Monday, January 25, 2010

நேர்முக தேர்வு! (நிச்சியம் படிக்க வேண்டியது!)

இன்று பெரும்பாலும் கணினி துறையை சார்ந்த பல நிறுவனங்கள் என் நண்பனின் வேலை விண்ணப்பத்தை பார்த்தவுடன் வியக்க கூடும்.

காரணம் "வேலையை மட்டும் விரும்பும்" அவன் (பெயர் இங்கு முக்கியமில்லை என்று நினைக்கிறேன்) குறுகிய காலத்தில் அடிக்கடி வேலையை மாற்றிக்கொள்வது வழக்கம்.

கடந்த பதினான்கு வருடத்தில் பத்து முறை தானாகவே வேலையை மாற்றிவிட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.

இன்று வேலை செய்யும் நிறுவனத்தை விசுவாசத்துடன் காதலிப்பவர்களே தங்கள் வேலையை தக்க வைத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையிலும், முழு நேர வேலையில் இருந்தாலும், வேலை செய்யும் நிறுவனத்தை விரும்பாமல், அவனுகென்று ஒரு தனி வழியில் பதினான்கு வருடத்தில் பத்து நிறுவனங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறான்.

சரி, விசையத்துக்கு வருவோம்.

இப்போது நண்பனை தற்போது இருக்கும் நிறுவனம் பொருளியல் மந்தத்தால் வேலையை விட்டு நீக்கி விட்டது, பதினான்கு, பதினைந்து வருட அனுபமுள்ள மற்ற சிலரைப்போல!.

இனி வழக்கம் போல நண்பனுக்கு நடக்கும் ஒரு நேர்முக தேர்வுதான் இந்த இடுகை.



கேள்வி: ஏன் நீங்கள் கடந்த பதினான்கு வருடத்தில் பத்து வேலையை மாற்றியுள்ளீர்கள்?

பதில்: ஏன், என்றால் என் கடன்களை தீர்த்து, சேமிப்பை கூட்டி, இரண்டாவது முறை ஒரு நிறுவனம் என்னை பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பும்முன் சொந்த வாழ்கையில் ஒரு நல்ல பொருளியல் நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக.

கேள்வி: அப்படி என்றால் உங்களுக்கு முன் கூட்டியே தெரியுமா 2009-ம் ஆண்டில் உங்களை உங்கள் நிறுவனம் வேலையை விட்டு அனுப்பபோகிறது என்று?

பதில்: நான் முதல் முறையாக 2002-ம் ஆண்டில், அதாவது முதல் பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கப்பட்டேன்.

திரும்ப எனக்கு ஒரு முழு நேர வேலை கிடைக்கவில்லை, 2003 ஜனவரி மீண்டும் பொருளியல் மந்தம் மேலே வரும் வரை. இதனால் நான் கிட்ட தட்ட ஒரு வருடம் வேலை செய்ய எந்த நிறுவனமும் கிடைக்காமல் தவிக்கும் படியாகிவிட்டது.


கேள்வி: அது உங்களுக்கு எத்தனையாவது வேலை என்று குறிப்பிட முடியுமா?

பதில்: ம்ம்ம்...அது என்னுடைய மூன்றாவது வேலை.

கேள்வி: அப்படி என்றால் உங்கள் பதினான்கு வருட அனுபவத்தில், ஜனவரி 2003 முதல் ஜனவரி 2009 வரை, இடைப்பட்ட இந்த ஆறு வருட காலத்தில் நீங்களாகவே எட்டு முறை வேலையை மாற்றி உங்கள் வேலை எண்ணிக்கையை பத்தாக உயர்த்தி இருக்கிறீர்கள் இல்லையா?

பதில்: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வேறு எந்த வழியும் கிடைக்கவில்லை. என்னுடைய "முதல் எட்டு வருட" அனுபவத்தில் நான் இரண்டு நிருவனங்களுக்காக மட்டுமே கடினமாக வேலை செய்தேன்.

