Sunday, September 27, 2009

உலக இதய தினம்

இன்று செப்டம்பர் 27, உலக இதய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது, இந்த முறை "ஞாயிற்று கிளைமையில்" வைத்து "வொர்க் வித் ஹார்ட்" என்பதை சின்னமாக கொண்டு உள்ளது குறிப்பிடதக்கது.



உணவு பழக்கம், வாழ்க்கை முறையால் நகரத்தில் வசிப்போருக்கு இதய நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிவோம், பின் ஏன் இந்த முறை இப்படி ஒரு தலைப்பை சின்னமாக கொண்டு உள்ளது! என்பதை இங்கு சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேல் சொன்ன காரணங்களை விட, இப்போது அதிகமாக இதய நோய் பாதிப்பு ஏற்பட காரணமாய் இருப்பது "மனஉளைச்சல்", ஆனால் இதன் காரணம் வேலை பளு, என்று தவறாக புரிந்து கொல்லப்படுவது வருந்ததக்கது.

உண்மையை சொல்லப்போனால், நம் வேலைக்கும், மனஉளைச்சலுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது! என்பதை தெளிவுபடுத்தி, உங்கள் வேலையை இதய பூர்வமாக விரும்பி செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்ததான், இந்த முறை இப்படி ஒரு தலைப்பு அதுவும் ஞாயிற்று கிளைமையில்.

ஏன்? மற்றும் எப்படி! என்று இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் வேலையை, வேலைக்காக மட்டும் காதலியுங்கள், அதில் கிடைக்கும் ஊதியம், அதிகாரம், புகழ் என்பது இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும், அதாவது உங்கள் வேலையை நீங்கள் விரும்பி எடுத்தாக இருக்கவேண்டும். ஆக ஒரு நல்ல தரமான வாழ்கைக்காக நமக்கு பிடித்த ஒரு வேலையே தவிர, வேலைக்காக நம் வாழ்க்கை இல்லை, என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருங்கள்.

முடிவில்லாத பிரச்சனை, என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை, போன வாரம் உங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக நீங்கள் நினைத்த வேலை இன்று முடிந்து இருக்கும், அதே போல் போன மாதம் வேறு வேலை, மற்றும் போன வருசமும் கூட வெவ் வேறு வேலைகள்.

ஆனால் இன்று? அது எதுவும் இல்லாமல் புதிதாய் வேறு ஒரு வேலை பளு, உங்களை மனஉளைச்சலுக்கு உள்ளகுவதாய் நீங்கள் நினைக்ககூடும்! அது உண்மை அல்ல.

இப்படி சிந்தித்து பாருங்கள், எப்படியும் முடிய போகிற ஒரு வேலைக்கு, நாம் ஏன் மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டும்? காரணம் உங்கள் முழு கவனமும் வேளையில் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. வீட்டு சூழ்நிலை, வங்கி கடன், வேலை நிரந்தரம், எதிர்கால கனவு, வாழ்கை துணையுடன் கருத்து வேறுபாடு என்று, இப்படி ஏதாவது ஒன்று வேலை நேரத்தில், ஏன் வேலை பார்க்கும் நேரத்தில் கூட உங்கள் உள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.

அப்படி இருக்கும் போது மூளையின் கவனம் சிதறி, செயல்திறன் குறைந்து, எளிதாக முடியக்கூடிய வேலை கூட, உங்கள் நேரத்தை நிச்சியம் சோதிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகள் உங்கள் அன்றாட வாழ்கையில் உங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. ஆக, உங்கள் வேலைக்கும் மனஉளைச்சலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது புரிகிறதா?

இதை எப்படி கட்டுக்குள் கொண்டு வர முடியும்? என்று வியக்க வேண்டாம், அது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை.

முதலில் உடல், தினம் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் காலை, மதியம், மாலை அல்லது இரவு, ஏதாவது கொஞ்ச நேரத்தை உடற்பயிற்சி செலவிடுங்கள், சத்தான உணவை சரியான நேரத்தில் உண்ணுவதை வழக்கமாக்குங்கள். உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் என்ற திருமூலர் வாக்கின்படி, உங்கள் உடலையும் மனதையும் கட்டுக்குள் கொண்டு வர கண்டிப்பாய் உங்களால் முடியும்.

