Sunday, December 5, 2010

விமான பயணம் கவனம்!

இது நிறுவனங்களின் குறையை சுட்டி காட்டும் பதிவே தவிர, அதில் வேலை செய்யும் ஊழியர்களை குறை கூற அல்ல.

மேலும், இது வாடிக்கையாளர் சேவையை பற்றிய பதிவு என்பதால், அவர்கள் வேலையில் உள்ள கஷ்டத்தை காட்டும் வகையில் மின் அஞ்சலில் வந்த ஒரு பகிர்வுக்கு பின் விசையத்தை பார்க்கலாம்.





பொதுவாகவே நம்மிடம் விமான பயணம் என்றதும் எதோ புதிய அல்லது உயர்தர வாழ்கை முறையை சார்ந்த ஒன்று என்ற எண்ணம் இருக்கிறது, இதை பயன் படுத்திக்கொண்டு இந்த நிறுவங்கள் செய்யும் அட்டகாசம் சொல்ல முடியாத அளவு வந்து விட்டது.

விமான பயணமும் பஸ், ரயில் போல ஒரு பயண முறை மட்டுமே மற்ற பயண துறைகளுக்கு உள்ள எல்லா சட்டமும் இதற்கும் பொருந்தும் என்பதை நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம்?

என்னிடம் இந்தியா செல்ல ஒரு விமான சீட்டு இருந்தது, ஆசியாவின் முன்னணி விமான நிறுவங்களில் அதுவும் ஒன்று, வேலை பளு மற்றும் அலுவலக விடுமுறை படி என்னிடம் இருக்கும் பயண தேதிக்கு இரண்டு நாள் மாறுபட, பயணதேதியை மாற்றி அமைக்க அந்த விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அழைக்க, அந்த பெண் என்னிடம் பேசியது, என்னை ஒரு அடிமுட்டாள் போல நினைப்பதாக இருந்தது.

விமானசீட்டு விலை வேலை நாட்கள், வாரஇறுதி என்று பயண நாட்களை பொருத்து சற்று மாறுபடும் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் சொன்னது கிட்டதட்ட பதினாராயிரம் வித்தியாசம்!, இது கண்டிப்பாக சாத்தியமில்லை என்று எனக்கு புரிய, ஏன் என்று கேட்டேன்?

அந்த பெண் நான் எதோ விமானத்தை முன்பின் பார்த்திராத போல் நீங்கள் வைத்திருக்கும் வகுப்பில் தற்போது இருக்கை காலி இல்லை என்பதால், நான் உங்களுக்கு வேறு வகுப்பில் இருக்கை தருகிறேன் என்று சொல்ல, நானும் "(C) Economy Class, (B) Business / Executive Class, (A) First Class" இதில் எந்த வகுப்பில் தருகிறீர்கள் என்று கேட்க? அவரிடம் பதில் எதுவுமில்லை, சிறிது நேரம் என்னை காக்க வைத்து விட்டு திரும்ப அவர் சொன்ன பதில் என் கோவத்தை இன்னும் அதிகமாகியது.



அதாவது தற்போது நான் வைத்திருக்கும் அதே வகுப்பில் பயண தேதியை இரண்டுநாள் தள்ளி மாற்றி தர இந்த கட்டணமாம், காரணம் நான் கேட்கும் தேதியில் தற்போது இருக்கை காலி இல்லையாம்.

அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே என் கணினியில் எனக்கு வேண்டிய தேதியில் புதிதாக சீட்டு வாங்க விலையை பார்த்தல், தற்போது நான் வைத்திருக்கும் சீட்டின் விலையை விட வெறும் நான்காயிரம் மட்டுமே வித்தியாசம் வருகிறது, அத்தனை இருக்கையும் காலியாக இருக்கிறது.

ஏன் என்று மீண்டும் அந்த பெண்ணிடம் கேட்க, மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், ஏதேதோ சம்மந்தம் இல்லாமல் விளக்கம் தந்தார்?