காரணம், அப்போது நான் நினைத்தது கடின உழைப்பு மட்டுமே வேலையின் பலனை அடைய சிறந்த வழி, மற்றும் நமக்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனத்தை நேசித்து அவர்களுடன் நீண்ட நாள் இருக்கவேண்டும் என்று, ஆனால் அது என் முட்டாள்தனம்.


கேள்வி: ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: என்னுடைய ஊதியம் அந்த எட்டு வருடங்களில் மிக அளவாகவே உயர்ந்தது, அதனால் என்னால் எந்த வகையிலும் எதையும் சேமிக்க முடியவில்லை.

நான் நினைத்தது எல்லாம், என் நிறுவனத்திடம் நீண்ட நாள் நல்ல உறவில் உள்ள என்னிடம் ஒரு நிரந்தர வேலை உள்ளது, அதனால் கவலை அடைய தேவை இல்லை என்பது மட்டுமே. ஆனால் என் வேலையை இழந்தால் நான் என்ன செய்ய முடியும்?

என்னால் கற்பனை கூட பண்ணமுடியாத ஒரு விசையம் நான் வேலையை இழந்தது "பொருளியல் மந்தம்" என்ற ஒரே காரணத்தால் மட்டுமே!, எனக்கு வேலைதிறமை இல்லை என்ற காரணத்தால் அல்ல!. இது நடந்தது ஜனவரி 2002-ல்


கேள்வி: ஓ, அப்படியா!, சரி அதன் பின் இந்த இடைப்பட்ட ஜனவரி 2003 முதல் 2009 வரை என்ன நடந்தது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: கண்டிப்பாக, இந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்பது, ஒரு "நிறுவனத்தில் அல்லது ஒரு வேலையில் திருப்த்தி அடைவது" என்பதும், "பணம் சம்பாதிக்கவோ அல்லது போதுமான சேமிப்பில் திருப்த்தி அடைவது என்பதும்" ஒன்றல்ல என்பதை.

ஆனால், சேமிப்பு என்பது போதுமான வருமானம் இல்லாமல் முடியாதது, ஆகவே நான் என் விருப்பத்தை பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பை நோக்கியும் திருப்பினேன். இதனால் ஆறு வருடத்தில் எட்டு நிறுவங்களை மாற்றினேன் "ஒவ்வொன்றும் உறுதியாக என் பொருளியலை நிலையை உயர்த்தும்" பட்சத்தில்.


கேள்வி: அப்படி என்றால் ஒவ்வொரு முறையும் நீங்கள் நேர்முக தேர்வு எடுத்தவர்களிடமும் நீங்கள் பொய் சொல்லியுள்ளீர்கள், அதாவது நீங்கள் முன் கூட்டியே குறிப்பிட்ட இடைவெளியில் திட்டமிட்டு உங்கள் வேலையை மாற்றுவதை மறைத்து விட்டீர்கள் அப்படிதானே?

பதில்: ஆமாம், பொருளியல் சந்தை எப்போது நன்றாக இருக்கிறதோ, எப்போது நிறுவங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறதோ, அப்போது தானே வேலையை மாற்ற முடியும் அல்லது வேலையில் சேர முடியும்!.

இவ்வளவு ஏன்! நீங்களே சொல்லுங்கள் பொருளியல் மந்தமாக இருக்கும் இந்த நேரத்தில் எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காது இல்லையா!.

ஆகவே, எப்போது சந்தை நன்றாக இருக்கிறதோ அப்போது தான் ஒருவர் தன் வேலையை அதிக ஊதியத்துடன் மாற்றிக்கொள்ள முடியும், காரணம் அப்போதுதான் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் மற்றும் போதுமான ஊதியத்தை தர சம்மதிக்கிறார்கள் என்பதுதானே உண்மை நிலை.


