிவமைக்க பட்டு இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக, இது பின்னாளில் இன்னும் வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
2012 ஆம், வருடத்தில் இதை சந்தைக்கு கொண்டு வரும் வேலை நடந்து வருகிறது,
எனவே மக்களே நாமும் "அ,ஆ,இ" மற்றும் "க,ங,சா" எல்லாம் வரும்படி அடிப்படை கணினி மென்பொருளை வடிவமைக்கும் நேரத்துக்கு வந்து கொண்டு இருக்கிறோம்.
அல்லது, இதையும் நம் மக்களே அமெரிக்க சென்று அங்கு அவர்கள் நிறுவனத்திற்கு இதை வடிவமைத்து கொடுத்து, அதன் காப்புரிமையை அவர்கள் வாங்கும்படி செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
சரக்கு, மிக்சிங், சைடிஷ்ன்னு, யாருக்கு என்ன பிடிச்சதோ! என்ன பிடிக்கலையோ! அத சொல்லுங்க, அப்பத்தான வரும் புது வருசத்தில் இன்னமும் நல்லா பண்ணுவோம்!.
நன்றி!.
Friday, December 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
51 பின்னூட்டம்:
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கபா!! அவ்வ்வ்வ்!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
இனிய ஆச்சர்யம், எனது பெயரைப் பார்த்ததும். நன்றி.
இப்படி ரோபோ மாதிரி பதிவு பதிந்து முடிக்கும் முன் படித்து பின்னூட்டமும் போட்டால், அப்புறம் நான் எப்படி உங்களுக்கு தகவலை சொல்ல முடியும் :-)
சும்மா :-)
புது வருட வாழ்த்துக்கள் சந்தனமுல்லை :-)
ரொம்ப சந்தோஷமா இருக்கு சிங்கக்குட்டி... அன்புக்கு நன்றி...:)
!...டிட்குகங்சி றின்ந பம்ரொ
நன்றி நண்பரே..,
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா
வரும் புது வருடம் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் கொடுக்கட்டும் :-)
சும்மா : -)
நன்றி வசந்த்.
சில நாட்களாக உங்களை எல்லாம் சந்திக்க முடியவில்லை, இப்போ வந்தாச்சு விடுமுறை :-)
எப்படி யோசிச்சமோ!, உங்களுக்கு பிடிச்சதா இல்லையான்னு சொல்லவே இல்லையே?
உங்களுக்கும் எனது புதுவருட நல வாழ்த்துக்கள். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து விருதளித்ததற்கு நன்றிகள்.
சிங்கக்குட்டி வருஷம் முடியுதேன்னு கவலையா இல்ல புதுவருஷம் வருதுன்னு சந்தோஷமா ?
சரக்கு மிக்சிங சைடிஷ்ன்னு கலக்குறீங்க.சரி இதெல்லாம் எல்லாரும் கேக்கிறமாதிரியா கேக்கிறதும் சொல்றதும்.ரகசியமாச் சொல்றேனே !
பிறக்கிற புது வருஷத்தில நல்ல பிள்ளையா இருக்கணும்ன்னு கேட்டு வாழ்த்திக்கிறேன்.
2009 என்று தட்டச்சிய நாம் 2010 என்று தட்டச்சப்போறோம் வேறு ஒன்றும் புதிதில்லை எல்லாம் நாளும் நன்னாலே.
தினம் தினம் வாழ்த்துகள்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
நம்மளையும் சேர்த்துகிட்டது நன்றிba
விருதுக்கும் உங்கள் அன்புக்கும் மிகவும் நன்றி சிங்கக்குட்டி! உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
விருதுக்கு நன்றி சிங்ககுட்டி!
சரக்குக்கு சைட் டிஷ் சரியில்ல... கொஞ்சம் காரசாரமா இருக்க வேணாமா?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் பரிசு கிடைத்த நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என்ன இப்படி சொல்லிடீங்க, உங்க பதிவுகள் அத்தனையும் அருமை.
எனக்கு பின்னூட்ட வசதி இல்லாததால் படித்து விட்டு ஒட்டு போடுவதோடு சரி, இப்படி விடுமுறை கிடைக்கும் போதுதான் சொல்ல முடிகிறது.