நான் முடிவாக சரி, இதோ எனக்கு வேண்டிய தேதியில் இணையம் மூலம் நான் ஒரு புதிய சீட்டை வங்கி விட்டேன், அதனால் என் பழைய சீட்டை நான் ரத்து செய்து விடுகிறேன்.

ரத்து செய்ய ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அபராதம் வரும் என்று எனக்கு தெரியும், அதனால் மீத தொகையை என் வங்கி கணக்குக்கு அனுப்ப சொன்னேன்.

பதினாராயிரம் கொடுத்து தேதியை மாற்றாமல் இப்படி பழைய சீட்டை ரத்து செய்து புது சீட்டு வாங்குவதன் மூலம் நான் ஒன்பதாயிரம் சேமிக்க முடியும் என்று சொன்னேன்.

மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், உங்கள் பழைய சீட்டை ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அல்ல ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொல்ல எனக்கு உச்சிக்கு போய் விட்டது கோபம்.

என் பழைய சீட்டில் ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என்று போட்டு இருக்கிறது, இப்போது நீங்கள் ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொன்னால்! அதற்க்கான எழுத்து விளக்கம் எங்கே இந்த சீட்டில் இருக்கிறது என்று கேட்க? அவரிடம் பதில் எதுவும் இல்லை.

இந்த முறை நானே அவரிடம் மீண்டும் என்னை காத்திருக்க சொல்லாமல், நீங்கள் பேசும் நபரிடம் அல்லது உங்கள் மேலாளரிடம் எனக்கு தொடர்பு கொடுத்தால் நானே நேரடியாக அவரிடம் விளக்கம் கேட்பேன் என்று சொல்ல, அதற்கும் அவர் தயாராக இல்லை?



சரி, இப்போது நீங்கள் எனக்கு இந்த சீட்டை ரத்து செய்ய ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா? என்று கேட்டால் அதற்கும் அவர் தயாராக இல்லை?

நான் கடைசியாக சொன்னது, நீங்கள் வாங்கும் கூடுதல் பணத்திற்காக நான் பேசவில்லை, இது முறையாக அரசாங்கத்தின் கணக்கில் வருவதாய் இருந்தால், நீங்கள் இப்படி எந்த எழுத்து விளக்கமும் தராமல் பணம் எடுக்க தேவை இல்லை?

மேலும் எனக்கு இந்த பணத்தால் பெரிய நஷ்டம் ஒன்றும் வந்து விட போவதில்லை, ஆனால் தின கூலி வேலைக்கு குடும்பத்தை நாட்டை விட்டு சென்று உழைக்கும் எத்தனயோ மக்களுக்கு இது மிக பெரிய தொகையல்லவா? இதற்காகத்தானே அவர்கள் இனம் மொழி தெரியாத நாட்டில் கஷ்டப்படுகிறார்கள்? அதனால்தான் கேட்டேன்.

எப்படியோ நீங்கள் எடுக்க வேண்டிய தொகையை எடுத்து விட்டு மீதத்தை அனுப்பவும், ஆனால் அப்போதும் நான் என்னிடம் இருக்கும் பழைய சீட்டையும் நீங்கள் திரும்ப அனுப்பிய தொகையையும் கொண்டு உங்கள் தலைமை அலுவலகத்திலும் மற்றும் இது சம்மந்த பட்ட துறையிலும் புகார் செய்வேன் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வைத்து விட்டேன்.

விமான பயணிகள் ஒரு விமான சீட்டை வாங்கும் போது அதில் உள்ள அத்தனை விதிமுறைகளை பார்த்து வாங்கவும், அதே போல பயணத்தை ரத்து அல்லது மாற்றி அமைக்கும் போது, அவர்கள் எழுத்தில் கொடுத்துள்ள அந்த அபராத தொகைக்கு மேலே போகும் பட்சத்தில் அவர்களிடம் எழுத்து வடிவில் கேளுங்கள். இனம், மொழி தெரியாத நாடு என்று பயம் வேண்டாம், தேவை பட்டால் சம்மந்த பட்ட துறையில் புகார் கொடுக்கவும் அஞ்ச வேண்டாம்.