கேள்வி: சரி, இப்படி செய்ததன் மூலம் இன்று என்ன சாதித்து விட்டீர்கள் என்பது இங்கு உங்கள் கருத்து?

பதில்: மிக அருமையான ஒரு கேள்வி, இதைத்தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். ஜனவரி 2003-ல் எனக்கு ஒரு நிலையான ஊதியம் (எந்த மாறுதலும் இல்லாமல்).

ஒரு பேச்சுக்காக என் ஊதியம் 2003-ம் வருடம் "X" என்று வைத்தால் 2009-ல் என் ஊதியம் "8*X" ஆகிவிட்டது.

உதாரணமாக, 2003-ம் வருடம் மூன்று லட்சமாக இருந்த என் ஊதியம் 2009-ல் இருபத்திநான்கு லட்சமாகி விட்டது (எந்த மாறுதலும் இல்லாமல்).

மேலும், நான் ஒரு போதும் பதவி மாறுதலை பற்றி கவலை பட்டது இல்லை. காரணம், ஒரு வருடம் முழுவதும் வேலை பார்த்து முடிந்து, பின் நிறுவனம் தன் ஊதிய உயர்வு முறையை நடைப்படுத்தி அதன் பின் அவர்கள் தரும் ஊதிய உயர்வு வரும் வரை காத்திருக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.


கேள்வி: அப்படி என்றால், நீங்களாகவே உங்கள் ஊதிய உயர்வை தீர்மானித்து கொண்டீர்களா?

பதில்: ஆமாம், 2001-2002-வில் வந்ததை போல இனி ஒரு பொருளியல் மந்தம் 2003-ல் இப்போதைக்கு இன்னொரு முறை வருமா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. அதனால் அடுத்த பொருளியல் மந்தம் எப்போது வரும் என்பதும் எனக்கு தெரியாது.

ஆனால், நான் ஒரு விசையத்தில் மிக உறுதியாக இருந்தேன். இன்னொரு முறை பொருளியல் மந்தம் காரணமாக நான் வேலையை இழக்கும் முன் நான் எந்த கடனும் இல்லாமல் ஒரு நிலையான சேமிப்போடு இருக்க வேண்டும் என்பதில். ஆகவே நான் வருட முடிவுக்காக காத்திருக்காமல், என் ஊதிய உயர்வை நானே ஏற்படுத்திக் கொண்டேன்.


கேள்வி: அப்படி என்றால், இப்போது உங்களுக்கு எந்த கடனும் நிலுவையில் இல்லையா?

பதில்: ஆமாம், வேலை மாற்ற முறையில் நான் நிறையவே சம்பாதித்து விட்டேன். அதில் என் இன்றைய நிலைக்காக கொஞ்சம் செலவழித்தும் இருக்கிறேன்.

என்னிடம் சொந்தமாக எந்த கடனும் இல்லாத ஒரு மூன்று படுக்கை அறை வீடு (2400 சதுர அடியில்) உள்ளது, மேலும் மாத தவனை பாக்கி எதுவும் இல்லாத ஒரு சொகுசு கார் இருக்கிறது, மீத கையிருப்பு தொகைக்காக வங்கிகள் மாத வட்டி தருகின்றன, அது இப்போது என் இதர தேவைகளை பூர்த்தி செய்கிறது.

நிதி நெருக்கடிகாக ஒரு நிறுவனம் என்னை வேலை விட்டு தூக்கினால், தூக்கட்டும்! இப்போது நிதி நெருக்கடி என்பது எனக்கல்ல, நிதி நெருக்கடி அந்த நிறுவனத்துக்கு மட்டுமே.

இதோ, இன்று மீண்டும் பொருளியல் மந்தம் காரணம் காட்டி நான் வேலையை விட்டு நீக்கபட்டு விட்டேன், இதை நான் மறுக்கவில்லை, அதே நேரத்தில் யாரையும் குறையும் சொல்லவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி.