நான் எப்பவும் ரொம்ப நல்ல பிள்ளைதாங்க :-)
சந்தோஷம் கவலை ரெண்டும் எனக்கு ஒரே மாதிரிதாங்க!, ஏன்னா ரெண்டுமே நிரந்தரமும் இல்லை உண்மையும் இல்லை.
நீங்கள் சொல்லுவது உண்மைதான், ஆனால் 2010 என்று முதல் நாள் என்று எழுதும் போது, கடந்த 2009-ன் 365 நாட்களில் நாம் என்ன சாதித்து விட்டோம் என்று நினைத்து பார்த்து, வரும் நாட்களில் இன்னும் அதிகமாக, புதிதாக சாதிக்க வேண்டும்.
என் நாளும் நன்னாலே...!
அல்லா உங்கள் மீது எல்லா நாளும் புன்னகையை செலுத்த வேண்டுகிறேன்.
அடுத்த முறை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணிவிடுவோம் கவலையை விடுங்க.
அல்லது விடுமுறைக்கு ஊட்டி வந்தா! கொரியா சரக்கோடு வந்து கவனிச்சுருவோம் :-)
வரும் புத்தாண்டு உங்களுக்கு எல்லா நன்மைகளையும் கொடுக்கட்டும் :-)
தொடர்ந்து வாங்க!.
இந்த மரமண்டைக்கு எதுவும் புரியல! எனினும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
நன்றி!.
நன்றி!. நன்றி!. நன்றி!. நன்றி!. நன்றி!. நன்றி!. நன்றி!. நன்றி!. நன்றி!. நன்றி!. நன்றி!.
வித்தியாசமான சிந்தனை, நல்ல பதிவு, விருதும், விஸ்கியும், செவனப்பும் எடுத்துக் கொண்டேன். வருட இறுதிக் கணக்கு காலம் ஆதலால் வேலைப்பளு அதிகம். மீண்டும் சந்திக்கின்றேன். நன்றி.
உங்கள் பதிவுகளை பார்த்து நான் பல விசையங்களை தெரிந்து கொண்டேன், நீங்களே மரமண்டைன்னா அப்ப என்ன எல்லாம் என்ன சொல்லுவது :-)
வரும் புத்தாண்டு உங்களுக்கு எல்லா நன்மைகளையும் கொடுக்கட்டும் :-)
உங்களுக்கும், மற்ற அனைத்து தோழ தோழியர்களுக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமா யோசிச்சி விருது கொடுக்கிறீங்க்.
நேரம் மில்லாத காரணத்தால் நானும் கருத்து தெரிவிப்பதில் கடைசி பெஞ்சு தான்.
ரொம்ப சந்தோஷம் எனக்கும் விருது வழங்கியதில்....
சூரியா கண்ணன் சாருக்கு காரசாரமா என் பதிவில் இருந்து முட்டை பிரை போட்டு கொடுத்து இருக்கலமே//
விடுமுறை கிடைத்தது, வேற வேலை அதன் ஒரு மாறுபட்ட இடுகை முயற்சி.
நான் கொடுத்தா என்ன, நீங்கள் கொடுத்தா என்ன, எப்படியோ சூரியா கண்ணன்க்கு காரசாரமா சைடிஷ் கிடைச்சிருச்சு :-)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே, எனது பெயரையும் இங்கே கணடதில் மகிழ்ச்சி.
விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நைஸ் ப்ளாகா..!!!
ஹய்... புத்தாண்டு பரிசு சூப்பராயிருக்கு... தேங்ஸ்...
உங்களுக்கும்.. மற்ற அனைத்து பதிவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
//சரக்கு, மிக்சிங், சைடிஷ்ன்னு, யாருக்கு என்ன பிடிச்சதோ! என்ன பிடிக்கலையோ! அத சொல்லுங்க, அப்பத்தான வரும் புது வருசத்தில் இன்னமும் நல்லா பண்ணுவோம்!.//
நல்லா கேட்டீங்க.. டீட்டெய்லு...
பாரின் கால், கடன் அட்டை - மாதிரி நிறைய (இடுகை) எழுதுங்க..
//Skin Design:சிங்கக்குட்டி;//
ஆஹா.. இந்த Design நல்லாயிருக்கே..