அடுத்து வாழ்க்கை முறை, பொது வாழ்க்கை (அலுவலகம், வேலை) சொந்த வாழ்கை (நண்பர்கள் உறவினர்கள்) தனிப்பட்ட அல்லது சொந்த வாழ்கை (கணவன், மனைவி, குழந்தைகள்), இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே தவிர, ஒன்றுக்கொன்று நிச்சியமாய் சம்பந்த பட்டது இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

அதனால், இதில் நீங்கள் எந்த இடத்தில இருந்தாலும் "இரையை விரட்டும் சிங்கம் போல, உங்கள் கவனம் முழுவதும் அதில் மட்டுமே இருக்கட்டும்" (நூறு மான்கள் ஓடினாலும் அங்கும் இங்கும் கவனம் சிதறாமல், ஒரே மானை துரத்தும்). மற்றதை பற்றி நினைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், இதனால் ஒன்றில் உள்ள விருப்பு வெறுப்பை மற்றொன்றில் கலக்க முடியாமல் போய்விடும்.

கோபப்படும் விசையத்தை கூட பொறுமையுடன் சிரித்த முகமாக, ஆனால் தப்பை உணர்த்தும் விதமாக எடுத்து சொல்ல பழகுங்கள். வீட்டிற்க்கு வெளியே செல்லும் போது காலனி அணியும் போது, அதே இடத்தில வீட்டு பிரச்னைகளை விட்டு விட்டு செல்லுங்கள், அதே போல் வீட்டிற்கு உள்ளே வரும் போது கலட்டி விடும் காலணிகளோடு, அலுவலக மற்றும் வெளி உலக பிரச்னைகளையும் சேர்த்து கலட்டி விட்டு விடுங்கள்.

குடும்ப வாழ்கை முறை, வீட்டிற்கு உள்ளே வந்ததும், இனி உங்கள் முழு கவனமும் ஆசையான வாழ்கை துணை, அன்பான குழந்தைகளுக்கு அரவணைப்பான தாய், தந்தை, என்று வீட்டில் மட்டும் இருக்கட்டும். முடிந்த வரை அலுவலக வேலையை வீட்டிலும், வீட்டு வேலையை அலுவலகத்திலும் தவிருங்கள்.

வேலை முடிந்து வரும் துணையை, அலங்கரித்த சிரித்த முகமாய் வரவேற்க பழகுங்கள் (தினம் ஒரு திருமணதிற்கு செல்வதாய் நினைத்துக்கொண்டு, உங்கள் துணை வரும் நேரத்தில், உங்களை தயார் படுத்துங்கள் அதில் ஒன்றும் தவறில்லை), அதே போல் வந்திருக்கும் மனநிலை அறிந்து தேநீர் அல்லது நீர் கொடுத்து, சிறிது நேரம் சென்ற பின், பேச பழகி கொள்ளுங்கள், உணர்ச்சி வசப்படகூடிய விசையத்தை உள்ளே வந்தவுடன் தவிர்த்து, இன்னொரு நல்ல சந்தர்பத்தில் சொல்லுங்கள்.

அலுவலகம் முடிந்ததும், வீட்டு வேலை, குழந்தைகளுக்கு, துணைக்கு என்று உங்கள் நேரத்தை பகிர்ந்து செலவிடுங்கள், இன்றைய அவசர உலகத்தில் படுக்கை அறை என்பது வாழ்வை திசை திருப்பக்கூடிய சக்தி கொண்ட இடம் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

இங்கு எந்த கருத்து வேறு பாடும் இல்லாமல், இரு தரப்பிலும் கண்டிப்பாய் பார்த்துக்கொள்ள வேண்டும், அதே போல் மற்ற எந்த விசையத்தையும் படுக்கை அறைக்கு வெளியில் முடிந்த வரை பேச, விவாதிக்க கற்றுக்கொள்ளுங்கள், கூட்டு குடும்பமாய் இருந்தால் மொட்டை மாடி போன்ற இடங்களை தேர்ந்தெடுப்பதே நல்லது.