கேள்வி: யார் குறை சொல்வது? யாரை குறை சொல்கிறார்கள்?

பதில்: கிட்டதட்ட வேலை இழந்து பொருளியல் மந்தத்தால் திரும்ப வேலை கிடைக்காமல் தங்கள் வீடு, கார் போன்றவற்றின் மாததவணைகளை கட்ட முடியாத அனைவருமே குறை சொல்லுகிறார்கள்!


சொன்னால் வேடிக்கையாக இருக்கும், இவர்களில் பலர் என்னை முன்பு "நான் வெறும் வேலையை விரும்புபவன் எனக்கு வேலை செய்யும் நிறுவனத்தின் மேல் எந்த விசுவாசமும் கிடையாது" என்று சொல்லி கேலி செய்தார்கள்.

இன்று, நான் அவர்களை பார்த்து கேட்கிறேன், அவர்களின் நிறுவன விசுவாசத்தால் அவர்கள் சம்பாதித்தது அல்லது சாதித்தது என்ன? காரணம், இப்போது அவர்களும் என்னைப் போலவே வேலையை விட்டு நீக்கப்பட்டு விட்டார்கள், அவர்கள் நேசித்த அதே நிறுவனத்தால்.

இப்போது அவர்கள் என்னை என்ன சொல்கிறார்கள் தெரியுமா!, நீ ஏன் சொல்ல மாட்டாய் மேலும் கவலை பட போகிறாய்!. உனக்குத்தான் எந்த கடனும் நிலுவையில் இல்லையே என்று!.

காரணம், அவர்கள் அனைவருக்கும் பனிரெண்டு முதல் பதினான்கு லட்சம் கடன் தொகை நிலுவையில் இருந்தது, அவர்கள் நேசித்த நிறுவனமே அவர்களை வேலையை விட்டு நீக்கும் போது.


கேள்வி: சரி, வேலை செய்யும் திறமையான பணியாளர்களுக்கு உங்கள் அனுபவ அறிவுரை என்ன?

பதில்: திரு.நாராயண மூர்த்தியை போல, உங்கள் வேலையை மட்டும் நேசியுங்கள், ஆனால் உங்கள் நிறுவனத்தை அல்ல!.

ஏன் என்றால்? உங்களுக்கு தெரியாது, எப்போது உங்கள் நிறுவனம் உங்களை நேசிப்பதை நிறுத்திவிடும்! என்று அவர் சொன்னார்.

இந்த வரிகளை தொடர்ந்து நான் சொல்வது.

உங்களை நேசியுங்கள், உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் அதிகம் தேவை, உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் தேவைபடும் அளவை விட!.

நிறுவனங்கள் உங்கள் வாழ்கையில் மாறலாம், வரலாம் போகலாம். ஆனால், உங்கள் குடும்பம் அப்படியே மாறாமல் வாழ்நாள் முழுவதும் உங்களுடனேயே இருக்கும்.

முதலில் உங்களுக்கு போதுமான பணத்தை சம்பாதியுங்கள், அதே நேரத்தில் வேலை செய்யும் நிறுவனத்துக்கும் பணம் சம்பாதிக்க உழையுங்கள்.

அப்படி இல்லாமல், இதன் அடுத்த வழியான நிறுவனம் மட்டும் சம்பாதிக்கும் வழியில் வெறும் நிறுவன விசுவாசத்தோடு மட்டும் இருப்பதில் கடைசியில் பாதிக்கப் பட போவது நீங்கள் மட்டுமே, கட்டாயம் நிறுவனம் அல்ல.


கேள்வி: உங்கள் அனுபவத்தில் நீங்கள் நிருவனங்களின் செய்கையில் பெரிதும் வருத்தப்படும் விசையம் என்ன?

பதில்: எப்போதெல்லாம் ஒரு நிறுவனம் லாபகரமாக செயல் படுகிறதோ அப்போது அந்த நிறுவனத்தின் "சி.இ.ஓ (CEO)" பேசுவார்.

