வணக்கம் நண்பர்களே,
சூட்டோடு சூடாக செய்திகள் பரபரப்பாக இருக்கும் போது, பத்தோடு பதினொன்றாக எழுத விரும்பாத காரணத்தால், பரபரப்பு அடங்கும் வரை காத்திருந்தேன்.
காரணம் இன்றைய பரபரப்பான வாழ்கை சூழலில், காலை காபியுடன் படிக்கும் செய்திதாளிலோ அலுவலகம் போகும் வழியில் காரில் கேட்கும் வானொலி செய்திகளிலோ மக்கள் தங்கள் தூக்கத்தில் இருந்து வெளியே வர மட்டுமே பரபரப்பு செய்திகள் பயன் படுகிறதே தவிர, விசாரணை கமிசன் போல், எந்த ஒரு பரபரப்பான செய்திக்கும் முடிவே இருந்திருக்காது என்பது தான் உண்மை.
ஊடகங்களில் செய்திகள் பழையதானதும் பரபரப்பு குறைகிறது, தூக்கம் கலைய மாறுகிறது, அதனால் விற்பனை குறைகிறது, ஆகவே அடுத்த புது செய்தி பரபரப்புக்காக தேவை படுகிறதை தவிர, இதில் சமூக அக்கறை ஏதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.
நேற்று வரை காசை கொடுத்தவர்கள் கடவுள் என்று போற்றினார்கள்.
ஏமாற்ற பட்டது தெரிந்ததும் பணம், மானம் போன கோவத்தில் மிருகம் என்று தூற்றினார்கள்.
பரபரப்பு குறைந்ததும், இதோ இயல்பு வாழ்கை திரும்பி விட்டது,
மீண்டும் இன்று காசை வாங்குபவர்கள் கடவுள் என்று போற்றுகிறார்கள்.
அமைதி படை படத்தில் வரும் வசனம் போல், கட்டம் கட்டி போட்டு தள்ளு "உஸ்ஸ்சு"...! மன்னிப்பு கடிதம் கொடுத்து பதவி விலகினால் "புஸ்ஸ்சு"...!
ஆக, மொத்தத்தில் "உஸ்ஸ்சு" "புஸ்ஸ்சு", இவ்வளவுதாம்பா நம்ம நாட்டு அரசியல் என்பதுதான் உண்மை. அதற்கு பிறகு யாரும் அதை பற்றி நினைக்க கூட நேரம் இருப்பதில்லை.
(வரலாறு முக்கியம் மங்குனி பாண்டியரே, இறநூறு வருடம் கழித்து வரப்போகும் முட்டாள்களுக்கு, நாம் இன்று எப்படி இருந்தோம், என்ன செய்தோம் என்று தெரியவா போகிறது!)
சரி, இதற்கு காரணம் அவரா, இவரா என்ற அர்த்தமில்லாத ஆராய்ச்சி நமக்கு இப்போது தேவை இல்லை.
ஆனால், நாம் ஏன் இப்படி படித்தும் பதராய் ஆகிவிட்டோம்? என்று நம்மை நாமே உணர்ந்து மாறுவதுதான் இப்போதைய தேவை.
எனக்கு புரிந்த காரணம் என்னவோ மிக எளிது, அவசர உலகத்தில் எல்லாம் அவசரமாக்க பட்டு அனைத்தையுமே வெறும் பணத்தால் விரைவாக அடைய முடியும் என்ற தவறான கண்ணோட்டம்தான்.
நாம் என்ன செய்கிறோம்!, நமக்கு என்ன தேவை! என்ற அடிப்படை எண்ணம் கூட தெளிவாக இல்லாத நிலையில், நாம் மற்றயாரையும் குறை கூறுவதில் அர்த்தமில்லை.
ஒரு உதாரணத்துக்கு, முன்பு பார்த்தல், ஒரு கடைக்கு பத்து கடை பார்த்து, ஒரு துணியை வாங்குவோம், நமக்கு நன்கு அறிமுகமான தையல்காரரிடம் அதை தைக்க கொடுத்து பத்து நாட்கள் பொறுத்திருந்து வாங்கியபின் தான் நம் புது சட்டை தயாராகிறது.