அதே போல் இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில், சோர்வை காரணம் கட்டாமல் இங்கு முடிந்த வரை மற்றவர் "எண்ணத்திற்கு" மதிப்பு கொடுங்கள்.

கடைசியாக, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தூங்கும் நேரம் மற்றும் சூழ்நிலையை உருவாக்கி, தினம் தேவையான அளவு தூங்க கற்று கொள்ளுங்கள். முடிந்த வரை வாழ்கை துணைகள் தனியாக படுப்பதை தவிர்த்து சேர்ந்து உறங்குவது நல்லது.

முதலில் சற்று கடினமாக இருந்தாலும், போக போக, இது ஒரு இனிய அனுபவமாகி விடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால், நம் அன்றாட வாழ்கையில், இதை மட்டும் கடைபிடித்து வந்தால், இதயநோய் என்பது வரலாற்றில் மாணவர்கள் படிக்க கூடியதாய் நம்மால் நிச்சியம் மாற்ற முடியும்.



இதயநோய் பற்றிய இன்னும் சில பொதுவான தகவல்கள் உங்கள் பார்வைக்கு.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும், 1 கோடியே 70 லட்சம் பேர் இதய நோயால் இறக்கின்றனர். இவர்களில் 20 லட்சம் பேர் இந்தியர்கள். இந்தியாவில் 6 கோடி பேருக்கு இதய நோய் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நகர்புறங்களை சேர்ந்தவர்கள். சென்னையில் 4 சதவீதம் பேரும், டெல்லியில் 7.8 சதவீதம் பேரும் இதய நோயாளிகளாக உள்ளனர் என்று மத்திய நலத்துறை அமைச்சக 2007-ன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. புகை பழக்கத்தையும், குடி பழக்கத்தையும் கைவிட்டாலே பெரும்பாலானவர்களை இதய நோய் தாக்காது.

அடுக்கு மாடி கட்டிடங்களில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் லிப்ட்டுகளில் செல்வதற்கு பதில், படிக்கட்டுகளில் ஏறிச் செல்வது நல்லது. மதிய உணவுக்கு பிறகு குட்டி தூக்கம் போடுவதால் இதய நோயை தடுக்கலாம். அதிகம் கோபப்படாமல் அமைதியாக இருப்பதும் இதயத்துக்கு நல்லது.

இதயத்தை காக்கும் அடிப்படை விதிகள்.

1. டயட் - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரட், அதிகமான புரோட்டின்

2. உடற்பயிற்சி - இரண்டு மணிநேரம் +அரை மணி நேர நடை குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள். (ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதையும், லிப்ட் பயன்படுத்தவத்தையும் தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி இறங்குகள்)

3. புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விடுங்கள்.

4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.

5. இரத்த அழுத்தம் மற்றும் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள்.

இதய நோயாளிகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் 2007-ன் ஆய்வு தெரிவிக்கிறது. இதய நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவுக்கு 9 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது

நன்றி! வாழ்க வளமுடன்.

Monday, September 21, 2009

சும்மா ஒரு ரீமிக்ஸ்

பதிவுக்கு முன் தமிழ்த்துளி தேவாவின் அன்பு விருதுக்கு என் நன்றி.




ரீமிக்ஸ் பாட்டு...அப்புறம் ரீமிக்ஸ் தலைப்பு...அப்புறம் ரீமிக்ஸ் படம்...இப்படி எல்லாமே "ரீமிக்ஸ்" இது தான இப்ப டிரன்டு!...அப்ப ஏன்? ஒரு ரீமிக்ஸ் பதிவு இருக்க கூடாது?

என்று, எத்தனையோ இடையறாத என் பணிகளுக்கு மத்தியில்!, எப்படி என் பதிவை பதிவுலக சரித்திரத்தில் இடம் செய்யலாம்? என்று நினைத்துக்கொண்டே, மகா சிந்தனையில் காலை கழிவறையில் நான் அமர்ந்திருக்கும் போது!...கன நேரத்தில் என் ஞானத்தில் உதையமனதுதான் இந்த பதிவு.

இது எந்த தனிப்பட்ட பதிவையோ, பதிவரையோ குறிப்பிடாத கற்பனை பதிவு என்பதால், சும்மா பதிவை அனுபவிக்கனும்,...ஆராயக்கூடாது...ரெடி ஜூட்...