மொபைல் போன் போல இது அனைவரின் பயன்பாட்டில் இல்லை என்றாலும், ஏமாற்றும் தொகையின் அளவு (3700 ரூபாய்) மிக பெரியது இல்லையா, கவனிக்காமல் நேரடியாக தேதியை மட்டும் நான் மாற்றியிருந்தால் இன்னும் அதிகமாக நஷ்டமாகியிருக்கும்.

மேலும் கணக்கில் வராமல் எழுத்தில் தராமல் எடுக்கும் ஒவ்வொரு பைசாவுமே ஊழல்தானே? அதை சிந்தித்து பார்த்து செயல் படுங்கள் நண்பர்களே.

நன்றி!.

28 பின்னூட்டம்:

RK நண்பன்.. said...

யப்படியா என்னுடய வாள்கையின் லட்சியம் நிறைவேறி விட்டது.... நானுன் முதன் முதலாக ஃபர்ஸ்ட் கமெண்ட் போட்டுட்டேன்...

RK நண்பன்.. said...

சுடு சோறு எனக்குதான் அப்டின்னு ரொம்ப பேர் கமெண்ட் போடுறங்களே அப்போ சிங்கா நான் ஃபர்ஸ்ட் கமெண்ட் போட்டதுக்காக எனக்கு ட்ரீட் தருவீங்களா??

RK நண்பன்.. said...

எனக்கும் 2 வாரத்துக்கு முன் இதே நிலமைதான், தீபாவளிக்கு ஒரு 10 நாள் விடுப்பு எடுத்து போய்விட்டேன், திரும்ப வரும்போது இங்கு அரபு நாட்டில் பெருநாள் விடுமுறை இன்னும் முடியவில்லை அதனால் 2 நாள் எனக்கு இங்கு வந்து சும்மா இருக்க பிடிக்காமல் எனது ஏர் லைன் அலுவலகதுக்கு போனே செய்தால் அவர் கூறிய பதில் அநியாயம் அய்யா....

நான் வாங்கிய டிக்கெட் விலை மொத்தமே 17000 ரூபா (back & port)ஆனால் நான் 2 நாள் கலித்து போட சொன்னதால் அவர் கேட்ட கூடுதல் தொகை எவளோ தெரியுமா சிங்க??? 8500 ரூபா ... என்ன கொடுமை சார் இது..???

RK நண்பன்.. said...

ஓகே ஓகே கடைசில என்ன பண்ணுனேன்னு கேக்குறீங்களா?? பேசாம அன்னைக்கே கெளம்பி வந்துட்டேன்... (ஏன்னா அதுவும் வெயிட்டிங் லிஸ்ட் ஆம் ஆனால் 24 மணி நேறதுக்கு முன்னாடி எப்படீயும் கன்பர்ம் ஆயிரும் அப்டின்னு தேம்ப சொன்னார்..)ஏண்டா ரிஸ்க் அப்டினுட்டு அன்னைக்கே கெளம்பிட்டேன்... வேற வலி??

RK நண்பன்.. said...

இதுல பெரிய காமெடி என்னான்னா விமானத்தில் போயி உக்காந்தா கிட்டதட்ட கால்வாசிக்கும் மேல இருக்கைகள் காலி... என்ன பண்ண தலையில அடிச்சிட்டு நொந்துகிட்டு வந்துட்டேன்////

RK நண்பன்.. said...

ஹா ஹா ஹா என்னால முடியல சிங்கா வீடியோ/ஆடியோ வாய்ப்பே இல்ல செம காமெடி....

ஆனால் அவருடைய அறியாமையை நினைத்தால் வருத்தமாக தான் உள்ளது... அந்த கஸ்டமர் கேர் ஆளாவது இங்கொமேங்க் அர்த்தம் சொல்லி இருக்கலாம்.. கண்டிப்பா இத பேசிட்டு அவன் டாஸ்மாக் தான் போயி இருப்பான்... ஊர்லையும் போயி எவந்த incoming நு நல்ல சலம்பி இருப்பான்.... எவன் சிக்குனனோ???