அருமையான வேலை மற்றும் கூட்டு முயற்சி நண்பர்களே, வாழ்த்துக்கள்!. இது உங்கள் நிறுவனம், எனவே உங்கள் கடின உழைப்பை இதே போல் தொடருங்கள், உங்களோடு நானும் எப்போதும் இருக்கிறேன் என்று.

ஆனால், எப்போது பொருளியல் மந்தமாகி அந்த நிறுவன லாபம் சரிவை நோக்கி செல்கிறதோ, அப்போது அதே "சி.இ.ஓ (CEO)" சொல்லுவார்.

இது என் நிறுவனம், என் நிறுவனத்தை காப்பாற்ற நான் பொருளியல் மந்த கால நடவடிக்கைகளை எடுத்து என் நிறுவன செலவுகளை குறைக்கும் திட்டத்தில் (Cost Cutting), உங்களில் சிலரை வேலையை விட்டு அனுப்புவதும் உட்படுகிறது என்று.

இது என்னை "தொழிலுக்கு இதயம் கிடையாது (Business never have Heart)" என்று நினைத்து வருத்தப்பட வைக்கும் ஒரு விசையம் ஆகும்.

ஆகையால், திறமையான பணியாளர்களுக்கு நான் இங்கு சொல்வது, உங்கள் தனிப்பட்ட பொருளியல் நிலையை பற்றி மட்டும் முதலில் சிந்தியுங்கள், காரணம் பெருளியல் மந்தத்தில் நீங்கள் வேலையை இழக்கும் போது,

"தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாத குறைகளோடு உங்கள் முன் நிற்பது உங்கள் குழந்தைகளே தவிர, நிச்சியமாக, உங்கள் நிறுவனமோ அல்லது "சி.இ.ஓ (CEO)" அல்ல."

நன்றி!.


பி.கு:- இந்த அனுபவ அறிவை எனக்குள் புகுத்தி, என் அறிவு கண்ணை திறந்த "காமாச்சிக்கு".

"நீ நட்பின் வடிவமாய் அல்ல, அந்த "காஞ்சி-காமாச்சி"யாகவே என் கண்களுக்கு தெரிகிறாய்", உனக்கும் நம் நட்புக்கும் நன்றி!.

29 பின்னூட்டம்:

kailash,hyderabad said...

excellent

தமிழ் உதயம் said...

சரி. அவர் பதினான்கு வருடத்தில் பத்து நிறுவனங்கள் மாறியது சரியா... தவறா... காமெடி, கிமெடி பண்ணாமல் உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Raju said...

very very nice post. reflected my first 6 years in job. now last 5 years it has been good. I adjusted with practical ideas. since 2007 I am in control of my life.

I might hv got 20% hike every year - but settled for less, when there was flexibility.

//காமெடி, கிமெடி பண்ணாமல் உங்கள் கருத்தை சொல்லுங்கள்//

also beyond a certain no of years, one should stay atleast 2 years in a co. to look nice on resume. always one can talk and convince,if not!

Menaga Sathia said...

நல்லாயிருக்கு இந்த பதிவு சிங்கக்குட்டி!!

குப்பன்.யாஹூ said...

nice and useful post.

going forward the applicant should dominate the employer.

நசரேயன் said...

நல்ல பதிவு நண்பா

Chitra said...

you have really observed the reality in the field and have written it nicely.

நட்புடன் ஜமால் said...

துவக்கத்தில் காமெடி பதிவென்றே நினைத்தேன்

போக போக எழுந்தமர்ந்து படிக்க வேண்டியதாயிற்று.

வேலையை காதலிக்கனும் - நிறுவனத்தை அல்ல - நம்ம சேமிப்பையும் பார்த்துகனும் - இப்படி பட்ட செய்திகள் கிடைத்தன இந்த பதிவில்.

நன்று நன்றி.