பின்னனியில் மக்கள் முனு முனுப்பு: இந்த பதிவர் பதிவ படிக்க படிக்க ரொம்ப "குஜாலா" இருக்கும் தெரியுமா...ரொம்ப பெரிய மொக்கை எல்லாம் இருக்காது...

மொக்கை (பதிவு) சித்தர் வந்துட்டாரு...மொக்கை (பதிவு) சித்தர் வந்துட்டாரு...உதிவியாளர் கத்திக்கொண்டே ஓடி வர பின்னனி பாடல் ஒலிக்கிறது...

"ப்லாக்கர் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...வலை பதிவர்...வலை பதிவர்..."

பதிவர்: எலே பக்கி மக்களா...எதுக்குல இந்த மொக்க ப்லாக்க பாக்கீக...எதுக்கு பாக்கீகங்கறேன்?????...எலே இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மீடியா... பேப்பரு... எல்லாம் அழியபோகுதுல...நீங்க எல்லாம் கெட்ட ப்லாக்கரா ...மொக்க பதிவரா ஆகபோரீகலே...எலே பிப்ரவரி முப்பதோட இந்த டிவி, மெகா சீரியல் எல்லாம் அழிய போகுதுல !.

பின்னூட்டம் போடுபவர்: பிப்ரவரிக்கு ஏதுங்க முப்பது ?

பதிவர்: அத ஏம்புள்ள, எங்கிட்ட கேக்க...கிறுக்கு பதிவரே அத ஏன் எங்கிட்ட கேக்க...அந்த "லொடுக்கு" ப்லாக்ல பட்சி சொல்லுலத நான் சொல்லுதிரேன்...அது மட்டுமில்லலே...நீங்க எல்லாம் கெட்ட பதிவரா மொக்க அடிமையா போகபோறிகலே...எலே ஒரு சங்கதி, இந்த இணையத்துல...பதிபவேன் படிச்சிட்டு ஓட்டோட பின்னூட்டம் போதுபவன்...ரெண்டுபேர தவிர மத்த எல்லாம் தமிலிஸ் ஹிட் லிஸ்ட்ல பின்னாடி போகப்போறீகலே.

உதிவியாளர்: பதிவரே அப்ப நீங்க?

பதிவர்: எலே, என்னய்யாலே கேக்க...மொட்ட பின்னூட்ட பயலே...நா பதிவு
பதிய ஆரபிச்சு மூவாயிரம் வருசமாச்சுல...இது என்னோட முன்நூராவது ப்லாக்குல இது...



பார்வையாளர்: நீங்க பதிவர் ...ஆனா மொக்கை சித்தர்னு பேரு வச்சு இருக்கீகலே...

பதிவர்: எலே பதிவர்னு சொல்லி இருக்கெனாலே...நா எப்பையாவது பதிவர்னு சொல்லி இருக்கெனா...நான் வெறும் ப்லாக் படிகிரவேன்...பதிவுல படம் பக்குரவேன்...இந்த பேரு பிரச்னைக்காக தாம் புள்ள நான் பின்னூட்டம் கூட போதுரருது இல்ல...எலே எல்லா ப்லாக்கும் படிச்சாத்தாம்புள்ள இந்த பதிபவர்களுக்கு விடிவு காலம் ...

அடுத்த பார்வையாளர்: பதிவரே நான் சாப்ட்வேர் இன்ஜினியர்...நான் ப்லாக் போடலாமா?

பதிவர்: எலே ப்லாக்க போட்டு "லே-அவுட்ட எடிட்" பண்ணுனாதால நீ சாப்ட்வேர் இன்ஜினியர்...இன்னும் கொஞ்ச நாள்ல "ப்லாக் பேரு" எல்லாம் ரெசியூம்ல வரப்போகுதுலே...எலே ஏ எம் ப்லாக்க பாத்துட்டு நிக்க போ போய் ப்லாக்க போடு...

பின்னூட்டம் போடுபவர்: எதுக்கு பதிவரே எல்லாரையும் பின்னூட்டத்துல திட்ரீக?