ஆனால் இன்று, இந்த மொத்த பணத்தை விட சற்று அதிகமாக பணம் கொடுத்தால், ரெடிமேட் சட்டை உடனடியாக கிடைக்கிறது.
இப்படியே உணவு, உடை, தகவல் தொடர்பு வரிசையில் இறுதியாக ஆன்மீகம் என்று எல்லாவற்றிலும் நாம் ஒரு "ரெடிமேட்" கலாச்சாரத்துக்கு பழகிவிட்டேம்.
முன்பெல்லாம் ஒரு புத்தகம் எழுதுவது என்பது மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் அறிவு சார்ந்த ஒரு விசையம்.
ஆனால், இன்று அது சார்ந்த பத்து புத்தகங்களை புரட்டி, அதில் எடுத்த குறிப்புகளை வெவ்வேறு வார்த்தைகளை கொண்டு தனியாக தொகுத்தால் ஒரு புது புத்தகம் தயாராகி விடுகிறது.
(அப்படியே நமக்கு நாமே கம்பனுக்கு அடுத்து, பாரதி போல, சுஜாதாவுக்கு அப்புறம் என்று சுய விளம்பர பில்டப் கொடுத்துக்கலாம்)
இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு இனி வரும் வார்த்தைகளில் புரியும்.
பண்ட மாற்று முறையில், அளவு முறையும் சேமிப்பு முறையும் மாறுபடுகிறதே என்று அதை சமபடுத்த, மனிதனாய் பார்த்து முறையான வாழ்கைக்கு வடிவமைக்க பட்ட பணம்தான், இன்று மனிதனை முறையற்ற வாழ்கைக்கு உள்ள அத்தனை வழியையும் திறந்து விடுகிறது.
பணம் கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடும், அதுவும் உடனே கிடைத்து விடும் என்ற முட்டாள் தனமான நம்பிகையே இதன் அடிப்படை. இதனால் பெரும்பாலும் நம் எண்ணம் இப்படித்தான் போகிறது.
குடும்ப வாழ்கை வேண்டும், தொழில் வேண்டும், மொத்தத்தில் விடுமுறைக்கு செல்வதை போல பணம் எடுத்துக்கொண்டு ஆசிரமத்தை தேடி போய் பணம் கொடுத்தால் மட்டும் போதும்.
வெளியே வரும் போது நாம் ஒரு விவேகானந்தராய், புத்தராய், நபியாய், கிறிஸ்துவாய் மாறிவிடலாம் (என்ற நினைப்புதான் இன்று பெரும்பாலான மக்களின் பிழைப்பை கெடுக்கிறது).
அதிலும் வேடிக்கை அப்படி ஆனபின், விடுமுறை முடித்ததை போல திரும்பவும் நாம் குடும்ப வாழ்கைக்கு திரும்பி, நம் தொழிலை பார்க்க போய்விடலாம்.
இப்படி பட்ட எண்ணம் மக்கள் மனதில் இருக்கும் வரை, மற்ற யாரையும் நாம் குறை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க போகிறது, சிந்தித்து பாருங்கள்!.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எனக்கு தெரிந்த நான்கு ஆன்மீக புத்தகங்கள் உள்ளன, அவற்றில் இல்லாத எந்த ஒரு கருத்தையும், கடந்த சில நூறாண்டில் வந்த எந்த ஒரு புத்தகத்திலும் நீங்கள் காட்ட முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும், அந்த புத்தகங்கள் உலகின் அத்தனை மொழியிலும் கிடைகிறது.
இராமாயணம், பகவத்கீதை, திருகுரான், பைபிள் தான் அந்த புத்தகங்கள், இவற்றில் இல்லாத எந்த ஒரு புது விசையத்தையும் எனக்கு தெரிந்த எந்த ஒரு கார்பரேட் துறவியோ, சாமியாரோ சொன்னதோ எழுதியதோ கிடையாது.
அப்படி என்றால், ஆன்மீகத்தில் ஈடு பாடு கூடாதா? அப்படி ஆன்மீகத்தில் ஈடுபடும் பட்சத்தில், ஒரு குரு இல்லாமல் நாம் எப்படி மனம் அமைதியடைய முடியும்? யார் நமக்கு வழிகாட்டுவார்கள்?
