கடந்த முறை வரை விடுமுறைக்கு செல்லும் போது எல்லாம், பொதுவாக கேள்விப்படும் விசையம் என்பது, அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இவனுக்கும் பெண் பார்த்து நிச்சியம் ஆகி விட்டது, அவளுக்கு வேலை கிடைத்து விட்டது என்றுதான் இருக்கும்.
ஆனால் இந்த முறை நடுத்தர வயதிற்குள் நுழைந்து விட்டதால் என்னவோ, கேள்விப்பட்ட அனைத்தும் இப்படித்தான் இருந்தது.
இல்ல மாப்ஸ், எனக்கு சர்க்கரை இருக்கிறது, அதுவா, அவனுக்கு நீரழிவு, இவனுக்கு ரத்த கொதிப்பு என்றும், அதிக பட்சமாக அவன் மாரடைப்பில் இறந்து விட்டான், இவன் குடிபோதையில் விழுந்து இறந்து விட்டான் என்பதுதான்.
இதில் வேதனை என்னவென்றால், இவை அனைத்தும் முப்பது முதல் முப்பதைந்து என்று நாற்பதை தொடாத நண்பர்கள் வட்டம்தான்.
ஏன் இப்படி? என்று ஊரில் இருந்த இருபது நாளும் அவர்கள் வாழ்க்கை முறையை உடன் இருந்து பார்த்ததில் கிடைத்தது இதுதான்.
அளவுக்கு அதிகமான குடி, கட்டுப்பாடில்லாத உணவு முறை, உடற்பயிற்சி எதுவுமே இல்லாத சொகுசு வாழ்கை என்று இதுதான் அடிப்படை காரணமாக தெரிகிறது.
பதினைந்து வருடங்களுக்கு முன் கல்லூரி மாணவனாக இருந்ததை விட இப்போது ஆட்டம் அதிகமாக இருக்கிறதே தவிர எதுவுமே குறையவில்லை.
புகை கூட பிடிக்காத என் நண்பன் ஒருவன் வைத்தவாய் எடுக்காமல் அரை பாட்டில் பிராந்தியை குடிப்பதை கண்டு உண்மையில் நான் அதிர்ந்து விட்டேன்.
நான் ஒன்றும் வாழ்கையை அனுபவிக்க வேண்டாம் என்றோ , மது மாமிசம் இல்லாமல் சாமியாரை போல் இருக்க வேண்டும் என்றோ சொல்ல வரவில்லை.
ஆனால் அற்புதமான இந்த மனித வாழ்கையை வெறும் சிற்றின்பத்தில் குறுகிய காலத்தில் பறிகொடுக்க வேண்டுமா? என்பதுதான் இங்கு என் கேள்வி.
அதே போல் இதற்காக நாம் ஒன்றும் தனியாக உடற்பயிற்சி நிலையம் சென்று கட்டுடல் கொண்டு வரவேண்டும் என்றில்லை.
வயதிற்கு தக்க நம் அன்றாட வாழ்கை முறையை சிறிது மாற்றி அமைத்தாலே போதுமானது.
நண்பர்களே, இளமை வாழ்கையை சந்தோசமாக அனுபவிக்க நம் உணர்ச்சிகள் எவ்வளவு சூடாக இருக்க வேண்டுமோ, அதே அளவு நம் உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.
சரி இதற்கும் நம் அன்றாட வாழ்கை முறைக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டு விட முடியாது!, நாமும் அதிகமாக ஒன்றும் செய்ய தேவை இல்லை.
குடிப்பது புகைப்பது அவரவர் விருப்பம், ஆனால் அதை அளவே வைத்துக்கொள்வது மிக மிக முக்கியம்.
எல்லா சிறு சிறு வேலைகளுக்கும் பைக், கார் என்று இல்லாமல், ஒரு நாளைக்கு குறைந்தது முப்பது நிமிடம் நடக்கலாமே அல்லது சைக்கிளை பயன் படுத்தலாமே?
இதில் ஒன்றும் அந்தஸ்த்தோ அவமானமோ இல்லை.
அல்லது குழந்தைகளுடன் ஒரு முப்பது நிமிடம் ஓடியாடி விளையாடலாமே.
அவசர தேவை இல்லாத இடங்களில் லிப்ட்டை தவிர்த்து படிக்கட்டுகளை பயன் படுத்துவதும் உடலுக்கு மிக நன்மைதான்.
உணவு முறையில், கலையில் பால் பழச்சாறு என்றும் மற்ற இரண்டு வேலை அதிக கீரை வகைகள், காய் கறிகளுடன் கூடிய அரை வயிறு உணவு மற்றும் கால் வயிறு தண்ணீர் என்று அளவாக பார்த்துக்கொண்டாலே போதுமானது.
எப்போதாவது மாமிசம் உண்பதில் தவறில்லை, ஆனால் எப்போதும் கண்ட கொழுப்பு சத்து கொண்ட உணவுகளை அளவில்லாமல் எடுத்துக்கொள்வது கண்டிப்பாக உடல் நிலையை மோசமடைய செய்யும்.
இதை தவிர தினம் வயதிற்கு தக்க தியானம் (முப்பது வயது என்றால் முப்பது நிமிடம்) என்பது மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழியாகிறது.