ஜீவன்பென்னி said...

என் பின் மண்டைல யாரோ அடிச்ச மாதிரி இருக்கு.

ஹேமா said...

சிங்கா... சிந்தனைப்பதிவு தேவையானதே.ஆனால் உங்கள் நண்பர் மனநிலையிலும் பொறுமையற்றவர் போலிருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

எக்ஸலண்ட் சிங்க குட்டி சமய பதிவு...!

சிங்கக்குட்டி said...

நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

இன்று இந்திய தூதரகம் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு சென்று மகிழ்ந்தேன் :-).

வாழ்க பாரதம்.

Uthamaputhra Purushotham said...

நடந்த நேர்முகத் தேர்வில் இவர் நிச்சயம் தேர்வு செய்யப் பட்டிருக்க மாட்டார் என்பது சரியா?

வெளிப்படையான எண்ணங்கள் வேலை வாங்கித் தருவதில்லையே.

சேமிப்பை வைத்துக் கொண்டிருக்கும் அவர் வேண்டுமானல் இவ்விதம் பேசி வாய்ப்பை இழக்கலாம். எதுவுமே இல்லாதவர்களுக்கு...

சிங்கக்குட்டி said...

நன்றி கைலாஷ் :-)
___________________________________

வாங்க தமிழ் உதயம், ம்ம்ம்...என்னை கேட்டால் இதை இரண்டு வகையாக பார்க்க வேண்டும்.

ஒன்று வாடிக்கையாளர்கள் கணக்கு இருக்கும் வரை மட்டும் பணியில் அமர்த்த படும் பணியாளர்களுக்கு இது நல்ல முறை.

I mean Professional Service Staff for Client Place, even he is permanent, he will lose the job when the customer close the project or billing account.

அடுத்தது, ராஜு சொன்னபடி ஒரு "இரண்டு வருடம்" என்பது நல்ல ஒரு மாற்றத்தை அதிக ஊதியத்துடன் தேட சரியான நேரம். அல்லது ஒரு நாள் பாதிக்க படுவோம்.

I mean, Internal Company Resource, otherwise his income and designation growth will be very limit, at the end the gain will be only for the employer not the employee.
___________________________________

வாங்க ராஜு நீங்கள் சொல்வது மிக நல்ல கருத்து.
தொடரட்டும் நம் நட்பு :-)
___________________________________

ஹலோ மேனகா எப்படி இருக்கீங்க?

ஊருல எல்லோரும் சவுக்கியமா? நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தீர்களா?
___________________________________

வாங்க குப்பன்.யாஹூ.

இரு தரப்பும் பயன் அடைய வேண்டும், ஆனால் தனிப்பட்ட பணியாளரின் வாழ்க்கை தரம் பாதிக்க பட கூடாது :-)
___________________________________

நன்றி நசரேயன்
___________________________________

வாங்க சித்ரா கருத்துக்கு நன்றி.

உங்க கவிதை வந்தவுடன் படித்து பின்னூட்டம் போட முடியாததால் ஓட்டு போட்டேன் (கொடுத்து வைத்த கணவர் என்று கொஞ்சம் பொறாமையுடன்).
___________________________________

வாங்க ஜமால்...எப்படி நினைத்தால் என்ன இடுகை பிடித்திருந்தால் சரி :-)

நன்றி.
___________________________________

ஐயோ அது நான் இல்லைங்க, திரும்பி பாருங்க :-)
கருத்து நன்றி ஜீவன்பென்னி.

பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
___________________________________

வாங்க ஹேமா, கருத்துக்கு நன்றி.

வெற்றியையும் தோல்வியையும் வைத்துதானே எதையும் இந்த உலகில் கணக்கிட முடியும். அவர் கருத்தில் அவர் வெற்றி பெற்று விட்டார்.