என்று பலதர பட்ட எதிர்வாத கேள்விகள், இங்கு வரக்கூடும்.
நான் சொல்வதின் அர்த்தம் அப்படி இல்லை என்பதை விளக்கி சொல்ல வேண்டியது இங்கு என் பொறுப்பாகிறது.
எனக்கு தெரிந்த ஆன்மீகத்தின் முதல் அடிப்படை மற்றும் உச்சகட்ட கடைசி நிலை, இந்த இரண்டு பாடமுமே "நம்மை நாமே உணர வேண்டும்" என்பதுதான்.
இதன் அடிபடையில் நாம் யார், இப்போது நமக்கு என்ன தேவை என்பதை நாம் முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் மிக முக்கியமானது, எந்த ஒரு கால கட்டத்திலும் விளம்பரம் மற்றும் விற்பனை செய்யப்படுவது ஆன்மீகம் ஆகாது.
எடுத்த எடுப்பில் குருவை தேடும் அளவு நாம் முழுநேர மற்றும் பொதுநோக்கு ஆன்மீகவாதி(துறவி) இல்லை.
அப்படியே ஒரு சித்தரை போலவோ விவேகானந்தரை போலவோ ஒரு புனித ஆத்மாவாக யாரேனும் இருப்பின், அந்த ஆத்மா தக்க சமயத்தில் தானே தன் குருவை அடையாளம் கண்டு அவரை வந்து அடையுமே தவிர, பணம் கொடுத்து குருவை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
குடும்ப வாழ்வின் பிரச்சனை சக்கரத்தில் சுற்றி சுற்றி, மூளையின் இடைவிடாத வெவ்வேறு சிந்தனைகளால், நரம்புகளும், நாடி வேர்களும் பாதிக்கப்பட்டு உடல் இயக்கம் சீராக இல்லாமல் மனம் அமைதி பாதிக்க பட்டிருக்கும் பொதுவான மக்களின் ஆன்மீக நாட்டம், தேடல் என்பது மன உளைச்சலை குறைக்க அல்லது தவிர்க்க மட்டுமே என்பதை தெளிவாக நாம் உணர வேண்டும்.
பொதுவாக நமக்கு நாமே கேட்டு பார்த்தல், கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்கும் அல்லது நாடும் எத்தனை பேர், சந்தோசம் வரும் போது கடவுளை நினைக்கவோ அல்லது நன்றி சொல்லவோ செய்கிறோம்?
ஆக, சுக துக்கத்தை ஒன்றாக பாவித்து பொது நல ஆன்மீக வாழ்கை பயணம் என்பது வேறு, அவை ஒரு போதும் கார்பரேட் நிறுவனங்கள் போல பணத்தின் அடிப்படையில் அல்லது விற்பனை முறையில் நடைபெறாது.
தன் கஷ்டங்களுக்கு மனஅமைதி, வடிகால் தேடும் ஆன்மீக நாட்டம் என்பது வேறு, இதற்காக ஒரு போதும் நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியாது.
இந்த நிலையில் நாம் செய்யக்கூடியது தான் என்ன?
பரபரப்பு வாழ்கையின் இடைவிடாத ஓட்டத்தால் தளர்ச்சியடையும் மனதிற்கும் உடலுக்கும் ஒரு அமைதி மற்றும் சக்தி தேவை, அதற்காக சரியான வழி தியானம் மட்டுமே.
ஆனால், அது சரியான முறையா? தியானம் என்ற மிக பெரிய விசையத்தில் உள்ள சூத்திரங்கள் எதுவுமே நமக்கு தெரியாதே என்ற பயமும் குழப்பமுமே நாம்மை தவறான முடிவெடுக்க வைத்து, தவறான மனிதர்களை நாட வைக்கிறது.
இதில் சில அடிப்படை விசையங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
மூளை என்பது வேறு எதுவும் அல்ல, சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, குடும்ப வாழ்கை சக்கரத்தின் இன்ப துன்பங்களின் இடைவிடாத தொடர் இயக்கத்தால், நம் உடலின் சத்தி குறைகிறது, நாட்கள் இப்படியே பரபரப்பாக நகர நகர, அந்த பாதிப்பு உடலின் நரம்புகள் மூலம் மற்ற பகுதிக்கு சென்று அவையும் தளர்ச்சி அடைகிறது.