தியானம் என்றவுடன் நான் கடவுள் படத்தில் வருவது போல தலைகீழாக நிற்கவோ அல்லது தியான நிலையம் சென்று தனியாக பணம் கட்டி படிக்கவோ வேண்டும் என்று தவறாக நினைக்க வேண்டாம்.
வீட்டிலோ பூஜை அறையிலோ உங்களுக்கு விருப்பப்பட்ட ஒரு இடத்தில் அமர்ந்து, கண்களை மூடி வேறு எதையும் பற்றி நினைக்காமல் (முதலில் கொஞ்சம் கடினம்தான், ஆனால் தொடாந்து முயற்சி செய்யும் போது சாத்தியமாகி விடும்) வெறும் மூச்சை மட்டும் நிதானமாக விட்டால் போதும்.
வெறும் மூச்சு விடுவதில் எப்படி மனஅழுத்தம் குறையும் என்று நினைக்க வேண்டாம், தியானத்தின் அடிப்படை சாவியே இதுதான்.
அடுத்து பண மற்றும் வெளி பிரச்னைகளை வீட்டில் காட்டாமல் முடிந்த வரை அனைவரிடமும் அமைதியாகவும் அன்பாகவும் இருந்தாலே போதும்.
இந்த சூழ்நிலையில் வாழ்கை துணையின் அன்பும் அரவணைப்பும் நல்ல தாம்பத்தியமும் இதை எளிதில் சாத்தியமாகி விடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இது முதலில் சிறிது கடினமாக இருந்தாலும், நாளைடைவில் நல்ல பலனை தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இப்படி நமக்கு நாமே அன்றாடம் எளிதாக செய்யக்கூடிய வேலைகளை செய்து மனதை கட்டு படுத்தினாலே ஆரோக்கியம் என்பது தானாக வரும்.
ஆக, வாழ்கையை அனுபவிப்பதாக நினைத்து அழித்து கொள்ளாமல், நல்ல முறையில் வாழ்கையை அனுபவிக்கவாது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து தினம் வாழ்ந்தால், தினம் தினம் உடல் நலம் தான் நண்பர்களே.
உங்கள் நேரத்திற்கு நன்றி!, மீண்டும் சந்திப்போம்.
Monday, August 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
13 பின்னூட்டம்:
அடுத்து பண மற்றும் வெளி பிரச்னைகளை வீட்டில் காட்டாமல் முடிந்த வரை அனைவரிடமும் அமைதியாகவும் அன்பாகவும் இருந்தாலே போதும்.
இந்த சூழ்நிலையில் வாழ்கை துணையின் அன்பும் அரவணைப்பும் நல்ல தாம்பத்தியமும் இதை எளிதில் சாத்தியமாகி விடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
....மிகவும் அருமையாக ஆதங்கத்துடன் எழுதப்பட்ட பதிவு. விளையாட்டாக செய்கிறோம் என்று தங்களையே அழித்து கொள்வது, வேதனையான விஷயம் தான்.
மிக சரியான பதிவு. எனக்கும் புகைக்கும் பலக்கம் உள்ளது விட வேண்டும் என நினைதலும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியவில்லை.. படிபதற்கு நன்றாக இருந்தாலும் பின்பற்றுவதற்கு மனம் & உறுதி வேண்டும்...
நிச்சயம் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்...
நல்ல பகிர்வு!!
உங்களது பேச்சை கேட்டு என்னால் புகைப்பிடிப்பதையோ, தண்ணியடிப்பதையோ நிறுத்தமுடியாது; ஏன்னா நான்தான் புகைப்பிடிப்பதோ தன்னியடிப்பதோ இல்லையே :-) உண்மையில் சிறப்பான பதிவு, எனக்கும் தியானம் செய்ய விருப்பம்தான் ஆனால் நேரம்தான் கைகூடுவதில்லை, இருந்தாலும் எதிர்காலங்களில் முயற்சி செய்கிறேன். சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.
உங்களை தொடர்பதிவெளுத அழைத்துள்ளேன், முடிந்தால் மறுக்காமல் எழுதுங்கள்.
http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html
//வெளி பிரச்னைகளை வீட்டில் காட்டாமல் //
இது உடல் மற்றும் மன நலனுக்கான ஒரு சிறந்த வழி...
விரைவில் தெளிவாக சொல்கிறேன்.
திரும்பிய பக்கமெல்லாம் புத்தரை வைத்துக்கொண்டு என்ன இது? சும்மா அவர் சிலைக்கு அருகில் போய் அமருங்கள் பாஸ், தானாக மனம் அமைதியடையும்.
நன்றி ஸ்வர்ணரேக்கா .
ஆமா நீங்க திருச்சிதானே? அடுத்த என் இடுகையை படியுங்கள் உங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கிறது, இது வரை நீங்கள் எழுதாமல் இருந்தால்.
"வெளி பிரச்னைகளை வீட்டில் காட்டாமல் முடிந்த வரை அனைவரிடமும் அமைதியாகவும் அன்பாகவும் இருந்தாலே போதும்." Correct,This is important 4 all. Thanks.
Post a Comment