அதிக பொறுமையும் பலன்தராது என்பதுதானே உண்மை!.
___________________________________

ஹாய் வசந்த், எப்படி இருக்கீக :-)

"செமயான" என்பதைதான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
___________________________________

வாங்க உத்தமபுத்ரா.

அவருக்கு அந்த வேலை கிடைத்ததா இல்லையா என்று தெரியாது.

ஆனால் வெளிப்படையான எண்ணங்கள் வேலை வாங்கித் தருவதில்லை என்பது வருந்த தக்க உண்மைதான்!.

எதுவுமே இல்லாதவர்கள் இனி வரும் காலத்தில் திட்ட மிட்டு நடக்க அவர் ஒரு முன் உதாரணம் இல்லையா?

அடுத்த பொருளியல் மந்தம் வரும் வரை அவர்கள் எதுவுமே இல்லாமல் இருப்பதும் இல்லாததும் அவரவர் கையில்தான் இனி இருக்கிறது.

நன்றி!.

வடுவூர் குமார் said...

அருமையான‌ நிக‌ழ்கால‌/எதிர்கால‌த்தை நோக்கிய‌ சிந்த‌னை.

thiyaa said...

நான் வந்திட்டன் கொஞ்சநாள் ஓய்வுக்கு பிறகு வந்திருக்கிறன்

Vijayashankar said...
This comment has been removed by the author.
Vijayashankar said...

நல்ல பதிவு! என்னை பற்றி நானே இன்னொருவர் எழுத படித்த மாதிரி இருந்தது. ராஜு சொன்ன மாதிரி ஒருவர் மேனேஜர் லெவலுக்கு போய்விட்டால் - இரண்டு வருடம் அங்கேயே இருக்க ட்ரை பண்ண வேண்டும். சில சமயம் ( பல? ) ஒரு வருடத்திற்கு மேல், பிசினஸ்ஸை பொருத்து வைத்திருப்பார்கள்... காசு அதிகம் என்பதால் பெரிய சம்பளத்து ஆட்களை நீக்குவது தான் சீனியர்களின் ( அதிகம் காலம் ஒரு கம்பெனியில் இருந்தவர்கள்? ) மரபு. நேரம் வரும் பொது வேலை தானாக வரும். நானும் அதை தான் நம்புகிறேன்.

என்னை மாதிரி வேலை இல்லா சமயத்தில் சொந்தமாக எதாவது செய்ய ட்ரை பண்ணலாம். ( காசு குறைவாக இட்டு ) ஐடிலாக இருக்காமல் இருக்க உதவும்.

நாராயணமூர்த்தி சொன்ன மாதிரி - நம் வேலையை தான் விரும்ப வேண்டும். ஒரு கம்பெனியை விரும்பி, அதன் நிதி நிலைமை ( சத்யம் ஞாபகம் இருக்கும்! ) சரியில்லாவிட்டால்... கதி அதோ கதி தான்.

--
விஜயஷங்கர்

SUFFIX said...

அறிவுரைப் பகுதியில் கூறிய விடயங்கள் அருமை நண்பரே, குறித்துக் கொண்டேன். நன்றி.

சிங்கக்குட்டி said...

நன்றி வடுவூர் குமார் :-)
_________________________________

வாங்க வாங்க தியா நல்லா சுருசுருப்பா வந்திருக்கீங்க நிறைய இடுகை எழுதுங்க :-)

_________________________________

வாங்க விஜயஷங்கர் இன்னும் நீங்க உங்கள பத்தி சொல்லவே இல்லையே?

ஒரு இடுகைய போட்டு நம்ம மக்களோட உங்க அனுபவத்த பகிர்ந்துக்களாமே!

//வேலை இல்லா சமயத்தில் சொந்தமாக எதாவது செய்ய ட்ரை பண்ணலாம்.//

உண்மை இது ஒரு நல்ல கருத்து நன்றி!.
அப்பப்ப நம்ம பக்கத்துக்கு வாங்க தொடரட்டும் நம் நட்பு :-)

_________________________________

வாங்க ஷ‌ஃபி கருத்துக்கு மிக்க நன்றி!.