ஒரு குழந்தை எப்போதும் உடல் சக்தியுடன் ஓடியாடி சுறுசுறுப்பாக இருக்கிறதே! என்று எப்போதாவது கவனித்து பார்த்ததுண்டா? காரணம் குழந்தையின் மூளையில் நினைவுகள் தங்குவதில்லை.
இளம் கன்று பயமறியாது என்ற சொல் படி, வாழ்கையை பற்றி, அடுத்த நாளை பற்றி குழந்தை ஒரு போதும் சிந்திப்பது கிடையாது, அதனால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy Healing for Health) காற்றில் மூலம் அந்த குழந்தை அதிகமாக பெறுகிறது. அதே போல் எந்த சிந்தனையும் இல்லாமல் படுத்த உடன் தூங்கி (தியான நிலைக்கு போய்) விடுகிறது அப்போது இன்னும் அதிக சக்தியை அந்த உடல் பெறுகிறது.
நாம் கூட தூங்கி எழுந்தவுடன் களைப்பு நீங்கி சுருசுப்பாகி விடுகிறோம் இல்லையா? காரணம் தூக்கமும் ஒரு வகை தியானம் தான், தூக்கம் எப்படி ஒரு நினைவற்ற (Unconcious Mind) தியானமோ, அதே போல தியானம் என்பது ஒரு வகையான நினைவுள்ள தூக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
தூக்கத்தில் நமக்கு கிடைக்கும் அளவான சக்தியை போல தியானத்தின் மூலம் அளவில்லா உடல் சக்தியை பெற முடியும்.
இப்படி தியானத்தின் மூலம் நம் மன அமைதியை நாமே பெற முடியும்.
இதன் அடுத்த நிலையை அடைந்து நாம் யார் என்று நமக்கு புரியும் போது, நம் குருவை நாமே சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியும், அதற்காக நாம்மிடம் குருவும் எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்க மாட்டார்.
அதெப்படி நானே தியானிக்க முடியும்? குருவில்லாத ஒரு கலை எப்படி முழுமையடைய முடியும் என்று எடுத்த எடுப்பில் முடிவை தேடாமல், முதல் அடியாக நம் முயற்சியை அடிமேல் அடி தொடர்ந்து எடுத்து வைத்தாலே போதும்.
தியானம் பற்றி எனக்கு புரிந்ததை விரைவில் சுருக்கி சொல்ல முயற்சிக்கிறேன்.
நான் மேலே சொன்னபடி இவை அனைத்தும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக எல்லா ஆன்மீக குறிப்புகளிலும் எழுதி வைக்கப்பட்டது.
அதனால் இதில் நானே சொந்தமாக சொல்ல எதுவும் இல்லை, நான் படித்ததை அதில் எனக்கு புரிந்ததை, சுருக்கமாக ஒரு இடுகைக்குள் வருமாறு உங்களுடன் பகிர்வது மட்டுமே என் நோக்கம்.
நன்றி!, மீண்டும் சந்திப்போம்.
Monday, September 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
23 பின்னூட்டம்:
உங்கள் யாஹூ மெஸஞ்சரில் உங்கள் நண்பர்கள் பெயரில் "is this you on pic?" என்ற தகவவலுடன் ஒரு URL லிங்க் வந்தால், அந்த லிங்கை சொடுக்க வேண்டாம்.
அது ஒரு டார்ஜன் வைரஸ் மற்றும் அது உங்கள் கணினியை பாதிக்க கூடும்.
நல்ல பதிவு சிங்கக்குட்டி..
நாம் கூட தூங்கி எழுந்தவுடன் களைப்பு நீங்கி சுருசுப்பாகி விடுகிறோம் இல்லையா? காரணம் தூக்கமும் ஒரு வகை தியானம் தான், தூக்கம் எப்படி ஒரு நினைவற்ற (Unconcious Mind) தியானமோ, அதே போல தியானம் என்பது ஒரு வகையான நினைவுள்ள தூக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
.....சுவாரசியமான பல தகவல்களை தொகுத்து, உங்கள் புரிதலுடன் அருமையாக இடுகை தந்து இருக்கீங்க. பாராட்டுக்கள்!