இப்பிடியல்லாமா எழுதுவாங்க என்ன சார் இது கொடுமையா இருக்கு.
நன்றி நசரேயன்.
நன்றி ஸ்வர்ணரேக்கா, கவலைய விடுங்க எழுதிடுவோம்!.(நம்ம மொக்கைக்கும் ஒரு ரசிகையா ஆவ்வ்வ்வ் :-) )
//இப்பிடியல்லாமா எழுதுவாங்க என்ன சார் இது கொடுமையா இருக்கு//
ஏங்க! உங்களுக்கு மேல் சொன்ன எதுவுமே பிடிக்கலையா?
சரி, கவலைய விடுங்க, அடுத்த முறை உங்களுக்கும் பிடித்த மாதிரி எழுதிடுவோம்.
ஆனா, நான் வேற மாதிரி கூட எழுதி இருக்கேங்க!, நேரம் கிடைத்தால் இதை படித்து பாருங்கள்.
மனமும் மதமும்
காதலும் கடவுளும்
நான் ஆத்திகனா! நாத்திகனா? -I
நான் ஆத்திகனா! நாத்திகனா? -II
என்ன எழுதி என்னங்க! ஆக போகுது?
"மதம் பிடித்த" மனித வார்த்தைகள் மற்றும் "மதசண்டைகள்" ஓய்ந்து விட போகிறதா? அல்லது "மத இதிகாசத்தில் மலந்துடைப்பார்களா" என்பது போல் வார்த்தைகள் மாறி விட போகிறதா?
தங்களது பின்னூட்டத்தை சுமஜ்லாவின் பதிவில் பார்த்தேன். மிக முதிர்ச்சியான நிதர்சனமான வரிகள். அதுவும் சுகுணா திவாகருக்கு கொடுத்த பதில் என்னை மிகவும் கவர்ந்தது.
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
ஆசியாவில் நான் ஏழு நாடுகளில் வசித்திருக்கிறேன் பாகிஸ்தான் உட்பட (நான் இஸ்லாம் இல்லை).
எல்லா இடங்களிலும் மக்கள் மனம் சீராகவே இருக்கிறது, ஒரு சில இடைத்தரகர்கள் தவிர, அவர்கள் நோக்கம் மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பது மட்டுமே என்பதை படித்த மக்கள் கூட புரிந்து கொள்ளாததுதான் வருத்தத்தை தருகிறது.
இந்த நிலை மாற வேண்டும் என்ற ஆதங்கத்தில் வந்த வார்த்தைகள் தான் அவை.
மீண்டும் உங்கள் வருகைக்கு புத்தாண்டு வாழ்த்துகளுடன் என் நன்றி.
விருதுக்கு நன்றி சிங்கக்குட்டி,
(பலநாட்களாக வெளியூர் சென்றதன் காரணமாக தங்கள் பதிவை இன்றுதான் பார்க்க முடிந்தது)
பகிர்வுக்கு நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்
http://eniniyaillam.blogspot.com/
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நன்றி பாயிஷா ரொம்ப நாளுக்கு பிறகு வந்திருக்கீங்க, நிறைய பதிவுகள் எழுதுங்க :-)
நன்றி சூர்யா ௧ண்ணன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிங்கக்குட்டி!
மிக்க நன்றி தோழரே.. மகிழ்ச்சி.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..
தாமதத்திற்கு மன்னிக்கவும்..
அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி சூர்யா.
நன்றி ஈ ரா, மன்னிப்பு என்பது "தவறுக்கும் இறைவனுக்கும்" மட்டும் பயன் படுத்த வேண்டியது.
மற்ற இடங்களில் பயன் படுத்துவதை தவிர்க்கவும், நான் உங்கள் நண்பன்.
ம்ம். கலகலாக்கு நாந்தான் சொன்னேன். சிங்கக் குட்டி அவார்ட்னு. எனக்கு பார்த்துக்கலை. நன்றி. வலைச்சரதுத்துல சுட்டுவதற்கு இடுகை தேட வந்தப்போதான் பார்த்தேன். :)
விருதுக்கு நன்றி சிங்ககுட்டி!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
எப்படி இருந்தது உங்கள் விடுமுறை மற்றும் இந்திய பயணம்?
அடுத்த இடுகை அதை பற்றிதானே :-)
Post a Comment