பதிவர்: எலே நேர்ல திட்டுனா நீ தாங்குவியா...இல்ல நீ தாங்குவியாலே...இந்த எழவுக்கு தான் மனுஷ பய ப்லாக்கே நான் படிக்குதத நிப்பாட்டி ஐந்நூறு வருசமாச்சு...என்ன ஏம் புள்ள வம்முக்கு இளுக்கீக........இந்த பரவ, மிருகம் இதுக ப்லாக்குதான் நா படிக்கிறது...

பின்னூட்டம் போடுபவர்: அது சரி பதிவரே, இந்த பதிவு எல்லாம் எதுல இருந்து வருது பதிவரே ...

பதிவர்: எலே சின்ன பதிவே, நல்லா சொல்லுதேன் கேட்டுக்க...ஏ இந்த பதிவு மட்டுமில்லலே...எல்லா பதிவும் தமிழ்ல இருந்துதாலே வருது.

அடுத்த பார்வையாளர்: வணக்கம் பதிவரே ...எனக்கு கல்யாணமாகி நாலு வருசமா பதிவு போடுறேன்...எனக்கு குழந்தையே இல்ல பதிவரே...

பதிவர்: ஏ, அத ஏன் இங்க கேக்குற....புள்ளய பத்தி பதிவுல கேக்குறது...அப்புறம் "அசைவமான பதிவுன்னு" பின்னூட்டம் போட்டு "அடல்ஸ்ஒன்லில" சேக்குறது...போபோ.

அந்த பார்வையாளரோட அம்மா: பதிவரே கோவிச்சுகாதீக......ப்லாக் போடுறேன்... ப்லாக் போடுறேன்னு...... இவளுக்கு புள்ள இல்ல! அதுக்கு ஒரு வழிய சொல்லுங்க...

பதிவர்: ஏ அப்படிங்கிரயா...ப்லாக் போடுறேன்! ப்லாக் போடுறேன்னு இருந்ததுக்கு பதிலா...உன் ப்லாக்ல யாரையாவது...

உதிவியாளர்: பதிவரேரேரேரேரே...

பதிவர்: அட சின்ன புத்தி மக்கா...உன் ப்லாக்ல யாரயாவது...இந்த பதிவு வேலை எல்லாம் பாக்க சொல்லி இருந்தா, இந்நேரம் இந்த பிரச்சனை இருக்காதுன்னு சொல்ல வந்தேன்ல...

சரி சரி...போற வழில நம்ம சோமசூத்ரா ப்லாக் இருக்குல...அந்த ப்லாக்ல போய் நாலு பதிவ படிச்சு மூணு பின்னூட்டத்த போடு...இன்னும் இருபத்துநாலு மணி நேரத்துல பிள்ள தமிலிஸ் தமிழ்மணம் ஹிட் லிஸ்ட்ல வரலைனா என்ன செருப்பால அடி ...

பார்வையாளரோட அம்மா சலிப்பாக: ஐய "அந்த" ப்லாக்லயா...

பதிவர்: எலே...என்ன ப்லாக்ன்னு இளப்பமா சொல்லுத...ஏ "ப்லாக்கு என்பார் பின்னூட்டம் என்பார்...படிச்சுட்டு ஓட்ட போடாம நாசமா போவர் பட்டாங்கி ப்லாக்கு படி"...இது சூதாடி சித்தர் சொன்னது...போபோ சு...சூ...ஸூ

மேலிருந்து சத்தம்: க கா க காக காக கா...

பதிவர்: ஏ... என்ன... காக கா க காக ...ஏலே இங்க வா...ஏ காக்கான்னு ப்லாக் பேர வச்சு, ஒரு காக்கா படபதிவு கூட இல்லையாமே...ஏ பட்சி சொல்லுதுல்ல.

கடைசியா ஒன்னு சொல்லுதே மக்களே...ஏ பாக்க வேண்டியத பாத்து, படிக்க வேண்டியத படிச்சு, பதிய வேண்டியத பதிஞ்சாதான...கிடைக்க வேண்டியது கிடைக்கும்...

இன்னும் தொலாயிரம் வருசத்துக்கு அப்புறம் பதிவே இருக்காது! எல்லாம் வீடியோ...ஆடியோ...வாய்ஸ்-தான்.
 

Blogger Widgets