Thank you for the virus warning message too.
//ஆனால், இன்று அது சார்ந்த பத்து புத்தகங்களை புரட்டி, அதில் எடுத்த குறிப்புகளை வெவ்வேறு வார்த்தைகளை கொண்டு தனியாக தொகுத்தால் ஒரு புது புத்தகம் தயாராகி விடுகிறது.//
நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்... வாழ்த்துக்கள்
அறிந்தும் அறியாத மாதிரி இருந்ததை மறுபடி ரிகால் பண்ணமாதிரி இருந்தது,, நல்ல பகிர்வு சிங்கக்குட்டி அவர்களே....
நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி சிங்ககுட்டி அவர்களே! வாழ்த்துக்கள்.
//எந்த ஒரு பரபரப்பான செய்திக்கும் முடிவே இருந்திருக்காது என்பது தான் உண்மை.//
எப்ப்ப்பூடி இப்படி! சரியாக கூறினீர்கள்.
//முன்பெல்லாம் ஒரு புத்தகம் எழுதுவது என்பது மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் அறிவு சார்ந்த ஒரு விசையம்.//
இதில் ஏதாவது உள்குத்துண்டா! ;-)
//நான் சொல்வதின் அர்த்தம் அப்படி இல்லை என்பதை விளக்கி சொல்ல வேண்டியது இங்கு என் பொறுப்பாகிறது//
ரொம்ப புத்தகம் படிக்கறீங்கன்னு நினைக்கிறேன் :-))
சிங்கக்குட்டி வரவர ஞானி (அந்த ஞானி அல்ல) ஆகிட்டு வறீங்க..
தியானம் சிறந்தது என்று எடுத்துரைத்து இருக்கீங்க.
எங்கே இருக்கிற வேலை பிஸியில் நேரம் ஒதுக்க முடியலையே/
தியானம் மனம் அலை பாயுவதை ஒரு நிலை படுத்த்து,
அப்படியே வைரஸ் எச்சரிக்கையும் எல்லாம் சேர்த்து பயனுள்ள பதிவு.
சிங்கா...நிறைய விஷயங்களைக் கோர்த்து உங்கள் ஆதங்கங்களோடு சேர்த்து ஒரு அருமையான ஒரு பதிவு.
//நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்... வாழ்த்துக்கள்//
எதுவும் உள்குத்து இல்லையே? :-)
எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா இந்த பக்கம் காணோம்?
இதன் தொடர்ச்சியும் படிங்க கண்டிப்பாக பிடிக்கும் :-)
எல்லாம் நடைமுறை அனுபவம்தான் வேறென்ன?
//அந்த ஞானி அல்ல//
அப்பாடா....நல்லவேளை என்னடா கிரி நம்மை இப்படி திட்டி விட்டாரே என்று ஒரு கணம் நினைத்தேன் :-)
என்னா ஜலீலாக்கா நீங்க எதுக்கு தனியா நேரம் ஒதுக்க வேண்டும் ?
இறை நினைப்பில் ஐந்து முறை நீங்கள் தொழுவதே மிக சிறந்த தியானம் ஆகும்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் வயது / ஐந்து = எத்தனை நிமிடங்களோ அத்தனை நிமிடங்கள் தினம் தொழுவது மட்டும்தான் (அப்படியே என் குழந்தைகளுக்கும் கொஞ்சம் சேர்த்து துவா பண்ணுங்க :-) ).
எப்படி இருக்கிறது வாழ்க்கை? அனைவரும் சுகம்தானே.
மிகவும் நன்றாக உள்ளது. இன்றைய சூழலில் தியானம் என்பது அனைவருக்கும் அவசியமாகிறது. பயனுள்ள பதிவிற்கு வாழ்த்துக்கள்! நன்றி!
Really fine article. Dowloading the article in pdf format will be helpful
singa kutti peru nalla irukku unga padhivu athukethamaathiri supera irukku..nalla thagaval..rombha nalla irukku
Post a Comment