GEETHA ACHAL said...

எனக்கும் இது மாதிரி தான் நான் இந்தியா போய்விட்டு திரும்பும் பொழுது ஆனாது...

டிக்கட் புக செய்த தேதிக்கு முன்னமே வரவேண்டி இருந்ததால்...டிக்கடினை 2 வாரம் முன்னாடி மற்றலாம் என்று பார்த்தேன்...

சிட்டி செண்டரில் தான் அந்த பிரபல விமான கம்பனியும் இருப்பதால் எங்கவீட்டில் இருந்து மிகவும் பக்கம் என்பதால் நேரிலேயே போய் பார்த்துவிட்டு வந்தால் மொத்தமாக நானும் நீங்க சொன்ன அதே மாதிரி காசினை புடுங்கிகொண்டு தான் டிக்கடினை மாற்றி கொடுத்தாங்க...என்ன தான் நிறைய விஷயங்கள் இருந்தாலும் ...

இந்த ஏர்லைன் செய்கின்றது அந்த சமயம் மிகவும் கோபத்தினை ஏற்படுத்தியது...ஆனாலும் 2 வாரம் முன்னாடி வருவதால் கவலை இருந்தாலும் ...

அதனை பெரியதாக அப்போ கண்டு கொள்ளவில்லை...ஆனா அதனை நினைக்கும் பொழுது எல்லாம் கோபம் வர தவறுவதில்லை...

வார்த்தை said...

ஏர்போர்ட்ல கட வச்சிருக்குறவனும்,
ட்ராவல்ஸ்ல வேல பாக்குறவனும் மட்டும் தான் ஏமாத்தி வயிறு வளக்கனுமா?
இவங்க மட்டும் என்ன மட்டமா..?

(கேப்மாரிங்கோ எல்லா இடத்துலயும் தான் இருக்காங்க... நெனச்சாலே பயங்கர கடுப்பாகுது )

எப்பூடி.. said...

இலங்கை எயார்போட்டில பொருட்களை கூடையில வச்சு தள்ளுறவனில இருந்து மேல்மட்டம் வரைக்கும் ஊழலுக்கு பஞ்சமில்லை, அதுவும் தமிழர்களிடம் மிரட்டியே ஏப்பம் விட்டு விடுவார்கள் :-(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேள்வி கேக்காத ஒருசிலரால் லாபம் அடைஞ்சு அடைஞ்சு பழக்கப்பட்டுப் போயிருப்பாங்க..

Pradeep said...

Good post!!

Menaga Sathia said...

என்னத்த சொல்ல எல்லா இடத்திலயும் காசு பிடுங்கதானே பார்க்கிறாங்க..

Philosophy Prabhakaran said...

நானும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிபவன் தான்... இதப் பற்றி தனிப்பதிவே போடலாம் போல... அவ்வளவு எண்ணங்கள் மனதில் உள்ளன...

Philosophy Prabhakaran said...

இருப்பினும் நீங்கள் இணைத்துள்ள ஆடியோ கோபத்தை வரவழைக்க கெட்ட கெட்ட வார்த்தைகள் வாயில் வருகின்றன (அந்த ஆடியோவில் பேசியவனுக்காக)... எனவே இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறேன்... இதுபற்றி மேலும் சிந்தித்துவிட்டு மீண்டும் வருகிறேன்...

ஹேமா said...

சிங்கா...நம்ம நாட்டு அழகு இதெல்லாம் !

எண்ணங்கள் 13189034291840215795 said...

விழிப்புணர்வு பதிவு..

//னால் தின கூலி வேலைக்கு குடும்பத்தை நாட்டை விட்டு சென்று உழைக்கும் எத்தனயோ மக்களுக்கு இது மிக பெரிய தொகையல்லவா? இதற்காகத்தானே அவர்கள் இனம் மொழி தெரியாத நாட்டில் கஷ்டப்படுகிறார்கள்?//

உங்க நல்லெண்ணம் எல்லாருக்கும் வரணும்.