Sen22 said...

Arumaiyaga Irunthathu Katturai..

same blood for me also..:((

i have 6 years experience in 6 companies...


Senthil,
Bangalore..

Vijayashankar said...

Click my name to go to my blog Singakutti. I have my Linkedin profile listed there. We can connect.

சிங்கக்குட்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.

தொடர்ந்து படியுங்கள்.
_____________________________

தகவலுக்கு நன்றி ஹென்றி :-)
_____________________________

நல்லது விஜயஷங்கர்.

ஆனால், உங்கள் இணைய பக்கத்தை அல்லது சுயதகவல் பக்கத்தை என்னால் பார்க்க முடியவில்லை?

நீங்கள் உங்கள் பக்கத்தை அனைவருக்கும் பொதுவாக இன்னும் பகிரவில்லை என்று நினைக்கிறன் :-).

கிரி said...

//நான் நினைத்தது கடின உழைப்பு மட்டுமே வேலையின் பலனை அடைய சிறந்த வழி, மற்றும் நமக்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனத்தை நேசித்து அவர்களுடன் நீண்ட நாள் இருக்கவேண்டும் என்று, ஆனால் அது என் முட்டாள்தனம்.//

நிதர்சனம்!

இதுவே என்னோட கருத்தும். நான் முன்பு இருந்த நிறுவனத்தில் தொடர்ந்து 6 1/2 வருடங்கள் இருந்தேன்.நிறுவனத்தை ரொம்ப விரும்பினேன் இதுவே காரணம்.. ஒரு கட்டத்தில் வேலை போர் அடிக்க மற்றும் கடனால் வேறு நல்ல வேலை தேடி இங்கே (சிங்கப்பூர்) வந்தேன்..நான் ராஜினாமா செய்த போது அவ்வளவு நாள் நான் கடைபிடித்த நேர்மையை உழைப்பை கொஞ்சம் கூட மதிக்காமல் மனசாட்சி இல்லாமல் கேள்வி கேட்டார்கள்..மறக்க முடியாத அனுபவம் அது எனக்கு.

அன்று முடிவு செய்தேன் ..வேலையை மட்டுமே விரும்ப வேண்டும் என்று.. இதை நூறு சதவீதம் பின்பற்ற முடியாவிட்டாலும் ஓரளவு மாறி விட்டேன்.

அதற்காக அடிக்கடி மாறுவதும் நல்ல யோசனை இல்லை.. மாறலாம் ஆனால் ஓரளவு சரியான இடைவெளியோடு.

ரொம்ப நல்லா இருக்கு சிங்கக்குட்டி :-)

Anonymous said...

குடியரசு தின வாழ்த்துக்கள்.வழக்கம் போல நல்ல பதிவு.உங்களுடைய முந்தைய பதிவை மிகவும் ரசித்தேன்..

சிங்கக்குட்டி said...

உண்மைதான் கிரி.

நம் தமிழ் மக்கள் மட்டும் இதில் காணாததை கண்ட மாதிரி ரொம்பவே பின் தங்கி இருக்கிறார்கள் என்பதுதான் வருத்ததக்க உண்மை.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கொடுத்து என்னை மேலும் செதுக்க உதவுங்கள் :-)

நன்றி!.

________________________________________________

மிக்க நன்றி அம்மு :-)

என்ன ஆச்சு ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளையே காணோம்? அப்பப்ப வாங்க :-)

Vijayashankar said...

இந்த பதிவை வைத்து நானும் ஒரு பதிவு போட்டேன்.

வேலை பற்றி ஒரு பதிவு

Click on "About Me!" to know more...

சிங்கக்குட்டி said...

@Vijayashankarமிக்க நன்றி விஜயஷங்கர் :-).

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

Post a Comment

 

Blogger Widgets