கிரி said...

சிங்கக்குட்டிய டெர்ரர் குட்டி ஆக்கிட்டாங்களே! :-) நான் இது வரை கேன்சல் செய்தது இல்லை அதனால் அனுபவமில்லை.

சிங்கக்குட்டி said...

@RK நண்பன்என்ன நண்பா செம குசியா இருக்கீங்க போல? வீட்டு அம்மணி ஊர்ல இல்லைனா? இல்ல வரும் புது வரவு உங்க ஜீனியரை நினைத்தா?.

சுடுசோறு வடை எல்லாம் கிடைக்காது, சரக்கு சப்பைகறி என்று தூள் பறக்கும் கவலைய விடுங்க, எப்ப வேணும் ட்ரீட் சொல்லுங்க :-) நான் சவுதி வரவா இல்லை நீங்க கொரியா வாரீகளா ?

சிங்கக்குட்டி said...

@GEETHA ACHALஎன்ன கீதா இது? நம்ம ஊர்ல சும்மா விட்டுட்டு வரலாமா?

வெளிநாட்டில் இருக்கும் நம் மக்கள் நேரத்தை குறைக்க பணத்தை செலவிடுவது தெரிந்துதான் இவர்கள் இப்படி செய்கிறார்கள்.

அதுசரி அனைவரும் நலமா? ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளே காணோம்ன்னு நாங்க கவலை பட்டோம், அடிக்கடி வந்து போங்க :-).

நன்றி கீதா, இந்த வாரம் நானும் இந்தியா செல்கிறேன்.

சிங்கக்குட்டி said...

@வார்த்தைஉண்மைதான், எல்லா இடங்களிலும் இது பரவுகிறது, இதுவும் ஒருவகை லஞ்சம்தான், இதை ஒழிக்க மக்களும் அரசும் சேர்ந்துதான் செயல்படவேண்டும்.

நன்றி.

சிங்கக்குட்டி said...

@எப்பூடிஉண்மைதான் ஜீவன், இலங்கை வழியாக மிசிக் சிஸ்டம் கொண்டு போனதை பற்றி பகிர்ந்த தமிழர் பதிவு ஒன்று படித்த நினைவு இருக்கிறது.

மாறும் எல்லாம் ஒருநாள் மாறும்.

சிங்கக்குட்டி said...

@முத்துலெட்சுமி/muthuletchumiஅது உண்மை என்றாலும் தவறு மக்கள் பக்கமும், ஜனநாயகத்தை மறந்து நாம் தேவையான இடத்தில் கேள்வி கேட்பது இல்லை அதான் இங்கு பிரச்சனை.

சிங்கக்குட்டி said...

@Pradeepநன்றி பிரதீப்.

சிங்கக்குட்டி said...

@S.Menagaஆமா மேனகா, காசேதான் இன்று கடவுள் :-).

வீட்டில் அனைவரும் நலமா?

சிங்கக்குட்டி said...

@philosophy prabhakaranஎழுதுங்கள் பிரபாகரன் நம் மக்கள் படித்து புரிந்து கொள்ளட்டும்.

அந்த போன் மேட்டர் ஒரு நகைச்சுவைக்காக இணைக்கப்பட்டது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சிங்கக்குட்டி said...

@ஹேமாஉண்மைதான் ஆனால் இந்த நிலை மாறவேண்டும் ஹேமா.

சிங்கக்குட்டி said...

@பயணமும் எண்ணங்களும்விழிப்புணர்வு கொண்டு வந்தால்தான் அது பதிவு என்று எனக்கு ஒரு எண்ணம் எப்போதுமே உண்டு.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிங்கக்குட்டி said...

@கிரி கேன்சல் செய்வதை விட வாங்கும் போதே பயணத்தை மாற்றும் போது உள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக முழுவதும் படித்து வாங்க வேண்டும்.

தேவை படும் நேரத்தில் டெரர் ஆகிடனும் :-).

Post a Comment

 

Blogger Widgets